Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் ஏற்கோம் கடந்த காலத்தைப்போல் ஏமாறவும் மாட்டோம்

Featured Replies

தமிழ் மக்கள் அங்­கீக­ரிக்­காத எந்­த­வொரு தீர்­­வையும் ஏற்கோம் கடந்த காலத்­­தைப்போல் ஏமா­ற­வும் மாட்டோம்

sambandhan-1-ccfa19ecd933d0d31285052bae0fe0ea372e107d.jpg

 

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளான ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ரு­டைய அனு­ச­ர­ணை­யுடன் பெற்றே தீருவோம். எவ்­வகை சூழ்­நி­லை­யிலும் கடந்த காலங்கள் போல் நாம் ஏமா­றப்­போ­வ­து­மில்லை. இதே­வேளை தமிழ் மக்கள் அங்­கீ­க­ரிக்­காத எந்­த­வொரு அர­சியல் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்ளப்போவ­து­மில்லை என்­று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன். சம­கால அர­சியல் போக்கு குறித்தும் அர­சியல் தீர்வின் முன்­னேற்றம் குறித்தும் பொது மக்­க­ளுக்கும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் விளக்கம் அளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவரின் இல்­லத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்­டா­யு­த­பாணி தலை­மையில் நடை­பெற்ற மேற்­படி கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்­ண­சிங்கம், முன்னாள் நக­ர­சபைத் தலைவர் க.செல்­வ­ராஜா, மாவட்டக் கிளையின் தலைவர் கன­க­சிங்கம், பொரு­ளாளர் கோ.சத்­தி­ய­சீ­ல­ராஜா ஆகியோர் பிர­சன்­ன­மாகி இருந்­தனர்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

அண்­மையில் நாம் ஜனா­தி­பதியை சந்­தித்து உரை­யா­டிய போது அர­சியல் தீர்வு விட­யத்தில் அவர் எவ்­வ­ளவு ஆர்­வமும் அக்­க­றையும் கொண்­டுள்ளார் என்­பதை நாம் தெளி­வாகத் தெரிந்துகொண்டோம். புதிய அர­சியல் சாச­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு பல்­வேறு சக்­திகள் தடை­யாக இருக்­கலாம். அந்த தடை­களை வெற்றி கொள்ள வேண்­டு­மாயின் நாங்­களும் நீங்­களும் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் பிர­சாரம் செய்­வதன் மூலமே எமது குறிக்­கோளை வெற்றிகொள்ள முடி­யு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்­மிடம் தெரி­வித்தார்.

அவர் போலவே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்கவும் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வின் மூலம் முற்­றுப்­புள்ளி வைக்கவேண்­டு­மென்ற உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருப்­பதை நாம் விசு­வா­ச­மாக நம்­பு­கின்றோம்.

ஜனா­தி­ப­தி­யையும் பிர­தமர் ரணி­லையும் நாம் சந்­திக்­கின்ற வேளை­க­ளி­லெல்லாம் ஒன்றை நான் வலி­யு­றுத்தி வரு­கின்றேன். புதிய அர­சியல் சாச­ன­மா­னது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றில் பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெற்று அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். அது தான் அந்த சாச­னத்­ துக்கு ஒரு உறு­திப்­பாட்­டையும் நம்­பிக்­கை­ யையும் நம்­பக, நியா­யத்­தன்­மையை பெற வேண்­டு­மாயின் பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்­களின் ஆத­ரவு கிடைக்க வேண் டும். அதற்­கான பிர­சா­ரத்தை நீங்கள் செய்ய வேண்டும். சிங்­கள தலை­வர்கள் செய்ய வேண்டும். நாங்­களும் இயன்­ற­ள­வுக்கு செய்வோம் என்று கூறி­யி­ருந்தேன்.

