Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலம் நல்லது!

Featured Replies

  • தொடங்கியவர்

நீங்கள் குண்டானவரா..? இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

 

 

குண்டாக இருப்பவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இன்றைய நவீன உலகத்தில் மக்கள் பலரும் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். ஆனால் அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் அதிக உடல் எடையுடைய குண்டு மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 35 வயதிலிருந்து 75 வயதுக்குட்பட்ட, 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தினர். அவர்களது உயரம், உடல் எடை குறித்த பி.எம்.ஐ (BMI - Body Mass Index) தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் குண்டாக இருப்பவர்கள் பலர் இளம் வயதிலேயே  நீரிழிவு நோயால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் மனதில் மிகவும் பொறுமைசாளிகள் என்பதால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

 

 

http://www.virakesari.lk/article/28632

  • Replies 475
  • Views 141.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கை, அது மனநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்!

 

 
1cd44009232263feed44b2ef2708aab2

 

பள்ளியில் நாம் படித்த காலத்திலேயே நல்ல பழக்கம் எவை, தீய பழக்கம் எவை என்று ஒரு கேள்வி வரும். அதில் அனைவரும் நல்ல பழக்கத்தில் இரு வேளை பல் தேய்ப்பது, சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவுவது என்று எழுதுவதைப்போல தீய பழக்கத்தில் முதலில் எழுதுவது ‘நகம் கடிப்பது’தான். என்னதான் இது தீய பழக்கம் என்று நமக்குத் தெரிந்தாலும், பல பதட்டமான நேரங்களில் நம்மையே அறியாமல் நகத்தை கடித்துக்கொண்டிருப்போம்.

ஏன் இதைத் தீய பழக்கம் என்கிறார்கள்? ஆரோக்கியத்திற்கு இதனால் என்ன ஆபத்து வரும்? உண்மையில் இது ஒரு மன நோயா? இந்தக் கேள்விகளை எல்லாம் யோசிக்கும்போதே, நகத்தை வாயில் போட்டு மென்றுகொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பிரச்னை சற்று தீவிரம்தான்.

சமீபத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வு முடிவுகளில் இந்தப் பழக்கம் மன நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறி என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, இந்தப் பழக்கம் தேவையற்ற சிந்தனைகள் அல்லது அதீத பயம் உள்ளவர்களிடம் இருப்பதாகவும், இந்த இரண்டு பிரச்னைகள் மன நோய்க்கான ஒரு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

eacc3fa9b9c7e10795daaa5594588507--mental

மன நோய் உள்ளவர்கள் தங்களது முடியைப் பிடித்து தாங்களே இழுப்பது, உடல் எங்கும் நகத்தை வைத்துக் கிள்ளி காயங்களை ஏற்படுத்துவது போன்ற தன்னைத் தானே வருத்தும் செயல்களில் ஈடுபடுவார்கள். அதேபோல், இந்த நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களும் முதலில் நகத்தைக் கடிக்க தொடங்கி நாளடைவில் நகக் கண் எனப்படும் நகத்தைச் சுற்றி இருக்கும் சதையை மெல்லக் கடித்து இறுதியாக ரத்தம் வரும் அளவிற்குக் கடித்து அந்த ரத்தத்தையும் சப்பி விழுங்கிவிடுவார்கள். இதன் அடிப்படையிலேயே மருத்துவர்கள் இதை மன நோய் வருவதற்கான ஒரு அறிகுறி என்று பார்க்கிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு இந்தப் பழக்கம் எப்படி கேடு விளைவிக்கிறது என்றால், கை நகங்களில் இருக்கும் கிருமிகள் நகத்தைக் கடித்து துப்பினால்கூட சரி, அதன் வழியாக நம் வாயினுள் நுழைந்துவிடுகின்றன. இதனால் ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறு, செரிமான பிரச்னை போன்றவை ஏற்படுகின்றன. இதனால் உடலின் எதிர்ப்பு சக்தியும் குறையும் அபாயமும் உள்ளது. 

எப்படித் தடுப்பது?

  1. உங்களுக்குப் பிடிக்காத சுவை, உதாரணத்திற்கு கசப்பு, துவர்ப்பு போன்ற சுவை உள்ள சாறுகளை விரல்களில் பூசி நகம் கடிப்பதைத் தடுக்கலாம்.
  2. நகத்தில் நெயில் பாலிஷ் வையுங்கள்.
  3. நகத்தில் பேண்டெய்ட் போன்றவற்றை ஒட்டி நகத்தைக் கடிக்க முடியாதபடி செய்யுங்கள்.
  4. நகத்தைக் கடிக்கும் அளவிற்குப் பெரிதாக வளரவிடாமல் தொடர்ச்சியாக வெட்டி அழகாக வைத்திருங்கள்.
  5. நகத்தைக் கடிக்கத் தோணும்போது நன்கு கடித்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் எதையாவது சாப்பிடுங்கள்.
  6. லாலி பாப் போன்ற எதையாவது வாயில் வைத்துக்கொண்டே இருங்கள்.
  7. மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸ்மைலி பால், ஃபிட்ஜட் ஸ்பின்னர், ஸ்லைம் போன்றவற்றைக் கையில் வைத்து உங்கள் கைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.

Stress.jpg

எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் என்னால் முடியவில்லை என்று விட்டுவிடாமல், சரியான  வழிமுறைகளின் மூலம் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

http://www.dinamani.com/health/health-news/2017/dec/18/nail-biting-a-symptom-for-mental-disorder-2828648.html

  • தொடங்கியவர்

உடல் எடைக்குறைப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை

இன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் வேகமான வாழ்க்கை நடைமுறையின் காரணமாக தங்களது உணவு பழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இளம் வயதிலேயே பலரும் உடல் எடை அதிகரித்து உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். பாலின வேறுபாடின்றி, வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக உடற்பருமன் பிரச்சனை உருவாகியிருக்கிறது. இதற்கு பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை மூலம் உடல்எடை குறைக்கப்படுகிறது.

Gastric.jpg

பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையில் தற்போது மூன்று வகையினதான சத்திர சிகிச்சைகள் இடம்பெறுகிறது. அதில் Sleeve gastrectomy, Gastric bypass, Single joint gastric bypass என மூன்று வகையினதான சத்திர சிகிச்சை நல்லதொரு பலனை அளித்து வருகிறது.

இதில் Sleeve gastrectomy என்ற சத்திர சிகிச்சை முறையில் இரைப்பையின் அளவு குறைக்கப்பட்டு, அதனூடாக உடல் எடை படிப்படியாக குறைக்கப்படுகிறது. ஏனைய இரண்டு வகையினதான சத்திர சிகிச்சையிலும் சாப்பிடும் உணவு இரைப்பையில் தங்காமல், குடல் பகுதிக்கு செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. இதன் காரணமாக உட்கொள்ளும் உணவின் அளவு கணிசமாக குறைகிறது. அத்துடன் குடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் பணிகளும் வரையறுக்கப்படுகின்றன. இதனால் இரத்த அழுத்தமும், நீரிழிவும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

டொக்டர் பாஸ்கரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28627

  • தொடங்கியவர்

புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்

புதிதாக ஜிம்முக்குப் போகிறவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் செய்யும் தொடக்கநிலையில் செய்யும் தவறுகள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.

 
புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் ஆரம்பத்தில் செய்யும் தவறுகள்
 
சிலர் உடற்பயிற்சிக்குள் நுழையும்போதே ‘தினமும் மூன்று வேளை உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று பெரிய திட்டங்களோடு மிகுந்த ஆர்வமாகச் செயலில் இறங்கி, விரைவில் சோர்ந்துபோய் உடற்பயிற்சியையே கைவிடும் நிலைக்குப் போகிறார்கள். தொடக்கத்தில், இந்த மாதம் இரண்டு கிலோ குறைய வேண்டும். இந்த வாரம் கால் மணி நேரம் நடக்கத் தொடங்க வேண்டும். அடுத்த வாரம் முதல் ஐந்து ஐந்து நிமிடங்களாகக் கூட்ட வேண்டும். என இலக்குகளைச் சிறிதாக்கும்போது அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து முன்னேற ஊக்கமாக இருக்கும்.
 
எந்தத் திட்டமும் இல்லாமல் உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மாதிரி. எனவே, உங்களுக்கான உடற்பயிற்சிகள் எதுவெனத் திட்டமிடுங்கள். இது தேவையற்ற உடல்வலியையும் நேர விரையத்தையும், பண விரையத்தையும் தவிர்க்கும்.
 
உடற்பயிற்சிக்குள் நுழையும் முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். கைகள், கால்கள், கழுத்து, எலும்பு மூட்டுகள், தோள்பட்டை என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தயார்படுத்திய பிறகே, உடற்பயிற்சியில் இறங்க வேண்டும். இது, தசைப்பிடிப்பு, எலும்பு மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து உடலைக் காத்து உடற்பயிற்சி செய்வதற்கான ஆர்வத்தை மேம்படுத்துகிறது.
 
உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடல் சோர்வாகிறது, உடல் வலிக்கிறது, நேர மேலாண்மை பாதிக்கப்படுகிறது எனக் காரணங்களை உருவாக்கி உடற்பயிற்சி செய்வதை நிறுத்தத் தூண்டும். உடற்பயிற்சியைக் கைவிடுபவர்களில் பெரும்பாலானோர் இந்த தொடக்கநிலை தடுமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். எனவே, விழிப்பாய், பிடிவாதமாய் இருங்கள். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள்.

http://www.maalaimalar.com/Health/Fitness/2017/12/29104207/1137278/Exercise-for-Beginners-making-mistakes.vpf

 

 

உலக சுகாதார நிறுவனம் விடுக்கும் எச்சரிக்கை உங்களுக்கானதா?

 

 

அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது நண்பர்களையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் எரிச்சலடைய செய்வதுடன், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம் Gaming Disorder  என்பதை தனது Beta Draft இல் சேர்த்துள்ளது.

online_New_Slide__3_.jpg

தொடர்ந்து விளையாடுவதற்கான உந்துதலை ஒருவர் பெறும்போது, வீடியோ கேம்கள் வெறும் கேம்களாக மட்டுமே அல்லாமல் மனதின் மட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடுவது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடும் இப்பழக்கம் “தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம், கல்வி, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரே கேமை தொடர்ந்து விளையாடுவதோ வீடியோகேம் தொடர்களும்  இதே விளைவை ஏற்படுத்துகிறது” என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

பொதுவாக ஓராண்டிற்கும் மேலாக வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கே இத்தகைய பாதிப்புகள் ஏற்பதுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விளையாடுபவர்கள் பலர் ஓராண்டு காலத்திற்கு முன்பாகவே இத்தகைய பாதிப்பிற்குள்ளாவதும் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சார்பில் 2018ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள சர்வதேச நோய்க்கான வரையறை  பட்டியலில் Gaming Disorder  இடம்பெறுகிறது.

http://www.virakesari.lk/article/28634

  • தொடங்கியவர்

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுகிறீர்களா? ஒரே ஒருமுறை 4 - 7 - 8 மெத்தட் முயற்சித்துப் பாருங்களேன்!

 

 
deep_sleep

 

சிலருக்குப் பகல் முழுவதும் உட்கார நேரமில்லாமல் செய்து கொண்டே இருக்க ஓயாது வேலைகள் இருந்திருந்தாலும் கூட இரவானால் ஆய்ந்து, ஓய்ந்து போய் அக்கடாவெனத் தூங்கவே முடிவதில்லை. நடு இரவைத் தாண்டியும் தூக்கம் வராமல் பாயைப் பிராண்டிக் கொண்டும், கட்டில், மெத்தை எனில் மெத்தையை நொந்து கொண்டும், ஒழுங்காகத் தூங்க முடியாமல் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள்.

sleep1.jpg

இதனால் பிரச்னை அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் தான். இவர்கள் தூக்கமின்றி புரண்டு, புரண்டு படுப்பதால் அருகில் இருப்பவர்களுக்கும் அசெளகர்யமாகி அவர்களது அருமையான தூக்கமும் இவர்களால் கெட்டுக் குட்டிச்சுவராகி விடும். சிலருக்குத் தூக்கம் கெட்டால் அவ்வளவு தான் மகா கோபம் வரும். அவர்கள் இதுநாள் வரை பிறத்தியாருக்குத் தெரிந்து விடக்கூடாது என மறைத்து வைத்திருந்த மகா ருத்ரமூர்த்தி, மகா காளி விஸ்வரூப தரிசனமெல்லாம் அப்போது தான் பிரத்யட்சமாக வெடித்துக் கொண்டு வெளிவரும்.

sleepless_crazy.jpg

அப்புறமென்ன நட்ட நடு ராத்திரியில் தூங்கமுடியாததற்காகவும், தூக்கத்தைக் கெடுத்ததற்காகவும் என ஒருவர் மாற்றி, ஒருவர் வாக்குவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டி மொத்தக் குடும்பத்தினரின் தூக்கத்தையும் கெடுத்து விட்டு குடும்ப குருஷேத்திர யுத்தத்தின் மத்தியில் விடிய, விடிய சம்பூர்ண ராமாயணம் படிக்க வேண்டியது தான்.

சரி, இத்தனை பிரச்னைகளுக்கும் என்ன தான் தீர்வு?

நாளை மற்றொரு நாளே கதையாக, தினமும் இந்தத் தொல்லை தொடர்ந்தால் முதலில் உடல்நலம் கெடுவதோடு, பிறகு குடும்பத்தில் அனைவரது மனநலமும் கெடும். அப்புறம் இரவு நேரம் வந்தாலே, ஏனடா வருகிறது?! என்று குடும்பமே புலம்பி நொந்து கொள்ளத் தோன்றும். 

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் என்னவெல்லாம் செய்யலாம்? 

drink_milk.jpg

சிலர் இரவில் தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பாக ஒரு டம்ளர் பால் அருந்தி விட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள், அருமையாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

leg_warm_water_dip.jpg

சிலரோ, தூங்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான வெந்நீரில் கால்களை 15 நிமிடங்கள் மூழ்க வைத்து துடைத்து விட்டுப் பிறகு தூங்கச் சென்றால் அது நிம்மதியான தூக்கத்துக்கு உத்தரவாதமளிக்கும் என்கிறார்கள்.

eat_less.jpg

சிலரோ இரவில் 8 மணிக்கு முன்னதாக மிகக் குறைவாக உண்டால் நன்றாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

showering_before_sleep.jpg

சிலரோ தூங்கச் செல்லும் முன் 20 நிமிடங்கள் மிதமான நடைபயிற்சியில் ஈடுபட்டு விட்டு, பிறகு வெது வெதுப்பான வெந்நீரில் குளித்து விட்டு தூங்கச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டீர்கள் எனில் நன்றாகத் தூக்கம் வரும் என்கிறார்கள்.

