Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மக்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படாததற்கு இந்திய அரசு தான் காரணம்” - இலங்கை எம்.பி நேர்காணல்

Featured Replies

"தமிழ் மக்களிடம் நிலங்கள் ஒப்படைக்கப்படாததற்கு இந்திய அரசு தான் காரணம்” - இலங்கை எம்.பி நேர்காணல்

pppp.jpg
 

லங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஷ்வரன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்திருந்தார். மதுரையிலுள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களை சந்திக்க நினைத்தவருக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் அவரை சந்தித்து இலங்கையில் தமிழர்களின் நிலை எப்படியுள்ளது என்பது பற்றி பேசினோம்.


"யாழ் பல்கலையில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே பிரச்னை எப்படி உள்ளது?"

"இப்போது அமைதி நிலவுகிறது. இலங்கை அரசு எப்படி தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களைத் திட்டமிட்டுச் செய்கிறதோ, தமிழர் பகுதிகளில் புத்த விகாரைகளை அமைக்கிறதோ, அதே போல் தமிழர் பகுதியிலுள்ள பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் சிங்களர்களை அதிகம் திணிக்கிறது. அது மட்டுமல்ல, உயர் கல்வியில் கூட தமிழர்களுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படுகிறது. தமிழர்கள் எதில் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள் தெரியுமா? கலைப்பிரிவுகளில்தான். மற்ற பிரிவுகள் கிடைப்பதில்லை. யாழ் பல்கலையிலும், கிழக்கு பல்கலையிலும் இதே நிலைதான்."

"ஜெ.வி.பி இப்போதும் இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறதா?"

"இல்லை, ஆரம்பத்தில் தமிழர்களும் ஜே.வி.பி-யில் இருந்தனர். இடையில் இனவாதம் பேசத்துவங்கியது. தற்போது மீண்டும் தமிழர் நலன் சார்ந்த விஷயங்களைக் கதைக்க ஆரம்பித்திருக்கிறது. இது நல்ல மாற்றம்தான்."


"இறுதி யுத்தத்துக்குப் பிறகு எஞ்சியுள்ள தமிழ் மக்கள் இப்போது நிம்மதியாக வாழ்கிறார்களா?"

"ஆம், மகிந்தே ஆட்சிக்குப் பிறகு தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள். தற்போதுள்ள அரசு ஓரளவு, தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டுகிறது. எங்கள் தலைவர் சம்பந்தனும் தொடர்ந்து அரசின் கவனத்துக்கு பல பிரச்சனைகளை கொண்டு செல்கிறார்"

SRI_LANKA_-_0909_-_Campi.jpg

"ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் மக்களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டதா?"

"சில பகுதிகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒப்படைக்கவில்லை. மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக சம்பூர் பகுதியில் மக்களிடம் காணிகள் ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு இந்திய அரசும் ஒரு காரணம்"

"இலங்கைத் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக பல உதவிகளைச் செய்துவரும் இந்தியா எப்படி, தமிழர் நிலங்களை ஒப்படைக்கத் தடையாக இருக்கும்?"

" உதவிகளெல்லாம் செய்கிறார்கள் அதை மறுக்கவில்லை. சம்பூர் பகுதியில் இந்தியா ஆர்வம் காட்ட காரணம், அங்கு இந்திய அரசு அமைக்கவிருக்கும் மிகப்பெரிய அனல் மின் நிலைய திட்டம்தான். அந்த திட்டத்துக்கு தமிழர்களின் காணிகள்தான் தேவைப்படுகிறது. இத்திட்டம் வேண்டாமென்று நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்"

"தமிழர் பகுதிகளில் இப்போது சாதிப்பாகுபாடு அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுகிறதே?"

" இல்லை, அப்படியெல்லாம் இல்லை, தமிழர் என்ற அடையாளத்தில்தான் எப்போதும் நாங்கள் செயல்படுகிறோம். தமிழகத்தில்தான் சாதி அடிப்படையில் அரசியல் கட்சிகள் இயங்குகிறது. அந்த வகையில் பார்க்கும்போது இலங்கைத்தமிழர் எவ்வளவோ மேல்"

"இந்து அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மதவாதிகள் அழித்து வருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் செயல்படும் வி.ஹெச்.பி போன்ற இந்து அமைப்புகள் இலங்கையின் அதி தீவிர பௌத்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

