Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தொடரும் சித்திரவதை-ஐ.நா. குற்றச்சாட்டு

Featured Replies

இலங்கையில் தொடரும் சித்திரவதை-ஐ.நா. குற்றச்சாட்டு
 
 
இலங்கையில் தொடரும் சித்திரவதை-ஐ.நா. குற்றச்சாட்டு
இலங்கையில்கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவில் இருக்கும் நபர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்  தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீ.ஐ.டி என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரினாலேயே பெரும்பாலான சித்திரவதைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு இலங்கை தொடர்பில் ஐந்தாவது தடவையாக நடத்திய மீளாய்வுக் கூட்டத்தொடர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு நடவடி க்கைகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை களுக்கு எதிரான குழு  பரிந்துரைத்துள்ளது. 
 
அது மாத்திரமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என கூறி புனர்வாழ்வு வழங்கி யதாக இலங்கை அரசாங்கம் கூறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பில் வைத்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் உட்பட சித்திரவதைகள் தொடர்பிலான விசாரணை களுக்காக  சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை உடனடியாக அமைக்குமாறும் ஐ.நா குழு வலியு றுத்தியுள்ளது.
 
கைதுசெய்யப்படும் நபர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் பதிவுசெய்யாது முதல் சில மணி நேரங்கள் தடுத்து வைத்திருப்பது, நீதவான் முன்னிலையில் நிறுத்தாது தடுத்து வைத்திருப்பதன் ஊடாக பொலிசார் சித்திரவதைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்வதாக ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதி ரான குழு குற்றம்சாட்டியுள்ளது. 
 
வழக்கு விசாரணைகளுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் தொடர்பில் நீதவான்களால் விசாரணைக்கு உட்படுத்தாமை சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு பொலிசார் விடுக்கும் கோரிக்கைக்கு எந்தவித விசாரணையும் இன்றி நீதிமன்றினால் அனுமதி வழங்க ப்படுகின்றமை ஆகிய விடயங்களும் சித்திரவதைகள் தடையின்றி தொடர்வதற்கு ஏதுவாக அமைந்து ள்ளதாக ஐ.நா குழு சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா வின் சித்ததிரவதைகளுக்கு எதிரான குழுவின் 51 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் ஆராய்ந்த நிலையிலேயே ஐ.நா குழு 14 பக்க அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. 
 
ஊடகவியலாளர்கள், மனித உரிமை செய்றபாட்டாளர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச பொது அமைப்புக்கள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட தகவல்கள் மாத்திரமன்றி, இலங்கை அரச தரப்பினாலும் வழங்கப்பட்ட அறிக்கைகளை மையப்படுத்தியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கையினால் சித்திரவதைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எழுப்ப ப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அரசாங்கம் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஜெனீவாவிற்கு அனுப்பியிருந்த 11 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினால் வழங்கப்பட்ட பதில்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என ஐ.நா குழு குறிப்பிட்டுள்ளது. 
 
குறிப்பாக இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ் 2008 முதல் 2009 யூன் மாதம் வரை சீ.ஐ.டி மற்றும் ரீ.ஐ.டி ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்த போது குறித்த பொலிஸ் பிரிவினரால் இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் எழுப்ப ப்பட்ட கேள்விகளுக்கு சிசிர மெண்டிஸ் பதிலளிக்காது மௌனம் காத்தமை கவலைக்குரிய விடயம் என்றும் ஐ.நா வின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு சுட்டிக்காட்டியுள்ளது. 
 
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸோ அல்லது வேறு எவருமோ இர ண்டு நாள் அமர்வுகளிலும் வழங்கிய பதில்களிலும், அதற்குப் பின்னரும் அரசாங்கத்தினால் எழுத்துமூலம் வழங்கிய பதில்களிலும் உரிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை என ஐ.நா வின் சித்திர வதைகளுக்கு எதிரான குழு தெரிவித்துள்ளது. 
 
தற்போதைய அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சித்திரவதைகளை தடுப்பதற்கான யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு குற்றம்சாட்டியுள்ளது. 
 
சட்ட பாதுகாப்பு பலவந்தமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதை தடுத்தல், சித்திரவதைகள் தொட ர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது, கடந்தகால குற்றச்செயல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது. 

http://onlineuthayan.com/news/21101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.