Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.வுக்கு மோடி அஞ்சலி.. சசிகலா தலையைத் தொட்டு ஆறுதல்.. மோடியைக் கட்டிப்பிடித்து கதறிய ஓபிஎஸ்

Featured Replies

ஜெ.வுக்கு மோடி அஞ்சலி.. சசிகலா தலையைத் தொட்டு ஆறுதல்.. மோடியைக் கட்டிப்பிடித்து கதறிய ஓபிஎஸ்

Modi to pay tributes to Jaya

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

 

 இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

President, PM to arrive in Chennai to pay respects to Jayalalithaa

மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-pay-tributes-jaya-269092.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு பிரியாவிடை தரும் தமிழகம்

 

 
 
modijaya_3099846f.jpg
 
 
 

 

ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

>>> மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், "ஏழை மக்களின் நலனுக்கு பாடுபட்டவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பு" என்றார்.

>>> முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். அவருடன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

>>> தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் ஆறுதல் கூறினார்.

>>> ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

>>> ஜெயலலிதாவின் உடலுக்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.

>>> குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். ஏற்கெனவே அவர் புறப்பட்ட விமானம் கோளாறு காரணமாக டெல்லி திருப்பப்பட்டது. தற்போது அவர் வேறு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

jaya4_3099832a.jpg

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் நாராயணசாமி.

>>> தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து புறப்பட்டார். கடற்படைத் தளத்துக்குச் சென்று அங்கிருந்து காரில் ராஜாஜி மைதானத்துக்கு செல்கிறார்.

>>> நடிகர் ரஜினிகாந்த அவரது மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோருடன் வந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ரஜினியுடன் அவரது மூத்த மருமகன் தனுஷும் வந்திருந்தார்.

rajini1_3099804a.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினிகாந்த் | படம்: ம.பிரபு.

>>> ஜெயலலிதாவின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இரங்கல் தெரிவித்து இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

>>> தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

jayalalitha34_3099805a.jpg

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த். | படம்: ம.பிரபு.

 

>>> தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

venki_3099649a.jpg

ஜெயலலிதா உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி | படம்: ம.பிரபு

ஜெயலலிதாவின் உடலுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை புறப்பட்டார்.

jaya_2_3099768a.jpg

படம்: எல்.சீனிவாசன்.

>>> தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். | பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்த குவிந்துள்ளனர்.

>>> ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். தொண்டர்கள் பலரும் கதறி அழுதபடி தங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். மக்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,

>>> ஜெயலலிதா மறைவையொட்டி, மத்திய அரசு இன்று ஒருநாள் தேச அளவில் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

>>> தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.

> நடிகர் பிரபு, அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது கதறி அழுத சசிகலாவின் கை பிடித்து பிரபு ஆறுதல் கூறினார்.

sarai1_3099674a.jpg

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கடல் ஆக மாறும் அண்ணா சாலை. | படம்: எல்.சீனிவாசன்

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

>>> பாஜக முத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

>>> ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள், வெள்ளம் போல் திரண்டுள்ளனர். அண்ணாசாலையில் சாரைசாரையாக அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

>>> காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார்.

>>> ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அவரது உடல் அருகிலேயே ஒரு நாற்காலி இட்டு அமர்ந்தார்.

jaya01_3099650a.jpg

படம்: ம.பிரபு

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

>>> முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்துவிட்டு, காலைத் தொட்டபடி அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினார்.

>>> சென்னை - ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்று காத்துக்கொண்டிருக்கின்றனர். போலீஸார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

jaya0000_3099637a.jpg

>>> ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

>>> மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்படவுள்ளது. இதையொட்டி, அப்பகுதியில் காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

>>> போயஸ் தோட்ட இல்லப் பகுதியில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்கள் மீளாத் துயரத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.

