Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்

Featured Replies

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

 

எஸ்.கிருபாகரன் புதிய தொடர்

 

ரை நூற்றாண்டு காலம் திரையுலகிலும் அரசியலிலும் மின்னிய ஜெயலலிதா என்ற நட்சத்திரம் மறைந்துவிட்டது. 

ஆண்களே ஆதிக்கம் செலுத்திய துறைகளில் ஒரு பெண் பரபரப்பாக இயங்கி, வெற்றிக்கோட்டையில் பெருமிதமாக வீற்றிருந்தார் என்பது பெரும் வியப்பு. துணிச்சல், மிடுக்கு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரம்... இதுதான் ஜெயலலிதா!

புறம் பேசமாட்டார்... பரபரப்புப் பத்திரிகையாளர் களிடம் பத்தடி தள்ளியே இருப்பார்... ஷாட் முடிந்த  அடுத்த நொடியே மேக்கப் கலைத்து, கார் நிற்கும் போர்டிகோவை நோக்கி அவர் கால்கள் விரையும். இதுதான் நடிகை ஜெயலலிதா!

p86.jpg

1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், `உங்களிடம் உள்ள கெட்ட குணம் எது?' என்ற கேள்விக்கு தயக்கமே இன்றி, இப்படி பதில் சொன்னார் - “என் முன்கோபம். அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன்... முடியவில்லை. எனக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொள்கிறவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை. பொய் பேசுபவர்கள், எனக்கு விரோதமாக நடந்துகொள்கிறவர்கள் மீது பெரும் கோபம் வருகிறது. வருங்காலத்தில் அதை கட்டுப்படுத்த நினைக்கிறேன்.”

மனதில் பட்டதை பளிச்சென கூறும் துணிச்சல் எப்போதும் ஜெயலலிதாவுக்கு உண்டு!

`உங்களை கர்வம் பிடித்தவர் என சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம்.

“பெரிய கம்பெனி படங் களில் பெரும்பாலும் பெரிய கதாநாயகர்கள் தான் நடிப்பார் கள். அந்தப் படங்களில் அவர்களின் சர்வாதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அவர்களை முகஸ்துதி செய்து நடக்க வேண்டும். எனக்கோ, மற்றவர் முன் கை கட்டி அடங்கி நடக்கும் இயல்பு ஒருபோதும் கிடையாது.

எனக்கென ஒரு தனித்தன்மை இருக் கிறது. பிடித்தவர்களுடன்தான் பேசுவேன். பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று ரிசர்வ்டாக இருப்பேன். இதனால் என்னைக் கர்வம் பிடித்தவள் என்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை!”

இந்தப் பேட்டி, ஜெயலலிதா திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அளித் தது. இப்படிப் பேசுவது தனது திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கவலையெல்லாம் அவருக்கு இல்லை. தன் திறமை யின் மீது நம்பிக்கையும், எவரை யும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவருக்கு உண்டு!

p86a.jpg

ஜெயலலிதாவுக்கு இப்போது கிடைத்துள்ள புகழ், பெருமை எல்லாம் ஒரே நாளில் கிடைத்தததல்ல... அதற்கான விலை அதிகம். அரசியல் உலகில் அவர் சந்தித்த அவமானங்கள் இன்னும் அதிகம். எந்தத் தாக்குதலையும் தனக்கான பலமாகவே மாற்றிக்கொள்ள அவரது இயல்பான துணிச்சல் உதவியது. அதுதான் பின்னாளில் அவர் பெற்ற வெற்றிகளுக்கு காரணமானது.

ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவ ரானாலும் ஜெயலலிதாவின் தாய்வழிக் குடும்பம் நெல்லூரில் வசித்தது. ஜெயலலிதாவின் தாய்  சந்தியாவோடு (அப்போது அவரது பெயர் வேதவல்லி) பிறந்தவர்கள் 3 பேர். சீனிவாசன், அம்புஜா என்கிற வித்யாவதி மற்றும் பத்மா. சந்தியாவின் பெற்றோர் ரங்கஸ்வாமி ஐயங்கார் - கமலம்மாள். பின்னாளில்,  சூழல் காரணமாக நெல்லூரிலிருந்து சந்தியாவின் குடும்பம் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தது. சந்தியாவின் தந்தை இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தார்.  சந்தியாவுக்கு 14 வயதாகும்போதே திருமண ஏற்பாடு நடந்தது. அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் ரங்காச்சாரி, தன் மகன் ஜெயராமுக்காக பெண் கேட்டு வந்தார். ஜெயராம் - சந்தியா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

பிற்காலத்தில் ஜெயலலிதாவிடம் பலரும் பாராட்டிய `எல்லாவற்றிலும் நேர்த்தி' குணத்துக்கு விதை போட்டது, அவருடைய தாத்தா ரங்காச்சாரிதான். எல்லாவற்றிலும் பர்ஃபெக்‌ஷனிஸ்ட் ரங்காச்சாரி. அரண்மனை போன்ற அவரது வீட்டைப் பராமரிப்பதற்காகவே நிறைய வேலைக் காரர்களை அமர்த்தியிருந்தார். துரதிர்ஷ்ட வசமாக அவரைக் காணும் பாக்கியம் ஜெயலலிதாவுக்குக் கிடைக்கவில்லை. (பின்னா ளில், தன்னிடம் உள்ள பல குணங்கள் தாத்தா
விடமிருந்து வந்தததாக தாயார் சொல்லக்கேட்டு பெருமைப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா).

16 வயதிலும் குழந்தைத்தனமாகவே இருந்த சந்தியாவுக்கு, அந்த வீட்டிலிருந்த பெரிய நூலகம்தான் பல திறமைகளை வளர்த்துவிட்டது. ஓரளவு பக்குவமும் ஏற்பட்டது. இதற்கிடையே சந்தியாவுக்கு முதல் ஆண் குழந்தை (ஜெயக்குமார்) பிறந்தது.

p86b.jpg

ரங்காச்சாரியின் மறைவுக்குப் பிறகு, சந்தியாவின் வாழ்க்கை ஆட்டம் காணத் தொடங்கியது. ஜெயராம் திசை மாறத் தொடங்கினார். தந்தையின் செல்வச் செழிப்பில் திளைத்து, வேலைக்குச் செல்ல மறுத்த ஜெயராம், எந்நேரமும் சுகபோகத்தில் மூழ்கத் தொடங்கினார். இந்த நேரத்தில் சந்தியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பெண்குழந்தை... ஆம்... ஜெயலலிதா பிறந்தார்! வீட்டில் தாய்வழிப்பெயராக `கோமளவல்லி' என்றே அழைத்தனர்.

மகள் பிறந்த பிறகும் ஜெயராமின் நடத்தையில் மாற்றமில்லை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. டிப்டாப் உடை அணிந்து காலையில் கிளப்புக்குச் சென்றால், வீடு திரும்ப நள்ளிரவாகிவிடும். பல நேரங்களில் மறுநாள்தான் வருவார்.  சில ஆண்டுகளிலேயே தந்தையின் சொத்துகளில் பெருமளவை செலவழித்தார். கடைசியாக மிஞ்சியது இரு  சிறிய வீடுகள்தான். மகனையோ, மகளையோ அவர் கொஞ்சியதுகூட கிடையாது (அதனால்தானோ என்னவோ, தாயின் மீது ஜெயலலிதாவுக்கு அதிக பாசம். பின்னாளிலும் தந்தையைப் பற்றி அதிகம் பேசியதில்லை).

வறுமை சூழ ஆரம்பித்ததை உணர்ந்த சந்தியா கணவரிடம் குழந்தைகளின் எதிர் காலம் குறித்து மன்றாடினார். தவறை உணர்ந்தாலும்கூட, வாழ்வின் பெரும்பகுதியை கேளிக்கைகளில் கழித்துவிட்ட ஜெயராமினால், தன்னை சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் மெள்ள மெள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தொழிலில் ஈடுபாடு காட்டினார். சந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்தச் சூழலில் சந்தியா எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது... அது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் சந்தோஷத்தையும் புரட்டிப்போட்டது.

(அம்முவின் கதை அறிவோம்...)

http://www.vikatan.com/avalvikatan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

 

மெரினா நினைவுகள்எஸ்.கிருபாகரன்

 

“சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் மெரினா. 4 வயதில் சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, சித்தி வித்யாவதியுடன் அடம்பிடித்து மெரினா பீச்சுக்குச் சென்றேன்...”

- மனம் திறந்த ஒரு பேட்டியில் ஜெயலலிதாதான் இப்படிச் சொல்லியிருந்தார்.  அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின், லட்சக்கணக்கான மக்கள் கதறி நிற்க...  ராணுவ மரியாதையுடன் கௌரவமாக, தற்போது அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நின்றபடிதான், அன்று ஜெயலலிதா தனக்குப் பிடித்தமான கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார்.

p46a.jpg

மொத்தக் குடும்பத்தைப் புரட்டிப்போட்ட அந்த ஒரு நிகழ்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அன்பான கணவர், அழகான குடும்பம், மணிமணியாக சில குழந்தைகளுக்கு மட்டுமே அம்மாவாக, ஒரு நடுத்தர குடும்பத்து நங்கையாக ஜெயலலிதா வாழ்ந்திருப்பார்... வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலே போய் இருப்பார். ஆனால், வாழ்வை வழிநடத்துவது விருப்பங்கள் மட்டும் அல்லவே!

அந்த நிகழ்வுக்கு வருவோம்... தன் தவறுகளை உணர்ந்து மெள்ள மெள்ள இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம். ஆனாலும், பொருளாதாரச் சிக்கல் குடும்பத்தை வதைக்கத் தொடங்கியது. ஓரிரு நாட்களில் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வோடு வருவதாகக் கூறி, மனைவி மற்றும் பிள்ளைகளை பெங்களூருக்கு வழியனுப்பிவைத்தார். மனம் திருந்திய கணவரால் தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதாக எண்ணி, அன்றிரவு நிம்மதியாக உறங்கப்போனார் சந்தியா. வீசியது வசந்தம் அல்ல... வர்தாவைப் போன்ற புயல்!

இரண்டு தினங்களில் திரும்பிவந்தது ஜெயராம் அல்ல; அவரது உடல்!

நள்ளிரவில் லாந்தரை வைத்துக்கொண்டு உறவினர்கள் வாசலில் காத்துக்கிடக்க, சிவப்பு நிற சேலையில் மகள் அம்முவை மடியிலும், மகன் ஜெயக்குமாரை கையிலும் தாங்கிப்பிடித்தபடி, வழிந்த கண்ணீருடன் எதிர்காலம் புலப்படாத வெறுமையான ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சந்தியா உறைந்து நின்றார். இருளைக் கிழித்தபடி வந்து நின்ற கறுப்பு காரில் வெள்ளையாகச் சுற்றப்பட்ட உடல் இறக்கப்பட்டது. அடுத்த நொடி அங்கு எழுந்த கதறல் ஒலி, அந்தப் பகுதியையே நடுங்கச் செய்தது. தாயை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்  சிறுமி அம்மு. ஏதோ நடந்திருப்பது புரிந்தது. அழுகை பீறிட்டது. அது தந்தையின் மரணம் தந்த அதிர்ச்சி அல்ல... இதுவரை தன் தாய் இப்படி அழுததில்லையே என்ற விநோத பயம். முடிந்தது, எல்லாம் முடிந்தது!

ஜெயராமின் எதிர்பாராத மரணம் தற் கொலையா, கொலையா என்கிற ஒரு வழக்கு பல ஆண்டுகளாக நடந்தது தனிக்கதை. `வாழ்க்கையில் என்னைப் பாதித்த முதல் சம்பவம்' என தந்தையின் இறப்பை பின்னாளில் ஒரு பேட்டியில் பதிவுசெய்தார் ஜெயலலிதா.  “உண்மையில் என் தந்தை தற்கொலைதான் புரிந்துகொண்டார் என்றால் நிச்சயம் அவர் எடுத்த முடிவு கோழைத்தனமான - சிறிதும் பொறுப்பற்ற, நியாயமற்ற செயல் என்றே கருதுகிறேன்...” - பொறுப்பற்ற தந்தையின் எதிர்பாராத மரணத்தால் தனது குடும்பத்தின் நிம்மதி குலைந்து தாங்கள் அலைக்கழிய நேரிட்டதால் அவர் மனதில் ஏற்பட்ட ரணங்களே இப்படி வார்த்தைகளாக வெளிப் பட்டன.

p44a.jpg

ஜெயராமின் மரணத்துக்குப்பின் குடும்பச் சூழல் இன்னும் இடியாப்பச் சிக்கலாகிவிட, இரு குழந்தைகளுடன்  மீண்டும் பிறந்தகத்துக்கே திரும்பினார் சந்தியா. தங்கை வித்யாவதி, சந்தியா குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க  உதவினார். சந்தியாவும் அப்போது இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நேரத்தில்தான் சந்தியாவுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கெம்பராஜ் என்பவர் எடுக்கவிருந்த திரைப்படத்துக்கு கதா நாயகி  தேடிக்கொண்டிருந்தார். தற்செயலாக சந்தியா ஒருநாள் அவர் கண்ணில்பட, `கண்டேன் கதாநாயகியை' என அவரிடமே நேரில் கேட்டுவிட்டார். 

மனதில் பட்டாம்பூச்சி பறந்தாலும் ஆசா ரமான குடும்பப் பின்னணியையும், கறார் தந்தையையும் நினைத்துப்பார்த்த சந்தியா, `வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்' என்று  கூறிவிட்டார். தந்தையிடம் தகவலைச் சொல்ல, அவர் போட்ட கூச்சலில் வீடு இரண்டாகிவிட்டது. பறந்துகொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் பயந்து பதுங்கிக்கொண்டன. துவண்டு போனார் சந்தியா. ‘கற்கோட்டை’ என்ற அந்தப் படத்தில் கதாநாயகியாக வேண்டிய சந்தியாவின் மனக்கோட்டை தகர்ந்தது.

ஜெயலிதாவுக்கு அப்போது மூன்றரை வயது. வீட்டுக்கு அருகிலிருந்த பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்பில் சேர்க்கப்பட்டார். பின்னாளில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் திறனும், ஆழ்ந்த அறிவுத்திறமையோடும் திகழ்ந்த ஜெயலலிதா, பள்ளியில் சேர்க்கப்பட்ட நாளில் செய்த அமர்க்களம்  கொஞ்சநஞ்சமல்ல. தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சித்திகள் புடைசூழ செல்லமாக வளர்ந்த ஜெயலலிதாவுக்கு பள்ளி என்பது சிறைவைத்தது போலாகிவிட்டது. சிலபல நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்.

p46.jpg

சென்னையில் தங்கியிருந்து விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்தார் அவருடைய சித்தி வித்யாவதி. பணிக்கேற்றபடி நுனிநாக்கு ஆங்கிலம், பாப் தலை, முழங்கால் வரை ஏறிய உடை என நவநாகரிகத் தோற்றத்தில் ஒரு சினிமா நடிகை போன்றே இருப்பார். மிகத் துணிச்சலானவரும்கூட!

