Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு

Featured Replies

அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு
 
 
அமரர் நடராஜா ரவிராஜின் திருவுருவச்சிலை திறப்பு
கொழும்பு - நாரஹேன்பிட்டியில் வைத்து கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு   அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை சர்வமத வழிபாடுகளுடன் இன்றுமாலை திறந்து வைக்க  ப்பட்டது.
 1479653568_download.jpg
அமரர் நடராஜா ரவிராஜின் சிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண, லங்கா நவ சம சமாஜ கட்சியின் பொது செய லாளர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
 
திறந்து வைக்கப்பட்ட சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.
1479653585_download%20%282%29.jpg
அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி பொன் விழா மண்டபத்தில் நினைவுக் கூட்டமும் இடம்பெ ற்றுள்ளது.இந்த கூட்டத்தில்  நடராஜா ரவிராஜின் திருவுருவப்படத்திற்கு அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர்  மலர்மாலை அணிவித்ததுடன் அஞ்சலிசெலுத்தினர்.
 
நிகழ்வில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜி த்த சேனாரட்ண, லங்கா நவ சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணா ரட்ன, கல்முனை மாநகர சரபை முன்னாள் மேயர் நிஸாம் காரியப்பர், நாடாளுமன்ற உறுப்பி னர் எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சீ.தவராசா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண கல்வியமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1479653610_download%20%281%29.jpg
 
1479653628_download%20%283%29.jpg
 
15151318_802330183239399_580456086_n.jpg
 
15087021_802330196572731_1900376051_n.jpg
 
15151044_802330209906063_354865855_n.jpg

http://www.onlineuthayan.com/news/20424

  • தொடங்கியவர்
தமிழரின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு புரியவைத்தவர் ரவிராஜ்-அமைச்சர் ராஜித
தமிழரின் பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு புரியவைத்தவர் ரவிராஜ்-அமைச்சர் ராஜித
ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். சிங்கள மக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி னார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3.00 மணியளவில் சாவகச்சேரியில் இடம்பெற்ற அமரர் ரவிராஜின் 10ஆவது ஆண்டு நினைவுதினத்தில் உரைய்ற்றும்போதே மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது
 
ரவிராஜ் என்னுடைய நல்ல நண்பர்.. தமிழ் மக்களினுடைய பிரச்சினையை  தென்னிலங்கை மக்களுக்கு அவர்களுடைய மொழியாகிய சிங்ளத்தில் எடுத்து கூறினார். ஒருவித மிதவாதப் போக்குடன் தமிழ் மக்களுடைய  அரசியலை தமிழ்தேசியக் கூட்டமைப்பினூடாக முன்வை த்திருந்தார். 
 
இவர் தீவிரவாத  இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கவில்லை தென்னில ங்கை மக்களுக்கு வட இலங்கை மக்களின் துயரங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளு க்கூடாக கொண்டு சென்றார். நான் தென் இலங்கை சார்பிலும் அவர் வட இலங்கை சார்பி லும் பல  அரசியல் நிகழ்சிகளில் பங்குபற்றியிருந்தோம்.
 
ரவிராஜ் தமிழ் மக்களிடம் மாத்திரமன்றி சிங்கள மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருந்தார். ரவிராஜ் பேசும் சிங்களத்தினை சிங்கள மக்கள் ரசித்தனர்.  சிங்களமக்கள் விளங்கக்கூடிய வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவார். ரவிராஜ் இனவாதியல்ல. தமிழ் மக்களினுடைய உரிமைக்காக போராடினார். அவ்வாறான நிலையினை ஏற்படு த்தத்தான் முயற்சிக்கிறோம்.
 
அமரர் ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தமிழ்மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்  என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக் கூறி இருக்கிறேன். அமரர் ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஐசிங்கம் ஆகியோர் தீவிரவாதப் போக்கை கடைப்பிடிக்காது மிதவாதப் போக்குடன்  எம்முடன் பயணித்தனர். ஆனால் மகிந்தராஜபக்ச கூறினார் நீங்கள் கூறுவது எனக்கு விளங்குகிறது ஆனால் இராணுவத்திற்கு புரியவில்லை என்றார்.
 
ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால் அவருடன் பலவற்றை மிதவாதப் போக்குடன்  பேசி பெற்றிருக்கலாம். ஆனால்  அவருடைய  இழப்பால் பலவற்றை  இழந்துவிட்டோம்.ஆயினும் நாம் நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக 6 உபகுழுக்களாக பிரிந்து  முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அந்த குழுவினுடைய அறிக்கையை அமுலாக்குவதே ரவிராஜினுடைய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதாக அமையும்.
 
