Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலம் நல்லது!

Featured Replies

  • தொடங்கியவர்

தூங்கினால் உயிர் போய்விடுமா.? : அரிய நோயால் அவதிப்படும் இளைஞன் (வீடியோ)

 

 

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞன் ஒரு வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

லியாம் டெர்பிஷைர்(17) என்ற அந்த இளைஞனுக்கு ஹைப்போவெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற விசித்திர நோய் தாக்கியுள்ளது. இதனால் அவர் பிறந்தது முதலே பல அவதிகளை அனுபவித்து வந்துள்ளார். முக்கியமாக இவரால் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூங்க முடியாது. 

அப்படி தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். மேலும் இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்பதுதான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. உலகில் மொத்தம் 1500 நபர்களுக்கு மட்டுமே இந்த நோய் தாக்கியுள்ளது. 

எனவே, தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திக் கொண்ட பின்புதான் உறங்க செல்கிறார் லியாம்.

 

 

http://www.virakesari.lk/article/22796

  • Replies 475
  • Views 141.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கருணாநிதிக்கு மட்டுமல்ல... ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது 'ட்ரக்கியோஸ்டோமி'..? ஏன்? எப்படி?

 

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்ததால்  ஐசியூ-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  தொடர்பாக காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், நுரையீரலில் உள்ள சளியை அகற்ற 'ட்ரக்கியோஸ்டோமி ' சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. 

ஏற்கெனவே 'ட்ரக்கியோஸ்டோமி' சிகிச்சை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அளிக்கப்பட்டது. 

 

 'ட்ரக்கியோஸ்டோமி ' (Tracheostomy)  சிகிச்சை என்றால் என்ன? எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும்? காது-மூக்கு- தொண்டை மருத்துவ நிபுணர் சங்கரிடம் கேட்டோம்.

'ட்ரக்கியோஸ்டோமி '  என்றால் என்ன ?மருத்துவர் சங்கர்

'ட்ரக்கியோஸ்டோமி' என்பது,  குரல் வலையில்  அடைப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படும்போது, செய்யப்படும் அறுவைசிகிச்சை.  இதைத் தமிழில் 'செயற்கை சுவாச உபகரணச் சிகிச்சை' என்று குறிப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

கழுத்து வழியாக துளையிட்டு, அதில் ஒரு டியூப் நுழைக்கப்படும். அந்த டியூப் சுவாசக்குழாயுடன் இணைக்கப்பட்டு நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும். அதாவது சுவாசமானது மூக்கு வழியாகவோ, வாய் வழியாகவோ அல்லாமல் டியூப் வழியாக நேரடியாக நிகழும். தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டோமி இணைப்புக் குழாயை நோய்த்தொற்று பூரணமாக குணமடைந்த பிறகே அகற்றவேண்டும். ஆனாலும், இந்த சிகிச்சையின்போது வழக்கம்போல் உணவருந்தலாம். அதில் எந்த பாதிப்பும் இல்லை.

யாருக்கு இது அவசியமாகிறது ?

குரல்வளையில் புற்றுநோய், நுரையீரலில் சளி அடைப்பு, சுயநினைவு இழந்தவர்கள்  ஆகியோருக்கு மூச்சுத்திணறல் உண்டாகும். அவர்களுக்கு இந்த முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. மேலும், வாய் மற்றும் நாக்கு போன்றவற்றில் அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கு முன், அவர்களுக்கு மூச்சத்திணறல் ஏற்படுவதைத் தடுக்க இந்தச் சிகிச்சை அளிக்கப்படும்.  

'ட்ரக்கியோஸ்டோமி

சுய நினைவு இழந்தவர்களுக்கு ஏன் அவசியம் ?

சுயநினைவை இழந்தவர்களால் இரும முடியாது. அவர்கள் உடலில் அதிக அளவில் சளி தேங்கியிருக்கும். அதனால் செயற்கையாக சளியை வெளியேற்ற வேண்டிய அவசியம் உண்டாகிறது. இவர்களுக்கு ஆரம்பத்தில்  'என்டோட்டிராகில் டியூப்'  (endotracheal tube) கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். ஆனால், இந்த முறையில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இதைத் தவிர்க்கவும், அதிலிருந்து விடுபடவும்  'ட்ரக்கியோஸ்டோமி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. சளியை வெளியே எடுத்தால்தான் உடலுக்குத் தேவையான  அளவு ஆக்ஸிஜன் கிடைக்கும். அப்போதுதான் அவர்கள் எளிதில் குணமடைவார்கள்.

டியூப் பொருத்தப்பட்டவர்களால் பேச முடியுமா ?

'ட்ரக்கியோஸ்டோமி'  டியூபிலேயே பேசுவதற்கு உண்டான (Speaking volve) தனிக்கருவி உள்ளது. அதைப் பயன்படுத்தி பேசிக் கொள்ளலாம். ஆனால், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவு இருந்தாலும் மூச்சுவிட சிரமப்படுவார்கள். அவர்களால் பேச முடியாது.

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி எவ்வாறு அகற்றப்படுகிறது ?

'ட்ரக்கியோஸ்டோமி'  டியூப் என்பது,  காற்று உள்ளே செல்வதற்காக உள்ள டியூப்பாகும். ஆனால், சளியை அகற்ற சக்ஸன் கதீட்டர் ( Suction Catheter) என்னும் தனி டியூப் பயன்படுத்தப்படுகிறது. இந்த டியூபை குழாய் வழியாக அனுப்பி சளி வெளியேற்றப்படுகிறது. நுரையீரலில் உள்ள  சளியின் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஒரு முறையோ, இல்லை மூன்று முறையோ வெளியேற்றப்படும். ஐசியு- வில் இருக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இந்த முறையில் சளி வெளியேற்றப்படுகிறது.

'ட்ரக்கியோஸ்டோமி டியூப்' எத்தனை நாளில் அகற்றப்படும்? 

நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தே டியூப் அகற்றப்படும். சுயநினைவு திரும்பி இயல்பாக சுவாசிக்கும் நிலைக்கு வந்துவிட்டால் டியூபை அகற்றிக் கொள்ளலாம். அகற்றிய பின்பு தையல் போடப்படும்.  மாவீரன் அலெக்ஸாண்டர்

இந்த சிகிச்சையை பெரும்பாலும் குழந்தைகளுக்கு தவிர்க்கிறோம். டியூப்பை கழற்றிய பிறகும்கூட  அவர்களால் மூக்கின் வழியாக மூச்சுவிட சிரமம் இருக்கும். ஆனால், பெரியவர்களுக்கு பெரும்பாலும் இத்தகைய அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக சுயநினைவை இழந்தவர்களுக்கு தற்போது அதிகமாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

உலகில் முதன் முதலில் 'ட்ரக்கியோஸ்டோமி'  சிகிச்சையைப் செய்தது மாவீரன் அலெக்ஸாண்டர்தான். தனது படை வீரர் ஒருவரின் தொண்டையில் மாமிசத்துண்டு அடைத்துக்கொள்ள, அவர் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். இதைக்கண்ட அலெக்ஸாண்டர் தன் வாளால் படைவீரரின்  தொண்டையை லேசாகக் கிழித்தார். அடுத்தகணமே  சிக்கியிருந்த மாமிசம் அகற்றப்பட்டது. அவருக்கு, மூச்சுத்திணறல் சரியானது. அதன், பின்னர்தான் உலகம் முழுவதும் இந்த சிகிச்சைமுறை பரவியது..." என்கிறார் டாக்டர் சங்கர்!

http://www.vikatan.com/news/health/98666-tracheostomy-purpose-procedure-risks.html

  • தொடங்கியவர்

மூளையில் ஏற்படும் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை

 

 

health_news_image_98.jpeg

மூளைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக அடிப்படுவதால் மூளையில் உள்ள நரம்புகளில் இரத்த கசிவு ஏற்படும். இதில் ஒரு சிலருக்கு நரம்புப் பகுதியில் இரத்தம் உறைந்து கட்டிகளாகிவிடும். இதன் காரணமாக மூளைப்பகுதியில் இரத்த அழுத்தம் ஏற்படும். உலகில் இவ்வகையான பாதிப்பு லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 5 சதவீதத்தினர் திடீரென்று உடல்நலகுறைவு ஏற்பட்டு மரணத்தைக் கூட சந்தித்திருக்கிறார்கள். இந்த பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களையே பாதிக்கிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப மாற்றங்களால் இதற்கான சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எண்பது சதவீதத்தினருக்கு மேல் சிகிச்சைப் பெற்று குணமடைந்திருக்கிறார்கள்.

பெருமூளை இரத்த அழுத்தம் (cerebral venous thrombosis) எனப்படும் இந்த பாதிப்பிற்கு நீண்டநாளாக நீடிக்கும் தலைவலி கூட அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து எம் ஆர் ஐ, சி டி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட், இரத்த பரிசோதனை, venography  மற்றும் ஓஞ்சியோகிராபி போன்ற பரிசோதனைகளை செய்தும் இமேஜிங் பரிசோதனை செய்தும் உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சையை பெறலாம். சிகிச்சைகள் பெற்றால் அதிலும் தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சைகள் பெற்றால் 100 சதம் குணமடையலாம்.

மூளையில் இரத்த அழுத்தம் ஏற்படாதிருக்கவேண்டும் என்றால், சத்துள்ள ப்ரெஷ்ஷான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினமும் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். புகைப்பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். சர்க்கரைநோயிருந்தால் அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.

Dr. அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22985

  • தொடங்கியவர்

சருமப் பொலிவுக்கு எலு­மிச்சைத் தோல்

 

 

உலகம் முழுக்க எல்லா பருவ காலங்­க­ளிலும் கிடைக்கும் ஒரே பழம் எலு­மிச்­சைதான். நம் எல்­லோ­ரு­டைய சமை­ய­ல­றையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்­களில் முக்­கிய பங்கு எலு­மிச்­சைக்கு உண்டு. எலு­மிச்­சையில் அதி­கப்­ப­டி­யான விற்ற­ மின்கள், தாதுப்­பொ­ருட்கள் மற்றும் நார்ச்­சத்­து­களும் இருப்­பதால், ஊட்டச் சத்து குறை­வில்­லாமல் கிடைக்கும்.

health.jpg

எலு­மிச்சைச் சாற்றில் உள்ள சத்­துக்­க­ளோடு ஒப்­பிட்டு பார்த்­தோ­மானால் அதன் தோளில்தான் விற்றமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கல்­சியம், மெக்­னீ­சியம், பொட்­டா­சியம், ஃபோலேட் போன்­றவை உள்­ளன. எது ஒன்­றையும் சுத்தம் செய்­வதில் இதன் தோல்தான் முத­லி­டத்தில் உள்­ளது. இதன் தோல் மிகவும் நறு­மணம் மிக்­க­தா­கவும், புத்­து­ணர்ச்சி அளிப்­ப­தா­கவும் உள்­ளது.

எலு­மிச்­சையின் தோலில் நம் சரு­மத்­திற்கு ஏற்ற அனைத்து நன்­மை­களும் உண்டு. அதன் தோலில் இருக்­கக்­கூ­டிய அமி­ல­மா­னது நம் சரு­மத்தை மிரு­து­வாக்கும். மேலும் பளிச் தோற்­றத்தை கொடுக்­க­வல்­லது. நம் சரு­மத்தில் உள்ள இறந்த செல்­களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்­டு­கி­றது. எலு­மிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்­த­வுடன் அதை பொடித்து அத்­துடன் தேன், சர்க்­கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்தால் முகத்­திற்­கான ஸ்க்ரப் தயார்.

முகம் பிளீச் செய்­தாற்போல் மாறி­விடும். சூரியக் கதிர்­களால் ஏற்­பட்ட கரு­மையும் மறையும். எலு­மிச்சை தோலின் உட்­பு­றத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்­கி­விட்டு சிறு சிறு துண்­டு­க­ளாக நறுக்­கிக்­கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு எடுத்­துக்­கொள்ள வேண்டும். அதில் தேவை­யான அளவு வெந்நீர் ஊற்­றிக்­கொள்ள வேண்டும்.

