Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது

Featured Replies

 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமைப்பு வெளியிடப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

அந்த அரயலமைப்பு ஒற்றையாட்சியின் கீழ் அமைவதோடு பௌத்தத்திற்கும் முன்னரிமை அளிக்கப்படவுள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்காமல் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிவிட்டு அதற்கு தமிழர்களும் ஆதரவு அளித்தார்கள் என்று தமிழ்த்தேசிய கூறும் அதன் பின்னர் அரசு எம்மை ஏமாற்றி விட்டது என்று நாடகமாடும். இந்த நிலை தான் வரப்போகின்றது.

இந்த அரசிற்கு பலதடைவைகள் நிபந்தனையற்ற ஆதரவை முக்கியமான தருணங்களில் வழங்கி வந்துள்ளது. அந்த தருணங்களை தவறவிட்டு தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் முன்னரை விட ஆபத்தானது என்று சுமந்திரன் இப்போது கூறி வருகின்றார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவருவதற்கு கூட்டமைப்பும் ஒரு காரணம் தான், அரசுக்கு ஆதரவு வழங்கும் போது பேரம் பேசியிருந்தால்,

இந்த சட்டத்தை கொண்டுவரமலும், இன்னும் பலவிடயங்களை சாதித்திருக்க முடியும். எழுக தமிழின் பின்னரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் காண தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் மக்களின் எழுச்சியூடாக தான் நிகழ்ந்துள்ளது.

கூட்டமைப்பு அஞ்ச ஆரம்பித்துள்ளது. எனினும் இரு மாதகால அவகாசம் கோரும் கூட்டமைப்பு ஒற்றையாட்சி தீர்வை தமிழ் மக்கள் ஏற்க வைக்கும் இரகசிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இப்போது எதிர்க்க வேண்டாம் என கூறும் கூட்டமைப்பு அரசியலமைப்பு வந்தவுடன் அரசு எம்மை ஏமாற்றி விட்டது என்ற நாடகத்தை அரங்கேற்ற போகின்றது. ஆகவே அதற்கிடையில் மக்கள் விழிப்படைய வேண்டும். மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயாராக வேண்டும். மக்கள் போராட்டமே அனைத்தையும் மாற்றியமைக்கும் என்றார் அவர்.

http://thuliyam.com/?p=45101

 

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

கஜேந்திரகுமார் மீது சுமந்திரனுக்கு இரகசிய காதல்?

அன்மையில் இடம் பெறும் நிகழ்வுளில் எல்லாம் எம்மைப் பற்றியே கதைச்சுக் கொண்டு திரியுறார். சுமந்திரன் பாவம் சரியா இப்ப பதட்டபடுகிறார் சுமந்திரன்
இவரை மக்கள் வெறுக்கிறார்கள் என்ன செய்வது என தெரியாது குழம்புகிறார் கோபப் படுகிறார் இவரின் பொய்கள் எல்லாம் வெளிவர ஆரம்பமாகியுள்ளது அது நீண்ட காலம் நீடிக்காது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்…

 

 

 

http://www.addtamil.com/கஜேந்திரகுமார்-மீது-சுமந/

 

பூலோக அரசியல் பற்றி ஏன் சுமந்திரன் கதைப்பதில்லை என கஜேந்திரகுமார் கேள்வி

பூகோள அரசியல் பற்றிக் கதைத்தால், தங்களது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆபத்து வரும். என்பதனால் தான் சுமந்திரன் மேடைகளில் பூலோக அரசியல் பற்றி கதைப்பதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,  கேவலம் அங்கஜன், விஜயகலா மற்றும் டக்ளஸ் பெற்ற வாக்குகள் எனின் ஏன் அதைப்பற்றிக் கதைக்கின்றீர்கள் எம் மீது  இரகசிய காதல் போன்று செல்லும் இடமெல்லாம் எம்மை  பற்றி கதைக்கின்றார்கள். பதட்டப்படுகின்றார்.

தற்போது சுமந்திரனின் நிலமைகள் இறுகிக்கொண்டு வருகின்றது. சொன்ன பொய்கள் எல்லாவற்றினையும் திசை திருப்புவதற்காக இவ்வாறு சுமந்திரன் கூறுகின்றார் போலிருக்கின்றது.

தமிழ் மக்கள் சுமந்திரனின் கருத்துக்களைக் கேட்டு செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. அதனை நினைத்து அவர் பதற்றமடைகின்றார்.

அரசியல் அமைப்புப் பற்றி கதைக்க முற்படும் போதெல்லாம் அரசியல் அமைப்புப் பற்றி தமக்கு மட்டும் தான் தெரியுமென சுமந்திரன் அனைத்து இடங்களிலும் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தனுக்குக் கூட தெரியுமென அவர் சொல்வதில்லை. எல்லாமே தான் என்றவாறு கதைத்துக்கொண்டு திரிகின்றார்.

