Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து

Featured Replies

பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து 

 

 

பிரேசில் நாட்டின்  செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின்  மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Plane-carrying-football-players-from-Bra

குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

http://www.virakesari.lk/article/13980

கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ?

 

பொலிவியாவிலி்ருந்து கொலம்பியா வந்து கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிவிட்டதாக கொலம்பியாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மெடலின்
 விமான விபத்து நடந்த மெடலின் நகரைக் காட்டும் படம்

கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அவ்விமானத்தில் 72 பயணிகள் இருந்தனர்.

தனியாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த விமானத்தில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சப்பகோயென்ஸ் கால் பந்து குழுவினர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இக்குழுவினர் மெடலின் நகரைச் சேர்ந்த அட்லெடிகோ நேசியோனால் கால்பந்து குழுவுடன் தென் அமெரிக்கக் கால்பந்து கிளப் கோப்பையின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவிருந்தனர்.

http://www.bbc.com/tamil/global-38141050

  • தொடங்கியவர்

பிரேசில் கால்பந்து வீரர்களின் விமான விபத்து புகைப்படம் வெளியானது

 

பிரேசில்

பிரேசில் கிளப் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம், கொலம்பியாவில் மலைப்பகுதியில் நொறுங்கி விழுந்தது. இதில் பயணித்த வீரர்கள் உள்பட பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இரண்டாம் நிலை கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் COPA SUDAMERICANAதொடர், 2002ல் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, ஈக்வேடார் நாடுகளில் உள்ள கிளப்கள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டுக்கான COPA SUDAMERICANA ஃபைனல் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளன. முதல் கட்ட ஃபைனல் கொலம்பியாவில் உள்ள மெட்லின் நகரில் புதன்கிழமை நடக்க உள்ளது. இதில் பிரேசிலை சேர்ந்த சபிகோயன்ஸ் கிளப் மற்றும் கொலம்பியாவை சேர்ந்த அட்லெடிகோ நேசனல் கிளப் அணிகள் மோத இருந்தன. ஃபைனலில் பங்கேற்பதற்காக பிரேசில் சபிகோயன்ஸ் அணியினர் பொலிவியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். அந்த விமானத்தில் வீரர்கள் உள்பட 81 பேர்  பயணித்தனர்.

Brazil Football Team

அந்த விமானம் மெட்லின் சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு நொறுங்கி விழுந்ததாக தகவல் வெளியானது. விபத்து நடந்திருப்பதை மெட்லின் விமான நிலையம்  உறுதிப்படுத்தியது. விமானத்தில் பயணத்தவர்களின் நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. ஆனால், பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இருப்பினும், சிலர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக மெட்லின் நகர மேயர் ஃபெடரிகோ தெரிவித்துள்ளார்.

Brazin plane crash

‛‛பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுவினர்  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்ததா என தெளிவாகத் தெரியவில்லை’’ என ஃபெடரிகோ தெரிவித்தார். இந்நிலையில் சற்று முன் வெளியான விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படம், அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.  ஆனாலும் விமானம் வெடித்ததாக பதிவாகவில்லை என்பதால் சிலரேனும் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை, போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்படுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக 1958-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்று விட்டு பெல்கிரேடில் இருந்து பிரிட்டன் திரும்பிய போது, விமானம் விபத்தில் சிக்கியதில் எட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் உள்பட 21 பேர் பலியாகினர்.

http://www.vikatan.com/news/sports/73723-plane-carrying-brazilian-football-team-chapecoense-crashes.art

  • தொடங்கியவர்

பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விபத்து: 76 பேர் உயிரிழப்பு

 

பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விபத்து: 76 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் உள்ளூர் கால்பந்து விளையாட்டு வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பியா நாட்டில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் 25 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

76 பேர் உயிரிழந்திருப்பதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐவரில் மூவர் கால்பந்து விளையாட்டு வீரர்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் இருந்து கொலம்பியா நாட்டின் மெடலின் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு CP2933 என்ற விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தில் பைலட், சிப்பந்திகள் 9 பேர், 72 பயணிகள் என மொத்தம் 81 பேர் இருந்துள்ளனர்.

விபத்து பகுதியிலிருந்து இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோபா சூடாமெரிக்கா கோப்பைக்காக பிரேசில் நாட்டின் சேப்பகான்ஸே கால்பந்து அணி நாளை அட்லெடிகோ அணியுடன் விளையாடவிருந்தது.

