Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை இறுதியில் இளவாலை புனித ஹென்றியரசர்

Featured Replies

அரை இறுதியில் இளவாலை புனித ஹென்றியரசர்

 

 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டாவது அணியாக இளவாலை புனித ஹென்றியரசர் அணி தகுதிபெற்றுள்ளது.

afaf.JPG

சிட்டி லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு எதிரான மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 ; 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் புனித ஹென்றியரசர் அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது.

இப் போட்டியின் முதலாவது பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் 9ஆவது நிமிடத்தில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் மூலம் முதலாவது கோலைப் போட்டனர்.

எட்டு நிமிடங்கள் கழித்து புனித ஹென்றியரசர் அணியின் இரண்டாவது கோலை அல்ப்ரட் பெனடிக்ட் அனோஜன் புகுத்தினார்.

புனித ஹென்றியரசர் விளையாடிய விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தும் வண்ணம் இருந்தது. அவ்வணியின் பந்து பரிமாற்றம், வீரர்களிடையே புரிந்துணர்வு, எதிர்த்தாடல், தடுத்தாடல் என்பன சிறப்பாக அமைந்திருந்ததாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் முன்னாள் தேசிய வீரர் சமிந்த ஸ்டெய்வோல் தெரிவித்தார்.

fasfvgv.JPG

இடைவேளை யின் பின்னர் மாரிஸ் ஸ்டெல்லா அணியினரின் ஆட்டத்திறன் வெளிப்பட ஆரம்பித்தது. எனினும் புனித ஹென்றியரசர் அணியின் பின்களவீரர்களும் கோல்காப்பாளரும் சாதுரியமாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.

குறிப்பாக போட்டியின் 36ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா அணித் தலைவர் அஞ்சன குணவர்தனவின் ப்றீ கிக்கை மிக இலாவகமாக புனித ஹென்றியரசர் கோல்காப்பாளர் உகந்தீஸ்வரன் அமல்ராஜ் தடுத்து நிறுத்தியமை பலத்த பாராட்டுக்குள்ளானது. சற்று நேரத்தின் பின்னர் மற்றொரு எதிரணி வீரருக்கு கிடைத்த மிகவும் இலகுவான கோல் போடும் வாய்ப்பையும் அமல்ராஜ் தனது சாதுரியத்தால் முறியடித்தார்.

Capture.JPG

மறுபுறத்தில் புனித ஹென்றியரசர் அணியின் அமலதாஸ் மதுசன், ஞானேஸ்வரன் அன்தனிராஜ் ஆகியோரின் கோல் போடும் முயற்சிகள் கைகூடாமல் போயின.

http://www.virakesari.lk/article/11918

வெற்றி கிண்ணத்தை சுவீகரிக்க வாழ்த்துக்கள்! நான் இப்படியான போட்டிகளின் பரமரசிகன். கானொலிகள் எங்காவது தட்டுப்பட்டால் நாங்களும் இங்கே பார்த்து மகிழ்வதற்கு அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

  • தொடங்கியவர்
7 minutes ago, கலைஞன் said:

வெற்றி கிண்ணத்தை சுவீகரிக்க வாழ்த்துக்கள்! நான் இப்படியான போட்டிகளின் பரமரசிகன். கானொலிகள் எங்காவது தட்டுப்பட்டால் நாங்களும் இங்கே பார்த்து மகிழ்வதற்கு அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

 

 

:)

நன்றாய் உள்ளது நவீனன். பார்வையாளர்கள் குவிந்து இருப்பின் பார்ப்பதற்கு இன்னும் சுவாரசியமாகும். வர்ணனையும் தரமாக உள்ளது. தொடர்ந்துவரும் ஆட்டங்களின் முடிவுகளையும் அறியத்தாருங்கள், நன்றி!