குடும்பத்துக்கு விரோதமான இந்தத் தோற்றத்தினால் கோபமடைந்த அப்பா ரங்கஸ்வாமி, அவரை வீட்டிலேயே சேர்க்க மறுத்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவகையில் ஜெயலலிதாவின் துணிச்சல் குணத்துக்கு சித்தி வித்யாவதிகூட ஆதர்சமாக இருந்திருக்கலாம்.

வித்யாவதி பெங்களூரு வரும் தகவல் கிடைத்தால், வீட்டில் உணவு சமைத்து விமான நிலையத்துக்குக் கொண்டு செல்வார் சந்தியா. அம்முவும் உடன் செல்வார். அப்படி ஒரு சந்திப்பில் ‘அம்முவை என்னோடு அனுப்பி வையேன்’ எனக் கேட்டார் வித்யாவதி. சாதாரணமாகவே, வித்யாவதி எங்கேயாவது தனியாக அழைத்துச் சென்றால் குஷியாகி விடுவார் அம்மு. காரணம் சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம், விதவிதமான உடைகள்... இப்படி எதை கேட்டாலும் வாங்கித்தருவார்  வித்யாவதி. இப்போது சென்னை... அதுவும் இரண்டு நாட்களுக்கு.

மகளின் ஆசைக்கு தடை போடவில்லை சந்தியா. தலையசைத்துவிட்டார். மனதில் ஆயிரம் கனவுகளுடன் சித்தியுடன் சென்னை புறப்பட்டார் அம்மு.

மெரினா பீச், ரெஸ்டாரன்ட்டுகளில் வித விதமான உணவு, பிரபல துணிக்கடைகளில்  புதுப்புது நிறங்களில் உடைகள் என அம்முவை பிரமிக்க வைத்தார் வித்யாவதி. சென்னையில் அவரைக் கவர்ந்த இடம் மெரினா கடற்கரை. அந்த 2 நாட்களில் சித்தியுடன் பலமுறை மெரினாவுக்கு சென்று அதன் அழகை ரசித்து மகிழ்ந்தார். முன்பே சொன்னதுபோல இதுதான் விதியின் விளையாட்டு!

(அம்முவின் கதை அறிவோம்...)

http://www.vikatan.com/avalvikatan/2017-jan-10/serial/127029-jayalalitha-biography-series.art

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சென்னையும் சித்தியும்எஸ்.கிருபாகரன்

 

42p1.jpg

சென்னையில் இரண்டு நாட்கள்... அம்முவுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. மற்ற எல்லாவற்றையும்விட சித்தி வாங்கித்தந்த உடைகள். அவற்றை அணிந்து அணிந்து பூரித்துப்போனார். ஆம்... விதவிதமான உடைகள் அணி வதில் அந்த நாளிலிருந்தே அம்முவுக்கு விருப்பம் அதிகம். விசேஷங்களுக்கு டஜன் கணக்கில் உடைகளை வரவழைத்து, மகளை மகிழ்ச்சிப்படுத்துவார் சந்தியா.  உடைகளின் மீதான ஆசை இறுதிவரையிலும் அவருக்கு இருந்தது. “விதவிதமான துணிமணிகள் அணிவது என் வீக்னஸ்” என்று ஜெயலலிதா ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புக்காக உள்நாடு,  வெளிநாடு  என  எங்கு சென்றாலும் ஓய்வுநேரத்தில் அங்குள்ள பாரம்பர்ய துணிக்கடைகளுக்குத்தான் விஜயம் செய்வார். தனக்கான உடைகளில் மட்டுமல்ல... ‘கர்ட்டன்’ துணிகளிலும்கூட கவனம் செலுத்துவார். வேதா நிலையத்தின் அழகழகான கர்ட்டன் துணிகள் பல ஆண்டுகளாக கொல்கத்தா வில் உள்ள ஒரு துணிக்கடையில்தான் வாங்கப்பட்டன.

தன் வாழ்நாளில் விதவிதமாக உடைகள் மூலம் தன்னை அலங்கரித்துக் கொள்வதை ஒரு குழந்தைபோல ரசித்து அனுபவித்த ஜெயலலிதா, தனக்கு அணிவிக்கப்பட்ட ஒரே ஓர் உடையை மட்டும் கண்டு மகிழ முடியாதவராகிப்போனார். அது ராணுவ மரியாதையுடன் இறுதியாக அவர் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி. ஒரு பெண்ணாக அரசியல் உலகில் தனித்துவத்துடன் இயங்கிய அவருக்கு, இந்தத் தேசம் அளித்த மாபெரும் கவுரவம் அது.

சரி... சென்னைக்கு வருவோம்.

சென்னையைச் சித்தியுடன் கொண் டாடித் தீர்த்த அம்மு, பெங்களூரு செல்லும் நாளும் வந்தது. ஊருக்குத் திரும்புவதில் துளியும் விருப்பமில்லை அந்தக் குட்டிப்பெண்ணுக்கு. வலுக்கட்டாயமாக பெங்களூரு சென்றார். ஆனால், சென்னைக்கும் அவருக்குமான பந்தம் அதோடு முடியவில்லை என்று சொல்லாமல் சொல்லி விதி சிரித்தது.

42p2.jpg

அம்முவின் குடும்பத்தில் சந்தியா வும் ஜெயலலிதாவும்தான் நாமறிந்த திரைக்கலைஞர்கள். உண்மையில் ஜெயலலிதா குடும்பத்தில் முதன்முதலாகத் திரைப்பிரவேசம் நிகழ்த்தியது வித்யாவதிதான். விமானப் பணிப்பெண்ணாக இருந்த வித்யாவதிக்கும் சினிமா ஆசை இருந்தது. தீவிரமாக வாய்ப்புத்தேடி வந்தார். அவரது தோற்றப் பொலிவுக்கு அந்த வாய்ப்பு எளிதாகவே கைகூடியது. சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு 1953-ம் ஆண்டு சித்தூர் வி.நாகையா இயக்கி நடித்த `என் வீடு’ திரைப்படம் பெரும் புகழை அளித்தது.

‘என் வீடு’ படத்தின் கதை இதுதான். சமூகத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்துடன் வாழ்ந்துவருபவர் பேங்கர் சிவராமன். மனைவி ராஜகுமாரி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் சிவராமன், இசை மீது பெரும் விருப்பம் கொண்டவர். தன் இரு பிள்ளைகளை பெரிய இசைக்கலைஞர்களாக ஆக்க முயன்றுவரும்போது, வங்கியின் பணப்பரிவர்த்தனை தொடர்பாக மும்பை செல்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பும்போது விதி அவர் வாழ்வில் விளையாட்டை தொடங்குகிறது. தனராஜ் என்ற மோசடி பேர்வழியினால் லீலா என்ற பெண்ணின் நட்பு ஒருநாள் இரவு அவருக்குக் கிடைக்கிறது. லீலாவும் தனராஜும் திட்டமிட்டுச் சிவ ராமனின் பணத்தை அபகரிக்கின்றனர். இதனால் வங்கிப்பணத்தை திருடிய குற்றத்துக்கு சிவராமன் சிறை செல்கிறார். வறுமை அந்தக் குடும்பத்தையே சிதைக்கிறது. சிறை மீளும் சிவராமன் குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, கையில் கிடைத்த வேலைகளைச் செய்து பாடுபடுகிறார். இந்தச் சூழ்நிலையில் சிவராமன், தன் பிள்ளைகளுக்கு கொடுத்த இசைஞானத்தால் பிள்ளைகள் பெரிய இசைக்கலைஞர்கள் ஆகின்றனர். வறுமை மறைந்து மீண்டும் அந்தக் குடும்பம் செல்வச்செழிப்பான நிலைக்கு வருகிறது. இதில் சிவராமன் கதாபாத்திரத்தில் சித்தூர் வி.நாகையாவின் உருக்கமான நடிப்பு, படத்தை வெற்றிப் படமாக்கியது. வித்யாவதி..? நாகையாவை நடுத்தெருவுக்குக் கொண்டுவரும் நடன மாது அவர்தான்!
42p4.jpg
திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த வித்யாவதி ஓரளவு புகழடைந்துவந்தார். தனக்குத் துணையாகச் சென்னைக்கே வந்து தங்கிவிடும்படிசந்தியாவை வற்புறுத்த ஆரம்பித்தார். ஏற்கனவே ‘கற்கோட்டை’ தகர்ந்த நிலையில் இருந்த சந்தியா, சகோதரியின் கோரிக்கைக்குத் தலையசைத்தார். தன் இரு குழந்தைகளுடன் நிரந்தரமாகச் சென்னைக்கு வந்திறங்கினார்.

இனிதான் சென்னைப்பெண் என்பதில் அம்முவுக்கு அளவிலா ஆனந்தம். எந்த ஒன்றுக்கும் விலை உண்டல்லவா? இந்த மகிழ்ச்சிக்கு அவர் இழந்தது தன் தலைமுடியை. ஆம்... நாகரிக மங்கையான வித்யாவதி, தன் சகோதரி மகளும் தன்னைப்போல இருக்கட்டும் என நினைத்தாரோ என்னவோ, சென்னை வந்து சேர்ந்த சில நாட்களில் அம்முவின்  நீளமான அழகிய கூந்தலை சைனீஸ் டைப் ‘பாப்’  செய்து அழைத்து வந்துவிட்டார். அழுது தீர்த்துவிட்டார் அம்மு.

எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை. பின்னாளில் அரசியலில் பலமுறை (மணி) முடியிழந்ததற்காக வருத்தம்கொள்ளாத ஜெயலலிதா, அந்நாளில் சாதாரண தலைமுடிக்காக போர்க்கோலம் கொண்டுவிட்டார் என்பது ஆச்சர்யம்தான். முடி இழந்த சோகத்தை மாற்ற, பிரபல புகைப்பட நிபுணரை வரவழைத்து ‘பாப்’ தலையுடன் புகைப்படம் எடுக்க வைத்தார் சித்தி வித்யாவதி. கோபம் குறையாத ஜெயலலிதா அந்தப் படத்தைப் பார்க்கவே விரும்பவில்லை. அத்தனை கோபம் தன் சித்தி மீது. இதெல்லாம் சில மாதங்களுக்குத்தான். ஒரே நாள் இரவில் அந்தக் கோபம் கொண்டாட்டமாக மாறியது! 

உச்ச சினிமா நட்சத்திரம், பரபரப்பான அரசியல்வாதி என அரை நூற்றாண்டுக் காலம் இயங்கிய ஜெயலலிதாவை, லட்சக்கணக்கான புகைப்பட ஃப்ளாஷ்கள் விழுங்கியிருந்தாலும், சென்னையில் முதன்முதலாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுதான். அன்று பார்க்கவே விரும்பாத இந்தப் புகைப்படத்தைத்தான் பின்னாளில் தன் மாளிகையின் பல அறைகளிலும் அத்தனை பெரியதாக மாட்டிவைத்து பெருமிதப்பட்டார் ஜெயலலிதா. ஆமாம்... அவரது கோபம் குறைந்த மாயம் என்ன?

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

 

 

ஜெயலலிதாவின் கோபம் கொண்டாட்டமாக மாறக் காரணம், டெல்லியிருந்து வந்த ஒரு கடிதம்.

புதுடெல்லியில் நடந்த அகில இந்தியப் புகைப்படக் கண்காட்சியில் ஜெயலலிதா வின் போட்டோ முதல் பரிசுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டு, அதற்கு தங்கப்பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னது கடிதம். ஆச்சர்யத்தில் மூழ்கினர் அனைவரும். எப்படி நடந்தது இது? புகைப்படக்காரர் வந்து புதிரை உடைத்தார்.

அம்மு பார்க்க விரும்பாத அந்தப் புகைப்படத்தை யாருக்கும் சொல்லாமல் அந்த வருடப் புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார் அவர். அதற்கே முதற்பரிசு கிடைத்திருக்கிறது. புகைப்படக்காரருக்கு அன்று சந்தியா வீட்டில் சிறப்பு விருந்து. தன் புகைப்படத்துக்குத் தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்த மகிழ்ச்சி அன்றிரவு ஜெயலலிதாவைத் தூங்கவிடவில்லை. தன் அழகு பற்றி அவர் பெருமிதப்பட்ட முதல் தருணம் அது.

p52a.jpg

20 வருடங்களுக்குப் பின் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் கிரஹப்பிரவேசம் நிகழ்ந்தபோது அதே படத்தை பெரிய அளவில் பிரின்ட் செய்து பரிசாக அளித்தார் புகைப்படக்காரர் புவனாஸத்யம். தங்கமுலாம் பூசப்பட்ட அந்தப் புகைப்படம் வேதா இல்லத்தின் ஜெயலலிதாவின் படுக்கை அறையை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. `தன் அழகின் மீது தனக்கே பொறாமை ஏற்படுத்திய புகைப்படம்’ என்று பின்னொரு நாளில் ஜெயலலிதாவால் சிலாகிக்கப்பட்ட படம் அல்லவா அது!

வித்யாவதியின் வீட்டுக்குப் படையெடுத்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிலரது பார்வை, சந்தியாவின்மீது பட்டது. சந்தியாவுக்கும் சினிமா கதவுகள் திறந்தன. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அழகும் நளினமான அவரது நடிப்புத்திறமையும் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டியது. தனக்கு உதவியாக இருக்க, தான் வரவழைத்த சகோதரிக்குத் தானே உதவியாக வேண்டிய சூழல் வித்யாவதிக்கு உருவானது. மளமளவென படங்களில் நடிக்கத்தொடங்கிய பின், சந்தியாவால் பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த முடியவில்லை. பொருளாதார ரீதியாக வலுப்பெற்றது குடும்பம். பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கித்தர ஆட்களை நியமித்திருந்தார் சந்தியா. மாதவன் என்பவர் பொறுப்பிலேயே குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். ஒன்றுக்குப் பத்தாகப் பணியாளர்கள் இருந்தாலும் ஒரு தாயின் அரவணைப்புக்கு ஈடாகுமா அத்தனையும்?

சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துவந்த அம்முக்கும் சகோதரர் ஜெயக்குமாருக்கும் தாயைப் பார்ப்பதும் கொஞ்சி மகிழ்வதும்கூட அரிதான சந்தர்ப்பங்களாகின. படப்பிடிப்பு முடிந்து பின்னிரவில் சந்தியா வீடு திரும்பும்போது பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். காலையில் குழந்தைகள் எழும் முன்பே சந்தியா படப்பிடிப்புக்குச் சென்றிருப்பார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்கிற  உறுதி சந்தியாவின் தூக்கத்தைத் தொலைத்து ஓட வைத்தது. ஆனாலும், குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் தவறியதில்லை.