நான் இன்­னு­மொரு விட­யத்தை அவர்­க­ளிடம் கூறி­யி­ருந்தேன். நாட்டின் மக்­க­ளு­டைய இன விகி­தா­சா­ரத்தை நோக்­கினால் 70 வீத­மான சிங்­கள மக்கள் பௌத்­தர்கள். 30 வீத­மான தமிழ், முஸ்லிம் மக்­கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ மதங்­க­ளையும் பின்­பற்­று­கின்­ற­ார்கள். கிறிஸ்­த­வத்தை பின்­பற்றும் சிங்­கள மக்­களும் இந்­நாட்டில் வாழ்­கின்­றார்கள். 70 வீத­மான சிங்­கள மக்­களில் குறைந்­தது 45 வீத­மான ஆத­ரவைப் பெற வேண்டும். 30 வீத­மான மக்­களில் சுமார் 28 வீத­மான மக்கள் ஆத­ரவு தரு­வார்கள்.

எனவே சுமார் 70 வீத­மான மக்கள் அர­சியல் சாச­னத்தை ஏற்­றுக்­கொள்­வார்கள் என்று கூறிய போது ஜனா­தி­பதி என்­னிடம் கூறினார், அதற்­காக நாம் உழைக்க வேண்டும், முயற்­சிக்க வேண்டும் என்று கூறினார். என­வேதான் நடத்­தப்­ப­ட­வுள்ள சர்­வஜன வாக்­கெ­டுப்­பா­னது கூடு­த­லான மக்­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்பு.

கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் எமது கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 16 பேரையும் சந்­தித்து உரை­யா­டிய போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா காலத்து வெண்­தா­மரை இயக்கம் பற்­றியும் நினைவு கூர்ந்தார். அத்­த­கைய ஒழுங்கை மேற்­கொள்ள நாங்கள் ஆலோ­சனை நடத்தி வரு­கின்­றோ­மென்றும் அவர் கூறினார். சிங்­கள மக்கள் மத்­தியில் இவர்கள் சென்று ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரத்தைப் பகிர்ந்­த­ளித்து ஒவ்­வொரு பிர­தேச மக்­களும் தங்கள் இறை­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்­களை பிர­யோ­கிக்க வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். எல்லாப் பிராந்­தி­யங்­களும் மக்கள் சார்பில் திற­மையின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடியும்.

அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ் மக்கள் மிகுந்த அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். தமிழ் மக்கள் அதி­ருப்தி அடை­யக்­கூ­டிய வகையில் இன்­று­வரை அர­சியல் சாசன வழி­ந­டத்தல் குழுவில் கரு­மங்கள் நடை­பெ­ற­வில்லை. எல்லா விட­யங்­களிலும் நாங்கள் திருப்தி அடையும் வகையில் கரு­மங்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது எனவும் நான் கூறத் தயா­ரா­க­வில்லை. பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. நான் ஒன்றை இவ்­வி­டத்தில் கூறவிரும்­பு­கின்றேன். 1977 ஆம் ஆண்டு நான் முதல் முதல் பாரா­ளு­மன்­றுக்கு தெரிவுசெய்­யப்­பட்ட காலம் தொடக்கம் இன்­று­வரை நடை­பெற்ற சகல பேச்சு வார்த்­தை­க­ளிலும் நான் பங்­கெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்றேன்.

இது­வரை எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­யிலும் காணாத ஒரு நிலை­மையை இப்­போ­தைய பேச்­சு­வார்த்­தையில் கண்டுகொண்­டி­ருக்­கின்றோம். இதற்கு முன் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்க வேண்­டிய தீர்வு பற்றி உரைப்­ப­தற்கு முயற்­சிப்­பார்கள். பல விட­யங்கள் சொல்­லப்­படும். சில விட­யங்­களை கார­சா­ர­மாக வாதா­டித்தான் பெறவேண்­டி­யி­ருக்கும். உதா­ர­ண­மாக 13 ஆவது அர­சியல் சாச­னத்தைப் பெற அடி­பட்டோம். அதுதான் அதி­காரப்பகிர்வு சம்­பந்­த­மான முதன் முதல் பிரே­ர­ணை­யாகும்.

