Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரும்,முஸ்லிம்களும் கள்ளத் தோணிகளாம்-ஞானசாரதேரர் கண்டுபிடிப்பு

Featured Replies

தமிழரும்,முஸ்லிம்களும் கள்ளத் தோணிகளாம்-ஞானசாரதேரர் கண்டுபிடிப்பு
 
 
தமிழரும்,முஸ்லிம்களும் கள்ளத் தோணிகளாம்-ஞானசாரதேரர் கண்டுபிடிப்பு
சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாட்டில் மோசமான வன்முறைகள் வெடிக்கும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞானாசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு இன்று கண்டியில் கண்டனப் பேரணியொன்றை நடத்திய ஞானாசார தேரர் தமிழர்களும், முஸ்லி ம்களும் இந்தியாவிலிருந்து கள்ளத்தோணிகளில் வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
அதேவேளை சிங்கள பௌத்த மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் பௌத்த பிக்குகளை ஒடுக்க அரசாங்கம் சதித்திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும் குற்ற ம்சாட்டிய அவர், சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களான மகா நாயக்கத் தேரர்கள் இணைந்து கூட்டாக சங்க ஆணையை வெளியிட வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.
 
முஸ்லிம்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பு, ஏனைய பௌத்த பிக்குகள் தலைமையிலான அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த இந்த பேரணி கெட்டபே விகாரைக்கு முன்னால் ஆரம்பமாகி ஊர்வலமாக கண்டி தலதா மாளி கை வரை சென்றது. 
 1479572531_download.jpg
இதில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுவரும் மங்களாராம விகாரையின் தலைமை பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் உட்பட பௌத்த பிக்குகள் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர். 
 
இவர்கள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில், தலதா மாளி கைக்கு முன்னால் கூடியிருந்த மக்கள் மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய லாளர் உரையாற்றினார்.  
 
அங்கு உரையாற்றிய அவர்  ” தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நாட்டின் எந்தவொரு பிர தேசத்திலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவும், சுதந்திரமாக வாழவும் முடியும் என்றால்,அதேபோல் பள்ளிவாசல்களை அமைத்து, ஒலிபெருக்கிகள் மூலம் சத்தமி ட்டுக்கொ ண்டு தமது மத அனுட்டானங்களை மேற்கொள்ள முடியும் என்றால் ஏன் இந்த நாட்டை கட்டியெழுப்பி, எழுத்துமூலம் வரலாற்று உரிமைக்கு உரிமை கொண்டாடும் சிங்கள பௌத்த இனத்திற்கு அந்த உரிமை மறுக்கப்படுகின்றது என்று கேட்க விரும்புகின்றோம்.
 
அதேபோல் கள்ளத்தோணிகளைப் போல் தொடர்ந்தும் எம்மால் வாழ முடியாது என்ற செய்தி யையும் எமது தலதா பெருமானிடம் முறையிடவே இங்கு கூடியிருக்கின்றோம்.
 
அதேவேளை இந்த நாட்டின் வெட்கக் கேடான, முதுகெழும்பில்லாத ஆட்சியாளர்கள், தமது இனம், மதம் தொடர்பான அனைத்து கடப்பாடுகளையும் மறந்து செயற்பட்டுவருகின்றனர்.
 
மேற்குலகத்திற்கும், ஐரோப்பாவிற்கும் கைப்பொம்மைகளாக இருக்கும் இந்த பொம்மை ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளை அடக்கி, ஒடுக்க ஆரம்பித்துள்ளனர்.
 
சில அமைச்சர்கள் இந்த நாட்டின் காவல்தெய்வங்களாக கருதப்படும் பௌத்த பிக்குகளை ஏளனப்படுத்தும் செயல்களிலும் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளனர். அது மாத்திரமன்றி நாட்டில் இன்று முஸ்லிம் கடும்போக்குவாதம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
 
ஆனால் எமது ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாம் இந்த வேண்டுதல் பூஜையை முடித்துக்கொண்டு மல்வத்து பீட மகாநாயக்கத் தேரரை சந்திக்க வுள்ளோம். சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைவர்களாக சியாம் பீடத்தின் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து சிங்கள பௌத்த இனம் எதிர்நோக்கும் இந்த பிரச்சனைகளை எடுத்துக்கூறி அவற்றுக்கு நீதியை கோரவுள்ளோம்.
 
மகாநாயக்க தேரர்கள் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரரன் வழங்கிய சொத்து க்களை அனுபவித்துக்கொண்டு அவன் கூறிய கடமைகளை மாத்திரம் செய்து கொண்டி ருக்காது சிங்கள பௌத்த இனம் எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடிகள் குறித்தும் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.
 
