Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் நியூசீலாந்து டெஸ்ட் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

நியூஸி. ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம்: அஜிங்கிய ரஹானே

 

 
 
rahane_3016792f.jpg
 

கான்பூர் பிட்ச் பெரிய அளவில் பந்துகள் திரும்பும் ஆடுகளமாக இருக்காது என்று பிட்ச் தயாரிப்பாளர் கூறியுள்ள நிலையில், நியூஸிலாந்து அணி ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மார்க் கிரெய்க் ஆகிய திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். முதல் நாளிலிருந்தே திரும்பும் பிட்ச்கள் தேவை என்று கோரி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அலிஸ்டர் குக் தலைமையில் இங்கு தோனி தலைமை இந்திய அணி தோல்வி கண்டதையடுத்தே பிட்ச் பற்றிய பேச்சுக்கள் பலமாக எழத் தொடங்கின. மாறாக கடந்த முறை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்று உதை வாங்கியது இந்திய பிட்ச்களின் சமநிலையற்ற தன்மையால்தான் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் நியூஸிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பிட்ச் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.

அஜிங்கிய ரஹானே கூறியதாவது:

நாங்கள் எந்த அணியையும் எளிதானதாக எடைப் போட மாட்டோம். நியூஸிலாந்து ஸ்பின்னர்களை நாங்கள் பெரிய அளவில் மதித்தாலும் அவர்களை நல்ல முறையில் வீச அனுமதிக்க மாட்டோம். அவர்களை ஆதிக்கம் செலுத்துவோம்.

கான்பூர் பிட்ச் நிச்சயம் திரும்பும் பிட்சாகவே இருக்கும். சுழற்பந்துக்கு ஆதரவான பிட்ச்களே நமது பலம், நாம் நம் பலத்திற்குத்தான் ஆட முடியும். ஆனால் இப்போதைக்கு பிட்ச் எப்படி செயல்படும் என்பதை என்னால் கூற முடியவில்லை.

3 அல்லது 4 நாட்களில் வெற்றி பெறுவோம் என்ற சிந்தனையில் நாங்கள் களமிறங்குவதில்லை. போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம்.

இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறோம். அதற்கு இந்த முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவது சீசனுக்கான நல்ல தொடக்கமாக அமையும். ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறோம், ஆனால் இப்போதைக்கு கவனம் டெஸ்ட் போட்டிகளின் மீதே.

எந்த ஒரு தொடரிலும் முதல் டெஸ்ட் மிக மிக முக்கியமானது, அங்கிருந்துதான் உத்வேகம் பெற முடியும், ஆம்! நாங்கள் முதல் டெஸ்ட்டிற்கு தயாராகி விட்டோம்.

இவ்வாறு கூறினார் ரஹானே.

http://tamil.thehindu.com/sports/நியூஸி-ஸ்பின்னர்கள்-ஆதிக்கம்-செலுத்த-அனுமதிக்க-மாட்டோம்-அஜிங்கிய-ரஹானே/article9128030.ece

  • Replies 51
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்துக்கு மிக மிகக் கடினம்: பிரெட் லீ கருத்து

 

 
இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் விவாத அரங்கில் பிரெட் லீ, கபில்தேவ், லஷ்மண். | படம்: பிடிஐ.
இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் விவாத அரங்கில் பிரெட் லீ, கபில்தேவ், லஷ்மண். | படம்: பிடிஐ.

நாளை மறுநாள் (22) முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கும் நிலையில் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு கடுமையான சவாலாக அமையும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதான குழு விவாதத்தில் பிரெட் லீ, கபில்தேவ், லஷ்மண் ஆகியோர் பங்கேற்றனர், இதற்கிடையே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரெட் லீ கூறியதாவது:

இந்திய அணி நியூஸிலாந்துக்கு பெரிய சவாலாகவே திகழும். பேட்டிங்கில் இந்திய அணிக்கு நிறைய தெரிவுகள் உள்ளன. அது ஆக்ரோஷமான ஒரு லைன் அப். ஷிகர் தவண் நிச்சயம் தனது இழந்த இடத்தை மீட்க எத்தனிப்பார்.

பந்துவீச்சிலும் சீரியசான ஒரு லைன் அப் இந்திய அணியிடம் உள்ளது. இந்திய அணி நல்ல சமநிலையுடன் உள்ளது.

500-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஆடுவது பெரிய பெருமை மிக்கதாகும். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நல்ல சவாலான கிரிக்கெட்டை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு கூறினார் பிரெட் லீ.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவுக்கு-எதிராக-நியூஸிலாந்துக்கு-மிக-மிகக்-கடினம்-பிரெட்-லீ-கருத்து/article9127973.ece

  • தொடங்கியவர்

சிக்குன்குனியா காய்ச்சல்: முதல் டெஸ்டில் இசாந்த் சர்மா இல்லை

 

 
கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.
கோப்புப் படம்.| அகிலேஷ் குமார்.

சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, “அவரது உடல் நிலை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறோம், எனவே முதல் டெஸ்ட் முடிந்த பிறகு அவர் தொடரில் தொடர்ந்து ஆட முடியுமா என்பதை தீர்மானிப்போம். முதல் டெஸ்ட் போட்டிக்கு இசாந்த் சர்மாவுக்கு பதிலி வீரர் தேவைப்படாது என்று முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

எனவே மொகமது ஷமி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வுக்கு உள்ளனர். பிட்ச் மிகவும் வறண்டு காணப்படுகிறது. பிளவுகள் இருந்தாலும் அது தளர்வாக இல்லை. இந்தப் பிட்சில் பந்துகள் அபரிமிதமாகத் திரும்பாது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு வாய்ப்புகள் அதிகம் என்று பிட்ச் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிக வேகத்தில் ரிவர்ஸ் ஸ்விங் சாத்தியம் என்பதால் ஷமியை விட உமேஷ் யாதவ்வுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குவது ஏறக்குறைய முடிவான விஷயமாகத் தெரிகிறது.

2 நாட்களுக்கு முன்பாக நடந்த வலைப்பயிற்சியில் புவனேஷ் குமாரும், உமேஷ் யாதவ்வும்தான் முன்னிலை பேட்ஸ்மென்களுக்கு அதிக ஓவர்களை வீசினர். மொகமது ஷமி பின்கள வீரர்களுக்கும் ஷிகர் தவணுக்கும் வீசினார், ஷிகர் தவண் முதல் டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார் என்பதை இது அறிவுறுத்துகிறது.

http://tamil.thehindu.com/sports/சிக்குன்குனியா-காய்ச்சல்-முதல்-டெஸ்டில்-இசாந்த்-சர்மா-இல்லை/article9128517.ece

  • தொடங்கியவர்

சுழல் ஆடுகளத்தை கேட்கவில்லை: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ‘விளாசல்'

 
Comment   ·   print   ·   T+  
 
 
 
 
நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் மோதும் இந்திய அணியினர் கான்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது புவனேஷ்வர் குமாருக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆலோசனைகள் வழங்கினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் மோதும் இந்திய அணியினர் கான்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது புவனேஷ்வர் குமாருக்கு பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆலோசனைகள் வழங்கினார்.

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற் கிடையே ஆடுகளத்தில் வெடிப் புகள் காணப்படுவதால் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள் ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சுழல் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது போன்று இந்த தொடருக்கும் அமைக்கப்படக் கூடும் என கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி யின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கான்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உள்நாட்டில் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டம்தான் இது. உங்களது முதல் கேள்வியும், கடைசி கேள்வியும் ஆடுகளத்தை பற்றியே இருக்கும் என்பது எனக்கு தெரியும். நாங்கள் யாருமே சுழலுக்கு சாதகமான ஆடு களத்தை அமைக்க கோரவில்லை. நாங்கள், எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள் என்ற கருத்துடன்தான் போட்டி யில் நுழைகிறோம். மேற்கிந்தியத் தீவுகளில் சிறப்பாக செயல் பட்டதை உள்நாட்டு தொடரிலும் தொடருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முதல் பந்து வீசப்பட் டதுமே சுழல் தொடர்பாக எல்லோருக்கும் கருத்துகள் எழத்தொடங்கிவிடும்.

ஆனால் ஒரு பயிற்சியாளராக நான் அதுபோன்ற கருதமாட்டேன். திட்டங்களை தயார் செய்து ஆட்டத்தை கொண்டு செல்வோம்.