அர­சியல் சாச­னத்தில் வழி­முதல் முறை­யாக உரு­வாக்­கப்­பட்­டது. அதற்கு முன் சாதா­ர­ண­மான பாரா­ளு­மன்ற சட்­டத்தைக் கூட மாவட்ட சபை­யையோ, ஏனைய விட­யங்­க­ளையோ நிறை­வேற்­று­வ­தற்கு கடி­ன­மா­ன­தாக இருந்­தது.

ஆனால் இந்த அர­சாங்கம் உணர்ந்­தி­ருக்­கி­றது. ஒரு அர­சியல் சாசனம் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல. நாட்டில் வாழும் அனைத்து மக்­க­ளுக்கும் தேவை­யென்­ப­துடன் நாட்­டுக்கும் தேவை­யென உணர்ந்து அந்த ஆட்­சியில் சாச­னத்தை எல்­லோரும் சேர்ந்து உரு­வாக்க வேண்­டு­மென்று நினைத்து செயற்­பட்டு வரு­கின்­றார்கள். கூடு­த­லான பெரும்­பான்மை சிங்­கள தலை­வர்கள் மத்­தியில் இக்­க­ருத்து காணப்­ப­டு­கி­றது. இதை நாங்­களே நன்­றாகப் புரிந்­து­கொள்ள வேண்டும். சிங்­கள மக்­களும் தற்­பொ­ழுது ஏற்­பட்­டுள்ள அர­சியல் மாற்­றத்தை உணர்ந்து 30 வரு­ட­ யுத்தம், அதனால் ஏற்­பட்ட விளை­வுகள், தாக்­கங்கள், பாதிப்­புக்கள் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல எல்லா சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை உணர்ந்து அவர்கள் முற்­போக்கு முறையில் சிந்­திக்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

நான் பல­ருடன் கலந்­து­ரை­யா­டு­கின்ற போது பல படித்த, மூத்த, சிங்­கள பௌத்த குரு­மார்­களைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்ளேன். எங்­க­ளுடன் பேசு­வ­தற்கு அவர்கள் விருப்பம் காட்­டு­கின்­றார்கள். அவர்­களின் அழைப்பின் பேரில் அவர்­க­ளு­டைய விகா­ரை­க­ளுக்குச் சென்று உரை­யா­டி­யுள்ளேன்.

உதா­ர­ண­மாக ஒரு சில வரு­டங்­க­ளுக்கு முன்­பாக இறந்த சோபித தேரர் அவர்­களை சந்­தித்து உரை­யா­டிய போது மிக நீண்ட நேரத்­துக்குப் பின் அவர் என்­னிடம் கூறினார். தமி­ழர்­க­ளுக்­கான தீர்­வாக சமஷ்டி முறையைக் கூட நான் ஏற்­றுக்­கொள்ளத் தயார் என்று கூறினார்.

தவறை உணர்ந்தேன்
சில மாதங்­க­ளுக்கு முன் மஹரகம பகு­தி­யி­லுள்ள விகா­ரை­யொன்றின் விகா­ரா­தி­பதி இத்­த­பான தேரரை ஆயர் மல்கம் ரஞ்சித் அவர்­க­ளு­டைய வாசஸ்­த­லத்தில் சந்­தித்து உரை­யா­டினேன். அவர் பல வினாக்­களை என்­னிடம் தொடுத்தார். கூட்டம் முடிந்த பின் இத்­த­பான தேரர் என்­னிடம் கூறினார். தன்னை தன்­னு­டைய விகா­ரையில் சந்­திக்க வேண்­டு­மென்று. சில நாட்கள் சென்ற பின் நான் அவரைச் சந்­தித்தேன். 