போட்டி நடைபெறும் மெடலின் நகருக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

http://newsfirst.lk/tamil/2016/11/பிரேசில்-கால்பந்து-வீரர்/

  • தொடங்கியவர்

 

கால்பந்து அணியினரின் விமானம் வீழ்ந்தது - காணொளி

கொலம்பியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் பிரேசிலின் சாப்போகொயென்ஸ் ரியல் கால்பந்து அணியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உட்பட குறைந்தது எழுபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எரிபொருள் குறைவினால் விபத்து ஏற்பட்டதாக ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

எரிபொருள் குறைவினால் விபத்து ஏற்பட்டதாக ஒரு சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில்  மின்சாரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி, தரையில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்துக்கு... அறிவித்து விட்டு, விமானத்தில் உள்ள எரிபொருளை வெளியே  திறந்து விட்டதால்... விமானம் தரையில் விழுந்தும் எரியாமல் இருந்ததால்... 5 பேர் காப்பாற்றப் பட்ட தாக இன்னொரு ஊடகம் தெரிவிக்கின்றது.

மேலே உள்ள படத்தில்... விமானம் எரிவதைப் போலுள்ள படத்தை வீரகேசரி போட்டு,  
தான்... ஒரு,  "சில்லறை" என்று காட்டியிருக்கு.   

  • தொடங்கியவர்

இந்தக் கதை இப்படி முடிந்திருக்கக் கூடாது! #RIPChapecoense

CybfeF3WQAABtsT.jpg

இன்று எனக்கு சாவு வந்தால், சந்தோஷமாக  சாவேன். இது கோபா சுல் - அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு சபிகோயன்ஸ் அணி முன்னேறிய உற்சாகத்தில், அணியின் பயற்சியாளர் கெயிவோ ஜுனியர் சொன்னது. மனுஷன் எந்த நேரத்தில் இதைச் சொன்னாரோ, விமான விபத்தில் ஒட்டுமொத்த அணியினரையும் அள்ளிச் சென்று விட்டான் காலன். மிஞ்சியது மூன்று வீரர்கள்  மட்டுமே. கிட்டத்தட்ட, விபத்தொன்றில் ஒட்டுமொத்த குடும்பமும் மரணித்து விட்ட நிலை. 

பொலிவியாவில் இருந்து கொலம்பியா சென்ற விமானம், விழுந்து நொறுங்கியதில் 76 பேர் பலி என தகவல் வெளியான சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரல் ஆனது.

 

ஐரோப்பிய லீக் தொடருக்கு நிகராக கருதப்படும், தென் அமெரிக்க கண்டத்தில் நடக்கும் கிளப் அணிகளுக்கு இடையிலான சுல் அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு முதன்முறையாக முன்னேறிய மகிழ்ச்சியில், சபிகோயன்ஸ் அணியினர் டிரஸ்ஸிங் ரூமில்  இப்படி ஆர்ப்பரித்தனர். இன்று சபிகோ நகரமெங்கும் ஒப்பாரிச் சத்தம். 

பிரேசிலில் கால்பந்து கிளப் என்பது பாண்டி பஜாரில் விரிந்திருக்கும் கடைகளைப் போன்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஸ்பெஷல். அதில் சபிகோயன்ஸ் அணி இன்னும் ஸ்பெஷல். காரணம்...

சான்டா கேட்ரினா மாநிலத்தில் உள்ள சபிகோ நகரத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால் இந்த கிளப் சபிகோயன்ஸ் என பெயர் பெற்றது. சான்டா கேட்ரினா பகுதியில் கால்பந்தை மேம்படுத்தும் வகயைில் 1973ல் துவங்கப்பட்ட இந்த கிளப் ஆரம்பத்தில் ஃபுட்சால் (5 பேர் விளையாடும் கால்பந்து) தொடரிலும் ஜொலித்து வந்தது. கிளப் தொடங்கிய ஐந்தே ஆண்டில் ஸ்டேட் லெவல் சாம்பியன். இதுவரை நான்கு முறை சாம்பியன். பிரேசிலில் உள்ள கிளப்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், ஐந்தாவது டிவிஷனில் இருந்து படிப்படியாக முன்னேறி ஃபர்ஸ்ட் டிவிஷனில் விளையாடும் அளவில் முன்னேற்றம். அதிலும் 2016 சீசன் அவர்களுக்கு கொண்டாட்ட சீசன்.

சுல் - அமெரிக்கானா தொடரின் ஃபைனலுக்கு சபிகோயன்ஸ் அணி முன்னேறியதே பெரும் சாதனை. இந்த தொடரில் வலுவான அணிகளாக கருதப்பட்ட அர்ஜென்டினாவை சேர்ந்த இண்டிபென்டியன்டி, சான் லோரன்சோ கிளப்களை வீட்டுக்கு அனுப்பியது. அனல் பறக்கும் கோல்கள் இல்லை;  ரவுண்ட் -16 சுற்றில் வெற்றிக்கு ஸ்பாட் கிக்கை நம்பி இருந்தது என்றாலும், அணியின் கன்ஸிஸ்டன்ஸி பாராட்டுக்குரியது என்கின்றனர் பிரேசில் கால்பந்து நிபுணர்கள். அட்லெடிகோ மாட்ரிட் முன்னாள் வீரரான கிளிபர் சான்டானா தவிர்த்து, சபிகோயன்ஸ்  அணியில் வேறு வசீகர வீரர் இல்லை என்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான், படிப்படியாக முன்னேறி இங்கிலீஷ் பிரிமியர் லீக் சாம்பியன் ஆன லீஸ்டர் சிட்டியுடன் சபிகோயன்ஸ்  கிளப்பை ஒப்பிடுகின்றனர்.

