Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்தவின் உடல் நாளை தோண்டியெடுக்கப்படுகிறது

Featured Replies

கடந்த 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பத்திரிகை ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து நாளை ( செவ்வாய்க்கிழமை) தோண்டியெடுக்கப்படுகிறது.

லசாந்த விக்ரமதுங்க கல்லறை

அவரது மரணம் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் , இந்த நடவடிக்கை வருகிறது.

அவரது உடலின் மீது புதிய பிரேத பரிசோதனை ஒன்று நடத்தப்படப் போவதாக இந்த மாதம் முன்னதாக அறிவிப்பு வந்ததிலிருந்து கொழும்பில் உள்ள அவரது கல்லறைக்கு ஆயுதந்தாங்கிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் சி்ல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

அவரது கொலை தொடர்பாக அவர் உடல் மீது முன்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகள் சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன என்று போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரது உடலை தோண்டியெடுக்க உத்தரவிட்டது.

முன்பு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் ஒன்றில் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால் மற்றொரு பிரேத பரிசோதனையில் துப்பாக்கிக் காயங்கள் ஏதும் இ்ருப்பதற்கான தடயமே இல்லை என்று கூறப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில், இந்த கொலை குறித்த விசாரணை மறைக்கப்பட்டதாகக் கூறிய ஊடக அமைப்புகள் இந்த விசாரணையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தை வரவேற்றுள்ளன.

லசாந்த விக்ரமதுங்க `சண்டே லீடர்` என்ற வார பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் 2009ம் ஆண்டு ஜனவரியில் , கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வரும் வழியில் , நான்கு ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மஹிந்த அரசின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்த லசாந்த விக்ரமதுங்க , கொல்லப்படுவதற்கு முன் எழுதி, அவர் கொலை செய்யப்பட்ட பின் சண்டே லீடர் இதழில் பிரசுரமான தலையங்கம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தான் இரு முறை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதல்கள் அரசால் உந்தப்பட்டு நடந்ததாகத் தெரிவித்து, தான் இறுதியாகக் கொல்லப்பட்டால், அரசுதான் அந்தக் கொலையை செய்திருக்கும் என்று கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37475996

 

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கும் பணிகள் ஆரம்பம்
 
 
லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கும் பணிகள் ஆரம்பம்
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1474947704_download%20%281%29.jpg
கொழும்பு மேலதிக நீதிவான் மொஹமட் மிஹால் பொரளை பொது மயானத்திற்கு இன்று காலை 8.45 அளவில் விஜயம் செய்ததை அடுத்து அவரது மேற்பார்வையின் கீழ் சடலம் தோண்டும் பணிகள் ஆரம்பமானது.அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
1474947735_download.jpg
எனினும் சடலம் தோண்டும் இடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்தே செய்தி சேகரிக்குமாறும், காணொளி பதிவுசெய்யுமாறும் ஊடகவியலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://onlineuthayan.com/news/18137

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
 
 

article_1474945782-32AA.jpg

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர்,இன்று செவ்வாய்க்கிழமை (27) சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டது.

 

article_1474945825-12AA.jpg


 
 

article_1474946033-12AA.jpg

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர்,இன்று செவ்வாய்க்கிழமை (27) சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டது.

article_1474946182-5AA.jpg

article_1474946053-32AA.jpg

article_1474946208-5AA.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/182682/லசந-தவ-ன-சடலம-#sthash.yEON0pb1.dpuf

Edited by நவீனன்

லசந்தவின் புதைகுழி
 
27-09-2016 12:50 PM
Comments - 0       Views - 87

article_1474961041-4.jpg

படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று செவ்வாய்க்கிழமை (27) தோண்டியெடுக்கப்பட்டது. அவருடைய சடலம், புதைக்கப்பட்டிருந்த புதைகுழியைப் படங்களில் காணலாம்.

article_1474961053-5.jpg

- See more at: http://www.tamilmirror.lk/182713/லசந-தவ-ன-ப-த-க-ழ-#sthash.VvfePHCF.dpuf

article_1474961100-6.jpg

  • தொடங்கியவர்

சிங்கள-அரச பயங்கரவாதிகளின் கையாலாகாத சிங்கள-பௌத்த நீதித்துறை இயந்திரம் சடலங்களை தோண்டியெடுக்கவும், அப்பாவித் தமிழர்களை விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கவும் தான் தகுதிவாய்த்ததாக இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.