Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிறிஸ்துமஸ் ரெசிப்பி

Featured Replies

கிறிஸ்துமஸ் ரெசிப்பி

 

9p1.jpg

கிறிஸ்துமஸ் ரெசிப்பி

* கருப்பட்டி முட்டை புடிங்

* எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்

* கேரள ப்ளம் கேக்
9p13.jpg
* பிஸ்தா பாயசம்

* வான்கோழி பிரியாணி

* ப்ரான் பாப்ஸ்

* செர்ரி மஃபின்ஸ்

* செர்ரி அண்ட் ஃப்ரூட் ஜெல்லி

* கிரில்டு சிக்கன்

* ஸ்பைஸ்டு குக்கீஸ்

9p2.jpg

விளக்குகளும், பரிசுகளும், கேக் வாசமும் மணக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை தன் ரெசிப்பி மூலம் கூடுதல் சிறப்பாக்கியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா.

கருப்பட்டி முட்டை புடிங்

9p3.jpg

தேவையானவை:

 கருப்பட்டி - 100 கிராம்

 தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்

 முட்டை - 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்)

 வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

 வெண்ணெய்/எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கருப்பட்டியை நன்றாகப் பொடித்துத் தூளாக்கவும். அடுப்பில் வாணலி வைத்து பொடித்த கருப்பட்டி, 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். கரைந்ததும் வடிகட்டி ஆறவிடவும். முட்டையை லேசாக அடித்து (நுரை வரும்வரை அடிக்கக் கூடாது), ஆறிய கருப்பட்டிப் பாகு, எசன்ஸ் சேர்த்து லேசாகக் கலக்கவும். மோல்டு அல்லது டம்ளரில் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் (வாசனையில்லா எண்ணெய்) தடவி, முட்டை - கருப்பட்டிக் கலவையை அதில் ஊற்றவும். வாய்ப்பகுதியை ஃபாயில் பேப்பரால் மூடவும் (இல்லையென்றால் வேகவைக்கும்போது தண்ணீர் உள்ளே சென்றுவிடும்).

அடுப்பில் ஒரு பான் வைத்து தண்ணீர் சேர்த்து  நன்றாகக் கொதித்ததும் இந்த மோல்டு/டம்ப்ளரை தண்ணீரில் மூழ்கிவிடாதபடி உள்ளே வைக்கவும். மூடி போட்டு 30  நிமிடங்கள் வேகவிடவும். வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க, கத்தியை கலவையின் நடுவே விட்டுப் பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். இல்லை என்றால் சிறிது நேரம் வேகவிடவும். வெந்ததும் வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். ஜெல்லிபோல இருக்கும் இந்த புடிங்..


9p4.jpg

எக்லெஸ் டூட்டி ஃப்ரூட்டி குக்கீஸ்

தேவையானவை:

 மைதா மாவு - 50 கிராம்

 சர்க்கரை - 30 கிராம்

 கஸ்ட்டர்ட் பவுடர் - 10 கிராம்

 பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
9p13.jpg
 பால் - 3 டீஸ்பூன்

 உருக்கிய வெண்ணெய் - 2 டீஸ்பூன்

 டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

பேக்கிங் அவனை 175 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்களுக்கு ப்ரீஹீட் செய்யவும். மைதா மாவு, சர்க்கரை, கஸ்ட்டர்ட் பவுடர், பால், உப்பு, பேக்கிங் பவுடர், டூட்டி ஃப்ரூட்டி, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டவும். பேக்கிங் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து, தட்டியவற்றை வைக்கவும். இதனை பேக்கிங் ‘அவன்’ நடுவில் வைத்து 20 நிமிடங்கள் (அ) ஓரங்கள் பிரவுன் ஆகும்வரை பேக் செய்யவும். பின்னர் அவனில் இருந்து எடுத்து, ஆறியதும் காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைத்துச் சுவைக்கவும்.

குறிப்பு:

பேக் செய்ததும் குக்கீஸ் மிருதுவாக இருக்கும். குளிரக் குளிர கடினமாகிவிடும். ஒருவேளை அதற்குப் பிறகும் மிருதுவாக இருந்தால், மீண்டும் சில நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.


9p5.jpg

கேரள ப்ளம் கேக் (Non - alcoholic )

அரை கிலோ கேக் செய்யத் தேவையானவை:

 மைதா மாவு - 150 கிராம்

 சர்க்கரை  - 150 கிராம்

 முட்டை  - 2

 எண்ணெய்/உருக்கிய வெண்ணெய் - 50 மில்லி

 வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - கால் டீஸ்பூன்
9p13.jpg
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 ஏலக்காய் - 4

 பட்டை - 2 இஞ்ச்  நீளத்துண்டு

 கிராம்பு - 6

 டூட்டி ஃப்ரூட்டி - 4 டேபிள்ஸ்பூன்

 கிஸ்மிஸ் (உலர் திராட்சை)  - 4 டேபிள்ஸ்பூன்

 முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்

 பாதாம் - 1 டேபிள்ஸ்பூன்

 ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் - அரை கப்

கேரமல் செய்ய:

 சர்க்கரை - கால் கப்

 தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன் கப்

செய்முறை ஊறவைக்க:

பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) இவற்றை அரை கப் ஆப்பிள் (அ) ஆரஞ்சு ஜூஸில் 24 மணி நேரம் ஊறவிடவும்.

கேரமல் செய்ய:

அடுப்பில் ஒரு அடிகனமான வாணலியை வைத்து மிதமான தீயில், சர்க்கரையைச் சேர்த்துக் கருகவிடவும். முழுவதும் கருகி நிறம் டார்க் பிரவுனாக மாறும்போது தள்ளி நின்றுகொண்டு (மேலே தெறிக்கும் என்பதால்), கொஞ்சம் தண்ணீர் சர்க்கரையில் சேர்க்கவும் தீயை அதிகமாக வைத்து நன்றாகக் கரையவிடவும். இப்போது சர்க்கரை கரைந்து கறுப்பு கலர் தண்ணீர் போன்று இருக்கும். கருகிய வாசம் வரும். இதுதான் பிளம் கேக் செய்யத் தேவையான கேரமல். இதனை ஆறவைக்கவும்.

கேக் செய்முறை:

கேக் பானில் (6-8 இன்ச்) லேசாக வெண்ணெய் (அ) எண்ணெய் தடவவும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு தூவி, பானின் எல்லா பக்கங்களிலும் ஒட்டுமாறு தட்டி வைக்கவும். ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். ஊறிய பருப்பு வகைகள், கிஸ்மிஸ் (உலர் திராட்சை), டூட்டி ஃப்ரூட்டி அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து ஒன்றாகக் கலந்து, 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவில் புரட்டி வைக்கவும். ஊறியதில் மீதமிருக்கும் ஜூஸை தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பவுலில் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். இத்துடன், சர்க்கரை, முட்டை சேர்த்து நன்றாக நுரைத்துப் பொங்கும்வரை அடித்துக் கலக்கவும் (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்தால், கேக் மிகவும் சாஃப்ட் ஆக வரும்). இதனுடன் ஆறிய கேரமல் சாஸ், வெனிலா எசன்ஸ், பொடித்த ஏலக்காய் கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும். இத்துடன் மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து முட்டை அடிக்கும் விஸ்க் (whisk) அல்லது ஃபோர்கினால் மெதுவாகக் கலக்கவும் (இப்போது எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம்). பதம் இட்லி மாவைவிட கெட்டியாக இருக்க வேண்டும்.

இதில், மாவில் புரட்டி வைத்திருக்கும் டூட்டி ஃப்ரூட்டி, நட்ஸ் மற்றும் உலர் திராட்சை(கிஸ்மிஸ்), எடுத்து வைத்த ஜூஸ் சேர்த்து லேசாகக் கிளறவும். இதனை வெண்ணெய்/எண்ணெய் தடவி, மாவு தட்டி வைத்திருக்கும் பானில் ஊற்றி சமன் செய்யவும். பிறகு குக்கர் அல்லது பேக்கிங் அவனில் வைத்து பேக் செய்யவும்.

