Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை

Featured Replies

வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை
 

article_1474549016-NPC03.jpg-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், இன்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார்.

வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மன்னாரைச் சேர்ந்த 21 சுகாதார ஊழியர்கள் புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றினர். அவர்களுக்கான வேதனம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இருந்து வேதனம் செல்கின்றது' என்றார்.

அத்துடன், 'மீண்டும், இங்கு வந்து சேவையாற்றுமாறு அவர்களுக்கு கூறியபோது, மீள்குடியேற்றத்தை காரணங்காட்டி கால நீடிப்பு கேட்டனர். அதற்கிணங்க 3 தடவைகள் காலநீடிப்புச் செய்யப்பட்டது. இறுதியாக கடந்த ஜனவரி மாதம் சம்பளத்தை நிறுத்தப்போகின்றோம் எனக்கூறினோம். அதன்போது, தங்களுடைய பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களின் நலன்காரணமாக காலநீடிப்பு கேட்டனர்.

மனிதாபிமான அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் வரையில் இறுதியான காலநீடிப்பை வழங்கினோம். கால நீடிப்பு முடிவடைந்ததும், 3 பேர் மாத்திரம் வருகை தந்தனர். அவர்கள் மூவரும் வருடாந்த விடுப்பு கேட்டனர். இதனையடுத்து, 21 பேருடைய வேதனமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களை மன்னாரில் வந்து சேவையாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என அவர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/182461#sthash.Z4DQQ33I.dpuf

வடமாகாண சபை சகல அமைச்சர்களும் ஏதோ ஒருவகையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.