 

அய்யோடா!... அதெல்லாம் செய்து பார்த்தாகி விட்டது. எதுவும் வொர்க் அவுட் ஆகவே இல்லை. இப்போதும் எங்களால் இரவானால் நிம்மதியாக முழு உறக்கம் கொள்ளவே முடிவதில்லை என்று தீனமாக அலறுபவர்களுக்கு தூக்க மாத்திரை ஒன்று தான் கதியா?

sleeping_pills.jpg

அடடா... அது ஆபத்தானது, வேண்டவே வேண்டாம்... தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனையோ, பரிந்துரைகளோ இன்றி அதையெல்லாம் முயற்சித்துப் பார்த்து விடாதீர்கள். அப்புறம் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டு பிறகு தூக்க மாத்திரை இன்றி தூங்குவதே முடியாது என்று ஆகி விடும். இது விபரீதமான முடிவு.

அதற்குப் பதிலாக, தூங்குவதற்கு என படுக்கைக்குச் சென்ற பின், கால், கைகளை நிச்சலனமாக நீட்டி விரித்துப் படுத்துக் கொண்டு கண்களை மிருதுவாக மூடி.. புருவ மத்தியில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு அதையே எண்ணிக் கொண்டு அப்படியே ஆழ்ந்த தூக்கத்தில் அமிழப் பாருங்கள். முதலில் சில நொடிகள் இது கஷ்டமாக இருந்தாலும் நேரமாக, ஆக உங்களையே அறியாமல் நீங்கள் தூங்கி விடக்கூடும். என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இரவில் நீடித்த உறக்கம் பெற இது ஒரு உபாயம்.

இது வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், சில மருத்துவர்கள், ஒன்று முதல் உங்களால் எத்தனை வரை முடியுமோ அத்தனை எண்களை எண்ணிக் கொண்டே உறங்குங்கள் என்கிறார்கள்.

countdown.png

இந்த முறையும் ஓரளவுக்கு தூங்க உதவலாம். ஆனால், நடுவில் தூக்கம் கலைந்து விட்டால் மீண்டும் ஒன்றிலிருந்து தொடங்கி எண்ணிக் கொண்டே தூங்க முயற்சிப்பது மிகுந்த ஆயாசம் தரும் செயல்!

அடச்சே! பிறகு எப்படித்தான் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவதாம் என்று சலித்துக் கொள்கிறீர்களா?

அதற்கும் ஒரு உபாயம் இருக்கத்தான் செய்கிறதாம்...

அதை 4 - 7- 8 மெத்தட் என்கிறார்கள் மருத்துவர்கள்.

4_-7_-_8_method.jpg

மேலே குறிப்பிட்ட அத்தனை முறைகளையும் விட இது எளிமையானது.

ஒன்றுமில்லை, தூங்குவதற்காக படுக்கைக்குச் சென்று விட்டீர்களா? அவ்வளவு தான் யோகாவில் சவாசனம் என்றொரு ஆசன முறை உண்டு. அதற்குப் படுப்பதைப் போல மொத்த உடலையும் படுக்கையில் நேராகக் கிடத்திக் கொண்டு முதலில் நாசியால் ஆழமாகத் தொடர்ந்து 4 வினாடிகளுக்கு மூச்சை உள்ளே இழுக்க மட்டும் செய்யுங்கள். அடுத்த 7 வினாடிகளுக்கு உள்ளிழுத்துக் கொண்ட மூச்சுக் காற்றை வெளியேற்றாமல் அப்படியே நுரையீரலுக்குள் வைத்திருந்து 7 வினாடிகள் முடிந்த கணத்தில் தொடர்ந்து 8 வினாடிகளுக்கு மிக நிதானமாக உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வாய் வழியாக வெளியிடுங்கள். இந்த முறையை ஓரிரு முறை தொடர்ந்து செய்து பழகுங்கள். (வாய் வழியாக மூச்சுக் காற்றை வெளியேற்றுகையில் உங்களது படுக்கையறை தூசற்றுத் தூய்மையாகப் பராமரிக்கப் படுகிறதா? என்பதை சோதித்துக் கொள்வது ஒவ்வொருவரது கடமை, அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த முறை பலனளிக்காது) இந்த முறையில் தூங்க முயற்சி செய்தால் நிச்சயம் அதனால் பலனுண்டு. ஏனெனில், மேலே சொன்ன பிற முயற்சிகளைக் காட்டிலும் இதில் என்ன அனுகூலம் என்றால்? இம்முறையில் மனித நரம்பு மண்டலம் அமைதிப் படுத்தப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

nervous_system.jpg

 

 

அதாவது மனிதனுக்கு தூக்கம் வராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் பிரதானமானது ஸ்ட்ரெஸ் என்று சொல்லக் கூடிய உளவியல் சிக்கல்களே! ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் போது ஒரு மனிதனால் என்ன தான் முயற்சித்தாலும் அந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு உடனடியாகத் தூங்க முடிவதில்லை. பகலில் அல்லது முந்தைய நாட்களில் நடந்த விஷயங்களையே நினைத்துக் கொண்டோ அல்லது மனதில் தேவையற்ற பிரச்னைகளைப் போட்டு குழப்பிக் கொண்டோ இருப்பார்கள். இதற்குக் காரணம் ஸ்ட்ரெஸ்ஸின் போது மனித உடலில் அதிகப்படியாகச் சுரக்கக் கூடிய அட்ரீனலின் ஹார்மோன். நரம்பு மண்டலங்களைத் துரிதப்படுத்தி தேவையற்ற பதட்டமான மனநிலையை உண்டு பண்ணும். இதனால் தான் இரவில் களைப்பான நிலையிலும் கூட தூக்கம் வராமல் அவஸ்தைப்பட நேரிடுகிறது.

adrenaline.png

ஆகவே இந்த விஷயத்தில் முதலில் அமைதிப்படுத்தப் பட வேண்டியது அட்ரீனலின் சுரப்பியைத் தான். அந்த வேலையை இந்த 4 - 7 8 மெத்தட் மிக அருமையாகச் செய்யும் என்கிறார்கள் உளவியல் வல்லுனர்களும், மருத்துவர்களும்.

காசா, பணமா?! மேற்கண்ட அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்து தோல்வி கண்டவர்கள் இதையும் ஒருமுறை முயற்சித்துத் தான் பார்க்கலாமே. நன்றாகத் தூங்க முடிந்தால் பரம நிம்மதி தானே!

முயற்சித்துப் பாருங்கள். தூக்கமாத்திரைகள் எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் இம்மாதிரியான எத்தனை முயற்சிகளை மேற்கொள்வதென்றாலும் அதில் எந்த அபத்தமும் இல்லை.

http://www.dinamani.com/

  • தொடங்கியவர்

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது? #HealthAlert

 
 

ஞ்சி... செரிமானத்துக்கு உதவும் ஒரு மருத்துவ மூலிகை. அதே நேரத்தில் வயிறு சார்ந்த பிரச்னைகளுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படும். என்றாலும், சில நேரங்களில் இதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக, எல்லா மருந்துகளுக்குமே பக்கவிளைவுகள் இருப்பதுபோல, இஞ்சிக்கும் உண்டு. உண்மை... இஞ்சியை ஒருவர் அதிகம் உட்கொண்டால், இஞ்சியின் உறைதல் எதிர்ப்பின் காரணமாக வீக்கம், வயிற்றுப் பிரச்னைகள், இதயப் பகுதியில் எரிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராமுக்குமேல் சேர்க்கக்கூடாது என்றுகூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ``பின்வரும் சில பாதிப்புகள் உள்ளவர்கள், உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது உடல்நலனுக்கு நல்லது’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர், பத்மினி.

இஞ்சி

 

கர்ப்பிணிகள்:

இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல. வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது வழிவகை செய்யும். குறிப்பாக, பிரசவத் தேதி அருகிலிருக்கும் பெண்கள், இதைப் பயன்படுத்தவே கூடாது. காலைக் கடனில் சிக்கல் இருப்பவர்கள் மட்டும், மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.ஊட்டச்சத்து நிபுணர் பத்மினி

ரத்தக் கோளாறு உடையவர்கள்:

இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

கர்பிணிப் பெண்

சிகிச்சை ஏதேனும் எடுப்பவர்கள்:

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா - பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள், இதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். (பொதுவாக இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும், உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்து உட்கொள்பவர்கள் சேர்த்தால், சீரற்ற நிலை ஏற்படும்.) மூலிகை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒருவர் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், இஞ்சியின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும். அதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த நிலை, ரத்தம் உறைவதை முற்றிலுமாகத் தடுத்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.

பித்தப்பைக் கல், குடல் பிரச்னை இருப்பவர்கள்:

பித்த நீர் சுரப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். முழுதாக இஞ்சியை இடிக்காமல்/ நசுக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் அல்சர் இருப்பவர்கள், இஞ்சியைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய்

ஆபரேஷன் செய்யப் போகிறவர்கள்:

ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, ஆபரேஷனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்.

எடை குறைவாக இருப்பவர்கள்:

 

இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் பி.எச் நிலையை அதிகரிக்கும். மேலும், செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும். வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். இது, விரைவாக உணவை செரித்துவிடும். இந்த நிலை தொடர்ந்தால், எடை இன்னமும் குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்றவை ஏற்படும்.

https://www.vikatan.com/news/health/92200-why-should-you-consider-not-eating-ginger-healthalert.html?artfrm=news_most_read

  • தொடங்கியவர்

மூளையில் ஏற்படும் மின் அலை மாற்றங்களாலேயே வலிப்பு நோய் ஏற்படுகின்றது.!

 

 

வலிப்புநோய் பெரும்பாலும் சிறு வயதிலிருந்தே ஏற்படுகிறது. எனினும் எந்த வயதிலும் இந்த நோய் ஏற்படலாம். குழந்தைகளில் காய்ச்சலால் ஏற்படுகின்ற சாதாரண வலிப்பிலிருந்து வலிப்பு நோய் (Epilepsy) மாறுபட்டது. மூளைக்காய்ச்சல், ஏற்பு வலி உள்ளிட்ட சில நோய்களின்போது ஏற்படும் வலிப்பும் வலிப்பு நோயல்ல. அப்படியாயின் வலிப்புநோய் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. காக்கை வலிப்பு என்ற பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்ற வலிப்புநோய் மூளை சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். மூளையிலுள்ள நரம்புக் கலங்களில் ஏற்படுகின்ற மின் அலை மாற்றங்களாலேயே வலிப்பு நோய் ஏற்படுகின்றது.

மூளை நரம்பு செயற்பாடுகள் மற்றும் உணர்வு அனைத்துமே மின் அலைகள் மூலமே நிகழ்கின்றது. இது சீராக இயங்கும்போது ஒருவரது செயற்பாடுகள் யாவும் இயல்பானதாக சீரானதாக இருக்கும். இந்த மின் அலைகளில் மாற்றங்கள் ஏற்படும்போது உடலுறுப்புகளால் இணைந்து செயற்பட முடிவதில்லை. ஒழுங்கற்ற கட்டுப்பாடற்ற மின் அலை மாற்றங்களால் மூளையின் பாகங்கள் அனைத்தும் மாறுபாடாக ஒரே நேரத்தில் இயங்குவதால் கை, கால்கள் வெட்டி இழுத்து வலிப்பு வருகிறது.

வலிப்பு நோயின் அறிகுறிகள்

வலிப்பு நோயில் பல வகையான வெளிப்பாடுகள் இருப்பினும் பரவலாக ஏற்படும் அறிகுறியாக கை, கால், முகம் என்பன வெட்டி இழுத்தல், இறுக்கமடைதல், முழுமையாகவோ பகுதியாகவோ நினைவிழத்தல் ஏற்படும். இது தவிர திடீரென நினைவிழந்து சுய நினைவின்றி தடார் என்று விழுதல், கண் இமைக்காமல் விழித்தல், வாயால் நுரை தள்ளுதல், மலசலம் நினைவின்றி வெளியேறல் என்பன ஏற்படலாம். சிலரில் வலி வரப்போவதற்கான சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. வாய் மெல்லுதல், உமிழ் நீர் துப்புதல், மாறுபட்ட வித்தியாசமான விநோத நடத்தைகள், மயக்கம் வருவது போன்ற நிலை என்பன சிலரில் அவதானிக்கலாம். அடிக்கடி வலி வருபவர்கள் இம்மாற்றங்களை அவதானித்ததும் தமக்கு வலி வரப்போவதை உணர்ந்து கொள்வர். எனினும் தம்மை சுதாகரித்துக்கொள்ளாமல் தடாரென்று விழுவார்கள். ஒரு சிலரில் சில நிமிடங்கள் நடப்பது எதுவும் தெரியாமல் ஒருவிதமான மந்த நிலையில் இருப்பர்.

முதலுதவி

வலிப்பு நோயாளர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் பதற்றப்படாமல் செயற்பட வேண்டும். நோயாளியின் வெட்டி இழுக்கும் கை, கால் என்பவற்றை இறுக்கிப் பிடித்து அமத்தக்கூடாது. நோயாளியின் உறுப்புகள் பாரமான பொருட்களிலோ சுவர்களிலோ அடிபடாமல் பாதுகாப்பாக படுக்கவைக்க வேண்டும். நோயாளியை ஒரு பக்கம் சரித்து படுக்க வைப்பதன் மூலம் உமிழ் நீர், நுரை போன்றவை வெளியேறுவது சுலபமாகும். சுவாசத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை இது தடுக்கும். துணியை மடித்தோ அல்லது மெல்லிய தலையணையையோ தலைக்கு வைக்கலாம்.