10 நிமி­டங்­க­ளுக்கு பிறகு அதை வடி­கட்டி அத்­துடன் தேன் கலந்து பரு­கலாம். இந்த டீ நம் ஜீரண மண்­ட­லத்தை வலுப்­பெற செய்­கி­றது. மேலும் உடல் எடையைக் குறைக்க உதவும். உடலில் உள்ள ph அளவை சமன்­ப­டுத்­து­கி­றது. கல்­லீ­ர­லுக்கு புத்­து­ணர்ச்சி அளிக்­கி­றது. எதிர்ப்பு சக்­தியை அதி­கப்­ப­டுத்­து­கி­றது.

நகங்­களை 10 நிமி­டங்கள் வெது­வெ­துப்­பான நீரில் ஊற வைத்­தபின் எலு­மிச்சைத் தோலைக்­கொண்டு நகங்­களின் மேல் 30 விநா­டிகள் தேய்த்து பின் கழு­வி­விட வேண்டும். இது போல் 2 நாட்­க­ளுக்கு ஒரு­முறை செய்து வந்தால் நகங்­களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதேபோல் பற்­க­ளிலும் தேய்த்து வாய் கொப்­பு­ளித்து வந்தால் பற்­களின் மஞ்சள் நிறம் நாள­டைவில் மறைந்து வெண்மை புன்­ன­கையைப் பெறலாம்.

எலு­மிச்சைத் தோலை துருவி ஸ்பிரேயர் உள்ளே போடவும். அத்­துடன் ஒயிட் வினிகர் சேர்க்க வேண்டும்.நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைக்க வேண்டும். கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் இதனை சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம். வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.

http://www.virakesari.lk/article/23107

  • தொடங்கியவர்

மரணம், வயோ­தி­பத்தை மருத்­துவம் தடுக்­குமா..?

 

 

முன்­னொரு காலத்தில் அசாத்­தி­யம் என்று கரு­தப்­பட்­ட­வற்றை எல்லாம் தற்­போ­தைய விஞ்­ஞானத் தொழில்­நுட்பம் இணைந்த மருத்­துவம் சாத்­தியம் என்று நிரூ­பித்துக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதே விஞ்­ஞானம் சில­வேளை இயற்­கையின் நிய­தி­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்­த­வண்­ண­முள்­ளது.  அதே­போன்று காலங்­கா­ல­மாக மரணம், வயோ­திபம் தொடர்­பான தொடர்ச்­சி­யான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு தற்­போது அவற்றைத் தடுப்­ப­தற்­கான முயற்­சிகள் நடை­பெற்று வரு­கின்­றன. அவ்­வா­றான சில முயற்­சி­களை இங்கு பார்க்­கலாம்.

Local_News.jpg

 முயற்சி 1: இது மரணம் அல்ல உறக்கம்!

சில்­வியா மற்றும் ஆலன் சின்க்ளைர் தம்­ப­திகள் 40 வரு­டங்­க­ளாகக் கணவன் மனை­வி­யாக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளுக்கு 4 குழந்­தைகள், 8 பேரக்­கு­ழந்­தைகள். அது­மட்­டு­மில்­லாமல், பல குழந்தை பரா­ம­ரிப்பு இல்­லங்­களை பார்த்துக் கொண்­ட­வர்கள். சஸ்ஸேக்ஸ் கடற்­க­ரையை ஒட்­டிய வீட்டில் இனி­மை­யா­க ­வாழ்ந்து கொண்­டி­ருந்த போது, 66 வய­தான சில்­வி­யா­விற்கு நுரை­யீரல் புற்­றுநோய், அதுவும் முற்­றிய நிலை என்று தெரிய வரு­கி­றது. மருத்­துவம் கையை விரிக்க, ஒரு சில வாரங்­களில் மரணம் சில்­வி­யாவை அழைத்துச் சென்று விடு­கி­றது. ஆல­னுக்கும் அவ­ரது குடும்­பத்­திற்கும் இது ஒரு எதிர்­பா­ராத பூகம்பம்! ஒரு­வரை மட்டும் அவர்கள் இழக்­க­வில்லை. ஒரு மனைவி, ஒரு நல்ல தாய், ஒரு அன்­பான பாட்டி என்று மூன்று பேர் அன்று மர­ணித்­த­தாகத் தான் கரு­தப்­பட்­டது. ஆம், சில்­வியா எல்­லா­முமாய் இருந்தார்!

அவ­ரது இறப்பு, அந்தக் குடும்­பத்­திற்கு வேண்­டு­மானால் பெரிய இழப்பு. ஆனால் அந்த மருத்­து­வ­ம­னையில் அமர்ந்­தி­ருந்த அந்த நண்­பர்கள் கூட்­டத்­திற்கு இல்லை. அவர்கள் கண்­களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. அழு­வ­தற்­கான நேரம் இது­வல்ல என்று உணர்ந்­த­வர்கள் அவர்கள். இறப்புச் செய்தி வந்­த­வுடன் தாம­திக்­காமல் களத்தில் இறங்­கி­னார்கள். தனி அம்­பியூலன்ஸ் ஒன்றில் சில்­வி­யாவின் உடலை பெற்றுக் கொண்­டார்கள். உடல் கெட்­டுப்­போ­காமல் இருக்கச் செய்­யப்­படும் எம்­பாமிங் (embalming) செய்­மு­றைகள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. ஐஸ் பெட்­டியில் வைக்கும் முன், அமி­லத்தை முறிக்கத் தொண்டை வழியே ஒரு திரவம், மார்­பெ­லும்­பிற்குத் தகுந்த மருத்­துவம், CPR என அனைத்தும் செய்­தா­யிற்று. இரத்­தத்தில் Anti-Freeze சொல்­யூஷன் கலக்­கப்­பட்டு லண்டன் மாந­க­ரத்­திற்கு எடுத்துச் சென்­றார்கள்.

பெட்­டியில் வெப்­ப­நிலை -70 டிகி­ரியை தொட்­ட­வுடன், உடல் அமெ­ரிக்­கா­விற்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. பின்பு, அங்கே ஒரு உலோக பெட்­ட­கத்தில் க்ரையோ­ஜெனிக் முறையில் உடல் பதப்­ப­டுத்­தப்­பட்­டது. அதே அறையில் தான் ­அ­வரின் முன்­னோர்­களின் உடல்­க­ளும் ­அதே முறையில் பதப்­ப­டுத்­தப்­பட்டு வைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. 1977ஆம் வருடம் இறந்­த­வர்­களின் உடல் கூட கெடாமல் இன்னும் பாது­காக்­கப்­ப­டு­கி­றதாம். இவர்கள் என்­றா­வது ஒரு நாள் மீண்டும் உயி­ருடன் வரு­வார்கள் என்­பது அவர்கள் நம்­பிக்கை. ஆனால், இவர்கள் இதற்­காக நம்­பு­வது கட­வுளை அல்ல. நேரம் வரும்­போது, சரி­யான தொழில்­நுட்பம் வரும்­போது, அறி­வி­யலால் இறப்பு என்ற ஒன்றை நிச்­சயம் மாற்ற முடியும் என்று நம்­பு­கி­றார்கள் இவர்கள். அதற்­கா­கவே அனைத்து உடல்­களும் பாது­காக்கப் படு­கின்­றன. இது மரண கடி­கா­ரத்தை நக­ராமல் நிறுத்­தி ­வைக்கும் அதி­சயம்!

 

முயற்சி 2: மறு­பி­றப்பு மருத்­துவம்

நீங்கள் ஒரு கார் வைத்­தி­ருக்­கி­றீர்கள். அதன் ஏதோ ஒரு உதிர்ப்பாகம் செய­லி­ழந்து விடு­கி­றது, உடனே வேறு ஒரு புது பகுதியை கடை­களில் வாங்கி காரை சரி செய்­வ­தில்­லையா? உங்கள் மடிக்­க­ணி­னியில், தர­வு­களை பேக்கப் எடுத்து வைப்­பீர்கள். ஹார்ட் டிஸ்க்­கிற்கு எதா­வது சேதம் ஏற்­பட்டு டேட்டா காணாமல் போனால், பேக்கப் டேட்­டாவை எடுத்துக் கொள்­வது இல்­லையா?  அதையே தான் மனித உடலில் அறி­வியல் மூலம் இங்­கே ­செய்ய முற்­ப­டு­கி­றார்கள். இதில், முன்­னரே பல படி­களைக் கடந்து விட்டோம் என்­பதும் உண்மை. மீளு­ரு­வாக்கம் என்ற முறைப்­படி, சேத­ம­டைந்த மற்றும் செய­லி­ழந்த உறுப்­புகள் அனைத்­திற்கும் அந்த நோயா­ளியின் ஸ்டெம் செல்கள் வைத்தே புத்­துயிர் ஊட்­டு­கி­றார்கள். முழுக்க முழுக்க பரி­சோ­தனை கூடத்தில் பாது­காக்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்ட இரத்தக் குழாய்கள், சிறு­நீர்ப்பை, பித்­தப்பை போன்­ற­வற்றை பாதிக்­கப்­பட்ட மனி­தர்­க­ளுக்குப் பொருத்தும் முயற்­சிகள் நடந்த வண்ணம் உள்­ளன. 

 

முயற்சி 3: அழி­வில்லா டிஜிட்டல் மனிதன்

அழி­வில்லா மனி­தர்­களை உரு­வாக்க எதற்கு உயி­ரியல் மற்றும் மருத்­துவம் பின்னால் ஓடு­கி­றார்கள்? டிஜிட்டல் டெக்­னா­லஜி பக்கம் வாருங்கள் என்று அழைக்­கிறார் புகழ்­பெற்ற கணினி விஞ்­ஞா­னி­யான ரே குர்­சுவில். நம் மூளையில் இருக்கும் அனைத்துத் தக­வல்­க­ளையும் தர­வி­றக்கம் செய்து கணி­னியில் சேமித்து வைத்து விட்டால் போதும். பின்­னாளில், இதை ஒரு ரோபோ­விற்கு அப்லோட் செய்­து­விட்டால், உங்­க­ளுக்கும் உங்கள் நினை­வு­க­ளுக்கும் என்றும் அழிவு இல்லை. 2045ஆம் ஆண்­டிற்குள் இது நிச்­சயம் சாத்­தியம் என்று அதி­ர­வைக்­கிறார் ரே. இவர் ஏதோ உள­று­கிறார் என்று நினைத்து விட வேண்டாம். மூன்று அமெ­ரிக்க  ஜனா­தி­ப­திகள் இது­வரை ரேவின் ஆராய்ச்­சிகள் மற்றும் முயற்­சி­களைப் பாராட்­டி­யி­ருக்­கி­றார்கள். முத்­தாய்ப்­பாக, பில்கேட்ஸ், “செயற்கை நுண்­ண­றிவின் எதிர்­காலம் மற்றும் வளர்ச்­சியைக் கணிப்­பதில் ரேவை மிஞ்­சிய ஆள் இந்த உல­கத்­தி­லேயே இல்லை” என்று புக­ழாரம் சூட்­டி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. அது இருக்­கட்டும், இந்த பதி­வி­றக்கும் சமாச்­சா­ரத்தை அப்­போதே தன­து ‘­பேசும் பொம்­மைகள்’ நாவலில் சுஜாதா எழு­தி­யி­ருந்தார் என்­பது நம்மில் எத்­தனைப் பேருக்கு தெரியும்? 