சிறுவயதில் நாட்டியம் கற்க விரும்பி அது நிறைவேறாமல் போன தன் மனக்குறையை  பிள்ளைகள்மூலம் தீர்த்துக்கொள்ள விரும்பினார் சந்தியா. அம்மு பிறந்தபோதே அவருக்கு இந்த ஆசையும் பிறந்தது.

அந்நாட்களில் பாலசரஸ்வதி, சாயி, சுப்பு லட்சுமி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளில் முதல்வரிசையில் சந்தியாவையும் குழந்தை களையும் காணமுடியும். நடனத்தின்மீது அத்தனை பிரியம் சந்தியாவுக்கு. மகளிடம் ஒருநாள் தன் ஆசையை வெளியிட்டார். ‘I hate dance mummy... நீதானே நல்லா படிச்சு டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆகணும்னு சொல்லுவே... அப்போ எனக்கு எதுக்கு டான்ஸ் கிளாஸ்லாம்’ என மறுத்தார் அம்மு. சந்தியா, தன் இளமைப்பருவ ஆசையைச் சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார் அம்மு.

p52b.jpg

அம்முவின் இயல்பான ஒரு குணம், அவரிடம் எதையும், யாரும் வேண்டுகோள் வைத்துதான் சாதிக்க முடியும். அதட்டியோ, அதிகாரம் செலுத்தியோ அவரை பணியவைக்க முடியாது. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதுபோல பெரிய சினிமா நட்சத்திரம், பரபரப்பான அரசியல் தலைவர் என உருமாறிய பின்பும் இந்தக் குணம் தொடர்ந்தது. இதுவே பெரும் சங்கடங்களைத் தந்தது என்றாலும், அதற்கு அவரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சினிமா என்று தான் சாதித்த இரண்டு துறைகளிலும் தன்னை அதிகாரம் செலுத்தும் மனிதர்களையே ஆரம்பத்தில் அவர் அதிகம் எதிர்கொண்டார். ஒரு பெண்ணாக  மூர்க்கத்தனமாக அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் அவரை அதே குணத்துடன் தொடர வைத்தன என்பதுதான் நிஜம்.

பின்னாளில் நாட்டியக்குழு ஒன்றைத் தொடங்கி இந்தியா முழுக்க வெற்றிகரமான நாட்டிய மங்கையாகத் திகழ்ந்த ஜெயலலிதா, ஆரம்பத்தில் நாட்டியத்தை அறவே வெறுக்கக் காரணமானது அப்படி ஒரு சம்பவம்தான். அது...

(அம்முவின் கதை அறிவோம்!)


ஜெயலலிதாவின் குழந்தைகள்!

p52c.jpg

1973-ம் வருடம் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “இவ்வளவு பெரிய மாளிகையில் தனியாக வசிக்கிறீர்களே... போரடிக்கவில்லையா?” என்ற கேள்விக்கு, “யார் சொன்னது நான் தனியாக வசிக்கிறேன் என்று! என் வீட்டில் நான், என் சித்தி, சித்தப்பா, என் 7 குழந்தைகள் மற்றும் 12 வேலையாட்கள் வசிக்கிறோம்” என பதில் தர நிருபருக்கு அதிர்ச்சி. “நான் குழந்தைகள் எனச் சொன்னது நான் வளர்க்கும் நாய்களை!” என ஜெயலலிதா விளக்கிய பிறகே குழப்பம் தீர்ந்தது.
 
இப்படி மனிதர்களிடமிருந்து பேதம் பார்க்காமல் நாய்கள்மீது அத்தனை பிரியம் கொண்டிருந்தார் அவர். பெங்களூரில் பாட்டி வீட்டில் வளர்ந்தபோது சித்தி பத்மா, தந்தையின் எதிர்ப்பையும் மீறி 15-க்கும் அதிகப் பூனைகளை வளர்த்து வந்தார் அம்மு. தெருவில் உலவிவந்த சில நாய்களுக்கும் அவ்வப்போது உணவு அளிப்பார். ஜெயலலிதா சென்னை திரும்பிய தினத்தன்று, காரில் ஏறி அமரப் போனவரை `போகாதே’ என்பதுபோல அந்த நாய்கள் பரிதாபத்துடன் கத்திக்கத்தி, பிரிவின் துயரை வெளிப்படுத்தின. பூனைகளோ இயல்பாக விளையாடிக் கொண்டிருந்தன. நாய்களின் இந்த நன்றிகாட்டும் குணம் ஜெயலலிதாவை ஆச்சர்யப்பட வைத்தது.

சென்னை வந்தபோது குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சில நாய்களை வளர்த்தார் சந்தியா. ஒருவகையில் சென்னையில் ஜெயலலிதாவின் முதல் நண்பர்கள் அவைதான். நடிகையான பின் படப்பிடிப்பு முடிந்து எப்போது வீடு திரும்பினாலும் கதவைத் திறந்தால் வரவேற்பவை இந்த நாய்கள்தான். அவற்றுடன் நேரம் செலவிடாமல் ஜெயலலிதாவும் படுக்கைக்குச் சென்றதில்லை.

பொமேரியன், அல்சேஷன், ஜெர்மன் டெரியர் மற்றும் பல ரகங்களில் ஒரு நாய் கண்காட்சி நடத்துகிற அளவு எண்ணிக்கையில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் எல்லா காலங்களிலும் வேதா இல்லத்தில் வளைய வந்தன.

ஊட்டி ரசிகர் ஒருவர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவருக்கு உயர்ரக நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி சேர்ந்தவைதான் இவை. அரசியல் போராட்டக் காலங்களில் ஜெயலலிதாவின் மன அழுத்தத்தைக் குறைத்தவையும் இந்த நாய்கள்தான்.

முதன்முறை முதல்வரானபோது அரசியல்கட்சித் தலைவர்கள், கட்சித்தொண்டர்கள் என வேதா இல்லம் பரபரப்பானதை அடுத்து இடையூறுகளைத் தவிர்க்க வெளியிடங்களில் அவை வளர்க்கப்பட்டன.

ஒருமுறை படப்பிடிப்பில் ஓய்வாக அமர்ந்திருந்த போது அங்கிருந்த தெரு நாய்களை ஸ்டுடியோ ஊழியர்கள் விரட்டியடித்ததை ஜெயலலிதா கண்டார்.  மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பியபோது காலில் ஏதோ உறுத்த குனிந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். பிறந்து 2 மாதமே ஆன நாய்க்குட்டி, `என்னை விரட்டாதே’ என்பதுபோல பரிதாபமாகப் பார்க்க, அதை காரில் ஏற்றி வீட்டுக்குக்கொண்டு வந்தார் ஜெயலலிதா.  ‘பூச்சி’ என அதற்குப் பெயரும் சூட்டினார். 8 மாதங்களுக்குப்பின் ஜெயலலிதா படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நிலையில் ஒருநாள் வேலையாள் ஒருவர் கதவைத் திறக்க தன் எஜமானியைப் பார்க்காமல் பல நாட்கள் ஆன ஆர்வத்தில் ஜெயலலிதாவின் கார் நிற்கும் இடத்துக்கு ஓடி வந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது. வீடு திரும்பியபின் தகவலைக் கேட்டு கதறி அழுத ஜெயலலிதா, வேலையாட்களை உச்ச ஸ்வரத்தில் திட்டித் தீர்த்தார்.

“என்னதான் பாலும் தேனுமாகக் கொடுத்து பாசத் துடன் பூனைகளை நீங்கள் வளர்த்தாலும் வீட்டையோ, ஊரையோ காலி செய்துகொண்டு கிளம்பும்போது அது உங்களைப் பின்தொடர்ந்து வராது. அடுத்து அங்கு வருபவர்களுடன் நேசத்தைத் தொடரும். நாய் அப்படியில்லை... ஒருநாள் உணவிட்டாலும்கூட அது காலம் முழுவதும் உங்களைச் சுற்றிச்சுற்றி வரும். எங்குச் சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும். அதுதான் நாய்களின் நன்றி குணம். அதுதான் நான் நாய்களை வளர்க்கக் காரணம்.”

தான் வளர்த்த நாயிடம்கூட நன்றியை எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்குத் தன்னால் வளர்க்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து குறைந்தபட்ச நன்றியாவது கிடைத்ததா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

http://www.vikatan.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

நாட்டியம் பயின்ற கதைஎஸ்.கிருபாகரன்

 

80p1.jpg

அம்மாவும் அம்முவும்

ட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்டதால், விருப்பம் இருந்தும் நாட்டியம் கற்க முடியாமலே போய்விட்டது சந்தியாவுக்கு. இறுதிக்காலம் வரை அந்தக்குறை அவர் மனதில் இருந்தது. அதைத் தன் மகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்பட்டார் அவர். நிச்சயமாக அது சினிமா வாய்ப்புகளுக்காக அல்ல... படிப்போடு பல திறமைகளிலும் மகள் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிற ஒரு தாயின் இயல்பான ஆசையே!

அப்படித்தான் மகளுக்கு நாட்டிய வகுப்பை ஏற்பாடு செய்தார் சந்தியா. ஆனால், அந்த முதல் முயற்சி நாட்டியத்தின்மீதே ஜெயலலிதாவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. என்ன காரணம்?

அம்முவின் ஐந்தாவது வயதில் அவருக்கு நாட்டியம் சொல்லித்தர முத்துஸ்வாமிப் பிள்ளை என்ற பிரபல நட்டுவனாரை வீட்டுக்கே வரவழைத்தார் சந்தியா. தடித்த உருவம், முறுக்கிய மீசை, சிடுசிடு பேச்சு என, குழந்தைகளுக்கு அச்சம் தரும் தோற்றம் அவருடையது. முதல் நான்கு நாட்களுக்குப் பின் முரண்டு பிடிக்க ஆரம்பித்தார் அம்மு. அடுத்தடுத்த நாட்கள் ஆசிரியர் வரும் நேரத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி, நாட்டிய வகுப்பைத் தவிர்த்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சந்தியா, ஒருநாள் பொங்கி எழுந்துவிட்டார். “இத்தனை செலவு செய்து நாட்டியம் கற்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ இப்படி வீணடிக்கிறாயே... என்னதான் உன் பிரச்னை?” என்றார் கோபமான

குரலில். “மம்மி... எனக்கு அந்த ஆசிரியரைப் பிடிக்கவில்லை. சிடுசிடுவெனப் பேசுகிறார், அதட்டுகிறார். அதையெல்லாம்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அவர் இன்னொன்றையும் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் அவர் வேண்டாம். வேறு ஒரு பெண் ஆசிரியரை ஏற்பாடு செய்” எனக் கூற... அதிர்ச்சியாகிவிட்டது சந்தியாவுக்கு. “அப்படி என்ன செய்யச் சொல்கிறார்?'' எனப் படபடப்பு குறையாமல் கேட்க, அதற்கு ஜெயலலிதா சொன்ன பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் சந்தியா.

“மம்மி... அந்த டீச்சர் பயமுறுத்தற மாதிரி பேசறார். அதைக்கூடப் பொறுத்துக்கலாம். ஒவ்வொரு நாளும் கிளாஸ் தொடங்கும்போது `குரு வணக்கம்'ங்கற பேர்ல அவர் கால்ல விழச்சொல்லி வற்புறுத்தறார். நீதானே மம்மி சொல்லுவே... எதற்காகவும் யார் கிட்டவும் தாழ்ந்துபோகக்கூடா துன்னு. எனக்கு அவர் வேண்டாம், வேற லேடி டீச்சரை ஏற்பாடு பண்ணு மம்மி...”

சிரித்து முடித்தபின், சிந்திக்க ஆரம்பித்தார் சந்தியா. மகளுக்கு இப்போது `குரு வணக்கம்' பற்றி வகுப்பெடுத்தார்.

“பெரியவர்களை மதிப்பதும் ஆசி பெறுவதும் நம் வளர்ச்சிக்கு நல்லது. சுயநலத்துக்காகத் தகுதி யற்றவர்களின் கால்களில் விழுவது தான் அவமானத்துக்குரிய செயல். அப்படி விழுபவர்கள் ஆபத்தானவர்கள்” என மகளுக்குப் புரியவைத்தார். அரசியல் என்ற வார்த்தையையே ஜெயலலிதா கேட்டிருக்க முடியாத வயதில் ஜெயலலிதாவுக்குச் சந்தியா ‘அரசியல் வகுப்பு’ எடுத்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

ஓரிரு நாளில் துளசி என்ற பெண்மணி, நாட்டிய ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 

50-களின் முற்பகுதியில் சித்தி வித்யாவதியும், தாய் சந்தியாவும் ஆளுக்கொரு திசையில் சினிமா வாய்ப்புகளை மறுக்காமல், ஓடிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிகாலை நேரத்தில் சந்தியா படப் பிடிப்புக்குப் புறப்பட்டுப் போய் விடுவார். வீடு திரும்பும்போதும் இதே சூழல்தான். பல நாட்கள், பல மாதங்கள் இதே நிலைதான்.

இந்தக் காலகட்டத்தில் அம்மு வையும் அவரது சகோதரனையும் கவனித்துக்கொண்டது வேலை யாட்கள்தான். மாதவன்  என்பவர் அவர்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார். கார் டிரைவர் முதல் கார்டியன் வரை அவர்தான் எல்லாமே. குழந்தைகள் கேட்பது எதுவானாலும் உடனே அவற்றை வாங்கித் தரவேண்டும் என்பது அவருக்கு இடப்பட்ட பணி. தவிர, பிள்ளைகளுக்கென கார் ஒன்றை வாங்கியிருந்தார் சந்தியா. பள்ளியிலிருந்து திரும்பியதும், மாலையில் காரில் கடற்கரையை வலம் வருவார்கள் அம்முவும் சகோதரனும். லாரல்-ஹார்டி படங்கள் திரையிடப்பட்டிருந்தால் அன்று கொண்டாட்டம்தான். குழந்தைகளுக்கெனத் தனி சமையல்காரரையும் நியமித்திருந்தார் சந்தியா. எல்லாம் இருந்தாலும் அது அம்மாவுக்கு ஈடாகுமா? அம்முவுக்கு சோகம் ஏற்பட ஆரம்பித்தது. பிள்ளைகளைக் கவனிக்க முடியாத வருத்தம் சந்தியாவின் மனதுக்குள்ளும் இருந்தது. பிள்ளைகளுக்காக சினிமா வாய்ப்புகளைக் கைகழுவ முடியாது. சினிமா வாய்ப்புகளுக்காக பிள்ளைகளையும் விட்டுவிட முடியாது. முன்பின் தெரியாத யாரிடமோ குழந்தைகள் வளர்வதைவிட, உறவுகளிடம் வளரட்டும் என ஒருநாள் தீர்க்கமாக முடிவெடுத்தார் சந்தியா.