  • தொடங்கியவர்

 

2016 School Games Champions Hameed Al Husseinie took on St.Patrick’s College in a thrilling Kotmale U19 Football Championship Quarter final which went into penalties.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

Page-20-c8fe419998ac88acc9ee09fad26a4557

  • தொடங்கியவர்
விறுவிறுப்பான கொத்மலை கிண்ண அரை இறுதிகள் இன்று
2016-11-03 09:57:18

(நெவில் அன்­தனி)

 

இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் மூன்­றா­வது தட­வை­யாக ஏற்­பாடு செய்­துள்ள 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யா­ட­வுள்ள அணி­களைத் தீர்­மா­னிக்கும் அரை இறுதிப் போட்­டிகள் யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் இன்று மாலை நடை­பெ­ற­வுள்­ளன.

 

203831-St.jpg

 

இப் போட்­டி­களில் இரண்டு யாழ். கல்­லூரி அணி­களும் வென்­னப்­புவை மற்றும் கொழும்பு கல்­லூரி அணி­களும் விளை­யாட தகு­தி­பெற்­றுள்­ளன.

புனித பத்­தி­ரி­சியார் எதிர் வென்­னப்­புவை புனித ஜோசப் 
யாழ். புனித பத்­தி­ரி­சியார் அணிக்கும் வென்­னப்­புவை புனித ஜோசப் வாஸ் அணிக்கும் இடை­யி­லான முத­லா­வது அரை இறுதிப் போட்டி இன்று பிற்­பகல் 5.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

புனித பத்­தி­ரி­சியார் அணி இவ் வருடம் ஒரு போட்­டி­யில்­தானும் தோல்வி அடை­யாத அணி­யாக அரை இறு­திக்கு முன்­னே­றிய அதே­வேளை புனித ஜோசப் வாஸ் ஒரு போட்­டியில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தது.

 

இப் போட்டி யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­று­வதால் புனித பத்­தி­ரி­சியார் அணிக்கு அனு­கூ­ல­மான முடிவு கிட்ட வாய்ப்­புள்­ளது. எனினும் புனித ஜோசப் வாஸ் அணி இப் போட்­டியில் பலத்த சவா­லாக விளங்கும் என எதிர்­பார்க்­கலாம்.

 

அணிகள் விபரம்
புனித பத்­தி­ரி­சியார் குழாம்: ரீ. ஏ. சுபாஷ் (தலைவர்), ஏ. பிருந்­தாபன் (உதவித் தலைவர்), ஈ. டார்வின், கே. ஏ. ஆர். டிவைன்சன், எஸ். அபீஷன், டி. எச். ஹெய்ன்ஸ், ஏ. ப்ரீசான், ஆர். டிலக் ஷன், ஏ. பி. வேணு, எஸ். ஆர். ரெனோல்ட், எம். ஆர். தனுஜன், எம். ஆர். கிஜுமன், ஜே. நிர்­மல க்றிஸ்­டீபன், எம். மிகிர்ஷன், ஏ. பீ. அன்ரூட், ஆர். ஷாந்தன், எம். ஜூலியன், ஏ. அனோஜன், ஐ. அருள்தாஸ், ஏ. ஹரிஸ், சீ. கே. ஜூட் பிர­தீப்­குமார், எஸ். பிர­தீபன், ஐ. மதுசான், எஸ். அம­ல­நி­ரஞ்சன், ஜே. ஜெனிஸ்டன், பயிற்­றுநர்: ஈ. வெனிஸ்.

 

203832-St.jpg

 

புனித ஜோசப் வாஸ் குழாம்: அனில் மஞ்­சுள (அணித் தலைவர்), ஜயன் லோவ் (உதவி அணித் தலைவர்), சச்­சின்த தம்­பு­கல, நிமேஷ் டில்ஷான், டினூஷ பெர்­னாண்டோ, அன்டன் ஒப்ரிஸ், சந்­த­ருவன் பெர்­னாண்டோ, எரந்த பெர்­னாண்டோ., பிதுஷ பெர்­னாண்டோ, கவீன் சுஷரித், இசுரு தேவிந்த, தேவிந்த மிலிந்த, ஆஷேன் கனிஷ்க, சதீஷ நிமன்த, சமோத் ஷமில்க, ஜோயல் சானுக்க, லஹிரு காவிந்த, ஏ. கிம்­ஹான, நயன்க ஆர்க்­ஏஞ்­சலோ, ஜூட் ஷெனால், நிமேஷ் சித்­து­மின. பயிற்­றுநர்: ப்ராங்க் கொஸ்தா.