 

முயற்சி 4: வயோ­திபம் ஒரு வியாதி தான், அதைக் குணப்­ப­டுத்­தலாம்

மர­ணத்தைத் தடுப்­பது ஒரு புறம் இருக்­கட்டும். பல­ருக்கு இள­மை­யோடு என்றும் வாழ­வேண்டும் என்­பதே கனவு. எலி­சபெத் பரேஷ் ஒன்றும் விதி­வி­லக்­கல்ல. மார்க்­கண்­டே­யனைப் போல் என்றும் இள­மை­யோடு இருப்­பதே அவர் எண்ணம். அவரைப் பொறுத்­த­வரை, வயது முதிர்ச்சி என்­பது ஒரு வியாதி. புற்றுநோய் இரு­தய நோய் போல இந்தக் கொடிய வியா­தி­யையும் குணப்­ப­டுத்த முடியும் என்று நம்­பு­கிறார். அதற்­காக அவர் நடத்தும் ஒரு நிறு­வனம் தான் பயோ­விவா (BioViva). அதில் புகழ்­பெற்ற அமெ­ரிக்க மூலக்­கூறு உயி­ரி­ய­லாளர் மற்றும் உயி­ரியல் நிபுணர் சிந்­தியா கென்யோனின் ஆராய்ச்­சி­களைச் சுற்றி பரி­சோ­த­னைகள் செய்து வரு­கின்­றனர். அதன்­படி, நம் உடம்பின் செல்கள் அனைத்தும் குறிப்­பிட்ட காலத்­திற்குப் பிறகு செய­லி­ழந்து விடு­வது போல அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதை ஜீன் தெரபி மூலம் மாற்றி அமைக்க முடியும். இப்­படிச் செய்­வதால், வய­தான பிறகு ஏற்­படும் எண்­ணற்ற உடல் உபா­தை­களை இல்­லாமல் செய்து விட முடியும் என்று கூறு­கி­றார்கள். ஸ்பானிஷ் தேசிய புற்­றுநோய் ஆராய்ச்சி மையம் இந்த ஜீன் தெர­பியை பயன்­ப­டுத்தி ஒரு எலியின் ஆயுளை 40 சத­வீதம் வரை உயர்த்திக் காட்­டி­யி­ருக்­கி­றதாம்.

இந்த ஆச்­சர்­யத்தின் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மயோ கிளினிக்கில், நம்பத்தகுந்த வகையில் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் விளக்கம் அளிக்கிறார்கள். அதன்படி செனசென்ட் செல்கள் (Senscent Cells) எனப்படும் ஒருவகை செல்கள் தான் நம்மை புற்று நோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது. வேலை முடிந்தாலும் இந்த செனசென்ட் செல்கள் உடலிலேயே தங்கி இரட்டிப்பாவதால் நமக்கு வயதாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே, இவ்வகை செல்களை உடலிலிருந்து அகற்றிவிட்டால், வயதாவதைத் தடுக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். - குரூஸ்

http://www.virakesari.lk/article/23109

  • தொடங்கியவர்

ஓவியா செய்து கொண்டதாகச் சொல்லப்படும் 'கப்பிங் தெரபி' பற்றி தெரியுமா? #Video

 
 

பிக்பாஸ்... பிக்பாஸ்  பிக்பாஸ்... திரும்பிய இடங்கள் எல்லாம் பிக்பாஸ் பற்றிய பேச்சுதான். பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி சில நாட்களாக கொஞ்சம் டல்லடிக்கிறது என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.  காரணம் 'குயீன் ஆப் பிக்பாஸ்' ஆக இருந்த ஓவியா வெளியேறியதுதான். ஆனாலும் ஓவியா மீதான ஈர்ப்பு குறையவில்லை. அவர் எதைச் செய்தாலும், எங்கே சென்றாலும் அது குறித்த செய்திகள் வைரலாகின்றன.

ஓவியா புது ஹேர்ஸ்டைல்

ஓவியாவுடன் எடுத்த புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சிலர் 'பெருமை' தேடிக்கொள்கிறார்கள். அப்படி வெளியான ஒரு படம் இப்போது புதிய செய்திக்கு அடித்தளம் போட்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுவதும் முடி இல்லாமல், இன்னொரு பக்கம் வாகு எடுத்து சீவி புதிய ஹேர்ஸ்டைலுடன்  இருக்கிறார் ஓவியா.  தலைப்பகுதியில் ஒரு சிகப்பு முத்திரை போல ஒரு தழும்பு இருக்கிறது. " 'கப்பிங் தெரபி' செய்யப்பட்டதற்கான அடையாளமே அந்த  தழும்பு"  என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. ஹலினா ரஜிமா

அதென்ன  கப்பிங் தெரபி(Cupping therapy)? 

'கப்பிங் தெரபி' என்பது கப்பை (Cup) வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை.  இதை மட்டுமே சிறப்பு சிகிச்சையாக அளிக்கும் மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஹலினா ரஜிமா அப்படியான கப்பிங் சிகிச்சை நிபுணர் தான். அவரிடம் 'கப்பிங் தெரபி' பற்றிக் கேட்டோம்.

"தமிழகத்தில் இந்த சிகிச்சை முறை பழங்காலம் தொட்டே இருக்கிறது.  'ரத்தம் குத்தி எடுத்தல்' என்று என்று சொல்வார்கள். எகிப்தில்தான் இந்த கப்பிங் சிகிச்சை முறை பிறந்தது. அதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் இன்றளவும் அங்கே  இருக்கின்றன. அதுபோல, கிரேக்கத்தின் தாய் மருத்துவமாக 'கப்பிங் சிகிச்சை'யே இருக்கிறது. கிரேக்க நாட்டின் மருத்துவத்தின் தந்தை(Father of medicine)  என்று அழைக்கப்படும் 'ஹிப்போகிராட்ஸ்' (Hippocrates) கூட அடிப்படையில்  கப்பிங் சிகிச்சை நிபுணர் தான். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அரபி மொழியில் இந்தச் சிகிச்சை முறைக்கு 'ஹிஜாமா' என்று பெயர். 'ஹிஜாம்'  என்ற சொல்லுக்கு  'உறிஞ்சுதல்' என்று பொருள். 

உலகம் முழுவதும் நிறைய  பிரபலங்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.  ஹாலிவுட் நடிகை கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow), அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், 'துப்பாக்கி' திரைப்பட வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் போன்றவர்கள் ள் இந்தச் சிகிச்சை எடுத்துள்ளனர்.   

மைக்கேல் பெல்ப்ஸ்

கப்பிங் சிகிச்சை முறையின் வகைகள் :

பேம்பூ கப்பிங் (Bamboo cupping)

ஐஸ் கப்பிங் (Ice cupping)

பயர் கப்பிங் (Fire cupping)

ஆயில் கப்பிங் (Oil cupping)

சிலிக்கான் கப்பிங் (Silicon cupping)

மேக்னட் கப்பிங் (Magnet cupping)

டிரை கப்பிங் (Dry cupping)

வெட் கப்பிங்(Wet cupping)

சிகிச்சை

இந்த சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படும்?

நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம் ((Blood), சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இது உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது. இதை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப் பகுதி ஆகிய இடங்களில் இந்த 'கப்பிங் தெரபி' செய்யப்படும். தெரபி செய்யப்படும் இடத்தில் ஒரு கப்பை வைக்க வேண்டும்.  ஏர் பிரசர் மூலமாக கப்பில் உள்ள காற்று வெளியேற்றப்படும். காற்று வெளியேறும் போது கப் தோலை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். கப்பின் உள்ளே காற்று இல்லாத காரணத்தால் சருமத்தில் சிகப்பு மார்க் விழும். சிறிதுநேரம் கழித்து, கப் அகற்றப்படும்.  இப்போது, மார்க் விழுந்த இடத்தில் ஊசியைகொண்டு துளையிட வேண்டும் (Air line cracking) . மீண்டும் ஏர்பிரசர் மூலமாக அதே இடத்தில் கப்பை பொறுத்தி கீறிய துளைகளின் வழியாக நச்சுக்கள் ரத்தத்தின் மூலமாக வெளியேற்றப்படும். முழுவதுமாக வெளியேறிய பின்பு கப் அகற்றப்படும்.

தலையில் கப்பிங் சிகிச்சை

இந்தச் சிகிச்சையை ஏன் தலையில் செய்கிறார்கள்?

மன அழுத்தம், தூக்கமின்மை, ஏதாவது ஒரே விஷயத்தை நினைத்துப் புலம்பிக் கொண்டிருத்தல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை தலையில் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சிகிச்சையின் பலன்? 

கை, கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம், வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, முதுகு வலி மற்றும் மூட்டு வலி, கீழ்வாதம், மாதவிடாய் பிரச்னைகள், கால் நரம்பு வலி, தன்னிச்சையாக சிறுநீர் கழிதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை முறையால் தீர்வு கிடைக்கும்.

கப்பிங் தளும்புகள்

 

நோய் வந்த பின்புதான் இந்தச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கிடையாது. நோய்கள் வருமுன்னே கூட இந்தச் சிகிச்சை மேற்கொண்டு தற்காத்துக் கொள்ளலாம். நம் வீட்டை எப்படி அடிக்கடி சுத்தம் செய்து கொள்வோமோ அது போன்று குறைந்தது ஒரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது அனைவரும் இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது " என்கிறார் ஹலினா ரஜிமா.

http://www.vikatan.com/news/health/98818-cupping-therapy-side-effects-benefits-and-types.html

  • தொடங்கியவர்

வைட்டமின் பி3 உட்கொண்டால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு வாய்ப்புகள் குறையும் - ஆய்வு

 

வைட்டமின் பி3 உட்கொள்வதால் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் என்று எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் வயறுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

காரணியையும், தடுக்கும் வழிகளையும் கண்டுபிடித்துள்ளதால் இதை இரட்டைச் சாதனை என்று சிட்னியின் விக்டர் சாங் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் ஆண்டுக்கு 7.9 மில்லியன் குழந்தைகள் குறைபாடுகளோடு பிறப்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என்று ஆய்வுக் குழு நம்புகிறது.

ஆனால் இக்கண்டுபிடிப்புகளை கருவுற்ற பெண்களுக்கான பரிந்துரையாக மாற்ற முடியாது என்று ஒரு வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை கருச்சிதைவுக்கு உள்ளான, அல்லது இதயம், சிறுநீரகம், முதுகெலும்பு, மேல் அன்னம் ஆகியவற்றில் குறைபாடுகளோடு குழந்தைகளைப் பெற்றெடுத்த நான்கு குடும்பங்களின் டி.என்.ஏ.க்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இரண்டு மரபணுக்களில் ஏற்பட்ட உருமாற்றங்களால் குழந்தைகளிடம் நிக்கோடினாமைட் அடினைன் டைநியூக்ளியோடைட் (NAD- நேட்) எனப்படும் இன்றியமையாத மூலக்கூறு போதிய அளவில் இல்லாமல் இருப்பதை இந்த ஆய்வு கண்டுபிடித்தது.

உறுப்புகள் இயல்பாக வளர்ச்சி அடையவும், செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்யவும் இந்த மூலக்கூறு மிகவும் அவசியம்.

இதே உருமாற்றங்களை ஆய்வுக்கூட எலிகளில் உருவாக்கினார் முன்னணி ஆய்வாளர் பேரா.சாலி டன்வுட்டி. அப்போது, கருத்தரித்த தாய் எலிகளுக்கு வைட்டமின் பி3 உள்ளடங்கிய நியாசின் மருந்தை செலுத்தியபோது இந்த உருமாற்றங்கள் சரியாவதை அவர் கண்டார்.

மருத்துவ பராமரிப்பில் குழுந்தைபடத்தின் காப்புரிமைORLANDO SIERRA/AFP/GETTY IMAGES

உடலில் 'நேட்' அளவுகளை அதிகரிக்கவும் கருச்சிதைவு, பிறப்புக் குறைபாடு ஆகியவற்றை முற்றாகத் தடுக்கவும் முடியும் என்று கூறிய அவர், குறைபாட்டுக்கான காரணியையும் அதைத் தடுக்கும் முறைகளையும் ஒரே ஆய்வில் கண்டறிவது அரிதானது என்றார்.

இந்தக் கண்டுபிடிப்பு உற்சாகம் தருவதாக இருந்தபோதும், இந்தக் கண்டுபிடிப்பை கருவுற்ற, வைட்டமின் பி3 குறைபாடுள்ள தாய்மார்களுக்கான பரிந்துரையாக மாற்றுவது இயலாது என்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாய்-கரு மருத்துவத் துறையின் வல்லுநர் கேட்டி மோரிஸ்.

கருவுற்ற தாய்மார்களுக்குப் பரிந்துரைக்கப்படும் ஊட்டச்சத்து அளவைப்போல பத்து மடங்கு அதிகமான டோஸ் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

பல சிக்கலான காரணங்களால் கர்ப்பகாலக் கோளாறுகள் ஏற்படுவதால் அதிக அளவில் வைட்டமின் உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஓர் சாரமுள்ள ஆய்வு என்று குறிப்பிட்ட பிரிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீன் கோல்டிங், நான்கு குடும்பங்களின் மரபணுக்களைக் கொண்டும் எலிகளிடமும் நடத்தப்பட்ட இந்த ஆய்வை மிகை மதிப்பீடு செய்யக்கூடாது என்று எச்சரித்தார்.