பொதுவாக வலிப்பு நிலை சில நிமிடங்களில் தானாக கட்டுப்படும். சில வேளைகளில் நீடிப்பதுண்டு. அவ்வாறு நீண்ட நேரம் தொடர்ந்து வலித்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லலாம். நோயாளர்களின் வலிப்பு நின்ற பின்னரும் அவர்கள் கண் விழித்து இயல்பு நிலைக்கு வர தாமதமாகலாம். பதற்றப்படத் தேவையில்லை. இரும்பைக் கையில் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்பதில் உண்மையில்லை. பற்களுக்கு இடையில் நாக்கு கடிபட்டால் பற்களுக்கிடையில் ஏதாவது பொருட்களை வைக்கலாம். வலிக்கும் அனைவருக்கும் இதை செய்யக்கூடாது. வலிக்கும் நேரத்தில் எந்த மருந்தையும் கொடுக்க வேண்டாம். இதனால் புரையேறி ஆபத்து ஏற்படலாம். வலிப்பு நோயாளருக்கு காற்றோட்டம் அவசியம் என்பதால் நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக்கூடாது. முழு சுயநினைவோடு திரும்பி எழுந்த பின்னரே குடிக்கவோ சாப்பிடவோ கொடுக்கலாம்.

குழந்தைகளில் காயச்சலின் போது வலிப்பு ஏற்படும்போது வாயில் எதையும் கொடுக்கக்கூடாது. ஈரத் துணியால் உடம்பைத் துடைத்து காய்ச்சலைத் தணிக்கலாம். குழந்தைகளில் வலிப்பு நீடித்தால் மலவாசல் ஊடாக மருத்துவர் மருந்துகளை கொடுப்பார். பெரியவர்களில் வலிப்புநோய் நீடிக்கும் போது ஊசி மருந்தை அவசியமெனின் வழங்குவார். குழந்தைகளில் ஏற்படும் வலிப்பு காய்ச்சல் வலிப்பா? அல்லது வலிப்பு நோயா? என்பதை அறிய தலையை, மூளையை ஸ்கான் செய்யலாம். இதன் அடிப்படையில் சிகிச்சையைத் தொடரலாம். ஈ.ஈ.ஜீ. பரிசோதனையும் பாதிப்பை இனங்காண உதவும்.

வலிப்பு நோய்க்கான காரணம்

எதுவித காரணமுமின்றியும் வலிப்புநோய் சிலரில் ஏற்படலாம். பரம்பரை தொடர்பும் நிறுவப்படவில்லை. எனினும் பரம்பரையில் நோயாளிகளை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான வலிப்பு நோய்கள் ஏதாவது காரணமாகவே ஏற்படுகின்றது. பிரசவத்தின்போது சிசுவின் தலை அதிகமாக அமுக்கப்படுதல், பிறந்த பின்னர் ஏற்படுகின்ற மூளைக் காய்ச்சல், தலையடிபடுதல், மூளையில் கட்டி, மூளையில் புற்றுநோய் என்பவை வலிப்பை ஏற்படுத்தும் பிரதான காரணங்களாகும். பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு, விபத்து, சீனி, உப்பு வகைகளின் அளவில் அதிக மாற்றங்கள் என்பவற்றாலும் வலிப்பு ஏற்படலாம்.

வலிப்பு நோயாளரும் திருமணமும்

வலிப்பு நோயாளர்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற மூட நம்பிக்கை பரவலாக உண்டு. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு நோயாளர்களின் பாலுணர்விலோ தாம்பத்திய உறவிலோ குறைபாடு ஏதுமில்லை. இவர்கள் தாராளமாக திருமணம் செய்யலாம். குழந்தை பெறலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்திய கண்காணிப்பில் இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் பாவிக்கக்கூடாது. வலிப்புநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்கள் கூட தாம் கருவுற்றதும் இது பற்றி வைத்தியருடன் கலந்தாலோசிக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாம். இதனால் பாதிப்பில்லை. 

சிகிச்சை

வலிப்பு நோய் முழுமையாக குணமாக்கக்கூடியது. நீண்டநாள் சிகிச்சையும், தவறாத சிகிச்சையும் பலன் தரும். கடைசியாக வலிப்பு ஏற்பட்டு இரண்டு வருடங்கள் வலிப்பு ஏற்படாத பட்சத்தில் மருத்துவர் சில பரிசோதனைகளின் பின்னர் மருந்தை குறைத்து பின்னர் முழுமையாக நிறுத்துவார். வலிப்பு நோய் ஆவிகள், பேய், பிசாசுகளால் ஏற்படுவதாகும் என்ற மூட நம்பிக்கைகள் இன்று வெகுவாக குறைந்துள்ளது. எனினும் இன்றும் கூட சில வலிப்பு நோயாளர்கள் விழிப்புணர்வு போதாமையினால் தற்கொலை செய்கின்றார்கள். வலிப்பு நோய் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் இருந்தால் மந்திரவாதிகள், ஆவி விரட்டுபவர்களிடம் சென்று அநியாயமாக பணத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. விஞ்ஞானபூர்வமாக நோய் பற்றிய விளக்கமும் பரிசோதனைகளும் சிகிச்சையும் இருப்பதால் சிகிச்சையைப் பெற்று பூரண குணமடைய முடியும்.

 

 

நோய்களை தடுக்கக் கூடிய பழங்கள்

 

நாம் உட்கொள்ளும் எந்தவொரு  உணவாக இருந்தாலும் அதில் செறிந்துள்ள  சத்துக்களை அறிந்திருப்பது அவசியமாகும் .  அந்த வகையில்  இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களையும் அதன் குணநலன்களையும் சற்று நோக்குவோம்.

 வாழை, பப்பாளி, கொய்யா, அன்னாசி, மாதுளை போன்ற எளிதாகக் கிடைக்கும் பழங்கள் என்று  கூறலாம். இந்தப் பழங்கள் பலவித நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை, மலச்சிக்கல் தொடங்கி இதயநோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை.

வாழைப்பழம்: இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலன்களை அடையலாம். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட, வாழைப்பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிக்கத் தூண்டும் நிகோட்டினை சிறிது சிறிதாகக் குறைக்க உதவும். இதன் மூலம் புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

பப்பாளிப்பழம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்களில் ஒன்று, பப்பாளி. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரிகிறது. 

பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. பழுக்காத பப்பாளிப்பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.

 

 

பெண்களுக்கு குதி உயர் செருப்பு அழகா? ஆபத்தா?

 

 

ஒவ்வோர் காலகட்டத்திலும் ஹை ஹீல்ஸ் மாற்றங்களும், ஏற்றங்களும் அடைந்து கொண்டே இருந்தன. இன்றைக்கு அது நவீன வடிவத்தை உள்வாங்கி வசீகரமாய் இருக்கிறது. திரைப்படங்களிலும், விளம்பரப் படங்களிலும் வரும் மாடல்களின் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இளம் பெண்களை வசீகரிப்பதில் வியப்பில்லை. 

ஹை ஹீல்ஸ் செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடப்பது இன்றைய இளசுகளின் ஃபேஷன். கால்களை நெடு நெடுவெனக் காட்ட வேண்டும் என விரும்புபவர்களின் சாய்ஸ்களில் முக்கியமானது இது. அதனால் தான் உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களை உயரமாகக் காட்டிக் கொள்ள ஹீல்ஸ் செருப்புகளில் சரணடைகிறார்கள்.  

நிறைய தூரம் நடக்க வேண்டியவர்கள், படிகளில் ஏறி இறங்க வேண்டியவர்களுக்கெல்லாம் ஹை ஹீல்ஸ் காலில் இருக்கும் எமனைப் போல ! கொஞ்சம் சறுக்கினாலும் கால் பணால் ! ஹை ஹீல்ஸ் போட்டு காலைச் சுளுக்கிக் கொண்டவர்களின் லிஸ்ட் சீனச் சுவரை விட நீளமானது !

இதையெல்லாம் விட முக்கியமான சிக்கல் முதுகு வலி. ஹை ஹீல்ஸ் உடலின் சம நிலையை பாதிப்பதால் முதுகெலும்புக்கு அழுத்தம் அதிகமாகிறது. அது ஒரு பேலன்ஸ் இல்லாத நிலையில் இருக்கும். முதுகுக்கு அசௌகரியம் வரும்போது வலி வருவது இயல்பு தானே ! 

குதிகால் செருப்பு போட்டு நடக்கும் போதும் சாதாரணமாக நடப்பதைப் போல முதலில் குதிக் கால், பிறகு முன்கால் என நடக்க வேண்டும் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள். இல்லாவிட்டால் நடப்பது சிரமமாய் இருக்குமாம். எதுவானாலும் வீட்டில் நன்றாக நடக்கப் பழகிவிட்டு விழாவுக்குச் செல்லுங்கள். 

குதி உயர்ந்த செருப்பை தொடர்ந்து அணிந்தால் பாதத்திலுள்ள தசைகள் இறுக்கமாகி அது பின்னர் இலகுவாகாமல் போய்விடும். அதிக எடையுள்ளவர்கள் ஹீல்ஸ் அணிந்தால் சிக்கல்கள் இரண்டு மடங்காகி விடும் என்பது கூடுதல் அதிர்ச்சி.

மருத்துவர்கள் பொதுவாகச் சொல்லும் அறிவுரை ஒன்று தான். குதியுயர் அணிவதை கூடுமானவரை தவிருங்கள். எடுத்த எடுப்பிலேயே ஏணி மாதிரி குதியுயர் செருப்பு  எடுத்து காலில் மாட்டாதீர்கள். சின்ன குதியுயர் போட்டுப் பழகி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்  பெரிய குதியுயர் செருப்பு  போடுவதே நல்லது. அப்போது தான் உங்களால் தடுமாறாமல் நடக்கவும் முடியும், உங்கள் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யும். பெண்கள்  அழகியாய் தெரியவேண்டும் என்பதற்காக அசௌகரியத்தை விலை கொடுத்து வாங்குவது தான் இந்த குதியுயர் செருப்பு  சமாச்சாரம்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

முதுகுத்தண்டை வலுவாக்கும் முதுகுவலி போக்கும் எளிய யோகா பயிற்சிகள்! #YogaForBackPain

 
 

ன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு இருசக்கரவாகன பயன்பாடு அத்தியாவசியமாகிவிட்டது. அடுத்தத் தெருவிலிருக்கும் கடைக்குச் செல்வதற்குக்கூட டூவீலரைப் பயன்படுத்துகிறார்கள். அதன் காரணமாக நடப்பது குறைந்துவிட்டது. நடை குறைந்ததால், உடல் வலுவிழந்து, அடிக்கடி உடலில் வலி வருவது சாதாரணமாகிவிட்டது. இதனால் பலருக்கும் முக்கியமாக ஏற்படுவது முதுகுவலி. எலும்புத் தேய்மானம், தசைப் பிடிப்பு, முதுகுத்தண்டுக்கு நடுவே இடைவெளி குறைந்து முதுகுவலி, நேராக நடக்க முடியாமல் உடலை வளைத்து நடக்கவேண்டிய நிலை எனப் பலருக்கும் முதுகு தொடர்பான பல பிரச்னைகள். 30 வயதிலேயே மிக வயதான தோற்றமும் சிலருக்கு வந்துவிடுகிறது. உட்கார முடியாமல், நீண்ட நேரம் நிற்க முடியாமல், நடக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் சிலர். இந்த முதுகு வலிகளைப் போக்க எளிமையான யோகா பயிற்சிகள் கைகொடுக்கும். முதுகைப் பலப்படுத்தக் கூடிய எளிய பயிற்சிகள் மற்றும் எலும்பு தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான வழிமுறைகள் இங்கே...

முதுகு வலி

 
 

முதுகு மற்றும் கழுத்துவலி இருப்பவர்களுக்கு முதலில் தேவை ஓய்வு. மிக உயரமான தலையணையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடிந்த வரை தரையில் படுத்து ஓய்வெடுப்பது உடலில் உள்ள வலிகளைக் குறைக்கும். பூமியிலிருந்து நம் உடலுக்குத் தேவையான காந்த சக்தி உடலுக்கு கிடைக்கும். காந்த சக்தி, உடலில் உள்ள வலிகளைக் குறைத்து, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். தரையில் அமரும்போது முடிந்த வரை நேராக நிமிர்ந்து உட்காருவது, முதுகுத்தண்டை பலப்படுத்தும். நாற்காலியில் அமரும்போது நன்கு நேராகச் சாய்ந்து உட்காரப் பழக வேண்டும். தலையைக் கீழே தொங்கப்போட்டு, முதுகைக் குறுக்கி உட்காருவது முதுகை பலவீனப்படுத்தும். சாய்வு நாற்காலிகள் மற்றும் சுழலும் நாற்காலிகளில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடப்பது நல்ல ஓய்வாக இருக்கும். வேலைகளுக்கு நடுவே சில நிமிடங்கள் ஓய்வாக நடப்பது, தண்ணீர் பருகுவது உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். `ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் வாழ்நாள் குறைகிறது’ என்கிறது ஓர் ஆராய்ச்சி... கவனம்!

முதுகுத்தண்டை வலுவாக்கும் சில யோகா பயிற்சிகள்...  

யோகா

முதுகு தரையில் படும்படி படுத்து, மல்லாக்கப் படுத்து  ஓய்வெடுக்க வேண்டும். இது முதல் பயிற்சி. இது, முதுகுத் தசைகளில் உள்ள இறுக்கத்தை தளர்வாக்க உதவும். அடுத்ததாக முதல் படத்தில் காட்டியிருப்பதுபோல் கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் ஒரே பக்கமாகச் சாய்க்கவும். இதை, இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகளுக்குச் செய்ய வேண்டும். அதேபோல் மறுபக்கம் கால்களைச் சாய்த்து 3௦ விநாடிகள் செய்ய வேண்டும்.

இரண்டாவது பயிற்சி: 

யோகா

இடது காலை நேராக வைத்துக்கொண்டு, அதற்கு மேல் வலது காலை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இடது புறமாகச் சாய்க்க வேண்டும். இதை இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகளுக்குச் செய்ய வேண்டும். இதே போல் மறு பக்கம் செய்ய வேண்டும். 

மூன்றாவது பயிற்சி: 

யோகா

இரண்டு கால்களையும் மடித்துவைத்து, முதலில் இடது பக்கமாக 30 விநாடிகள் இயல்பான சுவாசத்தில்  செய்ய வேண்டும். இதேபோல் மறு பக்கமும் செய்ய வேண்டும்.