குக்கரில் பேக் செய்யும் முறை:

குக்கரை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டை வைக்கவும். குக்கர் மூடியை, தலைகீழாக மூடவும். பத்து நிமிடத்தில் குக்கர் நன்றாகச் சூடானதும், உள்ளே எந்த நீர்த் துளிகளும் இல்லை என்ற நிலையில், ரெடி செய்த கேக் பேனை, குக்கரின் உள்ளே உள்ள பிளேட்டின் மேல் வைக்கவும். மறுபடியும் மூடியைத் தலைகீழாக வைத்து மிதமான தீயில் 45 நிமிடங்கள்  வேகவிடவும். பிறகு, மூடியை எடுத்துவிட்டு, டூத் பிக்கால் கேக் வெந்துவிட்டதா என்று குத்திப்பார்க்கவும். டூத் பிக்கில் மாவு ஒட்டினால், கூடுதலாக 10 நிமிடங்கள் தலைகீழாக மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பிறகு, பேனில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு:

குக்கரில் நீர் சேர்க்கத் தேவையில்லை. இது பேக் செய்வது, நீரில் வேகவைப்பது அல்ல.

அவனில் பேக் செய்யும்  முறை:

பேக்கிங் அவனை 10 நிமிடங்கள் ப்ரீஹிட் செய்யவும். 175°C அல்லது 180 °Cல் டெம்பரேச்சர் செட் செய்யவும். அவனின் உள்ளே இருக்கும் இரண்டு ராட்களையும் ஃப்ரீ ஹீட்டின் போது ஆன் செய்ய வேண்டும். பிறகு நடுவில் உள்ள டிரேவில் ரெடி செய்து வைத்த கேக் பேனை வைத்து, 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும் (கேக் பேனின் அளவைப் பொறுத்து நேரம் மாறுபடும்).


9p6.jpg

பிஸ்தா பாயசம்

தேவையானவை:

 பிஸ்தா(உப்பில்லாதது) - 100 கிராம்

 துருவிய பிஸ்தா - ஒரு டீஸ்பூன்

 ரவை - 3 டேபிள்ஸ்பூன்

 சர்க்கரை - 10 டேபிள்ஸ்பூன்

 பால் - அரை லிட்டர்

 கன்டெண்ஸ்ட் மில்க் - 2 டேபிள்ஸ்பூன்

 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்9p13.jpg

 பிஸ்தா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

 பச்சை ஃபுட் கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்)
 
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

50 கிராம் பிஸ்தாவுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பிஸ்தாவை சிறுதுண்டுகளாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து நெய் சேர்த்து, நறுக்கிய பிஸ்தாவைச் சேர்த்து வதக்கவும்(லேசாக வறுத்தால் போதும்). இதில் ரவையைச் சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும். பின்னர் பால், அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து, ரவை நன்றாக வேகும்வரை மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் கன்டெண்ஸ்ட் மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாயசம் கெட்டியானதும் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து இறக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவிப் பரிமாறவும்.


9p7.jpg

செர்ரி மஃபின்ஸ்

தேவையானவை:

 கிளேஸ் செர்ரீஸ் (Glace cherries) - 150 கிராம்

 மைதா மாவு - 100 கிராம்

 பேக்கிங் பவுடர் -  அரை டீஸ்பூன்

 சர்க்கரை - 75 கிராம்9p13.jpg

 முட்டை - ஒன்று

 காய்ச்சிய பால் - 50 மில்லி

 வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - 50 மில்லி (வாசனை இல்லாதது)

 உப்பில்லாத வெண்ணெய் (உருக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாதி செர்ரிக்களை மிக்ஸியில் நன்றாக விழுதாக அரைக்கவும். மீதி செர்ரிக்களை நறுக்கி வைக்கவும்.

மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகச் சலித்து வைத்துக்கொள்ளவும். முட்டையுடன் சர்க்கரையைச் சேர்த்து நுரைக்க நன்றாக அடிக்கவும். பின்னர் எசன்ஸ் சேர்த்து அடிக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், எண்ணெய், பால் சேர்த்து ஒரு நிமிடம் அடிக்கவும். இதனுடன் செர்ரி விழுதைச் சேர்த்து எக் பீட்டரால் நன்கு கலக்கவும். பிறகு, மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கிளறவும் (அதிகம் கிளற வேண்டாம்).

அதில் நறுக்கிய செர்ரித் துண்டுகளைச் சேர்க்கவும். கப் கேக் பேப்பர்களை கப் கேக் ட்ரேயில் வைத்து அதனுள் செய்து வைத்திருக்கும் மாவை முக்கால் பாகம்வரை ஊற்றவும்.

20 நிமிடம் ப்ரீஹீட் செய்த அவனில் 160 டிகிரி செல்சியஸில் கப் கேக்களை வைத்து 20 - 25 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும். டூத்பிக் அல்லது பணியாரக் கம்பியை உள்ளேவிட்டு கேக் வெந்துவிட்டதா என்று பார்க்கவும். மாவு ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் பேக் செய்யவும். ஒட்டவில்லையென்றால் கேக் ரெடி. ஆறியதும் பரிமாறவும்.


9p8.jpg

வான்கோழி பிரியாணி

தேவையானவை:

 வான்கோழிக் கறி - ஒரு கிலோ

 பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ

 தேங்காய்ப் பால் - ஒரு கப்

 தயிர் - அரை கப்

 பெரிய வெங்காயம் - 5

 தக்காளி - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)

 பச்சை மிளகாய் - 5 (கீறி விடவும்)

 புதினா - 2  கப்

 கொத்தமல்லித்தழை - 2  கப்

 ஏலக்காய்  - 10

 பிரியாணிப் பூ - 6

 பிரிஞ்சி இலை - 4

 கிராம்பு - 10

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
9p13.jpg
 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை  டேபிள்ஸ்பூன்

 சோம்புத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 முந்திரி - 10

 கிஸ்மிஸ் (உலர்  திராட்சை) - 10

 நெய் - 200 கிராம்

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

பிரியாணி மேல் தூவுவதற்கு:

 கொத்தமல்லித்தழை, புதினா (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்

 மெல்லிய நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் (இதனை எண்ணெய் அல்லது நெய்யில் பொன்னிறமாக வதக்கிவைக்கவும்)

 குங்குமப்பூ - 2 பிஞ்ச் (2 டேபிள்ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்)

 நெய்யில் வறுத்த முந்திரி - கொஞ்சம்

செய்முறை:

வான்கோழிக் கறியைக் கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், சோம்புத்தூள், உப்பு, கீறிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை (பாதி), புதினா (பாதி), தயிர் சேர்த்துக் கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் (முந்தின நாள் இரவே ஃபிரிட்ஜில் ஊறவைக்கலாம்). நன்கு கழுவிய பாஸ்மதி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து அரைவேக்காடாக வேகவிடவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி, அரிசியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

அடுப்பில் குக்கர் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, ஏலக்காய், பிரியாணிப் பூ, கிராம்பு, பிரிஞ்சி இலை, கிஸ்மிஸ் (உலர் திராட்சை), முந்திரி, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, மீதமுள்ள கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறவைத்த கறியை மசாலாவுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

மசாலா நன்றாகச் சேர்ந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, வான்கோழி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு, திறந்து பார்த்து கறி வேகவில்லை என்றால், கூடுதலாக 10 நிமிடங்கள் வேகவிடவும்; தண்ணீர் அதிகம் இருந்தால் கிரேவிபோல் வற்றவைக்கவும்.

பிரியாணி அடுக்கும் முறை:

அடுப்பில் மற்றொரு குக்கரை வைத்து முதலில் அரை வேக்காடாக வெந்த அரிசியைச் சேர்த்து, அதன் மேல் வான்கோழி கிரேவியைச் சேர்க்கவும். இந்த அரிசி, கிரேவி அடுக்குகளை மீண்டும் மீண்டும் செய்யவும். புதினா, கொத்தமல்லித்தழை தூவவும். இறுதியில் ஓர் அடுக்கு அரிசி பரப்பி, வறுத்து வைத்த நட்ஸ், வெங்காயம் தூவி, குங்குமப்பூ பால் சேர்த்து குக்கரில் மூடி போடவும்.

அடுப்பின் மீது  ஒரு பெரிய தோசைக் கல்லை வைத்து, அதன் மீது இந்த குக்கரை வைத்து 15 நிமிடங்கள் குறைந்த தீயில் தம் போடவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி 20  நிமிடங்கள் கழித்து குக்கரைத் திறந்து லேசாகக் கிளறிப் பரிமாறவும்.