1985ஆம் ஆண்டு  எவ்வாறான நெருக்கடி நிலவியது என்பதை நாம் அறிவோம். சிங்கள இன வாதிகள் தமிழருக்கு எதிராக செயற்படடனர். இன்றும் இனவாதிகள் தீவிரவாத போக்குடனே இருக்கிறார்கள். அமரர் ரவிராஜ் என்ன  இலட்சியத்திற்காக பாடுபட்டாரோ அவரது இலட்சி யத்தை அடைய பாடுபடுவோம். எனத் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/20427

மாமனிதர் ரவிராஜை அவமதித்த மாவை – கதறிய சகோதரி – சுமந்திரன் சரவணபவானைத் திட்டிய இளைஞர்

இன்று சாவகச்சேரியில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் மாவையின் செயலால் அவர் சகோதரி அதிருப்தி அடைந்து கதறியுள்ளார்.

மாமனிதரின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற மாவை சேனாதிராஜா பாதணியைக் கழற்றாமல் மாலை அணிவித்துள்ளார். இதை அவதானித்த அவரது சகோதரி ‘அண்ணை செருப்போடு மாலை அணிவித்து உன்னை அவமதித்துவிட்டார்கள்’ என்று ஒப்பாரி வைத்து அழுததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவெளை அங்கு நின்ற இளைஞன் ஒருவர் மாவையின் செயலால் ஆத்திரமடைந்து மாவையைத் திட்டியதுடன், சுமந்திரன் மற்றும் சரவணபவனின் செயற்பாடுகளை விமர்சித்ததால் அங்கு சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://thuliyam.com/?p=48835

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Athavan CH said:

மாமனிதர் ரவிராஜை அவமதித்த மாவை – கதறிய சகோதரி – சுமந்திரன் சரவணபவானைத் திட்டிய இளைஞர்

இன்று சாவகச்சேரியில் நடைபெற்ற மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் மாவையின் செயலால் அவர் சகோதரி அதிருப்தி அடைந்து கதறியுள்ளார்.

மாமனிதரின் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற மாவை சேனாதிராஜா பாதணியைக் கழற்றாமல் மாலை அணிவித்துள்ளார். இதை அவதானித்த அவரது சகோதரி ‘அண்ணை செருப்போடு மாலை அணிவித்து உன்னை அவமதித்துவிட்டார்கள்’ என்று ஒப்பாரி வைத்து அழுததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவெளை அங்கு நின்ற இளைஞன் ஒருவர் மாவையின் செயலால் ஆத்திரமடைந்து மாவையைத் திட்டியதுடன், சுமந்திரன் மற்றும் சரவணபவனின் செயற்பாடுகளை விமர்சித்ததால் அங்கு சில நிமிடங்கள் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://thuliyam.com/?p=48835

அவையள் ரவிராஜை வைச்சு அரசியல் லாபம் தேடவெல்லொ வந்தவையள். மனசுத்தி இல்லாத மானிடங்கள்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதருக்கு வைக்கப்படும் உருவச் சிலையை திருவுருவச் சிலை என்று அழைப்பது சரியா தவறா?

  • தொடங்கியவர்

ரவிராஜின் திரு உருவச் சிலை

 

 

ரவிராஜின் திரு உருவச் சிலை

 

அமரர் நடராஜா ரவிராஜின் 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி நகரில் அன்னாரது உருவச்சிலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



குறித்த திரு உருவ சிலையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மலர் மாலை அணிவித்து கெளரவமளித்தனர்.

மேலும் இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் தேசிய மொழிகள், கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=2299&mode=head

  • தொடங்கியவர்
வன்வலுவைவிட மென்வலுவால் பல வெற்றிகள்-சுமந்திரன் பெருமிதம்
 
 
வன்வலுவைவிட மென்வலுவால் பல வெற்றிகள்-சுமந்திரன் பெருமிதம்
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வன்வலுவை விட மென்வலு அரசியல் நடவடிக்கைகளின் மூலமே பல வெற்றிகளை ஈட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து ள்ளார். 
 
இதனால் தன்னை மென்வலு அரசியல்வாதி என்று அழைப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்து ள்ளார். 
 