என்னை பொறுத்தவரையில் கான்பூர் ஆடுகளம் வித்தியாச மானது. அதிகளவு மழை பெய்துள்ளது. ஆடுகளத்தின் மேற்பரப்பு பிற்பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. மேற்பரப்பு சிறப்பாகவே உள்ளது. கிரிக்கெட்டை ஆடுகளத்தின் மீது விளையாடுகிறோம். அதுதொடர் பாகவே பேச்சுகளே இருக்க வேண்டும். வெறும் ஆடுகளத்தை வைத்து அல்ல. அணியின் ஆலோ சனை கூட்டத்திலும் இதைதான் நாங்கள் ஆலோசித்தோம். எந்த ஆடுகளம் வழங்கப்பட்டாலும் நாங்கள் அதனை தகவமைத் துக்கொண்டு விளையாடுவோம்.

நியூஸிலாந்து அணி உள் நாட்டில் மட்டும் அல்ல வெளி நாட்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடக்கூடியது. அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் களான இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர், கிரெய்க் ஆகியோர் ஒருவரில் இருந்து ஒருவர் மாறுபட்ட கோணத்தில் வீசக்கூடியவர்கள். அவர்களில் இருவரது செயல்பாடுகளை டி 20 உலகக் கோப்பையில் நான் பார்த்துள்ளேன். அந்த தொடரில் அவர்களது பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பிற அணிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதை பார்க்கும் போது மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என உற்சாகம் கிடைக்கும். எங்களது எதிரணியை நாங்கள் மதிக்கிறோம். இது சுழற்பந்து வீச்சை மட்டும் வைத்து அல்ல, அனைத்து துறைகளையும் சேர்த்துதான். நியூஸிலாந்து அணியில் உள்ள சுழற்பந்து வீச்சு வித்தியாசங்களை போன்று மற்ற வெளிநாட்டு அணிகளில் காணமுடியாது.

இங்குள்ள சூழ்நிலைகள் இந்திய அணிக்கு சாதகமாக கருதப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு அணிகளுக்கு இந்த பிரச்சினை நீண்ட நாட்களுக்கு இருக்காது. நியூஸிலாந்து வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். அதனால் சூழ்நிலைக்கு தகுந்தபடி எப்படி தகவமமைத்துக்கொள்வது என்பது அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/சுழல்-ஆடுகளத்தை-கேட்கவில்லை-பயிற்சியாளர்-அனில்-கும்ப்ளே-விளாசல்/article9130859.ece

  • தொடங்கியவர்

வரலாற்று சிறப்பு மிக்க 500-வது டெஸ்ட்: கான்பூரில் வியாழனன்று தொடக்கம்

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
படம். | வி.வி.கிருஷ்ணன்.
படம். | வி.வி.கிருஷ்ணன்.

3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் வியாழன் காலை தொடங்குகிறது.

கான்பூர் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்ட் ஆகும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மட்டுமே 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளன. 500-வது டெஸ்ட் மைல்கல்லை எட்டும் 4-வது அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

மழை அச்சுறுத்தல்:

இதற்கிடையே போட்டி நடைபெறும் கான்பூரில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என தெரிகிறது.

டெஸ்டில் இருந்து தோனி ஓய்வுக்கு பின்பாக விராட் கோலி தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக விளையாடிய 3 தொடர்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளை இந்தியா வீழ்த்தியுள்ளது. இந்தியாவின் அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர்.

கடைசி 8 டெஸ்டில் கே.எல். ராகுல் 3 சதம் அடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் கேப்டன் விராட் கோலி, தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ராகுல் சிறப்பாக விளையாடி வருவதால் தொடக்க வீரருக்கான ரேஸில் அவர் உள்ளார். இதனால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சிறப்பாக செயல்படாத முரளி விஜய் அல்லது ஷிகர் தவண் நீக்கப்படக்கூடும்.

இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சிக்குன் குன்யா காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின் சுழல், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும். அஸ்வினுக்கு உறுதுணையாக ஜடேஜா, அமித் மிஸ்ரா இருப்பார்கள். முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடும்.

நியூஸி. அணியின் நிலவரம்:

நியூஸிலாந்து அணி சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஜிம்மி நீஷம், டிம் சவுத்தி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியிருப்பது நியூஸிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் அந்த அணி கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், குப்தில் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. ஆனால் குப்தில், ராஸ் டெய்லர் சமீபகால போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூஸிலாந்து அணியின் ஆயுதமாக சுழற்பந்து வீச்சு உருவெடுத்துள்ளது.

இதனை கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் காண முடிந்தது. இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர், கிரெய்க் ஆகியோர் வெவ்வேறு வித்தியாசங்களுடன் சுழலில் நெருக்கடி கொடுக்கக்கூடிய திறன் பெற்றவர்கள். இவர்கள் இந்திய ஆடுகளங்களில் முத்திரை பதிக்கக்கூடும். இதேபோல் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான நெய்ல் வாக்னர், டிரென்ட் பவுல்ட் ஆகியோரும் நெருக்கடி தரக்கூடும்.

ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூஸிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க 500-வது டெஸ்டில் வெற்றி பெற முயலும். அதே சமயம் நியூஸிலாந்து அணியும் கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.

இந்திய மண்ணில் நியூஸிலாந்து தொடர்ச்சியாக தடுமாறியே வருகிறது. இந்தியாவில் இதுவரை 10 தொடர்களில் விளையாடியுள்ள நியூஸிலாந்து, 8 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது. வெற்றி பெற்றதில்லை. மொத்தமாக இந்திய மண்ணில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து, 13 தோல்வி, 16 டிரா கண்டுள்ளது. 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது.

அஸ்வின் சாதனைக்கு வாய்ப்பு:

சொந்த மண்ணில் தொடர்ந்து சாதித்து வரும் அஸ்வின், தற்போது 36 டெஸ்டுகளில் 193 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றும் பட்சத்தில், 200 விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றிய முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனை தற்போது பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ் வசம் உள்ளது. அவர் 38 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

நியூஸி. வீரர்களும் சாதனை விளிம்பில்...

நியூஸிலாந்து சார்பில் டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை 17 சதங்களுடன் மார்டின் குரோவ் பெற்றுள்ளார். தற்போது கேப்டன் கேன் வில்லியம்சன் 16, ரோஸ் டெய்லர் 15 சதங்களை அடித்துள்ளனர். இவர்கள் இருவரும் மார்டின் குரோவின் சாதனையை இந்த தொடரில் முறியடிக்க வாய்ப்புள்ளது.

500-வது டெஸ்ட் போட்டியையொட்டி முன்னாள் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். சச்சின், அசாருதீன், ஸ்ரீகாந்த், வெங்கர்ச்சார் ஆகியோர் இதில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர். ஆனால் பிஷன் சிங் பேடி, குண்டப்பா விஸ்வநாத் ஆகிய இருவரும் அழைக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி (உத்தேசம்):

முரளி விஜய், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் / ஷமி

http://tamil.thehindu.com/sports/வரலாற்று-சிறப்பு-மிக்க-500வது-டெஸ்ட்-கான்பூரில்-வியாழனன்று-தொடக்கம்/article9132402.ece

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: இன்று தனது 500-வது டெஸ்டில் களமிறங்கிய இந்தியா

 

கடந்த 1932-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, கான்பூரில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில், 500-வது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

 

விராட் கோலி

 விராட் கோலி

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று கான்பூரில் தொடங்கியது.

ஆரம்பத்தில் மட்டை பிடிப்புக்கு ( பேட்டிங்) எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வெடிப்புகள் நிரம்பிய கான்பூர் க்ரீன் பார்க் பிட்ச், பின்னர் சுழல் பந்துவீச்சா

ளர்களுக்கு அதிகமாக கை கொடுக்கும்.

 

அஸ்வின்

 இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, இன்றைய போட்டியில் டாஸ் வென்றவுடன் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று தீர்மானித்தார்.

இன்றைய போட்டியில், இந்தியா ஆறு மட்டை பிடிப்பாளர்கள், ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கு முன்பு 499 டெஸ்ட் போட்டிகள் விளையாடிவுள்ள இந்தியா, அதில் 129 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளது. மேலும், 157 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தும், 212 போட்டிகளை சமன் செய்துள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது.

டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் வெற்றி சதவீதம் 25.85 ஆகும்.