9p9.jpg

ப்ரான் பாப்ஸ்

தேவையானவை:

 இறால் - 150 கிராம்

 முட்டை - ஒன்று

 துருவிய சீஸ் - 2 டீஸ்பூன்

 பூண்டு - ஒரு பல்

 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்9p13.jpg

 தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

 ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 மைதா மாவு - ஒரு கப்

 வுடன் ஸ்கீவர்ஸ் (Wooden skewers) அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ் - தேவையான அளவு

 பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்

 எண்ணெய் - தேவைக்கேற்ப

 உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். மைதா மாவு மற்றும் பிரெட் கிரம்ப்ஸை தனித் தனிக் கப்களில் வைக்கவும். இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் உரித்த பூண்டு, சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ் (மொசரல்ல/அமுல் சீஸ்), 2 டேபிள்ஸ்பூன் அடித்த முட்டை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் (தண்ணீர் துளியும் சேர்க்க வேண்டாம்). கலவையை நன்றாகப் பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். ஒரு சிறிய ஸ்கீவர் அல்லது ஐஸ்கிரீம் குச்சியை முட்டையில் தோய்த்து, இந்த உருண்டைகளை அதில் செருகவும். பிறகு, மைதா மாவில் புரட்டி, பின்னர் முட்டையில் தோய்த்து, மீண்டும் பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இப்படிச் செய்துகொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, செய்துவைத்த பாப்ஸ்களைப் பொரித்தெடுக்கவும். இறால் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் சிறிது நேரம் பொரித்தால் போதுமானது. சாஸுடன் பரிமாறவும்.


9p10.jpg

செர்ரி அண்ட் ஃப்ரூட் ஜெல்லி (அகர் அகர் (agar agar) பயன்படுத்திச் செய்வது)

ஜெல்லி செய்ய:

 அகர் அகர் - 5 கிராம்

 மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ் - அரை டீஸ்பூன்

 சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்

 பச்சை நிற ஃபுட் கலர்  - ஒரு சிட்டிகை

செர்ரி ஜாம் செய்ய:

 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

 ஃப்ரெஷ் செர்ரி (கிடைக்கவில்லை என்றால் பிளம்ஸ் பயன்படுத்தலாம்) - 100 கிராம்

 சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்

ஜெல்லி செய்முறை:

அகர் அகரை தண்ணீரில் கழுவி, அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். நன்றாகக் கரைய, நேரம் எடுக்கும். கரையும்வரை காத்திருக்கவும். கரைந்ததும், சர்க்கரை சேர்த்துக் கரையவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி, மிக்ஸ்டு ஃப்ரூட் எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கரைத்து, வடிகட்டி, மோல்டு அல்லது கப்பில் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் வைக்கலாம். வெளியே வைத்தாலும் செட் ஆகிவிடும். அதுதான் அகர் அகரின் ப்ளஸ்.

ஜாம் செய்முறை:

செர்ரிக்களை சுத்தம் செய்து விதைகளை நீக்கி நறுக்கவும். அடுப்பில் அடிகனமான பான் வைத்து, நறுக்கிய செர்ரி, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை கரைந்து சாஸ் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்கி ஆறவைக்கவும்.

ஜாம் ஆறியதும், செட் ஆகியிருக்கும் ஜெல்லியின் மேல் இதைச் சேர்த்து, ஃபிரிட்ஜில் 10 நிமிடங்கள் குளிரவைத்து எடுத்துப் பரிமாறவும்.


9p11.jpg

கிரில்டு சிக்கன் (அவனில் செய்யும் முறை)

தேவையானவை:

 முழுக் கோழி - 1 கிலோ

 மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 4 டேபிஸ்பூன்

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 எலுமிச்சை - ஒன்று

 உருளைக்கிழங்கு - இரண்டு

 அலுமினியம் ஃபாயில் - தேவையான அளவு

 உப்பு - ஒன்றரை டேபிஸ்பூன்

செய்முறை:

முழுக் கோழியைத் தோலுடன், அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள அனைத்தையும் நீக்கிவிட்டுத் தரும்படி கடையிலேயே கேட்டு வாங்கவும். வாங்கிவந்த முழுக் கோழியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும்(கோழியில் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தேய்த்தும் கழுவிக்கொள்ளலாம்).

மசாலாத்தூள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அரை மூடி எலுமிச்சைச் சாற்றை அதில் பிழிந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மசாலாவாகப் பிசையவும். அந்த மசாலாவை, கழுவி வைத்திருக்கும் கோழியின் மேலும், உட்பகுதியிலும் நன்றாகத் தடவவும்(மசாலா கெட்டியாக இருந்தால் மட்டுமே கோழியுடன் பிடித்துக்கொள்ளும் என்பதால், மசாலா பேஸ்ட் செய்யும்போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்). வயிற்றின் உள் பகுதியில் மீதமிருக்கும் எலுமிச்சையை இரண்டு துண்டுகளாக்கி வைக்கவும். அப்போதுதான் நாம் தடவி வைத்திருக்கும் மசாலாவின் சாறு வயிற்றுப் பகுதியில் இறங்கி சுவை கொடுக்கும் மசாலா தடவிய கோழியை ஒரு பாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும்(ஃப்ரீஸரில் அல்ல). ஓர் இரவு இப்படி வைத்து மறுநாள் வெளியே எடுத்து, ரூம் டெம்ப்பரேச்சருக்கு வரும்வரை வைத்திருக்கவும்.

அவனை 10 நிமிடங்களுக்கு 200 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். அலுமினியம் ஃபாயில் பேப்பரை உருட்டி, சிறிய உருண்டைகளாகச் செய்து வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அலுமினியம் ஃபாயிலைப் பரப்பவும். அதில் இரண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கிச் சேர்க்கவும். கூடவே உருட்டிய அலுமினியம் ஃபாயில் பேப்பர் உருண்டைகளையும் சேர்க்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகளின் மேல் சிக்கனை வைக்கவும். இந்த ஃபாயில் பேப்பர் உருண்டைகள் சிக்கனின் முதுகுப்பகுதி, அதாவது அடிப்பாகம் டிரேயின் சூட்டில் கருகாமல், முழுமையாக வேக உதவும்.

இப்போது இதை அவனின் நடு ரேக்கில் வைத்து 200 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் 170 டிகிரி செல்சியஸுக்கு மாற்றி ஒரு மணி நேரம் வேகவிடவும். (முதலில் வெப்பம் அதிகமாக வைப்பதால் சிக்கன் ஜுஸியாக இருக்கும்).

அவனை இடையிடையே இரண்டு முறை திறந்து பார்த்து, வெந்த சிக்கனில் இருந்து வடிந்திருக்கும் சாற்றை, ஃபுட் பிரஷ் மூலம் தொட்டு சிக்கன் மேலே தடவ வேண்டும் (அல்லது, வெண்ணெய்/சன்ஃபிளவர் ஆயில் சிறிது மேலே தடவிவிடலாம்). இது சிக்கன் டிரை ஆவதைத் தடுக்கும்.

முடிந்ததும் எடுத்து அப்படியே பரிமாறலாம். கீழுள்ள உருளைக்கிழங்கு சிக்கன் வெளியிட்ட சாறில் நன்றாக வெந்திருக்கும். அதையும் சாப்பிடலாம்.


9p12.jpg

ஸ்பைஸ்டு குக்கீஸ்

தேவையானவை:

 மைதா மாவு - 50 கிராம்

 உப்பில்லாத வெண்ணெய் - 20 கிராம்

 பொடித்த சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்9p13.jpg

 ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

 கிராம்புத்தூள் - 2 சிட்டிகை

 பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை

 உப்பு - ஒரு சிட்டிகை

 பட்டர் பேப்பர் - தேவையான அளவு

செய்முறை:

வெண்ணெயை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்ததும் பயன்படுத்தாமல், நன்கு நெகிழவிடவும். அந்த வெண்ணெயுடன் மைதா மாவு, உப்பு, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், கிராம்புத்தூள், பட்டைத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிப் பிசையவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது பால் தெளித்துப் பிசையலாம். பிசைந்த மாவை மெல்லிசாக சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டி அரை இஞ்ச் தடிமனில் சப்பாத்திபோலத் தேய்த்து, அதில் விரும்பிய வடிவங்களில் கட் செய்யவும்.

ஒரு தட்டில் பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் கட் செய்த வடிவங்களை அடுக்கி 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

அவனை 10 நிமிடங்கள் 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரே மீது பட்டர் பேப்பர் விரித்து, அதன் மேல் குளிரவைத்து எடுத்த குக்கீஸ்களை வைத்து, 8 நிமிடங்கள் நடு ரேக்கில் வைத்து பேக் செய்யவும். ஓரங்கள் லேசாக பிரவுன் ஆனால் போதும். சீக்கிரம் வெந்துவிடும். அவனில் இருந்து எடுத்து குக்கீஸை ஆறவைக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைத்து ருசிக்கவும்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

 

Plum Cake Recipe | Christmas fruit Cake

  • தொடங்கியவர்

 

Christmas Gooey Butter Cookies

  • தொடங்கியவர்

 

Chocolate Plum Cake

  • தொடங்கியவர்

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்

இது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது.