மீண்டும் பெங்களூரு பயணப்பட்டார்கள் அம்முவும்  அண்ணனும். சென்னை - பெங்களூரு கார்ப் பயணம். அம்மாவுடனேயே எப்போதும் வசிக்க வேண்டும் என்கிற ஆசையும் கனவும் அம்முவின் கண்களில் உதிர்த்த கண்ணீரில் கரைந்து வழிந்துகொண் டிருந்தன மௌனமாக.  இரண்டே வருடங்களில் சென்னை வாழ்க்கை முடிவுக்கு வந்ததும், இனி தாயைப் பிரிந்திருக்க வேண்டிய சூழலும் சேர்ந்து வேதனை தந்தாலும், அம்முவின் மனது அந்தச் சிறுவயதிலும் அதை ஏற்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து அம்மா தந்த அறிவுரையும்.''

80p2.jpg

“எந்த ஒரு ஏமாற்றத்திலும் உன்னை இழந்துவிடாதே! எந்த விஷயமும் நிரந்தரம் என்று நினைத்து உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே!” - சந்தியாவிடமிருந்து அம்மு இந்த அறிவுரையைப் பெறக் காரணமான அந்தச் சம்பவம் நிகழ்ந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன.

அது 1954-ம் ஆண்டு.  `குண்டூசி' பத்திரிகை அன்றைய சினிமா பிரபலங்கள் வீட்டுக் குழந்தைகளிடையே போட்டி ஒன்றை நடத்தியது. அறிவு, திறமை, அழகு - இவற்றின் அடிப்படையில் சிறந்த குழந்தையைத் தேர்ந்தெடுத்து முதற்பரிசு வழங்குவதே அந்தப் போட்டி. நடிகை சந்தியா வீட்டுக்கும் நிருபர் குழு சென்றது. மற்ற பிரபலங்களின் வீடுகளில் நிருபர் குழுவுக்கு ஏற்பட்ட எந்தச் சங்கடமும் சந்தியாவின் வீட்டில் நிகழவில்லை. புகைப்படக்காரருக்குச் சிரமம் தராமல் தானே விதவிதமான உடைகளை அணிந்து, போஸ் தந்தார் அம்மு. இன்னும் ஆச்சர்யமாக வீட்டிலிருந்த சிதார் இசைக்கருவியை எடுத்து மடியில் அமர்த்தி அதை இசைப்பது போலவும் போஸ் தந்து, “அங்கிள், இப்படி எடுத்தா நல்லா இருக்கும்” என அவர்களை ஆச்சர்யப்பட வைத்தார். மகளின் முதிர்ச்சியான செய்கைகளை சந்தியா ஓர் ஓரமாக நின்று முகத்தில் பெருமிதம் படர கவனித்துக்கொண்டிருந்தார். நறுக்குத்தெறித்த ஆங்கிலம், துறுதுறு செய்கை, எதைக் கேட்டாலும் சட்டென பதில்... விடைபெறும் வேளையில் நிருபர் சொன்னார்... “பாப்பா நீதான் வின் பண்ணப் போற... எனக்கு இப்பவே தெரிஞ்சுடுச்சு...' என்று. நிருபர் சொல்லிச் சென்ற இந்த வார்த்தைகள் அம்முவுக்கு தனக்குத்தான் பரிசு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை பலமாக ஏற்படுத்தியிருந்தது. பள்ளித்தோழிகளிடம் எல்லாம் அதுபற்றிச் சொல்லிப் பெருமிதப்பட்டார் அம்மு. போட்டி முடிவுகள் வெளியாகின. அம்முவுக்கு ஏக அதிர்ச்சி. முதற்பரிசுக்கு இன்னொரு பிரபல நடிகையின் குழந்தை தேர்வாகியிருந்தது.  இப்படி ‘குண்டூசி’ அந்தச் சின்ன இதயத்தைக் குத்திவிட்ட வருத்தம் அம்முவுக்குப் பல நாட்கள் இருந்தது. மகளை ஏமாற்றத்திலிருந்து மீட்பதற்காகவே ஒருநாள், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு அன்றைக்கு முழுவதும் சென்னையை ஒரு முழுச் சுற்றுச் சுற்றிக் காட்டி மகிழ்வித்தார் சந்தியா. அன்றிரவு வீடு திரும்பியபின் அம்முவுக்குத் தன் கையாலேயே உணவு ஊட்டியபடி சொன்ன அறிவுரைதான் அது!

அந்தச் சம்பவத்தையும் அம்மா சொன்ன அறிவுரையையும்  திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓடவிட்டுக்கொண்டிருந்த அம்மு, பெங்களூரில் தாத்தா வீட்டு வாசலில் கார் வந்துநின்றபோது அயர்ந்து துாங்கிவிட்டிருந்தார்.

பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் அம்முவும் அண்ணனும் சேர்க்கப்பட்டனர். சில நாட்கள்தான் அம்மாவின் நினைவு. தோழிகள் சேர்ந்ததும் ஏக்கம் குறைந்தது.

எம்.ஜி.ஆரின் முதற்படத்தை இயக்கிய அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன், 1994-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா பற்றிப் பேசியதில் ஆச்சர்யமாகக் குறிப்பிட்ட ஒரு விஷயம், ஜெயலலிதாவின் ஆங்கிலப்புலமை. “நான் அமெரிக்கனா இருந்தபோதும் கொச்சை ஆங்கிலம்தான் பேசினேன். ஆனால், உங்கள் முதல்வர் ஜெயலலிதா என்னைவிடவும்  மிக அழகான, நேர்த்தியான ஆங்கிலத்தில் என்னுடன் பேசியது ஆச்சர்யமளித்தது. நீங்கள் ஒரு திறமைசாலியைத்தான் முதல்வராகப் பெற்றிருக்கிறீர்கள்” என்றார் டங்கன்!

அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கனாலேயே பாராட்டப்பெற்ற ஜெயலலிதாவின் ஆங்கிலப்புலமைக்கு அடித்தளமிட்ட இடம் பெங்களூரு பிஷப் காட்டன்ஸ் பள்ளிதான்.இதை, நடிகையான பின், ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பெங்களூரு நாட்கள் அழகாகவே நகர்ந்தன ஜெயலலிதாவுக்கு. ஆனால், அதே பள்ளியில்  அவர் செய்த ஒரு காரியம் எவ்வளவு குறும்புத்தனமானது, தெரியுமா?

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

குறும்புக்காரிஎஸ்.கிருபாகரன்

 

“இன்று இத்தனை பெரிய நடிகையாக வளர்ந்துவிட்டாலும், மனம் இன்னும் என் பள்ளி வாழ்க்கையையே விரும்புகிறது. விரும்பியபடி மாற கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நான் மீண்டும் பள்ளி மாணவியாக மாறவே விரும்புவேன்!''

p52a.jpg

- பிரபல நடிகையான பின், பத்திரிகைப் பேட்டி ஒன்றில் தன் பள்ளி வாழ்க்கையை இப்படி நினைவுகூர்ந்தார் ஜெயலலிதா. 

ஆம்... பள்ளி வாழ்க்கையைத்தான் அவர் மிகவும் விரும்பி வாழ்ந்திருக்கிறார். ஆறு வயதில் பெங்களூரு சென்ற ஜெயலலிதா, பத்து வயது வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். பாடங்களில் வரலாறும் ஆங்கிலமும் அவருக்கு அருமையாக அமைந்தன. இரண்டிலும் நூற்றுக்கு நூறு!

`இரும்புப் பெண்மணி' எனப் பெயரெடுத்த அவர்,  தன் பள்ளி நாள்களில் மகா குறும்புக்காரி என்றால் நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். பிஷப் காட்டன்ஸ் பள்ளியில் படித்தபோது ஒருமுறை அவரது குறும்புத்தனம் எல்லைமீறிப் போனது. அதற்குத் தண்டனையும் கிடைத்தது.

தீபாவளிக்காக அம்முவின் பள்ளியில் ஒரே ஒருநாள்தான் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்த கார்ப்பரேஷன் பள்ளிக்கோ மூன்று நாள்கள் விடுமுறை. இது அம்முவுக்கும் மற்ற தோழிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. `இந்த வாத்தியாருங்களுக்கு நாம மகிழ்ச்சியா இருக்கிறதே பிடிக்காதோ? இதுக்கு ஒரு பாடம் புகட்டணும்' என அவர்கள் திட்டமிட்டனர். கறார் மனிதரான சம்ஸ்கிருத ஆசிரியரை அதற்குப் பலிகடா ஆக்கினர். அன்று தீபாவளிக்கு முதல் நாள். வகுப்பறையில் நாற்காலியில் உட்கார்ந்து லேசான தூக்கத்தில் இருந்த ஆசிரியருடைய காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணியை சாமர்த்தியமாகப் பொருத்திவிட்ட அம்மு தலைமையிலான தோழிகள், நாற்காலிக்கு அடியிலே இரண்டு சரம் பட்டாசையும் வைத்து, யாரும் பார்க்காத நேரத்தில் அதைக் கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்தனர். பட்டாசு வெடிக்க ஆரம்பித்த அடுத்த நொடியே ஆசிரியர் அலறி அடித்தபடி  எழுந்து ஓட முயற்சித்தார். காலில் சக்கரம் பொருத்தப்பட்ட காலணியோ அவரை எங்கோ இழுத்துச்செல்ல, சார்லி சாப்ளின் காமெடிக் காட்சி ஒன்று நிஜமாகவே அரங்கேறிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே இதைப் பார்த்து, கறார் மனிதரை காமெடி பீஸாக்கிவிட்ட குஷியில் அம்முவும் தோழிகளும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தனர். விஷயம் பள்ளி நிர்வாகத்துக்குப் போனது.

p52c.jpg

மாணவிகளின் செய்கையால் அவமானமடைந்த ஆசிரியர், மற்ற மாணவிகளை விட்டுவிட்டு, ‘புரட்சி’த்தலைவியை மட்டுமே அடையாளம் காட்டினார். அப்புறமென்ன... ‘செய்த குறும்புக்கு சம்ஸ்கிருத ஆசிரியர் கையாலே ஆறு பிரம்படிகள் வாங்க வேண்டும்’ என தலைமை ஆசிரியர் தீர்ப்பு எழுதினார். அநேகமாக பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர் கையால் அம்மு அடிவாங்கியது அதுதான் முதலும் கடைசியுமான சம்பவம்.

பள்ளிக்காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம் அம்முவின் மனதில் பதிந்த ஒன்று.  `சிக்கலான மற்றும் நெருக்கடியான நேரங்களில் பயந்து தயங்கிக்கொண்டு நிற்கக்கூடாது. சமயோசிதமாக - அதே வேளையில் துணிந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். துணிச்சலான அந்த முடிவே நல்ல தீர்வாக அமையும்' என்கிற எண்ணம் இந்தச் சம்பவத்தின்மூலம் அவர் மனதில் அழுத்தமாக விழுந்தது.

பெங்களூரில் படித்துக்கொண்டிருந்த போது ஒருநாள்... பள்ளியின் பின்புறம் இருந்த திறந்தவெளியில் தோழி ஒருவருடன் நடந்து கொண்டிருந்தார். புல்வெளியில் அமர்ந்து படிக்கலாம் எனத் தோழி சொல்ல, இருவரும் அமர்ந்தனர்.

தோழி படிக்க ஆரம்பித்த நேரம்... அவளுக்குச் சிறிது தூரத்தில் ஏதோ ஒன்று பளபளவென நெளிவதைக் கண்டார் அம்மு. அடுத்த நிமிஷமே அலறினார். ஆம்... அது ஒரு பச்சைப் பாம்பு. தோழியும் அலறியபடி அதிர்ந்து நிற்க, எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வந்ததோ அம்முவுக்கு..! ஒரு கையால் தன் தோழியை மின்னல் வேகத்தில் பின்னுக்கு இழுத்துத் தள்ளி, மறு கையால் அந்தப் பாம்பின் வாலைப் பிடித்துத் தூர வீசி எறிந்தார். எல்லாமே ஒரு சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. தோழி காப்பாற்றப்பட்டுவிட்டார் என்பது தெரிந்தபின்தான் அவர் சகஜநிலைக்கு திரும்பினார். இதையெல்லாம் செய்தது தான்தானா என்கிற ஆச்சர்யம் மட்டும் அவரிடமிருந்து விலகவில்லை!

ஒருவேளை  அவர் மட்டுமே தனியே இருந்திருந்தால் பாம்பைக் கண்டதும் ஓடிப்போயிருப்பார். ஆனால், தன்னுடைய தோழி ஆபத்தில் சிக்கி இருக்கையில் அவளை தனியே விட்டுச்செல்வது முறையல்ல என்கிற எண்ணத்தில், ஆபத்துக்கு அஞ்சாமல் துணிந்து ஒரு முடிவெடுத்தார்; தோழியைக் காப்பாற்றினார். 

இப்படிப் பலப்பல அனுபவங்களுடன் பெங்களூரு வாழ்க்கை நகர்ந்தாலும், அம்மா வோடு இல்லாத சோகம் அவ்வப்போது  அவர் மனதில் எட்டிப்பார்க்கவே செய்யும். அந்த நாள்களில்அம்முவுக்குப் பெங்களூரு வாழ்க்கை பிடிக்கவில்லை என்றோ, பிடித்தது என்றோ உறுதியாகச் சொல்லிவிட முடியாது. தாயின் பிரிவைச் சகித்துக்கொள்ள ஒரு வழி இருந்தது அவருக்கு. ஆம்... சந்தியா திரைப்பட நட்சத்திரமாக இருந்ததால் கிடைத்த வழி!  அந்நாளில் திரைப்படங்களை அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கும் வழக்கம் இருந்தது. அதாவது ஒரே படப்பிடிப்பு அரங்கில் அந்தந்த மொழிக் கலைஞர்களைக்கொண்டு ஒரே நேரத்தில் தயாராகின. ஜெமினி, வாஹினி போன்ற பிரபல நிறுவனங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, பிரேம்நசீர், நாகேஸ்வரராவ் போன்ற நடிகர்களைக்கொண்டு இந்த முறையில் படங்களைத் தயாரித்தன. அம்முவின் வருத்தத்தைப் போக்கிய மருந்து இந்தப் படங்கள்தான்!

