Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித்துப் பேசிவிட்டுத் தான்தோன்றித்தனமான அரசியல் யாப்பொன்றை திணிக்கக்கூடாது

Featured Replies

தனித்துப் பேசி­விட்டுத் தான்­தோன்­றித்­த­ன­மான அர­சியல் யாப்­பொன்றை திணிக்­கக்­கூ­டாது

Sp10-98b5aec5d2cf3ad497e449daeee27b21f9f21af1.jpg

 

நெருக்குதல் இருந்தால்தான் அரசு தரும் என்கிறார் முதல்வர் விக்கி

(நமது நிருபர்)

 நெருக்­குதல் இருந்­தால்தான் மத்­திய அர­சாங்கம் எத­னையும் கொடுக்க முன்­வரும். தலை­வர்கள் தரு­வ­தாகக் கூறி­னாலும் சிலர் எத­னையும் தர விட­மாட்­டார்கள். ஆகவே, ஜன­நா­யக முறைப்­படி எமது உரி­மைகளை வென்­றெ­டுப்­ப­தாகில் நாங்கள் எங்­கள் குறை­களை ஊர­றிய, உல­க­றியச் செய்ய வேண்டும்  என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் லண்­டனில் தெரி­வித்தார்.  

தனித்துப் பேசி­விட்டுத் தான்­தோன்­றித்­த­ன­மாக அர­சியல் யாப்­பொன்றை எம்­மீது திணிப்­பதால் எந்த நன்­மையும் கிடைத்­து­வி­டாது. இவற்றை உத்­தே­சித்தே நாங்கள் மக்கள் பேரணி நடத்­தினோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எமது வட­மா­காணம் 13ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் உரு­வா­கி­யது. வட­மா­கா­ண­சபை என்று பெரு­மை­யாகக் கூறி­னாலும் எமது அதி­கா­ரங்கள் முடக்­கப்­பட்ட நிலை­யி­லேயே நாம் எமது காரி­யங்­களைக் கொண்டு நடத்தி வரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

லண்டன் சொறஸ்­ரி­றியன் மையத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில் அர­சர்கள் போனபின் முதன்­மு­த­லாக எம்மை சட்­டப்­படி நாம் ஆள முன்­வந்­தி­ருப்­பது இக்­கா­ல­கட்­டத்­தி­லே­யே­யாகும். எனினும் எமக்குக் கிடைத்­தி­ருக்கும் அதி­கா­ரங்கள் பல­வீ­ன­மா­ன­வை­யா­கவே உள்­ளன.   

உதா­ர­ணத்­திற்கு 13ஆவது திருத்தச் சட்­டத்தில் ஒரு கையால் தந்­ததை 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க மாகா­ண­ச­பைகள் சட்டம் மறு­கையால் திருப்பிப் பெற்­ற­தாகக் கூறப்­பட்­டுள்­ளது. அதற்கு ஒரு உதா­ரணம் தரு­கின்றேன். இந்­திய சட்­டத்தின் கீழ் ஆளு­ந­ருக்குக் கொடுத்­தி­ருக்கும் அதே அதி­கா­ரங்கள் 13 ஆம் திருத்­தச்­சட்­டத்தின் கீழ் கொடுக்­கப்­பட வேண்டும் என்று 1987ஆம் ஆண்டு இந்­திய இலங்கை உடன்­பாட்­டின்­போது பேசப்­பட்­டாலும், ஆளு­னரின் அதி­கா­ரங்கள் இலங்கை அர­சாங்­கத்தால் வெகு­வாகக் கூட்­டப்­பட்­டன. 

எனவே ஆளு­னரின் உள்­ளீ­டல்­க­ளுக்கு இது­வரை சட்டம் இட­ம­ளித்து வந்­துள்­ளது. இது மாகாண விட­யங்­களில் மத்­தி­யா­னது மூக்கை நுழைக்க வழி செய்­துள்­ளது. இவற்றை மாற்றும் விதத்­தி­லேயே அர­சியல் யாப்பு பற்­றிய எமது கருத்­து­களும் முன்­மொ­ழி­வு­களும் அமைந்­துள்­ளன.