"ஆம், உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் பௌத்த அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தமிழர்களை இந்துக்களாகப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை ஆரியர்களாகப் பார்த்துத் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு முக்கிய விஷயம், இதுவரை இலங்கையில் நடந்தத் தமிழர் அழிப்பு பற்றி பி.ஜே.பி அரசு கண்டன அறிக்கை விட்டதில்லை. அதில் எங்களுக்கு எப்போதும் வருத்தம் உண்டு. அரசியலுக்காகத்தான் சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தமிழர்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளன. ஈழப்போராட்டங்களுக்கு இந்தியாவிலிருக்கும் எந்த இந்து அமைப்புகளும் ஆதரவு தரவில்லை, பால்தாக்கரே மட்டும் ஆதரித்தார். தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி ஆதரித்தது"

"தமிழக அரசியல் கட்சிகளை இலங்கை தமிழ் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?"

"இறுதி யுத்தத்தை கலைஞர் கருணாநிதி நினைத்திருந்தால் அப்போது நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார். அது அவருடைய அரசியல், அப்போது அவர் ஒரு முடிவெடுத்து இருந்தால் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஜெயலலிதாவுக்கு புலிகளைப் பிடிக்காது, அதேநேரம் இலங்கை தமிழர் பிரச்னை தீர வேண்டுமென்று அவ்வப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இது எங்கள் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. அவர் இலங்கை விவகாரம் தொடர்பாக ஏதாவது பேசினால், இலங்கை அரசு உன்னிப்பாகக் கவனிக்கிறது. அதை இலங்கை ஊடகங்கள் பெரிய அளவில் கொண்டு செல்கிறார்கள். அவர் எதிலும் தைரியமாக முடிவு எடுக்கிறார். அதனால் ஜெயலலிதா எம்மக்களுக்கு பிடித்தவராகி விட்டார். அவருக்கு இலங்கை அரசும் பயப்படுகிறது"

iiiiii.jpg

"மீண்டும் போராளிகள் வருவார்கள், இலங்கையில் யுத்தம் வரும் என்று தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் கூறி வருகிறார்களே, இது சாத்தியமா?"

"இறுதி யுத்தத்தின் வலியிலிருந்து மக்கள் தற்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழக்கைதான். ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒரு சுயமான ஆட்சியைத்தான் நாங்கள் விரும்புகிறோம். சமீபத்தில் இலங்கை வந்திருந்த ஐ.நா பொதுச் செயலாளர் பான்கீ மூனை நான் உட்பட பல்வேறு தமிழர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தோம். அப்போது நாங்கள், 'சர்வதேச நாடுகளையும், ஐ.நா-வையும்தான் நம்புகிறோம்' என்றோம். அவரும், நம்பிக்கையாக பேசினார். அப்போது எங்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், 'இனி எம் மக்கள் நியாயம் வேண்டி ஆயுதங்களை எடுக்க மாட்டோம். அதே நேரம் நேரத்தில் எங்கள் பிரச்னை தீரும் வரை நாடாளுமன்றத்தைச் செயல்பட விட மாட்டோம், அகிம்சை வழியில்தான் எங்கள் போராட்டம் இருக்கும்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். தமிழ் மக்களும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்கள்."

"சிங்களர்கள் அனைவரும் தமிழர் மீது வெறுப்புடந்தான் இருக்கிறார்களா?"

"இல்லை, தமிழர்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் இருக்கிறார்கள். சந்திரிகா, விக்ரமசிங்கே போன்றோர் தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர்கள்தான். அவர்கள்தான் அதிகாரப் பரவலாக்கத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியவர்கள். ஆனால், ஜெயவர்த்தனே, பிரமேதாசா, மகிந்தா இவர்கள்தான் இனவாதத்தை வளர்த்தவர்கள். அதனால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மைத்ரியை விட மகிந்தாவுக்கு சிங்களர்கள் அதிகம் வாக்களித்திருந்தார்கள். மீண்டும் ஆட்சிக்கு வர, இப்பவும் அவர் சிங்கள இனவாததைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். "

"மலையகத் தமிழர்களுக்கும் வடகிழக்குத் தமிழர்களுக்குமான இடைவெளி குறைந்து விட்டதா?"