இது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது. பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்து கிறிஸ்துமஸ் அன்று சாண்டா க்ளாஸை நீங்கள் ஏன் வரவேற்கக் கூடாது. இந்த கேக் மிகவும் அழகானது மற்றும் மிகவும் ருசி மிகுந்தது.

இதை உங்களின் வீட்டிலேயே எளிதாக செய்து விட முடியும். உங்களுக்கு உதவுவதற்காக இந்த கேக்கின் செய்முறை மற்றும் அதற்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளோம்.


தேவையான பொருட்கள்:

கேக்கிற்கு

1. சாக்லேட் கேக் - 1

2. அடிக்கப்பட்ட கிரீம் - 4 கப்

3. டின் செர்ரிக்கள் - 16 (பகுதிகளாக வெட்டப்பட்டது)

 

சக்கரை பாகிற்கு

4. சர்க்கரை - ½ கப்

5. தண்ணீர் - ¾ கப்

 

அழகுப்படுத்துவதற்காக

6. சாக்லேட் சுருள் - 1¼ கப்

7. டின் செர்ரிக்கள் - 10 (முழுமையானது) 

 

செயல்முறை:

1. ஒரு சாக்லேட் கேக்கை அருகில் உள்ள பேக்கரியில் இருந்து வாங்குங்கள். இது எளிதாக கிடைக்கின்றது. மேலும் இதில் முட்டை கிடையாது. இந்த சாக்லேட் கேக்கை 3 அடுக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் கேக்கை ஊற வைக்க சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரில் சக்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

mouth watering black forest cake-recipe for New year and Christmas

 

2. பாகிற்கு சுவை சேர்க்க நீங்கள் பிராந்தி, ரம், முதலியனவற்றை சிறிது சேர்க்கலாம். பாகு நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகு அறை வெப்பநிலைக்கு வரும் வரை பாகை குளிர விடவும். இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து நன்கு அடிக்கவும். க்ரீம் பொங்கி பஞ்சு போன்று வரும் வரை க்ரீமை நன்கு அடித்து கலக்கவும்.

mouth watering black forest cake-recipe for New year and Christmas

 

3. ஒரு கேக் ஸ்டேண்ட் எடுத்து அதில் ஒரு அடுக்கு கேக் வைக்கவும். இப்போது, அதில் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டும். மேலும் அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து ஒரு அடுக்கு போன்று செய்யவும்.

 

mouth watering black forest cake-recipe for New year and Christmas

 

4. கேக் அடுக்குகளின் மீது தடித்த கிரீம் அடுக்குகளை உருவாக்கவும். மிகவும் கவனமாக கேக்குகளின் மீது க்ரீம் நன்கு பரவும் படி தடவவும். இப்போது, கேக் அடுக்குகளின் மீது செர்ரிகளை சேர்க்க வேண்டும். நீங்கள் முழு செர்ரிகள் அல்லது பாதியாக வெட்டப்பட்ட செர்ரிக்களை பயன்படுத்தலாம்.

 

mouth watering black forest cake-recipe for New year and Christmas

 

5. இப்பொழுது முதல் கேக் அடுக்கின் மீது இரண்டாவது கேக் அடுக்கை உருவாக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட செய்முறைகளை மீண்டும் பின்பற்றவும். இதே போன்று மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கை உருவாக்கவும். அதன் பின்னர், கேக் முழுவதும் பரவும் படி கிரீமை முழுமையாக பரப்பவும். க்ரீம்களை நன்கு சமன்செய்யவும். சாக்லேட் பட்டையை துருவி அதில் இருந்து சாக்லேட் சுருளை உருவாக்குங்கள். அதை வைத்து கேக்கை அலங்கரியுங்கள் மேலும் கேக்கை அலங்கரிக்க செர்ரிக்களை பயன்படுத்தலாம். 

 

mouth watering black forest cake-recipe for New year and Christmas #

 

6. இந்த கேக்கின் பக்கவாட்டில் சாக்லேட் சுருள்களை தடவ மறவாதீர்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.

 

7. பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை சிறிய பகுதிகளாக வெட்டி உங்களின் விருந்தினர்களுக்கு பறிமாறுங்கள்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/sweets/mouth-watering-black-forest-cake-recipe-new-year-christmas/gallery-cl5-13748.html

 

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்

கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது கேக். இப்போது வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக்
 
தேவையான பொருட்கள் :

வெண்ணெய் - 150 கிராம்
சீனி - 200 கிராம்
மைதா - 250 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - 1 மேசைக்கரண்டி
கொதி நீர் - அரை கப்
கோக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை :

* கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

* மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சீனியையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.

* பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.

* அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.

* பின்னர் கேக் செய்யும் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.

* இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.

* கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.

* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக் ரெடி.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

 

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. இப்போது ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

 
 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்
 
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் :

கேரமலுக்கு…

சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்

கேக்கிற்கு…

மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 5 டீஸ்பூன்

EE929FA9-06E6-4132-858B-7FD06FCE2071_L_s

கேரமல் செய்முறை :

* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.

கேக் செய்முறை  :

* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.

* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.

* பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

* இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.

* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

* பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.

http://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2016/12/24101203/1057999/Special-Christmas-Fruit-Cake.vpf

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்

இந்த (நாளை) வருட கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பானதாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய கப் கேக் வகைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.

 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்
 
தேவையான பொருட்கள் :

முட்டை - 5
சர்க்கரை - கால் கிலோ
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மைதா - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி, கோகோ பவுடர், செர்ரி - சிறிதளவு
பேப்பர் கப் மோல்டு - தேவையான அளவு

DE02EBC8-691A-4B8A-AA42-BD6BBD239E16_L_s

செய்முறை :

* மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும்.

* சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும்.

* பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

* சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்து வைக்கவும்.

* ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும்.

* இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும்.

* மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலந்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றவும்.

* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

* 7 நிமிடம் ஆனவுடன் சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து, எடுக்கவும்.

* விரும்பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம்.

* சூப்பரான கப் கேக் ரெடி.

http://www.maalaimalar.com/

  • 11 months later...
  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

 

5p1_1511860994.jpg

கிறிஸ்துமஸ் என்றால் நம் நினைவுக்குவருவது விளக்குகளும், பரிசு பொருள்களும், அதற்கடுத்து கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்களும்தானே! உலக அளவில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பையே மிகப்பெரிய நிகழ்வாக நடத்தும் அளவுக்கு கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அன்பர்கள் இல்லத்தில் தவறாமல் இடம்பெறும் கேக் வகைகளை  அனைவரது இல்லங்களிலும் செய்து அசத்தும் விதமாக, ரெசிப்பி மற்றும் படங்கள் மூலம் இந்தக் கொண்டாட்டத்தைக் கூடுதல் சிறப்பாக்கியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞர் திவ்யா.

5p2_1511861013.jpg

நோ பேக் கிறிஸ்துமஸ் ட்ரீ கேக்

தேவையானவை:

 மேரி பிஸ்கட் - 2 பாக்கெட்
 உருக்கிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 சாக்லேட் - 20 கிராம்
 டூட்டி ஃப்ரூட்டி, உலர்திராட்சை -  தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 வறுத்துத் துண்டாக்கிய நட்ஸ் கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்

அலங்கரிக்க:

 வெண்ணெய் - 2   டீஸ்பூன்
 டார்க் சாக்லேட் (அ) மில்க் சாக்லேட்- 50   கிராம்
 சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
 பச்சை ஃபுட் கலர் - கால்  டீஸ்பூன்

செய்முறை:

பிஸ்கட்டைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும். சாக்லேட்டை மைக்ரோவேவ் அவனில் உருக்கவும். அல்லது டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். பிஸ்கட் தூள், உருக்கிய சாக்லேட், உருக்கிய வெண்ணெய்,  நட்ஸ் கலவை, உலர்திராட்சை மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து பூரி மாவு பதத்துக்குக் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு பால் தெளித்துக்கொள்ளலாம்). பிறகு, மாவை உருண்டையாக உருட்டி  பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த மாவு உருண்டையை பட்டர் பேப்பர் நடுவே வைத்து ஒரு இன்ச் தடிமனுக்குப் பூரியாகத் தேய்க்கவும். பிறகு சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து வெளியே எடுத்து, கேக் அட்டை அல்லது தட்டின் மீது வைத்து கிறிஸ்துமஸ்  ட்ரீ வடிவத்துக்கு வெட்டவும். (விரும்பிய  வடிவத்திலும் வெட்டலாம்).