எமது மக்­களின் தற்­போ­தைய நிலை­பற்றி நான் உங்­க­ளுக்கு கூற­வேண்­டிய அவ­சியம் இல்லை என்று எண்­ணு­கின்றேன். அண்­மையில் நடந்த ‘எழுக தமிழ்’ பேர­ணி­யின்­போது மக்­களின் தாபங்கள், கோபங்கள், ஆசைகள், அபி­லா­சைகள், குறைகள் நிறைகள் பற்­றி­யெல்லாம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. எம்மைச் சூழ­வுள்ள பிரச்­ச­னைகள் பற்றிப் பேசக்­கூ­டி­ய­தாக இருந்­தது. பௌத்­தர்கள் வாழாத இடத்தில் புத்த விகா­ரை­களும் புத்த சிலை­களும் ஏன் என்று கேட்டோம். 

இரா­ணு­வத்­திற்கு வேண்­டு­மானால் அவர்­களின் முகாங்­க­ளுக்குள் கட்­டி­யி­ருக்க வேண்டும். ஆனால் மாறாக புத்த பிக்­குமார் தமிழ் மக்­களின் தனிப்­பட்ட காணி­களில் அத்­து­மீறிக் கட்ட இரா­ணுவம் அனு­ச­ரணை வழங்கி வரு­வதன் மர்மம் என்ன என்று கேட்டோம். தொடர்ந்து எமது வளங்­களைச் சூறை­யாடிக் கொண்டு இரா­ணு­வத்­தினர் போர் முடிந்து ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்­னரும் எம்­மத்­தியில் என்ன செய்­கின்­றார்கள் என்று கேட்டோம்.

 யுத்த கால குற்­றங்கள் சம்­பந்­த­மாக விசா­ரணை செய்ய உரி­ய­வாறு சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்­டு­வ­ரா­தது பற்­றியும், சர்­வ­தேச வழக்கு நடத்­துனர் ஒரு­வரை நிய­மிக்­கா­தது பற்­றியும் சர்­வ­தேச போர்க்­குற்­றங்கள் எமது சட்­டத்­தினுள் உள் நுழைக்­கா­தது பற்­றியும் கேள்வி எழுப்­பினோம். அர­சியற் கைதி­களை விடு­வி­யுங்கள் என்றும் காணா­மற்­போனோர் பற்றி அறிய உருப்­ப­டி­யான வழி­மு­றை­களை வகுக்­கா­ததன் மர்மம் பற்றிக் கேள்வி எழுப்­பினோம். காணி­களை, எமது தோட்­டங்­களை, அர­சாங்கக் கட்­ட­டங்­களை, தனியார் வீடு­களை எல்லாம் எப்­பொ­ழுது இரா­ணுவம் விட்டுச் செல்லும் என்று வின­வினோம்.

எமது வட­மா­காண மீன­வ­ருக்கு தடை விதித்து தெற்கில் இருந்து வரும் தெற்­கத்­தைய மீன­வர்­க­ளுக்கு எமது கடல்­க­ளிலும், உள்ளுர் நீர்­நி­லை­க­ளிலும் சட்­டத்­திற்கு புறம்­பான மீன்­பிடி வழி­மு­றை­களைப் பின்­பற்ற இரா­ணு­வமும் கடற்­ப­டையும் அனு­ம­தித்து வரு­வது எந்த விதத்தில் நியா­ய­மாகும் என்று கேள்வி எழுப்­பினோம்.

இவ்­வா­றான பல விட­யங்­களை நாங்கள் மக்கள் சார்பில் எடுத்­தி­யம்­பினோம். பெரு­வா­ரி­யாக மக்கள் சேர்ந்­து­கொண்­டது அர­சாங்­கத்­திற்கும் எம்­ம­வருள் சில­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது. சிங்­களச் சகோ­த­ரர்கள் பழை­ய­படி இனப்­பி­ரச்­ச­னையைக் கிள­றப்­பார்க்­கி­றார்கள் தமி­ழர்கள் என்று கூறி­னார்கள். தமி­ழர்­களிற் சிலரோ சிங்­க­ளத்­த­லை­வர்கள் சுமூ­க­மான தீர்வைத் தர இருக்கும் நிலையில் ஏன் இந்த அவ­சரம் என்­றார்கள். இரண்டு கூற்­றுக்­க­ளுக்கும் பதில் சொல்ல வேண்­டி­யுள்­ளது. 

இனப்­பி­ரச்­சனை இது­வ­ரையில் தீர்க்­கப்­ப­ட­வில்லை. துப்­பாக்கி முனையில் இனப்­பி­ரச்­ச­னையை இது­காறும் மறைத்து வந்­துள்ளோம். ஒரு இலட்­சத்­திற்கும் மேலான இரா­ணு­வத்­தி­னரை எம்­மி­டையே இருக்­க­வைத்து வாய்­தி­றக்க முடி­யாது அமுக்கி வைத்­தி­ருந்­தனர். இது­காறும் இனப்­பி­ரச்­சனை தீராமல் இருக்­கும்­போது எவ்­வாறு இனப்­பி­ரச்­ச­னையை நாம் கிள­றி­வி­டு­வது.

