Jump to content

மரக்கறி பிரியாணி வித் மட்டன்:


Recommended Posts

பதியப்பட்டது
வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்:

muttionbiriyani.jpg

தேவையான பொருட்கள் :
 

  • வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்:
  • அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்)
  • மட்டன் - அரை கிலோ
  • உருளை - கால் கிலோ
  • கேரட் - கால் கிலோ
  • பட்டாணி - 100 கிராம்
  • பீன்ஸ் - 50 கிராம்
  • வெங்காயம் - 700 கிராம்
  • தக்காளி - 700 கிராம்
  • தயிர் - 300 கிராம்
  • இஞ்சி - 200 கிராம்
  • பூண்டு - 125 கிராம்
  • பச்சை மிளகாய் - 15
  • மிளகாய் தூள் - ஐந்து தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • கொத்தமல்லி - இரண்டு கட்டு
  • புதினா - ஒரு கட்டு
  • சாஃப்ரான் - இரண்டு பின்ச் (பாலில் ஊற வைக்கவும்)
  • எண்ணெய் - 200 கிராம்
  • டால்டா - 200 கிராம்
  • பட்டை - இரண்டு அங்குல துண்டு (நான்கு)
  • ஏலம் - நான்கு
  • கிராம்பு - எட்டு

செய்முறை :
 

  • இஞ்சி பூண்டை தனித்தனியாக அரைத்து வைக்கவும்.
  • அரிசியை (நல்ல தரமான பிரியாணி அரிசி) இரு முறை களைந்து ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும், தக்காளியை நான்கு துண்டுகளாக போடவும்.
  • கேரட்டை வட்ட வடிவமாக சிறிது தடிமனாக நறுக்கவும்.
  • பெரிய பிரியாணி சட்டியை காய வைத்து அதில் எண்ணெய் + டால்டா கலவையை ஊற்றவும்.
  • பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் பூண்டு மட்டும் போட்டு வதக்கவும்.
  • பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி, இஞ்சி விழுதை போடவும்.
  • நல்ல வதங்கி பொன்னிறமானதும். மட்டன், கேரட், உருளையை போட்டு வதக்கவும்.
  • ஐந்து நிமிடம் கழித்து, தக்காளி, மற்ற காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போடவும். பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
  • தயிரை நல்ல அடித்து ஊற்றி நல்ல கிளறி விட்டு எலுமிச்சை பழத்தை பிழிந்து மூடி போட்டு சிம்மில் பதினைந்து நிமிடம் வேக வைக்கவும்.
  • வெந்ததும் எண்ணெய் முழுவதும் மேலே வந்து விடும். இதே கூட்டோடுதான் இருக்கும்.
  • அப்படியே அரிசி ஒரு பங்குக்கு ஒன்னேகால் வீதம் பத்து டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை களைந்து போட்டு பாதி கொதி வந்ததும் தீயை சிம்மில் வைத்து பாலில் ஊறிய குங்குமப்பூவை ஊற்றி தம் போட வேண்டும் இருபது நிமிடம் கழித்து இறக்கி கிளறி பரிமாறவும்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்:

அப்பலோவின் அறிக்கையும் , விஜயகாந்தின் பேச்சும் போல ஒரே குழப்பமாய் இருக்கு ....!

இஸ் திஸ்  வெஜ் ஆர் நான் வெஜ் .....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்:

அப்பலோவின் அறிக்கையும் , விஜயகாந்தின் பேச்சும் போல ஒரே குழப்பமாய் இருக்கு ....!

இஸ் திஸ்  வெஜ் ஆர் நான் வெஜ் .....! tw_blush:

வெஜ்யாத்தான் ஸராற்றிங்கு.... நொன்வெஜ்யா பினிசுங்கு... :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம், தம் என்று அடம் பிடிக்கிறார்கள். மாவை குழைத்து நீளவாக்கில் உறுட்டி அப்படியே பிரியாணி சட்டியையை மூடி பொருந்தி மூடும் இடத்தில் சுற்றிவர அமுத்தி மேலே ஒரு பாரத்தை வைக்கிறார்கள்.