நான்காவது பயிற்சி: 

யோகா

வலது காலை நேராக நீட்டி, அதன் மேல் இடது காலைப் படத்தில் காட்டியுள்ளதுபோல் வைத்து, இடது காலை வைத்து வலது பக்கமாக சாய்த்து 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதே போல் மறு பக்கமும் செய்ய வேண்டும். 
இந்த நான்கு பயிற்சிகளை மூன்று முறை செய்ய வேண்டும். தினமும் 20 நிமிடங்கள் ஒதுக்கி, இந்தப் பயிற்சிகளைச் செய்தால் முதுகுத் தண்டு வலிகளில் இருந்து பாதுகாக்கலாம்.

சில யோகா பயிற்சிகள்: 

தடாசனம்

தடாசனம் 

நேராக நிமிர்ந்து நின்று, இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி, கணுக்கால்களை உயர்த்தி நிற்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளதுபோல் நின்றுகொண்டு கைகளை மேல் நோக்கியபடி செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும். இது முதுகுக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவும். வலிகளைக் குறைக்கும். 

புஜங்காசனம்

புஜங்காசனம் ( பாம்பு போன்ற நிலை ) 

குப்புறப்படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்து, கைகளை தோள்பட்டைக்குக் கீழே ஊன்றி மேலே அண்ணாந்து பார்க்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இது, முதுகில் உள்ள தசைகளை வலுபெறச் செய்யும். 

மர்ஜரி ஆசனம்

மர்ஜரி ஆசனம் 

இந்த ஆசனத்தைச் செய்வதற்கு படத்தில் காட்டியுள்ளதுபோல், முட்டி போட்டு, கைகளைக் கீழேவைத்து, நான்கு கால்களில் நடப்பதுபோல வைத்திருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுக்கும்போது கழுத்தை வளைத்து, மேலே பார்க்க வேண்டும். மூச்சை வெளியிடும்போது கழுத்தைக் கீழ் நோக்கிப் பார்த்து முதுகை வளைக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளதுபோல் முதுகை வளைக்க வேண்டும்.

 

இந்த எளிமையான பயிற்சிகளை தினமும் செய்தால் ஆரோக்கியம் காக்கலாம். இந்தப் பயிற்சிகளைச் செய்வதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனை பெற்றுவிடுவது நல்லது. 

https://www.vikatan.com/news/health/112519-yoga-stretches-for-back-pain-relief.html

  • தொடங்கியவர்

பார்வை நரம்பு அழற்சிக்குரிய சிகிச்சை

 

இன்றைய திகதியில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பார்வை நரம்புகளிலுள்ள கொழுப்புகளால் பார்வை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, பார்வை நரம்பு அழற்சி நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக பார்வை திறன் குறைபாடு பகுதியாகவோ அல்லது முழுமையாக பாதிக்கப்படுகிறது. அத்துடன் ஒரு சிலருக்கு நிறத்தை இனங்கண்டறிவதில் கோளாறுகளும், கண்களை அசைக்க முடியாமல் போவதும் உண்டாகிறது. ஒரு சிலருக்கு கண்ணைச் சுற்றி வலியும் ஏற்படுகிறது.

news_image_health_25_12_17.jpg

இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் பார்வையை மீட்டெடுக்க முடியும். இதனை வராமல் தடுக்க வேண்டும் எனில் சிகரெட் புகைக்கக்கூடாது. தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது ஆரோக்கியமான சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். நிறைய தண்ணீரை அருந்தவேண்டும். இதனை கடைபிடித்தால் பார்வை நரம்புகளில் சேரும் கொழுப்புகள் கரைக்கப்பட்டு, பார்வை நரம்புகளின் பணி இயல்பாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து பார்வையையும் மீட்டெடுக்க இயலும்

டொக்டர் பாலகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/28951

  • தொடங்கியவர்

தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை!

 

 
1200x628_FACEBOOK_13_Surprising_Health_Benefits_of_Ghee

 

நீங்கள் தினமும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் என்ன செய்வீர்கள்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு பதில் இருக்கும். சிலர் ஒரு சொம்பு நிரைய தண்ணீர் குடிப்பீர்கள், சிலர் காஃபி குடித்தால் தான் அந்த நாள் வேலையே ஆகும் என்பார்கள், வேறு சிலர் நேராகக் காலை உணவைச் சாப்பிடுவார்கள்.

இதுவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேன் கலந்து குடிப்பது, பாலில் தேன் கலப்பது, அருகம் புல் ஜூஸ், வாழத்தண்டு ஜூஸ் எனப் பல வீட்டு மருத்துவத்தைக் கடைப்பிடிப்பார்கள். ஏனென்றால் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் எந்தவொரு உணவும் நமது உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டது.

பெரும்பாலும் யாரும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காரமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட மாட்டோம், அதே போல் நெய் சாப்பிடுவதையும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சமீபத்திய பல ஆராய்ச்சி முடிவுகளும், நமது ஆயுர்வேதமும் நாம் எதிர் பாராத ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பதே அது.

main-qimg-0db9c6f8e6f7682dacb30a8b7ea8c9

ஒரு ஸ்பூன் நிறைய நெய் சாப்பிட்டு ஒரு கிளாஸ் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டு ஒரு 30 நிமிடங்கள் கழித்தே வேறு எந்த உணவையும் சாப்பிட வேண்டும். முதலில் இதனால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம். 

செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும்:

நமது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டிருப்பதின் படி பார்த்தால் நெய்யில் இருக்கும் ‘ரசா’ என்னும் சத்து உடலில் இருக்கும் செல்களை புத்துயிர் அடையச் செய்கிறது. ஆகையால் காலையில் நெய் சாப்பிடுவதன் மூலம் நமக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன் செல்களை பராமரித்து நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

சருமத்தை பொலிவடைய செய்யும்:

04-1512393736-2-skin.jpg

செல்கள் இறந்து போவதால் நமது சருமம் பொலிவிழந்து வாடிப் போய் விடிகிறது. நெய் சாப்பிடுவதால் செல்கள் புத்துயிர் பெற்று சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது. மேலும் சருமம் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள நெய் உதவுகிறது. சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களையும் இது குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மூட்டு வலி மற்றும் வாத நோயில் இருந்து காப்பாற்றும்:

x04-1512393742-3-arthritis.jpg.pagespeed

நெய் ஒரு இயற்கையான மசகு எண்ணெய் ஆகும், ஆதனால் இது முட்டி போன்ற எலும்புக் கூடும் பகுதிகளில் இருக்கும் தசைகள் வறட்சி அடையாமல் பாதுகாத்து வழுவழுப்பு தன்மையை தக்க வைக்கிறது. இதனால் மூட்டு வலி அல்லது வாதங்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம். நெய்யில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு சத்து எலும்புகளின் வலிமை அடையச் செய்யும்.

மூளை செல்களை சுறுசுறுப்படைய செய்யும்:

காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறு சுறுப்படைய செய்யும். மூளை வேகமாகச் செயல்படுவதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெற்று ஞாபக சக்தியை அதிகரிக்கும். டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மூளையைப் பாதிக்கும் நோய்க்குறிகளிடம் இருந்து நம்மை இது பாதுகாக்கும்.

உடல் எடையைக் குறைக்கும்:

woman-measuring-stomach-1296x728.jpg

பல ஆண்டுகளாகச் சொல்லப்படும் நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்கிற கூற்றுக்கு மாறாகத் தினமும் காலை 5-10 மி.லி நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது ஆராய்ச்சி முடிவுகள். மெடபாலிக் அளவை அதிகரித்து உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை இது வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கிறது.

முடி உதிர்வைத் தடுக்கும்:

do-you-need-ghee-during-pregnancy_696x40

தினமும் காலை எழுந்தவுடன் நெய் சாப்பிடுவது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முடியை மிருதுவாகவும், நீளமாகவும் மாற்றி வேர்கால்களை வலிமை அடையச் செய்யும். இதனால் முடி உதிர்வு குறைந்து வளர்ச்சி அதிகரிக்கும்.

பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடுவதையே வெறுப்பவர்கள் கூட எந்தவொரு பயமும் இல்லாமல் நெய்யைச் சாப்பிடலாம். பால் தொடர்பான பொருட்களைச் சாப்பிடுவதால் வாந்தி வரும் என்பவரா நீங்கள், கவலை வேண்டாம் ‘லேக்டோ இண்டாலரன்ஸ்’ உள்ளவர்கள் கூட நெய்யைச் சாப்பிடலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. நமது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியும் இதனால் அதிகரிக்கும்.

http://www.dinamani.com/health/health-news/2017/dec/29/what-happens-when-you-eat-ghee-on-an-empty-stomach-in-the-morning-2835207.html

  • தொடங்கியவர்

மலச்சிக்கலைப் போக்க உதவுவது எது? நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா? - மருத்துவம் விவரிக்கும் உண்மை!

 
 

லச்சிக்கல்... அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ‘உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமன்றி பல மனப் பிரச்னைகளுக்கும் மலச்சிக்கல்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்யாமல்விட்டால் அது பல்வேறு நோய்களுக்கு வாசலாக அமைந்துவிடும். மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களாலும், அவசர வாழ்க்கை முறையாலும்தான் மலச்சிக்கல் உண்டாகிறது.

வாழைப்பழம்

 

தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் மலச்சிக்கல் உண்டாகிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் மலம் மிகவும் இறுக்கமாக உருவாகும். அதனாலும் மலச்சிக்கல் ஏற்படும். அசைவ உணவுகளில் நார்ச்சத்து இல்லை. அதனால்தான் அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்புகள் உண்டாகின்றன.சித்த மருத்துவர் வேலாயுதம்

நார்ச்சத்துள்ள பச்சைக் காய்கறிகள், கீரைகள், வாழைத்தண்டு, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், மாம்பழம், பேரீச்சை, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சைப் பருப்புகள் போன்றவை மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணம் தருபவை.

அன்றிலிருந்து இன்றுவரை மலம் சரியாகக் கழிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் பரிந்துரைப்பது வாழைப்பழத்தைத்தான். பலரும் இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

“வாழைப்பழம் மலச்சிக்கலைச் சரிசெய்யும் என்பது உண்மைதான். ஆனால் இப்போது விற்கப்படும் விதையில்லாத வீரிய ஒட்டுரக வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் எந்தப் புண்ணியமும் இல்லை. அவை வயிறை நிரப்ப மட்டுமே பயன்படும்’’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

இதுகுறித்து விரிவாக விளக்குகிறார்... “வாழைப்பழத்தில் வீரிய ஒட்டுரக வகைகள் இருக்கின்றன. மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து மிகவும் அவசியம். அவை நாட்டு வாழைப்பழங்களில் இருக்கின்றன. நாட்டு வாழைப்பழத்திலுள்ள விதைகள் அதிக நீர்ச்சத்தை உடலுக்கு அளிக்கின்றன. ஆனால், வீரிய ஒட்டுரகங்களான, பச்சை நிற வாழைப்பழத்திலோ, மஞ்சள் நிற வாழைப்பங்களிலோ நார்ச்சத்து சுத்தமாக இல்லை. மேலும் இதில் ஃப்ரக்டோஸ் (Fructose) அதிகமாக இல்லை. குளூக்கோஸ்தான் அதிகமாக இருக்கிறது. இது சர்க்கரைநோயை அதிகப்படுத்தும். மலச்சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக வயிற்று மந்தத்தை ஏற்படுத்திவிடும். இதுவே நாளடைவில் மலச்சிக்கலை உருவாக்கிவிடும்.

மலச்சிக்கல்

அதுமட்டுமல்ல, பொட்டாசியம் நாட்டு வாழைப்பழங்களில் அதிகம். அது இதயத்துக்கும் நன்மை அளிக்கும். ஆனால், வீரிய ஒட்டுரக வாழைப்பழத்தில் அவை சுத்தமாக இல்லை. வயிற்றை நிரப்புவதற்கான ஓர் உணவுப் பொருளாக மட்டுமே இந்த வகை மருத்துவர் சிவராமக் கண்ணன்வாழைப்பழங்கள் இருக்கின்றன.

வாழைப்பழத்தில் பூவம்பழம், ரஸ்தாலி, மலை வாழைப்பழம், கற்பூரவாழை, செவ்வாழை போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களைத்தான் சாப்பிட வேண்டும். அவைதான் மலத்தை இளக்கி மலத்தைச் சீராகப் போகவைக்கும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூன்று வேளையும் சாப்பிடலாம். காலை நேரத்தில் சாப்பிடுவது அதிக நன்மையைத் தரும்.

விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் லாப நோக்கோடு உடலுக்குக் கேடுவிளைவிக்கும் வாழைப்பழங்களை விற்பனை செய்துவருகிறார்கள். அவற்றை புறம்தள்ளிவிட்டு நம்மூர் நாட்டுப்பழங்களை மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது" என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.

வாழைப்பழம்

 

இது குறித்து பொது நல மருத்துவர் சிவராமக் கண்ணனிடம் பேசினோம்... “நாட்டுப்பழங்கள் மட்டுமல்ல... வீரிய ஒட்டுரக பழங்களாக இருந்தாலும் அவற்றுக்கும் மலச்சிக்கலைச் சரிசெய்யும் ஆற்றல் உண்டு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அது நல்லதுதான்” என்கிறார் மருத்துவர் சிவராமக் கண்ணன்.

https://www.vikatan.com/news/health/112806-effects-of-hybrid-bananas.html

  • தொடங்கியவர்

தினமும் 5 நிமிடம் இதைச் செய்தால் போதும்; இதய நோய் முதல் கால் வீக்கம் வரை அனைத்தும் சரியாகும்!

 

 
dfafda

 

நமது உடலை எந்த ஒரு நோய் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் எவ்வளவோ மெனக்கெடவும் செய்கிறோம். உதாரணத்திற்குக் காலையில் எழுந்ததும் உடற் பயிற்சி, யோகா செய்வது, சுடு தண்ணீர், பழச் சாறுகள் குடிப்பது என ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுக்கிறோம். தினமும் வெறும் 5 நிமிடம் இதைச் செய்து பாருங்கள் இதய பிரச்னை முதல் கால் வீக்கம் வரை சீராகும்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து சுவரை பார்த்தாற் போல் எதிர்த் திசையில் படுங்கள். பின் கால்களை நேராக உயர்த்தி சுவரின் மேற்பரப்பில் சமமாக வையுங்கள். அதாவது உங்களது உடல் பார்ப்பதற்கு ‘L' வடிவில் சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். 