 மறைத்து வைத்­ததை வெளியில் கொண்டு வரு­வது பிழை­யென்றால் தமி­ழர்கள் தங்கள் குறை­களை, குறை­பா­டு­களை வெளிக்­கொண்டு வரக் கூடாது, நாங்கள் எதைத் தந்­தாலும் நீங்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று அர்த்­த­மாகும். சிங்­களச் சகோ­த­ரர்கள் தமிழ்­மக்­களின் பிரச்­ச­னை­களை அவ்­வா­றுதான் தீர்க்க இருக்­கின்­றார்­க­ளானால் அது தீர்ப்­பது அல்ல தீர்த்­துக்­கட்­டு­வது ஆகும். ஆக­வேதான் இன்­றி­ருக்கும் ஜன­நா­யகச் சூழலை நாங்கள் பாவித்து எமது குறை­களை எடுத்­தி­யம்­பினோம். இதற்கு சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் எமக்கு நன்றி கூற­வேண்டும்.

எமது தமிழ்ச் சகோ­த­ரர்கள் ஏன் இப்­போது என்று கேட்­கி­றார்கள். இப்­பொ­ழுது இல்லை என்றால் எப்­போது என்று கேட்­கிறோம் நாம். சுமூ­க­மான தீர்­வொன்றை அர­சாங்கம் முன்­வைத்தால் நாம் யாவரும் மன­ம­கிழ்ச்சி அடைவோம். வர­வேற்போம். அவ்­வாறு ஒரு தீர்வை முன்­வைக்­கா­விடின் எமது கதி­யென்ன? நாங்கள் முடிவு எடுத்­து­விட்டோம், இவ்­வ­ள­வுதான் தரலாம் என்­பார்கள். 

அதன்பின் நாங்கள் பேரணி நடத்­தினால் சட்­ட­வி­ரோதம் என்­பார்கள். நாட்டின் ஒற்­று­மையை உருக்­கு­லைக்கும் சதி என்­பார்கள். ஆகவே எமது குறை­களை உலகம் கேட்­க­வைக்க நாம் அர­சாங்கம் புதிய அர­சியல் யாப்பு தயா­ரிக்க முன்­ன­ரேயே எமது கருத்­து­களைத் தெரி­விக்க வேண்­டி­யி­ருந்­தது. அதையே நாம் செய்தோம்.

அர­சாங்கம் நெருக்­கு­தல்­க­ளுக்கு மத்­தி­யில்தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நன்­மை­களைப் பெற்றுக் கொடுக்கும். சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மா­னிடம் இருந்து நாங்கள் சில பாடங்­களைக் கற்­றுக்­கொள்ள வேண்டும். அவர் மலை­யக மக்­களை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் என்ற குடையின் கீழ் ஒன்று சேர வைத்தார். பின்னர் வேலை நிறுத்தம் என்ற நெருக்­குதல் மூலம் சிங்­கள அர­சாங்­கங்­களைத் தமது மக்­க­ளுக்கு சட்­டப்­படி கொடுக்க வேண்­டிய உரி­மை­க­ளையும், சலு­கை­க­ளையும் கொடுக்க வைத்தார். 

எமது இளை­ஞர்கள் ஆயுதம் பிடித்­த­போது எல்லாம் தருவோம் ஆனால் ஈழாம் இல்லை என்ற காலஞ்­சென்ற ஜனா­தி­பதி பிரே­ம­தாச . ஆயு­த­காலம் முடி­வ­டைந்­ததும், இப்­பொ­ழுது தருவோம், தருவோம் என்று காலம் கடத்­து­கின்­றார்கள். எது­வுமே தந்­த­பா­டில்லை. 

நெருக்­குதல் இருந்­தால்த்தான் மத்­திய அர­சாங்கம் எத­னையும் கொடுக்க முன்­வரும். தலை­வர்கள் தரு­வ­தாகக் கூறி­னாலும் மக்கள் எத­னையும் தர விட­மாட்­டார்கள். ஆகவே ஜன­நா­யக முறைப்­படி எமது உரி­மைகள் வென்­றெ­டுப்­ப­தாகில் நாங்கள் எங்­களை குறை­களை ஊர­றிய, உல­க­றியச் செய்ய வேண்டும்.