Chapecoense

லீஸ்டர் சிட்டியைப் போல, இந்த சீசனில் சபிகோயன்ஸ் அணி, கோபா சுல் - அமெரிக்கானா சாம்பியன் ஆகும் என, சான்டா கேட்ரினா மாகாணமே எதிர்பார்த்திருந்தபோதுதான் இந்த துக்கம் அரங்கேறி உள்ளது.  ‛‛வேறொரு பணி காரணமாக என்னால் அணியினருடன் பயணிக்க முடியவில்லை. நான் அவர்களை வழியனுப்பியபோது, கனவை நனவாக்கப் போவதாக உறுதியளித்தனர். இன்று காலை அந்த கனவு முடிவுக்கு வந்து விட்டது. இது கிளப் அல்ல ஒரு குடும்பம். வெற்றி, தோல்வி என எல்லா நேரத்திலும் சிரித்திருந்தோம். இன்று உயிர் பிழைத்த வீரர்களுக்கு,  இதை மறக்க நெடுநாள் ஆகும். ஏனெனில், இறந்தவர்கள் அவர்களின் நெடுநாள் நண்பர்கள்’ என, அணியின் தலைவர் டேவிட் ஃபில்கோ இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

சுல் அமெரிக்கான தொடரின் ஃபைனல் இரண்டு கட்டங்களாக நடக்கும். முதல் கட்டம் கொலம்பியாவில் உள்ள மெட்லின் நகரில் புதன்கிழமையும், இரண்டாவது கட்டம் பிரேசிலில் உள்ள கியூரிடிபா நகரிலும் நடக்க இருந்தன. சபிகோயன்ஸ்  கிளப்பின் சொந்த மைதானமான அரீனா கோண்டா, பெரிய தொடரின் ஃபைனலை  நடத்துவற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்கவில்லை என்பதால், அங்கிருந்து 400 கி.மீ., தூரத்தில் உள்ள கியூரிடிபா நகருக்கு ஃபைனல் மாற்றப்பட்டது.

இந்த முறை நம் அணி பட்டம் வெல்லும். நம் வீரர்கள் கோப்பையுடன் வலம் வருவர். நம் நகரில் நவீன மைதானம் வரும் என காத்திருந்த சபிகோ நகர மக்களுக்கு, வீரர்களின் உடல்களை அனுப்பி வைத்து விட்டது காலம்.

http://www.vikatan.com/news/sports/73780-the-incredible-rise-of-brazilian-football-team-chapecoense.art

  • தொடங்கியவர்

கொலம்பிய விமான விபத்து: சப்பகோயென்ஸ் அணியினரின் துக்கத்தில் பங்கேற்ற கால்பந்து உலகம்

 

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தங்களின் பெரும்பாலான கால்பந்து வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர் ஆகியோரை இழந்துள்ள தெற்கு பிரேசிலில் உள்ள சப்பகோ நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது விருப்பமான கால்பந்து அணியை இழந்து விட்ட சோகத்தில் ஒரு சிறுவன்
 தனது விருப்பமான கால்பந்து அணியை இழந்து விட்ட சோகத்தில் ஒரு சிறுவன்

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியின் ஆதரவாளர்கள், அந்நகரில் மத்தியில் இருந்து சப்பகோயென்ஸ் அணியின் கால்பந்து மைதானத்துக்கு சென்று வேண்டுதல் நடத்தியும், பாடல்கள் பாடியும், பாராட்டு தெரிவித்தும் தங்களின் ஆதரவை அந்த அணிக்கு தெரிவித்தனர்.

கொலம்பிய விமான விபத்து குறித்து மேலும் படிக்க: கொலம்பிய விமான விபத்து: பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் தனது அணிவீரர்கள் பெரும்பாலானோரை விமான விபத்தில் இழந்துள்ள பிரேசிலின் சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினரின் துக்கத்தில் கால்பந்து உலகம் பங்கேற்றுள்ளது.

கொலம்பிய விமான விபத்து 

சப்பகோயென்ஸ் கால்பந்து அணியினர் பயணம் செய்த இந்த சார்ட்டர் விமானத்தில் இருந்த 77 பேரில் 6 பேர் மட்டுமே விபத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ளனர்.

தங்களின் கால்பந்து வரலாற்றில் மிகப்பெரிய போட்டி என்று கூறப்பட்ட கோபா சூடமெரிக்கானா தொடரின் இறுதியாட்டத்தில் விளையாட அவர்கள் கொலம்பியாவுக்கு விமானத்தில் சென்றனர்.

http://www.bbc.com/tamil/sport-38153533

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.