Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் எச்சரிக்கை! வருகின்றது 'வர்தா' சூறாவளி

Featured Replies

வர்தா சூறாவளி காங்கேசன்துறையிலிருந்து 400 கடல்மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி இன்று மாலை வேளையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனது நேரடி தாக்கம் நாட்டினுள் ஏற்படாவிடினும், மன்னார் வளைகுடா மற்றும் காங்கேசன்துறை கடற் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஊடாக இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடா சூறாவளி தாக்கம் காரணமாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுடன் யாழ்ப்பாணத்திலும் மழை பெய்யக்கூடும் என காநிலை அவதானம் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே வர்தா புயல் இன்று கரையைக் கடக்கிறது.

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

'வர்தா' புயல் நிலை கொண்டுள்ளமையினால் மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை

வர்தா புயல் நிலை கொண்டுள்ளமையினால் வடக்கு,கிழக்கு கடற்பரப்பில் இன்று (12) திங்கட்கிழமை மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இன்றைய தினம் (12) தொழிலுக்குச் செல்லவில்லை. கடல் மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் கடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. கடல் சீராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/weather/01/127917?ref=home

  • தொடங்கியவர்

வர்தா புயல் அச்சத்தில் திருகோணமலை – கல்முனையில் ஊருக்குள் புகுந்தது கடல்

vardha-trinco-3

வங்கக். கடலில் உருவாகிய வர்தா புயல், நாளை சென்னை அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு கரையோரங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் நேற்றிரவு திருகோணமலையில் இருந்து 800 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது சென்னை வடக்கே நாளை மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல், சிறிலங்காவை நேரடியாகத் தாக்காது என்றும், எனினும், இதன் தாக்கத்தினால் கடும் மழை மற்றும் சூறைக் காற்று வீசும் ஆபத்து இருப்பதாக வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.

வடக்கு, கிழக்கு கடற்பரப்பு கடுமையான கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

vardha-trinco-1vardha-trinco-2vardha-trinco-3vardha-trinco-4

படங்கள் – எஸ்.எஸ்.குமார்

அதேவேளை, திருகோணமலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலை எதிர்பார்த்து திருகோணமலை மீனவர்கள் தமது படகுகளை வீடுகள், வீதிகளுக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

kalmunai-sea-water-1kalmunai-sea-water-2kalmunai-sea-water-3

அதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை, திருக்கோவில் பகுதிகளில், இன்று அதிகாலையில் கடல்நீர் பெருக்கெடுத்து குடிமனைகளுக்குள் புகுந்துள்ளது.

கரையில் இருந்து 300 மீற்றர் வரை கடல் நீர் உட்புகுந்ததால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2016/12/11/news/20040

கடல் நீர் உட்புகுந்தது...

 
article_1481517004-IMG-20161211-WA0084.j
 

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபீப் நகர், வட்டம், ஹைறியா நகர்ப் பகுதிகளில், நேற்று (11) இரவு சீற்றம் கொண்ட கடலினால், கடல் நீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுந்தமையினால் கடற்கரையோரமாக இருந்த பொதுமக்கள், அச்சம் காரணமாகப்  பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர். (படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)

article_1481517014-IMG-20161211-WA0062.jarticle_1481517025-IMG-20161211-WA0065.jarticle_1481517034-IMG-20161211-WA0082.j

http://www.tamilmirror.lk/187874/கடல-ந-ர-உட-ப-க-ந-தத-

  • தொடங்கியவர்

வர்தா புயலின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு

வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாத நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் இன்று மாலையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் வர்தா புயல் சென்னையை தாக்கியதாகவும் 2 பேர் பலியாகி உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/natural/01/127983?ref=home

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.