தற்போதைக்கு, கருவுற்றத் தாய்மார்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான 18 மிலி கிராம் நியாசினை உள்ளடக்கிய கர்ப்ப கால பல்லூட்டங்களை (மல்டி விட்டமின்) உட்கொள்ளலாம் என்று பேராசிரியர் டன்வூடி தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்துகளை எல்லோரது உடலும் ஒன்றுபோல ஈர்த்துக்கொள்வதில்லை என்றும், உயர-எடைக் கணக்கீடும், நீரிழிவு நோயும் பெண்களின் உடல் நேட் மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் விதத்தில் தாக்கம் செலுத்துவதாக அவர் கூறினார்.

போதிய அளவில் நேட் மூலக்கூறுகளை உற்பத்தி செய்துகொள்ளாத பெண்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அடுத்த கட்ட ஆய்வின் இலக்கு இதைக் கண்டுபிடிப்பதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.com/tamil/science-40905529

  • தொடங்கியவர்

இறுக்கமான ஆடை அணிவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா?

 

 

இறுக்கமாக அணியும் ஆடைகளால் மார்பகத்தின் இயல்பு தன்மை பாதிக்கப்பட சாத்தியமுண்டா? இது தான் தற்போது தகவல்தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளம்பெண்களின் விவாதப்பொருளாக இருக்கிறது. 

இதற்கு ஒரு மருத்துவராக பதிலளிக்கவேண்டும் என்றால், இறுக்கமான ஆடைகளை அணிவதால் மார்பகத்தின் இயல்பு தன்மை ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. இறுக்கமாக ஆடை அணிவதால் அவர்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். மார்பகத்தின் மீது இறுக்கமாக அணியும் ஆடையின் அழுத்தங்கள் கோடுகளாக பதியும். மேலைத்தேயப் பெண்களுக்கு இதுபோன்ற கோடுகள் விழாது. ஆனால் எம்முடைய பெண்களுக்கு தோலின் நிறம் சற்று கருமையாக இருப்பதால், இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கு அப்பகுதியில் மேலும் கருமையடையும். இதனை தவிர்க்கவேண்டும் எனில் தங்களின் மார்பக அளவை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற வகையிலான உள்ளாடைகளை அணியவேண்டும். இது ஒன்று தான் இதற்கான நிவாரணம் என்று கருதுகிறேன்.

அதே சமயத்தில் ஒரு புற மார்பகம் பெரிதாகவும், மறு புற மார்பகம் சிறியதாகவும் இருப்பது தான் ஆரோக்கியமான மார்பகம் என்ற கருத்தும் பெண்களின் மத்தியில் உலா வருகிறது. ஆனால் எல்லோருக்கும் இரண்டு மார்பகங்களும் சமமாக இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. சரியான அளவுள்ள வளையல்களோ அல்லது மோதிரமோ இரண்டு கைகளிலும் ஒரே மாதிரியாக செல்லாததை பார்த்திருப்பீர்கள். எல்லோருக்கும் ஒரே அளவான மார்பகங்கள் இருப்பதில்லை. இரண்டிற்கும் இடையே சற்று வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதே தருணத்தில் உடைகளை அணிந்தவுடன் மார்பகத்தின் தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசமிருப்பதாக உணர்ந்தால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். 

வைத்தியர் . செ. ராதாகிருஷ்ணா

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23077

  • தொடங்கியவர்

இதயம் காக்க இரண்டு முறை!

 

 
shutterstock236562559

ற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் மட்டுமே புத்துணர்வாக இருப்பதில்லை. நலமான பற்கள், நலமான இதயத்துக்கும் உதவுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல் ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

“பல் ஈறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் ரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த ரத்த உறைவு, இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்” என்கிறார் டெல்லியில் உள்ள பி.எல்.கே. பல்நோக்கு மருத்துவமனையின் இதய நலத் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ் சந்திரா.

 

வாயால் வால்வில் தொற்று

இதய வால்வுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும் ‘எண்டோகார்டிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட நீலம் என்கிற 18 வயதுப் பெண்ணுக்குச் சமீபத்தில் இவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு வாயில் உள்ள பாக்டீரியாவால் இதய வால்வில் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதய வால்வுகளில் ஏற்படும் தொற்றுகள் பொதுவாக பாக்டீரியாவால் ஏற்பட்டாலும், மிக அரிதாக பூஞ்சைகளாலும் உருவாவதற்கான சாத்தியமும் உண்டு. பல் துலக்காமல் போனால், வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை இதய வால்வுகளுக்குச் சென்று, தொற்றுகளை ஏற்படுத்தும்.

 

ஊறு செய்யும் ஈறு

புகையிலைப் பயன்பாடு, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, நீரிழிவு போன்ற காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுவதுபோலவே ஈறு நோய்களாலும் இதயம் பாதிக்கப்படலாம். ரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்களுக்கு, முறையாகப் பல் துலக்காமையே காரணம்.

“முறையாகப் பற்களை சுத்தம் செய்யாமல் இருப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று பல் ஈறுகளின் வீக்கத்தில் உள்ள கிருமிகளால் பல் தாடை எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. இன்னொன்று, ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவை விழுங்குவதால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது” என்கிறார் குருகிராமில் உள்ள பாரஸ் மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் மருத்துவர் தபன் கோஷ்.

அடுத்த முறை, பல் துலக்க வேண்டுமா என்று சலிப்பு ஏற்படும்போது, உங்கள் இதயத்தையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

http://tamil.thehindu.com/general/health/article19475845.ece

  • தொடங்கியவர்

போலியோவிற்கு எமனாக மாறும் தாவரங்கள்

 

 

உலகை சவாலுக்குட்படுத்தியுள்ள நோய்களுள் போலியோ  முக்கிய பங்கை வகித்து வருகின்ற நிலையில், தாவரங்களை போலியோ வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றும் ஆய்வில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

நோய்க்கெதிரான தடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளில் மிக முக்கியமானதொரு வெற்றியாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

இத்தகைய செயன்முறையால் மிக குறைந்த செலவில் விரைவாகவும் எளிதாகவும் போலியோ நோய்க்கெதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கலாம் என நோர்போல்கிலுள்ள ஜான் இன்ஸ் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தாவரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்நோய் தடுப்பு மருந்தானது, போலியோவை ஒழிப்பதோடு மட்டுமல்லாது உலக நாடுகள் எதிர் நோக்குகின்ற மற்றுமொறு சவாலான ஜிகா வைரஸ் தொற்று அல்லது ஈபோலா போன்ற நோய் தொற்றுகளை அழிக்கவும் பயன்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தாவரங்களை கொண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இத் தடுப்பு மருந்தானது வைரஸ் போன்ற துகள்கள் இதனுடைய வெளிப்புறத்தோற்றம் போலியோ வைரஸைப் போன்றே காணப்படுகிறது. ஆனால் இதனுடைய உட்புறம் வெறுமையாகவுள்ளது. 

_97342937__97337560_polio.jpg

 

 

http://www.virakesari.lk/article/23256

  • தொடங்கியவர்

நீரிழிவு நோயாளிகளுகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

முதலாம் வகை நீரிழிவு நோயை தடுக்கும் வகையில் மனிதர்களின் நோய் எதிர்ப்பு முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய சோதனை முயற்சியின் முடிவுகள் நம்பிக்கையளித்தன.

பிரிட்டனில் இருபத்தி ஏழு பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீரிழிவு நோயை மேலும் விரிவடையாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சிகிச்சை உதவியுள்ளது.

பொதுவாக குழந்தை பருவத்தில் காணப்படும் இந்த வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஊசி போட்டுக்கொள்ளும் தேவை இனி இல்லாமல் போகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

BBC

  • தொடங்கியவர்

கருப்பை நீர்க்கட்டியை குணப்படுத்தும் சிகிச்சை

 

 

இன்றைய திகதியில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பொலிஸிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் எனப்படும் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

news_image_health_198.jpg

இதற்கான அறிகுறிகள் திருமணத்திற்கு முன்னரே பெண்களிடத்தில் தோன்றும். அதாவது பூப்பெய்தல் முதல் அல்லது 15 வயதிலிருந்து மாதவிடாய் நிற்கும் காலக்கட்டம் வரையிலான பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படும். முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தபோக்கு, முகத்தில் முடிகள் தோன்றுவது, அடிவயிறு மற்றும் பிறப்புறுப்பில் தொடர்ந்து வலி மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்களால் இவை உருவாகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதற்கான சிகிச்சையை திருமணத்திற்கு முன்னரே எடுக்கத் தொடங்கினால் திருமணத்திற்கு பின்னர் மகப்பேற்றின் போது தடையில்லாமல் இருக்கும். ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு இதனை கண்டறிந்தால், இதன் நிலையைத் தெரிந்துகொண்டு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிகிச்சை ஆகியவற்றின் மூலம் குணமடைந்து தாய்மையடையலாம்.

உணவுக்கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை கொழுப்புசத்து அதிகமுள்ள உணவையும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தயாரான உணவையும் முற்றாகத்தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக உளுந்து, எள், வெண் பூசணிக்காய் விதை, விதையுள்ள பப்பாளி பழம், அன்னாசி பழம்,மாதுளம் பழம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் உடல் எடையைக் கண்காணித்து சரியான எடையை பராமரிக்கவேண்டும். இதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை பின்பற்றினால் இந்த கருப்பை நீர்க்கட்டிகள் குணமடைந்து இயற்கையான முறையிலேயே கருத்தரித்து தாய்மைபேறடையலாம்.

வைத்தியர். கீதா ஹரிப்ரியா

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

 

 

http://www.virakesari.lk/article/23362

  • தொடங்கியவர்

தீக்காய தழும்புகளை குணமாக்கும் சிகிச்சை

எம்முடைய மாணவ மாணவியர்களில் பலர் கல்லூரிகளில் அறிவியல் பிரிவில் படிக்கும் போது வேதியல் பாடதிட்டத்திற்கான பரிசோதனைக்காக ஆய்வுக்கூடங்களுக்கு செல்வதுண்டு. அங்கு எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்படுவதுண்டு. அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளித்து அவர்களை காப்பாற்றினாலும், இந்த விபத்தால் ஏற்பட்ட தழும்புகள் எளிதில் மறைவதில்லை.

health_news_image_88.jpg

‘ஹைபர் ட்ராபிக் ’ எனப்படும் இத்தகைய தழும்புகள் 6 மாதத்தில் பரவுவது நின்றுவிடும். ஆனால் ‘கீலாய்ட் ’ எனப்படும் தழும்புகள் 6 மாதத்திற்கு பின்னரும் மறையாது வளர்ந்துகொண்டேச் செல்லும். இந்த கீலாய்ட் தழும்புகள் தான் பாதிக்கப்பட்ட பகுதியைக் கடந்தும் சாதாரண பகுதிகளிலுள்ள திசுக்களையும் தாக்குகிறது.

திசுக்கள் இறுக்கமடைவதால் அவை இயல்பாக செயல்படமுடிவதில்லை. அத்துடன் அதனருகே இருக்கும் நரம்புகளும் அதன் இயல்பான செயல்பாட்டில் தடையேற்படுகின்றன. இதனால்  வலி தொடர்கிறது. இதற்காக தற்போது HBOT  என்ற சத்திர சிகிச்சையற்ற சிகிச்சையும், ‘ஸ்கார் விகார் ’என்ற சத்திர சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. இதன் மூலம் தழும்புகளை முழுமையாக அகற்றிவிடலாம். அவ்விடத்தின் நிறத்தை சருமத்தின் இயல்பான நிறத்திற்கு மாற்றியமைத்துவிடலாம். தழும்புகளின் பாதிப்புகளை மென்மையாக்கிவிடலாம்.