>>> தொண்டர்கள் குவிந்திருந்த போயஸ் தோட்டம் பகுதியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

>>> ஜெயலலிதா மறைவுக்கு சமூக வலைதளங்களில் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, ட்விட்டரில் #RIPAmma என்ற ஹேஷ்டேக் நீண்ட நேரமாக இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்துள்ளது. இதேபோல் #IronladymyCM "Puratchi Thalaivi" #AmmaForever முதலான ட்ரெண்டிங் ஹேஷ்டேகிலும் ஜெயலலிதாவுக்கு நெட்டிசன்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.

>>> ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு 2.40 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

>>> ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர். | செய்தி > தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

>>> ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழகத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

>>> முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

>>> ஜெயலலிதாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

>>> முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, அங்கிருந்து ராஜாஜி ஹாலில் செவ்வாய்க்கிழமை மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது.

>>> ஜெயலலிதா மறைவை அடுத்து சென்னையில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

>>> உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. | விரிவான செய்தி > கோடானுகோடி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது: கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

http://tamil.thehindu.com/tamilnadu/பதிவுகள்-ஜெயலலிதாவுக்கு-பிரியாவிடை-தரும்-தமிழகம்/article9412121.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா குடும்பத்தைத் தேடித்தேடி போய் ஆறுதல் கூறிய மோடி

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலா குடும்பத்தினரை தேடி போய் ஆறுதல் கூறினார்.

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெிகாப்டரில் மோடி புறப்பட்ட மோடி, அடையாறு கடற்படை தளத்தில் வந்து இறங்கியதும் ராஜாஜி அரங்கிற்கு வந்து அங்கு வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெள்ளை மலர்கள் கொண்ட மலர் வளையம் வைத்து தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

Modi reaches out to Sasikala family


அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி போன மோடி ஆறுதல் வார்த்தைகள் பேசினார். சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதலாக பேசினார். இளவரசி, திவாகரன், உள்ளிட்டோர்களிடமும் ஆறுதலாக பேசினார் மோடி. அந்த நேரத்தில் அருகில் வந்த ஓ.பன்னீர் செல்வம், மோடியைப் பார்த்து குமுறி குமுறி அழுதார்.

 

ஓ.பன்னீர் செல்வத்தைப் பிடித்து ஆறுதல் சொன்னார் மோடி ஆசுவாசப்படுத்தினார். கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி. அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார்.

இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி.

சசிகலா குடும்பத்தினரை தேடி தேடி போய் மோடி ஆறுதல் சொல்லி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-reaches-to-sasikala-family-269135.html

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெயலலிதா உடலுக்கு அண்ணன் மகள் தீபா கண்ணீர் அஞ்சலி

 

முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள தனது அத்தையின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடலை சுற்றியும் ரத்த சொந்தங்கள் யாரும் நிற்கவில்லை. சசிகலா, இளவரசி ஆகியோரின் உறவினர்கள் மட்டுமே ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்று கொண்டுள்ளனர்.

Deepa Jayakumar pays tribute to Jayalalithaa

ஜெயலலிதாவின் ஒரே ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் யாரையும் அருகில் கூட விடவில்லை.

மருத்துவமனையில் இருந்த போது கூட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கண்ணீர் விட்டு அழுதும் அவரை கடைசிவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

மரணத்திற்குப் பின்னரும், இறுதி சடங்கு நடைபெற்ற போது கூட யாரையும் வீட்டிற்கு உள்ளே விடவில்லை.

Cy-5_iMUsAAPw7Z.jpg
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/deepa-jayakumar-pays-tribute-jayalalithaa-269143.html

 

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் இறுதி ஊர்வலம் புறப்படுகிறது... எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. உடல் நல்லடக்கம்!

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

மெரினா நோக்கிய ஜெயா..! #SpotReport

மெரினா

கடைசியில் அதிமுகவின் தொண்டர்களும் ஜெயலலிதா விசுவாசிகளும் ஏன் அனைத்து மக்களுமே நினைத்தே பார்த்திராத அந்த நாள் வந்துவிட்டது. நேற்றிரவு 11.30க்கு உயிர் பிரிந்து, ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் மெரினா வர இருக்கிறது.

