Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் – முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன

Featured Replies

14627681_1171157319589334_1411550045_n

சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி சந்தைக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்

பிரித்தாளும் தந்திரத்தைக் கொண்டு முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் மோதல்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதற்கான சதி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும்இது குறிதது சிறுபான்மை சமூகத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அது மாத்திரமன்றி சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வு எவ்வித இழுத்தடிப்புக்களுமின்றி விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும்; வேண்டுகோள் விடுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் தற்போது தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்துக்காக போராடி வேண்டி ஏற்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக  அவர்களது  உரிமைகள் கேள்விக்குட்படுத்தப்பட்டிருப்பதே காரணம் எனவும் குறிப்பிட்டார்

14658234_1171157292922670_1243170950_n

இதேவேளை யாப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் மாகாண  சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட  வேண்டியது கட்டாயமான விடயமாகும் எனவும் அவர் கூறினார். அத்துடன்  தமது மாகாணத்துக்கு யாப்பினூடாக  அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் அவை அமுல்ப்படுத்தப்படாமையினாலேயே  சொந்த மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை அமைச்சர்களிடம் இரந்து கேட்டு முன்னெடுக்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் சுட்டிக்காட்டினார்

இந்த நிலைமை மாற்றப்பட்டு சிறுபான்மை மக்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று சகல அதிகாரங்களும் பெற்று தலைநிமிரந்து வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

http://globaltamilnews.net/archives/3197

2 hours ago, Athavan CH said:

சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை பிரிப்பதற்கான சூழ்ச்சிகள்

பிரிப்பதற்கான சூழ்ச்சிகளா? ஏற்கனவே பிரிந்துதான் இருக்கிறார்கள். யாரை இவர் ஏமாற்ற நினைக்கிறார்?

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் முஸ்லீம் மதவாதிகள், அஸ்ரப்பில் தொடக்கி ஹக்கீம் வரையிலும், இணைந்து சந்தர்ப்பவாத மதவெறி அரசியல் செய்து தமிழின அழிப்புக்கு 1984 முதல் பெரும் துணை போனது முதல் இரண்டு இனங்களும் பிரிந்துவிட்டன என்ற உண்மையை மறைக்க வேண்டாமே.

மறுபக்கம்  அதாவுல்லா, றிஷாட்பதியுதீன், ஹிஸ்புல்லா முதலிய பல முஸ்லீம் மதவெறிப்  பயங்கரவாதிகள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழர்களின் காணிகளை அபகரிப்பதிலும், சொத்துக்களை கொள்ளையடிப்பதிலும், கடத்தல் கொலைகளுக்கு துணை போனதிலும், தமிழர் வழிபாட்டு இடங்களை அழிப்பதிலும் சிதைப்பதிலும் ஈடுபட்டு வந்ததையும் ஒருபோதும் மறைக்க வேண்டாமே.
 
20 minutes ago, போல் said:

அது ஒன்றும் இல்லை சிவசேனை, எழுக தமிழ் என்று புதிது புதிதாய் முளைக்க பயம் பிடித்து விட்டது, அதான் இந்த நாடகம்.

பேசாமல் பிரபாகரனுடன் ஒத்துழைத்து இருந்தால் இப்படி அஞ்சவேண்டிய நிலை வந்திருக்காதே !!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.