இந்த கடப்பாட்டை அவர்கள் செய்யத் தவறினால் சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்ப தற்காக பல்வேறு மட்டங்களில் போராடிவரும் எமது இளைய தலைமுறையினர் உட்பட பௌத்த ஆதரவாளர்கள், எவ்வாறான போராட்டத்தை தெரிவுசெய்தாலும் அவற்றுக்கு நாம் பொறுப்பு கூற  மாட்டோம்.
 
இந்தப் பிரச்சனைகளால் கடும் விசனமடைந்துள்ள எமது பிள்ளைகள், கற்களையும், பொல்லுகளையும் எடுத்துக்கொண்டு தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்பட்டால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதை எண்ணியும் பார்க்க முடியாது. அதனால் இந்த அபா யத்தை புரிந்துகொண்டு,இந்த இளைய பௌத்த பிக்குகள் மற்றும் இளைஞர்களை இனி மேலும் பலிகொடுக்காது, பொம்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக சங்க ஆணையை வெளியிட வேண்டும்.
 
சிங்களவர்களுக்காக நாட்டை எவ்வாறு ஆட்சிசெய்வது என்பதை தெளிவுபடுத்தி மகா நாயக்கத் தேரர்கள் இந்த ஆட்சியாளர்களுக்கான சங்க ஆணையை பிரகடனப்படுத்த வேண்டும். இந்த நாட்டு சொத்துக்கள் தமிழனுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவர்களின் தாய், தந்தையரினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சொத்து க்களும் அல்ல. இவற்றை எமது பாட்டன், பூட்டனே உயிரைப் தியாகம்செய்து பாதுகாத்தனர்.
 
ஆனால் அவற்றின் பலனை அனுபவித்துவரும் தமிழனும், முஸ்லிம்களும் சிங்களவனின் தலையில் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். அதனால் பொம்மை ஆட்சியாளர்களுக்கு சங்க ஆணையை வெளியிடுமாறு நாம் எமது மகாநாயக்கத் தேரர்களிடம் வலியுறுத்திக் கேட்டு க்கொள்கின்றோம் என்றார்.

http://www.onlineuthayan.com/news/20397

 

தமிழர்களும், முஸ்லிம்களும் கள்ளத்தோனிகளில் வந்தவர்கள் ; ஞானாசார தேரர்

IBC

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நவீனன் said:
கள்ளத்தோணிகளைப் போல் தொடர்ந்தும் எம்மால் வாழ முடியாது என்ற செய்தி யையும் எமது தலதா பெருமானிடம் முறையிடவே இங்கு கூடியிருக்கின்றோம்.
 

சிங்களவர்களாகிய நாங்கள் கள்ளத்தோணிகளே என்று ஞானாதார தேரர் வெளிப்படையாகத்தானே சொல்லியிருக்கிறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image result for patna buddha images

உண்மையில் சிங்களவர்களுக்கு கொஞ்சம் பாஜகவின் பாபர் மசூதி போல  .. பாட்னாவில் கொஞ்சம் கிளுகிளுப்பு தேவைபடுது .. இங்க அடிச்சால் கட்டாயம் அவனுக்கு வலிக்கும் ..

ஆனால் என்ன செய்வது அது தமிழ்நாட்டில் இல்லையே .? வடக்கதியானிடம் இருக்கு..!

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

பௌத்த அமைப்புகளின் பேரணியின்போது  "பள்ளி வீதி" பெயர்ப்பலகைக்கு சேதம்

Published by MD.Lucias on 2016-11-19 22:29:41

 

 

criminal-damage-broken-window-northern-i(எம்.சி.நஜிமுதீன்)

"பௌத்த மதத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புகள் ஒன்றி‍ணைந்து ஏற்பாடுசெய்த பேரணி இன்று கண்டியில் நடைபெற்றது. 

கெட்டம்பே மைதானத்தில் இன்று பி.ப. 2.30 மணியளவில் ஒன்றுகூடிய பௌத்த அமைப்பினர் அங்கிருந்து தளதா மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.

 தளதா மாளிகையை அண்மித்த பகுதியை சென்றடைந்து  அங்கு உரை நிகழ்த்தியுள்ளதுடன் பின்னர் மல்வத்தை மகாநாயக்க தேரரை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.

பேரணியாகச் சென்றவர்கள் கண்டி லைன் பள்ளி வீதியின் தொடக்கத்திலுள்ள பெயர்ப்பலகை சேதமாக்கியுள்ளனர். அத்துடன் பேரணியில் முஸ்லிம்களுக்கெதிராகவும் அரசாங்கத்திற்கெதிராகவுமான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் இனவாதாக்  கோஷங்களையம் எழுப்பியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/13650

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.