" நாற்பது சதவிகித மலையகத் தமிழர்கள், வடக்குப் பகுதிக்குக் குடி வந்து வெகு காலமாகிவிட்டது. இருதரப்புக்கும் இடையே பிரிவுகள் இல்லை. எல்லோரும் தமிழர்கள்தான். அவர்களுடைய சூழ்நிலைக்காக சில அரசியல் நிலைப்படுகளை எடுப்பார்கள் அவ்வளவுதான் "

"தமிழக முகாம்களில் வசிக்கும் ஈழ அகதிகளின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றவர்களுக்கு அந்த நாடுகள் அனைத்து வசதிளும் செய்து கொடுக்கின்றன. கனடாவில் அந்நாட்டு எம்.பி-யாகும் வகையில் அங்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு உரிமை கொடுக்கிறார்கள்.தமிழகத்தில் வசிக்கும் அகதிகள் மிகவும் மோசமான வாழக்கை வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் முகாம்களுக்குச் சென்று பார்க்க நினைத்தேன். அதற்கு முறையாக விண்ணப்பித்து அனுமதி வாங்க வேண்டும் என்றனர். இப்போது அவகாசம் இல்லை. அடுத்த முறை வரும்போது செல்வேன். நேரில் பார்த்த பின்புதான் அதைப்பற்றிச் சொல்ல முடியும்."

"இலங்கையில் தமிழர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய திட்டம் என்று எதைக் கூறுகிறீர்கள்?"

"மக்களை அவர்களுடய கானிகளில் மீள் குடியேற்றம் செய்யவேண்டும். அவர்கள் தொழில் செய்ய அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். போரில் கணவனை இழந்த விதவைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெற்ரோரை இழந்த பிள்ளைகளின் புனர் வாழ்வுக்கு உடனே உதவிகள் செய்யவேண்டும். போர் காலத்தில் சந்தேகத்தின் பேரில் சிறையில் வைக்கப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். காணாமல் போனவர்களை அவர்கள் குடும்பத்தில் ஒப்படைக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் பௌத்த கோயில்களை அப்புறப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் ராணுவக் குவிப்பை குறைக்கவேண்டும். இதுதான் உடனே செய்ய வேண்டியது, அதற்குத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்."

http://www.vikatan.com/news/politics/68725-sri-lankan-mp-s-yogeswaran-interview.art

16 hours ago, நவீனன் said:

"இந்து அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள மதவாதிகள் அழித்து வருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் செயல்படும் வி.ஹெச்.பி போன்ற இந்து அமைப்புகள் இலங்கையின் அதி தீவிர பௌத்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?"

"ஆம், உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் இலங்கையில் பௌத்த அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தமிழர்களை இந்துக்களாகப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை ஆரியர்களாகப் பார்த்துத் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இன்னொரு முக்கிய விஷயம், இதுவரை இலங்கையில் நடந்தத் தமிழர் அழிப்பு பற்றி பி.ஜே.பி அரசு கண்டன அறிக்கை விட்டதில்லை. அதில் எங்களுக்கு எப்போதும் வருத்தம் உண்டு. அரசியலுக்காகத்தான் சில விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தமிழர்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளன. ஈழப்போராட்டங்களுக்கு இந்தியாவிலிருக்கும் எந்த இந்து அமைப்புகளும் ஆதரவு தரவில்லை, பால்தாக்கரே மட்டும் ஆதரித்தார். தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி ஆதரித்தது"

யோகேஸ்வரன் இந்த மாபெரும் உண்மையை தெளிவாக அறிந்தது மிக மிக நல்லவிடயம்.
இது அவரது சொந்த அனுபவ அறிவு. இதை நாங்கள் மிக நீண்ட காலமாக சொல்லி வந்துள்ளோம். இருப்பினும் யோகேஸ்வரன் RSS அமைப்புடன் சிலவருடங்கள் நெருக்கமாக இணைந்து பணியாற்றி உண்மையை அறிந்துள்ளார்.

தமிழ் மக்கள் இந்த நயவஞ்சக RSS, VHP, BJP அமைப்புக்களுடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த RSS, VHP, BJP உறுப்பினர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி செயற்படுகின்றனர். இவர்கள் யுத்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள்.

RSS, VHP, BJP அமைப்பினர் இந்துக்கள் என்ற போர்வையில் ஹிந்தியை திணிப்பதே தமது முதலாவது பெரும் பணியாக கருதி செயற்பட்டு வருகின்றனர். ஹிந்தி வெறியர்கள் தான் இந்த அமைப்புகளின் முக்கிய பதவிகளில் அமர முடியும். வட இந்தியாவில் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும்  செய்திகளை வெளியிடுவது இவர்களே. இதன் மூலம் காட்டுமிராண்டிகளுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்.

நேபாள நாட்டை சீரழித்த பெருமையும் இந்த RSS, VHP, BJP கும்பலையே சாரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.