Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்படவர்களின் தகவல்களை வெளிப்படுத்து – யாழில் போராட்டம்.

Featured Replies

காணாமல் ஆக்கப்படவர்களின் தகவல்களை வெளிப்படுத்து – யாழில் போராட்டம்.

img_5102
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்துமாறு கோஷமிட்டனர்.  இதேவேளை சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பணத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் திகதி கடத்தி செல்லப்பட்டனர்.
img_5102
அது தொடர்பில் யாழ்.நீதிமன்றில் கடந்த ஐந்து வருட காலமாக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

img_5123img_5133img_5144img_5165

 

http://globaltamilnews.net/archives/9918

  • தொடங்கியவர்
காணாமற் போனோர் குறித்த தகவல்களை வெளிப்படுத்த கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்
 
 
காணாமற் போனோர் குறித்த தகவல்களை வெளிப்படுத்த கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த கோரி இன்றைய தினம் வடக்கில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 
 
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை பத்து மணியளவில் யாழ்.மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட மொன்று நடத்தப்பட்டுள்ளது. 
15355684_134153187072838_4920879072956010870_n.jpg
கிளிநொச்சி மாவட்ட காணாமல்போன உறவுகளின் குடும்பங்களின் சங்கம் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியன இணை ந்து  கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தன. 
 
இதேபோன்று  காணாமல் போனோரின் உறவுகள் வவுனியாவிலும்ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து வவுனியா பசார் வீதி வழியாக அமைதியாக சென்று சுவ ர்க்கா விருந்தினர் விடுதியை அடைந்தது.
 
கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் நிலை தொடர்பில் ஆளும் வர்க்கத்திற்கு தெரிந்துள்ள போதிலும், 

அவற்றை எந்த அரசும் வெளிப்படுத்தாத நிலையே உள்ளது. இதனையே நல்லாட்சி என கூறிக்கொண்டு ஆட்சியிலுள்ள தற்போதைய அரசும் செய்து வருகின்றது. 
15420906_134153323739491_5828140816441601402_n.jpg
வடக்கு கிழக்கிலும், தெற்கிலும் பல மனிதவுரிமை செயற்பாட்டளர்களும் பொதுமக்களும் கடத்தப்பட்டு இருந்தார்கள். 
 
அதேபோல் கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச மனிதவுரிமை தினத்திற்கு முன்னதாக மக்கள் போராட்ட இயக்கத்தை சேர்ந்த லலித் குகன் ஆகியோரும் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருந்தனர். 
 
இவர்களுக்கு என்ன நடந்தது? எங்கே உள்ளனர்? என்பது இதுவரை தெரியாத நிலையே உள்ளது. கடத்தலாளிகளும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கோரியே இந்த போராட்டம் நடைபெற்றது. 
 
15338816_134153100406180_5580449925716585811_n.jpg
 

http://www.onlineuthayan.com/news/21207

  • தொடங்கியவர்

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது ; அனந்தி சசிதரன்

 

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப்போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புடமையின் உறுதிமொழிகளை கூறி விட்டு உள் நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தினார். 

போர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உறவுகளை தொலைத்து விட்டு அவர்களை தேடி தினந்தோறும் போராடுகின்றனர். மேலும் பலர் இராணுவத்திடமிருந்து தமது காணிகளை பெற்றுக் கொள்ள போராடுகின்றனர். ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி விட்டு தேசிய நல்லிணக்கத்தை அடைய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

சர்வதேச மனித உரிமைகள் தினம்  இன்று இடம்பெறுகின்ற நிலையில் அது குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/14300

  • தொடங்கியவர்

காணாமல் போனோரின் தகவல்களை வெளிப்படுத்துங்கள் யாழ்.பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

thumbnailIMG20161210105444-copy-c430289a08cd0ea9ccc4c02e0b659c77cd86eeb1.jpg

 

ரி.விரூஷன்

சர்­வ­தேச மனி­த­வு­ரி­மைகள் தின­மான நேற்­றைய தினம் காணாமல் போனோரின் தக­ வல்­களை வெளிப்­ப­டுத்தக் கோரியும் பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தக் கோரியும் கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இப் போராட்­ட­மா­னது நேற்­றுக்­காலை பத்து மணி­ய­ளவில் யாழ்.பிர­தான பேருந்து தரிப்­பி­டத்தின் முன்­பாக இடம்­பெற்­றி­ருந்தது. இதனை சமூ­க­வு­ரிமை இயக்­கத்­தினர் ஏற்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத் தக்­கது. கடந்த காலங்­களில் வடக்கு, கிழக்கு, தெற்கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் இரா­ணு­வத்­தி­ன­ராலும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? எங்கே உள்­ளார்கள்? என்­பது தொடர்பில் யாருக்கும் எதுவும் தெரி­யாத நிலையே உள்­ளது. கடத்­தப்­பட்­ட­வர்­களின் நிலை தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­டோ­ருக்குத் தெரிந்­துள்ள போதிலும் அவற்றை எந்த அரசும் வெளிப்­ப­டுத்­தாத நிலையே காணப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ச்­சி­யாக உள்ள போதி லும் இத­னையே நல்­லாட்சி எனக் கூறிக்­கொண்டு ஆட்­சி­யி­ லுள்ள தற்­போ­தைய அரசும் செய்து வரு­கின்­றது. வடக்கு, கிழக்கு, தெற்கில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டா­ளர்­களும் பொது மக்­களும் கடத்­தப்­பட்­டுள்­ளார்கள். இவர்கள் அனை­வ­ருமே பாதிக்­கப்­பட்ட அல்­லது ஒடுக்­கப்­படும் மக்­களின் குரல்­களை வெளிக்­கொ­ணர்ந்­த­வர்­க­ளா­கவே இருந்­தார்கள். இந்த நிலையே அவர்கள் கடத்­தப்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாக இருந்­தது என சம­வு­ரிமை இயக்­கத்­தினர் தெரி­வித்­தி­ருந்­தனர்..

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்­வ­தேச மனி­த­வு­ரிமை தினத்­திற்கு முன்­ன­தாக மக்கள் போராட்ட இயக்­கத்தைச் சேர்ந்த லலித், குகன் ஆகியோர் யாழ்ப்­பா­ணத்தில் வைத்து கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? எங்கே உள்­ளனர்? என்­பது இது­வரை தெரி­யாத நிலையே உள்­ளது. கடத்­தல்­கா­ரர்­களும் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

இந்த நிலையிலேயே கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனையும் அவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனக்கோரியுமே இப் போராட்டம் நடத்தப்பட்டதாக அவ்வியக்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-11#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.