வாலாஜா ரோடு அண்ணா சிலையில் இருந்தே கூட்டம் பெரும்கூட்டமாக மாறத் தொடங்கியிருந்தது. அங்கிருந்து மெரினா பீச் செல்லும் சாலையின் ஒருபுறத்தை விஐபிக்கள் செல்லவும் மற்றொரு புறத்தை பொதுமக்கள் செல்லவும் ஏதுவாக தடுத்து அமைத்திருந்தனர் போலீஸார். 

எந்த சோகத்திலும் நட்சத்திர பிம்பத்தில் தடுக்கி விழுந்து இளித்துக் கொண்டிருக்கும் சிலர் விஐபி கார்களைப் பார்த்து கையசைப்பதும் கத்துவதுமாகக் கடந்து கொண்டிருக்கின்றனர். மிக அருகில் இருக்கும் காரின் கருப்புக் கண்ணாடியில் கை குவித்துப் பார்த்து 'டேய்ய்ய்ய் சிம்புடாஆஆ' என்று தர்மசங்கடப்படுத்திக் கொண்டிருந்தனர். கத்தியும், லத்தியைக் காட்டியும் அவர்களை விலக்கிக் கொண்டே இருந்தனர் காவல்துறையினர்.

ராஜாஜி மண்டபத்தின் பின்வாசலை ஒட்டியுள்ள சாலையில்,  அரணாக தமிழக காவல்துறையும், மத்தியப் படையும் நூற்றுக்கணக்கில் நின்று கொண்டிருந்தனர். மற்றொரு சாலையை முழுவதும் தடுத்து கயிறு கட்டி பொதுமக்களை இந்தப்புறம் வராமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்தபடியே வந்து செல்லும் விஐபிகளைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் நின்று கொண்டிருந்த சாலைவழியாகவே தெரியாமல் வடிவேலுவின் கார் வந்துவிட அதை மறித்து கூச்சலிட ஆரம்பித்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து மிகுந்த சிரமத்திற்கிடையே வடிவேலு காரை நகர்த்தி அனுப்பி வைத்தனர்.

'தமிழ்நாடே கொந்தளிக்கும், கலவரம் நடந்தாலும் நடக்கும்' என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதனாலேயே மிகுந்த பாதுகாப்பு போடப்பட்டிருக்க,  அப்படியெந்த அசம்பாவிதங்களும் இன்றி தங்கள் மனதுக்குப் பிடித்த தலைவியை மரியாதையோடு வழிநடத்த நாடெங்கிலும் இருந்து தொண்டர்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர். ராஜாஜி ஹாலில் இருந்து கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம் வழியாக ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்படும் மெரினா வரை வரிசையாக காக்கிச்சட்டைகள். பொதுமக்களில் நிறைய பெண்களையும் காணமுடிந்தது. அதே வழியாகத்தான் ஜெயலலிதாவின் உடல் எடுத்துவர இருக்கிறது என்பதால் 'தூரத்தில இருந்தாவது பாக்கணும்' என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

எழிலகத்தின் மாடியில் இருந்து மீடியாக்களில் சிலர் கவர் செய்துகொண்டிருந்தனர். ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் எம்ஜிஆர் சமாதி முன் திடீரென பொதுமக்கள் தடுப்பானை உடைத்துக்கொண்டு உள்ளேபுக முயல போலீஸார் அவர்களை தடுத்து அமைதிப்படுத்தினர்.

எழிலகத்தின் மாடியில் Drone ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தது ஒரு குழு. குட்டி ஹெலிகாப்டர் போல அது தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்தது. Centre For Aerospace Research- ன் டைரக்டர் செந்தில்குமார் தன் குழுவினருடன் அதை இயக்கிக் கொண்டிருந்தார். குரல் கம்ம அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் முக்கியமானதாக இருந்தது. 