அவர் என்­னிடம் கூறினார். பண்டா – செல்வா ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட போது அதை எதிர்த்து சிங்­கள மக்­களும் பௌத்த குரு­மாரும் போராட்டம் நடத்­திய போது அப்­போ­ராட்­டத்தில் பங்­கு­பற்­றி­யவன் நான். பண்­டா­ர­நா­யக்­கவின் வீட்­டுக்கு முன்னால் நிலத்தில் குந்­தி­யி­ருந்து எதிர்ப்பு காட்­டி­ய­வர்­களில் நானு­மொ­ரு வன். நான் இப்­பொ­ழு­துதான் உண­ரு­கின் றேன். நான் எந்­த­ள­வுக்கு தவறு செய்­தி­ருக்­கிறேன் என்று என்­னிடம் கூறி மனம் வருந்திக் கொண்டார். நான் சமீ­பத்­திலும் அத்­தே­ரரைச் சந்­தித்தேன். அவரிடம் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் பற்றி இன் னும் தெளி­வாக எடுத்துக் கூறினேன். அவர் சந்­தோ­ஷத்­துடன் விடை­பெற்றார். குறிப்­பிட்டுக் கூறப்­போனால் அவர் போன்ற பல­ ரிடம் இன்று மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அண்­மையில் மறைந்த சோபித தேரர் நினைவுக் கூட்டம் பண்­டா­ர­நா­யக்க மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அக்­கூட்­டத்­துக்கு நான் சென்­றி­ருந்தேன். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா மற்றும் பிர­தமர் ஆகி­யோரும் வருகை தந்­தி­ருந்­தனர். அங்கு பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த தேரர் என்னைப் பார்த்துக் கூறினார். எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் இங்கு வருகை தந்­துள்ளார். அவ­ரு­டைய கருத்­துக்கள் மிக நிதா­ன­மான கருத்­துக்கள். நாங்கள் எல்­லோரும் சேர்ந்து செயற்­பட வேண்­டு­மென்று கூறினார். ஆகையால் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். எதிர்ப்பு இல்­லை­யென்று சொல்ல முடி­யாது. எதிர்ப்பு இருக்­கி­றது. சிலர் அர­சியல் சாசன முயற்­சி­களை குழப்ப வேண்டும். தீர்வு வரக்­கூ­டாது என்­ப­வர்­களும் சிங்­கள மக்கள் மத்­தியில் உள்­ளனர். அந்த எதிர்ப்பு ஏற்­ப­டலாம். இது தவிர்க்க முடி­யாதது. ஆனால் கணி­ச­மான சிங்­கள மக்கள் மத்­தியிலும் பௌத்த குருமார் இடை­யேயும் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டு­மென்ற கருத்து நில­வா­ம­லில்லை.

அண்­மையில் ஒரு பத்­தி­ரிகைச் செய்­தி­யொன்றைப் படித்தேன். 30 ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தலதா மாளி­கைக்குச் சென்று அஸ்­கி­ரிய, மல்­வத்தை மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து பேசி­ய­போது அவர்கள் கூறி­யது யாதெனில்,

பெளத்த சம­யத்­துக்கு அர­சியல் சாச­னத்தில் முக்­கிய இடம் கொடுக்­கப்­பட வேண்டும். அந்த விட­யத்தில் நீங்கள் பின்­வாங்கக் கூடாது. ஆனால் அர­சியல் சாச­னத்தை விரைவில் நிறை­வேற்றப் பாருங்கள் என மகா­நா­யக்க தேரர்கள் கூறி­யி­ருந்­தார்கள். வேறு எதைப்­பற்­றியும் அவர்கள் கூற­வில்லை. சாச­னத்தை அதிகம் தாம­திக்­காமல் காலத்தை இழுத்­த­டிக்­காமல் விரைவில் நிறை­வேற்ற வேண்­டு­மென்று கூறி­யி­ருக்­கி­றார்கள். அது மட்­டு­மன்றி நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பாதகம் ஏற்­ப­டாமல் சாச­னத்தை நிறை­வேற்ற வேண்­டு­மென்று அவர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர். ஆகை­யால் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் மாற்­றத்தை சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். இவ்­வி­த­மான சந்­தர்ப்பம் மீண்டும் எமக்கு வரப்­போ­வ­தில்லை. எனவே 2/3 பெரும்­பான்மை பாரா­ளு­மன்­றத்தில் நாங்கள் பெற முடியும்.

