Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம்

Featured Replies

ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம்
ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம்

 

(2ஆம் இணைப்பு)

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி   யாழ் செயலகம்  மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை. 

 

14798885_785318408273910_2118810968_n.jpg

14826278_785318428273908_1572617330_n.jpg14800662_785318388273912_1004776588_n.jpg

 

14813733_1231712630208796_217840928_n.jpg

http://onlineuthayan.com/news/19324

  • தொடங்கியவர்



ஏ-9 வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்; பொலிஸார் கடமையில் இல்லை
 
 

article_1477285065-IMG_5878.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று திங்கட்கிழமை (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் ஏ-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதேவேளை, பொலிஸார் அப்பகுதியில் கடமையில் ஈடுபடவில்லை.

இச்சம்பவத்தில் பொலிஸார் தொடர்புபட்டுள்ளதனால் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/184586/ஏ-வ-த-ப-க-க-வரத-த-ஸ-தம-ப-தம-ப-ல-ஸ-ர-கடம-ய-ல-இல-ல-

 

யாழ் செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

CvgUfQjWYAQa_Pk.jpg

கடந்த வாரம் இரு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CvgUfQyXEAAx3oe.jpg

CvgUfQ-XgAEGeFl.jpg

CvgUfQnW8AE9Jdm.jpg

CvgWGU-UAAE9KHv.jpg

CvgWGVBUEAAo2jU.jpg

CvgWGVCUIAEV9Cw.jpg

14729308_1142277159193986_84519548340320

14705730_1142277232527312_19697914574766

 
 

http://www.virakesari.lk/article/12674

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மட்டு. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

 

 

1.jpg

மட்டு. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

2.jpg

யாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3.jpg

4.jpg

5.jpg

http://www.virakesari.lk/article/12680

யாழ் மாவட்ட செயலகம் முற்றுகை

 

 

யாழ் மாவட்ட செயலகம் முற்றுகை

http://tamil.adaderana.lk/news.php?nid=2279&mode=head

 

 

 

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் நிறைவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

vetha

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள்  மேற் கொண்ட போராட்டம்  நிறைவுக்கு வந்துள்ளது.
நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாணவர்கள் தம்து கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/4283

 

 

மகஜர் கையளிப்புடன் போராட்டம் நிறைவு
மகஜர் கையளிப்புடன் போராட்டம் நிறைவு

 

(3ஆம் இணைப்பு)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய  கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்தது. 
 
இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன். மாணவர்களின் இன்றைய போராட்டம் மிகவும் அமைதியான முறையில் முடிவுற்றது.
 
இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும்  இயல்பு நிலைக்கு திரும்பின.

1477290305_download%20%281%29.jpg

 

1477290322_download.jpg

14793785_1231779310202128_1824972282_n.jpg

 

14813494_1231779240202135_1998249117_n.jpg

http://onlineuthayan.com/news/19324

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கல்விச் செயற்பாடுகள் நடைபெறாது. யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு
 
 
மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கல்விச் செயற்பாடுகள் நடைபெறாது. யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு
பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களுமோ கல்விச் செயற்பாடுகளோ நடைபெறமாட்டாது என  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது.
 
இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாண வர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜிவன் இவ்வாறு   தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
14793997_1231779270202132_271003174_n.jpg
 
இறந்த இரு மாணவர்களுக்கும்   நட்டஈடு வழங்கப்பட வேண்டும், சிறுவயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்ப ட்ட செலவையும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவ்விரு பெற்றோர்களு க்கும் இழப்பீட்டுத் தொகையை மாதாந்தம் வழங்க வேண்டும். 
 
மாணவி வித்தியா கொலை வழக்கிற்கு நீதி கிடைக்காதது போல் எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் போவதை தவிர்க்க வேண்டும். 
 
அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்காதுவிடின் வேறு வடிவங்களில் போராட்டம் திசை திருப்ப ப்படும். எமது மாணவர்கள் இப்போதும் கொந்தளிப்புடனேயே உள்ளனர் எனவும் தெரிவித்தார். 
 
கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவருடைய உரையை சிங்கள மொழியில் சட்ட பீட மாணவன் சாமர, ஆங்கிலத்தில் மருத்துவ பீட மாணவ ஓன்றியத் தலைவர் ஏ.அலெக்ஸ் ஆகியோர் வாசித்தனர்.

http://onlineuthayan.com/news/19330

  • தொடங்கியவர்
கிளிநொச்சியிலும் பேரணி
கிளிநொச்சியிலும் பேரணி
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை  செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24 ) காலை   கிளிநொச்சியில் கண்டனப்  பேரணி இடம்பெற்றது .
 
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.
24-10-2016%2012.10.21%202.jpg
அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர்.
 
1477292861_24-10-2016%2012.10.21%202.jpg
இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-10-2016%2012.10.47%203.jpg

http://onlineuthayan.com/news/19331

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

 

kandy.jpg

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

kandy1.jpg

கண்டி - கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சி என அவர்கள் தமது கண்டனத்தின் போது தெரிவித்தனர்.

kandy2.jpg

பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் 1000 மாணவர்கள் இதில் பங்கு கொண்டனர்.

kandy3.jpg

http://www.virakesari.lk/article/12691

  • தொடங்கியவர்
வவுனியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம்
வவுனியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம்
யயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று (24) காலை 10.00மணி முதல் 12.00மணிவரை வளாகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24-10-2016%2014.10.14%203.jpg
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும் , கொலையை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும் , மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
24-10-2016%2014.10.35%202.jpg

 
  • தொடங்கியவர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 

thumb_CviBpsiVUAAk3-w.jpg

http://www.virakesari.lk/

 

  • தொடங்கியவர்
கோட்டையிலும் ஆர்பாட்டம்...
 
 

article_1477315187-PKP_0109.JPG

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை(24) நடைபெற்றது.

article_1477315200-PKP_0077.JPG

article_1477315213-PKP_0081.JPG

article_1477315224-PKP_0083.JPG

article_1477315243-PKP_0085.JPG

article_1477315253-PKP_0088.JPG

article_1477315261-PKP_0105.JPG

article_1477315270-PKP_0119.JPG

(படங்கள்: பிரதீப் பத்திரண)

http://www.tamilmirror.lk/184651/க-ட-ட-ய-ல-ம-ஆர-ப-ட-டம-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.