Jump to content

பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe


Recommended Posts

பனிக்கால சளி போக்கும் நண்டுக்கால் ரசம்! #செய்முறை #CrabSoupRecipe

 

நண்டுக்கால்

டல் மீன் உணவுகளில் தவிர்க்க முடியாதது நண்டு. கணுக்காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. நண்டுகளைப் பல சுவைகளில் சமைக்கலாம். அதில் முக்கியமானது, நண்டுக்கால் ரசம். நண்டுக்கால் ரசம், சுவையானது மட்டுமல்லாமல், சளித் தொல்லை, ஜலதோஷம் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் விசேஷம். நண்டு ரசத்தை எப்படித் தயார்செய்யலாம் என விளக்குகிறார், புதுக்கோட்டை சமையல்கலை நிபுணர் அஞ்சம்மாள் முத்து.

தேவையான பொருள்கள்:
கடல் நண்டின் கால்கள் மட்டும் - 15
சீரகம்  - 20 கிராம்
சோம்பு - 20 கிராம்
மிளகு  - 30 எண்ணிக்கையில்
முழுப் பூண்டு  - 1
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய்ப் பால் 50 மில்லி
தாளிக்கத் தேவையான அளவு - கடலை எண்ணெய், கடுகு உளுந்து, உப்பு, கறிவேப்பிலை.

 

நண்டுக்கால்

செய்முறை: நண்டுக் கால்கள் ஒவ்வொன்றிலும் கடிக்கும் பகுதியைக் கணு வரை வெட்டிவிட்டு, அதை இரண்டாக வெட்டி, தண்ணீரில் சுத்தமாக அலசி எடுத்து தட்டில் வைத்துக்கொள்ளவும். சீரகம், சோம்பு இரண்டையும் நீர் விட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். மிளகு, பூண்டு இரண்டையும் நைத்து வைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை அரிந்தும் காய்ந்த மிளகாய்களைக் காம்பு கிள்ளியும் வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.

அரைத்துவைத்திருக்கும் சோம்பு, சீரகத்தைத் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து, அதில் புளியையும் கரைத்துக்கொள்ளவும். ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை அதில் போடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் தேவையான அளவு ஊற்றிக் காய்ந்ததும், கடுகு உளுந்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயைப் போட்டு வதக்கவும். அடுத்து, வெங்காயத்தையும் தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கிச் சுருண்டதும், கரைத்துவைத்திருக்கும் கலவையை வாணலியில் ஊற்றவும். தேவையான உப்பு போடவும். ரசக் கரைசல் நன்றாகச் சூடானதும் நண்டுக்கால்களை அதில் எடுத்துப் போடவும். கால்கள் வெந்ததும் சிவந்த நிறமாகும். ரசம், நண்டுக்கால்களில் படியும் நிலையில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கிண்டி, இறக்கவும்.

மிதமான சூட்டில் ரசத்தைக் குடிக்கலாம்; சாதாரண ரசம் போலவே, நண்டுக்கால் ரசத்தையும் சாதத்தில் ஊற்றிச் சாப்பிடலாம். பனிக்கால ஜலதோஷம், சளித் தொல்லை தீரும். மணமும் சுவையும் மறக்க முடியாது.

http://www.vikatan.com/news/

Link to comment
Share on other sites

  • 4 months later...

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

 

சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்
 
ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் :

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மல்லி (தனியா) - 3 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.

201704291528068228_12crab-soup._L_styvpf

தேவையான பொருட்கள் :

நண்டு - ஒரு கிலோ
தக்காளி - 3
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் - கால் கப்
தண்ணீர் - 4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

201704291528068228_crab-soup._L_styvpf.g

செய்முறை :

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

* அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  சேர்த்துத் தாளிக்கவும்.

* அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

* உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

* சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.  

* சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.

http://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2017/04/29152804/1082715/cold-control-crab-rasam.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.