Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்ச்சைக்குரிய காணொளி - ஆபத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச

Featured Replies

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் லஞ்சல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்திளர் சந்திப்பின் போது, சோசலிச இளைஞர் சங்கம் இந்த விடயத்தின தெரிவித்துள்ளது.

குழுவொன்றுக்கு தொழில்வழங்குவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய காணொளி குறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சோசலிச இளைஞர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒருவருடைய உயரம், கட்டை என்பவற்றைப் பார்த்து தொழில்வழங்குவதற்கு அமைச்சர் ஒருவருக்குள்ள அதிகாரம்தான் என்ன?

தனக்காக தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு மாத்திரம் தொழில்வழங்கும் முறைமையை முன்வைத்தவர் யார்..? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த அரசாங்கங்களிலும் அமைச்சர்கள் இவ்வாறு தொழில்வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், இதுபோன்று பலமான சாட்சிகளுடன் சிக்கிய சந்தர்ப்பம் இதுவே முதல் தடவையாகும் என அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/121487?ref=home

  • தொடங்கியவர்

ஆதரவாளர்களுக்கு தொழில் வழங்கும் அமைச்சரைப் பற்றி வசைபாடும் மகிந்த

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது ஆதரவாளர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தென் பகுதியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“தற்போது தகுதியானவர்களுக்கு தொழில் வழங்குவதாகவும் தமது ஆட்சிக்காலத்தில் நாங்கள் எமது ஆதரவாளர்களுக்கு மட்டுமே தொழில் வழங்கியதாகவும் கூறினர்.

நான் ஒரு வீடியோவை பார்த்தேன். அதில் தொழில் வாய்ப்பு வழங்கும் விதம் காணப்படுகிறது. வெகுதூரத்தில் இல்லை திஸ்ஸ மஹாராமவில் பிரதேசத்தில் தொழில் வழங்கும் விதம் அதில் காணப்படுகிறது.

விண்ணப்பங்களை எடுத்து கொண்டு 5 பேர் வாருங்கள் என அதில் அந்த அமைச்சர் கூறுகிறார். அதில் கட்டை காற்சட்டை அணிந்து உங்களது பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரே இருக்கின்றார்.

குள்ளமானவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை, தொழிலாளி வேலை. உயரமானவர்களுக்கு காவலளி வேலை என அதில் அமைச்சர் கூறுவதை நான் பார்த்தேன். இதனை நீங்கள் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்” என மகிந்த ராஜபக்ச வசைபாடியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச தனது ஆதரவாளர்களுக்கு தனது அமைச்சு அலுவலகங்களில் தொழில் வாய்ப்புகளை வழங்கும் காணொளி ஒன்றே சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/121365?ref=youmaylike1

  • தொடங்கியவர்

இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்

அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகள் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தை காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியதே அதற்கான காரணமாகும்.

இதேவேளை குறித்த காணொளியை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவிலேயே குறித்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உயரமானவன் பாதுகாவலன் - குட்டையானவன் தொழிலாளி" என கூறி அமைச்சர் சஜித் பிரேமதாச வேலைவாய்ப்பு வழங்கியதாக வெளியான காணொளி பல்வேறு வகையான சர்ச்சையினை எழுப்பியது.

முன்னாள் ஜனாதிபதியும் இது குறித்து கவலை தெரிவித்திருந்ததோடு நல்லாட்சி மீது குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/121655?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்

நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது என்ற பழமொழி தமிழில்தானே உள்ளது. அது எப்படிசி சிங்கள அமைச்சருக்குத் தெரிந்தது......??? tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.