3a4da834-521a-498c-8c5f-b27ccfac0dd1_163   6680f4b6-aa4e-4ed9-bd21-0a54a2aee756_165

ஒருவருடம் முன்பு ஜெயலலிதா Tamilnadu Innovation Initative scheme-ன் கீழ் இதைப்போன்ற UAV (Unmanned Areal Vehicles) உபகரணங்களுக்கும் வேண்டி 20 கோடிவரை நிதி ஒதுக்கியிருக்கிறார். பாதுகாப்பு மட்டுமின்றி பயிர்கள் இன்ஷ்யூரன்ஸ் உள்ளிட்ட வேறு பலவற்றிற்கும் இந்த குட்டி ஹெலிகாப்டர் வடிவிலான Drone வகை கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன. 

உள்ளே ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கிறது அதில் ஒரு Drone. Stand Byஆக இங்கொன்றையும் தயாராக வைக்க வேண்டி சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

'எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டு அவற்றை பாதுகாப்போம்.  எதேனும் அசம்பாவிதம் நடந்தால் இதில் பதிவு செய்ததை வைத்துக் கொண்டு ஆக்‌ஷன் எடுப்போம். இப்போது எம்ஜிஆர் சமாதி மேல் பறந்து கொண்டிருக்கும் டிரோனில் பதிவாவது முழுவதும், கீழே இருக்கும் மினி கன்ட்ரோல் ரூமில் பார்த்துக் கொண்டிருப்பார்கள். விஐபிகள் பலர் இருப்பதால் இந்த வகை கண்காணிப்பு மிக அவசியம். ஆனால் இந்திய அளவில் இந்தத் திட்டத்திற்கு 20 கோடி என்ற பெரிய தொகையை கொடுத்தது ஜெயலலிதா மேடம்தான்.. ஆனா இதையே கவர் பண்ண வேண்டிருக்கும்னு நெனைச்சுகூட பார்க்கல' என்றார் செந்தில்.

உலகின் மிக நீண்ட கடற்கரையில், வலது புறம் பார்த்தால் கரையை ஒட்டி மனிதத்தலைகளே இல்லை. இந்தப்புறம் கடலலைகளை விட அதிகமாகத் தெரியும் மனிதத் தலைகள். எம்ஜியார் சமாதிக்கு அருகில் ராகுல்காந்தி உள்ளிட்ட விஐபிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரியதொரு குழியை தயார் செய்த சோகத்தில் ஓரமாக நின்று கொண்டிருக்கிறது ஜேசிபி.

தயாராகிவிட்டது மெரினா, இன்னொரு தலைமையையும் தன்னுள் ஏற்றுக்கொள்ள.

http://www.vikatan.com/news/

  • தொடங்கியவர்

எம்ஜிஆர் நினைவிடத்தை எட்டியது ஜெயலலிதா இறுதி ஊர்வலம்.. சந்தன பேழைக்கு உடல் மாற்றப்படுகிறது

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே ராஜாஜி ஹால் 1987 எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தின் போது ஒரு பெண் அவமரியாதை செய்து உதைத்து இறக்கி விட்டனர்.
ஆனால் அந்த பெண்மணி,அதே ராஜாஜி ஹாலில் "தேசிய கொடி" போர்த்தபட்டு அரசு மரியாதையுடன்!!!
இது தான் அந்த பெண்ணின் சாதனை..

venki_3099649a.jpg

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

juf%205_zpsuhk3ui37.jpg

  • தொடங்கியவர்

இந்தியாவை உற்று பார்க்க வைத்த மோடியின் அந்த இரு போட்டோக்கள்! ஜெயலலிதா மறைவுக்கு வந்த மோடி கூறிய ஆறுதல் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

 

சென்னை: ஜெயலலிதா மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மோடியின் இரு போட்டோக்கள் அகில இந்தியாவையும் உற்று பார்க்க வைத்தது. ராஜாஜிஹாலில் ஜெயலலிதா உடல் அருகே நின்றிருந்த சசிகலா, மோடியை பார்த்ததும் குலுங்கி அழ, அவரது தலையில் தனது இடது கையை வைத்து, மோடி ஆறுதல் கூறிய போட்டோ ஒன்று என்றால், தேம்பிய பன்னீர்செல்வத்தை அரவணைத்து கட்டிபிடித்துக் கொண்டது மற்றொன்று.