சந்தியாவுக்குப்  பிள்ளைகளைக்  காணும்  ஆசை எழுந்தாலும், ஓய்வில்லாத படப்பிடிப்பினால் மாதம் ஒருமுறைதான் அது சாத்தியப்படும். ஆனால், அம்மு நினைத்தாலோ அது சாத்தியம். ஆம்... மேற்சொன்ன முறையில் படங்கள் தயாரிக்கப்பட்டதால் பெங்களூரில் ஏதேனும் ஒரு தியேட்டரில் சந்தியா நடித்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும். அம்முவுக்கும் ஜெயக்குமாருக்கும் தாயின் நினைவுவந்தால், அவர்களைச் சந்தியாவின் திரைப்படத்துக்கு அழைத்துச்செல்வார் சந்தியாவின் தந்தை ரங்கஸ்வாமி. மகள் சினிமாவில் நடிப்பது தனக்கு விருப்பமில்லையென்றாலும் பேரப்பிள்ளைகளுக்காகப் பலமுறை மகள் நடித்த திரைப்படங்களைக் காண உடன் சென்றிருக்கிறார் அவர். இதனால் பிள்ளைகளின் துயரம் சில நாள்களுக்கு தள்ளிப்போகும். இப்படித்தான் அம்மாவின் பிரிவை ஆற்றிக்கொண்டார் அம்மு. ஆனால், உலகில் எதுதான் நிரந்தரம்?! அதற்கும் ஒருநாள் முடிவு வந்தது.

p52b.jpg

ஒருமுறை அப்படி அம்மாவைக் ‘காண’ ஒரு தியேட்டருக்கு பள்ளித்தோழிகளுடன் சென்றிருந்தார். `சம்பூர்ண ராமாயணம்' என்ற அந்தப் படத்தில் சந்தியா, ராவணன் மனைவி மண்டோதரியாக நடித்திருந்தார். படம் ஓடத் தொடங்கியது. போர்க்களத்தில் தோற்று, ராவணன் நிராயுதபாணியாக நிற்கும்போது, `இன்று போய் நாளை வா' என ராமன் சொல்லிவிட, சோர்ந்துபோய் அரண்மனை திரும்புகிறான் ராவணன். பெரும் வீரனாக படைபலத்துடன் தன் கணவனைப் பார்த்து பழகிய மண்டோதரி, ராவணனின் இந்த நிலை கண்டதும் பீறிட்டு அழுவார். சில நிமிடங்களுக்கு நீளும் இந்தக் காட்சியைக் கண்ட அம்மு, காட்சியை மறந்துவிட்டு சந்தியாவை நினைத்து வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டார். சினிமா என்றாலுமே, தன் தாய் கதறி அழுவதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அழுது தீர்த்துவிட்டார். தோழிகள் சமாதானம் கூறியும் அழுகையை அடக்க முடியவில்லை. வீட்டிலும் அழுகை தொடர்ந்தது. சந்தியாவுக்குத் தந்தி கொடுத்து வரவழைக்க வேண்டியதாயிற்று. பிரபலமான நடிகையின் மகளாக இருந்தும் சினிமா பற்றிய புரிதல் அவருக்கு அந்தளவுக்கே இருந்தது. அன்றுடன்  தியேட்டர் செல்வதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

அதன் பிறகு அம்மாவை நேரில் பார்க்கவே விரும்பினார் அம்மு. எத்தனை வேலைகள் இருந்தாலும், மாதம் ஒருமுறை பிள்ளைகளைப் பார்க்க பெங்களூரு வருவார் சந்தியா. அங்கிருந்து சந்தியா கிளம்பும் நாளில்தான் அந்த உருக்கமான நிகழ்வு அரங்கேறும். `எங்களையும் உன்னோடு அழைத்துச் செல்' என பிள்ளைகள் அழுது அடம்பிடிப்பார்கள். ஒவ்வொரு முறையும் இது பெரும் சங்கடம் சந்தியாவுக்கு. இதைச் சமாளிக்க சந்தியா ஓர் உபாயம் செய்தார். அடுத்த முறை பிள்ளைகள் அயர்ந்து தூங்கும் அதிகாலை நேரத்திலேயே சத்தமின்றி கிளம்பிவிட்டார். ஆனால், அம்முவிடம் அவரது திட்டம் பலிக்கவில்லை. மகளின் அறிவை அவர் தவறாகக் கணித்துவிட்டதை அடுத்த பயணத்தில் அறிந்துகொள்ள நேர்ந்தது. அந்த முறை கிளம்பும் நேரம் வந்தபோது, குழந்தைகள் நன்றாகத் தூங்குவதை உறுதி செய்துகொண்டு படுக்கையிலிருந்து எழுந்து சில அடி தூரம் நகர்ந்தார். அடுத்த நொடி யாரோ அவரை பின்பக்கத்திலிருந்து இழுப்பதுபோல இருந்தது. திரும்பிப்பார்த்தால், கண்ணீரை அடக்கிவைத்தபடி அம்மு நின்றிருந்தார். விஷயம் இதுதான்... ஒவ்வொரு முறையும் அம்மா தங்களை ஏமாற்றிவிட்டு கிளம்பிவிடுவதை அறிந்த அம்மு, அதற்கும் ஒரு திட்டம் போட்டிருந்தார். அதாவது சந்தியா உறங்கிய பிறகு, சத்தமின்றி அவரது புடவைத் தலைப்பை தனது ஃபிராக்கின் நுனியுடன் முடிச்சுப் போட்டுவிட்டுப் படுத்துக் கொண்டார். அதுதெரியாமல் எழுந்து மகளிடம் மாட்டிக்கொண்டார் சந்தியா. அந்த வயதில் மகளின் மதிநுட்பத்தைக்கண்டு நெகிழ்ந்தபடி  வாரி அணைத்துக்கொண்டார் தாய்.

ஆனாலும், மகளை சென்னைக்கு அழைத்துச் செல்லமுடியாத நிலைமை! பின்னாளில்,  மகள் போட்ட முடிச்சை நள்ளிரவில் எழுந்து அவிழ்த்து, அதை தங்கை பத்மாவின் சேலையோடு முடிச்சுப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார் சந்தியா, கனத்த மனதுடன் பிள்ளைகளுக்குத் தொடர் விடுமுறை  கிடைத்தால் கார் அனுப்பி அவர்களைச் சென்னைக்கு அழைத்துக்கொள்வார் சந்தியா. அப்படி ஒரு விடுமுறையில்தான் ஜெயலலிதா வின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவும் நள்ளிரவில்!
 
(அம்மு கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

முதல் படம்எஸ்.கிருபாகரன்

 

p52d.jpgகுழந்தை நட்சத்திரமாக முதன்முறையாக ஜெயலலிதா கேமரா முன் நின்ற அந்தப் படத்தின் பெயர் `ஸ்ரீசைல மகாத்மியம்'. கன்னடப் படம்.

தாயார் பிரபல நடிகைதான்.  எனினும் ஜெய லலிதாவுக்கு சினிமா பற்றிய பெரிய ஈர்ப்பு அந்த வயதில்  இருந்ததில்லை. நடிகர் நடிகைகளைப் பார்ப்பதிலோ, படப்பிடிப்புக்குச் செல்வதிலோ ஆர்வம் காட்டியதில்லை.

ஒருமுறை பெங்களூரில் இருந்து பிள்ளைகள் சென்னை வந்தபோது, சந்தியா விடியவிடிய படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டிய சூழல். அதேநேரம், அரிதான இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகளைப் பிரிந்திருக்கவும் விருப்பமில்லை சந்தியாவுக்கு. “தனியாக இருக்க வேண்டாம்.  என்னுடன் ஸ்டூடியோவுக்கு வாங்க” என்று அன்றைய தினம் படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்றார் அம்முவையும் ஜெயக்குமாரையும்.

p52a.jpg

அன்றைய படப்பிடிப்பில் சந்தியாவுடன் சிறுவயது பார்வதியாக ஒரு குழந்தை நடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களில், `அந்தச் சிறுமிக்குக் கடும் காய்ச்சல், இன்று அவள் படப்பிடிப்புக்கு வரமாட்டாள்' என்று தகவல் வந்து சேர்ந்தது. தயாரிப் பாளர்களுக்கு அதிர்ச்சி. முக்கியமான பாத்திரம் அது. அவள் இல்லையென்றால் அன்று படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அத்தனையும் வீண். அதன்பிறகு என்ன நடந்தது? ஜெயலலிதாவே விவரிக்கிறார்...

“விடுமுறைக்காக ஒருமுறை சென்னை வந்திருந்தபோது, நான் என் தாயாருடன் இரவு படப்பிடிப்புக்குப் போயிருந் தேன். அன்று அவருடன் நடிக்கவேண்டிய சிறுமி எதிர்பாராதவிதமாக வரவில்லை. இரவு நேரம்... மறுநாள் செட்டைப் பிரிக்க வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டருக்கும் ஒன்றும் புரியவில்லை. கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அப்போது அவர்கள் கண்களுக்கு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்த நான் தென்பட்டேன். உடனே அவர்கள் அம்மாவிடம் வந்து, ‘உங்கள் மகள் அழகாக இருக்கிறாள். அவள் வேண்டுமானால் இந்த வேடத்தில் நடிக்கட்டுமே!’ என்றார்கள்.

இதற்குமுன் என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வரும் தயாரிப்பாளர்கள், என்னைப் பார்த்துவிட்டு, `உங்கள் குழந்தைகூட சினிமாவில் நடிக்கலாமே!' என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர் காலஞ்சென்ற சாணக்யா. என் தாயார் அப்போ தெல்லாம், ‘நான் படும்பாடு போதும்... என் மகளுக்கு அந்தக் கஷ்டங்கள் வேண்டாம்’ என்று மறுத்துவிடுவார். ஓரிரு முறை அவர் என்னிடம் இதுபற்றிக் கேட்டபோது, நானும், ‘எனக்கு சினி மாவே வேண்டாம்!’ என்று
சொல்லியிருக்கிறேன்.

அதனால், செட்டில் என் அம்மாவிடம் அந்தக் கன்னடப் படத்தின் தயா ரிப்பாளர்கள்  இதுபற்றி கேட்ட போதும், ‘அதற் கெல்லாம் அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்!’ என்றே சொல்லி விட்டார். அவர்களோ விடுவதாக இல்லை!

p52c.jpg

‘எதற்கும் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்’ என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தவே, அம்மாவும் என்னிடம், ‘என்ன நடிக் கிறியா?’ என்று கேட்டார். அன்று எனக்கு ஏதோ நல்ல ‘மூட்’ போலிருக்கிறது. ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். அம்மாவுக்கு, நான் இப்படிச் சொன் னது வியப்பாக இருந்தது. மறு நிமிஷமே அந்த வேஷத்துக்கு நான் தயார் செய்யப்பட்டு, கேமரா முன் நிறுத்தப்பட்டேன்.

எந்தவிதக் கூச்சமோ, பயமோ இல்லாமல், ஒரே தடவையிலேயே திருப்தி கரமாக எடுத்து முடிக்கும்படியாக நான் நடித்தேன். என் திறமையைக் கண்டு, படத்தில் என் வேஷத்தை இன்னும் கொஞ்சம் வளர்த்து, ஒரு தனிப் பாடலிலும் நடிக்க வைத்தார்கள்.

என் சினிமா உலகப் பிரவேசம், நட்ட நடு நிசியில், யாரும் எதிர்பாராத வகையில் நடந்து விட்டது!''

-  தன் முதல்பட வாய்ப்பு குறித்த நினைவுகளை இப்படி சொல்லி  முடித்திருந்தார் ஜெயலலிதா.
 
பெங்களூரு திரும்பிவந்தபோது ஜெயலலி தாவை கொண்டாடினர் சக தோழிகள் - ``ஏய்... நம்ம ஜெயா சினிமாவில் நடிச்சுட்டாடீ... படம் வந்தா அவ செலவில் நம்மையும் அழைச்சிட்டுப்போவா...''

வீட்டிலோ நேர் எதிரான நிலை.  “இதுங்கதான் சினிமா பித்து பிடிச்சு அலையுதுன்னா, இப்போ அம்முவையும் அப்படி ஆக்கப் பார்க்கிறாளே வேதா... இனி சென்னைக்கு அழைச்சிட்டுப்போக விடக்கூடாது...''

- கறார் உத்தரவு பிறந்தது அம்முவின் தாத்தா பாட்டியிடமிருந்து!

(அம்மு கதை அறிவோம்!)


கலைக் குடும்பம்!

p52b.jpg

பொதுவாக சினிமாத் துறையில் ஒரே குடும்பத்தில் பலரும் திரைக்கலைஞர்களாக இருந்தால், அவர்களை `கலைக்குடும்பம்' என்பார்கள். விஜயகுமார், டி.ராஜேந்தர், ராதாரவி போன்றோரை இப்படிக் குறிப்பிடுவதுண்டு. உண்மையில் திரையுலகில் முதல் கலைக்குடும்பம் சந்தியாவினுடையதுதான்.

ஜெயலலிதா, சந்தியா, சித்தி வித்யாவதி - இவர்கள்தாம் இதுவரை சினிமாவில் நடித்திருப்பவர்கள் என கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜெயலலிதா வின் சகோதரர் ஜெயக்குமாரும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்  என்பது பலரும் அறியாத தகவல்! 

ஆம்... சந்தியா முதன்முதலாக நடித்த `கற்கோட்டை' தான் அவரது முதற்படம். பின்னாளில் சந்தியா பிரபல நடிகையான பிறகே இப்படம் வெளியானது. தனது ஆறு வயதில் ஜெயக்குமார் அப்படத்தில் நடித்திருக் கிறார். சந்தியாவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோதுதான், படத்தில் மாஜிஸ்திரேட் சேகரின் மகனாக வரும் சுட்டிப்பையன் கண்ணன் கதாபாத் திரத்துக்கு இயக்குநர், ஜெயக்குமாரை தேர்வு செய்தார்.

கண்ணனின் தாய் மங்களம், கண வனின் முதல்தாரத்துப் பிள்ளைக்கு சூழ்ச்சி செய்து விஷம் கொடுக்க முயற்சிக்கிறாள். இதை அறிந்த கணவன் அங்கு வர, தான் அகப்பட்டுக்கொண்டதை அறிந்து அதிர்ச்சியான மங்களம், தானே அந்த விஷத்தைக் குடிப்பதோடு, மகன் கண்ணனுக்கும் கொடுத்துவிடுகிறாள். தாயின் சதித்திட்டத்துக்குத் தானே பலியாகிறான் கண்ணன்.

படம் முழுக்க சுட்டிப்பையனாக நடித்து ஜமாய்த் திருக்கும் ஜெயக்குமார் இறுதியில் பரிதாபமாகப் பலியாகும் காட்சி ரசிகர்களை நெகிழவைத்துவிடும். சென்டிமென்ட் விரவிக்கிடக்கும் சினிமாத் துறையில், முதல் படத்திலேயே இறந்துவிடும் காட்சியில் தன் ஆசை மகனை நடிக்கவைத்த சந்தியாவின் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஜெயக்குமார் நடித்த மற்றொரு படம் பற்றிய தகவல்  கிடைக்கவில்லை.


‘ஜெய’ குடும்பம்!

ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்குப் பெரும்பாலும் `ஜெய' என்ற வார்த்தைகளிலேயே பெயர்கள் தொடங்கும். ஜெயராம், ஜெயக்குமார், ஜெயலலிதா... இப்படி! இவை தற்செயலாக வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல. இதற்குப் பின்னணிக் காரணமும் உண்டு.

