Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில்

Featured Replies

பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் கிளிநொச்சி இல்லத்தில்

img_7780
மிக வன்மையாக கண்டிப்பதோடு நீதியான விசாரணை வேண்டும்  – மாவை
 
பொலீஸார் முதலில் தவறான தகவலையே கொடுத்திருந்தனர். ஆனால் நான் மருத்துவர்கள் மற்றும் பலருடன் பேசிய பின்னர் தெளிவாக அறிந்துகொண்டேன் துப்பாக்கிச் சூட்டில்தான் இந்தக் மரணங்கள் சம்பவித்திருக்கிறது என்று. இதன் பின்னர்; இனிமேல் இவ்வாறான் சம்பவங்கள் நடைப்பெறக் கூடாது என்றும் அத்தோடு இச் சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள்  என்னிடம் வற்புறுத்திக் கேட்;டுக்கொண்டனர். இதனை நாம் உடனடியாக திருகோணமலையில் நின்ற ஜனாதிபதியிடம் இதனை தெரிவிக்கும் படி சம்மந்தன் அவர்களிடம் தெரியப்படுத்தினோம் அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.அதன் பின்னர் அந்தக் கொலைகார கும்பலில் ஜந்து பொலீஸார் இருந்துள்ளனர் தற்போது அவர்கள் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள், அவர்களது வேலையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை நேற்று (வெள்ளி) மாலை பொலீஸ் மா அதிபர்  என்னிடம் நேரடியாக கூறியிருந்தார்.
 
இந்தச் சம்பவத்தை நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்கின்றோம் அத்தோடு மிக நீதியான விசாணையும் வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாது இருப்பதுதான் எமது மக்களும், மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். ஜனாதிபதியும் இந்தக் கருத்தை கூறியிருக்கின்றார்.
img_7755
 
எனவே இந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இறந்திருப்பது மிகவும் மனவேதனையளிக்கிறது அந்தக் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் அத்தோடு இந்தக் குடும்பத்திற்கு நாமும் உதவிகளை செய்வோம்.
 
மாவை சேனாதிராஜா
பாராளுமன்ற உறுப்பினா்
 
 
பயங்கரவாத தடைச் சட்டமே பொலீஸாரின் அத்துமீறலுக்கு காரணம் – முருகேசு சந்திரகுமார்
 
இலங்கை பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும். நாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமே  பொலீஸாரின் இந்த அத்துமீறலுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.இந்தச் சட்டம் இலங்கை பொலீஸாருக்கு அதீத அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் விளைவே யாழ் பல்கலைகழகத்தின் இந்த இரண்டு மாணவர்களின் உயிரிழப்பு. இந்தச் சட்டம் நீக்கப்படவேண்டும். அதனால் பல தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பலர் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் உள்ளனர். எந்த ஆட்சி வந்தாலும் இந்தச் சட்டத்தை வைத்து தமிழ் மக்களை ஒடுக்கின்ற நிலைமையே தொடர்கிறது. பொலீஸார் இந்தச் சட்டத்தின் மூலம் பொலீஸார் தாங்கள் நினைத்தப்படி தங்கள் துப்பாக்கியை நீட்ட முடியும் என்ற நிலைமையை மாற்ற வேண்டும்.
img_7757
 
இந்த துயரச் சம்வத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சரியான நீதி விரைவாக கிடைக்கவேண்டும்.இனிமேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறாது இருக்க வேண்டும்.இந்த அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பேசுக்கொள்கின்றது. ஆனால் அதற்கு மாறாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் எக்காலத்திலும் நல்லிணக்கம் மீது நம்பிக்கை ஏற்பாடாது. நல்லாட்சி அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து நியாயம் கிடைக்கும் என்று இருந்த நிலையில் இந்தச் சம்பவம்  அதற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
கிளிநொச்சி மாவட்ட மக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏழ்மையாக குடும்பத்தில் இருந்து பெரும் நம்பிக்கையோடு பல்கலைகழகம் சென்று தனது மூன்றாவது ஆண்டு கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சம்பவம் வேதனைக்குரியது.எனத் தெரிவித்தார்
img_7764
img_7772முருகேசு சந்திரகுமார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
 
 
 
 
 
 
 
 
 
பல்கலைக்கழக மாணவர் மரணம்- இது திட்டமிட்ட கொலை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் :
 14657245_10208953582811456_1213006966754960966_n
யாழ் பல்கலை மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாகிப் பிரயோகம் திட்டமிட்ட கொலையே என்று  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கொடூர சம்பவத்தினை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களை தாம் சுட்டதிற்கான காரணங்களாக பொலிஸார் எதனை குறிப்பிட்டாலும் அக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியாது எனத் தெரிவித்த அவர் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிலில் சென்று குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் பொலிஸார் துப்பாக்கி பியோகம் மேற்கொண்டனர் என்பது இதில் இருந்து உறுதியாக தெரிய வருகிறது என்று 4றிய அவர் இந்த விடையத்தினை மூடி மறைப்பதற்கான பல செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
 
இவ்விடயத்தில் சட்டத்தினையும், நீதியினையும் நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீதவான் இவ்விடயங்கள் தொடர்பாக அவதானிக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதியினைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்டத்தரணிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுக் கொடுக்க கரிசனையுடன் செயற்படும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
கண்துடைப்பு விசாரணையன்றி துரித விசாரணை நடாத்தப்பட வேண்டும் –  வடக்கு மாகாண பதில் முதல்வர்,  எதிர்க்கட்சித்தலைவர் கூட்டு அறிக்கை
 
 
குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா கூட்டாக வலியுறுத்து.
 
அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த வெள்ளிக் கிழமை (20.10.2016) நள்ளிரவு கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து எமது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதே வேளை குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதே வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் வன்முறை, செயற்பாடுகளில் ஈடுபடாது துரித நீதி பெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட தரப்பினரை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ளவோ, எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் தடுக்கவோ முடியாது. இவ்வாறான பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பாக கடந்த காலங்களில் வெறும் கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்ற வரலாற்றையும் எம்மால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ஆதலினால், இவ் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று கோருகின்றோம்.
 
அம் மாணவர்களின் இழப்பினால் தாங்கொணாத் துயருற்றிருக்கும் அவர்களது பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பல்கலைக்கழக சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரிற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடக்குமாகாணசபை, அரசியற் பேதமில்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதனை எடுத்துக் காட்டவே.
 
ஒப்பம்
த. குருகுலராசா சி.தவராசா
பதில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்,
வடக்கு மாகாணசபை வடக்கு மாகாண சபை.

http://globaltamilnews.net/archives/4054

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் கொலை : மகன் தொடர்பில் தாய் கூறும் பரிதாப உண்மைகள் : கண்கலங்க வைக்கும் காணொளி

 

 

132.jpg

யாழ்ப்பாணம் கொக்குவில் குளிப்பிடி சந்தியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த மாணவனின் தாய் குறித்த மாணவனை பற்றி கூறி கதறி அழுகின்ற காட்சி எங்கள் கமெராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

'மேசன் தொழில் செய்து படித்து பல்கலைகழகம் சென்றான் என் மகன். எங்கள் குடும்பத்தின் தந்தையாய் இருந்தவரை சிதைத்து கொன்று விட்டார்களே. 

கால் இயலாத என் மகனை இவ்வாறு கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லையே.

இவன் தானாய் மோதி சாகவில்லையே. இனி இவ்வாறு எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது  என்று கதறி அழும் தாயின் ஓலம் பார்ப்பவரின் கண்களில் தானாய் கண்ணீர் வர வைக்கின்றது.

 

http://www.virakesari.lk/article/12643

  • தொடங்கியவர்

போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தயாரிடம் தெரிவிப்பு

img_7757
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ்ப்பாணம்  வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு  காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ்  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.  அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

அங்கு வைத்து காவல்துறையினர்  எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது.  காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.

சம்மந்தப்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள்,  அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும்  தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள்

நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ;  அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள்  செய்யிறம் என்றும் சொன்னாா்கள்.  ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை  காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்

பிறகு  கொழும்பிலிருந்து  காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம்.  உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட  யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளாா்

http://globaltamilnews.net/archives/4079

 

  • தொடங்கியவர்

'பேக்காட்டுற  எண்டு  நீங்கள் நினைச்சால்  பேக்காட்டுவம்" : உயிரிழந்த மாணவரின் தாயாரை அச்சுறுத்திய பொலிஸார் (முழுமையான அதிச்சி தகவல் வெளியானது)

 

 'பேக்காட்டுற  எண்டு  நீங்கள் நினைச்சால்  பேக்காட்டுவோம்' என யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கஜனின் தாயாரை யாழ். பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.police-threaten.jpg

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான 23 வயதுடைய நடராசா கஜனின் தாயார், நடராசா சறோஜினி(வயது 61) அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.

''யாழ்ப்பாணம்  வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் மற்றும் சுயலக்சனின் தந்தையையும்   ஒவ்வாரு  காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ்.  காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.  அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா். ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது என அங்கு வைத்து காவல்துறையினர்  எங்களிடம் தெரிவித்தனா்.  காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.

சம்மந்தப்பட்ட  காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள்,  அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம். கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம். தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும்  தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டி.ஐ.ஜி. ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியையும் சொல்லி, அங்குள்ள காவல் துறையினரை போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள்.

நாங்கள் செய்த குற்றத்திற்காக போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும்   அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள்  செய்யிறம் என்றும் சொன்னாா்கள்.  ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை.  காவல்துறையினர் இங்க வரக் கூடாது. உங்கட உதவியும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம்.

பின்னர்  அங்கு  வந்த  எனது மகன் ஏன்  இங்கு வந்தீர்கள்.  இவங்கட  கதைய கேக்காதேங்கோ  எண்டு  திட்டினான்.  பிறகு  எங்களை  வைத்திய சாலையில்  இறக்குறதுக்கு ஒரு தமிழ் பொலிஸ் வாகனத்துல ஏத்திக்கொண்டு  வந்தவர்.

வரேக்க  மகன்,  இவங்கள நம்பாதேங்கோ பேக்காட்டுறாங்க   எண்டு கத்திக் குளறிட்டான்.  அந்த  தமிழ் பொலிஸ்   சொன்னார் நீங்கள்  பேக்காட்டுற  எண்டு  நினைச்சால்  பேக்காட்டுவம் இல்லன்டா  உதவி செய்வம்  எண்டவர். 

பிறகு நாங்கள்  அங்க இறங்கி கிளிநொச்சிக்கு வந்துட்டம்.  

பிறகு போன்ல கதைச்ச ஒராள்,   கொழும்பிலிருந்து  காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏ.எல், ஓ.எல் படிச்சிருக்கினமா? நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம்.  

உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம். மன்னிச்சிக்கொள்ளுங்கள். தவறுதலாக நடந்துவிட்டது.'' என தெரிவித்ததாக தாயார் தெரிவிதார்.

http://www.virakesari.lk/article/12648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.