தாமதம் வேண்டாம்
கடந்த வாரத்தில் ஜனா­தி­ப­தியை நாம் சந்­தித்த வேளை அவர் கூறினார். நான் பிர­த­ம­ருக்கு அடிக்­கடி கூறி வரு­கின்றேன். உங்­க­ளுக்கும் கூறு­கின்றேன். தாமதம் காட்­டாமல் அர­சியல் சாசன விட­யத்தை செய்து முடிக்க வேண்டும். 2/3 பெரும்­பான்­மையை பாரா­ளு­மன்றில் பெற­லா­மென்ற நம்­பிக்கை எனக்­குண்டு. ஆனால் சர்­வ­சன வாக்­கெ­டுப்பை வெல்ல வேண்­டு­மானால் நாம் அனை­வரும் இப்­பொ­ழுதிருந்தே தேவை­யான முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும். தமிழ், சிங்­கள மக்கள் மத்­தியில் சென்று அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக விளக்­கங்­களை கொடுத்து  

(நாளை தொட­ரும்) 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-30#page-4

  • தொடங்கியவர்

நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகம் பேராதரவு

sambandhan-1-18c7a0dee2f4d595204b7d09b8b52e07412b63ac.jpg

 

(நேற்றைய தொடர்ச்சி)

மக்­களை யாரும் குழப்பவிடாமல் முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்­டு­மெனக் கூறினார். ஆகையால் சாசனம் சம்­பந்­த­மாக ஓர் முடிவு எடுக்­கப்­பட்ட பின் மக்­க­ளிடம் சென்று விளக்­குவோம். எவ்­வ­கை­யான தீர்வு வரப்­போ­கி­ற­தென்று.

எமது தமிழ் மக்­க­ளு­டைய அங்­கீ­கா­ர­மில்­லாமல் எமது கட்­சி­க­ளு­டைய ஒத்­து­ழைப்பு இல்­லாமல் தனிப்­பட்ட முறையில் நாம் எதையும் செய்யப்போவ­தில்லை. எமது தமிழ் மக்­க­ளுக்கு பய­னற்ற, அவர்கள் விரும்­பாத எந்­த­வொரு தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை.

எமது பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யாத சாச­னத்தை நாம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்­பதை உறு­தி­யாக கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன். இதே­வே­ளையில் நிரந்­த­ர­மான நியா­ய­மான ஒரு தீர்வு கிடைக்­கு­மாக இருந்தால் அதை நாம் இழக்க முடி­யாது. இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வட­, கி­ழக்கு இணைப்பைப் பொறுத்­த­வரை முஸ்லிம் மக்கள் மத்­தியில் ஒரு தெளி­வான நிலைப்­பாடு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இருந்­தாலும் நாங்கள் விரும்­பு­கின்றோம். முஸ்லிம் மக்­களும் தமிழ் மக்­களும் தமிழ்க் கட்­சி­களும் முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து கூட்­டாக செயற்­பட்டு இணைப்பு சம்­பந்­த­மாக நல்­ல­தொரு முடி­வுக்கு வர­லா­மென நம்­பு­கிறோம். அதையே நாம் விரும்­பு­கின்றோம்.

முஸ்லிம் மக்­க­ளு­டைய ஒத்­து­ழைப்­பின்றி இணைப்பு தொடர்பில் ஒரு முடிவை நாம் காண முடி­யாது. எங்களது இணக்­கப்­பா­டில்­லாமல் முஸ்லிம் மக்கள் ஒரு திருப்­தி­க­ர­மான தீர்வை பெறமுடி­யாது என்­ப­தையும் அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவே இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. சில பேச்­சு­வார்த்­தைகள் இரு தரப்­பி­ன­ரி­டமும் முடி­வ­டைந்­துள்­ளது.