ஏன் என்று பார்த்தால், ஆவி வெளியேறாமல் தடுக்கவாம்.

அப்படீன்னா, பிரசர் குக்கரை பாவிக்கலாமே. இல்லையோ ? :208_hamster:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

தம், தம் என்று அடம் பிடிக்கிறார்கள். மாவை குழைத்து நீளவாக்கில் உறுட்டி அப்படியே பிரியாணி சட்டியையை மூடி பொருந்தி மூடும் இடத்தில் சுற்றிவர அமுத்தி மேலே ஒரு பாரத்தை வைக்கிறார்கள்.

ஏன் என்று பார்த்தால், ஆவி வெளியேறாமல் தடுக்கவாம்.

அப்படீன்னா, பிரசர் குக்கரை பாவிக்கலாமே. இல்லையோ ? :208_hamster:

பொதுவாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன்மேல் பிரியாணி சட்டியை வைத்து நீங்கள் கூறியதுபோல் மாவை வைத்தோ அல்லது துணியால் நன்றாக மூடி அதன்மேல் பாரத்தை வைப்பார்கள்....! பின்னாளில்தான் பிரஷரும் ,பிரஷர் குக்கரும் வந்தது . தற்போது பெரும்பாலும் பிரசர் குக்கர்தான் பவிக்கின்றார்கள்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

பொதுவாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன்மேல் பிரியாணி சட்டியை வைத்து நீங்கள் கூறியதுபோல் மாவை வைத்தோ அல்லது துணியால் நன்றாக மூடி அதன்மேல் பாரத்தை வைப்பார்கள்....! பின்னாளில்தான் பிரஷரும் ,பிரஷர் குக்கரும் வந்தது . தற்போது பெரும்பாலும் பிரசர் குக்கர்தான் பவிக்கின்றார்கள்...! tw_blush:

நன்றி சுவி...

பிரசர் குக்கரை தோசைக் கல்லில் வைத்தால் வேலைக்காகுமா? 

நம்ம வட்டிலாப்பம், சுடு தண்ணியில் மிதந்தவாறே, அவனில் வைத்து வேகவைப்பதை யூரியூப்பில் பார்த்தேன்....

இரு பக்கமுமாக வெக்கை வருவதால், சீராக தயாராகின்றது.

பக்கத்து வீட்டு வெள்ளயளுக்கு பிடித்துப் போக, தமிழ்கடை தேடி, கருப்பட்டி வாங்கிறார். :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரஷர் குக்கரை வைக்கணும் என்று அவசியமில்லை . அதன் அடிப் பிளேட் தடிப்பானது . இதெல்லாம் நம்ம அலுமினியச் சட்டிகளுக்குத்தான் ....! அதுதான் அதன் அடியில் அடிப் பிடிக்காமல் சூடு சீராக  பரவ அடுப்பையும் அளவாகக் குறைத்து 15ல் இருந்து 20 நிமிடங்கள் வைப்பார்கள் ....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
    • காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
    • தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி. 
    • 14 DEC, 2024 | 01:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.  இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவருமே உள்ளாகின்றனர். இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும் காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தவறு செய்கின்றவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கின்றது. இருந்த போதும், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  3 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் திருகோணமலை  மேல் நீதிமன்றம்  கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது  கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது. இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டுதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான  எல்லா  விதமான பாராபட்சங்களையும்  இல்லாது ஒழிக்கும்  (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில்  நடைமுறைப்படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும், இலங்கையின்  வடக்கு  கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெறும் விசாரணைகளை  உடன் நிறுத்த வேண்டும் எனவும், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அடிப்படையில்  பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.  https://www.virakesari.lk/article/201251
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.