டார்க் சாக்லேட் அல்லது மில்க் சாக்லேட்டைத் துண்டுகளாக நறுக்கி, வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லிங் முறையில் உருக்கி ஆறவிடவும். மைக்ரோவேவ் அவனில் வைத்தும் உருக்கலாம். இதை கேக்கின் மீது பரப்பி அலங்கரிக்கவும். சர்க்கரையுடன் சிறிதளவு ஃபுட் கலர் சேர்த்துக் கைபடாமல் `டாஸ்’ செய்து கலக்கவும். இதனை கேக் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

(ஃபுட் கலர் அதிகம் சேர்த்தால் சர்க்கரை உருகிவிடும். துளித் துளியாக சேர்க்கவும்.)


5p3_1511861032.jpg

சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

 மைதா மாவு - 50 கிராம் 
 கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்
 கிராம்பு, முட்டை - 2
 சர்க்கரை - 100  கிராம்
 சர்க்கரை – 20 கிராம் (கேரமல் செய்ய)
 காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
 பேரீச்சை - 30 கிராம் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்)
 டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பாதாம், வால்நட் - தலா 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்
 பட்டை - ஒரு சிறிய துண்டு
 ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை:

வெண்ணெயை ஃப்ரிட்ஜிலிருந்து  வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலிக்கவும்.

ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்). 

வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கறுகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.

பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும். பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும்.  பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம்.  கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்). பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ்,  நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவை சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்). பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்). இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும். பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


5p4_1511861050.jpg

கிறிஸ்துமஸ் ட்ரீ கப் கேக்ஸ் (ஜிஞ்சர் பிரெட் கப் கேக்ஸ்)

தேவையானவை:

 மைதா மாவு - 150 கிராம்
 உப்பு சேர்க்காத வெண்ணெய் - 150 கிராம்
 பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 150 கிராம்
 முட்டை - 3
 தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
 பட்டைத்தூள் - அரை டீஸ்பூன்
 ஜாதிக்காய்த் துருவல் - ஒரு சிட்டிகை
 காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - 2 சிட்டிகை
 பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 காய்ச்சி ஆற வைத்த பால், வெண்ணெய் - சிறிதளவு

மேலே க்ரீம் டெகரேட் செய்ய:

 உப்பு சேர்க்காத வெண்ணெய் - 100 கிராம்
 ஐசிங் சுகர் - 200 கிராம்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
 பட்டைத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், பழுப்பு சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும். பிறகு  பட்டைத்தூள்,  இஞ்சித் துருவல், ஜாதிக்காய்த் துருவல், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக பால், எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். கப் கேக் தட்டில் கப் கேக் பேப்பர் வைத்து மாவை முக்கால் பாகம் வரை நிரப்பவும். இதனை ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். (12 கப் கேக் வரும்).

கிறிஸ்துமஸ் ட்ரீ போல டெகரேட் செய்ய...

ஆறு கப் கேக்குடன் சிறிதளவு பால், உருக்கிய வெண்ணைய் சேர்த்து மிக்ஸியில்  அரைத்து எடுக்கவும்.  கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, அரைத்த கலவையை கோன் போல பிடித்து வைக்கவும்.  ஆறிய கப் கேக்கினுள் ஒரு டூத் பிக் செருகி அதன் மேல் கோனைச் செருகவும்.  க்ரீம் டெகரேட் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இதை கோனின் மீது தடவி டெகரேட் செய்யவும்.


5p5_1511861070.jpg

சிக்கன் கேக்

தேவையானவை:

 சிக்கன் (அரைத்தது) - 400 கிராம்
 மைதா மாவு - 300 கிராம்
 வெண்ணெய் - 200 கிராம்
 முட்டை - 3
 தயிர் - 100 மில்லி
 சர்க்கரை - 2 டீஸ்பூன்
 நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் - 3 டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 உலர்ந்த ஆரிகானோ, ரோஸ்மேரி - தலா 2 டீஸ்பூன்
 உலர்ந்த பேசில் இலைகள் - 3 டீஸ்பூன்
 ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன் (விரும்பினால்)
 மிளகு - ஒரு டீஸ்பூன் (தட்டவும்)
 மிளகுத்தூள், உப்பு - தலா 2 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை- 3 டீஸ்பூன்
 எண்ணெய் (அ) வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 மயோனைஸ் (அ) வொயிட் சாஸ் - தேவையான அளவு

சிக்கன் டாப்பிங் செய்ய:

 எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
 தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 பேசில் இலைகள் -அரை டீஸ்பூன்
 ஆரிகானோ - அரை டீஸ்பூன்
 பூண்டு - ஒரு பல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த கோழி, அரை டீஸ்பூன் உப்பு,  அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். மைதா மாவுடன் ஒன்றரை டீஸ்பூன் உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு ஆரிகானோ, பேசில் இலைகள், ரோஸ் மேரி, தட்டிய மிளகு, ரெட் சில்லி பிளேக்ஸ், மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். பிறகு, மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தயிர், தண்ணீர் (சுமார் 50 முதல் 100 மில்லி) சேர்த்து மெதுவாகக் கலக்கவும். பிறகு வேகவைத்த சிக்கன் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து மெதுவாகக் கிளறவும். இரண்டு சிறிய கேக் பானை (pan) எடுத்து உள்ளே வெண்ணெய் தடவி, மாவு தூவவும். அதனுள் கேக் கலவையை முக்கால் பாகம் வரை நிரப்பவும்.

160 டிகிரி செல்ஷியஸுக்கு பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து முப்பது நிமிடங்கள் அல்லது வேகும்வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள சிக்கன் துண்டுகள், பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய் விழுது, மிளகுத்தூள், உப்பு, பேசில் இலைகள், ஆரிகானோ சேர்த்து, அடுப்பைச் சிறு தீயில் வைத்து வதக்கவும். நன்கு வெந்த பிறகு தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். கேக்குகளின் மீது டோம் போல குவிந்திருக்கும் பகுதியை வெட்டிவிடவும். ஒரு கேக்கின் மீது கெட்செப், வெள்ளை சாஸ் அல்லது மயோனைஸ் பரத்தவும். அதன் மீது மற்றொரு கேக்கை அடுக்கவும். (வொயிட் சாஸ் உபயோகித்தால் கேக்கின் மேலே கேக் நாசில் வைத்து க்ரீம் போன்று அலங்காரம் செய்யலாம்). இதன் மீது சிக்கன் டாப்பிங்கை ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


5p6_1511861099.jpg

எக்லெஸ் கிறிஸ்துமஸ் கேக்   

தேவையானவை:

 மைதா - 150  கிராம்
 சர்க்கரை - 300 கிராம்
 வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
 உப்பில்லா வெண்ணெய் - 75 கிராம்
 சூரியகாந்தி எண்ணெய் -  25 மில்லி
 பால் - அரை கப்
 வினிகர் - 2 டீஸ்பூன்
 பேரீச்சை - 10
 டூட்டி ஃப்ரூட்டி -  ஒரு கைப்பிடி அளவு 
 முந்திரி, பாதாம் மற்றும் உலர்ந்த       திராட்சை -  ஒரு கைப்பிடியளவு
 கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 கிராம்பு - ஒன்று
 பட்டை - சிறிய துண்டு
 ஏலக்காய் - 2
 ஜாதிக்காய் பொடி -  ஒரு சிட்டிகை

செய்முறை:

2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைத் தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து ஆறிய பின் விழுதாக அரைக்கவும். வெண்ணெய், பாலை லேசாக சூடாக்கி, வெண்ணெய் உருகியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் தட்டிய கிராம்பு, தட்டிய பட்டை, ஜாதிக்காய் பொடி, தட்டிய ஏலக்காய், வெனிலா எசென்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரீச்சை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்க்கவும் (பழுப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது). 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையில்  கேரமல் செய்து இதனுடன் சேர்த்துக் கலக்கவும். (`சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக்’ ரெசிப்பியில் கேரமல் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது).

மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும். இதைச் சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும். தோசை மாவு பதம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி நறுக்கிய நட்ஸ் - உலர்திராட்சை சேர்த்துப் பிசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். இந்தக் கலவையை கேக் பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து `பேக்’ செய்யவும்.

குறிப்பு:

குக்கரில் பேக் செய்யும் முறை `சாக்லேட் கிறிஸ்துமஸ்  கேக்’ ரெசிப்பியில் கொடுக்கப்பட்டுள்ளது.