இனப்பிரச்சினை குறித்து ஒரு திட்டத்தினை வகுக்க முடியாது. தமிழ் மக்களின் முக்கியத்துவம் விளங்காது. தொடர்ந்தும் இவ்வாறான பொய்களைக் கூறிக்கொண்டிருந்தால் தனது அரசியலுக்கு ஆபத்து வந்து விடுமென பயப்படுகின்றார் போலிருக்கின்றது.

ஒற்றையாட்சிக்குள் சதித்திட்டங்களை தீட்டும் அரசு.

ஒற்றையாட்சிக்குள் தீர்வினை ஏற்றுக்கொள்வதற்கான சதித்திட்டங்களை அரசாங்கமும், குறிப்பிட்ட தமிழ் தலைமைகளும் முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன.அவற்றினை தமிழ் மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும்.

போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் ஒரு அரசியல் அமைப்பு ஒற்றையாட்சியின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலும் மாற்றங்களின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் மூலம் தமிழ் தேசம் அங்கிகரிக்கும் சமஷ்டி தீர்வின் அடிப்படையில் தீர்வினை அரசாங்கம் முன்வைக்கப் போவதில்லை.

2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த போது, ஓற்றையாட்சிக்குள் தீர்வு காணுவதற்கும், தமிழ் அரசியலில் இருந்து தேசிய வாதத்தினை நீக்குதவற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினோம்.

கடந்த 2 வருடங்களாக கூறிவந்த விடயங்களை நிரூபிக்கும் வகையில் கடந்த 2 வாரங்களாக ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயம் பற்றிய கருத்துக்கள் நிலவுகின்றன.

கடந்த ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட நல்லிணக்கத்தின் தலைவியாக இருக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தினையே வலியுறுத்தி வருகின்றார்கள்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.

மிக வெளிப்படையாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவ்வாறான நிலமைக்கு இணங்கியிருப்பதாக பௌத்த குருமார்களுக்கு முன்னிலையில் வழங்கியிருக்கின்றார்கள்.

புதிய அரசியல்அமைப்பினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் உத்தியோக பூர்வ அறிவித்தலை விடுத்த நிலையில், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.

ஓற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு சதி நடப்பதாக தமிழ் மக்கள் கூறி, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்துள்ளார்கள்.

விரும்பிய ஆட்சியை கொடுப்பதற்கு சர்வதேசங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற அநியாயங்கள் நடைபெறுகின்றன என தமிழ் மக்கள் கூறுவதனை சர்வதேசமும் செவிமடுக்கத் தயாராக இல்லை.

அந்தவகையில் எழுக தமிழ் ஆரம்பம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது.

ஒற்றையாட்சியை ஏமாற்றி அவற்றினை தமிழ் மக்கள் ஆதரிக்கும் முறைமையினை அரசாங்கமும், தமிழ் தலைமைகளும் ஏற்படுத்தும் நிலமையில் இருக்கின்றார்கள்.

எனவே, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில், சிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/3513

  • கருத்துக்கள உறவுகள்

அரசு கொண்டு வரப்போகும் பொதியினில் என்ன இருக்கிறதென்று அந்த சபையில் இருந்த சுமந்திரனுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும். 

அரசு பொதியை கொண்டு வந்த பின் அமர்க்களம் பண்ணினால் தமிழ் மக்களை ஏமாற்றவே செய்கிறார்கள் என்று சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அரசு கொண்டு வரப்போகும் பொதியினில் என்ன இருக்கிறதென்று அந்த சபையில் இருந்த சுமந்திரனுக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றாகவே தெரியும். 

அரசு பொதியை கொண்டு வந்த பின் அமர்க்களம் பண்ணினால் தமிழ் மக்களை ஏமாற்றவே செய்கிறார்கள் என்று சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

இதுவரை.... ஸ்ரீலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு கொண்டு வந்த பொதிகள் எத்தனை என்று... ஆராவது சொல்லுங்களேன்.
எல்லாப் பொதியையும்... தமிழ் மக்கள் முதுகின்  மேல் இறக்கி வைத்து விட்டு...  ஆட்கள் தங்கள் பாட்டுக்கு போய்விடுவார்கள்.
அதனை சுமந்து, நமது முதுகு தான்... நோகுது.
பொதி வருது என்றால்.... அல்வா கொடுக்கப் போறாங்கள் என்று அர்த்தம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதுவரை.... ஸ்ரீலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு கொண்டு வந்த பொதிகள் எத்தனை என்று... ஆராவது சொல்லுங்களேன்.
எல்லாப் பொதியையும்... தமிழ் மக்கள் முதுகின்  மேல் இறக்கி வைத்து விட்டு...  ஆட்கள் தங்கள் பாட்டுக்கு போய்விடுவார்கள்.
அதனை சுமந்து, நமது முதுகு தான்... நோகுது.
பொதி வருது என்றால்.... அல்வா கொடுக்கப் போறாங்கள் என்று அர்த்தம். :grin:

சும்மா லொக்கல் அல்வா இல்லை திருநெல்வேலி அல்வா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.