தனது 500-வது டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாடும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://www.bbc.com/tamil/sport-37437006

  • தொடங்கியவர்

14409879_1341652322520527_75519411535784

 

500வது டெஸ்ட்டில் இதுவரை இந்திய அணியை வழிநடத்திய டெஸ்ட் கேப்டன்களை கெளரவிக்கும் பிசிசிஐ!

  • தொடங்கியவர்

விஜய், புஜாரா அரைசதங்களுக்குப் பிறகு அசத்திய நியூஸிலாந்து; இந்தியா 291/9

 

விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் நியூஸிலாந்து அணியினர். | படம்: ராய்ட்டர்ஸ்.
விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் நியூஸிலாந்து அணியினர். | படம்: ராய்ட்டர்ஸ்.

500-வது டெஸ்ட் என்று கடும் விளம்பரப்படுத்தப்பட்ட நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்ட முடிவில் ஜடேஜா 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கான்பூர் பிட்ச் பற்றிய வர்ணனையிலேயெ 280-300 ரன்கள் என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் நல்ல ஸ்கோர் என்று தெரிவிக்கப்பட்டது ஆச்சரியமளித்தது, காரணம் முதலில் இந்தியா பேட்டிங், 400 ரன்கள்... அஸ்வின், ஜடேஜா, ரிவர்ஸ் ஸ்விங்... வெற்றி என்ற ‘மேட்ரிக்ஸ்’ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 154/1 என்ற நிலையிலிருந்து இந்திய அணி அடுத்த 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே நடந்தது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் நியூஸிலாந்து தன் பந்து வீச்சின் தீவிரத்திற்கு பலனைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை சுமார் 10 ஓவர்களில் வீழ்த்தி தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 185/4 என்று திணறியது.

விஜய், புஜாரா அருமை! பவுன்சரில் வீழ்ந்த கோலி!

கே.எல்.ராகுல் பிரகாசமாக தொடங்கினார், போல்ட்டின் முதல் ஓவரிலேயே ஒரு புல்டாஸை நேராக பவுண்டரி அடித்தும் பிறகு ஒருகவர் டிரைவ் பவுண்டரி அடித்தும் தொடங்கினார். தொடக்க ஓவர்களில் நியூஸிலாந்து அவ்வளவாக ஆக்ரோஷம் காட்டவில்லை, 2 ஸ்லிப் ஒரு கல்லி என்ற களவியூகம் 7 ஓவர்கள் முடிந்தவுடனேயே ஒரு ஸ்லிப் ஆனது. லெக் திசையில் ஷார்ட் ஸ்கொயர் லெக், ஷார்ட் மிட் விக்கெட்டுடன், டீப் ஸ்கொயர் லெக், டீப் மிட்விக்கெட், ஷார்ட் மிட் ஆன் என்று ரன் தடுப்பு வியூகமே அமைக்கப்பட்டது.

ஆனால் ராகுல் 35 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். ஸ்பின் அறிமுகமான பிறகு சாண்ட்னரை ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்ஸ் அடித்து தனது நோக்கத்தை தெளிவு படுத்தினார். ஆனால் அதே சாண்ட்னர் ஓவரில் ஒரு பந்து வேகமாக சறுக்கிக் கொண்டு வர எப்போதும் அத்தகைய பந்துகளை முன்னே வந்து ஆடவேண்டிய ஒரு தொடக்க வீரரான ராகுல், க்ரீஸில் பின்னால் நின்று ஆடத் துணிந்தார், பந்து திரும்பும் என்று நினைத்தார், ஆனால் பந்து திரும்பவில்லை, ஸ்கிட் ஆகி நேரே செல்ல எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனது.

அதன் பிறகு புஜாரா, விஜய் கவனமுடன் ஆடி தங்களது 3-வது சதக்கூட்டணியை அமைத்தனர். புஜாரா குறிப்பாக ஸ்பின்னர்களை நன்றாக ஆடினார், கால்களை நன்றாகப் பயன்படுத்தி மேலேறி வந்து ஆடினார், அருமையாக ஆன் டிரைவ்களையும் நேர் டிரைவ்களையும் ஆடினார். லேசாக ஷார்ட் பிட்ச் என்று தெரிந்தாலும் பின்னால் சென்று ஆடினார். 108 பந்துகளில் 62 ரன்கள் என்று அவர் 8 பவுண்டரிகளுடன் நியூஸிலாந்துக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில் சாண்ட்னர் பந்தை தவறாகக் கணித்து அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார், விஜய், புஜாரா இணைந்து 112 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்தார், இதில் ஒன்று நீல் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்தை பேக்வர்ட் ஸ்கொயர்லெக்கில் அடித்த பவுண்டரியாகும். இது ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வாக்னர் வீசியதால் பந்து நன்றாகக் கணிக்க முடியுமாறு அமைந்தது, ஆனால் அடுத்த முறை இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் ஓவர் த விக்கெட்டிலிருந்து கொஞ்சம் வேகம் கூடுதலாக, கொஞ்சம் கூடுதல் பவுன்ஸுடன் ஒரு பவுன்சரை வீச கோலியின் ஷாட் டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. இம்முறை பந்து கோலியிடமிருந்து விலகிச் செல்லும் கோணத்தினாலும், கூடுதல் பவுன்ஸினாலும் டாப் எட்ஜ் ஆனது.

விஜய் ஷார்ட் பிட்ச் பந்தை அலட்சியம் செய்தார். ஒரு முறை தொடக்கத்தில் அதிகம் எழும்பாத ஷார்ட் பிட்ச் பந்து அவரது முழங்கைக் காப்பில் பட்டு கல்லியில் கேட்ச் ஆக பயங்கரமாக முறையீடு செய்தனர் ஆனால் அவுட் இல்லை.

முரளி விஜய் ஸ்பின்னர் சாண்ட்னரை ஓரிருமுறை மேலேறி வந்து லெக் திசையில் தரையோடு தரையாக ஆடினார், மற்ற வேளைகளில் வேகப்பந்து வீச்சாளரக்ளை பின்னால் சென்று லேட் கட்டில் பவுண்டரி அடித்தார், ஸ்பின்னர்களையும் அப்படித்தான் ஆடினார். 65 ரன்களில் 8 பவுண்டரிகள் எடுத்த நிலையில் லெக் ஸ்பின்னர் இஷ் சோதியின் பந்தை இது போன்ற ஷாட் ஒன்றில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடுவர் தீர்ப்புக்குக் காத்திராமல் நடைகட்டினார்.

ரஹானே இறங்கியவுடனேயே சாண்ட்னர் பந்தை ஸ்டம்புக்குள் வாங்கி விட்டுக் கொண்டிருப்பார் தப்பினார், மீண்டும் சாண்ட்னர் அவரை திரும்பும், எழும்பும் பந்துகளினால் தொந்தரவு செய்தார். இந்த நெருக்கடியிலிருந்து மீள கவர் திசையில் தூக்கி ரிஸ்க் ஷாட் ஆடினார் ரஹானே. 18 ரன்கள் எடுத்த நிலையில் விடா முயற்சி ஸ்பின்னர் மார்க் கிரெய்க் அருமையாக ஒரு ‘டிபிகல்’ ஆஃப் ஸ்பின் பந்தை வீச அது ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.

ரோஹித் சர்மா, அஸ்வின் அரைசதக் கூட்டணி:

209/5 என்ற நிலையில் அஸ்வின், ரோஹித் சர்மா இணைந்து ஓரளவுக்கு ஆடினர், ரோஹித் சர்மா ஆட்டத்தில் பதட்டம் தெரிந்த்து. மார்க் கிரெய்க் பந்துகளில் அவருக்கு எட்ஜ் எடுத்தது. வெளிப்புற எட்ஜ், உட்புற எட்ஜ், பிறகு ஒரு எல்.பி.க்கான முறையீடு ஆகியவற்றுடன் தப்பித்தார். ஆனால் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் 35 ரன்கள் எடுத்த நிலையில் தூக்கி அடிக்க வேண்டும் என்ற அரிப்பில் அடிக்கப்போக மிட் ஆனில் கேட்ச் கொடுத்து சாண்ட்னரிடம் அவுட் ஆனார்.