இரு போட்டோக்களுமே வேறு வகையான விவாதப்பொருளை உருவாக்கியுள்ளன.

மோடியின் பரிவு

மோடியின் பரிவு

பதவியிலிருந்த ஒரு முதல்வர் இறந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வருகை தந்தது நட்பையும் கடந்த புரோட்டோக்கால் நடைமுறையாகும். எனவே அவர் நடைமுறைப்படி பூங்கொத்தை, ஜெயலலிதாவின் உடல் அருகே வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், அதையும் கடந்து குடும்பத்தில் ஒருவரை போல பரிவு காட்டினார் மோடி.

பன்னீர் செல்வம் பிறகுதான்

பன்னீர் செல்வம் பிறகுதான்

ஜெயலலிதாவுடனான தனிப்பட்ட நட்பிற்காக மோடி இதை செய்திருப்பார் என்றாலும் கூட, அதற்காக அவர் ஆறுதல் கூற தேர்ந்தெடுத்த நபர் இதில் முக்கியமானவர். ஆம்.. ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் முதல்வராக பதவியேற்ற பன்னீர் செல்வம், தரையில் அமர்ந்திருக்க, அரசு பதவியில் இல்லாத சசிகலாவுக்கு பிரதமர் முதலில் ஆறுதல் கூறினார் என்பது சிலருக்கு கேள்வியாக எழுந்துள்ளது. சசிகலாவின் உறவினர்களையும் தேடி தேடி மோடி ஆறுதல் கூறியது அதில் இன்னொரு பெரும் கேள்வி.

உறவுக்காரர்களையும் தேடிபிடித்தார்

உறவுக்காரர்களையும் தேடிபிடித்தார்

சசிகலா அன்டு கோவுக்கு ஆறுதல் கூறியபிறகே, முதல்வரான பன்னீர்செல்வத்தின் பக்கம் வந்தார் மோடி. சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாத தோழி என்ற வகையில் ஆறுதல் கூறியதாகவே இருந்தாலும், அவரின் உறவுக்காரர்களையும் தேடி தேடி மோடி ஆறுதல் கூறி அந்த இடத்தையே சோகமயமாக்கிவிட்டார்.

தமிழ்நாட்டில் இப்படி

தமிழ்நாட்டில் இப்படி

ஆனால், மோடியின் ஆறுதல் சொல்லும் போட்டோ அகில இந்தியாவிலும் வைரலாகியுள்ளது. அதே சமயம், பன்னீர் செல்வத்திற்கு கை கொடுத்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறிய ஆறுதல் போட்டோ தமிழக நெட்டிசன்களிடம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-s-friendly-approach-towards-sasikala-269200.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா இறுதிச்சடங்கில் செல்பி

 

 

Karunaas-selfie-in-Jayalalithaa-last-fun

ஜெயலலிதா இறுதிச்சடங்கின் போது கருணாஸ் செல்பிக்கு போஸ் கொடுத்த சம்பவம் தற்போது இணையதளங்களில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். முதன்முதலாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாஸ், சட்டசபையில் ஜெயலலிதாவை புகழ்ந்துப் பாடி, அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களும் நடந்ததுண்டு.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்ததாக வெளிவந்த செய்திக்கு பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. தமிழகம் மட்டுமில்லாது உலகம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

குடியரசு தலைவர், பிரதமர், உலக நாடுகளின் தூதர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை பகிர்ந்துகொண்டனர். அதன்பின்னர், மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. 