வைத்தியர். ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.,

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23398

  • தொடங்கியவர்

குதி கால் வலிக்குரிய சிகிச்சை

இன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் பெண்களாகயிருந்தாலும் சரி அல்லது பெசன் ஷோக்களில் பங்குபற்றும் யுவதிகளாகயிருந்தாலும் சரி ஹைஹீல்ஸ் எனப்படும் குதி கால் உயர காலணியை விரும்பி அணிகிறார்கள். இவர்கள் நாளடைவில் குதி கால் வலிக்கும் ஆளாகிறார்கள்.

news_image_health_21_8_17.jpg

அதிகநேரம் நின்றுக்கொண்டே பணியாற்றுவது,கரடுமுரடான பாதைகளில் நடப்பது, குளிரில் அல்லது தண்ணீரில் நடப்பது, அதிக எடையை தூக்குவது, முறையான பயிற்சியில்லாமல் திடீரென்று அதிகளவில் உடற்பயிற்சி செய்வது, வாதப்பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை வகைப்படுத்தமால் சாப்பிடுவது, பாரம்பரிய குறைபாடு போன்ற பல காரணங்களால் குதிகால் வலி ஏற்படுகிறது. இந்த வலி முப்பதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரையுள்ளவர்களில் பெண்களையே அதிகம் தாக்குகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒரு சிலர் காலையில் எழுந்ததும் கால்களை தரையில் வைக்க முடியாத அளவிற்கு வலியால் துடிப்பார்கள். 3 மணித்தியாலம் அல்லது 4 மணித்தியாலம் சென்ற பிறகு வலி மறைந்து, கால்கள் இயல்பாகிவிடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியான மருத்துவர்களை அதிலும் குறிப்பாக எலும்பு மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

அவர்கள் முறைப்படி சில பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பர். பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் இதற்கு சரியான நிவாரணத்தை அளித்து வருகிறது. வலி குறையவில்லை என்றால் பாதிப்பின் தன்மையை மீண்டும் ஒரு முறை சோதித்து ஒலி அலை சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் மேற்கொள்வார்கள். இவ்விரண்டு சிகிச்சைகளிலும் முழுமையான பலன் பெறமுடியதாவர்களுக்கு மட்டுமே சத்திர சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இதனை தடுக்கவேண்டும் என்றால், முறையான திட்டமிட்ட உடற்பயிற்சி செய்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். காலணியில்லாமல் நடக்கக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனைப் பெற்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத அளவிற்குரிய காலணிகள் ஓர்டர் செய்து அணியலாம். குறிப்பாக புகைபிடிக்ககூடாது. அதை அலட்சியப்படுத்தி புகைப்பிடித்தால் இரத்த குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு இரத்தவோட்டம் தடைபடும். அதனால் குதிகாலுக்கு இரத்த ஓட்டம் குறைந்து வலி உருவாகும்.

வைத்தியர். ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23434

  • தொடங்கியவர்

Temporomandibular Joint Disorder பாதிப்பிற்கான சிகிச்சை

 

 

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் பலரும் கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் பணியாற்றுகிறார்கள். அதனால் இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஒரு சிலருக்கு தாடைப்பகுதிகளில் திடீரென்று வலி உருவாகும். ஒரு சிலருக்கு தாடைப் பகுதியில் ஏற்பட்ட வலி கன்னம், காது, கழுத்து வரை கூட பரவும். இவ்வகையான வலிக்கு Temporomandibular Joint Disorder என குறிப்பிடப்படுகிறது.

health_news_image_228.jpg

இந்த வலி 30 முதல் 40 வயதிற்குற்பட்ட ஆண் பெண் என இருபாலாருக்கும் பத்தில் ஐந்து பேருக்கு ஏற்படுகிறது என்கிறது ஆய்வு. மன அழுத்தம் காரணமாக பலரும் தங்களின் தாடைப்பகுதியில் அதிகளவு அழுத்தம் கொடுத்து துடைப்பதாலும், பற்களை நறநறவென கடித்துக் கொள்வதாலும் அப்பகுதியில் மென்மையாக உள்ள சாக்கெட் ஜோயிண்ட் பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் தாடைப்பகுதியில் உள்ள தசைகள் இறுக்கமடைகின்றன. இதனால் தான் அங்கு வலி உருவாகிறது. ஒரு சிலருக்கு இதன் காரணமாக தலைவலி, சோர்வு, அடிக்கடி கொட்டாவி விடுவது போன்றவைகள் ஏற்படும்.

மன அழுத்தத்தை குறைப்பதற்கான பயிற்சியை மேற்கொள்வது தான் இதற்கான நிவாரணமாக பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல் தாடைப் பகுதிக்கான செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளவேண்டும். வாயில் சூயிங்கம் போட்டு மென்றுகொண்டேயிருக்கக்கூடாது. இதனை அலட்சியப்படுத்தினால் சளித் தொல்லை, ஈறு கோளாறுகள், பல் வலி, ஒர்த்தரைடீஸ் போன்ற பாதிப்புகள் உருவாகும். இதன் போது வலி ஏற்பட்ட இடங்களில் சூடாகவோ அல்லது குளிர்ந்த நீரிலோ ஒத்தடம் கொடுப்பதும் நிவாரணமளிக்கும். அத்துடன் கடினமான உணவுகளை தவிர்த்து மென்மையான மற்றும் திரவ நிலையிலான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். போஷர் தெரபியை பயன்படுத்தியும் சிகிச்சைப் பெறலாம். மனஅழுத்தத்தை குறைக்கும் சிகிச்சையை தொடர்ந்து பெற்று வந்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

வைத்தியர். ஹரி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23488

  • தொடங்கியவர்

வயதாகாமல் தடுக்குமா இளைஞர்களின் ரத்தம்? சர்ச்சையை கிளப்பும் புதிய சிகிச்சை முறை

சாகாவரம் அளிக்குமா இளைஞர்களின் இரத்தம்?படத்தின் காப்புரிமைHBO

வயதாவதை தவிர்க்க, இளைஞர்களின் ரத்தத்தை வயதானவர்களின் உடலில் செலுத்தும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் சோதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று, வயதான நோயாளிகள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரிடமும் எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா (மனித இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவம்) செலுத்தப்பட்டது.

வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களின் சராசரி வயது 60 ஆண்டுகள்.

`இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளன ` என ஸ்டாம்போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும்,யு.எஸ் மருத்துவமனையின் நிறுவனருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

`தோற்றம் அல்லது நீரிழிவு நோய் அல்லது இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இது உதவும். ஏனெனில் இவைதான் வயதாவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானவை. இந்த புதிய வகை சிகிச்சை சாகாவரத்தை அளிக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அடிப்படையில் இது அதனைப் போன்ற ஒன்று` என அவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பும் புதிய சிகிச்சை முறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த புதிய மருத்துவ முறையானது ஸ்டாம்போர்டு பல்கலைகழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்விலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, வயதான எலி ஒன்றுக்கு இளைய வயதுடைய எலியின் ரத்தம் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் வயதான எலியின் உள்ளுறுப்புகள், தசைகள் மற்றும், ஸ்டெம் செல்கள் ஆகியவை புத்துணர்ச்சியடைந்ததாக தெரிய வந்தது.

மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், இளைஞர்களின் பிளாஸ்மா வயதானவர்களின் உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும் இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

`மருத்துவ ரீதியாக அந்த சிகிச்சை பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.` என 2014-ஆம் ஆண்டு எலிகளுக்கு பாராபயோசிஸ் ஆய்வு நடத்திய ஸ்டாம்போர்டு நரம்பியல் துறை வல்லுநரான டோனி வைஸ் கோரே தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்த பரிமாற்றத்தால் படை, கல்லீரல் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அளவிலான தொற்றுகள் ஏற்படலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிகிச்சை முறை பல மோசடிகளுக்கும் வித்திடலாம் என மற்றவர்கள் கூறுகின்றனர்.

`இளைஞர்களின் ரத்தம் இளமையை அளிக்கும் என மக்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது மனித உடலில் செயல்படுமா என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. எலிகள் இளைமையாக தோற்றமளிக்க காரணமாக உள்ள அதன் உடற்கூறு அமைப்பை பற்றி அறிந்து கொள்ள நாம் தயாராக இருப்பதில்லை` என எம்.ஐ.டி ரெக்னாலஜி ரிவ்யூஸ் என்ற இணையதளத்தில் வைஸ் கோரே தெரிவித்துள்ளார்.

இரத்த பிளாஸ்மா தானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும் இளைஞர்களிடமிருந்து இரத்தத்தை பெற இவர்கள் வைத்திருக்கும் நெறிமுறைகள் இன்னும் மர்மமாகவே உள்ளது. மருத்துவ தேவைக்காக தானமாக அளிக்கப்படும் தங்களது இரத்தம், விலையுயர்ந்த, சோதனை மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுவது குறித்து இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவின் இரத்த பிளாஸ்மா தானம் குறித்த இணையதளங்கள், ஊக்கத்தொகையாக 20 முதல் 50 அமெரிக்க டாலர்களை அளிக்கின்றன . மேலும் இவை நோயாளிகள் குறித்த தகவலை வெளியிட்டு, பிளாஸ்மா தானத்தை முன்னிலைப்படுத்துகின்றன.

தங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க அடிக்கடி பிளாஸ்மா தானம் செய்யும் அமெரிக்காவின் ஏழை மக்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியாத நிலையில், மிகப்பெரிய செல்வந்தர்கள் வயது மூப்படைவதை தடுக்கும் ஆராய்ச்சிகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள கர்மாசின், தனது ஆராய்ச்சி அனைத்து நெறிமுறை ஆய்வுகளிலும் வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ சோதனையின் செலவு மற்றும் செயல்முறை குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அவர், கட்டணம் செலுத்தும் பங்கேற்பாளருக்கு, போலியான சிகிச்சை அளிப்பது தவறானது என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நோயாளிகள் அனைவரும் தனது சிகிச்சையின் பலனை உடனடியாக அனுபவித்ததாக வாதாடும் அவர், ஒரு முறை சிகிச்சை பெற்றதில், நல்ல மாற்றத்தை உணர்ந்த பலரை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சை முறை வெளியிலிருந்து உள்ளே செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றது என அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/science-41025609

  • தொடங்கியவர்

பைப்ரொய்ட் கட்டிகளை கண்டறியும் பரிசோதனை

news_image_health_17_8_17.jpg

இன்றைய திகதியில் திருமணமான பெண்களில் 15 சதவீதத்தினருக்கு மேல் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் 10 சதவீதத்தினருக்கு மேல் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கான முறையான தாம்பத்யம் எதுவென்பது குறித்த முறையான விழிப்புணர்வை பெறாதவர்களாகவேயிருக்கிறார்கள். இவர்களுக்கு தம்பதியர்களுடன் முதல்கட்ட ஆலோசனை கொடுத்தால் போதும். இதையடுத்து பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவது பைப்ரொய்ட் கட்டிகள் எனப்படும் நார்த்திசுக் கட்டிகளால் தான்.

இந்த கட்டிகள் கர்ப்பப் பையின் உட்புறப் பகுதி, வெளிப்புறப் பகுதி மற்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி என 3 இடங்களில் ஏற்படுகிறது. இவற்றில் கருப்பையின் உட்சுவர் பகுதியில் உருவாகும் கட்டிகள் தான் குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாகிறது. இந்த கட்டியின் அளவு, எண்ணிக்கை ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும்.

எண்டோமெட்ரியம் எனப்படும கருப்பையின் உட்சுவர் பகுதியில் இவர் தோன்றுவதால் கருசிதைவு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த கட்டிகள் கருக்குழாயினை அழுத்துவதால் மலட்டுத்தன்மையை கூட ஏற்படுத்திவிடுகிறது.

பைப்ரொய்ட் கட்டிகள் தோன்றுவதற்கு ஹோர்மோன்களின் சுரப்பில் ஏற்படும் சமச்சீரின்மை, குறைந்த வயதில் பூப்பெய்தல், மரபணு குறைபாடுகள், விபத்து மற்றும் எதிர்பாராத தருணங்களில் கர்ப்பப்பை காயமடைதல், கருத்தடை மாத்திரைகளை அதிகளவில் உபயோகித்தல், மது அருந்துதல் என பல காரணங்களை கூறலாம்.