புனித ஹென்­றி­ய­ரசர் எதிர் ஸாஹிரா

நடப்பு சம்­பியன் இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் அணிக்கும் 2014இல்  சம்­பி­ய­னான மரு­தானை ஸாஹிரா அணிக்கும் இடை­யி­லான இரண்­டா­வது அரை இறுதிப் போட்டி மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

கடந்த வருடம் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் ஸாஹி­ராவை 3 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்­றி­கொண்டு புனித ஹென்­றி­ய­ரசர் சம்­பி­ய­ன­ாகி­யி­ருந்­தது. இதே அணிகள் இம்­முறை ஓர் அரை இறு­தியில் விளை­யா­ட­வி­ருப்­பதால் இந்தப் போட்டி மிகவும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்கப்­ப­டு­கின்­றது.

 

இவ் வருடப் போட்­டி­களில் இரண்டு அணி­களும் தத்­த­மது குழுக்­களில் தோல்வி அடை­யாத அணி­க­ளாக இன்­றைய அரை இறு­தியில் ஒன்­றை­யொன்று எதிர்­கொள்­கின்­றன.

 

203833-St.jpg

 

மேலும் இந்த இரண்டு கல்­லூரி அணி­க­ளிலும் முதல்­தர கழ­கங்­க­ளுக்­காக சம்­பியன்ஸ் லீக் போட்­டி­களில் விளை­யாடும் சில வீரர்கள் இடம்­பெ­று­வதால் இப் போட்டி இறு­தி­வரை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தும் என நம்­பப்­ப­டு­கின்­றது.

 

அணிகள் விபரம்:

 

புனித ஹென்­றி­ய­ரசர் குழாம்: ஏ. பி. அனோஜன் (அணித் தலைவர்), ஆர். ஏ. மதுஸ்டன் (உதவி அணித் தலைவர்), எஸ். ஜூட் சுபன், ஜீ. அன்­ர­னிராஜ், ய+. அமல்ராஜ், பி. எஸ். கனிஸ்டன், பி. சிந்­துஜன், ரீ. அஜித், பி. கிரிஷாந்த், ஜே. வி. ஏ. கில்மன், ஜே. கஜேந்­திரன், எஸ். ரூபன்ராஜ், எல். பிறின்சன், என். ஏ. ரமேஷ், ஈ. கே. கெவொன், ஏ. ஜினோல்டன், எவ். ஏ. பிர­சன்னா, பி. ஜே. ராஜ்­குமார், ஏ. ஏ. ஆதுஜன், ரீ. நிதுர்சன், என். லக்கி, எம். ஆர். அன்­தனி, ஏ. ஏ. ஜோசுவா, எஸ். டிலக் ஷன். பயிற்­றுநர்: எம். டனிஸ்டன் விஜ­ய­குமார். 

 

ஸாஹிரா குழாம்: எம். எவ். பாறூத் (அணித் தலைவர்), எம். ஏ. சஹீல் (உதவி அணித் தலைவர்), எம். இஜாஸ் இஷான், ஷ{ல்­விகார் அஹமத், எம். ஷவ்ரான், எம். ராக்கிப், எம். ஹம்மாத், எம். முர்ஷித், எம். நஸிக், எம். என். ரிஸாத், எம். ஆக்கிப், எம். மொஹமத் ஸிஹாம், ரீ. அதீக், எம். ரரஷீத், எம். நசூர்தீன், எம். ரிஸ்மி, எம். ஷஹீன், எம். ஷக்கிர், எம். எஸ். எம். எஅலி, எம். சாஜித், ஏ. அதீக், துவான் ஃபர்ஸான், எம். கே. எம். இஷான். பயிற்றுநர்: எம். எச். றூமி.