2013 ஆம் ஆண்டு தேர்­த­லின்­போது இதை நான் கூறி­யி­ருந்தேன். முதலில் எமது உரி­மை­களைப் பேச்­சு­வா­ரத்­தை­யூ­டாகப் பெற்­றுக்­கொள்ளப் பார்ப்போம். மறுத்தால் உலக அரங்­கிற்குச் செல்­ல­வேண்டி வரும் என்றேன். இது­வரை பேச்­சு­வார்த்­தை­களின் பெறு­பே­று­களை அந்­த­ரங்­க­மா­கவே வைத்­துள்­ளனர். அந்­த­ரங்கம் வெளி­வந்தால் ஒருவர் கூடி­விட்­டது என்பார் மற்­றவர் குறைந்­து­விட்­டது என்பார்.

 கூடி­விட்­டது என்று கூறி­ய­வர்­க­ளுக்குப் பயந்து இவ்­வ­ள­வுதான் தர­மு­டியும் என்­பார்கள் அர­சாங்­கத்­தினர். இது­வரை அதுதான் நடந்­துள்­ளது. உரி­மை­களைப் பற்­றிய விட­யங்­களை வெளிப்­ப­டை­யாகப் பேச­வேண்டும். பலரின் அறி­வு­ரை­களைப் பெற­வேண்டும். தனித்துப் பேசி­விட்டுத் தான்­தோன்­றித்­த­ன­மாக அர­சியல் யாப்­பொன்றை எம்­மீது திணிப்­பதால் எந்த நன்­மையும் கிடைத்­து­வி­டாது. 

இவற்றை உத்­தே­சித்தே நாங்கள் மக்கள் பேரணி நடத்­தினோம். ஆனால் பொரு­ளா­தார ரீதி­யாக நாங்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்தே செய­லாற்றி வரு­கின்றோம். நாம் விதண்­டா­வாதம் பேச முனை­ய­வில்லை. அர­சாங்­கத்­தோடு பன்­னாட்டு உத­வி­யுடன் வட­மா­காண தேவைகள் பற்­றிய கணிப்­பீ­டொன்றைத் தயா­ரிக்க நட­வ­டிக்­கைகள் எடுத்து வரு­கின்றோம். பிர­தமர் சார்பில் பாஸ்­க­ர­லிங்கம் இதற்குப் பொறுப்­பாக உள்ளார்.

போரின் பின்­ன­ரான எமது தேவைகள் என்ன என்று அறி­யாமல், எமது அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­தாமல் நாம் பாரிய முத­லீ­டு­களைக் கோரு­வதில் அர்த்­த­மில்லை. அத­னால்த்தான் நாங்கள் தனி­நபர் மேம்­பாட்­டுக்­காக ‘உத­விப்­பாலம்’ என்ற ஒரு அலகை அமைத்து எமக்கு அனுப்­பப்­படும் சிறிய தொகை­க­ளைக்­கூட நாங்கள் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்வில் வெளிச்­சத்தைக் கொண்­டு­வரப் பயன்­ப­டுத்­து­கின்றோம்.

 வட­மா­காண முத­ல­மைச்சர் நிதியம் அர­சாங்­கத்­தினால் அனு­மதி தர தாமதம் அடை­வதால் நாம் எமது உத­விப்­பாலம் அலகை வைத்து எமது மக்­களின் குறை தீர்ப்­பதில் முனைந்­துள்ளோம். நீங்கள் ஒவ்­வொ­ரு­வரும் அதில் கலந்­து­கொள்­ளலாம். எமது இணைய தளத்தில் உரிய விப­ரங்கள் தரப்­பட்­டுள்­ளன. 

விண்­ணப்பப் படிவம் ஒன்றை தர­வி­றக்கம் செய்து அதில் உங்கள் விப­ரங்­க­ளையும் எவ்­வா­றான உத­வி­களை மக்­க­ளுக்குக் கொடுக்க முடியும் என்­பது பற்றி நீங்கள் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தினால் உதவி பெறு­ப­வர்கள் பற்­றிய விப­ரங்­களை உங்­க­ளுக்குத் தந்து உரிய உத­வி­களை, செயற்­திட்­டங்­களை எமது அலு­வ­லர்கள் செய்து முடித்து உங்­க­ளுக்கு விப­ரங்கள், படங்கள் போன்­ற­வற்றை அனுப்­பு­வார்கள். தற்­போது அது சூமு­க­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. நாங்கள் இன்­னமும் விப­ரங்­களை வெளிப்­ப­டை­யாக வெளி­யி­ட­வில்லை. தனிப்­பட்ட முறை­யில்தான் கொடுத்து எடுத்து உத­விகள் செய்து வரு­கின்றோம்.