புதிய பந்தும் எடுக்கப்பட டிரெண்ட் போல்ட் அருமையான ஒரு இன்ஸ்விங்கரில் சஹாவை பவுல்டு செய்தார். சஹா ஸ்கோரர்களை தொந்தரவு செய்யவில்லை. அஸ்வின் சிறப்பாக ஆடி 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட்டின் ஆஃப் கட்டரை கல்லியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மொகமது ஷமிக்கும் அருமையான பந்தை வீசை பவுல்டு செய்தார் போல்ட். இந்தியா 277/9 என்று ஆனது. ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

இந்தப் பிட்சில் 4-வது இன்னிங்சை ஆடுவது கடினம், நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூஸிலாந்து தங்களது பேட்டிங்கில் முன்னிலை பெற்றால் டெஸ்ட் போட்டி மேலும் சுவாரசியமாகும். ஆனாலும் இந்திய பிட்ச் ஒன்றில், முதல் நாளில், பார்மில் உள்ள இந்திய அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் முதல் நாள் ஆட்டப்பெருமைகள் நியூஸிலாந்தையே சாரும்.

http://tamil.thehindu.com/sports/விஜய்-புஜாரா-அரைசதங்களுக்குப்-பிறகு-அசத்திய-நியூஸிலாந்து-இந்தியா-2919/article9136429.ece

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட் ; இந்தியா 318 ; முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது நியுஸிலாந்து

 

 

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கான முதலாவது டெஸ் போட்டி இந்தியாவின் கான்பூர் கிரீன்பார்க்  மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

252483.3.jpg

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 318 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராஹுல் 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் முரளி விஜய் 65 ஓட்டங்களை பெற்றக்கொண்டார்.

அடுத்து களமிறங்கிய புஜாரா 62 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஜடேஜா 42 ஓட்டங்களையும், அஸ்வின் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணிக்கு வலு  சேர்த்தனர்.

இந்நிலையில் பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் போல்ட் மற்றும் சென்ட்னர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியுஸிலாந்து அணி 35 ஒட்டங்களக்கு 1 விக்கட்டுகளை இழந்துள்ளது.

http://www.virakesari.lk/article/11667

  • தொடங்கியவர்

இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
 
 

-ச.விமல்

InLEAD-1_21092016_GPI.jpg

இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பித்தால், அனைத்து கிரிக்கெட் நாடுகளும் தங்கள் பார்வையை இந்தியா நோக்கி நகர்த்திவிடும். இலங்கையில் அதிகமாக அது இருக்கும். இலங்கையில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கும் இரசிகர்கள் ஒரு புறம். அவர்கள் மீதும், இந்தியா அணி மீதும் கொலைவெறியில் இருக்கும் இலங்கை இரசிகர்கள் இன்னொரு புறம். எனவே இலங்கையிலும் இந்திய அணியினது தாக்கம் அதிகம் இருக்கின்றது. அண்மையில் இலங்கை, இந்தியா அணிகளின் மோதல்கள் இல்லாத காரணத்தினால் மற்றைய அணிகளுடனான போட்டிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தியா அணியை பொறுத்தளவில் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை தமதாக்கிக் கொள்ளும் தொடராக இந்தியா அணி இதனை எடுத்துக்கொள்ளும். தொடரை இந்தியா கைப்பற்றினால் இந்திய அணிக்கு முதலிடம் கிடைக்கும். தொடர் சமநிலையில் நிறைவடைந்தால் மாத்திரமே முதலிடம் கிடைக்காமல் போகும். தொடர்ச்சியாக முதலிடத்தை கைப்பற்ற வேண்டுமானால் தொடரை இந்தியா அணி கைப்பற்ற வேண்டும்.  நியூஸிலாந்து அணி வெற்றி பெறக்கூடாது. இந்த நிலைமைகள் சுவாரசியத்தை தரும்.

 நியூஸிலாந்து அணி பலமான அணி அல்லது சவாலான அணி என்று பெரியளவில் இன்னமும் கூற முடியாது. இந்தியாவில் தொடர் நடைபெறுவதனால், நியூஸிலாந்து அணி இந்திய அணியுடன் மிகவும் போராட வேண்டும். இந்தத் தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு  நான்கு டெஸ்ட் போட்டிகளுக்காக வரவுள்ளது. எனவே இந்தத் தொடரை வெற்றியாக மாற்றுவது மாத்திரமன்றி அணியை  முழுமையாக தயார் செய்து பலமான அணியாக மாற்றவும் இந்திய அணி இந்தத் தொடரை பாவிக்கும்.

இந்த இரு அணிகளுக்குமான கடந்த கால தொடர்களில், இந்தியாவில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 10 தொடர்களில், இந்தியா எட்டுத் தொடர்களை கைபபற்றியுள்ளது. இரண்டு தொடர்கள் சமநிலை முடிவடைந்துள்ளன. இரு அணிகளுக்குமான 20ஆவது தொடர் இதுவாகும். 10 தொடர்களில் இந்திய அணியும் ஐந்து தொடர்களில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஆக இந்தியாவே பலமான அணியாக இருந்து வருகின்றது.

2012ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி, இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியது. இரு அணிகளும் இதுவரை 54 போட்டிகளில் விளையாடியுள்ளன.  இந்தியா 18 வெற்றிகளையும், நியூஸிலாந்து 10 வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 26 போட்டிகள் சமநிலை முடிவை தந்துள்ளன. இந்தியாவில் வைத்து 31 போட்டிகளில் இந்திய அணி 13 வெற்றிகளையும், நியூஸிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ள அதேவேளை, 16 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

ஆக சமநிலை முடிவுகள் அதிகம் பெறப்பட்டிருப்பது, நியூஸிலாந்து இலகுவாக இந்திய அணிக்கு வெற்றிகளை வழங்காது என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் தற்போதுள்ள இந்திய அணியின் பலம், நியூஸிலாந்து அணியின் பலம் என பார்க்கும் போது இம்முறை கடந்த காலங்களை காட்டிலும் மிகுந்த போட்டியுள்ள தொடராக அமையும் என எதிர்பார்க்க முடியும்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு, கடந்த காலங்களிலும் பார்க்க பலமாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் புதியவர்கள் என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது அவர்களுக்கு மேலதிக பலம். டிம் சௌதி உபாதையடைந்து இருப்பது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவே. இருப்பினும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களே இந்திய ஆடுகளங்களில் களமிறங்குவர் என்ற நிலையில், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அவர்களது நம்பிக்கையான பந்து வீச்சாளர்கள். 23 போட்டிகளில் 94 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச்சிறந்த இடதுகை  வேகப்பந்து வீச்சாளராக அணியில் வக்னர் உள்ளார்.   இவர் நிச்சயம் அணியில் இடம் பிடிப்பார். அடுத்த ஒருவர் அல்லது இருவர் எனில் ட்ரெண்ட் போல்ட், டௌ பிரேஸ்வெல் ஆகியோர் அணியில் இடம் பிடிப்பார்கள்.

சுழற்பந்து வீச்சாளர்களில் சகலதுறை வீரராக மிச்சல் சந்தர் சிறப்பான நிலையில் உள்ளார். ஆசிய ஆடுகளங்களில் இவரின் கைவரிசை எவ்வாறு அமையும் என்பது இந்தத் தொடரில் வெளிப்படும். இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்தியாவுக்கு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் என்றாலே நடுக்கம் தொடங்கி விடும். இவரின் சுழற்பந்து வீச்சு மிக அபாரமானது. 14 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை கைப்பற்றியுளார். ஐக்கிய அரபு அமீரக மூன்று போட்டிகளை விட மிகுதி போட்டிகள் யாவுமே, அவுஸ்திரேலியா , தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆடுகளங்களிலேயே அவர் ஆடியுள்ளார். இந்திய ஆடுகளங்களில், இவரின் சுழற்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமையும் என நம்பலாம். துடுப்பாடத்திலும் 41.85 என்ற சிறந்த சராசரியை கொண்டுள்ளார். ஆக நியூஸிலாந்து அணியின் நம்பிக்கை நடசத்திரம் என இவரை கூற முடியும்.

இரண்டாமவராக இஷ் சோதி, மூன்றாவமாவராக மார்க் கிரேய்க்  அணியில் உள்ளனர். மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள். எனவே நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சு பலம் பெற்றுள்ளதாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணி இலகுவாக துடுப்பாட முடியாது.  அழுத்தங்கள் அதிகம் இருக்கும். இதில் இந்திய அணியின் ஆரம்ப இடங்கள் பலமாக இல்லை. மத்திய வரிசையே பலமாக உள்ளது.

நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்டமும் கடந்த காலங்களிலும் பார்க்க பலமானது எனக்கூற முடியும். பிரெண்டன் மக்கலம் அணியில் இல்லை. ஆனால், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மாத்திரமன்றி, ஆசிய ஆடுகளங்களிலும், இந்திய ஆடுகளங்களிலும் கூட சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். கேன் வில்லியம்ஸன், இந்தியாவில் தன் அறிமுகப் போட்டியில் சதமடித்தவர். டொம் லதாம் இந்திய ஆடுகளங்களில் முதற்தடவையாக களமிறங்குகிறார். நியூஸிலாந்து அணிக்காக சராசரியான ஆரம்பத்தை வழங்கி வரும் வீரர்.

பி.ஜெ.வொட்லிங் விக்கெட் காப்பில் மட்டுமல்ல, துடுப்பாடத்திலும் மத்திய வரிசையில் நம்பிக்கைகி தரும் வீரர். ஹென்றி நிக்கொல்ஸ் மத்திய வரிசையில் துடுப்பாடும்  வீரர். தென்னாபிரிக்க தொடரில் ஓரளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். ஜேம்ஸ்  நீஷம் சகலதுறை வீரர். இவர் நியூஸிலாந்து அணியை சிறப்பாக சமநிலைப்படுத்தும் வீரர். வேகப் பந்து வீசும் இவர், ஒன்பது போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அதேவேளை, துடுப்பாட்டத்தில் , ஒன்பது போட்டிகளில் 612 ஓட்டங்களை பெற்றுள்ளார்.  இவர் விளையாடினால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடனும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கலாம். இவர் அணியில் இல்லாத நிலையில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள லுக் ரொங்கி விளையாடுவார். இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுக போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 119 ஓட்டங்களை பெற்றார். ஆனால் பின்னர் விளையாடவில்லை.

இதுவே நியூஸிலாந்து அணி. அஷ்வினின் பந்துவீச்சை இவர்கள் சமாளித்து விட்டால் வெற்றிகளை நோக்கி சொல்லாவிட்டாலும், சமநிலை முடிவை நோக்கி செல்ல முடியும்.  இந்தியாவின் மற்றைய பந்து வீச்சாளர்கள், நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை எந்தளவுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்பது கேள்வியே. அஷ்வின் வழங்கும் அழுத்தம் நிச்சசயம் துடுப்பாட்ட வீரர்கள் மீது அழுத்தத்தை  ஏற்படுத்தும். அந்த அழுத்தம் மற்றைய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பாக அமையும்.

இந்தியா அணி தமது துடுப்பாட்டம், அஷ்வினின் பந்து வீச்சு, விராத் கோலியின் துடுப்பாட்டம், ஆடுகளம் என்பனவற்றை அதிகம் நம்பியே களமிறங்குகிறது. ஆரம்ப ஜோடியில் லோகேஷ் ராகுல் நிச்சயம் இடம் பிடிப்பார். முரளி விஜய், ஷீகர் தவான் ஆகியோரில் ஒருவரே வாய்ப்பை பெறுவார்கள். வாய்ப்பை சரியாக பாவித்துக்கொள்பவர் அணியில் தொடர்வார். மூன்றாமிடத்தில் செட்டேஸ்வர் புஜாரா வாய்ப்பைப் பெறுவார். சரியாக வாய்பபை பாவிக்கா விட்டால், கோலி மூன்றாமிடத்தில் களமிறங்கி அவரை அணியால் வெளியேற்றும் வாய்ப்புகளும் உள்ளன. கோலி நான்காமிடம். ஐந்தாமிடம் அஜிங்கையா ரஹானே. இவர்களின் துடுப்பாட்டம், இடங்கள் பற்றியெல்லாம் எதுவும் யோசிக்கத் தேவையில்லை. இவர்கள் இருவருமே இந்திய அணியின் துடுப்பாட்ட முதுகெலும்புகள்.

அடுத்த இடம் இன்னமும் நிரந்தரமாகவில்லை. ஆனாலும் மேற்கிந்திய தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரிலும் ஆரம்ப போட்டிகளிலும் வழங்கப்படும். வாய்ப்பை பாவித்தால் அணியில் இடம் தொடரும். அஷ்வின் சிறப்பாக பின் மத்திய வரிசையில் துடுப்பாடுவதனால், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இன்னுமொரு சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஷ்ராவை அணியில் இணைக்க முடியும். ரிதிமன் சஹா கடந்த தொடரில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். இரவீந்திர ஜடேஜா அடுத்த இடம். ஆக இந்திய அணியில் எட்டு வீரர்கள் துடுப்பாட்ட வீரர்கள். இதுவே இவர்களின் பலம். ஆரம்பம் சிறப்பாக அமைந்தால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்ககையை நோக்கி நகர முடியும்.

பந்து வீச்சில் அஷ்வின் முன்னிலையில் உள்ளார். அண்மைக்கால இந்தியாவின் வெற்றி நாயகன் இவரே. இந்த தொடரிலும் இவரையே இந்திய அணி தங்கள் துடுப்பாட்டத்திலும் பார்க்க நம்பியுள்ளது. இரவீந்தர ஜடேஜா இரண்டாம் சுழற்பந்து வீச்சாளர். கடந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆனால் அமித் மிஷ்ராவிலும் பார்க்க இவரே இந்திய அணியின் முன்னிலை தெரிவு. வேகப்பந்துவீச்சில் மொஹமட் ஷமி நிச்சசயம் இடம் பிடிப்பார். அனுபவம் இஷாந்த் ஷர்மாவுக்கு அணியில் இடத்தை வழங்கும். உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ள போதும் சுழற்சி முறையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். யார் சிறப்பாக பந்து வீசுகின்றார்களோ அவர்களுக்கே அணியில் வாய்ப்பு தொடரும்.

இரண்டு அணிகளினதும் நிலைமைகள் இவ்வாறே உள்ளன. இரண்டு அணிகளும் சளைத்த அணிகள் அல்ல. ஆனால் முழுமை பெறாத இடங்களை எந்த அணி நிரப்புகின்றதோ அந்த அணி சிறப்பாக செயற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா அணி பலமான அணியாகவே தென்படுகின்றது. தொடரை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் அவர்களுக்கு இருந்தாலும் இலகுவாக வெற்றி பெற முடியாது. 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூஸிலாந்து தொடரை இந்தியாவில் சமன் செய்ததில்லை. இம்முறையும் அந்த வாய்ப்பு அரிதாகவே உளள்து. துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானங்கள் அதிகம் இந்தியாவில் உள்ளவை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் அவை சாதக தன்மையை வழங்கும். அதனை நியூஸிலாந்து அணி சரியாக பாவித்து பந்து வீசினால் நிச்சயம் இந்திய அணியை தடுமாற வைக்க முடியும்.

முதற் போட்டி - செப்டம்பர்  22 முதல் 26, காலை 9.30 தொடக்கம் 4.30, கான்பூர்

இரண்டாவது  போட்டி - செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 04, காலை 9.30 தொடக்கம் 4.30, கொல்கொத்தா 

மூன்றாவது போட்டி - ஒக்டோபர் 08 முதல் ஒக்டோபர் 12, காலை 9.30 தொடக்கம் 4.30, இந்தூர்  

- See more at: http://www.tamilmirror.lk/182492/இந-த-ய-ந-ய-ஸ-ல-ந-த-ட-ஸ-ட-த-டர-#sthash.YNxPPANx.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வில்லியம்சன், லாதம் அபாரம்: மழையால் நிறுத்தப்பட்ட 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸி. 152/1

 

 
கேன் வில்லியம்சன், டாம் லாதம். 2-ம் நாள் நாயகர்கள். | படம்: பிடிஐ.
கேன் வில்லியம்சன், டாம் லாதம். 2-ம் நாள் நாயகர்கள். | படம்: பிடிஐ.

