Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாணவர்களின் இறப்பிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வரை ஓயப்போவதில்லை - அங்கஜன் சீற்றம்

Featured Replies

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரை எந்த ஒரு சலனமும் இன்றி பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸில் இருக்க எந்த ஒரு தகுதியும் அற்றவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தையே ஸ்தம்பிக்க வைத்த சம்பவமாக மாணவர்கள் இருவரின் கொலை சம்பவம் காணப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

“பொலிஸாரின் இந்த கொடூரச் செயலுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். நான் இதில் அரசியல்வாதியாக அல்ல யாழ்.பிரஜை என்ற ரீதியில் அதிக கவனத்துடன் ஈடுபடுவேன்.

ஒரு இளைஞனின் பெறுமதியை நான் நன்கு அறிவேன். இன்று பொலிஸாரின் அசமந்த போக்கினால் இரு தம்பிமாரை இழந்து தவிக்கின்றோம். வாள்வெட்டு வன்முறையுடன் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு இன்னொரு வன்முறையை அப்பாவி இளைஞர்கள் மீது பொலிஸார் பிரயோகித்தது மன்னிக்க முடியாத குற்றமே.

அவசரகால சட்டம் அமுலில் இருந்தபோது கூட இவ்வளவுக்கு கொடுமைகள் யாழில் நடைபெற்றதில்லை.

இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ போட்டிகளுக்கு மத்தியில் எவ்வளவோ ஆசைகளை தியாகம் செய்து “யாழ்.பல்கலைக்கழக மாணவன்” எனும் இடத்தில் நிற்க இந்த தம்பிமார் எத்தனையோ பாடுபட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிகின்றது.

யாழ்.கல்வி சமூகத்தின் மீது எந்த ஒரு அதிகாரங்களும் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட 5 பொலிஸாருக்கும் இனி வரும் காலத்தில் இளைஞர்கள் மீது அதிகாரத்தை திணிக்க முற்படும் எவராயினும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிக பட்ஷ தண்டனைகள் வழங்கப்படும்.

நான் இந்த சம்பவத்தை விடுவதாயில்லை, யாழ்ப்பாண இளைஞர்களின் இருப்புக்களோடு யாரும் விளையாடுவதற்கு இங்கு அனுமதியில்லை. இது தொடர்பில் நான் கடும் அழுத்தம் ஒன்றினை ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளேன்.

சரியான நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வினை இந்த பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பிற்கு கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை. தம்பிமாரின் ஆன்மா சாந்தியடைய நான் என்னாலான செயற்பாடுகளை செய்வேன்.” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/121904?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.