இதனை ஹிஸ்ட்ராஸ்கோப்பி மற்றும் லாப்ராஸ்கோப்பி மூலம் கண்டறிந்து மருந்துகளாலும், மாத்திரைகளாலும் அல்லது சத்திர சிகிச்சைகளாலும் முழுமையான நிவாரணமளிக்க இயலும்.

வைத்தியர். கீதா ஹரிப்ரியா

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலக

http://www.virakesari.lk/article/23300

  • தொடங்கியவர்

குடல் புண்களை குணப்படுத்தும் நனோ ரோபோக்கள் (Video)

 

 

குடல் புண்களை குணப்படுத்தும் நனோ ரோபோக்கள் (Video)
 

குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த, மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அல்சர் என்று அழைக்கப்படும் குடல்புண், மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

கலிபோர்னியா மற்றும் சான்டிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குடல் புண்களை குணப்படுத்தக்கூடிய சிறிய ரக ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த ரோபோக்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை விடவும் அரை மடங்கு பருமன் உடையவை.

இந்த ரோபோக்கள் மூலம் தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு மருந்தினை செலுத்தினால் குடற்புண் தாக்கம் குறையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
சோதனை முயற்சியாக எலிகளில் இந்த ரோபோக்களை பயன்படுத்தியுள்ளனர்.

 

 

 

http://newsfirst.lk/tamil/2017/08/குடல்-புண்களை-குணப்படுத்/

  • தொடங்கியவர்

சிறுநீரக கல் உபாதையை தடுப்பது எப்படி?

இன்றைய திகதியில் சிறுநீரகத்தில் கல் இருப்பதாகக் கூறி சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. சமீபத்திய ஆய்வின் படி உலகளவில் 13 சதவீத ஆண்களும், 7 சதவீத பெண்களும் சிறுநீரகக் கல் பாதிப்பிலிருந்து உரிய சிகிச்சைகளைப் பெறாமல் தண்ணீரை சரியான முறையில் அருந்துவதாலும், உணவு கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றுவதாலும் குணமடைகிறார்கள். அதேபோல் 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை சிறுநீரகத்தில் முதல் கல் உருவானதிலிருந்து அடுத்த 5ஆண்டுகளுக்குள் அதன் பாதிப்பினை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உரிய நேரத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தண்ணீர் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை உறுதியாக பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் சிறுநீரகக்கல்லின் பாதிப்பு குறைந்து நாட்பட்ட சிறுநீரக சிக்கல் ஏற்படாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.

news_image_health_238.jpg

எம்மில் பலரும் பொதுவாக சிறுநீரகத்தில் கல் என்றால் அது கால்சியம் கல் என்று தான் கருதுகின்றனர். ஆனால் கால்சியம் கற்கள்,  யூரிக் அமில கற்கள், ஸ்ட்ரூவைட் கற்கள் எனப்படும் கற்கண்டுகள் மற்றும் சீஸ்டீன் கற்கள் என நான்கு வகையான கற்கள் உள்ளன. இதில் கல்சியல் ஓக்ஸிலெட் கற்கள் இருந்தால் மட்டுமே நாட்பட்ட சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. ஏனைய கற்கள் அதன் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை கொடுத்து குணமடையச் செய்யலாம்.

தண்ணீர் சீரான இடைவேளையில் அருந்துவதன் மூலமே உடலில் தங்கியிருக்கும் யூரிக் அமிலங்கள் கற்களாகாமல் கரைய வைக்கின்றன. கல்சியம் ஓக்ஸலேட் சத்துகள் அதிகமுள்ள கீரை, சொக்லேட், கொட்டைகள், ஸ்ட்ராபெர்ரி, தேநீர் மற்றும் கோதுமை தவிடு ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் படி தான் சிறுநீரகக் கல்லிற்கான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் சாப்பிடவேண்டும். மாமிச உணவுகளையும் தவிர்த்துவிடவேண்டும். உடல் எடையையும் பராமரிக்கவேண்டும்.

வைத்தியர். சங்கர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23659

  • தொடங்கியவர்

மருத்துவ சிகிச்சையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை எப்போது? A-Z தகவல்கள்

 

செயற்கை ஆக்சிஜன் உதவி:

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சில பத்தாண்டுகள் கழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை, நாம் முதுகில் சுமக்க வேண்டிய நிலைமை வரலாம் என்பது பொதுக் கருத்து. வேற்றுக் கிரகங்களில் உயிர் வாழ ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் அவசியம் என்பதும் அனைவருக்கும் தெரியும். ’பிராணவாயு (ஆக்சிஜன்) இன்றி மனிதர்களால் உயிர் வாழ முடியாது…’ ஆரம்பப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் முக்கியமான மருத்துவ செய்தி. மரங்கள் நமக்கு செய்யும் பல நன்மைகளில் பிராணவாயுவை அள்ளிக்கொடுப்பது முக்கியமானது. ஆக்சிஜன் இன்றி ஏதுமில்லை என்பது நியதி!

நுரையீரல்

ஆக்சிஜன் உபகரணங்கள்:

தன்னிச்சையாக நடைபெறும் சுவாச நிகழ்வுகளின் மூலம் ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று இயக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையாக கிடைக்கும் ஆக்ஸிஜனை சில நேரங்களில் நுரையீரல் திசுக்களால் முழுமையாக உட்கிரகிக்க முடியாத சூழ்நிலைகளில், ஆக்சிஜன் உட்செலுத்தும் உபகரணங்களின் உதவி தேவைப்படுகிறது. ‘மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் உயிரிழப்பு’ என மனதை உருக்கும் செய்திகளும் அவ்வப்போது வருவதை பார்த்திருக்கலாம்.   

அவ்வளவு முக்கியமானதா ஆக்சிஜன்? நிச்சயமாக. பிராணவாயு இல்லாமல் நம்முடைய உடல் இயங்காது. ஆக்சிஜன் சப்போர்ட் எப்போதெல்லாம் தேவைப்படுகிறது? பிராணவாயுவை இயற்கையாக நுரையீரல் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதற்கு காரணங்கள் என்ன? 

நுரையீரல்கள்:

சுவாசிக்கும் காற்று வாயிலாக பிராணவாயு (O2) நுரையீரலுக்குள் சென்று, பின் குருதி சுற்றோட்டத்தில் கலக்கிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் துணையோடு உடலின் அனைத்து திசுக்களுக்கும், செல்கள்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு, நமது உடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பிராணவாயு மற்றும் கரியமில வாயு பரிமாற்றத்திற்கு நுரையீரலின் பங்கு முக்கியமானது. மிகப்பெரிய வேலையை செய்யும் நுரையீரலை பேணிக்காப்பது மிகவும் அவசியம். நுரையீரல்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டால், ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் சப்போர்ட் இன்றி இருக்கவே முடியாது. நுரையீரலை பாதிப்படையச் செய்யும் காரணங்கள் பல.

ஆக்சிஜன்  மாசுபடும் - புகையும் நுரையீரலும்

புகையும் நுரையீரலும்:

நுரையீரல் பாதிப்பிற்கு புகைப்பிடித்தல் மிக முக்கிய காரணமாகிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பதால் நுரையீரல் திசுக்கள் நிச்சயம் பாதிக்கப்படும். புகைப்பிடிப்பவர்களுக்கு (Active smokers) மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் (Passive smokers) நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகனப் புகையிலிருந்து வெளியாகும் நச்சுக்கூறுகள் கொண்ட வேதியல் பொருட்களும், தொழிற்சாலைகள் வரம்பின்றி கக்கும் விஷப்புகையும், காற்றின் தூய்மையை வெகுவாக அழித்துவிட்டன. நுரையீரலை செயல்படாமல் முடக்குவதில், இந்த நூற்றாண்டில் அதிகரித்திருக்கும் காற்று மாசும் முக்கிய காரணம். 

பாடத்திட்ட மாற்றம்:

‘நமது வாயு மண்டலத்தில் உள்ள வாயுக்களின் பங்களிப்பை பற்றி கூறுங்கள்?’ என்ற கேள்விக்கு, நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு என நீங்கள் விடையளித்தால், பதில் தவறாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காற்று மாசு அதிகரித்துக்கொண்டே செல்வதால், மேற்சொன்ன வாயுக்களோடு, கார்பன் மோனாக்சைடு, மீதேன், கந்தகம், கார்பன் நுண் துகள்கள், ஃபார்மல்டிஹைடு போன்ற நச்சு வாயுக்களையும் சேர்த்து சொன்னால் தான் பதில் சரியானதாக இருக்கும். அடுத்த தலைமுறைப் பாடத் திட்டத்தில், வாயுமண்டலத்தின் நச்சு வாயுக்கள் பற்றி கூடுதலாக படிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். அவ்வளவு மாசுக்களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான நகரங்களில், ‘மாஸ்க்’ இல்லாமல் நடமாடவே முடிவதில்லை.

செயற்கை சுவாசம்

செயற்கை சுவாசம்:

மருத்துவ ரீதியில் குழாய்கள், மாஸ்க் மற்றும் சில உபகரணங்கள் மூலமாக பிராணவாயு உட்செலுத்தப்படும். அவசரகால சிகிச்சையில் தற்காலிகமாகவும், நாட்பட்ட நோய் நிலைகளில் நீண்ட நேரத்திற்கும் பிராணவாயு செயற்கையாக கொடுக்கப்படும். முதல் உதவி சிகிச்சையில் ஆக்சிஜன் மாஸ்க்குகளின் பங்கு மிகவும் அவசியமானது. அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி காரணமாக சுவாசிக்க முடியாத நிலைகளிலும் ஆக்சிஜனின் ஆதரவு தேவைப்படுகிறது. சில வகையான தலைவலிகளைக் குறைப்பதற்கும் ஆக்சிஜன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக நாட்பட்ட நுரையீரல் நோய்த் தொகுதிகளுக்கு ஆக்சிஜன் உதவி கட்டாயம் அவசியம். 
நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள், திசுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிராணவாயுவை உட்செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

நிமோனியா நோயில் காற்றுப்பைகள் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனை குருதிச் சுற்றோட்டத்தில் கலக்க செய்ய முடியாத போதும், விபத்துக்களில் சுவாசப்பாதைகள் பாதிக்கப்படும் போதும் செயற்கை சுவாசம் தேவை. Cystic fibrosis, Chronic bronchitis, Emphysema ஆகிய நுரையீரல் சார்ந்த நோய்நிலைகளிலும் அவசியம். அறுவை சிகிச்சைகளின் போதும் தேவைப்படும். இதய செயலிழப்பு ஏற்பட்ட சூழ்நிலையில், ஆக்சிஜன் செறிந்த குருதியை இதயத் தசைகளால் வெளித்தள்ள முடியாத போது, ஆக்சிஜனின் ஆதரவு தேவை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் உயிர்வாழ வைத்ததில் செயற்கை சுவாசத்தின் பங்கு அளப்பரியது. குறிகுணங்களை வைத்தும், சில பரிசோதனை முடிவுகளை கருத்தில் கொண்டும் ஆக்சிஜன் தேவை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய உபகரணங்களை மருத்துவர் முடிவு செய்வார்.

பிராணாயாமம்:

நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க, அதற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்குவது அவசியம். நச்சு மிகுந்த இப்போதைய சூழலில் நுரையீரல்களை பாதுகாக்க, சித்தர்கள் வழிவகுத்த ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சியை செய்வதே சிறந்ததாக இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்வதால், கூடுதல் பிராணவாயு செல்களுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நுரையீரலின் செயல்பாட்டையும் பிராணாயாமம் அதிகரிக்கும். 

பிராணாயாமம்

முன்னோர்களின் ஆக்சிஜன் சப்போர்ட்:

தலைவலிகளுக்கு கூட ஆக்ஸிஜன் சப்போர்ட் கொடுக்கப்படும் இன்றைய நிலையில், தொடர்ந்து பிராணாயாமம் செய்து வந்தால், தலைவலிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பிராணாயாமம் செய்ய தூய்மையான இடத்தை தேர்ந்தெடுப்பதும் அவசியம். புகைப்படிப்பவர்களுக்கு அருகில் அமர்ந்து பிராணாயாமம் செய்வது விபரீதம். உபகரணங்கள் இல்லா ’ஆக்சிஜன் சப்போர்ட்’ தான் நமது முன்னோர்கள் சுட்டிக்காட்டிய ‘பிராணாயாமம்’ என்று தாராளமாக கூறலாம். 