அப்போது, அந்த இடத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் சோகமயத்துடனும், அழுகை கலந்த முகத்துடனும் காணப்பட்டனர். ஆனால், இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட கருணாஸ், ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

http://www.virakesari.lk/article/14233

 

 

 

ஜெ.வின் இறுதிச்சடங்கில் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது ஏன்..? கருணாஸ் விளக்கம்

 

karunassskukugf_14390.jpg

சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது கருணாஸின் போட்டோ. ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கின்போது ஒரு இளைஞரோடு கருணாஸ் எடுத்துக்கொண்ட செல்ஃபியை வைத்து, ‘சட்டசபையில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’னு பாட்டு பாடிட்டு, இறுதிச்சடங்கில் சிரிச்சுக்கிட்டே போட்டோவுக்கு போஸ் கொடுக்குறீங்களே பாஸ்..!’ என்று பலரும் சமூக வலைதளங்களில் கருணாஸை விமர்சித்துவர, விளக்கம் கேட்டு கருணாஸை தொடர்பு கொண்டோம்.

“நேற்று ராஜாஜி அரங்கில் இருந்து அண்ணா சாலை வழியாக எம்.ஜி.ஆர் சமாதிக்கு செல்லும் வழியில் கிட்டதட்ட 100 பேருக்கும் அதிகமானோர் கேவலமாக என்னிடம் வந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களிடம், ‘ஏம்ப்பா, படம் புடிக்கிறதுக்கான இடமா இது..? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?’னு கேட்டேன். அப்படி நான் கேட்டும், அதையும் மீறி என்னோடு போட்டோ எடுக்கணும்னு சிலர் தொடர்ந்து வந்தாங்க. அப்படி வந்த ஒரு பையன் தான், ‘அண்ணே, நான் ஊருல இருந்து வந்துருக்கேன். ஊருக்கு போயிட்டேன்னா அப்புறம் பார்க்கமுடியாது, ஒரே ஒரு போட்டோ எடுத்துகலாம்’னு கேட்டதனால தான் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தேன். அது தெரியாம சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவிச்சிட்டு இருக்காங்க. 

இறுதிச்சடங்கு நடக்கும்போது கருணாஸ் எப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்னு கேட்கிறாங்க. இறுதிச்சடங்கிற்கு வந்திருக்கும் போது போட்டோ எடுக்கலாமாங்கிற எண்ணம் ஏன் அவங்களுக்கு வரலை. என்னையும் என் விசுவாசத்தையும் விமர்சனம் பண்றவங்களுக்காக நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நேற்று அம்மாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நெடுங்கட்டையா விழுந்து சாமி கூம்பிட்டுட்டு, அங்கு இருந்த மண்ணில் ஒரு கைப்பிடி எடுத்து வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன். நான் உண்மையானவன், அம்மாவிற்கு எப்போதும் உண்மையானவனாக தான் இருப்பேன். 

எனக்கு எப்போதும் எதிரிகள் அதிகம். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்தில் என்னை விமர்சித்தால் அவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. இந்த விஷயத்தை பொறுத்தவரை இது தான் என் விளக்கம்” என்று முடித்தார் கருணாஸ். 

http://www.vikatan.com/news/tamilnadu/74387-the-reason-behind-karunas-gave-pose-in-selfie-jayalalithaas-funeral.art

  • தொடங்கியவர்

இணைய களம்: கனகச்சிதமாய் முடிந்தது.. எல்லாம்!

 

 
படம்: ம.பிரபு
படம்: ம.பிரபு
 
 

கருப்பு கருணா

> பறந்து வந்தார்.. காரில் வந்தார்.. நடந்து வந்தார்.. கும்பிடு போட்டார்.. தலையைத் தடவி ஆறுதல் சொன்னார். குனிந்து அழுதவரைக் கட்டியணைத்து தடவிக்கொடுத்தார். மக்களுக்கும் ஒரு கும்பிடு போட்டார்.. திரும்பிப் படியேறினார்.. ஒருகணம் உடல் அருகே நின்று கும்பிட்டார். கிளம்பினார்.. வழியில் காதில் கிசுகிசுத்தார்.. பின்வாசல் வழியே வெளியேறினார்.

கனகச்சிதமாய் முடிந்தது.. எல்லாம்!

> அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் உண்மையிலேயே விசுவாசமாக இருக்க வேண்டிய காலம் இனிதான் தொடங்குகிறது.