ஜெயலலிதாவின் தந்தைவழிப் பாட்டனார் டாக்டர் ரங்காச்சாரி அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையாரின் அரண்மனையில் மூத்த மருத்துவராகப் பணியாற்றியவர். தனியே ஒரு மருத்துவமனையும் நடத்தியவர். மைசூரில்  டாக்டர் ரங்காச்சாரி குடும்பம் மிகப் பிரபலமானது. அந்தக் காலத்திலேயே ஆபரேஷனுக்கு 100 ரூபாய் கட்டணம் வாங்கியவர் என்றால், இவரது திறமை விளங்கும். தன் மருத்துவச் சாதனைகளுக்காக  ஆங்கிலேயரிடம்  ‘சிப்பர் ஃபீல்ட்’ விருது பெற்றவரும்கூட!

அன்றைய காலத்தில் மைசூர் மகாராஜா குடும்ப உறுப்பினர்களின் பெயர் `ஜெய' என்றே தொடங்கும். மரியாதை காரணமாக மகாராஜா வழிவந்தவர்கள் தவிர, பிறர் அந்தப் பெயரை சூட்டிக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவின் தாத்தா ரங்காச்சாரி, மகாராஜா குடும்பத்தினருக்கு செய்த சேவையின் காரணமாக பெயரில் ‘ஜெய’ சேர்த்துக்கொள்ளும் சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தார் மன்னர். இப்படிதான் ‘ஜெய’லலிதா பிறந்தார்.

என்ன காரணத்தாலோ, ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பத்தினர் இந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை.

ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டாலும், அவரை வீட்டில் `அம்மு' என்றே அழைத்தனர். பள்ளியில் படித்த காலத்தி்ல் தோழிகள் அவரை 'ஜெயா' என்றும் `லலிதா' என்றும் இருவிதங்களில் அழைத்தனர்.

ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரை, சோ போன்ற அந்நாளைய குடும்ப நண்பர்கள் சிலர் மட்டுமே `அம்மு' என்று அழைத்தனர்.

எம்.ஜி.ஆரும் `அம்மு' என்றே அழைப்பார். தனது நெருங்கிய வட்டம் அல்லாத நபர்கள் தன்னை  இப்படி அழைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார் ஜெயலலிதா!

http://www.vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

பகுத்தறிவும் பக்தியும்எஸ்.கிருபாகரன்

 

56p1.jpg

`தான் சினிமாவில் நடிப்பதோடு மகளையும் நடிக்கவைக்கிறாளே' என்று சந்தியாவின் மீதான ரங்கசாமியின் கோபமெல்லாம் சில நாள்களுக்குத்தான். மறுமுறை வந்தபோதே அப்பாவைச் சமாதானப்படுத்திவிட்டார் சந்தியா!

ஆறு வயது முதல் பத்து வயது வரை, ஜெயலலிதா பெங்களூரில் வசித்தார். ஜெயலலிதாவின் பலங்களாக நாம் அறிந்த விஷயங்களுக்கு அடித்தளமிடப்பட்டது இங்குதான்.

படிப்பில் திறமைசாலி, குறும்பில் கெட்டிக்காரி - இவை மட்டுமே அல்ல ஜெயலலிதா... எட்டு வயதிலேயே எந்த ஒரு விஷயத்தையும் பகுத்துப்பார்க்கும் திறன் பெற்றிருந்தார் அவர். வாழ்க்கையின் மீதான பற்று அதிகரித்து, பதவி, புகழ், அதிகாரத்தின் மீது ஆசை ஒருவருக்கு அதிகமாகும்போது, காலம் அவரின் சுயத்தைக் கரைக்க ஆரம்பிக்கிறது. சாமான்யனோ, சரித்திரம் படைத்தவரோ - அவர்களது வாழ்வு விட்டுச் சொல்லும் சேதி இதுதான். ஜெயலலிதா மட்டும் அதில் விதிவிலக்கா, என்ன!

தன் அரசியல் பயணத்தின் பிற்பகுதியில் தன்னைக் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராக வெளிப்படுத்திக்கொண்ட அவர், ஆரம்பகாலத்தில் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட விஷயங் களில் அவரது அதீத ஆன்மிகப்56p2.jpg பற்றும் உண்டு. ஆன்மிகம், ஜோதிடம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய நம்பிக்கை கொண்ட அவர், இந்த விஷயங் களுக்காக பலமுறை எதிர்க்கட்சிகளால் தாக்கிப் பேசப்பட்டிருக்கிறார். நாத்திகக் கருத்துகளைப் பரப்பிய திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்ததே, இந்த விமர்சனங்களுக்குக் காரணம். நடிகையாக இருந்த காலங்களில் தன் வேதா இல்லத்திலிருந்து எப்போது கிளம்பினாலும், தெருமுனையில் பூ விற்கும் பெண்மணியைப் பார்த்து புன்னகைத்துவிட்டே கிளம்புவார். அது தனக்கு ராசி என அவர் கருதினார். இப்படி பல பற்றுகளைக்கொண்டிருந்த ஜெயலலிதா, சிறுவயதில் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்கிறார்!

அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டே தவிர, தெய்வங்களை வெவ்வேறு பெயர்களில் வணங்குவதை எதிர்த்திருக்கிறார். கடவுள் விஷயத்தில் பெரியவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடும் அளவுக்கு அவர் அறிவு பெற்றிருந்தார். இது மிகையான செய்தி அல்ல. ஜெயலலிதா தன் 10 வயதுக்குள்ளாகவே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல இதிகாசக் கதைகளைப் படித்து முடித்திருக்கிறார்... பாட்டியின் உதவியுடன்.

அந்த வயதில் எதற்கெடுத்தாலும் கடவுளைத் துதிக்கச்சொல்லி, தாய் சந்தியா அவரை வற்புறுத்துவது வழக்கம். ஆனால், தேவையான நேரங்களில் மட்டுமே அதைச் செய்வார். இதற்காக, தாத்தா பாட்டியுடன் தர்க்கம் செய்வதும் அவருக்கு வழக்கமான விஷயம்.

ஒருமுறை பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில்  பரீட்சை தொடங்கியது. ஆனால், ஏனோ ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அத்தனை கடினமாக இருந்தது கணக்குப்பாடம். பரீட்சை நெருங்க நெருங்க... பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. தாத்தா பாட்டியிடம் சொல்லி அழுதார். அவரை சமாதானம் செய்த பாட்டி, ‘`பரீட்சை தொடங்கும் முன் விநாயகரை வேண்டிக்கொள். எல்லாம் சரியாகிவிடும்!’’ என அறிவுரை சொன்னார். ‘படிக்காவிட்டாலும் கடவுளை வேண்டிக்கொண்டால் பாஸ் ஆவோம் என்பது மூடநம்பிக்கை’ என மனதில் நினைத்துக்கொண்டாலும், பாட்டியின் வற்புறுத்தலால் அப்படியே வேண்டிக்கொண்டார். பெரும் ஆச்சர்யம்... தேர்வு முடிவு வந்தபோது கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்கியிருந்தார்!

பின்னர், ஜெயலலிதா பாட்டுக் கற்றுக்கொள்ள விரும்பினார். கோபால கிருஷ்ண சர்மா என்ற பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்தார் பாட்டி. பேத்தி நல்லமுறையில் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாட்டு வகுப்பின் முதல்நாள், வீட்டில் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த பாட்டி, பேத்தியை அழைத்து, ``எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய விநாயகரை வேண்டிக்கொள்'' என்றார்.

`‘விநாயகரை வேண்டிக்கொள்வதால் மட்டும், நான் எது செய்தாலும் அது வெற்றிகரமாக முடிந்துவிடுமா என்ன?'' என்று துடுக்குத்தனமாக கேட்டார் ஜெயலலிதா. உடனே பாட்டி, கணக்குப் பரீட்சையை அவருக்கு நினைவு படுத்தினார்.

56p3.jpg

``கணக்குப் பரீ்ட்சையில் நான் பாஸ் செய்ததற்குக் காரணம் அதிர்ஷ்டமோ, கடவுள் அனுக்கிரகமோ இல்லை... என் திறமையும் உழைப்பும்தான்! ஒருவேளை நான் படிக்காமல் தேர்வுக்குப் போயிருந்தாலோ, படித்துவிட்டு தேர்வுக்குப் போகாமல் இருந்தாலோ நான் பாஸ் ஆகியிருப்பேனா?’' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்ப, வாயடைத்துப்போனார் பாட்டி.

தொடர்ந்து, ``நான் இன்று விநாயகரைக் கும்பிடாமல் பாட்டு கற்றுக்கொள்ளப் போகிறேன். என்ன ஆகிறதென்று பார்க்கலாம்!'' என்று சொல்லிவிட்டார்.

கடவுளை வணங்காமலேயே பாட்டு வகுப்பு ஆரம்பமானது. ஒரு சில நாள்கள் சென்றிருக்கும். அடுத்தடுத்து ஏதோ சிறுசிறு காரணங்களால் பாதியிலேயே நின்றது பாட்டு வகுப்பு. சென்னை வந்த பின்னும் பாட்டு முயற்சியைத் தொடர்ந்தார் ஜெயலலிதா. இறுதிவரை அவரது பாடல் கற்கும் ஆசை முழுமையடையவே இல்லை. பின்னாளில் பெரிய நடிகை ஆனபின் இந்தச் சம்பவங்களை மனதில் அசைபோட்டு, தன் எண்ணங்களை மாற்றியமைத்தார். விநாயகரே அவரின் இஷ்ட தெய்வம் ஆனார். காலையில் குளித்து முடித்து விநாயகருக்கு பூஜை செய்த பிறகே அன்றாடப் பணிகளைத் தொடங்குவது ஜெயலலிதாவின் வழக்கமானது.

புதிய சொத்துகள் வாங்குவதானாலும், புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானாலும், வேறு எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும், விநாயகரைத் தொழாமல் அவர் ஈடுபட்டது இல்லை. ஆனாலும் அளவுக்கு மீறிய பக்தியை அவர் வளர்த்துக்கொண்டதில்லை. எந்தச் செயலிலும் தன் பகுத்தறிவைப் பொருத்திப்பார்க்க அவர் தவறியதில்லை.

``ராஜாஜி அவர்கள் எழுதிய `சக்கரவர்த்தி திருமகன்', `வியாசர் விருந்து' புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். இம்மாதிரி புராணங்களைப் படித்திருப்பதோடு, விஞ்ஞான உலகில் நிகழ்ந்துவரும் அற்புதங்களையும் கவனித்து வருகிறேன். இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது ஏதோவொரு சக்தி எங்கும் நீக்கமற நிறைந்து நம்மை ஆட்டிப்படைப்பதை உணர்ந்துகொண்டேன். அப்படியானால், புராணங்களை நான் நம்புவதில்லையா? அவற்றில் சொல்லியிருப் பவை நடந்திருக்கக்கூடாதா?

உதாரணமாக, நாரதர் ஆகாயத்தில் மேகக் கூட்டத்தினிடையே நடந்து வருவதாக புராணம் சொல்கிறது. சினிமாவிலும் நாடகத்திலும் அவ்வாறே காட்டப்படுகிறது. ஆகாயத்தில் ஒருவன் - அதாவது அந்தரத்தில் ஒருவன் எந்தப் பிடிப்புமின்றி நடப்பது சுலபமா? நடக்கக் கூடிய காரியமா?

நாரதர் கட்டைப்பிரம்மச்சாரி. தவ வலிமை மிக்கவர். ஆகவே, அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. வரவர நம்மிடையே இந்த தவ வலிமை குறைந்துவிடவே, நமக்கு அவரது செயல்கள் அற்புதங்களாக தெரிகின்றன. அவர்களை தேவர்களாகவும் கடவுளாகவும் அற்புதப் பிறவிகளாகவும் நினைத்துவிட்டோம்.

விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் இப்போது நிலவில் காலடி எடுத்துவைத்திருக்கிறோம். வருங்காலத்தில் மக்கள் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவர்களையும் நாரதர் போன்று தேவர்களாகவோ, கடவுளர்களாகவோ நினைக்கலாம் அல்லவா?”

- ஒரு பேட்டியில் ஜெயலலிதாவிடமிருந்து தெறித்து விழுந்த  இந்த வார்த்தைகள் எவ்வளவு பகுத்தறிவானதாகவும் தர்க்கமுள்ளதாகவும் இருக்கின்றன!

ஜெயலலிதா மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்பதற்கு அவரது முதல்படமே சாட்சி.  கதாநாயகியாக அவர் முதன்முதலில் அறிமுகமான வேதாந்தம் ராகவய்யா இயக்கிய `நன்னகர்த்தவ்யா' என்ற கன்னட மொழிப் படத்தில் ஜெயலலிதா ஏற்றது இளம் விதவை வேடம். ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கை மட்டுமன்றி, சொந்த வாழ்க்கையின்மீதும் பெரும் அக்கறைகொண்டிருந்த சந்தியா, தன் மகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகும் முதல் படத்திலேயே விதவை வேடத்துக்கு ஒப்புக்கொண்டது ஆச்சர்யம். இதுபற்றி உறவினர்கள் சந்தியாவிடம் கேட்டபோது ‘நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா?’ என்றே பதில் அளித்தார்.
 
ஜெயலலிதா தமிழில் அறிமுகமான `வெண்ணிற ஆடை'யிலும் அவருக்கு விதவை வேடம்தான். முதல் படத்தில் விதவை வேடம் ஏற்றது குறித்து பிரபல நடிகையானபின் அவரிடம் கேட்கப்பட்டது. ``நானோ, என் அம்மாவோ அதுபற்றிக் கவலைப்பட்டதே இல்லை. இன்று நான் உங்கள் முன் தென்னிந்தி யாவின் சிறந்த நடிகை என்கிற புகழோடு நிற்பதிலிருந்தே தெரியவில்லையா அதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று!'' - இப்படித் தன் பகுத்தறிவை மீ்ண்டும் ஒருமுறை பளிச்சென வெளிப்படுத்தினார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவின் பிம் பத்தைத்தான் காலம் கருணையின்றி எப்படி எல்லாம் சிதைத்துப்போட்டுவிட்டது!
 