2016ஆம் ஆண்டிற்குள் தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்தபோது, பலர் எள்ளி நகை யாடியதாகவும் இன்றைக்கும் நகைப்பதாகவும் குறிப்பிட்ட சுமந்திரன், ஆனால் இன்று அந்தக் கூற்று நிறைவேறி வருவதாகவும் குறி ப்பிட்டுள்ளார். 
 
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் உண்மையில் எதனைக் கேட்கி ன்றார்கள். நியாயத்தைக் கேட்கின்றார்கள். அவர்களுக்குரியதைத் தான் கேட்கின்றார்கள். எங்களிடத்தில் இருக்கின்றதை பறி ப்பதற்கு முனையவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுவது சிங்கள அரசியல் தலைவர்கள் பலருக்கு பரீட்சியமான அரசியல் போக்காகக் காணப்பட்டது. 
 
ஆகையினால் தான் அவர்களிடம் சென்று நாங்கள் கேட்பது உங்களுடைய உரிமையை அல்ல. உங்களுக்குச் சமமான எங்க ளுடைய உரிமை என்று சொல்லுவது அவர்களுக்கு அச்சமான விடயம். அப்படிச் சொல்லுகின்ற போது நியாயமாகச் சிந்திக்கின்ற சிங்கள மக்கள், அவர்கள் சொல்லுவது சரிதான் எங்களிடத்தில் அவர்கள் எதுவும் பறிக்கவில்லை. நாங்கள் ஒரு மக்களாக எந்த உரி த்தை வைத்திருக்கின்றோமோ அதே சம உரித்தை அவர்களும் இந்த நாட்டில் வைத்திருப்பதற்கு தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். அதிலே என்ன தவறு என்று நினைக்கத் தோன்றுவார்கள். 
 
இவ்வாறு நினைக்கின்ற போதுதான் இன சமத்துவம் உருவாகும். எண்ணிக்கை அல்ல பெரிது. ஜனநாயகம் என்பது தலைகளை எண்ணுவது இல்லை. எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனால் தமிழ் மக்களை அடக்குவது தவறு. அவர்களும் மக்களாக தங்களுடைய தனித்துவத்தை அவர்களுடைய பிரதேசங்களிலே நிலைநிறுத்தி ஆளக்கூடிய விதத்தில் வாழுவதிலே என்ன தவறு என நியாயமாக சிந்திக்க ஆரம்பிப்பார்கள். 
 
அது ரவிராஜ் ஆரம்பித்த ஒரு பயணம். பேச்சினால் நியாயத்தை எடுத்தியம்புவதால் கூடி பழகுவதனால் சிங்கள மக்களையும் எங்க ளுடைய வழிக்குத் திருப்பலாம் என்ற மிகவும் ஆழமான நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்தது தான் காரணம். ரவிராஜினுடைய கொள்கை பேசிப் பழகி மக்களிடையே வெல்லுகின்ற கொள்கை என்றும் அவர்தெரிவித்தார். 

http://www.onlineuthayan.com/news/20460

5 hours ago, நவீனன் said:

வன்வலுவைவிட மென்வலுவால் பல வெற்றிகள்-சுமந்திரன் பெருமிதம்

 

 

 

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட 'மாமனிதர்' - அருந்தவபாலன் கவலை

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் தலைவர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் அவரால் எழுதப்பட்ட பதிவு:

“மாமனிதன் இரவிராஜ் அவர்களின் மக்களை நேசிக்கும் உயர்ந்த பண்புகள் மட்டுமன்றி அவரது இறப்பும், வழங்கப்பட்ட மாமனிதர் பட்டமும் இணைந்தே அவருக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்தது.

அவ்வகையில் அவரது சிலைக்கல்லின் அடியில் மட்டுமல்ல அழைப்பிதழலிலும் கூட அந்த உயர் மதிப்பளிப்பு இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையானது. எவ்வாறாயினும் அம்மாமனிதனுக்கு சிலைவைக்கப்பட்டதை நாம் பாராட்டுவோம்”

http://thuliyam.com/?p=48909

  • தொடங்கியவர்

அமரர். நடராஜா ரவிராஜின் சிலை திறந்துவைப்பு

இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள பல ஆண்டுகளின் பின்னர் சந்தர்ப்பம் - சம்பந்தன்.

ஆயுதப் போராட்டத்தால் முடியாததை மென்வலு அரசியலால் சாதித்துள்ளோம்; சுமந்திரன்

 

ரவிராஜின் கொள்கையை கூட்டமைப்பு பின்பற்ற வேண்டும் ; தவராசா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.