203834-Zahira-College---Colombo.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20384#sthash.27MvqXVW.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கொத்மலை கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டிக்கு புனித பத்திரிசியார் தகுதி
2016-11-04 11:16:34

(யாழி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

வென்­னப்­புவை புனித ஜோசப் வாஸ் அணியை 6–5 என்ற பெனல்டி முறையில் வெற்றி கொண்ட யாழ். புனித பத்­தி­ரி­சியார் அணி பாட­சா­லை­களின் 19 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு தகுதி பெற்­றது.

 

2041666.jpg

 

யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற முத­லா­வது அரை இறுதிப் போட்டி கோல் எதுவும் போடப்­ப­டாமல் வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­ததை அடுத்து மத்­தி­யஸ்­த­ரினால் பெனல்டி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. 

 

பெனல்டி முறையில் மூன்­றா­வது பெனல்­டியை புனித பத்­தி­ரி­சியார் அணியின் வழ­மை­யான கோல்­காப்­பாளர் ஏ. பிருந்­தா­பனும் ஏழா­வது பெனல்­டியை மாற்று கோல்­காப்­பாளர் ஆர். ஷாந்­தனும் தடுத்து நிறுத்தி தமது அணி இறுதிப் போட்­டியில் விளை­யா­டு­வதை உறுதி செய்­தனர்.

 

தலா ஏழு உதைகள் வரை நீடித்த பெனல்­டி­களில் புனித பத்­தி­ரி­சியார் அணி 6 – 5 கோல்கள் விகி­தத்தில் வெற்றி பெற்­றது.

 

புனித பத்­தி­ரி­சியார் சார்­பாக அன்­தனி சுபாஷ், அன்ருட் லெனின், ஆர். டிலக்ஷன், ஆர். ஷாந்தன், ஈ. டார்வின், கோல்­காப்­பாளர் ஏ. பிருந்­தாபன் ஆகியோர் பெனல்­டி­களைப் புகுத்­தினர். எஸ். அபீஷன் பந்தை வெளியில் உதைத்தார்.

 

புனித ஜோசப் வாஸ் சார்­பாக ஆஷேன் கனிஷ்க, பிதுஷ பெர்­னாண்டோ, சந்­த­ருவன் பெர்­னாண்டோ, நிமேஷ் டில்ஷான், இசுர தேவிந்த ஆகியோர் பெனல்­டி­களை இலக்கு தவ­றாமல் கோலினுள் புகுத்­தினர்.

 

தினூஷ பெர்­னாண்­டோவின் பெனல்­டியை வழ­மை­யான கோல்­காப்­பாளர் ஏ. பிருந்தாபனும் தேவிந்த மிலிந்தவின் பெனல்டியை மாற்றுகோல்காப்பாளர் ஆர். ஷாந்தனும் தடுத்து நிறுத்தினர்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=20416

19 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்டம் இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது சென்ஹென்றிஸ்
 
 
 
19 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்டம் இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது சென்ஹென்றிஸ்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன்  அகில இலங்கை ரீதியாக   பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையே நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் நேற்று மாலை மின்னொளியில் யாழ். துரையப்பா விளையாட்ட ரங்கில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியொன்றில் இளவாலை சென்ஹென்றிஸை வீழ்த்தியது கொழும்பு சாகிராக் கல்லூரி.  
 
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. பெரிதும் ஆதிக்கத்தை வெளிப்ப டுத்திய சென் ஹென்றிஸ் 40 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவுசெய்தது. அடுத்து 60 ஆவது நிமிடத்தில் பதிலடியாக முதல் கோலை பதிவு செய்தது கொழும்பு சாகிராக் கல்லூரி . வெற்றியை நோக்கி  இரு அணிகளும் விறுவிறுப்பு காட்டியபோது 91 ஆவது நிமிடத்தில் ஹென்றிஸ் வீரர் கிரிசாந் அபார கோலை பதிவு செய்தார் .
IMG_0669.JPG
இருப்பினும் சென்   ஹென்றிஸ் செய்த தவறினால் அடுத்த நிமிடமே சாகிராக் கல்லுரி மேலும் ஒரு கோலை பதிவு செய்தது.இதனால்  2:2 என்ற நிலையில் ஆட்டம் சமநிலை பெற்றதனால் வெற்றியை தீர்மானிக்க சமநிலைத்தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.
IMG_0683.JPG
 
இச்சந்தப்பத்தை சரியாக பயன்படுத்திய சாகிரா 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென் ஹென்றிஸ் துரதிஸ்டவசமாக தோல்வியைத் தழுவியது.
 