கான்பூர் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தேநீர் இடைவேளைக்குப் பிறகு கைவிடப்பட்டது. நியூஸிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் கேன் வில்லியம்சன் 65 ரன்களுடனும், தொடக்க இடது கை வீரர் டாம் லாதம் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று இன்னமும் 34 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தேநீர் இடைவேளையின் போது கனமழை பெய்ததால் மைதானம் விளையாட ஏற்றதாக இல்லை என்று முடிக்கப்பட்டது. நாளை 3-ம் நாள் ஆட்டம் 9.15-க்கு தொடங்குகிறது, இதனால் 98 ஓவர்களை நாளை வீச முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஜடேஜா, உமேஷ் யாதவ் மேலும் 27 ரன்களைச் சேர்த்தனர். ஜடேஜா 2 பவுண்டரிகளையும் சாண்ட்னர் பந்தில் லாங் ஆனில் ஒரு அபார சிக்சரையும் அடித்து 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். உமேஷ் யாதவ் 9 ரன்கள் எடுத்து வாக்னர் பந்தை எட்ஜ் செய்து அவுட் ஆக இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் 21 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு அவுட் ஆஃப் பார்மிலும் சுமாராக ஆடிவந்தார், ஆனால் உமேஷ் யாதவ் அவரை இன்ஸ்விங்கரில் ஒர்க்-அவுட் செய்து எல்.பி. செய்தார். 35/1 என்ற நிலையில் கேன் வில்லியம்சன், டாம் லாதம் இணைந்து சதக்கூட்டணி அமைத்தனர்.

ஜடேஜா, அஸ்வினின் சுழலையும் கோலியின் ஆக்ரோஷமான கள வியூகத்தையும் கேன் வில்லியம்சன், டாம் லாதம் அபாரமாக விளையாடினர். இருவரும் அரைசதம் நெருங்கிய தருணத்தில்தான் அஸ்வின் இந்தப் பிட்சில் எந்த வேகத்தில் வீச வேண்டும் என்பதை கண்டுபிடித்துக் கொண்டாற்போல் தெரிந்தது.

ஏனெனில் இன்னும் மெதுவாக தூக்கி வீசினார் அஸ்வின் இதனால் லெந்தில் பிட்ச் ஆன பந்து அசவுகரியமாக பவுன்ஸ் ஆகி கேன் வில்லியம்சனின் ஹெல்மெட்டில் பட்டது. முரளி விஜய்யும் வீசினார், நன்றாக திரும்பிய ஆஃப் பிரேக்கில் டாம் லாதம் மட்டையைக் கடந்து சென்றது பந்து. ஒரு பந்து புல் லெந்தில் பேடை தாக்க எல்.பி.முறையீடு நிராகரிக்கப்பட்டது.

அடுத்த ஓவரில் அஸ்வினுக்கும் ஒரு எல்.பி. முறையீடு நிராகரிக்கப்பட்டது. இம்முறை வில்லியம்ன்சன் நன்றாகத் திரும்பிய பந்தை பின்னங்காலில் சென்று ஆடி கால்காப்பில் வாங்கினார், பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது என்று நடுவரால் நாட் அவுட் என்று நிராகரிக்கப்பட்டது.

லாதமுக்கு ராகுல் பிடித்த கேட்ச் ஏன் நாட் அவுட்?

டாம் லாதம் 47-ல் இருந்த போது இன்னிங்சின் 37வது ஓவரை ஜடேஜா வீசினார். லாதம் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்தார். பந்து லாதமின் பூட்-ல் பட்டு ராகுலிடம் கேட்ச் ஆனது, ராகுல் அதனை தட்டித்தட்டி பிடித்தார். ஆனால் நடுவர் பந்து தரையில் பட்டதோ என்ற ஐயத்தில் விசாரித்தார், முறையீடு 3-வது நடுவரிடம் சென்றது, என்ன நடந்தது? நேரடியாக அவுட்தானே என்று எல்லோரும் நினைக்கும் நேரத்தில், பந்து தரையில் பட்டுச் சென்றதா என்று கோரிய வீடியோ ரிப்ளேயில் வேறொன்று தெரியவந்தது, ராகுல் தட்டித் தட்டி பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பந்து அவரது ஹெல்மெட் ஸ்ட்ராப்பில் பட்டு கேட்ச் ஆகியுள்ளது. இது விதிமுறை 32.3-க்கு புறம்பானது. இதன் படி கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக பீல்டரின் ஹெல்மெட்டையோ அதன் பகுதியையோ பந்து தொட்டிருக்கக் கூடாது. ஆகவே டாம் லாதம் நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நேரடியான கேட்சை சொதப்பியவர் ராகுல். முன்னதாக காலையில் ராகுல் ஒரு மிஸ்பீல்டையும் செய்து அதற்காக வருந்தினார்.

தேநீர் இடைவேளைக்கு முன்னர், வில்லியம்சன் ஜடேஜா பந்தை எட்ஜ் செய்ததாக பெரிய முறையீடு எழுந்தது. அவர் கட் செய்ய முயன்ற போது மட்டையின் அடிவிளிம்பில் பட்டு சென்றது என்பது ஜடேஜா மற்றும் இந்திய அணியினரின் துணிபு. ஆனால் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு வழங்கப்பட வில்லியம்சன் தப்பினார்.

மற்றபடி டாம் லாதம், கேன் வில்லியம்சன் பேட்டிங்கிலும், ஸ்பின்பந்து வீச்சை எதிர்கொண்ட விதத்திலும் எந்த வித தவறையும் காண முடியாது ஸ்ட்ரைக்கை அருமையாக ரொடேட் செய்தனர். அஸ்வினை 2 ரன்களுக்கு கவர் திசையில் தட்டிவிட்டு டாம் லாதம் தனது 8-வது டெஸ்ட் அரைசதத்தை எடுக்க, ஜடேஜா பந்தில் தனது 23-வது டெஸ்ட் அரைசதத்தை எடுத்தார் வில்லியம்சன். இருவரும் இணைந்து இதுவரை 2-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்த்தனர்.

நேற்று இந்தியாவும் 150/1 என்ற நிலையிலிருந்துதான் சரிவு கண்டது, அதே போல் நியூஸிலாந்து அணி சரிவிக்கப்படுமா என்பதை நாளை பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/வில்லியம்சன்-லாதம்-அபாரம்-மழையால்-நிறுத்தப்பட்ட-2ம்-நாள்-ஆட்டத்தில்-நியூஸி-1521/article9140529.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜடேஜா, அஸ்வின் சுழலில் 262 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து

 

 
 
அஸ்வினின் பயங்கரமாகத் திரும்பிய ‘முரளிதரன்’ பந்துக்கு பவுல்டு ஆன கேன் வில்லியம்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
அஸ்வினின் பயங்கரமாகத் திரும்பிய ‘முரளிதரன்’ பந்துக்கு பவுல்டு ஆன கேன் வில்லியம்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.

கான்பூர் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அஸ்வின், ஜடேஜாவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 262 ரன்களுக்குச் சுருண்டது.

154/1 என்று இருந்த நியூஸிலாந்து உணவு இடைவேளையின் போது 238/5 என்ற நிலையிலிருந்தது, பிறகு 262 ரன்களுக்குச் சுருண்டது. கடைசி 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தது. இதில் ஜடேஜாவின் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.

முன்னதாக இன்று 2-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்ந்த லாதம், கேன் வில்லியம்சன் கூட்டணியில் லாதம் 58 ரன்களில் அஸ்வினின் ஆஃப் வாலி பந்தை தவறான லைனில் ஆடியதால் எல்.பி.ஆனார். டெய்லர் 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜாவின் உள்ளே வந்த பந்தை மீண்டும் தவறான லைனில் ஆடி எல்.பி.ஆனார். ஆனால் இதனை 100% துல்லியமான தீர்ப்பு என்று கூற முடியாது.

நேற்று பிட்சின் ஸ்பின்னை சரியாகக் கணித்து முன்னால் வந்து ஆடிய கேன் வில்லியம்சன், இன்று அஸ்வினின் லைன் மற்றும் லெந்த் வேறு மாதிரி அமையவும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஸ்பாட் இருந்ததால் அதில் பிட்ச் செய்யும் போது பந்துகள் திரும்பி எழும்பின. இதனால் ‘சரி பின்னங்காலில் ஆடலாம்’ என்று கேன் வில்லியம்சன் முடிவெடுத்தார், ஆனால் ஸ்பாட்டில் பிட்ச் ஆன அஸ்வின் பந்து ஸ்கொயராகத் திரும்பி வில்லியம்சன் அதிர்ச்சிக்கிடையே பவுல்டு ஆனது. வில்லியம்சன் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரோங்கியும் சாண்ட்னரும் இணைந்தனர். சாண்ட்னர் நல்ல தடுப்பாட்ட உத்தியை வெளிப்படுத்த ரோங்கி உண்மையில் அருமையாக ஆடினார், அதுவும் ஸ்பின்னர்களை பின்னங்காலில் சென்று தொடர்ண்டு பாயிண்ட், கவர் பாயிண்ட் திசைகளில் ஆடினார், இப்படியாக இவர் 38 ரன்களை 6 பவுண்டரிகளுடன் சேர்த்து அச்சுறுத்தி வந்த நிலையில் ஜடேஜா ஓவர் த விக்கெட்டில் வீசிய பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பின்னங்காலில் வாங்கி எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் திரும்பும் பிட்சில் ஜடேஜா ஓவர் த விக்கெட்டில் வீசும் போது இது அவுட் தர முடியாததாகும், ரீப்ளேயும் பந்து ஆஃப் ஸ்டம்பை தவறவிடுவதாகவே தெரிந்தது.

