Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய தீர்மானத்திற்காக ஜனவரி ௫, ௬ ஆம் திகதிகளில் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தும் குழு கூடுகிறது

Featured Replies

முக்கிய தீர்மானத்திற்காக ஜனவரி ௫, ௬ ஆம் திகதிகளில் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தும் குழு கூடுகிறது

 

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

அர­சி­ய­ல­மைப்பு சபையின் முக்­கிய தீர்­மானம் எடுப்­ப­தற்­காக ஜன­வரி 5ஆம் 6ஆம் திகதி வழி­ந­டத்தும் குழு கூட­வுள்­ள­தாகத் தெரி­வித்த அக்­கு­ழுவின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க, 9ஆம் திகதி உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் தொடர்பில் விவாதம் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபை நேற்று சனிக்­கி­ழமை காலை 9 மணிக்கு அதன் தலை­வரும் சபா­நா­ய­க­ரு­மான கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கும் மாகா­ண ­ச­பை­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு அர­சி­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தும் குழு­வினால் விசேட நோக்­கத்­துக்­காக அமைக்­கப்­பட்ட உப­கு­ழுவின் அறிக்­கையை அக்­கு­ழுவின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு சமர்ப்­பித்தார்.

இவ் உப­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, பிர­சன்ன ரண­துங்க எம்.பி. மற்றும் துசித விஜே­மான்ன எம்.பி. ஆகி­யோரே இந்த அறிக்­கையை தயா­ரித்­தி­ருந்­தனர்.

அறிக்­கையை சமர்ப்­பித்து விளக்­க­ம­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

வழி­ந­டத்தும் குழுவின் இடைக்­கால அறிக்கை நேற்­றைய தினம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், சில அர­சியல்

கட்­சிகள் தமது கருத்­துக்­களைக் கூறு­வ­தற்கு அவ­காசம் கோரி­யதால் சகல தரப்பின் கருத்­துக்­க­ளையும் பெற்று ஜன­வரி மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி கூட­வி­ருக்கும் வழி­ந­டத்தும் குழுவில் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் பற்றி ஜன­வ­ரி­மாதம் 9ஆம் திகதி அர­சி­ய­ல­மைப்பு சபையில் விவாதம் நடத்­த­வி­ருப்­பதால், அதில் முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக வழி­ந­டத்தும் குழுவின் இடைக்­கால அறிக்­கையை தயா­ரிக்க முடியும். சகல தரப்­பி­ன­ரு­டைய கருத்­துக்­க­ளையும் பெற்று அவற்­றையும் உள்­ள­டக்­கி­ய­தா­கவே இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­படும் என்றார்.

சுமந்­திரன் எம்.பி. :-

வழி­ந­டத்தும் குழுவின் இடைக்­கால அறிக்­கையின் வரைபை தயா­ரிக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. சில அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தமது கருத்­துக்­களை முன்­வைக்க அவ­காசம் கேட்­ட­மையால், அதற்கு ஆமோ­தித்து கால அவ­காசம் வழங்கி இணங்­கி­யுள்ளோம் என்றார்.

வாசு­தேச நாண­யக்­கார எம்.பி:-

வழி­ந­டத்தும் குழுவின் உப­கு­ழுக்­களால் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் அறிக்­கை­களில் சகல கட்­சி­களின் கருத்­துக்­களும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் கருத்­துக்கள் மாத்­திரம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­னவே தவிர, மாற்றுக் கருத்­துக்­களை கொண்­ட­வர்­களின் முன்­மொ­ழி­வுகள் எதுவும் அவற்றில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என பொது எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முறை­யிட்­டுள்­ளனர். பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் கருத்­துக்கள் மட்­டு­மன்றி மாற்றுக் கருத்­துக்­களை கொண்­ட­வர்­களின் அபிப்­பி­ரா­யங்­களும் உள்­ள­டக்­கப்­ப­டு­வது அவ­சியம் என்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க:-

உப­கு­ழுக்­களில் முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­களில் எது சரி எது பிழை என வகைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. உப­கு­ழுக்­களின் அறிக்கை தொடர்பில் சக­ல­ரு­டைய கருத்­துக்­களும் பெறப்­பட்­டதன் பின்னர் அத­னைஏ ற்றுக் கொள்­வதா அல்­லது இல்­லையா என்­பதை அர­சி­ய­ல­மைப்பு சபையில் தீர்­மா­னிக்க முடியும்.பரஸ்­பரம் விரோ­த­மான கருத்­துக்­களை கொண்ட சில­சந்­தர்ப்­பங்­களும் இருந்­துள்­ளன.

உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் பற்றி விவா­தித்­த­பின்னர் அதி­லுள்­ள­வி­ட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக வழி­ந­டத்தும் குழுவின் இடைக்­கால அறிக்­கையை தயா­ரிப்­பதா அல்­லது இடைக்­கால அறிக்­கை­யையும் சமர்ப்­பித்து அதி­லுள்ள விட­யங்­க­ளையும் சேர்த்து விவாதம் நடத்­து­வதா என்ற இரு நிலைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. எதிர்­வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திக­தி­களில் வழி­ந­டத்தும் குழு கூட­வி­ருப்­பதால் அக்­கூட்­டங்­களில் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னிக்­க­மு­டியும் என்றார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன்:-

முன்னாள் ஜனா­தி­ப­தி­ம­ஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லா­னஎ குழுவைச் சந்­தித்தோம். அவ­ருடன் கலந்­து­ரை­யா­டினோம். தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கைகள் பற்­றிய விவா­தங்­களை ஜன­வரி மாதம் 9ஆம் திகதி நடத்த எதிர்­பார்த்­துள்ளோம். எது­வாக இருந்­தாலும் அர­சி­ய­ல­மைப்பு சபை எந்­த­வி­ட­யங்­களை ஏற்றுக் கொண்­டாலும், இறைமை உடை­ய­வர்கள் என்ற ரீதியில் நாட்­டு­மக்­களே இறு­தியில் ஏற்றுக் கொள்­ள­வேண்டும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடா­க­மக்கள் தமது நிலைப்­பாட்டைத் தெரி­விப்­பார்கள் என்றார்.

தினேஷ் குண­வர்­தன எம்.பி:-

வழி­ப­டுத்தும் குழுவில் பல உறுப்­பி­னர்கள் இருக்கும் நிலையில் சுமந்­திரன் எம்.பி. மாத்­திரம் அதனைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் நடந்து கொள்­கின்றார். சுமந்­திரன் கூறு­வதைப் போன்று வழி­ந­டத்தும்; குழுவின் இடைக்­கால அறிக்­கைக்­கான வரைபு எதுவும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. சுமந்­திரன் ஏன் அவ­ச­ரப்­ப­டு­கிறார்? கலந்­து­ரை­யா­டல்கள் மாத்­தி­ரமே இடம்­பெற்­றுள்­ளன. ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைத்த கருத்­துக்கள் சில உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு உரு வரைபை அவ­ச­ர­மாக கொண்­டு­வ­ரு­வ­தற்கு என்ன காரணம்? பொறு­மை­யாக அனை­வரின் கருத்­துக்­க­ளையும் உள்­வாங்­க­வேண்டும். தனி­யொ­ரு­வரின் அழுத்­தத்­திற்கு உட்­பட முடி­யாது என்றார்.

சுமந்­திரன் எம்.பி:-

இந்த சபையில் நான் கூறிய விட­யத்தை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்தி கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. நாங்கள் எதற்கும் அவ­ச­ரப்­ப­ட­வில்லை. அனை­வரின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வுள்ளோம். அத்­தோடு தற்­போது உறுப்­பி­னர்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அது இறுதி செய்­யப்­ப­ட­வில்லை. அது குறித்து கருத்­துக்­களை முன்­வைக்­கலாம் என்றே கூறு­கின்றேன் என்றார்.

அமைச்ச ரவூப் ஹக்கீம்:-

சகல தரப்­பி­ன­ரையும் உள்­ள­டக்கி அவர்­களின் கருத்­துக்­க­ளையும் அறிந்து கொண்டு அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் சிலர் சபைக்கு வெளியே தேவை­யற்ற அச்­சத்தை உரு­வாக்கி மக்­களைக் குழப்­பு­வ­தற்­கு­மு­யற்­சிக்­கின்­றனர். இந்­த­மு­யற்­சிகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு தொடர்­பான வழி­ந­டத்தும்; குழு­வுக்கு அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான நிபு­ணத்­துவம் பெற்ற ஒரு சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கி­வ­ரு­கின்­றனர். அவர்கள் தமது நேரத்தை இதற்­காக ஒதுக்கி வழங்­கி­வரும் ஒத்­து­ழைப்­புக்கு நன்றி கூற­வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அந்­தப்­ப­ணியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானதாகும். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி.ஜயம்பதி விக்ரமரட்ண வழங்கி வரும் பங்களிப்புக்காக சபைக்கு வெளியில் கொலை அச்சுறத்தல் கூட அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது

அமைச்சர் மனோ கணேசன் :-

நானும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருந்தேன். இந்த நாட்டில் மொழிக் கொள்கையை மேம்படுத்தி நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம். அது தொடர்பில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நான் பத்திரிகைகளில் பார்த்தேன் என கூறினேன். அப்போது அந்த விடயத்தை தான் எதிர்க்கவில்லையென்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருப்பதாகவும் கூறினார் என்றார்.

அதனையடுத்து நேற்றுக் கூடிய அரசியலமைப்பு சபை காலை 9.25இற்கு நிறைவுற்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-11#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.