இந்த நிலையில் சுமார் ஒரு 5 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். இந்தக் கால வேலையில் கண்களை மூடி மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும். தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். 

dadafdf.jpg

பயன்கள்:

  • இதயத் துடிப்பை சீர்ப் படுத்தி எந்தக் கோளாறும் இல்லாமல் இதயத்தைச் செயல்பட வைக்கும்.
  • கால்களை உயர்த்துவதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதைச் சரி செய்து அதன் செயல்பாட்டை சரி செய்யும்.
  • கால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் ரத்தம் சீராக பாய்வதன் மூலம் அந்த வீக்கம் குறையும்.
  • இதனால் ரத்தம் உடல் முழுவதும் சீராக பாய்வதால் ரத்த அழுத்த பிரச்னையில் இருந்தும் விடுபடலாம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதற்கேற்ப தினமும் ஒரு 5 நிமிடத்தை உங்களது உடலிற்காக ஒதுக்கி தொடர்ச்சியாக இதைச் செய்து பயன் பெருங்கள்.

http://www.dinamani.com/health/health-news/2018/jan/08/do-this-for-5-mins-and-get-healthy-life-2841154.html

  • தொடங்கியவர்

ஆஃப் பாயில் முட்டையின் ருசிக்கு இணையில்லை என்றாலும் அதை தினமும் சாப்பிடலாமா கூடாதா? ஆய்வு முடிவுகள்!

 

 
munanpaisto

 

சிறப்பான, எளிதான காலை உணவு என்றாலே சட்டென்று நம் நினைவிற்கு வருவது ரொட்டி, முட்டை மற்றும் பால்தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் லுடீன் (Lutein), ஜீ ஜான்தின் (Zeaxanthin) ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளன.

pacha_muttai.jpeg

மேலும் உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கின்றன. இவற்றில் லியூடின் மற்றும் ஜீ ஜான்தின் ஆகிய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கண் நோய் வராமல் பாதுகாக்கும்.

egggs.jpeg

முட்டை, பால் இரண்டிலும் புரதச் சத்து அதிகம் உள்ளது. இது காலை நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை அள்ளித் தருவதுடன் இதனை சாப்பிடுவதும் எளிது. ஒன்று அல்லது இரண்டு முட்டைகளுடன் ஒரு துண்டு ரொட்டி, மற்றும் ஒரு தம்ளர் பால் குடித்தால் போதும் வயிறு நிறைந்து விடும். ஆனால் முட்டை, பால் சாப்பிடுவதிலும் சில வரைமுறைகள் உண்டு. 

egg.jpg

கண்டிப்பாக முட்டையை வேக வைக்காமல் சாப்பிடக் கூடாது. சிலர் முட்டையை அப்படியே உடைத்து பச்சையாகவே குடித்து விடுவார்கள்.

09242009softboiled.jpg

சமைக்காத முட்டையை சாப்பிடுவதால் சில சமயங்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு விடலாம். அது மட்டுமல்ல சமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்பிசத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

make-ahead-omelets-930x550.jpg

வேக வைக்காத முட்டைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், செரிமானக் கோளாறும் ஏற்படும். பச்சை முட்டை அல்லது அரைவேக்காட்டில் வேக வைத்த முட்டைகளை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு உண்ணக் கூடாது. காரணம் முட்டை முழுமையாக வேகாததால், அதிலுள்ள பாக்டீரியாக்களும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.

IMG_6529.JPG

சிலருக்கு வாயுத் தொல்லை அடிக்கடி ஏற்பட்டு உடல் பாதிப்படைவார்கள். அதற்கு முக்கிய காரணம் வாயுவய் உண்டாக்கக் கூடிய உணவு வகைகளாகத் தேர்ந்தெடுத்து உண்பதால்தான். முட்டையைப் பொறுத்தவரை சமைக்காத முட்டையால் வாயுத் தொல்லை ஏற்டும். இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் `சல்மோனில்லா’ எனும் பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்த பாக்டீரியா உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி, உடலில் நீர் வறட்சி, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும், கடும் காய்ச்சல் ஏற்படும் என்கின்றன அமெரிக்க ஆய்வுக் கட்டுரைகள். 

IMG_5296.jpg

 

முட்டை சாப்பிட்டால் அதாவது அவித்த அல்லது பொரித்த முட்டை சாப்பிட்டால் பால் அருந்தலாம். சமைக்காத முட்டையைச் சாப்பிடும் போது கண்டிப்பாகப் பால் அருந்துவதைத் தவிர்க்கவும்.

HalfBoiledEggs-1.jpg

சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தான் தங்களது உடலின் கட்டுறுதி குலையாமல் இருக்க பச்சை முட்டை சாப்பிடுவார்கள். ஆனால் இந்திய புராதன ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரம் பச்சை முட்டையும், பாலும் கலந்து உண்பது உடல் நலனுக்கு கேடு என்கிறது. வேக வைத்த முட்டையால் எவ்வித தொல்லையும் ஏற்படாது.

http://www.dinamani.com/health/health-news/2018/jan/05/half-boil-good-or-bad-for-health-2839500--2.html

  • தொடங்கியவர்

இந்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆபத்து நமக்குத் தான்! எப்படித் தெரியுமா?

 

 
gettyimages-175448913

 

“இந்த ஃபிரிட்ஜ் வந்தாலும் வந்துது ஒரு வாரத்துக்குத் தேவையான மாவ அரச்சி உள்ள வெச்சு தினமோ இட்லி, தோசையே போட்ராங்கனு” பலர் புலம்ப கேட்டு இருப்போம். இன்று வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த குளிர் சாதனப் பெட்டி. எது மீந்தாலும் அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம்மில் பலருக்கு ஒரு சில உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்கிற உண்மை தெரிவதில்லை.

ஏன் இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது? கெட்டுப் போகாமல் பாதுகாக்கத் தானே ஃபிரிட்ஜ்? என்று கேள்வி கேட்கிறீர்கள் என்றால் உங்கள் கேள்விக்கான பதில்களை இன்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

தக்காளி:

Jubilee-2-Vine-Tomatoes-Photos-Pictures-

தக்காளி விலை குறைவாக இருக்கும் போதே வாங்கி விட வேண்டும், பின்னர் கிடு கிடுவென விலையேறி விடுகிறது என்று யோசித்து கிலோ கணக்கில் வாங்கி ஃபிர்ட்ஜில் வைக்கிறோம். அது மிகவும் தவறு. தக்காளியை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்தவேக் கூடாது, ஏனென்றால் அது தக்காளியில் உள்ள சத்துக்களை ஆவி ஆக்கி அதன் சுவையையும், மணத்தையும் குறைத்து விடுகிறது.

பூண்டு:

Garlic.png

பூண்டில் சிறிது ஈரப்பதம் நிலைத்தாலே அது முளைவிட துவங்கி விடும். அது மட்டுமின்றி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் பூண்டு அதன் சுவையை இழந்து இருக்கும், மேலும் பிரிட்ஜில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் பூண்டு வாசனை வீசும்.

ஜாம்:

%D8%B9%D9%85%D9%84_%D8%A7%D9%84%D9%85%D8

கெட்சப்பை போல் இல்லாமல் ஜாமை ஃபிரிட்ஜில் வைப்பது அதனுள் கிருமி வளர வழி செய்யும். ஏற்கனவே நீண்ட நாட்களுக்குக் கெட்டு போகாமல் இருக்கப் பதப்படுத்த தேவையான பல பொருட்கள் ஜாமில் சேர்க்கப் பட்டுள்ளதே இதற்குக் காரணம். குறிப்பாக இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அந்த ஜாம் பாட்டிலினுள் இருக்கும் சிறிது வெப்ப காற்று பாக்டீரியா பொன்ற கிருமிகள் வளர்வதற்கான தகுந்த சூழலை ஏற்படுத்தித் தரும்.

ரொட்டி:

bread.jpg

நம்மில் பலர் பிரெட்/ரொட்டி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதால் அது நீண்ட நாட்களுக்குச் சாப்பிட குடிய நிலையில் இருக்கும் என்று நினைக்கிறோம், அது மிகவும் தவறு. ஃபிரிட்ஜினுள் இருக்கும் குளிர்ந்த நிலை பிரெட்டில் இருக்கும் ஈரப்பதத்தை உலரச் செய்து அதைச் சீக்கிரமே கெட்டுப் போக செய்து விடும். அதே சமயம் ஃபிரீஸர் (Freezer) உள் பிரெட்டை ஒரு மாதம் வரை வைக்கலாம், பிரெட்டை உறையச் செய்து அதனுள் புஞ்சை போன்றவை வளராமல் தடுப்பதோடு உறைந்த ஐஸ் கட்டிகள் உருகியதும் கெட்டு போகாமல் நல்ல நிலையில் இருக்கும்.

உருளைக் கிழங்கு: 

Potato_day_37.JPG

உருளைக் கிழங்கை குளிர்ச்சியான இடத்தில் தான் வைக்க வேண்டும் என்றாலும் அதே சமயம் அந்த  இடம் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். ஃபிரிட்ஜில் உருளைக் கிழங்கை வைப்பதால் அது அதன் சர்க்கரை அளவை அதிகரித்து புற்று நோய் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.

காபித் தூள்:

 

coffee-powder-1.jpg

காபித் தூள் ஒரு டியோடரண்டை போல் செயல் பட்டு ஃபிரிட்ஜில் இருக்கும் அனைத்து நாற்றங்களை உறிந்து விடும். ஆகையால் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசினால் அதைச் சரி செய்யக் காபி தூளை உள்ளே வைக்கலாம் ஆனால் பயன்படுத்த போகும் காபி தூளை ஃபிரிட்ஜில் வைப்பது தவறு.

வெங்காயம்:

eeat-more-red-onion-it-kills-cancer-cell

உருளைக் கிழங்கு, பூண்டைப் போல் ஃபிரிட்ஜின் உள் இருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தில் உள்ள ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றி அதை மென்மையாக மாற்றி முளைவிடவும் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜை துறந்தாலே வெங்காய நாற்றம் வீசச் செய்யும்.

தேன்:

honey_000050003532.jpg

தேனை ஃபிரிட்ஜில் வைத்தால் அது இறுகிப் போக நேரிடும், இதனால் அது பார்ப்பதற்கு பளிங்குக் கல்லை போல் ஆகிவிடும்.

ஆப்பிள்:

Best-fresh-apple-fruit-for-sale.jpg

ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆப்பிளின் சத்துகளை இழக்கச் செய்யும். மேலும் அதன் தோல் வறண்டு மெல்வதற்குக் கடினமாக அதை மாற்றி விடும்.

அடுத்த முறை ஃபிரிட்ஜை திறந்து எந்தப் பொருளையாவது உள்ளே வைப்பதற்கு முன் சற்று யோசியுங்கள், இதை உள்ளே வைக்கலாமா என்று. அதுவே உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது.

http://www.dinamani.com/health/health-news/2018/jan/03/things-you-should-not-store-in-fridge-2838122--2.html

  • தொடங்கியவர்

அதிகமாக வியர்க்கிறதா? ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் பிரச்னையாக இருக்கலாம்... கவனம்!

 

லைவலி, சளி, இருமல் இருந்தால், `வெந்நீர்ல ஆவிப்பிடிப்பா... சரியாப் போகும்’ என்பார்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள். 'நம் உடல் எவ்வளவு வியர்க்கிறதோ, அந்த அளவுக்கு விரைவில் பிரச்னை சரியாகிவிடும்' என்பதுதான் இதன் அடிப்படை. நம் உடல்நலனுக்கும் வியர்வைக்கும் மிக நெருங்கியத் தொடர்பு உண்டு. உடல் உஷ்ணம்தான், தோலின் வியர்வைச் சுரப்பிகள் வழியாக திரவ வடிவில் வெளியேறுகிறது. சாதாரணமாக புழுக்கம், பயம், பதற்றம் போன்ற நேரங்களில் இந்தச் சுரப்பிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சிலருக்கு எப்போதும் வியர்த்துக்கொண்டே இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள் போன்ற பகுதிகள் ஈரமாகவே காணப்படும். இந்தப் பிரச்னையை, `ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Hyperhidrosis) என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அன்றாட வேலைகளே பாதிக்கும் அளவுக்கு வியர்த்துக் கொட்டும். `இவர்களில், இரண்டு சதவிகிதம் பேர்தான் இது ஒரு பிரச்னை என்பதை உணர்ந்து, மருத்துவத்தை நாடுகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு. இதைக் கண்டுகொள்ளாமல்விடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்

 

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் என்றால் என்ன, எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்குகிறார் சரும நோய் மருத்துவர் ஷ்ரதா.டாக்டர் ஷ்ரதா

பிரச்னைகள்:

ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இருப்பவர்களுக்கு வியர்த்துக்கொண்டேயிருக்கும். வியர்வைச் சுரப்பிகள், தோலின் மேற்பரப்பில்தான் இருக்கின்றன. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியாகும்போது, அவை பாதிக்கப்பட்டு அடிக்கடி சருமப் பிரச்னைகள் ஏற்படலாம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், மற்றவர்கள் தங்களை என்ன நினைப்பார்கள், நினைக்கிறார்கள், உடலில் துர்நாற்றம் வீசுகிறதா என்றெல்லாம் யோசித்தபடியே இருப்பார்கள். இதனால், செய்யும் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளச்சிக்கல்கள் உண்டாகும்.