5p7_1511861122.jpg

ராகி சாக்லேட் பிரவுனீஸ்

தேவையானவை:

 சாக்லேட் ஸ்ப்ரெட் - ஒரு கப்
 முட்டை -  2
 ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 10 டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

வெறும் வாணலியில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் ராகி மாவு, சாக்லேட் ஸ்ப்ரெட் சேர்த்துக் கலக்கவும். கேக் பானில் (pan) சிறிதளவு வெண்ணெய் தடவி,  ராகி மாவு தூவி கேக் கலவையை ஊற்றவும். இதனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும் (`சாக்லேட் கிறிஸ்துமஸ் கேக்’ ரெசிப்பியில் குறிப்பிட்டுள்ளபடி குக்கரிலும் செய்யலாம்). ஆறிய பிறகு துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

ராகி மாவுக்குப் பதிலாக மைதா மாவு சேர்த்தும் செய்யலாம்.


5p8_1511861142.jpg

கிறிஸ்துமஸ் கேக் பாப்ஸ்

தேவையானவை:

 பிளம் கேக் (அ) கிறிஸ்துமஸ் கேக் துண்டுகள் - அரை கிலோ
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 பேரீச்சை – 5 (கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்)
 காய்ச்சி ஆறவைத்த பால் - சிறிதளவு
 வறுத்த நறுக்கிய முந்திரி (அ) பாதாம் - 2 டேபிள்ஸ்பூன் 
 ஐசிங் சுகர் – தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சையுடன் பால் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பேரீச்சை பாலை ஊற்றிச் சிறு தீயில் வைத்துக் கிளறவும். பால் கலவை கெட்டியாக வரும்போது இறக்கி ஆறவிடவும்.  கேக் துண்டுகளை மிக்ஸியில் போட்டுப் பொடித்து எடுக்கவும் (கையாலும் பிசையலாம்). இதனுடன் பேரீச்சைக் கலவை, நெய், முந்திரி (அ) பாதாம் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும். மேலே ஐசிங் சுகர் தூவிப் பரிமாறவும்.


5p9_1511861163.jpg

ஏலக்காய் - முட்டை புடிங்

தேவையானவை:

 முட்டை - 2
 சர்க்கரை - 100 கிராம் (மிக்ஸியில் பொடித்து எடுக்கவும்)
 ஏலக்காய் - 5 (பொடிக்கவும்)
 காய்ச்சி ஆறவைத்த பால் (அ) கெட்டித் தேங்காய்ப்பால் - தேவையான அளவு
 ஏலக்காய் எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 ஃபுட் கலர் - ஒரு துளி (விரும்பினால்)

செய்முறை:

பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

முட்டையின் அளவு பால் அல்லது தேங்காய்ப்பால் எடுக்கவும்.  பாலுடன் முட்டை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள்,  ஏலக்காய் எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும் (அடிக்க வேண்டாம்).

இதை ஒரு புடிங் பாத்திரத்தில் ஊற்றி, அலுமினியம் ஃபாயில் வைத்து மூடவும். இட்லிப் பாத்திரம் அல்லது இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி, அதனுள் தட்டை வைத்து, மூடி போட்டு மூடவும். பாத்திரத்தில் இருந்து ஆவி வரும்போது புடிங் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி, ஆவியில் 7  முதல் 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். நடுவில் டூத்பிக் வைத்துக் குத்தி  வெந்துவிட்டதா என்று பார்க்கவும். ஒட்டாமல் வரும்போது இறக்கவும். ஏலக்காய் - முட்டை புடிங் தயார்.


5p10_1511861185.jpg

ஏலக்காய் கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒன்றரை கப்
 வெண்ணெய் - அரை கப்
 முட்டை - 2 (வெள்ளைக் கரு மட்டும்)
 சர்க்கரை - முக்கால் கப்
 தேங்காய்ப்பால் - முக்கால் கப்
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 ஏலக்காய் - 2
 ஏலக்காய் எசென்ஸ் - அரை  டீஸ்பூன்
 உப்பு - 2   சிட்டிகை
 பேக்கிங் பவுடர் - 2  டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

செய்முறை:

முட்டையை உடைத்து, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.

கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சலிக்கவும். அடித்த முட்டையுடன் மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு ஏலக்காய்  எசென்ஸ், தேங்காய்ப்பால் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலக்கவும். கேக் பானில் (pan) சிறிதளவு வெண்ணெய் தடவி, மாவு தூவி, கேக் கலவையை முக்கால் பான் வரை ஊற்றி, 2 ஏலக்காய் சேர்க்கவும். கலவையை லேசாகத் தட்டவும். குக்கரின் அடியில் ஒரு கப் தூள் உப்பைப் பரத்தவும். அதன்மீது ஒரு தட்டு வைத்து  மூடி  சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்).  மூன்று நிமிடங்கள் கழித்து கேக் பானை வைத்து மூடி, சிறு தீயில் 30 நிமிடங்கள் வரை வேகவிடவும்.  கேக் வெந்துவிட்டதா என்பதைப் பார்த்த பிறகு எடுக்கவும். தேவையானால் மேலும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். பிறகு பானை வெளியே எடுத்து ஆறவிட்டு கேக்கைத் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


5p11_1511861204.jpg

நட்டி சாக்லேட்

தேவையானவை:

 மில்க் சாக்லேட் பார் - 75 கிராம் (துண்டுகளாக்கவும்)
 கண்டன்ஸ்டு மில்க் - 50 மில்லி
 இனிப்பு கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
 விரும்பிய நட்ஸ் கலவை (வால்நட், பாதாம், முந்திரி, உலர்திராட்சை) - ஒரு டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)

செய்முறை:

சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கவும். அதனுடன் நட்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

30 நொடிகளுக்குப் பிறகு இறக்கி நன்கு கலக்கவும். சாக்லேட் நன்றாகக் கரைந்த பிறகு ஆறவிடவும். இதை ஒரு கரண்டியால் எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, மேலே கோகோ பவுடர் தூவி உருட்டவும்.  பிறகு, கப் கேக் லைனருக்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது எடுத்துச் சுவைக்கலாம்.

குறிப்பு:

ஒரு கிண்ணத்தில் கால் பங்கு தண்ணீரில் நிரப்பி அதை கொதிக்கவிடவும். இன்னொரு கிண்ணத்தில் நறுக்கிய சாக்லேட் சேர்த்து இந்தக் கிண்ணத்தைத் தண்ணீர்  இருக்கும் பாத்திரத்தினுள் வைத்து சாக்லேட்டை உருக்கவும். இதுதான் டபுள் பாய்லிங் முறை.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

எக்லெஸ் கேக் - குக்கீஸ் ரெசிப்பி

 

33p1_1511847374.jpg
 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து தொடர்கின்றன கொண்டாட்டங்கள். இவை மட்டுமல்லாமல் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள் என மற்ற நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியதாக விளங்குகிறது கேக்.

இன்றைய நாள்களில் அனைவராலும் விரும்பப்படும் கேக்கை வீட்டிலேயே தயாரித்துச் சுவைத்து மகிழ... சைவ உணவுகளை உண்பவர்கள், விரத நாள்களைக் கடைப்பிடிப்பவர்கள் சாப்பிடும் விதமாக... எக்லெஸ் கேக், குக்கீஸ் ரெசிப்பிகளை நமக்காகச் செய்து அசத்துகிறார், சமையல் கலைஞர் ஸ்வாதி நந்தினி.

33p2_1511847405.jpg

குலாப் ஜாமூன் கேக்

தேவையானவை:

 குலாப் ஜாமூன் மிக்ஸ் - அரை கப்
 கோதுமை மாவு - அரை கப்
 சர்க்கரை - அரை கப்
 எண்ணெய் - கால் கப்
 பால் - அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 பொடித்த சர்க்கரை – சிறிதளவு

அலங்கரிக்க:

 குலாப் ஜாமூன் - 3 (துண்டுகளாக்கவும்)

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். குலாப் ஜாமூன்  மிக்ஸுடன் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.  சர்க்கரையுடன் எண்ணெய், பால் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பிறகு, இதனுடன் மாவுக் கலவைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங்  ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 30 நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பின்பு பொடித்த சர்க்கரை தூவி, குலாப் ஜாமூன் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.

குறிப்பு: ஒரு கப் = 250 கிராம்.