வரும்முன் காப்பதற்கு மூச்சுப்பயிற்சி சிறந்தது. நுரையீரல்களை பாதிக்கும் காரணிகளை விலக்க வேண்டும். சூற்றுச்சூழலை தூய்மையாக்க இயற்கையின் வழி பயணிப்பதும் அவசியம். உயர்ந்த இடங்களுக்கு செல்லும் போது குறையும் ஆக்சிஜன், நாம் வாழும் சமவெளிப் பகுதிகளில் கிடைக்காமல் போய்விடக்கூடிய நிலைமை வருங்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. சிகெரட் புகை… வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை… இப்படி நுரையீரல்களை பாதிக்கப்படும் காரணிகளை வழிமுறைப்படுத்துவது அவசியம். நோய்கள் பாதிக்காத வண்ணம் சுவாச உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியம். அனைத்தையும் மீறி நோய்நிலைகளால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது, ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கும் செயற்கை சுவாசம் பெரும் உதவியாக இருக்கும்,

 

மனிதநேயத்தோடு சப்ளை நிறுத்தப்படாமல் இருந்தால்!... 

http://www.vikatan.com/news/health/100410-a-to-z-information-about-oxygen-cylinders-needs.html

  • தொடங்கியவர்

ஒவ்வாமை தடுப்பு மருந்து `மாரடைப்பை தடுக்குமா?`

மாரடைப்புபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

ஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும் என 10 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனகினுமப் (canakinumab) எனும் ஒரு மருந்தை சோதித்த போது, சிகிச்சையில் இது பெரும்பங்காற்றியுள்ளது என்றும் ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட அந்த மருந்தின் மூலம் நோயாளிகளுக்கு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதை 15% குறைக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால், அந்த மருந்தின் பலன், பக்கவிளைவுகள் மற்றும் அதற்கான கட்டணம் குறித்தும் சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த மருந்தை எடுத்துக் கொண்ட நோயாளிகள் கடுமையான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

இருப்பினும், பிரித்தானிய இதய அறக்கட்டளை (British Heart Foundation -BHF) "மிகவும் எதிர்பார்த்திருந்த மற்றும் நீண்ட காலமாக நடத்தப்பட்ட சோதனை" உயிர்களை காப்பாற்றும் என்று தெரிவித்துள்ளது.

கீல்வாதம் மருந்து

மாரடைப்பு நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க, கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ரத்த அடர்த்திக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.

இந்த ஆய்வில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் நோயாளிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த மருந்து வழங்கப்பட்டது.

40 நாடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும், ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் 4 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.

இந்த மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு மட்டும் தான் மாரட்டைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்தது என ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பின் முன் இந்த ஆய்வின் முடிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தம் திடீரென தடையாகும் போது உண்டாகும் மாரடைப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிரமான நோயாகும்.

மாரடைப்புபடத்தின் காப்புரிமைSPL Image caption40 நாடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது, ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் 4 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கும், மாரடைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் மத்தியில் இது நிரூபிக்கப்படவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரும், பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையின் மருத்துவருமான பால் ரிட்கெர், இந்த ஆய்வு குறித்து கூறுகையில், "நீண்ட பயணத்தின் மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இது நீண்ட கால தாக்கங்களை கொண்டுள்ளது" என்றும் "என்னுடைய வாழ்நாளில் இதய நோய்களை தடுக்கும் மூன்று பெரிய சகாப்தங்களை பார்த்து விட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

"முதலில், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். இரண்டாவதாக கொழுப்பை குறைக்கும் மிக முக்கிய மருந்துகளை பார்த்தோம். தற்போது, மூன்றாவது சகாப்தத்தின் கதவை திறந்துள்ளோம். இது மிகவும் அற்புதமானது" என்றும் மருத்துவர் பால் ரிட்கெர் கூறியுள்ளார்.

`பாதுகாப்பு சமரசம்`

ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருந்துவர் ராபர்ட் ஹாரிங்டன், நியூ இங்கிலாந்து ஜோர்னல் ஆஃப் மெடிசின் எனும் பத்திரிக்கையில் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

ஒவ்வாமை தடுப்பு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பலன் மற்றும் பாதுகாப்பு சமரசங்களை உணராத வரை இதன் விளைவுகளை நியாயப்படுத்த முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை உபயோகிக்காத நபர்களுக்கு சிகிச்சை மூலம் மட்டும் தான் தொடர் மாரடைப்பிற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பதே மற்றவர்களின் கருத்தாக இருக்கிறது.

 

http://www.bbc.com/tamil/science-41076251

  • தொடங்கியவர்

இளைஞர்களை பாதிக்கும் முதுகெலும்பு பிரச்சனைகள்

 

 

இன்றைய திகதியில் ஏராளமான இளைய தலைமுறையினர் தங்களது கைகளில் மொபைல்களையும், லேப்டொப்களையும், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ மடிக்கணனியுடனும் தான் இருக்கிறார்கள். அத்துடன் அவர் தங்களின் விருப்பப்படியே அமர்ந்திருக்கிறார்கள் அல்லது நிற்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே முதுகெலும்பில் வலி ஏற்படுகிறது. ஆனால் இதனை அலட்சியப்படுத்தியோ அல்லது புறகணித்தோ விடுகிறார்கள். ஒரு சிலர் தான் இதற்கு ஓரளவிற்கு நிவாரணத்தை தேடுகிறார்கள்.

news_image_health_26_8_17.jpg

அண்மைய ஆய்வுகளின் படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் ஒவ்வொரு ஐம்பதாவது தெற்காசியர்களுக்கு முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது என்று கண்டறியப்படுகிறது. அத்துடன் இதற்கு காரணம் என்று 3 விடயங்களை முன்வைக்கிறார்கள். அலுவலகமோ அல்லது வீடோ அவர்கள் ஆரோக்கியமாக அமர்ந்து பணியாற்றாமல் தங்களின் விருப்பம் போல் ஒழுங்கற்ற முறையில் முதுகெலும்பிற்கு அதிகளவிலான தொல்லை உண்டாகும் வகையிலேயே அமர்கிறார்கள். அத்துடன் விரைவில் மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள். தங்களின் வாழ்க்கை முறையையும், பணியாற்றும் முறையையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக இவர்களுக்கு 60 வயதிற்கு மேல் வரக்கூடிய முதுகெலும்பு வலி தொடர்பான பிரச்சினைகள் முப்பதுகளிலேயே தொடங்கிவிடுகிறது. நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்களும், ஒரேயிடத்தில் நின்றுக் கொண்டே பணியாற்றுபவர்களுக்கும் இப்பிரச்சினை வருவதற்கு அதிகளவு வாய்ப்புண்டு. இதன்போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள தசைகள் முதுகெலும்புகளில் உள்ள தண்டுவடப்பகுதியில் தேவைக்கும் அதிகமான அழுத்தத்தை கடத்துகின்றன. இதனால் தண்டுவடப்பகுதியில் உள்ள டிஸ்க்குகள் எனப்படும் வட்டுகள் பாதிப்பிற்குள்ளாகி, வலியை ஏற்படுத்துகின்றன. ஒரு சிலருக்கு தண்டுவடப்பகுதியில் உள்ள டிஸ்க்குகள் நகர்ந்து பிரச்சினையை அதிகப்படுத்தவும் செய்கின்றன. இதனால் கால் சோர்வு, கழுத்து வலி ஆகியவையும் உடன் வருகின்றன.

இதனை பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மூலம் குணப்படுத்த இயலும். அத்துடன் முதுகெலும்பு வலி வராதிருக்க, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சியை செய்யவேண்டும். சரியான நேரத்தில் சத்தான உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். பணியாற்றும் போது தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலம் வரை ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றாமல் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை எழுத்து கைகால்களையும் தங்களது பணியாற்றும் இடத்தையும் மாற்றியமைத்துக் கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் பணியாற்றத் தொடங்கலாம். அமரும் போதும், உறங்கும் போதும், நிற்கும் போதும் மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையை உறுதியாக கடைபிடித்தால் முதுகெலும்பு வலியிலிருந்து குணமடையலாம்.

வைத்தியர்.மா. கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23693

  • தொடங்கியவர்

வளர்சிதைமாற்ற நோயா ( Metabolic Syndrome)ல் பாதிக்கப்படும் ஆண்கள்

 

 

இன்றைய திகதியில் அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டதால், அவர்களின் இயல்பான வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு அது நோயாக உருவெடுத்து, இதய நோய், பக்கவாதம் ஆகிய ஆபத்துகளை உருவாக்குகிறது.

news_image_health_28_8_17.jpg

Metabolic Syndrome எனப்படும் இத்தகைய பாதிப்பிற்கு பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன் காரணத்தினால் டைப் 2 சர்க்கரைநோய், உயர் குருதி அழுத்த நோய், உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள்.

ஒவ்வொரு ஆணின் இடுப்பளவும் 90 சென்டி மீற்றருக்கு மிகாமலும், பெண்களின் இடுப்பளவு 80 சென்டி மீற்றருக்கு மிகாமலும் இருக்கவேண்டும். இவற்றுடன் இரத்த சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் அடிவயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துவிடும். மேலும் உடல் எடை அதிகரித்து, உடற் பருமன் பிரச்சனை தோன்றி, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த வியாதி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கும். அத்துடன் இதய  பாதிப்பு, பக்கவாதம், இன்சுலீன் சுரப்பியில் சமசீரற்றத்தன்மை, கல்லீரல் பாதிப்பு, கருப்பை பாதிப்பு என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.

இதனை முற்றாகத்தடுக்கவேண்டும் என்றால் தினமும் 30 நிமிடத்திலிருந்து 60 நிமிடம் வரை உடற்பயிற்சியை செய்யவேண்டும். சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். சிகரெட் பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

வைத்தியர் சுப்ரமணியம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23764

  • தொடங்கியவர்

பெண் நோயியல் பிரச்­சி­னை­களும் மன நிலை மாற்­றங்­களும்

 

பெண் நோயியல் என்று கூறும்­போது பெண்கள் பரு­வ­ம­டைதல், மாத­விடாய் போக்கு ஒழுங்­காக நடை­பெ­றுதல்,  மாத­விடாய் காலங்­களில் அதி­கூ­டிய வயிற்­று­வலி ஏற்­படல்,  கர்ப்­பப்பை கட்­டிகள், சூல­கக்­கட்­டிகள், குழந்தைப் பாக்­கியம், கர்ப்ப காலம், பிர­ச­வத்­திற்கு பின்­ன­ரான காலம், மெனோபோஸ் பருவம் என பல வகை­களைக் கொண்­டுள்­ளது. இவற்றில் மாற்­றங்­களும் குறை­களும் ஏற்­படும் போது வைத்­திய ஆலோ­ச­னைகள், பரி­சோ­த­னைகள் என நாடு­கின்றோம். இதன்­போது தெரியும் மாற்­றங்­களை அறிந்து பரி­காரம் தேடு­கின்றோம். ஆனால் பேண் நோயி­யலின் ஒவ்­வொரு படி­கட்­டு­க­ளிலும் பெண்ணின் மன­நிலை மாற்­றங்கள் உள­வியல் தாக்­கங்­களில் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. இதனை கருத்தில் கொண்டு நோய்க்­கான கார­ணங்­களை அறிந்து அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கு­வதும் நோய்க்­கான உரிய தீர்வைக் கொடுப்­பதும் அவ­சி­ய­மாக உள்­ளது.