காரணங்கள், வகைகள்:

உடல் உஷ்ணம் அதிகமாகும்போது, நரம்பு மண்டலத்தின் தூண்டுதலால் வியர்வைச் சுரப்பிகள் தங்கள் பணியை செய்யத் தொடங்கும். அப்போது வெளியாவதுதான் வியர்வை. ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் இருப்பவர்களின் வியர்வைச் சுரப்பிகள், காரணமே இல்லாமல் நரம்பு மண்டலத்தால் அதிகமாகத் தூண்டப்படும். சிலருக்கு பிறப்பு முதலே இந்தப் பிரச்னை இருக்கும். இன்னும் சிலருக்கு பருவ வயதை அடையும்போது ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும். பருவ மாற்றத்தால் ஏற்படும் இந்தப் பிரச்னை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். இதில், பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

அக்கிளில் வியர்ப்பது

* ஃபோக்கல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் (Focal Hyperhidrosis): உள்ளங்கை, உள்ளங்கால், முகம், அக்குள் இந்த நான்கு இடங்களிலும் வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக இருக்கும். அதனால், சிலருக்கு அந்த இடங்களில் மட்டும் அதிகமாக வியர்க்கும். இந்த வகை வியர்வைப் பிரச்னை, மரபுரீதியான காரணத்தாலும் ஏற்படலாம் என்பதால், மருத்துவரீதியில் முழுமையான தீர்வு இதற்குக் கிடையாது.

* உடலின் அனைத்துப் பகுதியிலும் வியர்ப்பது, `ஜெனரல் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (General Hyperhidrosis) என்று கூறப்படுகிறது.

* `செகண்டரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Secondary hyperhidrosis) என்ற பிரச்னை, சில நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகள், மதுப்பழக்கம், புகைக்கு அடிமையானவர்கள், மூச்சுக்குழாயில் பிரச்னை உள்ளவர்கள், வாதம் இருப்பவர்கள், தைராய்டு, இதயக்கோளாறு, தொற்றுப்பாதிப்பு, நரம்பு பிரச்னை போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

* கை மற்றும் கால்களில் மட்டும் வியர்ப்பது, `பால்மர் ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Palmar hyperhidrosis) எனப்படும்.

* அக்குள் பகுதியில் மட்டும் வியர்ப்பது, `ஆக்ஸிலரி ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ (Axillary hyperhidrosis) எனப்படும்.

கவலை அதிகமாக இருந்து உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நேரம்... உணர்ச்சிகள் அதிகளவில் தூண்டப்பட்டிருக்கும் நேரம்... ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் நேரங்களில் அதிகமாக வியர்க்கும். இந்தப் பிரச்னையை, மருத்துவ சிகிச்சைகளால் முழுவதுமாகச் சரிசெய்ய முடியாது. என்றாலும், இது வாழ்நாள் முழுமைக்குமான பாதிப்பாக இருக்காது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் தானாகவே சரியாகிவிடும்.

கவனிக்காமல் விடலாமா?

ஹிட்ரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களில் பலர், இதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தாலேயே, மருத்துவரை நாடாமல் இருக்கிறார்கள். பயப்படும் அளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்றாலும், கவனிக்காமல்விட்டால்  தொடர்பான தொற்றுக்கள், தோலில் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது அதிகம் வியர்த்து, தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.

மனஅழுத்தம்

அன்றாடச் செயல்களைச் செய்ய முடியாத அளவுக்கு வியர்த்தாலோ, வழக்கத்துக்கு மாறாக திடீரென உடல் முழுக்க வியர்த்துக் கொட்டினாலோ, இரவு தூங்கும்போது வியர்வை தாங்க முடியாமல் எழுந்துகொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம். இதுபோன்ற வியர்வைப் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட நபரை, உளவியல்ரீதியாக பாதிக்கும். குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கை, சிந்தனை, பொழுதுபோக்கு போன்றவற்றில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்.

 

 

 

https://www.vikatan.com/news/health/112122-hyperhidrosis-symptoms-treatment.html

  • தொடங்கியவர்

35 வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரக்காரணங்கள்

 
அ-

35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம், எலும்பு தேய்மானம்.

 
35 வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரக்காரணங்கள்
 
35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்சனை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
 
எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.
 
இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 
 
தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.
 
எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/01/16100407/1140449/Osteoporosis-for-women-after-35.vpf

  • தொடங்கியவர்

தொப்பையை உருவாக்கும் கொலஸ்ட்ரால்

 

 

இன்றைய திகதியில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளே தொப்பையுடன் இருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. உணவு முறையில் மாற்றம், உணவை சாப்பிடும் நேரங்களில் மாற்றம். சாப்பிடும் அளவிலும், சாப்பிடும் எண்ணிக்கையிலும் மாற்றம் என சில காரணங்களால் கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ரால் இயல்பை விட அதிகளவில் சேமிக்கப்படுவதால் தொப்பை உருவாகிறது.

health_news_image_161_18.jpg

எம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இயங்குவதற்கு கொலஸ்ட்ராஸ் எனப்படும் கொழுப்பு அவசியம் தேவை. அதே போல் விற்றமின் டி எனப்படும் ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் எமக்கு கொழுப்பு தேவைப்படுகிறது. இந்நிலையில் எம்முடைய உடலில் இருக்கும் கல்லீரல் என்ற உள்ளுறுப்பே கொழுப்பை உற்பத்தி செய்கிறது. அத்துடன் நாம் சாப்பிடும் அசைவ உணவு வகைகளிலிருந்து கொழுப்பானது நேரடியாக கிடைக்கிறது. அதேபோல் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும் கொழுப்பு கிடைக்கிறது. 

இதனிடையே எம்முடைய தேவையைக் கடந்து கொழுப்பானது அதிகளவில் உற்பத்தியாகிவிட்டால், அவை இரத்த குழாய்களின் சுவர்களில் தேக்கமடைந்து படிய தொடங்கிவிடுகிறது. நாளடைவில் இரத்த குழாய்களை சுருக்கமடையச் செய்து அடைப்பை உருவாக்கிவிடுகிறது. இதன்போது எமக்கு உயர்குருதி அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பலவித ஆரோக்கிய கேடுகள் அறிமுகமாகிறது.

இதனை லிப்பிட் புரொபைல் என்ற பரிசோதனைகளை 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு குறித்த விவரங்களை அறிந்துகொள்ளமுடியும். உயரத்திற்கேற்ற எடையைப் போல அதாவது பி எம் ஐ போல, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வதைப் போல், இரத்த அழுத்தத்தின் அளவை தெரிந்துகொள்வதைப் போல, உடலிலுள்ள கொழுப்பின் அளவையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதில் கெட்டக் கொழுப்பின் அளவையும். நல்ல கொழுப்பின் அளவையும் தெரிந்துகொண்டு, இரண்டையும் சமமான அளவை பராமரிக்கவேண்டும். அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கலாம். அதே சமயத்தில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை மனதில் கொண்டு வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. தொப்பையும் ஏற்படாது.

டொக்டர் மதன் கோபால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/29526

  • தொடங்கியவர்

மாரடைப்பு பரம்பரை நோயா..?

 

 

இன்றைய திகதியில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரக்கூடும். இந்நிலையில் மாரடைப்பு என்பது பரம்பரையின் காரணமாகவும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அண்மையில் கண்டறிப்பட்டிருக்கிறது.

health_news_image_12_1_18.jpg

அப்பா, அப்பம்மா, அவர்களுக்கு முதல் தலைமுறை மற்றும் இரட்டையர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு என மாரடைப்பு பரம்பரையின் காரணமாகவும் வரக்கூடும் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 60 வயதில் தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும், அதன் அளவு அதாவது மைல்ட் அல்லது மாசிவ் என எந்த அட்டாக்காக இருந்தாலும் இந்த வயதில் தான் ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் 40 வயது முதலே சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி, சிகரெட் மற்றும் மதுவை முற்றாக தவிர்த்தல், முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும்.

டொக்டர் ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/29634

 

 

இதய நோயிற்கும், பூப்பெய்தலுக்கும் தொடர்பு உண்டா..?

 

பெண்களைத் தாக்கும் இதய நோயிற்கும் அவர்கள் பூப்பெய்துவதற்கும் தொடர்பு உண்டு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

news_image_health_17118.jpg

12 வயதிற்கு குறைவாக பூப்பெய்துபவர்கள், 47 வயதிற்குள் மாத விடாய் சுழற்சி நின்றவர்கள் ஆகியோர்களுக்கு ஏனைய பெண்களைக் காட்டிலும் இதயம் தொடர்பான பாதிப்பு, 10 முதல் 33 சதவீதம் வரை அதிகமாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே தருணத்தில் கருகலைதல், கருகலைப்பு, குழந்தை இறந்து பிறத்தல், கருப்பை நீக்கம் செய்து கொண்டவர்கள், மிகவும் இளம் வயதிலேயே குழந்தையை பிரசவித்தவர்கள் போன்றோருக்கும் இதயம் தொடர்பான பாதிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அதே சமயத்தில் அண்மைய காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அதனால் பெண்கள் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் இதயத்திற்கான பரிசோதனைகளை செய்துக் கொள்வதைக் காட்டிலும் முன்னரே பரிசோதனைகளை செய்து இதயத்தின் ஆரோக்கியத்தினையும், இதயத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/29572

  • தொடங்கியவர்

பார்கின்சனை வெல்லத் தேவை நம்பிக்கை! – அறிகுறிகள், சிகிச்சைகள், வாழும் உதாரண மனிதர்! #ParkinsonsDisease

 
 

னித உடலின் மிக முக்கியமான இரண்டு பகுதிகள்’ என மூளையையும் இதயத்தையும் சொல்லலாம். உயிர் இயக்கத்துக்கு இதயம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு உடலின் இயக்கத்துக்கு மூளை அவசியம். அப்படிப்பட்ட மூளை செயல்பாட்டுக்கு உதவுவது நரம்பு மண்டலங்கள். நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில், ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன. அல்சைமர் பாதிப்பு, பலராலும் அறியப்பட்ட ஒன்று! அதென்ன பார்கின்சன் பாதிப்பு? நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் டோபமைன் (Dopamine) ஹார்மோன் சுரப்பு குறைவதால் ஏற்படும் பாதிப்புதான் பார்கின்சன்.

நரம்பு தளர்வு

 

பார்கின்சன்

நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பாதிப்பான இது, தசை இயக்கத்தை பாதிக்கக்கூடியது. மூட்டுகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள தசைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக குறைந்துவிடும். நிலைமை கடினமாகும்போது, நிற்பது, நடப்பது, பாலமுருகன் நரம்பியல் மருத்துவர்பொருள்களைக் கையாள்வது, உடலை பேலன்ஸ் செய்வது... என அன்றாடச் செயல்கள் பலவும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், பாதிப்பின் வீரியத்தை பிஸியோதெரபி மூலம் குறைக்க முடியும்.

இதுபற்றி நியூரோ ஃபிஸியோதெரபிஸ்ட் ஃபமிதாவிடம் கேட்டோம்... "பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கு, வயது முதிர்வு, மரபுக்குறைபாடு, குடும்பச்சூழல் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. பெரும்பாலும் 50 முதல் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, பார்கின்சன் எளிதில் ஏற்படும். பாதிக்கப்படுபவர்களில் ஆண்கள்தான் அதிகமிருக்கிறார்கள். பார்கின்சன் தசை இயக்கத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களால் தொடர்ந்து பேசவோ, எழுதவோ, ஒரு பொருளைச் சரியாகப் பிடிக்கவோ முடியாது. கை நடுக்கம், சுருக்கமாகப் பேசுவது, முறையற்ற கையழுத்து நடை, கவனச்சிதறல் இவர்களுக்கு இருக்கும்.” என்றார்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி நரம்பியல் மருத்துவர் பாலமுருகன் கூறிய தகவல்கள்:

அறிகுறிகள்:

* உடல் இயக்கம் தொடர்பான பிரச்னைகள் - கை, விரல் நடுக்கங்கள், உடலியக்கம் மாற்றம், மிக மெதுவாகச் செயல்களைச் செய்தல், கூன் விழுவது போன்ற உணர்வு, நடப்பதில் சிக்கல் போன்றவை.

* ஆற்றல் பிரச்னைகள் - உடலில் திடீரென எந்தச் செயல்களையும் சரியாகச் செய்ய முடியாமல் சக்தி குறைந்துபோவது.

முதுமை


* தகவல் பரிமாற்றம் தொடர்பான பிரச்னைகள் - பேசுவது, எழுதுவதில் பிரச்னை. பேசும்போது கோர்வையாக வார்த்தை வராமல் தடுமாறுவது. எழுதும்போது எழுத்து வழக்கம்போல் இல்லாமல், கிறுக்கலாக விழுவது.

* தூக்கப் பிரச்னைகள் - அரைத் தூக்கத்தில் விழித்துக்கொள்ளுதல், தூக்கமின்மை போன்றவை. 

* பார்வைப் பிரச்னைகள் - எதிரில் இருக்கும் பிம்பங்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது சரியாகப் புலனாகாமல் இருத்தல்.
இவையெல்லாம், பொதுவான சில அறிகுறிகள். சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

சிகிச்சை:

இதற்கான சிகிச்சை ஃபிஸியோதெரபிதான். கொலோரடோ மருத்துவப் பள்ளி (Northwestern Medicine and the University of Colorado School of Medicine) நடத்திய அண்மைய ஆய்வில், இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிரமாகப் பயிற்சியும் சிகிச்சையும் கொடுத்து வந்தால், பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு, டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிப்பதுதான். மாத்திரைகள், எல்டோபா (L-Dopa) முறைகள் மூலம் அவற்றை வலிந்து உற்பத்தி செய்வது, மூளைக்கு அதிக வேலை கொடுக்கப்பட்டு அதன்  உற்பத்தியை அதிகரிப்பது என இரு வழிகள் உள்ளன. மருந்து வகை சிகிச்சை ஒருபக்கமும், பிஸியோதெரபி மற்றொரு பக்கமும் மேற்கொள்ளப்படும். உடற்பயிற்சி என்றவுடன், எடை தூக்குதல், நடைப்பயிற்சி என்று நினைத்துவிட வேண்டாம். தசை வலிமைக்கான சில பயிற்சிகள் மட்டுமே இவர்களுக்கு அளிக்கப்படும். 