மிட்செல் சாண்ட்னர் 107 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் எடுத்த போராட்டம் அஸ்வினின் நன்றாக தூக்கி வீசப்பட்ட ஆஃப் ஸ்பின் பந்துக்கு முன்னால் வந்து ஆடியதால் எடுத்த எட்ஜ் மூலம் முடிவுக்கு வந்தது. பிறகு ஜடேஜா, மார்க் கிரெய்க், இஷ் சோதி ஆகியோரை அடுத்தடுத்து எல்.பி. செய்தார். இதில் சோதிக்குக் கொடுத்த தீர்ப்பும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வதாகத் தெரிந்தது. டிரெண்ட் போல்ட், ரோஹித் சர்மாவின் நல்ல கேட்சுக்கு அதே ஓவரில் வெளியேறினார். அடுத்த ஓவரில் அஸ்வினின் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வாட்லிங் (21) அவுட் ஆனார்.

ஜடேஜா 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

56 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி சற்று முன் வரை தன்னுடைய 2-வது இன்னிங்ஸில் ராகுல் (38) விக்கெட்டை இழந்து 68 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 23 ரன்களுடனும் புஜாரா 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 129 ரன்கள் முன்னிலை பெற்றது.

http://tamil.thehindu.com/sports/ஜடேஜா-அஸ்வின்-சுழலில்-262-ரன்களுக்குச்-சுருண்டது-நியூஸிலாந்து/article9142609.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

அடிக்கடி குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டு நியூஸி. வீரர்கள் தந்திரம் செய்கின்றனர்: இந்திய அணி அதிருப்தி!

 

 
 
குடிநீர் இடைவேளையில் நியூஸி. வீரர்கள் | நியூஸி. வீரர் டாம் லேதமுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, அருகில் விராட் கோலி | படங்கள்: விவி கிருஷ்ணன்
குடிநீர் இடைவேளையில் நியூஸி. வீரர்கள் | நியூஸி. வீரர் டாம் லேதமுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது, அருகில் விராட் கோலி | படங்கள்: விவி கிருஷ்ணன்

கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பேட்ஸ்மென்கள் ஆட்டத்தினிடையே அடிக்கடி குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டு இந்திய பவுலர்களின் உத்வேகத்தை கெடுக்கின்றனர் என்று இந்திய அணி நிர்வாகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்திய பவுலர்கள் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் தருணங்களின் போதெல்லாம் கேன் வில்லியம்சன், டாம் லாதம் இந்த தந்திர உத்தியைக் கடைபிடித்ததால் பவுலர்களின் உத்வேகம், ரிதம் போய் விடுகிறது என்று இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் பாங்கர் இதுகுறித்து கூறும்போது, “இப்போதுதான் பந்துகள் சற்று திரும்புகின்றன. பவுலர்களும் நல்ல ஒத்திசைவுடன் வீசத் தொடங்கினர். ஒன்று மழை வந்து வெறுப்பேற்றியது, அதை விட நியூஸிலாந்து வீரர்கள் ஆட்டத்தின் இடையிடையே குடிநீர் இடைவேளை எடுத்துக் கொண்டது பவுலர்களின் உத்வேகத்தை கெடுக்கிறது. இப்படியொரு தந்திரம் இருப்பதை நாம் அறிய வேண்டும் என்பதோடு, அதனை அதற்குரிய விதத்தில் கையாள்வது அவசியம்.

இது வேண்டுமென்றே அவர்கள் செய்யும் தந்திரமாக இருக்கக் கூடும், அதனை நாங்கள் ஏற்கெனவே பேசியுள்ளோம். ஆட்டத்தின் தொடர்ச்சி பாதிப்படையக் கூடாது என்பதை நடுவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதில் பெரிய அளவில் யோசிக்க எதுவுமில்லை என்றாலும், ஆட்டத்தில் சில வீரர்கள் இதனை ஒரு உத்தியாகப் பயன்படுத்தி எதிரணியினருக்கு எதிராக கூடுதல் சாதகம் பெறுகின்றனர். கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த உத்திகளை கள நடுவர்களும், ஆட்ட நடுவர்களும் அறிந்திருப்பார்கள். எனவே இதனை தடுக்க வரும் நாட்களில் அவர்கள் சில திட்டங்களை வைத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்” என்றார்.

கான்பூரில் அதிகமாக உஷ்ணம் இருந்து வருகிறது, நியூஸிலாந்து ஸ்பின்னர்களே கூட கடுமையாக களைப்படைந்தனர். ஆகவே கேன் வில்லியம்சன், டாம் லாதம் இதனை ஒரு உத்தியாக, தந்திரமாக பயன்படுத்த வாய்ப்பில்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா விறுவிறுவென தனது ஓவர்களை வீசினார், 2 நிமிடங்களுக்குள் ஒரு ஓவர் என்று அவர் வீசியதால் கூடுதல் ஓவர்கள் கிடைப்பதோடு, பேட்ஸ்மென்கள் அடுத்த பந்துக்கு விரைவில் தயாராக நெருக்கப்படுகிறார்கள்.

இதனை தெரிந்து வைத்திருந்த நியூஸிலாந்தின் கிரெய்க் மெக்மில்லன் கூறும்போது, “உலக கிரிக்கெட்டிலேயே ஜடேஜாவின் ரன் அப்தான் மிகவும் குறைவானது. அதனால் அவர் விரைவில் தன் ஓவர்களை முடித்து விடுகிறார், ஆனால் பேட்ஸ்மென்கள் அவசரம் காட்ட வேண்டியதில்லை, தாங்கள் ஒரு பந்தை எதிர்கொள்ள முழுதும் தயாராகிவிட்டோம் என்று உறுதி செய்து கொண்ட பிறகே ஆட முற்பட வேண்டும். ஓவர்களை விரைவாக வீசும் ஜடேஜா போன்ற பவுலர்கள் சில வேளைகளில் பேட்ஸ்மென்களை அவசரப்படுத்துவதன் மூலமாக அவர்கள் பார்க்க முடியாத தருணத்திலும் பந்துகளை வீசி விடுவார்கள், எனவே பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார்.

இந்த இரண்டு கருத்துகளில் இரண்டிலுமே உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/அடிக்கடி-குடிநீர்-இடைவேளை-எடுத்துக்-கொண்டு-நியூஸி-வீரர்கள்-தந்திரம்-செய்கின்றனர்-இந்திய-அணி-அதிருப்தி/article9142231.ece

  • தொடங்கியவர்

டிக்ளேர் செய்தது இந்தியா: 434 ரன்கள் இலக்கு!

 

18565_thumb.jpg

 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதி வரும் கான்பூர் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸை 377-5 என்ற நிலையில் இருந்தபோது டிக்ளேர் செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு 434 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா சார்பில் ரோகித் ஷர்மா - 68, ஜடேஜா - 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முரளி விஜய் (76), புஜாரா (78) இருவரும் இந்தியாவின் சார்பாக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தனர். இன்று இன்னும் 37 ஓவர்கள் மீதம் இருக்கிறது. மைதானம் ஏற்கனவே சுழலுக்கு அதிகமாக ஒத்துழைப்பதால், மழைக் குறீக்கீடு செய்யாத பட்சத்தில், இந்தியா வெற்றி பெறுவது உறுதி.

http://www.vikatan.com/news/flashnews/18565-india-sets-434-as-target-for-newzealand.art

  • கருத்துக்கள உறவுகள்

நவினன் இந்த மட்ச் எதாவது ரிவி யில் போகுதா

  • தொடங்கியவர்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

நவினன் இந்த மட்ச் எதாவது ரிவி யில் போகுதா

http://www.watchcric.net/index

ரிவி  இல்லை. ஆனால் இன்டர்நெட்டில் பார்க்கலாம்

நியூசீலாந்து  33/2

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.இப்ப பாக்கிறன்.