மனச்­சோர்வு மன அழுத்தம் என்று எந்­தப்­பெண்ணும் தமது வாயால் தமது நிலை­மையை சொல்­வ­தில்லை. சொல்­லவும் தோன்­றாது. கூட இருப்­ப­வர்­களும் இவை ஒரு மனச்­சோர்வின் மன அழுத்­தத்தின் வெளிப்­பாடு என புரிந்து கொண்டு அதற்கு பரி­கா­ரத்தை தேட­முன்­வ­ரு­வ­தில்லை. ஆனால் இவற்­றுக்கு மாறாக இவை­யாவும் பெண்­களின் தனிப்­பட்ட குணத்தின் தாக்கம் என நினைத்து குடும்­பங்­களில் சண்­டை­களும் சச்­ச­ர­வு­களும் அதி­க­ரிக்­கின்­றன. இதனால் இவ்­வா­றான நிலை­மைகள் ஏன் தோன்­று­கி­றது. இதற்கு என்ன பரி­காரம் என நாம் ஆராய்ந்து பார்ப்­பதன் மூலம் வாழ்வில் அமை­தி­யையும் மகிழ்ச்­சி­யையும் நிலை­நாட்ட முடியும்.

பெண்­களின் வாழ்க்கை படி­கட்­டு­களை பார்த்தால் மனச் சோர்வும் மன அழுத்­தமும் எங்­கி­ருந்து ஆரம்­பிக்கின்றதென அறி­யலாம். பெண்­களில் கல்வி பயிலும் காலத்தில் சரி­யான முறையில் கற்று கல்­வியில் சித்­தி­ய­டைய முடி­யா­விட்டால் சோர்­வ­டை­வார்கள். தாம் நினைத்த துறையில் கல்வி கற்க முடி­ய­வில்லை என்றால் சோர்வு மற்றும் சிறு­வ­யதில் குடும்­பத்­த­வர்­களால் அல்­லது சூழ­வுள்­ள­வர்­களால் அல்­லது கல்வி பயிலும் இடத்தில் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு (Abuse) ஆளா­கி­யி­ருந்தால் வெளியில் சொல்ல முடி­யாது. மனச் சோர்­விலும் மன அழுத்­தத்­திலும் சிக்கி விடு­கின்­றனர். மேலும் காதல் வாழ்க்­கையில் ஏற்­படும் சிக்­கல்கள், காதல் தோல்­விகள் மற்றும் விரும்­பி­ய­வாறு வாழ்க்­கையை ஆரம்­பிக்க முடி­ய­வில்லை என நினைத்தே மனச்­சோர்­வுகள் ஏற்­படும். இதை­விட உரிய வயதில் திரு­ம­ணங்கள் நடக்க வில்லை என சில­ருக்கு ஒரு தாக்கம் இருந்த வண்ணம் இருக்கும்.

அடுத்­த­தாக இவை­யெல்லாம் தாண்டி திரு­ம­ண­மான பெண்­களில் கணவர் எதிர்­பார்த்­த­வாறு நடந்­து­கொள்­ளா­விட்டால் ஏமாற்றம். அதா­வது அவ­ரது பழக்­க­வ­ழக்­கங்கள், குடித்தல், புகைத்தல் என ஒரு­புறம் இருக்க சரி­யான முறையில் தாம்­பத்­திய உறவில் நாட்டம் காட்டி திருப்­தி­க­ர­மான தாம்­பத்­திய உறவில் ஈடு­ப­டாத கண­வர்­மாரை  நினைத்து யாரி­டமும் கூற­மு­டி­யாத தர்­ம­சங்­க­ட­மான நிலையில் மாட்­டிக்­கொண்ட பெண்கள் எத்­தனைப் பேர். வெளியில் ஒரு பேருக்­காக கணவன் மனைவி என்று வாழ்ந்­தாலும் பெண்­ணுக்குள் மறைந்­தி­ருக்கும் சோகம் இறு­தியில் மன­நோ­யா­கவே வெளிப்­ப­டு­கின்­றது. இத­னையும் விட தமது கணவர் தம்­மையும் விட ஆசை­யான வேறு ஒரு பெண்­ணு­டனும் தவ­றான தொடர்பு வைத்து உள்ளார் என்ற நிலை­மையை அறிந்த பெண்­களின் மனத்­தாக்­கமும் தீவி­ர­மா­கத்தான் உள்­ளது.

திரு­மண பந்­தத்தில் குழந்தை பாக்­கியம் தாம­த­ம­டை­வது அடுத்த வேத­னை­யாக உள்­ளது. பல வரு­டங்கள் ஆகி­றன. பல சிகிச்­சைகள் எடுக்­கின்றோம். பலன் எதுவும் இல்­லையே. பல­ரது பல பல கேள்­வி­க­ளுக்கு பதில் எம்­மிடம் இல்­லையே என பதுங்கி வாழ வேண்­டிய சூழலில் ஆரம்­பிக்­கின்­றது மனச்­சோர்வு. வாழ்க்­கையில் சொந்­தங்கள் சந்­தோ­ஷத்­தையும் மகிழ்ச்­சி­யையும் தோற்­று­விக்கும் எனத் தான் நம்­பினோம். ஆனால் மாமியின் தொல்லை, மச்­சாளின் தொல்லை, மாமனார் தொல்லை என முகங்­கொ­டுக்கும் பெண்­களும் மன அழுத்­தத்தால்  அவ­திப்­ப­டு­கின்­றனர்.

அடுத்த கட்­ட­மாக வாழ்க்­கையில் பொரு­ளா­தார சிக்கல் வேலை­வாய்ப்பு இல்­லாத பிரச்­சினை அதி­க­ரித்து வரும் விலை­வா­சி­க­ளுக்கு முகங் கொடுக்க முடி­யாத சூழ்­நிலை என்ற சிக்­கல்­களும் மனதில் பதி­கின்­றன. சிலரில் ஆசை  ஆசை­யாக கர்ப்பம் தரித்து அந்த கரு கலைந்து இயற்­கை­யான கரு கலையும் நிலை (Miscarriage) ஏற்­பட்டால் ஏமாற்­றத்தில் சோர்ந்து விழு­கின்­றனர் பெண்கள். அத்­துடன் சில­ரது வாழ்க்­கையில் பத்து மாதம் வயிற்றில் சுமந்து குழந்­தையை பிர­ச­வித்து குழந்­தையில் பாரிய நோய் ஏதும் கண்­ட­றி­யப்­பட்­டாலோ அல்­லது குறை­பா­டாக இருந்­தாலோ, ஏன் சரி­யாக தாய்ப்பால் ஊட்டி குழந்­தையை பரா­ம­ரிக்க முடி­யாமல் போனாலோ அல்­லது குடும்ப உறுப்­பி­னர்­க­ளது உத­விகள் இல்­லா­மலும் கண­வ­ரது சரி­யான ஒத்­து­ழைப்பும் பங்­க­ளிப்பும் இல்­லா­மலும் திண­ரு­கின்ற போது மன­அ­ழுத்தம் ஆரம்­பிக்­கின்­றது.

மேலும் சில­ச­மயம் சரி­யான கால இடை­வெளி இல்­லாமல் அடுத்­த­டுத்து குழந்­தைகள் பிறந்து அவர்­களைச் சரி­யான  முறையில் பரா­ம­ரிக்க முடி­யாலும் சரி­யான முறையில் கல்­வியில் வழி­ந­டத்த முடி­யா­மலும் சரி­யான ஒழுக்­கத்­தையும் பழக்­கங்­க­ளையும் கொண்­டு­வர முடி­யா­மலும் அவ­திப்­ப­டு­கின்ற போது ஏற்­படும் மனத்­தாக்கம் மனச்­சோர்­வாக வெளிப்­ப­டு­கின்­றது.

அடுத்­த­தாக கணவர் வெளி­நாட்டில் பணி புரி­வதால் ஏற்­படும் பிரி­வுத்­து­யரும் வருத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. கணவர் உள்­நாட்டில் பணி புரிந்­தாலும் தம்­மிடம் போதிய நேரம் செல­வ­ழிப்­ப­தில்லை என ஏங்கித் தவிக்கும் பெண்­களும் மனத்­தாக்­க­லுக்கு ஆளா­கின்­றனர். இவை­யெல்லாம் தாண்டி வளர்ந்து வரும் பிள்­ளை­களின் கல்வி நிலை, எதிர்­கா­ல­நிலை,  திரு­மணம் செய்து வைக்க வேண்­டிய நிலை அதில் ஏற்­படும் சிக்­கல்­நிலை என்று மனத்­தாக்கம் தொடர்ந்த வண்ணம் உள்­ளது. இறு­தியில் மெனோபோஸ் பருவம் அடைந்த போது ஏற்­படும் ஹோர்மோன் தாக்கம் மன­அ­ழுத்­தத்தை  பன்­ம­டங்­காக்கும். 

எனவே பெண்கள் அவர்­க­ளது இயற்­கை­யான உடற்­தொழில் மாற்­றத்­தாலும் ஹோர்மோன் மாற்­றத்­தாலும் எளிதில் மனத்  தாக்­கங்­க­ளுக்கு ஆளாகக் கூடி­ய­வர்கள். அவர்­க­ளது வாழ்க்­கை­யிலும் பல படி­கட்­டுகள் சவால் நிறைந்­த­தாகத் தான் உள்­ளன. சோகங்­களை வெளியில் சொல்ல முடி­யாது வேத­னைப்­பட்டு இறு­தியில் மனச்­சோர்­விலும் மன அழுத்­தத்­திலும் தொடர்ந்து வாழ்ந்து வரு­கின்­றனர். இவற்றைப் புரிந்து கொண்டு சரியான வைத்திய அலோசனை பெற்றால் இதில் இருந்து விடுபட முடியும். எனவே இதற்குக் கூட இருப்பவர்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிக அவசியம். வைத்திய நிபுணர்கள் இதற்குரிய மன உளவியல் மருத்துவ நிபுணர்களை சந்திக்குமாறு சிபார்சு செய்தால் அதனை அலட்சியப்படுத்தாது ஒரு புற்றுநோய் என்றால் எவ்வளவு பயப்படுகிறீர்களோ அதுபோல் இவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வைத்திய ஆலோசனைப் படி நடக்க வேண்டும். மருந்துகள் ஒழுங்காக எடுக்க வேண்டும். இதன்மூலம் சமாதானமும் மகிழ்ச்சியும் குடும்பங்களில் நிலவும். 

http://www.virakesari.lk/article/23726

  • தொடங்கியவர்

குறை பிரசவத்தை தடுக்க இயலுமா.?

 

இன்றைய திகதியில் திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுவோர்கள் 15 சதவீதமாக உயர்ந்திருக்கிறார்கள். அத்துடன் கருவுற்றிருக்கும் பெண்கள் குறை பிரசவத்தில் குழந்தைப் பெற்றெடுப்பதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குறைபிரசவத்தை தடுக்க இயலாதா? என அனைவரும் கேட்பர்.

news_image_health_24_8_17.jpg

குறை பிரசவத்தை முழுமையாக தடுக்க இயலும். கருதரிக்கும் காலத்திலிருந்து 40 வார பேறு காலத்திற்கு பிறகு வலியெடுத்து பிரசவம் நிகழும் வரை முறையான மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதனை உறுதியாக பின்பற்றினால் தடுக்கலாம்.

இந்நிலையில் முதல் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தால் அவர்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தையும் குறைபிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமற்ற உணவு முறையாலும், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்காததாலும் வயிற்றில் இருக்கும் பனிக்குடம் உடைந்து குறைபிரசவம் நிகழ்வதற்கு காரணமாகிறது. அதேபோல் கருவுற்றிருக்கும் காலகட்டத்தில் பெண்கள் தங்களின் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தத்தின் அளவு, இதய நோய் தொடர்பான சிகிச்சை, சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். இவற்றில் ஏதேனும் சிறிய அளவில் பாதிப்போ பின்விளைவோ ஏற்பட்டாலும் குறைபிரசவம் நிகழக்கூடும்.

இன்றைய நவநாகரீகப் பெண்கள் திருமணமான பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தையைப் பெற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து கருசிதைவு செய்து கொள்கிறார்கள். தொடர்ந்து 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு செய்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குறை பிரசவம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்களின் பரம்பரை மரபணு குறைபாடுகளால் குறை பிரசவம் ஏற்படலாம். 

கருவுறுதலுக்கு முன்னரும், கருவுற்றிருக்கும் போதும், கருவுற்ற பின்னரும் பெண்கள் புகை, மது மற்றும் போதைப் பொருளை பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். அதேபோல் பேறு காலத்திற்கு முன்னரும், பேறு காலத்தின் போதும், பேறு காலத்திற்கு பின்னரும் முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறவேண்டும்.

வைத்தியர். பத்மா

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23586

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.