33p3_1511847436.jpg

கோதுமை - பனீர் கேக்

தேவையானவை:

 பனீர் துண்டுகள்   - 20
 கோதுமை மாவு - ஒரு கப்
 சர்க்கரை - அரை கப்புக்கு சற்று அதிகமாக
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை  டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் -  கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன்
 டூட்டி ஃப்ரூட்டி - 3 டேபிள்ஸ்பூன்
 பால் - ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது)

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். பனீரைக் கைகளால் நன்கு உதிர்த்து சர்க்கரை, எண்ணெய், வினிகர் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், பனீர் கலவை, டூட்டி ஃப்ரூட்டி, பால்  சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.


33p4_1511847460.jpg

டூட்டி ஃப்ரூட்டி - ரவை கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

 ரவை - 2 கப்
 டூட்டி ஃப்ரூட்டி - 1/3 கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 சர்க்கரை - ஒரு கப்
 தயிர் - ஒரு கப்
 எண்ணெய் - 1/3 கப்
 வெனிலா எசென்ஸ்  - ஒரு டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். ரவையுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தயிர், எண்ணெய், டூட்டி ஃப்ரூட்டி, வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு பால் சேர்த்துக் கலக்கலாம்). இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி  ப்ரீஹீட் செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறிய பின் பொடித்த சர்க்கரை தூவி அலங்கரிக்கவும். 


33p5_1511847479.jpg

சுகர் ஃப்ரீ பப்பாயா கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்
 ரவை -  அரை கப்
 பேக்கிங் பவுடர் -  ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
 பப்பாளி ப்யூரி -  ஒன்றரை  கப்
 ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - அரை கப்
 டேட் சிரப் - கால் கப்
 தேன் - கால் கப்

அலங்கரிக்க:

 டேட் சிரப் - சிறிதளவு

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். பப்பாளி ப்யூரியுடன் எண்ணெய், தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.  கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். இதனுடன் ரவை, பப்பாளி ப்யூரி, ரோஸ் வாட்டர், டேட் சிரப் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறியதும் மேலே சிறிதளவு டேட் சிரப் ஊற்றி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: பப்பாளியின் தோல், விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்தால் பப்பாளி ப்யூரி தயார்.


33p6_1511847498.jpg

கோதுமை - குல்கந்து கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒன்றரை கப்
 கண்டன்ஸ்டு மில்க் -  ஒன்றரை  கப்
 குல்கந்து - 1/3 கப் 
 ரோஸ் எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
 பால் - ஒன்றே முக்கால் கப்
 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
 உப்பு - ஒரு சிட்டிகை

அலங்கரிக்க:

 குல்கந்து - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றைச் சேர்த்துச் சலிக்கவும். குல்கந்துடன் ரோஸ் எசென்ஸ், எலுமிச்சைச் சாறு, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து  நன்றாகக் கலக்கவும். இதனுடன் மாவு கலவையைச் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். ஆறியதும் குல்கந்தை மேலே தடவி அலங்கரித்துப் பரிமாறவும்.


33p7_1511847517.jpg

பேசன் கீ குக்கீஸ்

தேவையானவை:

 கடலை மாவு  - ஒரு கப்
 அரிசி மாவு  - 2 டேபிள்ஸ்பூன்
 பொடித்த முந்திரி, பாதாம் கலவை -  கால் கப்
 சர்க்கரை  - அரை கப்
 நெய் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

கடலை மாவுடன் அரிசி மாவு சேர்த்துச் சலிக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். சலித்த மாவுடன் சர்க்கரை, முந்திரி, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய நெய்யைச் சிறிது சிறிதாகவிட்டு மென்மையாகப் பிசையவும். இந்த மாவுக் கலவையை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, மாவைச் சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும் (சிறிய உருண்டைகளாக்கித் தட்டியும் வைக்கலாம்).
பேக்கிங் ட்ரேயில் நெய் தடவி, சிறிதளவு கடலை மாவைத் தூவவும். அதன்மீது குக்கீஸ்களை இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 20  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். சுவையான கடலை மாவு நெய் பிஸ்கட் தயார்.


33p8_1511847537.jpg

தம்ப் பிரின்ட் கஸ்டர்ட் ஜாம் கேக்

தேவையானவை:

 கோதுமை மாவு  - ஒரு கப்
 கஸ்டர்ட் பவுடர் - அரை கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை  - அரை கப்
 தயிர் -  3 டேபிள்ஸ்பூன்
 வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - கால் கப்
 ஜாம் - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுக்கவும். ஜாமை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து உருக்கி எடுக்கவும். சர்க்கரையுடன் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் தயிரைச் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். பிறகு கோதுமை மாவு, கஸ்டர்ட் பவுடர், சோள மாவு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மென்மையாகப் பிசையவும். இந்த மாவைச் சமப்படுத்தி வட்ட வடிவமாக குக்கீஸ் கட்டரால் வெட்டி எடுக்கவும். அதன் நடுவில் கட்டை விரலை வைத்துச் சிறிய குழி செய்து, குழிகளில் உருக்கிய ஜாமை வைத்து நிரப்பவும்.  எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 12 முதல் 15  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். மேலே சிறிதளவு சர்க்கரையைத் தூவி ஆறவிடவும். சுவையான தம்ப் பிரின்ட் ஜாம் குக்கீஸ் தயார்.


33p9_1511847559.jpg

ராகி அண்ட் வீட் குக்கீஸ்

தேவையானவை:

 ராகி மாவு (கேழ்வரகு மாவு) - அரை கப்
 கோதுமை மாவு - அரை கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு  டீஸ்பூன்
 சர்க்கரை - அரை கப்
 குளிர்ந்த வெண்ணெய் (cold butter) - அரை கப்
 பால் - 3 டேபிள்ஸ்பூன் (காய்ச்சி ஆறவைத்தது)

செய்முறை:

கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலிக்கவும். வெறும் வாணலியில் ராகி மாவை வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும். அதனுடன் கோதுமை மாவு, குளிர்ந்த வெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கைகளால் உதிர் உதிராகப் பிசிறவும். பிறகு, பால் சேர்த்து மென்மையாகப் பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பிறகு, அதைச் சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். எண்ணெய் தடவிய  பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 18  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.   ஆறியதும் ஒரு கப் பாலுடன் பரிமாறலாம்.


33p10_1511847579.jpg

ஜிஞ்சர் பிரெட் மேன் குக்கீஸ் (கிறிஸ்துமஸ் குக்கீஸ்)

தேவையானவை:

 கோதுமை மாவு - 2 கப்
 பொடித்த வெல்லம்  - ஒரு கப்
 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
 எண்ணெய்   - 1/3 கப்
 உப்பு  - கால் டீஸ்பூன்
 தண்ணீர் -  கால் கப்
 ஏலக்காய்த்தூள் -  ஒரு  டீஸ்பூன்
 பட்டைத்தூள் - ஒரு  டீஸ்பூன்
 சுக்குத்தூள் -  2 டீஸ்பூன்
 சீரகத்தூள் -  அரை டீஸ்பூன்
 கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்துச் சலித்து எடுக்கவும். இதனுடன் உப்பு, எண்ணெய்,  வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், பட்டைத்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள், கிராம்புத்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துப் பிசையவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும். பிறகு, அதை சமப்படுத்தி `ஜிஞ்சர் பிரெட் மேன்’ வடிவிலான குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். குக்கீஸ்களை எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கவும். இந்த ட்ரேயை 180°  செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 18  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும்.


33p11_1511847598.jpg

க்ரான்பெர்ரி சுகர் குக்கீஸ்

தேவையானவை:

 மைதா மாவு - ஒன்றரை கப்
 பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
 உப்பு - கால் டீஸ்பூன்
 சர்க்கரை - அரை கப்
 தேங்காய் எண்ணெய் - 1/3 கப்
 வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உலர்ந்த க்ரான்பெர்ரி -  கால் கப்

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலிக்கவும். தேங்காய் எண்ணெயுடன் வெனிலா எசென்ஸ், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை நன்கு கரையும் வரை கலக்கவும். இதனுடன் சலித்த மாவு, உலர்ந்த க்ரான்பெர்ரி சேர்த்து நன்கு பிசையவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு, அதை சமப்படுத்தி குக்கீ கட்டரால் வெட்டி எடுக்கவும். எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி, 10 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். இந்த ட்ரேயை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனில் 10  முதல் 12  நிமிடங்கள் வரை வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் கேக்

 
christmas

என்னென்ன தேவை?

வெண்ணெய், சர்க்கரை, மைதா - தலா 200 கிராம்

முட்டை - 2

ஆரஞ்சு ஜூஸ் - 50 மி.லி

பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் - 1 டீஸ்பூன்

ஆரஞ்சு கலர் - சில துளி

எப்படிச் செய்வது?

