Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையாளிகளுக்கு சட்ட உதவி வழங்கும் நீதியமைச்சர்!

Featured Replies

இலங்கை கடற்படையின் கொலை குழு ஒன்றினால் 10 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 10 மாணவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடானது, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை அழிக்கும் பயங்கரமான சதித்திட்டம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

2008-2009ம் ஆண்டுகளில் நடந்த இந்த மாணவர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த 5ம் திகதி 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தியுள்ளது.

திணைக்களத்தினர் விசாரணை நடத்துவதற்கு முன்னர், கரன்னாகொட விஜயதாச ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோரிடம் சட்ட உதவிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் கரன்னாகொட குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கியுள்ள எழுத்து மூலமான வாக்குமூலத்தை தவிர எந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என விஜயதாச ராஜபக்சவும் சரத் என் சில்வாவும் கரன்னாகொடவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தன்னிடம் விசாரணை நடத்தும் முன்னர், விஜயதாச ராஜபக்ச மற்றும் சரத் என் சில்வா ஆகியோர் தனது நண்பர்கள் என கூறியுள்ளார்.

தான் நீதியமைச்சராக இருக்கும் வரையில் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய இடமளிக்கப் போவதில்லை விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூறியிருந்தார்.

எனினும் இதனை விட அவர் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை மிகவும் பாரதூரமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்படையினர் கடத்திச் சென்று கப்பம் கோரி 10 தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருவதாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் நீதியமைச்சர் என்ற வகையில் விஜயதாச ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

இவ்வாறு உறுதியளித்தவர், அந்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுக்கு இரகசியமான முறையில் சட்ட உதவியளிப்பது நல்லாட்சி அரசாங்கத்தை ஆபத்தில் தள்ளுவதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/120420?ref=youmaylike1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.