முத­ல­மைச்சர் நிதியம் விரைவில் அனு­ம­திக்­கப்­படும் என எதிர்­பார்­கின்றோம். அத­னுடன் சேர்த்து இது­வரை நடை­பெற்று வந்த உத­விப்­பாலம் பற்­றிய விப­ரங்­க­ளையும் வெளிப்­ப­டை­யாகத் தர­வி­ருக்­கின்றோம். அர­சாங்கம் அந்த நிதியம் சம்­பந்­த­மாக முட்­டுக்­கட்­டைகள் வைத்தால் நாம் மீள் பரி­சீ­லனை செய்வோம்.

 உங்­களில் ஒவ்­வொ­ரு­வரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்­ணத்தில் இருக்­கின்­றீர்கள் என்­பது எமக்குத் தெரியும். எனினும் கள­ம­றிந்து அர­சாங்­கத்தின் கருத்­த­றிந்து முன்­னே­றவே நாங்கள் விரும்­பு­கின்றோம். எந்த விதத்­திலும் மக்­க­ளுக்கு வரும் உத­வி­களைப் பாதிப்­ப­டையச் செய்ய நாங்கள் விரும்­ப­வில்லை.

எமது வலைத்­தள விப­ரங்கள் வெளி­வந்­ததும் எம்­முடன் இணைந்து மக்கள் நல செயற்­திட்­டங்­களில் நீங்கள் பங்­கு­பற்­று­வீர்கள் என்று எதிர்­பார்க்­கின்றேன். இதே எதிர்­பார்ப்­பில்த்தான் நாங்கள் சில நாட்­க­ளுக்கு முன் கிங்ஸ்ரன் உள்­ளு­ராட்சி மன்­றத்­துடன் ஒரு உடன்­பாட்டை உரு­வாக்கிக் கைச்­சாத்­திட்டோம். பல­வி­தங்­களில் நாங்கள் யாழ் மாவட்­டத்­திற்கு கிங்ஸ்ரன் உள்­ளு­ராட்சி மன்­றத்தின் உத­வி­களைப் பெறவும் எமது கலை, கலாச்­சாரம் சம்­பந்­த­மான நிகழ்­வு­களை இங்கு கொண்­டு­வந்து அறி­முகம் செய்­யவும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்றோம்.

 அர­சி­ய­லுக்கு அப்பால் எமது மக்­க­ளுடன் நீங்கள் யாவரும் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருக்க வேண்டும் என்­பதே எமது அவா. புலம்­பெயர் தமி­ழர்கள் இலங்கை நாட்டின் பிரிவினையை வேண்டி நிற்கிறார்கள் என்ற கதையைக் கட்டிவிட்டு அவர்களுடன் நாம் உறவாடினால் எம்மைத் தீவிரவாதிகள் என்று அரசாங்கம் கருதும் என்ற பயத்தில் இதுவரை வெளிப்படையாக புலம்பெயர் மக்களை எமது உறவினர் தொப்புட் கொடி உறவு என்று கூற எமது மக்கள் பலர் பின்நின்றார்கள். 

நாம் வெளிப்படையாவே உலகத் தமிழ் மக்களே ஒன்று சேருங்கள் எமது உரிமைகளைப் பெற உங்களால் முடியுமான உதவிகளை நல்குங்கள் எனறு கேட்டு வைக்கின்றோம். உலக நாடுகளுக்கு, உலகத் தலைவர்களுக்கு நாம் எமது நிலையை விபரமாக எடுத்தியம்பியதன் பின்னரே இவ்வாறு அறைகூறுகின்றோம். எமது நிலை பற்றி நீண்ட ஆவணங்களை எம்மைக் காணவந்த சகல தலைவர்களுக்கும் நாம் கொடுத்துதவியுள்ளோம். 

எமது நிலைபற்றி உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்றவை அறிந்திருக்கின்றன. எனவே எமது சகல நடவடிக்கைகளும் வெளிப்படையாக நடாத்தப்பட்டுவருவதால் எந்தப் பயமும் இன்று நாம் எமது கடமையில் ஈடுபட்டு வருகின்றோம். எமது மக்கள் யாவரும் இந்த உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் மனதால் இணைய வேண்டும் என்பதே எமது வேணவா. தனியொரு தமிழனுக்கு ஏதேனும் ஊறு விழைவிக்கப்ட்டால் ஜகம் யாவிலும் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்கும் காலம் விரைவில் வரவேண்;டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.