மூளை

தசைக்கான பயிற்சிகள் பற்றி ஃபிஸியோதெரபிஸ்ட் ஃபமிதா கூறும்போது,

"* பிடிமானத்திலும் நடையிலும் பிரச்னை இருக்குமென்பதால், ஒரு பொருளை கையில் எடுத்து, நடந்துசென்று வேறோர் இடத்தில்ஃபமிதா ஃபிஸியோதெரபிஸ்ட் வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

* எழுத எழுதக் கையெழுத்தை சிறிதாக்கிக்கொண்டே வரும் பழக்கம் இவர்களுக்கு இருக்குமென்பதால், நிறைய எழுதச் சொல்லி வலியுறுத்தப்படும். பேனா பிடித்து எழுதும்போது, பிடிமானமும் கிடைக்கும்

* கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்யச் சொன்னாலும், இவர்கள் சிரமப்படுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு மூக்கைத் தொடச் சொல்வது, நேராக நிற்கச் சொல்வது, பொருள்களைக் கைகளில் பிடித்துக்கொள்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.

* பேசும்போது, ஓரிரு வார்த்தையில் பேசி முடிக்கும் பழக்கம் இவர்களுக்கு இருக்கும். எனவே, பேசும் பயிற்சிகள் அளிக்கப்படும்." என்றார்.

சிகிச்சை முறையின் நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னால், 'அதிக உழைப்பு, குறைவான ஓய்வு!' ஓய்வு அதிகம் கொடுத்துவிட்டால், அடுத்த செய்கைக்கு இவர்கள் தயாராக மாட்டார்கள். அப்படியான தொடர் ஓய்வு, இவர்களை எளிதில் முடக்கிப்போட்டுவிடும். பிஸியோதெரபி பார்கின்சனுக்கான முழுமையான தீர்வாக இருக்காது என்றாலும், பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் தடுக்க உதவும். முதல் நிலைகளிலேயே பார்கின்சன் கண்டறியப்பட்டு, இதுபோன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அவர்கள் உயிர்ப்புடன் செயல்படலாம். இவை மட்டுமன்றி, மூளையில் அறுவைசிகிச்சை ஒன்றைச் செய்வதன் மூலம், பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கலாம். என்றாலும் அது ஆபத்தாக முடியக்கூடும் என்பதால், பெரும்பாலான மருத்துவப் பரிந்துரையில் அறுவைசிகிச்சை இருப்பதில்லை.

நம்பிக்கை மனிதர்!

பார்கின்சன் பாதிப்பின் வளர்ச்சி, சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். சிலர் வேகமாக பாதிக்கப்படுவார்கள். இன்னும் சிலருக்கு மெள்ள மெள்ள பாதிப்பு ஏற்படும். அப்படி, பார்கின்சனில் இருந்து மீண்டுகொண்டிருக்கும் ஒருவர்தான் ரங்கராஜன். 1996ம் ஆண்டு வரை மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த இவர், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு பாதிப்புக்குள்ளானார். 2011-ம் ஆண்டில் இதற்கான அறுவைசிகிச்சையையும் செய்துகொண்டார். பாதிப்பு ஏற்பட்டவுடன், சோர்ந்துவிடாமல், பல்வேறு தளத்தில் இருந்தும் நோய் பற்றிய தகவல்களைத் திரட்டினார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, மாத்திரைகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும், அறிகுறிகள் என்னென்ன என பார்கின்சன் பற்றி 360 கோணத்தில் இருந்தும் யோசித்து அனைத்துத் தகவல்களையும் திரட்டி அதனைப் புரிந்துகொள்ளத் தொடங்கினார். கணினி மூலம் மின் சமிக்ஞை செய்ய உதவியாக இருக்கும் பேஸ்மேக்கரைக் கண்டறியத் தொடங்கிய கணம் முதல், இந்தக் கணம் வரை பார்கின்சன் தொடர்பான இவருடைய தேடல் நீண்டுகொண்டே இருக்கிறது. இப்போது, பார்கின்சன் தாக்கத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட உளவியல், உடல் மாற்றங்கள், பார்கின்சனின் பாதிப்புகள் என்னென்ன, பார்கின்சன் என்றால் என்ன - இப்படி ஏராளமான தகவல்களைத் திரட்டியுள்ள ரங்கராஜன், விரைவில் புத்தக வடிவில் அதை வெளியிடயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்கின்சன் பாதிப்பிலிருந்து மீண்ட ரங்கராஜன்

 

தனது சுயக்குறிப்பில் ரங்கராஜன் தன்னைப் பற்றிக் கூறும்போது, ‘எனது பயமெல்லாம் நான் எங்கே செடி, கொடிகள்போல ஆகிவிடுவேனோ என்பதுதான். என் மனமும் அறிவும் நோயால் சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தன. அவற்றை அப்படியே வைத்துக்கொள்வது எனக்கு முக்கியமாகப்பட்டது. வெறிபிடித்தவன்போல எழுதித் தள்ளினேன். இரண்டு ஆங்கில நாவல்களை எழுதினேன். அதில் ஒன்றைத் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். வாழ்ந்துதான் ஆக வேண்டும், நோய்க்கு அடிபணிந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார். மருந்து, மாத்திரை, அறுவைசிகிச்சைகளைவிடவும், ரங்கராஜனை இன்று வரை உயிர்ப்போடுவைத்திருப்பது, அவரின் நம்பிக்கையும் தைரியமும்தான்!

https://www.vikatan.com/news/health/113860-parkinson-disease-symptoms-and-treatment.html

  • தொடங்கியவர்

தொப்பை, உடல் பருமன் குறைக்க உதவும் யோகா பயிற்சிகள்! #Yoga

 
 

ரு காலத்தில் ஒருவருக்கு லேசாகத் தொப்பை விழுந்தால், `என்னப்பா... நாப்பது வயசுக்குள்ளயா?’ என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். இன்றைக்கு இளம் வயதினரைக்கூட விட்டுவைக்காமல், பரவிக்கொண்டேயிருக்கிறது தொப்பை.  அதோடு உடல் பருமன் பிரச்னையும் அதிகமாகியிருக்கிறது. பல உடல்நலக் கோளாறுகளுக்கு அடித்தளமாக இருப்பவை இந்த இரு பிரச்னைகளும். உடல் பருமனைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் இருக்கின்றன. 

யோகா

 

உடல் பருமன் மட்டுமல்ல, ஒருவருக்குத் தொப்பை போடுவதற்கும் உடல் உழைப்பு இல்லாமல் பல மணி நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதுதான் முக்கியக் காரணம். அதோடு, சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமலிருப்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, நேரம் தவறித் தூங்குவது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளைத் தேடித் தேடி உண்பது, அதிக கெட்டக் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது போன்றவையும் உடல் பருமன், தொப்பைக்கு முக்கியக் காரணங்கள். இன்னும் மனஅழுத்தம், ஹார்மோன் குறைபாடுகள், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்தல்... என வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

உடல் எடையைக் குறைக்க தினமும் சில பயிற்சிகளைச் செய்யவேண்டியது முக்கியம். யோகா, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் ஒரே மாதத்தில் இரண்டு கிலோ வரை எடை குறைக்கலாம். அதே நேரத்தில் எடை குறைதல் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தொடங்குவது நல்லது.

சில யோகா பயிற்சிகள், பலன்கள்... 

மற்ற பயிற்சிகளைப்போல் இல்லாமல் யோகா பயிற்சிகளில் மிக மெதுவாகத்தான் எடை குறையும். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பயிற்சிகளே உடல் எடையைக் குறைக்கப் போதுமானவை. ஒரே ஒருநாள் பயிற்சி செய்துவிட்டு, எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது உதவாது. தினமும் தவறாமல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

கீழே குறிப்பிட்டிருக்கும் சில பயிற்சிகளைச் செய்தால் தொப்பை குறையும்; இடுப்பைச் சுற்றியிருக்கும் ஊளைச்சதைகள் குறையும். யோகா பயிற்சிகளை ஏற்கெனவே தெரிந்துவைத்திருப்பவர்கள், அவற்றை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், புதிதாக கற்றுக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையாக யோகா செய்வதே சிறந்தது.

தொப்பை - சூரியநமஸ்காரம்

சூர்ய நமஸ்காரம் 

சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 நிலைகளைக் கொண்டது. சூரிய நமஸ்காரத்தின் அனைத்து ஆசனங்களும் சூரியனுக்கு நன்றி செலுத்துவதுபோல் அமைந்தவை.

முதலில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதுபோன்ற நிலை. நேராக நிமிர்ந்து நின்று கைகளைக் கூப்பி மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும். இரண்டாம்நிலை - இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி பின்னோக்கி வளைய வேண்டும். மூன்றாம் நிலை - முன்னோக்கி வளைய வேண்டும்; வளைந்து, இரு கைகளாலும் குதிகாலின் பின்புறம் பிடித்து, முகத்தை கால்களோடு ஒட்டியநிலையில் வைக்க வேண்டும். நான்காம் நிலை - இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி ஒரு காலை மட்டும் பின்னோக்கி வைக்க வேண்டும் (படத்தில் காட்டியுள்ளதுபோல்). ஐந்தாம் நிலை - இரண்டு கைகளையும் ஊன்றி, இரண்டு கால்களையும் உயர்த்திவைக்க வேண்டும்; இப்போது கைகளை லேசாக வளைத்து, உடலைக் கீழே இறக்க வேண்டும். ஆறாம் நிலை  - முழங்கால் தரையிலிருக்க, நெஞ்சுப்பகுதியை உயர்த்த வேண்டும். ஏழாம் நிலை - முந்தைய நிலையில் இருந்தபடி மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். எட்டாம் நிலை - இரண்டு கால்களையும் உயர்த்தி படத்தில் காட்டியுள்ளதுபோல் நிற்க வேண்டும். கடைசி நான்கு நிலைகளையும் முதல் நான்கு நிலைகளைப்போல் செய்ய வேண்டும்.

ஒரு நிலையிலிருந்து கடைசிநிலை வரை செல்லும்போது முழுத் தண்டுவடத்துக்கும் அனைத்து மூட்டுகளுக்குமான ஒரு பயிற்சியாக இருக்கும். சூரிய நமஸ்காரம் எலும்புகளைப் பலப்படுத்தும்; தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும். 

யோகா

பாதஹஸ்தாசனம் 

நின்று கொண்டு செய்யும் பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.

ஜானுசிரசாசனம்

ஜானுசிரசாசனம் 

அமர்ந்த நிலையில் செய்யும் பயிற்சி. ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி, தொப்பை குறைக்க உதவும்.

யோகா

பவனமுக்தாசனம்

படுத்த நிலையில் செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.  

தனுராசனம்

தனுராசனம் 

குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க மிக எளிமையாக செய்யக்கூடியது யோகா. இந்தப் பயிற்சிகளைத் தனியாக வீட்டில் செய்வது நல்லது. இந்தப் பயிற்சிகளை யோகா மருத்துவர்களிடம் கற்றுக்கொண்டு செய்யவேண்டியது அவசியம்.

யோகா பயிற்சிகளுடன் நடைப்பயிற்சியும் செய்தால், விரைவில் பலன் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு இரண்டு கிலோ வரை எடை குறைப்பது நல்லது, சரியானது. அதற்குப் பதிலாக நிறையப் பயிற்சிகளைச் செய்து, வேகமாக எடையைக் குறைத்து, மீண்டும் வேகமாக எடையை அதிகரிப்பது நல்லதல்ல. பயிற்சிகளுடன் முறையான  உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதோடு போதுமான உறக்கமும் வாழ்வியல் முறை மாற்றங்களும் தேவை.

https://www.vikatan.com/news/health/114448-performing-yoga-can-gift-you-with-weight-loss.html

  • தொடங்கியவர்

ஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்!

 
Women-Sleep-Awake.jpg

அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று  ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்?

பெண்கள் தூக்கம்

அவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

மூளை பாதிப்பு

அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார்கள் மகளிர் நல மருத்துவர்கள். 

மூளைச் செயல்திறன் பாதிக்கும்!

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

கர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்!

கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

இரவில் வியர்வை!

மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.

மாதவிடாய் சுழற்சி பாதிப்பு

மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கும்!

தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)

மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):

நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

செகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:

தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.

நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் ?

எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.

  • தூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.

நல்ல மெத்தை

  • ஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
  • இரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
  • வீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

http://www.thinakaran.lk/2018/01/26/சுகாதாரம்/22254/ஆண்களை-விட-பெண்கள்-அதிகம்-தூங்க-வேண்டும்

  • தொடங்கியவர்

பிரபலமடைந்து வரும் குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை

 

 

எம்மில் ஒரு சிலருக்கு எம்மாதிரியான உணவுமுறையை பின்பற்றினாலும் அவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் ஜீரண கோளாறு இருந்துக்கொண்டேயிருக்கும். அவர்களின் உணவுமுறையைக் கண்காணித்தால் அவர்கள் புரதச்சத்து மிக்க உணவுகளை இயல்பிற்கு அதிகமாக சாப்பிடுவது தெரிய வரும். புரதச்சத்து எம்முடைய இயக்கங்களுக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று தான். ஆனால் ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு புரதத்தில் உள்ள குளூற்றன் என்ற கூட்டு வேதியல் பொருள் தான் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 

news_image_health_27_1_18.jpg

அதனால் இத்தகைய பாதிப்புடையவர்களுக்கு குளூற்றன் ப்ரீ டயட் எனப்படும் உணவு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் குளூற்றன் என்ற சத்து பார்லி, கம்பு போன்றவற்றில் இயல்பாகவே அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு இந்த குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை கூட பக்கவிளைவை ஏற்படுத்தலாம். எனவே இத்தகைய உணவு முறையை பின்பற்றவேண்டும் என்றால் இரப்பை மற்றும் குடல் நோய் சிறப்பு சிகிச்சை  நிபுணரை கலந்து ஆலோசித்த பின் தொடங்கவேண்டும். இத்தகைய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் பெறாமல் இந்த உணவு முறையை பின்பற்றினால் நாட்பட்ட குடல் நோயின் தாக்கத்திற்கு ஆளாக நேரிடும்.

டொக்டர் சந்திரசேகரன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/30009

  • தொடங்கியவர்

ஆண்களைவிட பெண்கள் ஒரு மணி நேரம் அதிகம் தூங்க வேண்டும், ஏன்? - மருத்துவக் காரணங்கள்!

 
 

னைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்?

பெண்கள் தூக்கம்

 

அவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

மூளை பாதிப்பு

அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம்மருத்துவர் மனுலெஷ்மி இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார் மகளிர் நல மருத்துவர் மனுலட்சுமி. அந்த பாதிப்புகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.

