Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்போதே புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிட வேண்டும்

Featured Replies

சம்­பந்தன் கூட்டமைப்பின் தலைவ­ராக இருக்­கும்­போதே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­விட வேண்டும்

p20-a874b08423968bc68f45496b6e3edfafaeefaad2.jpg

 

இணைவு குறித்து மாகா­ணங்­களே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்­கிறார் ஜயம்­பதி

(நமது நிருபர்)

சிறு­பான்மைச் சமூ­கங்­களின் நலன்­க­ளையும் உள்­வாங்கி நவீன அர­சியல் யாப்பொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தெரி­வித்தார். 

தமிழ்க் கூட்­ட­மைப்பில் ஆர். சம்­பந்தன் போன்ற ஒருவர் தலை­வ­ராக இருக்கும்போது இதனை நிறை­வேற்ற  முடி­யாமல் போனால் இனி ஒரு அர­சியல் யாப்­பினை எங்­களால் தயா­ரிக்க முடியுமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.   

தென் ஆபி­ரிக்கா, கென்யா, நேபா ளம்,கிழக்கு தீமோர் ஆகிய நாடு­களில்  காணப்­படும் பன்­மைத்­தன்­மையை பேணுதல், சமூ­க­நீதி, சமத்­துவம் போன்ற அம்­சங்­களை உள்­ள­டக்கி இந்த அர­சி­ய­ல­மைப்புத் திட்டம்  தயா­ரிக்­கப்­படும். 

முஸ்லிம் இயக்­கங்­களின் கட்­ட­மைப்­பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஏற்­பாடு செய்­தி­ருந்த அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த செயற்­பா­டுகள் பற்­றிய கருத்­த­ரங்கு றேற்று கொழும்பில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இக்­க­ருத்­த­ரங்கில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

அர­சியல் யாப்பு தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட ஆறு குழுக்­களும் அவற்றின் அறிக்­கை­களைச் சமர்ப்­பித்­துள்­ளன. அடுத்த இரு வாரங்­க­ளுக்குள் இவை மொழி பெயர்க்­கப்­பட்டு வெளி­யி­டப்­படும்.

பிர­தான வழி காட்­டல்­குழு பிர­தமர் தலை­மையில் செயற்­பட்டு வரு­கின்­றது. சகல கட்­சி­க­ளதும் பிர­தி­நி­திகள் இதில் இடம் பெற்­றுள்­ளார்கள்.

தேர்தல் முறை பற்றி ஆலோ­ச­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரப்­ப­டு­கின்­றன. அர­சியல் யாப்பு தொடர்­பாக ஒரு வசனம் கூட இது­வ­ரைக்கும் வகுக்­கப்­ப­ட­வில்லை. சில சமூக ஊட­கங்­களால் வெளி­நாட்டு உத­வி­யுடன் அர­சியல் யாப்பு தயா­ரிக்­கப்­பட்டு விட்­ட­தாகச் செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. எங்­க­ளுக்கு அர­சியல் யாப்­பினைத் தயா­ரிப்­ப­தற்கு எந்த வெளி­நாட்டு உத­வியும் தேவை­யில்லை. உப­கு­ழுக்­க­ளது அறிக்­கையே நக­லாக வெளி­யி­டப்­படும். அதன் பின் வழி­காட்­டல்­குழு யாப்­பினைத் தயா­ரிக்கும். இதன் பின் பாரா­ளு­மன்­றத்­திலும் வெளி­யிலும் இது தொடர்­பாக விவா­திக்க இட­ம­ளிக்­கப்­படும்.

உலகில் மிகச் சிறந்த அர­சியல் யாப்­பினைத் தயா­ரிக்க முடி­யா­விட்­டாலும் உரிய சூழ­லுக்கு ஏற்ப சிறந்த அர­சியல் யாப்புத் திட்டம் ஒன்றைத் தயா­ரிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் ஆர். சம்­பந்தன் போன்ற ஒருவர் தலை­வ­ராக இருக்கும் போது இதனை நிறை­வேற்ற முடி­யாமல் போனால் இனி ஒரு அர­சியல் யாப்­பினை எங்­களால் தயா­ரிக்க முடி­யமா என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும்.

மேற் கொள்­ளப்­படும் தேர்தல் முறையில் மாற்­றங்கள் பற்றி இப்­போது கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கின்­றது. தொகுதி மற்றும் விகி­தா­சார முறை­யி­லான தேர்தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்­து­வது பற்றி ஆலோ­சிக்­கப்­ப­டு­கின்­றது. இந்த முறையின் கீழ் கட்­சிக்கும் அபேட்­ச­க­ருக்கும் வாக்­க­ளிப்­ப­தற்கு ஒரு­வ­ருக்கு இரு வாக்­குகள் வழங்­கப்­படும்.

சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­க­ளது நலன்­களை உள்­வாங்­கு­வ­தற்­காக பல அங்­கத்­தவர் தொகு­தி­முறை இழப்­பீட்டு பிர­தி­நி­தித்­துவம் என்­ப­னவும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. ஜேர்மன் மற்றும் நியூ­சி­லாந்தில் பின்­பற்றும் தேர்தல் முறையை ஒத்­த­தா­கவே இத்­தேர்தல் முறை அமையும்.

பெரிய கட்­சிகள் ஸ்திர­மான அர­சினை அமைப்­ப­தற்கு போனஸ் முறை இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன.

வெட்­டுப்­புள்ளி இருக்கக் கூடாது என்­பது எனது அபிப்­பி­ரா­ய­மாகும். தேர்தல் தொகுதி அகில இலங்கை ரீதி­யாக அமைய வேண்­டுமா? மாகாண ரீதி­யாக அமைய வேண்­டுமா? என்­பது பற்றி கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாகாண மட்­டத்­தையே விரும்­பு­கி­றது. கூடு­த­லா­ன­வர்கள் தேசிய விகி­தா­சா­ரத்தை விரும்­பு­கி­றார்கள்.

உத்­தேச அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தங்கள் தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­னணி சாத­க­மான முறையில் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றது.

அதி­காரப் பர­வ­லா­னது மாகாண மட்­டத்தில் அமைய வேண்டும் என்ற கருத்து முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

மாகா­ணங்கள் இணைய வேண்­டுமா? என்­பது பற்றி குறிப்­பிட்ட மாகா­ணங்­களே தீர்­மானம் எடுப்­ப­தற்கு யாப்பில் வசதி செய்­யப்­ப­டுதல் வேண்டும். அந்த இரு மாகாண மக்கள் இணங்­கினால் மாகா­ணங்கள் இணைந்து செயற்­ப­டலாம்.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பாக நான் கருத்­துக்கள் எத­னையும் கூற விரும்பவில்லை. தேசவழமை மற்றும் கண்டிய சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ற நவீன யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும்.

தற்போதைய அரசியல் யாப்பில் சில ஷரத்துக்களை மாற்றுவதற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். ஒரு கமாவை மாற்றுவதாக இருந்தாலும் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.மக்களது அங்கீகாரம் பெற்றே யாப்பு திருத்தப்படும் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-31#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் பெயரில்....பிரபாகரன் தலைமையில் உலக தமிழர்களுக்கு ஒரு விடிவு வரக்கூடாது என்ற உண்மை வெளிவரத்தொடங்கி விட்டது. இந்த கொள்கையும்/வரட்டு கௌரவமும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும்  இருந்ததாக முன்னர் கேள்விப்பட்டுள்ளேன்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.