வெண்ணெயில் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கவும். இதனுடன் ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து, மூன்று முறை சலிக்கவும். அப்போதுதான் இரண்டும் நன்றாகக் கலந்துவிடும். அதனுடன் ஆரஞ்சு ஜூஸைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையுடன் ஆரஞ்சு கலர், எசென்ஸ் இரண்டையும் கலந்து நன்றாகக் கலக்கவும். ஒரு செவ்வக வடிவ டிரேயில் வெண்ணெய் தடவி, அதன் மீது இந்தக் கலவையை ஊற்றவும். இதை 120 டிகிரி வெப்ப நிலையில் மைக்ரோ வேவ் அவனில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். கேக்கின் நடுவில் சிறு மரக்குச்சியால் குத்தி, வெந்துவிட்டதா எனப் பார்த்து எடுக்கவும்.

கோட்டை அலங்காரம்

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் கிரீம் - 100 கிராம்

ஐசிங் சர்க்கரை - 200 கிராம்

குறுக்கப்பட்ட பால் - 1 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஃப்ரெஷ் கிரீம், ஐசிங் சர்க்கரை, குறுக்கப்பட்ட பால் மூன்றையும் நன்றாகக் கலக்கவும். செவ்வக வடிவ கேக்கை இரு சம பாகங்களாக வெட்டி, ஒன்றன் மேல் ஒன்றை வைக்கவும். கேக்கைச் சுற்றி ஐசிங்கைப் பரப்பவும். இதன் மேல் பல வண்ண மிட்டாய்கள், பிஸ்கட்டுகளைப் பதிக்கவும். ஓரங்களில் ஐஸ்கிரீம் கோன் வைத்து, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகளை வைத்து அலங்கரித்துவிட்டால் அருமையான கிறிஸ்துமஸ் கேக் தயார்.

http://tamil.thehindu.com/society/recipes/வீட்டிலேயே-செய்யலாம்-கிறிஸ்துமஸ்-கேக்/article6715919.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே ஃபுரூட் கேக் செய்வது எப்படி

 

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

 
 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே ஃபுரூட் கேக் செய்வது எப்படி
 
ஃபுரூட் கேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதன் சுவை சூப்பராக இருக்கும்.
 
தேவையான பொருட்கள் :
 
கேரமலுக்கு…
 
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
 
கேக்கிற்கு…
 
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 5 டீஸ்பூன்
 
201712211231020427_1_FruitCake._L_styvpf.jpg
 
கேரமல் செய்முறை :
 
* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.
 
* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.
 
கேக் செய்முறை  :
 
* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
 
* பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
 
* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
 
* பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
 
* அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.
 
* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.
 
* பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும்.
 
* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.
 
* இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.
 
* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.
 
* பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
 
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பேரீச்சம்பழ கேக்

 

 

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பேரீச்சம்பழ கேக் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இன்று இந்த கேக் செய்முறையை பார்க்கலாம்.

 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: பேரீச்சம்பழ கேக்
 
தேவையான பொருட்கள்:
 
பேரீச்சம்பழம் - 25 (விதை நீக்கப்பட்டது )
மைதா - 1 கப்
பால் - 3 /4 கப்
சர்க்கரை - 3 /4 கப்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 /2 கப்
அக்ரூட், முந்திரி - தேவையான அளவு.
 
201712211518525804_1_dates-cake444._L_styvpf.jpg
 
செய்முறை :
 
பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும் 
 
பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 
நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிஇல்லாமல் நன்றாக கலக்கவும்.
 
இறுதியாக அக்ரூட், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 
பேக்கிங் பானில் வெண்ணெய் தடவி பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும்.
 
மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும்.
 
பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 - 40 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்
 
சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கப் கேக்

 

குழந்தைகளுக்கு கப் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கப் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கப் கேக்
 
தேவையான பொருட்கள் :
 
மைதா மாவு - ஒன்றே முக்கால் கப்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
கோகோ பவுடர் - முக்கால் கப்
உப்பு - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஐஸிங் சர்க்கரை - ஒன்றரை கப்
முட்டை - 2
வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
பால் - அரை கப்
மஃபின் கேக் லைனர், மோல்ட் - தேவையான அளவு
சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு
 
201712221514032233_1_Chocolatecupcake._L_styvpf.jpg
 
செய்முறை :
 
மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரியில் 15 நிமிடம் பிரீஹீட் செய்யவும். 
 
மஃபின் கேக் மோல்டின் உள்ளே இதன் லைனர்களை வைக்கவும். 
 
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும். 
 
பெரிய பவுலில் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும். 
 
இதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கலக்கவும். 
 
அடுத்து இதில் சிறிது மைதா மாவுக் கலவை, சிறிது பால் என்கிற ரீதியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மிருதுவாகவும், கட்டியில்லாமலும் நன்கு கலக்கவும். கட்டிகள் விழக்கூடாது. 
 
பிறகு மோல்டின் உள்ளே இருக்கும் லைனரின் உள்ளே இக்கலவையை ஊற்றி, பேக்கிங் அவனில் 180 டிகிரியில் 15 முதல் 17 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். 
 
ஒவ்வொரு சாக்லேட்டின் கப் கேக்கின் மேலும் சாக்லேட் சிப்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
சூப்பரான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கப் கேக் ரெடி.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக்

 

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

 
 
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக்
 
தேவையான பொருட்கள் :
 
கன்டென்ஸ்டு மில்க் - 1 டின், 
சூடான பால் - 1/2 கப், 
வெண்ணெய் - 100 கிராம், 
சர்க்கரை - 60 கிராம், 
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன், 
மைதா - 250 கிராம், 
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன், 
சமையல் சோடா - 1 டீஸ்பூன், 
கோகோ - 4 டீஸ்பூன். 
 
அலங்கரிக்க... 
 
ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கிலோ, 
சாக்லேட் பார் - 50 கிராம், 
செர்ரி பழம் - தேவைக்கு.
 
201712231214579890_1_1blackforestcake._L_styvpf.jpg
 
செய்முறை :
 
செர்ரி பழங்களை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை போட்டு நுரைக்க அடிக்கவும். 
 
அடுத்து மைதா, பேக்கிங் பவுடர், கோகோ ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். 
 
அடித்த வெண்ணெய்-சர்க்கரை கலவையுடன் மைதா, பேக்கிங் பவுடர், கோகோ கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் அடித்து கலக்கவும். 
 
அடுத்து அதில் சூடான பாலையும் ஊற்றி தோசை மாவு  பதத்துக்குக் கலந்து, கொள்ளவும்.
 
ஒரு பேக்கிங் டிரேயில் சிறிது வெண்ணெய் தடவி மைதா மாவை சிறிது தூவி கலந்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றறி மைக்ரோவேவ் ஓவனின் 180°C உஷ்ணத்தில் பேக் செய்யவும். 
 
வெந்ததும் சாக்லேட் கேக்கை வெளியே எடுத்து வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் சாக்லேட் கேக்கை கத்தியால் 3 பகுதிகளாக பிரிக்கவும். ( தோசை வடிவில்).
 
ஒரு பாத்திரத்ல் ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்து நன்றாக நுரைக்க அடிக்கவும். அடித்த ஃப்ரெஷ் க்ரீமில் சிறிதளவு எடுத்து கேக்கின் ஒரு பகுதியின் மேல் தடவவும். பின் அதன் மேல் சாக்லேட் பாரைத் துருவவும். 
 
அதன் மேல் இன்னொரு கேக் பகுதியை வைத்து அதன் மேல் மீண்டும் ஃப்ரெஷ் க்ரீம், சாக்லேட்டை துருவவும். 
 
3வது பகுதி கேக்கை அதன் மீது வைத்து மீண்டும் க்ரீம் தடவி சாக்லேட் பாரைத் துருவவும். இப்படி மூன்று முறை செய்தபின் கடைசியில் நான்குபுறமும் க்ரீம் தடவி சாக்லேட் துருவலைத் தூவி, பொடியாக நறுக்கிய செர்ரி பழங்களையும் தூவி அலங்கரித்து சுமார் 4 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
 
சூப்பரான முட்டையில்லாத பிளாக் ஃபாரஸ்ட் கேக் ரெடி.

http://www.maalaimalar.com

  • கருத்துக்கள உறவுகள்

பேரிச்சம் பழ கேக்கும், பிளாக் ஃ பாரஸ்ட் கேக்கும்தான் நம்மோட டிராவல் பண்ணும்......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.