மூளைச் செயல்திறன் பாதிக்கும்!

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

கர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்!

கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

இரவில் வியர்வை!

மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.

மாதவிடாய் சுழற்சி பாதிப்பு

மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கும்!

தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)

மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):

நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

குறைவான தூக்கம்

செகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:

தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.

நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் ?

நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனால் வழங்கப்படும் சில அறிவுரைகள்...

எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.

தூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.

நல்ல மெத்தை

ஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும். ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது. தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

லேப்டாப் தவிர்க்க

தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

 

வீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்

https://www.vikatan.com/news/health/114505-reason-behind-women-need-more-sleep-than-men.html

  • தொடங்கியவர்

அதி உணவு ஆபத்து... உண்டி சுருங்குதல் அனைவருக்கும் அவசியம்..! ஏன்?

 
 

ழைத்துக் களைத்துப் போகிறவர்கள் ஒரு ரகம். அண்மைக் காலமாக, `சாப்பிட்டே களைத்துப் போகிறவர்கள்’ என்று ஒரு ரகம் உருவாகியிருக்கிறது. நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆற்றலையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காகத்தான். ஆனால், சோர்வடையும் அளவுக்கு வரைமுறையின்றி அதிகளவில் சாப்பிடுகிறார்கள் சிலர். அளவுக்கு மீறி சாப்பிடுபவர்களுக்கு, ஆரோக்கியமற்ற உடல் பருமனோடு சேர்த்து பல்வேறு நோய்கள் அன்பளிப்பாகக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதிகரித்துவரும் ‘பார்ட்டி கலாசாரத்தால்’ ஒரே வேளையில் அதிக உணவுகளையும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் பெருநகரங்களில் உள்ள பலர் உட்கொள்வதாக ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது. அதி உணவு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்... பார்க்கலாமா?  

உணவு

 

நோய் நிலைகளில் அதி உணவு:

சில மரபு சார்ந்த நோய்கள், தலையில் அடிபடுதல், சர்க்கரைநோய், ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid), மனஅழுத்தம், மனச்சோர்வு, பிங் ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Binge eating disorder), சில வகையான மருந்துகள் போன்றவற்றின் காரணமாக அதிகப்பசி ஏற்படலாம். சில காரணங்களால் அதிகப்பசி (Polyphagia) எனும் குறைபாடு ஏற்படுவது இயல்பு. சில அடிப்படை சிகிச்சைகளை மேற்கொண்டாலே இவற்றைச் சரிசெய்துவிடலாம். ஆனால், ருசிக்கு அடிமையாகி, உணவின் நுணுக்கங்களைப் பற்றித் தெரியாமல், எந்த நோய் நிலையும் இல்லாமல், அதிகளவில் உணவை உட்கொள்வதுதான் நவீன சமூகத்தின் நோயாக உருப்பெற்றிருக்கிறது. ருசிக்கு கட்டுப்பட்டதால்தான் இப்போது பல இன்னல்களுக்கும் ஆளாகிறோம். 

`மீதூண் விரும்பேல்!’

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், உணவியல் நுணுக்கங்களை அறிந்திருந்த நமது முன்னோர்களுக்கே, அதிக உணவின் தீமைகளை எடுத்துரைக்கும்விதமாக `மீதூண் விரும்பேல்’ என்று பிரசாரம் செய்தார் ஒளவைப் பாட்டி. நம் உணவியல் நுணுக்கங்களையெல்லாம் மறந்துவிட்ட நவீன தலைமுறைக்கு என்ன சொல்லி பிரசாரம் செய்வது? ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ எனும் நெறிமொழி, வாழ்வியலைவிட, உணவியலுக்கு மிகவும் பொருத்தமானது. அளவுக்கு மீறிய உணவுகள்தான் நோய்களின் ரூபத்தில் நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கின்றன. 

அதி உணவு

’உண்டி சுருங்குதற் மானிடர்க்கு அழகு!’

’உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு என்பது தவறு... எல்லோருக்குமே அது அழகு. `உண்டி சுருங்குதல் பண்டிக்கு (வயிற்றுக்கு) அழகு’ என்றொரு கருத்தும் இருக்கிறது. எது எப்படியோ உணவை அளவோடு உட்கொண்டால், இடுப்பைச் சுற்றித் தேவையற்ற சதை வளர்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. சமீப காலமாக உயரத்துக்கேற்ற எடையைப் பொறுத்தே (Body Mass Index), உடல் பருமனின் தீவிரம் நிர்ணயிக்கப்படுகிறது. உணவின் அளவை முறைப்படுத்திக்கொண்டால் உயரத்துக்கேற்ற எடையோடு நடைபோடலாம். ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி... அளவான உணவைச் சாப்பிடுவது முறையானது.

அனைத்து உறுப்புகளுக்கும் ஓவர் டைம்!

சாப்பிட்ட அதிக உணவிலிருந்து கிடைக்கும் குளூக்கோஸை ஈடுசெய்ய, கணையத்திலிருந்து (Pancreas) வழக்கத்தைவிட அதிகளவில் இன்சுலின் சுரக்கும். அதிகமாகச் சாப்பிடுவதால், செரிமானத்துக்காக இயங்கும் உறுப்புகளும் தங்கள் சக்திக்கு மீறி உழைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகின்றன. எப்போதாவது அதிகளவில் சாப்பிட்டால், வயிறு உப்புசம், உணவு எதுக்களித்தல், மந்தம் போன்ற அறிகுறிகள் தோன்றும். தொடர்ந்து பல நாள்கள் அதிஉணவில் திளைத்தால், நோய்களின் ராஜாங்கம் தொடங்கிவிடும். உடல் பருமனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பித்தப்பைக் கற்கள், இதயநோய்கள், மனச்சோர்வு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிற்றறை விரிவடையும் தன்மை உடையது (Rugae அமைப்பின் காரணமாக). அதற்காக அதன் விரிவடையும் திறனைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்கு சாப்பிடுவதென்பது உடல்நலத்துக்கு உகந்ததல்ல. 

சர்க்கரை நோய்

பள்ளித் தொப்பை:

பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, கொஞ்சம்கூட சாரமே இல்லாத துரித உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்கிறார்கள். இதன் காரணமாக பள்ளிப் பருவத்திலேயே தொப்பைகளைச் சுமந்துகொண்டு, அதன் தொடர்ச்சியாக தொற்றாத நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள். ஓடி, ஆடி விளையாடவேண்டிய பள்ளிப்பருவத்தில் விளையாடாமல், தொலைக்காட்சியின் முன்பும், கம்ப்யூட்டரின் முன்பும் அமர்ந்தநிலையிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால், அதிக கலோரிகள் கரைவதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப்போல கொழு கொழுவென்று இருந்தால்தான் ஆரோக்கியம் என்று எண்ணி, தேவையற்ற உணவுப் பொருள்களை அளவுக்கு மீறிக் கொடுப்பதும் இள வயதில் உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணம்.

காத்திருந்த நாள்கள்:

வருடத்துக்கு சில நாள்களில் மட்டும் நடைபெற்ற திருவிழாக்களில் பரிமாறப்படும் நெல்லரிசி உணவுக்காகவோ, அசைவ உணவுக்காகவோ, இடுப்பில் கட்டிய வேட்டியை இளக்கிக்கொண்டு ஆசைதீர அதிகமாகச் சாப்பிட்டு, பின்னர் அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, அதி உணவை ஈட்டுகட்டினார்கள் முந்தைய தலைமுறையினர். ஆனால் சுவைக்கு அடிமையாகி, உணவை அதிகளவில் உட்செலுத்துவதற்காக, உணவு உண்ணும் ஒவ்வொரு பொழுதிலும் இடுப்புப் பட்டையை (Belt) இளக்கிவிட்டு, பின் அசையாமல் கம்ப்யூட்டரின் முன்னே அடைக்கலம் அடையும் இன்றைய தலைமுறையில்தான் அதி உணவின் பாதிப்புகள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. 

விழாக்கால உணவு

ஆசையைத் தூண்டும் உணவகங்கள்:

உணவகங்களுக்குச் சென்று அளவுச் சாப்பாட்டை தவிர்த்துவிட்டு (லிமிட்டெட் மீல்ஸ்), அன்லிமிடெட் மீல்ஸ்சை முழுக்கட்டு கட்டிவிட்டு, மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம். லிமிடெட் மீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டால், ஏதோ கெளரவக் குறைச்சலாகப் பார்க்கும் நிலை இன்று. அதிலும் சில உணவகங்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க, `அனைத்து வகையான அசைவ உணவுகளையும் சாப்பிடலாம், விலையோ மிகக் குறைவு’ என்ற ரீதியில் நம்மை சுவைக்கு அடிமையாக்க விளம்பரங்களின் மூலம் சுண்டி இழுக்கின்றன. சுவைக்கு அடிமையாகி, அடிக்கடி ஒரே வேளையில் அதிகளவில் சாப்பிடும்போது, உணவகங்களில் வியாபாரமும் அதிகரிக்கும், சாப்பிட்ட நமக்கு தொந்தரவுகளும் பெருகும். இந்தியப் பெருநகரங்களில், உணவுக்கு இடையில் சாப்பிடப்படும் நொறுக்குத்தீனிகள், ஒரு வேளை முழு உணவு கொடுக்கும் கலோரிகளைவிட, அதிக அளவில் கலோரிகள் கொடுக்கின்றனவாம்! அப்புறம் என்ன... பூதாகரமாகக் காட்சியளிக்கும் உடலைக் குறைக்க முடியாமல் அவதிப்படும் சூழல்தான். 

குறள் சொல்லும் உண்மை:

`தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்…’ என்று அதிகமாகச் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் உண்டாகுமென்று குறள் உணர்த்தியது பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன்னர். `இரைப்பையில் உருவாகும் பசித்தீயை உணர்ந்து, உணவின் அளவை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ’பசித்தீ’ என்று அவர் குறிப்பிடுவது, செரிமானச் சுரப்பிகளின் அளவீடு மற்றும் மூளையில் உண்டாகும் பசியுணர்வின் செயல்பாடு! 

மன அழுத்தம்

செரிவூக்கி மருந்துகள்:

தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்… ’அதிக உணவுகளை ஒரே நேரத்தில் நீங்கள் சாப்பிடும்போது, எங்களது ’செரிவூக்கி சுரப்பு’ (Synthetic Digestive enzymes) மாத்திரையைப் பயன்படுத்துங்கள்… அதி உணவின் காரணமாக செரிமானத் தொந்தரவுகள் ஏற்படாது.’ என்ற வகையில் ஒளிபரப்பாகிறது. தவற்றைத் திருத்திக்கொள்ளச் சொல்லாமல், `தவறு செய்யுங்கள், அதற்கான வழிவகைகளையும் நாங்களே சொல்கிறோம்’ என்ற வகையில் இருப்பது எவ்வளவு கேவலம். செரிமானப் பகுதியில் இயற்கையாகச் சுரந்துகொண்டிருக்கும் செரிவூக்கிச் சுரப்புகளுக்குப் பதிலாக எதற்காகச் செயற்கை செரிவூக்கிகள்? சிந்திப்போம்!

சோமாலியா

உணவு முரண்:

ஒரு மூலையில் உணவில்லாமல் அவதிப்படும் வறுமைநிலையில் இருப்பவர்களுக்கு, சத்துகளும் ஊட்டமும் கிடைக்காமல், உடல் நலிந்து ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மறு மூலையில் அளவுக்கு மீறி அதிக உணவை உட்கொள்பவர்களுக்கு, ஆரோக்கியம் சீர்கெட்டு பல்வேறு நவீன நோய்கள் உண்டாகின்றன. எவ்வளவு உணவு முரண்? 

 

சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிகமாகச் சாப்பிடுவது தவறு. பேசிக்கொண்டும் தொலைக்காட்சியில் தீவிரமாக மூழ்கியபடியும் சாப்பிடுபவர்களுக்கு, உணவின் அளவைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. பசித்தீ மந்தப்பட்டு, செரியாமை தலை தூக்கும். தொடர் சங்கிலியாக நோய்களின் தாக்கத்தால் உடல் பலவீனமாகும். உடல் இயற்கையாக வெளிப்படுத்தும் பசியுணர்வின் தூண்டுதலுக்கு ஏற்ப உணவின் அளவை அமைத்துக்கொள்வதுதான் சிறப்பு. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமானது ஒளவையின் அசரீரி… மீதூண் விரும்பேல்!

https://www.vikatan.com/news/health/114988-always-have-some-space-in-your-tummy-for-healthy-life.html

  • தொடங்கியவர்

பக்கற்றில் அடைக்கப்பட்ட உணவு வகைகளால் குடல் அழற்சி

 

 

வணிக வளாகங்களிலும், சந்தையிலும் தற்போது பெரும்பாலான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, அதனை பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்கிறார்கள். இதனை இன்றைய இளையத்தலைமுறையினர் நேரமின்மை காரணமாக ஓர்டர் செய்தோ அல்லது வாங்கியோ சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு குடல் அழற்சி நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Food_preservation_-_vacuum_packing.jpg

பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் உணவுகளில் சாப்பிடுவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் சேதமடைகின்றன அல்லது அழிகின்றன அல்லது செயல்படாமல் முடங்கிபோகின்றன. இதனால் குடலில் உணவுகள் முழுமையாக ஜீரணம் ஆகாமல் வெளியேறுகிறது. இதனால் குடலில் இயல்பாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டில் சமச்சீரற்றத்தன்மை உருவாகிறது. இது மலச்சிக்கலையும், அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் இவ்வகையான உணவு வகைகள் சளியை உருவாக்குகின்றன என்றும் எடுத்துரைக்கிறார்கள். அத்துடன் பசியின்மை, குடல் புண், க்றோன் டீஸீஸ், திடீர் எடைக் குறைவு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

மேலும் அண்மைய ஆய்வின் படி உலகம் முழுவதும் 5 மில்லியன் மக்கள் இது போன்ற பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால், முதலில் இவ்வகையான உணவு வகைகளை முற்றாகத்தவிர்க்கவேண்டும். வேறு வழியில்லாமல் இதனை சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால் குறைவாக சாப்பிடலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீரை நிறைய அருந்தவேண்டும்.

டொக்டர் சந்திரசேகர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/30164

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.