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, ஈ.சரவணபவன்  மற்றும் கல்லூரிகளின் அதிபர்கள் மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
IMG_0682.JPG
 
IMG_0718.JPG
 
IMG_1895.JPG

http://onlineuthayan.com/news/19733

19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட உதைபந்தாட்டம் இறுதிக்குள் நுழைந்தது சென்.பற்றிக்ஸ்
19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட உதைபந்தாட்டம் இறுதிக்குள் நுழைந்தது சென்.பற்றிக்ஸ்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன்  அகில இலங்கை ரீதியாக   பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையே நடத்திவரும் கால்பந்தாட்டத் தொடரில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. 
 
யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்றையதினம்   அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் யாழ் சென். பற்றிக்ஸ்  கல்லூரி அணியை எதிர்த்து வென்னப்புவ சென் ஜோசவாஸ் கல்லூரி அணி மோதி யது. நீண்ட போராட்டத்தின் பின்னர் வாய்ப்புக்கள் கிடைப்பதும் பின்னர் அவை வீணடிக்கப்படுவதுமாக நகர்ந்தது ஆட்டம்.  
IMG_0680.JPG
இறுதியில்  எந்தவொரு அணியும்   கோல் எதனையும் போடாத நிலையில் ஆட்டம்   நிறைவுக்கு வந்தது. இதனால் சமனிலைத் தவி ர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இறுதியில் 6:5 என்ற கோல் கணக்கில் சென். பற்றிக்ஸ் அணி வெற்று பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. 
 
இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக  யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற ஊறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். 
IMG_1862.JPG
நாளைய தினம் (05/11/2016)நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கொழும்பு சாகிராக் கல்லூரி அணியுடன் துரையப்பா விளையாட்டரங்கில்  மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMG_0627.JPG
 

http://onlineuthayan.com/news/19732

  • தொடங்கியவர்

கொத்மலை சொக்ஸ் கிண்ணம் ; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பத்திரிசியார் கல்லூரி அணி 

 

 

கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டியில் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணியை 6-5 என்று பெனால்டி உதையில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

SPC-jaffna.jpg

19 வயதுக்குட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

 

இதில் யாழ். புனித பத்திரிசியார் கல்லலூரி அணியும் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணியும் ஒன்றையொன்று சந்தித்தன.

 

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் போட்டி நிறைவுபெறும் வரை எவ்வித கோல்களும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

 

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இந்நிலையிலும் எந்தக் கல்லூரி அணி வீரர்களும் கோல்களைப் போடாததால்  மத்தியஸ்தரினால் பெனால்டி முறையில் வெற்றியை தீர்மானிக்கும் நிலைக்கு இரு அணிகளும் தள்ளப்பட்டன.

14947490_1250839931654820_64046011950258

பெனால்டி முறையில் மூன்றாவது பெனால்டியை புனித பத்திரிசியார் அணியின் வழமையான கோல் காப்பாளர் ஏ.பிருந்தாபனும் ஏழாவது பெனால்டியை மாற்று கோல் காப்பாளர் ஆர். சாந்தனும் தடுத்து நிறுத்தி தமது அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தனர்.

 

தலா ஏழு உதைகள் வரை நீடித்த பெனால்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி 6-5 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

 

புனித பத்திரிசியார் கல்லூரி அணி சார்பாக அந்தனி சுபாஷ், அன்றுட் லெனின், ஆர்.டிலக்ஷன், ஆர்.ஷாந்தன், ஈ.டார்வின், கோல்காப்பாளர் ஏ.பிருந்தாபன் ஆகியோர் பெனால்டி உதைகளை சரியாக உதைத்தனர்.

