Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்தவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதானி யார்?

Featured Replies

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை சுட்டுக்கொலை செய்வதற்கு இராணுவப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதானி யார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித தெரிவித்துள்ளார்.

புரட்சியாளர் சேகுவராவை நினைவுகூரும் நிகழ்வு, சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நீர்கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விஜித இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"ஊழல், மேசடிகள் குறித்தும், மர்ம கொலைகள் பற்றியுமே இன்று மக்களுக்கு பேசவேண்டியநிலை உருவாகியுள்ளது. அன்று தோழர் சேகுவராவை அமெரிக்க உளவுப் பிரிவின் தலையீட்டுடனேயே ஒலிவியா இராணுவம் கொன்றது.

இவ்வாறுதான் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவொன்று இங்கு சுட்டுக்கொலை செய்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், லசந்தவை நான்தான் கொலைசெய்தேன் என்றும், வேறு எவருக்கும் தண்டனை வழங்க வேண்டாம் என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தநபர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி, இரண்டு பிள்ளைகளின் தந்தை, லசந்தவை சுட்டுக்கொலை செய்வதற்கு இவருக்கு இருந்த தனிப்பட்ட காரணம் என்ன? அவ்வாறு எதுவும் இருந்திருக்க முடியாது. எனினும், நான்தான் லசந்தவைக் கொன்றார் என அவர் கூறியதன் ஊடாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவுதான் லசந்தவைக் கொலைசெய்தது என்பது உறுதியாகியுள்ளது.

எனவே, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இதற்குரிய கட்டளையைப் பிறப்பித்தது யார்? அரசியல் உத்தரவை வழங்கியது யார்? இவை தொடர்பான உண்மைகள் வெளிவரவேண்டும்.

புரட்சி சிந்தனையாளரான சேகுவரா, ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகக் கொல்லப்பட்டார்.

இவ்வாறுதான் அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த ஊடகவியலாளர்களின் வாழ்க்கைக்கு, தமது அரசியல் இருப்பை நிலைநாட்டுவதற்காக இங்குள்ள ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் முடிவு கட்டினார்கள்.

இலங்கையிலுள்ள சகல இராணுவ புலனாய்வு கட்டமைப்பு மீதும் விமர்சனம் முன்வைக்கவில்லை. ஒருகுழு ஒன்றே இதைச் செய்துள்ளது. இதற்கு அரசியல் தலைமையிடமிருந்துதான் உத்தரவு வந்திருக்கும். அந்தக் காலப்பகுதியில் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அமைச்சின் பிரதானி யார்? அவர்தான் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், கட்டளையைப் பிறப்பித்த அரசியல் தலைமைக்கு எதிராக சட்டம் செயற்பட வேண்டும்.

இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு சிறப்பு வழியாகும். இதேவேளை, சுத்தமான தண்ணீர் கோரி வீதியில் இறங்கிப் போராடிய ரதுபஸ்வெல மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இராணுவத்துக்கு எதிராக இன்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இதற்கான உத்தரவைப் பிறப்பித்தவருக்கு எதிராக இன்னும் சட்டம் இயற்றபடவில்லை" எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/121552?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

அவர்தான் அடுத்த ஜனாதிபதியா வரப்போறாராம்..... கோத்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.