இவ்­வி­ட­யத்தில் ஒரு முன்­னேற்றம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது என என்னால் உறு­தி­யாக கூறமுடி­யாது.

இவ்­வி­ட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச ரீதி­யாகப் பார்ப்பின் பல்­வேறு நடை­மு­றை­களும் ஒழுங்­கு­களும் அர­சியல் சாச­னங்­களும் உண்டு. இது எவ­ருக்கும் பாதிப்­பையோ, குந்­த­கத்­தையோ ஏற்­ப­டுத்­தாத வண்ணம் பார்த்துக்கொள்ள சந்­தர்ப்­ப­முண்டு. இதுபற்றி தற்­பொ­ழுது பேசி ஒரு குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாமல் அமை­தி­யா­க­வுள்ளோம்.

முஸ்லிம் மக்கள் மத்­தியில் குழப்­பு­வ­தற்கும் பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மையில் ராஜபக் ஷ அணியில் உள்ள சில­ருடன் நான் உரை­யா­டி­ய­போது அவர்­களும் இப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் ஒரு அர­சியல் சாசனம் தேவை. இவ்­வாறு இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வுகாணப்­ப­டா­விட்டால் நாடு முன்­னே­று­வது கஷ்டம் என்ற கருத்தை ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். முற்­போக்கு சிந்­த­னை­யுள்ள பலர் இக்­க­ருத்தை கூறிவரு­கின்­றார்கள். சந்­தி­ரிகா அம்­மையார் காலத்தில் அவரால் முன்­வைக்­கப்­பட்ட தீர்­வுப்­பொ­தியை கொண்­டு­வர முழு ஆத­ரவு கொடுத்­த­வர்­களே அந்த அணி­யி­ன­ராகும். இம்­மு­யற்­சியை நாம் தற்­பொ­ழுது தொடங்­கி­யி­ருக்­கிறோம். தொடர்ந்து அவர்­க­ளு­டனும் பேசுவோம்.

சர்­வ­தேசம் ஆத­ர­வு
சர்­வ­தேச ரீதி­யாக பார்ப்பின் இலங்­கையில் நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு கொண்டுவரப்­பட வேண்­டு­மென்­ப­தில் பேராத­ரவு இருக்­கின்­றது. ஐ.நா. சபையோ மனித உரிமைப் பேர­வையோ ஐரோப்­பிய ஒன்­றி­யமோ அமெ­ரிக்க, பிரித்­தா­னிய, இந்­திய, ஜப்­பானோ எல்லா நாடு­களும் ஏற்­பட்­டி­ருக்கும் இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி ஒரு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­ப­தற்கு ஆத­ர­வான கருத்து மிகவும் தீவி­ர­மாக இருந்து வரு­கின்­றது. 

அமெ­ரிக்­காவில் தற்­போது மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதன் கார­ண­மாக எமது கரு­மத்தைக் கையாண்டு வந்த அதி­கா­ரிகள் மாற்­ற­ம­டையக் கூடும். இது ஒரு முக்­கி­ய­மான விடயம். இதையும் நாம் கவ­னத்தில் எடுக்க வேண்டும். ஏனெனில் அமெ­ரிக்­கா­வி­னால்தான் இலங்­கைக்­கெ­தி­ரான பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு அதை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னின்­ற­வர்கள். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியும் அமெ­ரிக்க இரா­ஜாங்க அமைச்சும். இது ஒரு முக்­கி­ய­மான விடயம்.

பல விட­யங்கள் தொடர்பில் கரு­மங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. உதா­ர­ண­மாக நீதி விசா­ரணை போர்க்­குற்றம் உண்மை அறி­யப்­ப­டு­வது. மனித உரிமை மீறல். மக்­க­ளுக்கு பரி­காரம் காணப்­ப­டாமை போன்ற விட­யங்கள் தொடர்­பிலும் இவ்­வி­த­மான சம்­ப­வங்கள் மீண்டும் ஏற்­ப­டா வண்ணம் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் போன்ற பல விட­யங்கள் நடை­பெற வேண்­டி­யுள்­ளது. இவை நடை­பெ­ற­வேண்டும்.