14925489_1250840134988133_51710392982557

புனித ஜோசப்வாஸ் கல்லூரி அணி சார்பாக ஆஷேன் கனிஷ்க, பிதுஷ பெர்னாண்டோ, சத்துருவன் பெர்னாண்டோ, நிமேஷ் டில்ஷான், இசுரு தேவிந்த ஆகியோர்  பெனால்டி உதைகளை சரியாக உதைத்தனர்.

 

தினுஷ பொர்னாண்டோவின் பெனால்டியை பத்திரிசியார் கல்லூரியின் வழமையான கோல்காப்பாளரான ஏ.பிருந்தாபனும் தேவிந்த மிலிந்தவின் பெனால்டியை மாற்று கோல் காப்பாளர் ஆர்.ஷாந்தனும் தடுத்து நிறுத்தினர்.

 

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 6-5 என்ற பெனால்டி அடிப்படையில் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலாவது அணியாக இத்த தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

 

இந்நிலையில் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியை 4 க்கு 1 என்ற பெனால்டி அடிப்படையில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

14925328_212777452489633_708417562931946

கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் கொழும்பு ஸாகிரா கல்லூரி அணியும் நாளை 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு ஒன்றையொன்று சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13137

  • தொடங்கியவர்
19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட உதைபந்தாட்டம் கிண்ணம் சாகிரா வசம்
 
 
19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்ட உதைபந்தாட்டம் கிண்ணம் சாகிரா வசம்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் கொத்மலை கிண்ணத்து க்காக நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் கொழும்பு சாகிராக் கல்லூரி  சம்பியனானது. 
 
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு மின்னொளியில்  இறுதியாட்டம் நடைபெற்றது. கொழும்பு சாகிராக் கல்லூரியை எதிர்த்து சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது. பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் மிகவும் விறு விறுப்பாக ஆரம்பம் முதலே ஆட்டம்  இடம்பெற்றது. 
14997020_1243952025651523_1661238170_n.jpg
ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்கள் வரை கோல்கள் எவையும் பதிவாகவில்லை. 34ஆவது நிமிடத்தில் சாகிராக் கல்லூரி தனது ஆதிக்கத்தை ஆரம்பிக்கத் தொடங்கியது. எம். சர்வானின் முதல் கோலுடன் முதல்பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் சாகிராக் கல்லூரி தனது இரண்டாவது கோலினைப் பதிவு செய்தது. சஹோல் அடித்த இந்த கோலுடன் சாகிராவின் வெற்றியானது பெரும்பாலும் உறுதியானதாகவே கொள்ளப்பட்டது. தொடர்ந்து. போட்டியின் 81 ஆவது நிமிடத்தில் தூர்வன் சாகிராவிற்காக மூன்றாவது கோலினைப் பதிவு செய்தார். 
14996426_1243951962318196_899325870_n.jpg
ஆட்டநேர முடிவில் 3:0 என்ற கோல்கணக்கில் பற்றிக்ஸை வீழ்த்தி கொத்மலைக் கிண்ணத்தை கைப்பற்றியது சாகிரா கல்லூரி. ஆட்ட நாயகனாக சாகிரா கல்லூரியின் சுல்பிகர் அகமட் தெரிவானதுடன் சிறந்த கோல் காப்பாளராக சாகிராவின் கலீல் உர் ரகு மான் தெரிவு செய்யப்பட்டார்.
14958682_1243952055651520_529740472_n.jpg
இதேவேளை மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் வென்னப்புவ சென்.ஜோசவாஸ் கல்லூரியை எதிர்த்தாடிய இளவாலை சென். ஹென்றிஸ்  3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
14961481_1243952068984852_1282726567_n.jpg
 
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர,எதிர்க்கட்சித்தலைவர் இரா.சமபந்தன்,நாடாளுமன்ற உறுப்பின ர்களான மாவை.சேனாதிராசா,ஈ.சரவணபவன்,சிறுவர்,மகளிர்விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா,உதைபந்தாட்டசம்மேளனத் தலைவர், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும்   மாணவர்கள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்ட னர். 
 
14962980_1243952112318181_241506338_n.jpg
 

http://www.onlineuthayan.com/news/19805

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.