Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு புதிய கடைகள் கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த செம்ரெம்பா் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 125 கடைகள் முற்றாக எரிந்து அழிந்திருந்தது. இதில் முழுமையாக 66 கடைகள் முழுமையாகவும், 59 கடைகள் பகுதியளவிலும் எரிந்து அழிந்திருந்தன.

உடனடியாக எரிந்து அழிந்த 22 பழ வியாபார கடைகள் ஒரிரு வாரங்களுக்காக தற்காலிகமாக அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏனைய புடவை,  அழகுசாதன  வியாபாரம்,காலணி வியாபார கடைகளை அமைப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சா் வட மாகாண உள்ளுராட்சி நிதியில் இருந்து 11.3 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்திருந்தாா்.

இந்த நிதியைக் கொண்டு அரைநிரந்த கடைகளாக  புடவை,  அழகுசாதன  வியாபாரம்,காலணி வியாபார கடைகள் 45 அமைக்கும் பணி மிக வேகமாக முன்னெடுக்ககப்பட்டு இன்று 07-11-2016  செவ்வாய் கிழமை உத்தியோகபூா்வமாக  சந்தை வியாபாரிகளிடம் வட மாகாண முதலமைச்சரினால் கையளிக்கப்பட்டுள்ளது.

img_8603

இதனை தவிர மீள்குடியேற்ற அமைச்சினால் 74 மில்லியன்  ரூபாக்கள் வியாபாரிகளுக்கான நட்டஈடு வழங்குவதற்கும், அமைச்சரவை அனுமதியளித்துள்ளதோடு. உள்ளுராட்சி அமைச்சினால் புதிய  நிரந்தர சந்தை கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவும், தீ அணைப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கு 100 மில்லியன் ரூபாக்களும் என மொத்தமாக 324 மில்லியன் ரூபாக்கள் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு கிடைக்கவுள்ளது.  இதனை மத்திய அரசின் அமைச்சா்கள் தன்னிடம் உத்தரவாதமாக தெரிவித்துள்ளனா் என முதலமைச்சா் தெரிவித்துள்ளாா்.

இங்கு உரையாற்றி வடக்கு மாகாண பிரதம செயலாளா் பத்திநாதன் அவா்கள் வட மாகாணத்தில் முதல் முறையாக 11.3 மில்லியன் ரூபா திட்டத்தை மிகமிக குறுகிய காலத்தில் நோ்த்தியாக  நிறைவு செய்துள்ள திட்டமாக கிளிநொச்சி பொது சந்தைக்கான இந்த அரை நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டமையே காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.  தன்னுடைய கடமை நேரத்திற்கு அப்பால் இரவு பகலாக நின்று பணிகளை மேற்கொண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனுக்கும்   நன்றியை தெரிவித்துக்கொண்டாா்

கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க. கம்சநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், அரியரட்ணம்,பசுபதிபிள்ளை, மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளா் பத்திநாதன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளா்  பிரபாகரன் சந்தை வா்த்தகா்கள் என பலா் கலந்துகொண்டனா்.

img_8606img_8612img_8619img_8644img_8648img_8666

 

வெகுவிரைவில் கிளிநொச்சியில் புதியதொரு சந்தை உருவாக்கப்படும்! வடக்கு முதல்வர்!

வெகுவிரைவில் கிளிநொச்சியில் புதியதொரு சந்தை உருவாக்கப்படும் என்பது எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சீவிவிக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08.11.2016) மாலை 4.00 மணிக்குமுதலமைச்சர் கிளிநொச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கடைத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பலரும் ஒன்று சேர்ந்து மிகக் குறுகிய காலத்தினுள் இந்த 45 கடைகளையும் கட்டியமை எமக்கு மனமகிழ்வைத் தருகின்றது. தீப்பிடித்த செப்ரெம்பர் 16ந் திகதி இரவிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 20ஆயிரம் தரக்கூடியதாக இருந்தது.

அப்பொழுது நடந்த கூட்டத்தில் நான் ஒருவிடயத்தைக் கூறினேன். இங்கு வந்து வெறுமனே பேசுவதால் பயனில்லை நாங்கள் செயலில் காட்ட வேண்டும் என்றேன். நாங்கள் செயலில் காட்டுவதற்கு சகலரும் ஒத்துழைத்து இந்த 45 கடைகளையும் இன்று திறக்கக் கூடியதாக இருக்கின்றது.