ஆனந்த்குமார் சித்தன்

தம்பிதுரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சீப்பை எடுத்துத் தலை சீவிக்கொள்கிறார். இளவரசி மகன் விவேக் பல்லைக் காண்பித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்…

என்ன மாதிரியான மரியாதை!

பாவெல் தருமபுரி

சசிகலாவின் தலைமீது கைவைத்து ஆறுதலை மட்டுமல்ல;

ஆசியையும் அனுமதியையும் வழங்கியிருக்கிறார் மோடி.

அருள் எழிலன்

பிரமுகர்கள் அஞ்சலிக்காகவே ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளதுபோல் இருக்கிறது. எம்ஜிஆர் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்ததுபோல ஜெயலலிதாவின் உடலைப் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கட்சியின் பலமே அதன் அடிமட்டத் தொண்டர்கள்தான். இன்று அவர்களுக்குத் தடியடியைத் தவிர, அவர்களின் தலைவரின் உடல் அருகேகூட நெருங்க முடியவில்லை.

எழிலன்.எம்.

மிஸ்டர் வைகோ அது பொதுக்கூட்டமல்ல, இரங்கல் வீடு!

நரேன் ராஜகோபாலன்

அத்தனை அதிமுக நண்பர்களுக்கும், சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இவ்வளவு கண்ணியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இத்தனை லட்சம் மக்களோடு இந்தியாவில் ஒரு இறுதி ஊர்வலம் நடந்ததில்லை. நீங்கள் நடத்திக் காட்டிவிட்டீர்கள். ஹாட்ஸ் ஆஃப்!

தமிழகக் காவல் துறைக்கும், அதன் பல்வேறு உப துறைகளுக்கும் மிகப் பெரிய நன்றி. பேரதிர்ச்சி தந்த ஒரு பேராளுமையின் மரணத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று டெல்லிக்காரர்கள் வெறியோடு காத்திருந்தபோது, ஒரு சிறு கீறல்கூட விழாமல் தமிழகம் எப்போதுமே இந்தியாவைவிட ஒருபடி மேல்தான் என்று சட்ட ஒழுங்கினைக் காத்ததற்கு ஒரு ராயல் சல்யூட்!

அதிமுக என்றாலே திமுகதான் எதிரி என்கிற எண்ணத்தினை முளையிலேயே கிள்ளி எறிந்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவரின் இறப்பினை இவ்வளவு விதந்தோதி, போற்றி, கெளரவமாய் அதிமுக நண்பர்களுக்கான இடத்தையும், ஆறுதலையும் சொல்லி, இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு எதிர்க்கட்சி இயங்கி இருக்க முடியாது. அதற்கான தகுதி எங்களுக்கு மட்டும்தான் என்று சொல்லாமல் செய்துகாட்டிவிட்டீர்கள்.

எல்லாவற்றையும்விட தமிழக மக்கள். தங்களுடைய முதல்வரின் அகால மரணம் தெரிந்து அமைதியாய், எந்த ஓவர் சென்டிமென்ட்டையும் வெளிப்படுத்தாமல், அதே சமயத்தில் ஆத்மார்த்தமான ஓர் அஞ்சலியை முதல்வருக்குச் செலுத்திவிட்டீர்கள். திராவிட இயக்க வேர்களை அறுத்து இந்த வெற்றிடத்தினைப் பயன்படுத்திக்கொண்டு, உள்ளே நுழையலாமா என்று தூண்டில் போட்டவர்களின் எண்ணத்தில் தெளிவாய் மண்ணை அள்ளிப்போட்டீர்கள். பெரியார் பூமி என்பது சொல்லல்ல, வாழ்வியல் முறை என்று நிரூபித்த மக்களுக்கு வந்தனங்கள்.

திராவிட இயக்கம் வேரூன்றி இருக்கின்ற மண்தான் எப்போதும் இந்தியாவுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு!

http://tamil.thehindu.com/opinion/blogs/இணைய-களம்-கனகச்சிதமாய்-முடிந்தது-எல்லாம்/article9414830.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.