அர­சியல் சாசன நிறை­வேற்றம், அதே­வேளை சர்­வ­தேச விசா­ரணை என்­ப­வற்றை ஒரே சம­யத்தில் கொண்­டு­செல்ல விழைந்தால் அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய குழப்­பங்கள், முட்­டுக்­கட்­டைகள், பிரச்­சி­னைகள் சம்­பந்­த­மாக நாங்கள் சிந்­திக்க வேண்டும்.

அர­சியல் தீர்­வுதான், ஒழுங்கு தான் எமக்கு முக்­கி­ய­மான விட­ய­மாக தற்­போது இருக்­கி­றது. அக்­கருமம் முறை­யாகக் கையா­ளப்­பட்டு தீர்­வுக்கு முத­லிடம் கொடுக்­கப்­பட வேண்டும் என்று நாம் கரு­து­கிறோம்.

ஆட்சிமாற்றம் ஏற்­பட்­டதன் பின் பல மாற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. பல விட­யங்கள் நடை­பெற்று இருக்­கின்­றன. ஆட்சிமாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு முன் பழைய அர­சாங்­கத்­துடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அது தோல்­வியில் முடிந்­ததை நாம் எல்­லோரும் அறிவோம். முன்­னைய ஆட்­சி­யாளர் காலத்தில் நாம் ஒரு கோரிக்­கையை முன்­வைத்த போதும் அதற்கு அவர்­க­ளி­ட­மி­ருந்து காத்­தி­ர­மான பதில் கிடைக்­க­வில்லை. இதன் கார­ண­மாக பல பின்­ன­டை­வுகள் ஏற்­பட்­டன.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நேர­டி­யாக என்­னைச் சந்­தித்து பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு­விற்கு வாருங்கள். வந்து அங்கு கலந்­து­ரை­யா­டும்­படி கேட்டார். நாங்கள் அவரின் கூற்றை மறுத்துப் போக­வில்லை. நான் அவ­ரிடம் கூறினேன் எங்­க­ளுக்கும் உங்­க­ளுக்கும் இடையில் ஒரு இணக்­கப்­பாடு காணாத நிலையில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுக்கு நாங்கள் வந்து இணக்­கப்­பாடு காண்­பது என்­பது முடி­யாத விடயம் என்ற கார­ணத்­தினால் தெரி­வுக்குக் குழு­வுக்கு நாம் வரப்போவ­தில்­லை­யெனப் புறக்­க­ணித்தோம்.

புதிய அரசு ஆட்­சிக்கு வந்த பின்பு நடை­பெறும் விட­யங்கள் அனை­வ­ருக்கும் தெரியும். பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. அதன் நிமித்தம் ஒரு நட­வ­டிக்­கைக்­குழு அமைக்­கப்­பட்டு அத்­துடன் ஆறு உப­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்டு சில முக்­கி­ய­மான விட­யங்கள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்க மேற்­படி குழுக்­க­ளுக்கு பொறுப்­புக்கள் வழங்­கப்­பட்­டன. மேற்­படி உப­கு­ழுக்கள் கூடி தமக்­கென ஒதுக்­கப்­பட்ட மனித உரி­மைகள், நிதி, நீதி, பொதுச்சேவை, மத்­திய அர­சுக்கும் பிராந்­தி­யத்­துக்­கு­முள்ள உறவு முறைகள், சட்டம் ஒழுங்கு என்­ப­ன­ பற்றி கூடி ஆராய்ந்து தங்கள் அறிக்­கை­களை நட­வ­டிக்கைக் குழு­வுக்கு சமர்ப்­பித்து சில நாட்­க­ளுக்கு முன்­பாக பிர­தமர் பாரா­ளு­மன்றில் இடைக்­கால அறிக்­கை­யாக வெளி­யிட்டார்.