  • தொடங்கியவர்

200 விக்கெட் சாதனை  அஸ்வின். 

நியூசீலாந்து  43/3

  • தொடங்கியவர்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அஷ்வின் சாதனை

 

கான்பூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 200-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. 37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=248080

  • தொடங்கியவர்

கான்பூர் முதல் டெஸ்ட் போட்டி: வெற்றி பாதையில் இந்திய அணி

 

Daily_News_9318004846573.jpg

கான்பூர்: கான்பூர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பாதையில் இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 262 ரன்னில் சுருண்டது.

56 ரன்களுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 64 ரன்னுடனும், புஜாரா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் 76 ரன்னிலும், புஜாரா 78 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த பிராட் கோலி 18 ரன்னும், ரகானே 40 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா-ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 68 ரன்னுடனும், ஜடேஜா 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய நியூசிலாந்து அணிக்கு 433 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி அஸ்வின் சுழல் பந்து வீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். குப்தில் (0), லாதம் (2), கேன் வில்லியம்சன் (25) விக்கெட்டுகளை இழந்தது.
சிறிது நேரம் தாக்கு பிடித்த டெய்லர் 17 ரன்களில் ரன்அவுட் ஆனார்.  4-வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு 341 ரன்கள் தேவைப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248085

  • தொடங்கியவர்

கான்பூர் டெஸ்ட் – 434 எனும் இலக்கோடு ஆடும் நியூசிலாந்து அணியை வெற்றிகொள்ள இந்தியாவுக்கு 6 விக்கெட்டுக்கள் தேவை. 

 

 

fb_img_1474811937833

கான்பூர் டெஸ்ட் – 434 எனும் இலக்கோடு ஆடும் நியூசிலாந்து அணியை வெற்றிகொள்ள இந்தியாவுக்கு 6 விக்கெட்டுக்கள் தேவை.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 1 வது போட்டியின் 4 ம் நாள் ஆட்டம்  கான்பூர் மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இன்றைய 4 ம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் வெற்றிக்கான மிக நல்ல அடித்ததளத்தை இந்திய அணி இட்டிருக்கிறது.

இன்று ஆட்டம் இடைநிறுத்தப்படும் வரையில் 434 எனும் இலக்கோடு ஆடும் நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

முன்னதாக முரளி விஜய், புஜாரா ஆகியோர் முதல் இன்னிங்க்ஸ் போன்று அரைச்சதமடித்து ஆட்டமிழந்தனர்.விராட் கோஹ்லி 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ரஹானேயின் 40 ஓட்டங்கள், ரோஹித் சர்மா ,ஜடேஜா ஆகிருக்கிடையிலான சத இணைப்பாட்டம் இந்தியாவை வலுவான நிலைக்கு கொண்டுசென்றது.

தனது 19 வது டெஸ்டில் ஆடும் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 68 ஓட்டங்கள் பெற்றதோடு டெஸ்டில் 1000 ஓட்டங்கள் கடந்தார்,அத்தோடு தனது இரண்டாவது அரைச்சதத்தை ஜடேஜா கடந்த போது இந்தியா 377/5 எனும் நிலையில் 434 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து தனது 2 வது இன்னிங்க்ஸ்சை இடைநிறுத்தியது.

fb_img_1474695611360

முதல் இன்னிங்ஸில் பலமான நிலையில் இருந்த நியூசிலாந்து, இறுதி 7 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 312 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தனது 2 வதுஇன்னிங்க்ஸ்சில் ஆடும் நியூசிலாந்து இன்றைய நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்கள் பெற்றது.

தனது 500 வது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்தியா,இந்தப் போட்டியில் வெற்றிபெற நாளைய இறுதிநாளில் நியூசிலாந்து அணியின் மீதமான 6 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

fb_img_1474813673116

அஸ்வின் இன்றைய 2 வது இன்னிங்க்ஸ்சில் கைபற்றிய விக்கெட்டுக்களோடு வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2 வது பந்துவீச்சாளர் எனும் பெருமை பெற்றார்.

இந்திய அணி  312 ஓட்டங்கள் பெற்று முதல் இன்னிங்க்ஸ்சில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது ,நாளை போட்டியில் இறுதி நாளாகும்.

received_10210520797205725received_10210520797405730

http://vilaiyattu.com/18475-2/

  • தொடங்கியவர்
India 318 & 377/5d
New Zealand 262 & 205/7 (73.0 ov)
New Zealand require another 229 runs with 3 wickets remaining
  • தொடங்கியவர்

500-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: அஸ்வின் சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து!

 

  • டாம் லேதம் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் | படம்: பிடிஐ
    டாம் லேதம் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் | படம்: பிடிஐ
  • கடைசி விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: ராய்ட்டர்ஸ்
    கடைசி விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடும் இந்திய வீரர்கள் | படம்: ராய்ட்டர்ஸ்
  • ஷமியின் வேகத்தில் ஸ்டம்பை இழந்த க்ரெய்க் | படம்: ஏ.எஃப்.பி
    ஷமியின் வேகத்தில் ஸ்டம்பை இழந்த க்ரெய்க் | படம்: ஏ.எஃப்.பி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் 500-வது டெஸ்ட் என்ற வகையில், இந்தப் போட்டி சிறப்பிடம் பெறுவது கவனிக்கத்தக்கது.

இப்போட்டியில் 434 ரன்கள் இலக்கை விரட்டிய நியூஸிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவிலேயே 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கடைசி நாளான இன்று தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்துக்கு ரோன்ச்சி, சாண்ட்னர் இணை சிறிது நம்பிக்கை அளித்தது.

இந்திய பந்துவீச்சை இருவரும் சமாளித்து ஆடியதோடு மட்டுமல்லாமல் சீரான ரன் சேர்ப்பிலும் ஈடுபட்டனர். ரோன்ச்சி 83 பந்துகளில் அரை சதம் எட்டினார்.மேற்கொண்டு விக்கெட் இழக்காத நியூஸிலாந்து அணி 158 ரன்களை எட்டியது.

ரோன்ச்சி 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்தை தூக்கியடிக்க முற்பட்டவர் அஸ்வினிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து ஆட வந்த வாட்லிங் வேகமாக ரன் சேர்க்க முற்பட்டு சில பவுண்டரிகளை அடித்தாலும், 18 ரன்களுக்கு ஷமியின் வேகத்தில் வீழ்ந்தார். மறுமுனையில் சாண்ட்னர் அரை சதத்தை தொட்டிருந்தார்.

ஷமியின் அடுத்த ஓவரில் அடுத்து ஆடவந்த க்ரெய்க் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, உணவு இடைவேளைக்கு முன்பே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 204 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் உணவு இடைவேளைக் கடந்தது.

இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா, அஸ்வின் ஜோடியின் சுழல், நியூஸிலாந்தை சோதிக்க முதலில் சாண்டனர் 71 ரன்களுக்கு அஸ்வினிடம் வீழ்ந்தார். அடுத்த சில ஓவர்களில் சோதியை (17 ரன்கள்) அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்தார். 9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்ட நிலையில் அடுத்த 3 ஓவர்கள் ரன் சேர்ப்பின்றி மெய்டன் ஓவர்களாக மாற, கடைசி வீரர் வாக்னரை அஸ்வின் லெக் பிஃபோர் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

முடிவில் நியூஸிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.

200 விக்கெட்டுகளை எட்டிய அஸ்வின்

500-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்தியாவின் 130-வது டெஸ்ட் வெற்றி இது. இந்திய மண்ணில் 88-வது வெற்றியாகும். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் 200 விக்கெட்டுகளை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை எடுத்ததுன் மூலம் 5-வது முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், தான் ஆடிய 37 போட்டிகளில் 19 முறை 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/500வது-டெஸ்ட்-போட்டியில்-இந்தியா-அபார-வெற்றி-அஸ்வின்-சுழலில்-வீழ்ந்தது-நியூஸிலாந்து/article9149620.ece?homepage=true

http://tamil.thehindu.com/sports/500வது-டெஸ்ட்-போட்டியில்-இந்தியா-அபார-வெற்றி-அஸ்வின்-சுழலில்-வீழ்ந்தது-நியூஸிலாந்து/article9149620.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.