எங்கள் அலுவலர்களும் ஒப்பந்தக்காரர்களும் ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டமை மற்றைய எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தில் தேவையானது யாவரதும் ஒத்துழைப்பே. வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டாது ஒரு நல்ல காரியத்திற்காக ஒன்றுபட சகலரும் முன்வரவேண்டும்.

இதைத்தான் கிளிநொச்சி மக்கள் மற்ற மக்கள் யாவருக்கும் எடுத்துரைத்துள்ளார்கள்.

சுனாமியின் போது இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் “பழைய குருடி கதவைத் திறவடி” என்ற கதைப்படி இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஒற்றுமை ஒன்றே எம்மை வழிநடத்திச் செல்லும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் ஒருசெய்தி படித்தேன்.

ஆளுநர் அவர்கள் வடமாகாணம் பற்றிக் கூறியிருந்தார். வடமாகாண மக்கள் சாதியாலும் வர்க்கத்தாலும் கல்வி வேற்றுமைகளாலும் மதத்தாலும் வேற்றுமைப்பட்டு முன்னேற முடியாமல் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருப்பதாக அவர் கூறினார் என்றுசெய்தி இருந்தது.

இன்றைய உங்கள் ஒற்றுமைச் செயற்பாடு அவரது அவதானத்தைப் பொய்மைப் படுத்துத்துவதாக அமைந்துள்ளது. எம்மக்கள் சாதி, சமய, வர்க்க மத வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்து உழைத்து மிகக் குறுகிய காலத்தினுள் வெற்றியடையக் கூடியவர்கள் என்பதை கிளிநொச்சி மக்களாகிய நீங்கள் இன்று அவருக்குப் பதிலளித்துள்ளீர்கள்.

உங்கள் ஒற்றுமை எம் எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும். இச் செயற்பாட்டிலே உங்கள் பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதனுடன் பிரதம செயலாளர், எமது அமைச்சின் செயலாளர் மேலும் பலஅலுவலர்கள் சேர்ந்து உரிய பணத்தைச் சேகரித்து குறுகிய காலத்தினுள் இக்கடைகளைக் கட்டஉதவியுள்ளார்கள்.

எமது செயலாளர் திருமதி.கேதீஸ்வரன் அவர்கள் பிரதம செயலாளரிடம் இருந்து பணத்தைக் கறந்து இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.

விரைவில் இம்மாத முடிவுக்கு முன்னர் நட்டஈடாக 74 மில்லியன் உங்களுக்குக் கிடைக்கப் போகின்றது. மேலும் புதிய சந்தைக் கட்டடத்திற்கு 150 மில்லியன் கிடைக்கப் போகின்றது. மேலும் தீயணைப்புப் படையணி உருவாக்க 100 மில்லியனும் எல்லாமாக 324 மில்லியன் அமைச்சரவையால் அனுமதிக்கப் பட்டுள்ளது.

நட்டஈடு இம்மாதத்திலும் சந்தைக் கட்டடம், தீயணைப்புப் படையணியும் அடுத்த வருடம் தொடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை எனது 50 வருடகால நண்பர் கௌரவ சுவாமிநாதன் அவர்கள் தொலைபேசியில் எனக்குக் கூறினார். எமது மனமார்ந்த நன்றிகள் அவருக்குஉரித்தாகுக.

வெகுவிரைவில் கிளிநொச்சியில் புதியதொரு சந்தை உருவாக்கப்படும் என்பது எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அத்தோடு யாவரும் சேர்ந்து ஒரு செயற்பாட்டில் எம்மால் இறங்க முடியும் என்பது எமக்கு எம்மீது நம்பிக்கை ஏற்படுத்துகின்றது.

இங்கிருக்கும் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர் - வடமாகாணம்

 

http://www.tamilwin.com/politics/01/123842?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

download-4  download-3   download-2

சரியாக... 7 கிழமைகளில், கிளிநொச்சியில் எரிந்த கடைகளை... அழகிய முறையில் கட்டிக் கொடுத்த.....
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.