Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வீதி புனரமைப்பு ஒப்பந்தங்கள்! சுமந்திரன் எம்.பி.

Featured Replies

வடமாகாணத்தில் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வீதிகனை புனரமைப்பதற்கானஒப்பந்தங்கள் எந்தவிதமான கேள்விகளும் கோரப்படாமல் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பருத்தித்துறை - மருதங்கேணி வீதி புனரமைப்பின்போது தனதுவீட்டு வாசலில் பல ஒப்பந்தகாரர்கள் வந்து நின்றதாகவும் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தின்கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர்மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பருத்தித்துறை - மருதங்கேணி வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது, என்னுடைய வீ ட்டின்முன்பாக பல ஒப்பந்தகாரர்கள் வந்து நின்றார்கள். அவர்கள் என்னை நன்றாக கவனிப்பார்கள் என எனக்கு கூறி மேற்படி வீதி புனரமைப்புஒப்பந்தத்தை தமக்கு பெற்றுக் கொடுக்குமாறு கேட்டார்கள்.

மேலும் நான் சரி எனசொன்னால் தமக்கு ஒப்பந்தம் கிடைக்கும் எனவும் இந்த இந்த அரசியல்வாதிகள் இந்தஇந்த வீதிகளை செய்தார்கள் என சில அரசியல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டும் சொன்னார்கள்.

ஆனால் நான் அதனை அடியோடு நிராகரித்து விட்டேன்.

ஆனால் அந்த வீதி புனரமைப்பு பணிகள் தற்போது வேறு ஒரு ஒப்பந்தகாரருக்குவழங்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்து விட்டேன். எனகூறினார்.

இந்நிலையில் சபையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிஒருவர் எழுந்து 100 மில்லியன் ரூபாய்க்கு குறைவான நிதியளவு கொண்ட வேலைதிட்டங்களை மக நெகும என்ற தேசிய நிறுவனம்ஒன்றுக்கு வழங்குவது வழக்கம் என கூறினார்.

இந்நிலையில் தொடர்ந்து பேசியநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆக மொத்தத்தில் நான் கூறியது உண்மை.

முறைப்பிரகாரம் கேள்விகள் கோரப்படாமல் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றது. எனவேஇங்கு பட்டப்பகலில் ஊழல் செய்கிறார்கள். என கூறினார்.

இந்நிலையில் இந்த விடயம்மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

 

 

விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் 2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைத்தலைமையின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கான அனுமதியினைப் பெறுவதற்காக அறிக்கையும் திட்ட வரைபினையும் யாழ்.மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் முன்மொழிந்தார்.

 

திட்ட வரைபுகள் ஆராயப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுமதியளித்தார்.

ஆதன்பின்னர், மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து, நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளூராட்சி, வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், உட்பட மாகாண சபை அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/development/01/119040?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்

 பாதிக்கப்பட்ட எம்மவருக்கே இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு சரியான ஒழுங்கில் செய்கிறார்களா என்பதை மேற்பார்வை செய்து தரமான வீதிகள் அமைய   உறுதிப்படுத்தப்பட வேண்டும். தென்னவருக்கு தொழில் வழங்கி எம்மவரை கையேந்த வைக்கும் நிலைகள் மாறவேண்டும்.

  • தொடங்கியவர்

ஊழல் என்கிற விடயத்தில் சுமந்திரன் சொல்வதை ஒதுக்கிவிட முடியாது.

நான்கு வடமாகாண அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இவர்களின் ஊழல் மனப்பாங்கு ஒழிக்கப்பட வேண்டும். அபிவிருத்தி வேலைகளில் தரம் பேணப்பட வேண்டும்.

இரண்டு தடங்கள் (11 அடி + 11 அடி) கொண்ட கார்ப்பெட் பாதை, அத்துடன் மேலும் இரண்டு பக்கமும் பாதசாரிகள் ஈருளிகள் செல்ல 4 அடி + 4 அடி சாலைகள் என மொத்தம் 30 அடி அகலமுடைய 1 km சாலையை அமைக்க தேவையான இன்றைய மதிப்பீடு 40 - 45 இலட்சம் ரூபா. இது 25 வருட அனுபவமுள்ள ஒரு தமிழ் வீதிப்  பொறியியலாளரின் அதிகபட்ச மதிப்பீடு.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.