Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாணவர்கள் மரணத்திற்கு நீதி கோரி சென்னையில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அக்டோபர் 20ஆம் தேதி இரவில் இந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் காவல்துறையை மாகாண அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை துணைத் தூதரகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை காலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இளந்தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையில் இதே கோரிக்கைகாக நாம் தமிழர் கட்சியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. முந்தைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டவுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் மரணத்தைக் கண்டித்தும், மலையகத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37778713

  • தொடங்கியவர்

யாழ். மாணவர்கள் படுகொலை - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன் அதிரடி கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பு பல்வேறு அமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சார்பில் தனித்தனியாக இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொது செயலாளர் சத்ரியன் வேணுகோபால், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த திருமாவளவன், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவம் மீள அழைக்கப்பட வேண்டும். பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து வரும் துரோகங்களை இந்திய மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்க்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில். சீமான், தடா சந்திரசேகரன், ராவணன், அன்பு தென்னரசன், சிவகுமார், பாக்யராஜன், செந்தில் குமார், ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சீமான், இலங்கையில் சம்பள உயர்வு கேட்டு போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

 

மாணவர்கள் இருவரும் வேகமாக சென்றதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/special/01/122370?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.