நட­வ­டிக்­கைக்­குழு இது­வரை 45 தட­வைகள் கூடி­யி­ருக்­கின்­றது. இக்­கு­ழுவில் பல விட­யங்கள் பேசப்­பட்­டி­ருக்­கின்­றன. அதி­காரப்பகிர்வு, ஆட்சிமுறை, தேர்தல் முறை, சட்ட ஆக்­க­முறை, நிர்­வாகம், காணி, சட்டம் ஒழுங்கு, பொதுப்­பா­து­காப்பு இத்­த­கைய பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்டு சில விட­யங்­களில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மூன்று விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது. ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

மூன்றில் ஒன்று ஆட்­சி­முறை ஒழுங்கு, இரண்­டா­வது சமயம் சம்­பந்­த­மான நிலைமை, மூன்­றா­வது அலகு விடயம். இந்த மூன்று விட­யங்­களும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. எம்மைப் பொறுத்­த­வரை வட, ­கி­ழக்கு இணைப்புப் பற்­றியும் பேசப்­பட்­டுள்­ளது. இறுதி முடிவு காணப்­ப­ட­வில்லை. ஆனால் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தைகள் இடம்பெற்று வரு­கின்­றன.

ஆட்சி ஒழுங்கு, சமயம் தொடர்பில் பல்­வேறு மாதி­ரிகள் தயா­ரிக்­கப்­பட்டு (பல்­வேறு வரை­புகள்) அது விடயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கின்றோம். உப­கு­ழுக்­க­ளுக்கு பல்வேறு நிபுணர்குழு, ஆலோசனைக்குழுக்கள், ஆலோசனை வழங்கியுள்ளன. அவர்கள் தமது ஆலோசனைகளை உலக நாடுகளில் காணப்படும் மாதிரிகளை அனுபவங்களாகக் காட்டி உதவி வருகின்றார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைக்குழுவின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்க எத்தனிக்கின்றார். ஆனால் பல கட்சித்தலைவர்களின் வேண்டுகோள் யாதெனில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன் தமக்கொரு பிரதியை முன்கூட்டியே வழங்கும் படியும் அதன்பின் சிறிது காலதாமதத்துடன் பாராளுமன்றில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சில சமயங்களில் நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை இரண்டொரு தினங்கள் பிந்தலாம்.

பிரதமரின் விருப்பப்படி நடவடிக் கைக் குழுவில், இற்றை வரை கலந்துரையாடப்பட்டட விடயங்கள், முன்வைக்கப்பட்டிருக்கின்ற வெவ்வேறு தயாரிப்புக்கள் ஆகியவற்றை பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடிப்படையிலும் உபகுழுக்களின் அறிக்கையின் அடிப்படையிலும் தை மாதம் 9 ஆம், 10 ஆம், 11 ஆம் (2017) விவாதம் ஆரம்பிக்கப்பட்டு அந்த விவாதம் தொடரலாம். அந்த விவாதம் தொடருமாயின் அவ்விவாதத்தின் முடிவில் அரசியல் சாசனம் சம்பந்தமாக அரசியல் சாசன சபை முடிவு எடுக்க வேண்டுமென்றும் அம்முடிவு எடுத்தபின் அம்முடிவு சாதகமாக இருக்குமாக இருந்தால் அது அமைச்சர் சபைக்குச் சென்று அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்பு அமைச்சரவையினால் அவ்வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் பாராளுமன்றத்தில் அந்த வரைபு நாம் எதிர்பார்த்த வண்ணம் 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டால் அது மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரத்தைப்பெற்றால் அது நாட்டினுடைய அரசியல் சாசனமாக அமுல்படுத்தப்படும்.

இன்றைய கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கருத்துரையாடல்கள் இடம்பெற்று மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி தொடர்பில் செயற்றிட்டங்கள் தீட்டப்படவேண்டும் எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

– திருமலை நவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.