Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபைக்குத் தெரியாமல் லண்டனில் விக்னேஸ்வரன் ஒப்பந்தம்!

Featured Replies

வடக்கு மாகாண சபைக்குத் தெரியாமல் லண்டனில் விக்னேஸ்வரன் ஒப்பந்தம்!

 

 

வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல் - அதன் அனுமதி பெறாமல் யாழ்ப்பாணத்துக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைச்சாத்திடவுள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து வடக்கு மாகாண சபைக்குத் தெரிவிக்கப்படவோ விளக்கம் அளிக்கப்படவோ இல்லை என்று அவைத் தலைவர் சி. வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தென்மேற்கில் உள்ளது கிங்ஸ்டன். 14.38 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் தமிழர்கள். தமிழ் இந்தச் சபையின் இரண்டாவது மொழியாக உள்ளது.

ஆட்சி, சுகாதாரம், கல்வி, வர்த்தகம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதுடன் அறிவைப் பகிர்ந்துகொள்வதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றே கிங்ஸ்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது என கிங்ஸ்டன் சபையின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என்று அந்தத் தகவல் தெரிவிக்கிறது. சபையின் மாநாட்டு மண்டபத்தில் 18ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதுபோன்ற ஒப்பந்தங்களை ஜேர்மனியின் கூட்டன்பேர்க் மற்றும் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள குவானக்கு ஆகிய நகரங்களுடனும் கிங்ஸ்ரன் ஏற்கனவே செய்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறிய குழு ஒன்றும் லண்டன் வருவதாகவும் அதற்கான செலவுகள் அனைத்தும் அங்குள்ள மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் என்றும் கிங்ஸ்டன் சபை கூறியுள்ளது.

இந்தப் பயணத்தின்போது முதலமைச்சர் தலைமையிலான குழு கிங்ஸ்டன் வைத்தியசாலைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் நேரில் சென்று பார்வையிடும்.

அங்குள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் குழுவுடனும் பேச்சு நடத்தும். இதற்காக எதிர்வரும் 16ஆம் திகதி முதலமைச்சர் இங்கிருந்து புறப்படுகிறார் என தெரியவந்துள்ளது.

அவருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும் பயணிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டபோதும் அவர்கள் யார் என்பது தெரியவரவில்லை.

முதலமைச்சரின் பயணமும் இந்த ஒப்பந்தமும் இங்கு இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், கிங்ஸ்டன் நகர சபையில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டு ஒப்பந்தத்திற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

தனது பயணம் குறித்தோ தன்னுடன் பயணிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் குறித்தோ முதலமைச்சர் இதுவரையில் மாகாண சபைக்கும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை என அறியவந்தது.

வெளிநாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்துகொள்கிற அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை என்கிறபோதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் எந்த அடிப்படையில் கைச்சாத்திடப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம்தான், இதில் நிதிக் கையாளல்கள் எவையும் நடக்கவில்லை என்பதால் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை அனுமதித்திருக்கக்கூடும் என்றும், அந்த அனுமதியை முதலமைச்சர் இரகசியமாகக் கொழும்பிடம் இருந்து பெற்றிருக்கக்கூடும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

http://www.tamilwin.com/politics/01/120030

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிவஞானம் எப்ப விக்கியை கிளப்பலாம்...கதிரையிலை குந்தலாம் என்றூ ..இருக்கிறார்...

அரச ஒப்பந்தங்கள் அனைத்தும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்துவதில்லை. அமைச்சரவை என்ற ஒன்று அதற்காகத் தான் இருக்கிறது.

அதுபோலவே  தான் மாகாணசபை நிர்வாகமும். சகல ஒப்பந்தங்களும் மாகாணசபையில் விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. மாகாணசபை அமைச்சரவை என்ற ஒன்று அதற்காகத் தான் இருக்கிறது. ஆனால் விபரங்களை அறிய விருப்பம் என்றால் மாகாணசபை உறுப்பினர்கள் விபரங்களை அவையில் கோரி பெறமுடியும். அது அவர்களின் உரிமை.

இந்த அடிப்படை அறிவற்றவராகவே தமிழரசுக் கட்சியின் சி. வி.கே.சிவஞானம் இருக்கிறார். இவர் என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழரசுக் கட்சியின் அடாவடித் தனங்களை  மறைக்க முடியாது. அல்லது மாவையின் முதலமைச்சர் கனவை நிறைவேற்ற முடியாது.

செய்யவும்மாட்டார்கள் செய்யவிடவும் மாட்டார்கள்! 

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், எதிர்வரும் 18ஆம் திகதி கிங்ஸ்ரன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார் என கிங்ஸ்டன் நகர இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண சபை இதுவரை உத்தியோகபூர்வ தகவல் எதனையும் வெளியிடவில்லை.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகரமாக இணைந்து கொள்ளவுள்ள பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தில், சுமார் 12 ஆயிரம் தமிழர்கள் வசிக்கின்றனர் அத்துடன் தமிழ் அந்த நகரத்தின் இரண்டாவது மொழியாகவும் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=44036

  • 2 months later...
  • தொடங்கியவர்

தவறான பதிவு

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.