(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

வாசிப்பும் நேசிப்பும்எஸ்.கிருபாகரன் - படம்: ஈ.வெ.ரா.மோகன்

 

ரு புத்தகம் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். வாசிப்புப் பழக்கமே பல அறிவுச் சாளரங்களைத் திறந்துவிட்டு, ஒருவரை  மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காட்டுகிறது.

p54a.jpg

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை ஒருமுறை வேறோர் ஊருக்குப் பேச அழைக்கப்பட்டார். விழா ஏற்பாட்டாளர்கள், அண்ணாவுக்கு விமான டிக்கெட் போடுவதாகத் தெரிவித்தனர். அதை மறுத்த அண்ணா, `ரயில் டிக்கெட் போதும்' என்றார்.  அருகிலிருந்த நண்பர் அண்ணாவிடம், `விமானப்பயணத்தை ஏன் மறுக்கிறீர்கள்...ரயிலைவிட வசதியானதாயிற்றே... அசதி தெரியாமல் விரைந்து போய்வந்து விடலாமே...' என்றார். அதற்கு அண்ணா, `நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், விமானப்பயணத்தில் என்னால் குறைவான புத்தகங்களையே வாசிக்க முடியும். ரயில் என்றால் இன்னும் கூடுதலான புத்தகங்களை வாசிக்க முடியும்' என்றார். உடல் அசதியையும் பொருட்படுத்தா மல் படிப்பதற்காகவே ரயில் பயணத்துக்கு முன்னுரிமை கொடுத்த அண்ணாவை எண்ணி வியந்துபோனார் நண்பர்.

அண்ணாவின் தம்பியான எம்.ஜி.ஆரும் அப்படியேதான். நாடக உலகிலிருந்து வந்த அவர், தமிழ் இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பது பலரும் அறியாதது. தன் ராமாவரம் தோட்ட இல்லத்தின் கீழ்ப் பகுதியில் பெரும் அறிவுச்சோலைபோல பல்துறை அறிஞர்களின் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். பின்னாளில் அண்ணாவை வழிகாட்டியாகவும், எம்.ஜி.ஆரை அரசியல் ஆசானாகவும் ஏற்ற ஜெயலலிதாவும் தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தது யதேச்சையானதல்ல...   அவர் வகித்த உயரிய இடத்துக்கான தகுதியை வளர்த்ததில் வாசிப்புக்கு முக்கிய பங்குண்டு. சிறுவயதிலேயே ஜெயலலிதாவிடம் உருவான இந்தப் பழக்கத்துக்குக் காரணம் அவரது அம்மா சந்தியாவே.

“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன்!”

`சினிமாவுக்கு வராமலிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்ற கேள்விக்கு, அரசியல் அரிச்சுவடிகூட அறிந்திராத 1960-களின் மத்தியில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா.  குறும்பாக அன்று அவர் அளித்த பதில் அடுத்த 20 ஆண்டுகளில் நிஜமானது ஆச்சர்யம்தான். பெங்களூரூ, சென்னை என தான் படித்த இரண்டு நகரங்களிலும் ஆங்கில வழியிலேயே படித்ததால், காமிக்ஸ் மற்றும் உலகத் தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பதில் ஜெயலலிதாவுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. பின்னாளில் அரசியலில் கோலோச்சவும் இந்த வாசிப்புப் பழக்கமே அவருக்கு பெரிதும் உதவியது.  p54b.jpg

சென்னையில் இருந்தபோது தோழிகளின் வீடுகளுக்குச் செல்வார் அம்மு (ஜெயலலிதா). அங்கெல்லாம் வண்ண வண்ணப் படங்கள் அடங்கிய வெளிநாட்டுப் புத்தகங்கள் கண்ணைப் பறிக்கும்.அவற்றை ஆர்வமுடன் புரட்டிப் பார்ப்பார். வீட்டுக்கு வந்தபின் அதுபற்றித் தாயிடம் சொல்லுவார். ஆனால், `ஒழுங்கா ஸ்கூல் புத்தகங்களைப் படி அம்மு. மற்றதை அப்புறம் படிக்கலாம்' என அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார் சந்தியா.

ஆனால், ஜெயலலிதாவின் மனதில் பூத்திருந்த இந்த புத்தக ஆசைதான் சந்தியாவுக்கு இன்னொரு வகையில் பின்னாளில் உதவியது. விடுமுறையில் சென்னை வந்து பெங்களூருவுக்குப் பிள்ளைகள் திரும்பும் நேரம், ரயில் நிலையத்தில் சந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் பாசப்போராட்டமே நிகழும். பிள்ளைகளைச் சமாளிக்க சந்தியா ஒரு வழி கண்டறிந்தார்.

ஒருநாள், பெங்களுரூ செல்லும் நாளில் ஜெயலலிதாவும் ஜெயக்குமாரும் ரயிலில் ஏறாமல் அழுது அடம்பிடிக்க, அப்போது உதவியாளர் மாதவன் ஒரு பெரிய பையை ரயில் பெட்டியில் ஏற்றி அம்முவின் இடத்தில் வைத்தார். அத்தனையும் பளபள கலரில் பிரமாண்ட காமிக்ஸ் புத்தகங்கள். மவுன்ட் ரோட்டில் உள்ள ‘ஹிக்கின் பாதம்ஸ்’ கடையில் வாங்கியவை. அதைப் பார்த்த இரு குழந்தைகளுக்கும் இன்ப அதிர்ச்சி.

சந்தியாவின் சாணக்கியத் தனத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அடுத்தமுறை வண்டி புறப்படும்போது, ஜெயலலிதாவும் சகோதர ரும் எதிர்பார்த்து நின்றது தங்கள் அம்மாவை அல்ல... காமிக்ஸ் புத்தகங்களைத்தான். பல நேரங்களில் ரயில் புறப்படுவது வரையிலும்கூட அம்முவுக்குப் பொறுமை இருக்காது. சந்தியாவும் மாதவனும் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருக்க, ரயில் பெட்டியின் உள்ளே தாத்தா-பாட்டியின் மடியில் இருக்கும் அம்மு, புத்தகங்களில் மூழ்கிவிடுவார். கடைசிப் புத்தகத்தைப் படித்து முடித்துக் கீழே வைக்கும்போதுதான் அம்மாவின் நினைவே வரும். அம்மாவைப் பிரிந்து வந்த கவலை பிறக்கும். சில நேரங்களில் அரைமனதோடு புத்தகத்தைப் படித்தபடியே அம்மாவுக்குக் கையசைப்பார். இப்படி ஒவ்வொரு பயணத்திலும் ஜெயலலிதாவுக்கும் சகோதரருக்கும் தலா இருபது காமிக்ஸ், ஐந்து பஞ்சதந்திரக் கதைப் புத்தகங்கள் கிடைக்கும்.

ஜெயக்குமார் நேரம் கிடைக்கும் போதெல் லாம் படிக்கும் ரகம் என்றால், ஜெயலலிதா படிப்பதற்காகவே நேரம் ஒதுக்கும் ரகம்.

“எங்கள் பிறந்தநாளின்போது பரிசளிக்கும் நண்பர்களும் உறவினர்களும் விலையுயர்ந்த எந்தப் பொருளைக் கொடுத்தாலும்கூட எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இருக்காது. மேல்நாட்டிலிருந்து ஒரு நல்ல புத்தகத்தை  வர வழைச்சுக் கொடுத்தாங்கன்னா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். ஏன்னா, அன்னைக்கு எங்களின் முக்கிய பொழுதுபோக்கே படிக்கிறதுதானே!” என ஒருமுறை ஜெயலலிதா, தன் வாசிப்புப் பழக்கத்தைப் பெருமிதமாகக் குறிப்பிட்டார். மற்றவர்கள் எப்படியோ, மகளின் பிறந்த நாளுக்கு சந்தியாவின்  பரிசு எப்போதும் புத்தகங்கள்தாம்!

தமிழில் பேசும் அளவுக்கு எழுத வராது என்பதால், தமிழ் நன்னெறிக் கதைகளையும், தலைவர்களின் வரலாறுகளையும் தாத்தா-பாட்டி உதவியுடன் பெங்களூருவில் கற்றிருக்கிறார். இப்படி பத்து வயதுக்குள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் படித்திருக்கிறார் அவர்.

வளர்ந்தபின், ஜெயலலிதாவின் புத்தக அலமாரியில் அதிகமாக இடம்பெற்ற புத்தகங்கள் மேலைநாட்டு எழுத்தாளர் ‘பேர்ல் பெக்' எழுதிய நாவல்கள்தாம். அவரின் எழுத்துக்குத் தீவிரமான வாசகி ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் பெர்னார்ட்ஷா. கிண்டலும் நையாண்டியும் நிறைந்த அவரது நாடக நூல்களை பலமுறை படித்திருக்கிறார். ஒருநாளைக்கு மூன்று புத்தகங்கள்கூட ஜெயலலிதா படித்ததுண்டு.

மகாபாரதத்தைப் பற்றி ஒருமுறை கருத்து தெரிவித்த அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல... வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்றார். அத்தனை புலமை பெற்றிருந்தார் அதில்.

த்ரில்லர், சமூகம், குடும்ப உறவுகளைச் சொல்லும் நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். நடிகையான காலத்தில் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டென், ஷிட்னி ஷெல்டன். சாமர்ஸெட்டின் கவிதைகளிலும் அவருக்குப் பெரும் விருப்பம் உண்டு.

நடிகையானபின், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம்கொண்டு இலக்கிய ஆசிரியர் ஒருவரை நியமித்து முறையாக தமிழ் இலக்கியம் பயின்றிருக்கிறார் என்பதும் ஆச்சர்யமான செய்தி. அந்த முடிவுக்கு அவர் வரக் காரணம், எழுத்தாளர் ஜெயகாந்தன். படப்பிடிப்பில் சக கலைஞர்கள் ஜெயகாந்தனைப் பற்றியும் அவரது நடையைப் பற்றியும் சிலாகித்துச் சொன்னதால்,  அவரது நாவல்களைப் படிக்க விரும்பியே தமிழில் ஆர்வம்கொண்டார். பின்னாளில் ஆங்கிலத்துக்கு இணையாக தமிழிலும் புலமை  பெற்று, அவரே நாவல்களும் எழுதினார். படப்பிடிப்புக்காக ஊட்டி சென்ற வேளைகளில், அங்குள்ள ’ஹிக்கின்பாதம்ஸ்’ கடைக்கு நேரில் சென்று புத்தகங்கள் வாங்குவதும் அவர் வழக்கம்.

திரைப்பட நடிகையானபின், ஜெயலலி தாவுக்கு இந்த வாசிப்புப் பழக்கம் வேறு விதத்தில் உதவி புரிந்தது. தனக்கு அறிமுக மானவராகவே இருந்தாலும், தேவையின்றி அவர்களிடம் பேசுவதை அவர் விரும்பு வதில்லை.  ஆரம்ப நாள்களில் அப்படிச் சில வம்புமனிதர்களிடம் சிக்கித் தவித்ததுண்டு. சில கதாநாயகர்கள் வலுக்கட்டாயமாக வந்து அரட்டையடிப்பார்கள். திரையுலகில் இது சகஜம் என்றாலும், ஜெயலலிதா இதற்கு ஒரு வழிகண்டறிந்தார். `ஷாட் ஓகே' என இயக்குநர் குரல்கொடுத்த அடுத்த நொடியே கையில் ஒரு புத்தகத்துடன் ஒதுங்கிச் சென்று அமர்ந்துவிடுவார். அருகில் யார் வந்தாலும் அவர்களைக் கண்டும்காணாதது போல புத்தகத்தில் மூழ்கிவிடுவார். இதனால் அநாவசிய பேச்சுகள் மற்றும் அரட்டை ஆசாமிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது.

பின்னாளில், போயஸ் கார்டன் இல்லத் தில் ஒரு பெரிய நூலகம் அமைத்தார். தேடித்தேடி அதில் உலக அறிஞர்களின் புத்தகங் கள் இடம்பெறச் செய்தார். எத்தனை அரசியல் பரபரப்பும் அவரை வாசிப்புப் பழக்கத்திலிருந்து நகர்த்திவிடவில்லை என்பது ஆச்சர்யம். உண்மையில், அரசியலில் அவர் சோர்வடைந்த நேரங்களில் மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளைவிட, சில மணி நேர புத்தக வாசிப்பையே விரும்பியிருக்கிறார்.

80-களில் ஜெயலலிதாவுக்குப் பிடித்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங். 1984-ல் ஜெயலலிதா, ராஜ்ய சபை எம்.பி ஆனபோது அவருடைய பக்கத்து இருக்கைக்காரரான குஷ்வந்த் சிங், `அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என்ற என் கருத்தை உங்களைப் பார்த்தவுடன்  மாற்றிக்கொண்டேன்’ என ஜெயலலிதாவிடம் சொல்லி, அவரை நெளிய வைத்தார்.

ஜெயலலிதாவின் முதல் அரசியல் கருத்துக்கு அடித்தளம் இட்டதும் வாசிப்புதான். அது என்ன?

(அம்முவின் கதை அறிவோம்!)


ஜெயலலிதா விரும்பிய நகை எது?

p54c.jpg

ழகுக்கு அழகு செய்வதில் முதலிடம் வகிப்பவர்கள் பெண்கள்தான் என்கிற நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, `அலங் கரித்துக் கொள்வதே ஒரு தனிக்கலைதான்' என்பார். எந்த அளவுக்கு எளிமையாக உடை அணிகிறாரோ, அந்த அளவுக்குப் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது அவரது வழக்கம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது விலை உயர்ந்த புடவையை அணிந்தால், எளிமையான நகைகளையே அணிவார். மாலை நேர நிகழ்ச்சியாக இருந்தால் வைரங்களும் முத்துகளும் கொண்ட கனமான நகைகளை அணிவார்.

அதே நேரத்தில், படப்பிடிப்போ, நிகழ்ச் சியோ இல்லாமல், வீட்டில் இருக்கும்போது, ஒரு குன்றிமணி பொன்கூட அணிந்து கொள்ளமாட்டார்.

நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது விதமான கற்களால் செய்யப்பட்ட நகைகள்தான் அவருடைய ஃபேவரைட். நவரத்தினத்தாலான நெக்லஸ், கம்மல்கள், வளையல், மோதிரம் ஆகியவற்றை செட் ஆக வைத்திருப்பார். நவரத்தினங்களுக்கு அடுத்தபடியாக பச்சைக் கற்களே அவருக்கு விருப்பமானவை.

எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்த `அடிமைப் பெண்' வெளிப்புறப் படப் பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றபோது,  ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற பச்சைக் கற்களில் (எமரால்ட்) செய்யப்பட்ட நெக்லெஸ், காதணி, வளையல், மோதிரம் அடங்கிய நகைகளை ஒரு செட் வாங்கினார். விலை உயர்ந்தவை என்றாலும் பார்வைக்கு எடுப்பாகத் தெரியாது என்பதுதான் ஜெய்ப்பூர் எமரால்ட் நகைகளின் விசேஷம்.

படப்பிடிப்புக்கு வெளியூர் செல்லும் போதும் நகை வாங்குவதற்கு என்றே நேரம் ஒதுக்குவார். 

மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது, தங்க ஒட்டியாணம், வங்கி, ஜடை பில்லை, வைர மாட்டல், காலில் வெள்ளி கொலுசு ஆகியவற்றை அணிந்து செல்வார். நடிகையான அவர், 1970-களில் இப்படி ஆடை அணிகலன் அணிவதைப் பற்றி, அவரது நலன்விரும்பிகள், `இப்படி கர்நாடகம் போல வரவேண்டுமா' எனக் கேட்டதற்கு, `இதுதான் இப்போது ஃபேஷன்' என்று கூறி வாயடைக்கச் செய்திருக்கிறார்.

விதவிதமாக மோதிரங்களை வாங்கிச் சேகரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மோதிரத்தில் எவ்வளவு டிசைன்கள் உண்டோ, அவ்வளவையும் போட்டுப்பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒரு குஷி. நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது சக நடிகைகள் ஏதேனும் புது மாடல் மோதிரம் அணிந்திருப்பதைக் கண்டால் உடனே அதை ஆர்டர் செய்து அடுத்த தினங்களில் அணிந்து மகிழ்வார். இப்படிச் சேர்ந்த மோதிரங்கள் மூலம் ஒரு பெரிய மோதிர கலெக்‌ஷனை அவர் பராமரித்துவந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

http://www.vikatan.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

ஆத்திரம் வேதனை துக்கம் எஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்

 

ங்கில வழியில் பயின்ற ஜெயலலிதா, பின்னாளில் தமிழ் கற்க விரும்பியதன் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பெங்களூரிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாகப் படிக்க வந்த சமயம் அது. படப்பிடிப்பு இல்லாத ஓய்வுநேரங்களில் உறவினர்கள் மற்றும் தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக்கொண்டிருப்பது சந்தியாவின் விருப்பமான விஷயங்களில் ஒன்று. அரசியலில் தொடங்கி ஆன்மிகம் வரை எல்லா விஷயங்களும் அப்போது தோழிகளால் அலசப்படும். அச்சமயங்களில் தானும் அந்தப் பேச்சில் பங்குகொள்ளும் விதமாக எதையாவது சொல்வார் அம்மு. ஆனால் பெரியவர்கள், ``உனக்கு என்ன தெரியும்னு பேச வந்துட்ட... போய் படி அம்மு!'' என அவரை விரட்டிவிடுவர். எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வார் அம்மு. ஆனால், தன்னை யாராவது குறைத்து மதிப்பிட்டால் வெகுண்டெழுவார். சிறு வயதிலேயே அவரிடம் உருவான குணம் அது. வகுப்பில் முதல் மாணவியான தன்னைப் பெரியவர்கள் புறக்கணிப்பதில் எரிச்சலான அம்மு, தானும் அவர்களுக்குச் சளைத்தவள் அல்ல என நிரூபிக்க முடிவெடுத்தார்.

p88e.jpg
 

அன்று முதல் திருட்டுத்தனமாக ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். சந்தியா தரும் பாக்கெட் மணியில் ஒரு செய்தித்தாளை வாங்கி, பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் முழுவதுமாகப் படிக்க ஆரம்பித்தார். ஒருநாள் வீட்டில் அணுகுண்டு பரிசோதனை பற்றி பேச்சு வந்தது. “அமெரிக்காவைப் போல இந்தியா அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்த வாய்ப்பிருக்கா?” என தோழிகளிடம் சந்தியா வினவினார். அப்போது, “சான்ஸே இல்ல மம்மி... நேற்றுகூட ராஜாஜி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே? அப்படி ஒரு முயற்சியை அவர் அனுமதிக்கமாட்டார்” என எங்கிருந்தோ ஜெயலலிதாவின் குரல் வந்தது. மகளிடமிருந்து வந்த இந்த அரசியல் கருத்தினால் ஆச்சர்யப்பட்டுப்போனார் சந்தியா. மகளைக் கட்டியணைத்தபடி, ``ஏய் அம்மு, யாரு உனக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுத்தது?” - ஆச்சர்யம் விலகாமல் கேட்டவர், “கிளாஸ்ல அரசியல் வகுப்பு எடுக்கறாங்களா?” என்றார். “இல்லை. நான் டெய்லி பேப்பர் படிக்கிறேனே!” பெருமிதமான குரலில் சொன்னார் அம்மு.

பின்னாளில் முறையாக ஜெயலலிதா தமிழ் படித்தாலும், அவருக்கு ஆரம்பகால தமிழ் ஆசான் தினசரி பத்திரிகைதான். அம்மாவை அசத்துவதற்காக, தான் படிக்க ஆரம்பித்த அந்தப் பத்திரிகையிலே பின்னாளில் சுமார் அரை நூற்றாண்டுக் காலத்தில் பலமுறை தானே தலைப்புச் செய்தியாக இடம்பெறப்போகிறோம் என்று அன்றைய அம்முவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்வின் சுவாரஸ்யமே, அது சொல்லாமல் விட்டுவிடுகிற சிறு செய்தியில் அல்லவா ஒளிந்திருக்கிறது!

வெற்றிகரமான அரசியல் தலைவராக ஜெயலலிதா உருவானபோது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், மேடைகளில் அவர் எழுதிவைத்ததைப் படிக்கிறார் என்பது. யாரோ எழுதிக்கொடுத்ததை மேடையில் படித்து, கைதட்டல் வாங்கும் விஷயஞானமற்றவராக அவரை எதிர்க்கட்சிகள் சித்திரித்தன. ஜெயலலிதா மிகப்பெரிய பேச்சாளர் இல்லை யென்றாலும், விஷயஞானமற்றவர் அல்ல. 

சர்ச் பார்க்கில் படித்தபோது, விஞ்ஞானம் குறித்த அவரது கட்டுரை ஒன்று, `இல்லஸ்ட்ரேடட் வீக்லி' ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமானது. ஆசிரியர் குழுவிடமிருந்து பாராட்டுக் கடிதம் ஒன்றும் வந்தது. அதில் தொடர்ந்து எழுதும்படி கூறியிருந்தார்கள். “அந்தக் கடிதம் வந்த தினம் முழுவதும் நான் என் மனதில் பெர்ல் பெக் மாதிரி என்னை ஒரு பெரிய கதாசிரியையாகவே நினைத்துக்கொண்டேன்” என அதை நினைவுகூர்ந்து பிற்காலத்தில் பூரித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா ஆங்கில வழியில் படித்தவர் என்றாலும்... தமிழில் பேசவும் எழுதவும் பெரிதும் விரும்பினார். பரபரப்பான நடிகை யாக இருந்தபோதும், தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக்கொள்ள ஆசிரியரை அமர்த்திக் கொண்டதிலிருந்தே அவரின் தமிழார்வத்தை உணரலாம். அத்தனை பரபரப்புக்கிடையிலும் வாசிப்பு பழக்கத்தை விட்டுவிடாதவர் அவர். பிரபல `உமன்ஸ் எரா' பத்திரிகைக்கு, தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து சந்தா கட்டினார். பத்திரிகைகளில் தன் மீது விமர்சனங்கள் வந்தால், அவற்றைப் படிப்பதோடு நின்றுவிடாமல், எதிர்வினை ஆற்றவும் தவறமாட்டார். பிரபல தமிழ்ப் பத்திரிகை  ஒன்றில், அவரது பிறப்பு குறித்த கருத்து இடம்பெற்றது. இத்தனைக்கும் அது வாசகர் பகுதிதான். அன்றைக்கு ஓய்வு ஒழிச்சலின்றி படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தாலும், அவர் அதைப் படித்ததோடு உடனடியாக மறுப்புக் கடிதமும் எழுதினார்…

`ஆசிரியர் அவர்களுக்கு,

தங்கள் பத்திரிகையின் பிப்ரவரி இதழில் ‘……’ பகுதியில் ‘……’  என்ற வாசகர், நான் கன்னட நடிகை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே பலமுறை பத்திரிகைகளில் நான் தமிழ் நடிகைதான் என்று கூறியிருக்கிறேன். இப்போது மீண்டும் கூறுகிறேன். நான் கன்னட இனத்தவள் அல்ல. தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய், தந்தை மைசூர் நகரில் வசித்துவந்ததால், அங்கு நான் பிறக்க நேர்ந்தது. சிறிது காலம் அங்கு வளர்ந்ததால், கன்னட மொழியை நன்கு கற்றுக்கொண்டேன். அவ்வளவுதானே தவிர, மற்றெந்த வகையிலும் எனக்கும் கன்னடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இப்படிக்கு ஜெ.ஜெயலலிதா'

பரபரப்பான அரசியல் நாள்களில் அவர் தன் மேடைப் பேச்சுகளைத் தயாரிக்க ஆட்களை நியமித்திருந்தார் என்பது உண்மையே. ஆனால், அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே. தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் பல்துறை அறிவுபெற்றிருந்த ஜெயலலிதா, தனது உரைக்கான குறிப்புகளைத் தானே தனது நூலகத்தில் தேடி எடுத்துக் கொடுப்பதே வழக்கம். அவற்றைக் கோப்பது மட்டுமே உதவியாளர்கள் பணி. அதில் இடம்பெறும் ஒவ்வொரு விஷயத்தையும் அவரே தீர்மானிப்பார். பின்னாளில் அவர் எழுதி வைத்து படித்ததெல்லாம் வயதின் காரணமாக ஒரு வசதிக் காகத்தானே தவிர, விவரம் தெரியாதவராக அல்ல.

p88b.jpg

மீண்டும் பெங்களூருக்குப் பயணிப்போம்...

கிறிஸ்துவ அமைப்பால் நடத்தப்படும் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தபோது அம்முவுக்கு கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பள்ளியில் `சேப்பல்' என்று சொல்லக்கூடிய சிறிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், பைபிள் வகுப்புகள் நடப்பது வழக்கம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவியரோடு அம்முவும் அந்த வகுப்புகளுக்குச் செல்வதோடு பைபிள் கதைப் புத்தகங்களையும் வாங்கி வந்து வாசிப்பார்.

அரசியல் தலைவராகப் பின்னாளில் உருவெடுத்த பின்னர் பல மேடைகளில் அவர் சொன்ன கதைகள், பள்ளி நாள்களை பைபிளிலிருந்து படித்தவைதான். “பைபிள் கதைகளையெல்லாம் நான் நன்கு அறிவேன். இந்தக் கதைகள் வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளைப் போதிக்கின்றன. இந்தப் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள் நான் என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்” என முதல்வரான பின், ஒருமுறை மேடையில் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளைப் பிரிந்து, இருந்தாலும், அவர்கள் எந்தக் குறையும் தெரியாமல் வளர்வதில் பெரிதும் அக்கறை காட்டினார் சந்தியா. மாதாமாதம் குழந்தைகளின் செலவுக்கான தொகையை தன் சகோதரருக்கு அனுப்பிவைத்துவிடுவார். பிள்ளைகள் தன்னிடம் வளர்வதுபோன்றே எந்தக் குறையும் இன்றி வளர வேண்டும் என்ற அதீத அக்கறையால், சென்னையிலிருந்து புத்தகங்கள், துணிமணிகள் உள்ளிட்ட சிறுசிறு பொருள்களைக்கூட அனுப்பிவைப்பார். `பாட்டி வீட்டில் பயன்படுத்தும் அரிசி பிடிக்க வில்லை' என்று குழந்தைகள் கருதியதால், நெல்லூரிலிருந்து அரிசி வரவழைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் சந்தியா.
ஆனால், இதெல்லாம் ஜெயலலிதாவுக்கும் ஜெயக்    கு மாருக்கும் தெரியாது. தங்கள் படிப்பு உள்ளிட்ட மற்ற செலவு களை மாமாதான் செய்வதாக அவர்கள் நினைத்துவந்தனர். போதிய வருமானம் இல்லாத சூழலில்தான் தங்களைப் பாட்டி வீட்டில் படிக்க வைக்கிறார் அம்மா என அவர்கள் நினைத்திருந்தனர். இதனால் மாமா விடம் அவசியமானதைத் தவிர, வேறு எதையும் கேட்டுப்பெற மாட்டார்கள் அம்முவும் ஜெயக்குமாரும். அவசிய மானதைக் கேட்டாலுமே கண்டிப்போடுதான் செய்து தருவார் அவர்.

அம்மு படித்த அதே பள்ளியில் மாமாவின் பிள்ளைகளும் படித்து வந்தனர். ஆனால், அவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைத் தன. மாமா, தங்களுக்கு ஒரு கவனிப்பும் தங்கள் பிள்ளைகள் மீது அதீத கவனிப்பும் காட்டியது, அந்த இளம்வயதில் அம்முவையும் அவரது சகோதரரையும் வேதனைப்படுத்தியது என்றாலும், அவர்கள் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

ஒரு சமயம் பள்ளியில் பூகோளத் தேர்வு நடந்தது. அதற்காக வரைபடம் வாங்க வேண்டியிருந்தது. மாமாவிடம் வந்து பணம் கேட்டார் அம்மு. ``வாங்கிக்கலாம் போ!'' என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். மறுநாள் கேட்டபோது ``சும்மா சும்மா ஏன் பணம் கேட்டு தொந்தரவு செய்றே அம்மு, நினைச்சதும் பணம் தருவதற்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?'' என்று மாமா பொரிந்துதள்ள, அம்முவுக்கு அவமானமாகிவிட்டது. அழுகை பீறிட்டு வந்தது. முதன்முறையாக அம்மாவைப் பிரிந்திருக்கும் சோகம் நெஞ்சை அழுத்தியது.

`வெறும் இரண்டணா காசுக்காக மாமா ஏன் இப்படி பேசினார்? அம்மாவாக இருந்தால் இப்படி பேசியிருப்பாரா?' - ஆத்திரம், வேதனை, துக்கம் என மாறி மாறி உணர்ச்சிகள் நெஞ்சில் அலைமோத, அழுத கண்ணீரோடு உறங்கிப்போனார் அம்மு. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்தது அம்முவுக்குச் சாதகமாகவே முடிந்தது.

எப்படி..?

(அம்முவின் கதை அறிவோம்!)


மனதில் உறுதி வேண்டும்!

``மன உறுதி உடையவர்களால்தான் நினைத்ததை, நினைத்தபடி அடைய முடிகிறது. மன உறுதியுடையவர்கள் துன்பத்தில் துவளுவதில்லை. மன உறுதி உடையவர்களால்தான் பிறருக்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கிவிடுகிறது. இதை மனதில் பதிய வைத்துக்கொண்டால், நீங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம். மன உறுதி என்றவுடன், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...

அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் `அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார். அந்த உரை முடிந்தவுடன், `யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை.

உடனே அந்த பாதிரியார், `நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத்தான் விருப்பமா?' என்று சிறுவனிடம்  கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், `நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை.`நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்றான்.

`இந்தச் சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?' என்று பாதிரியார் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், `இங்கே கறுப்பு இன மக்களை நாயைவிடக் கொடுமையாக நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியினால்தான் முடியும்' என்று அமைதியாகக் கூறினான். அந்தச் சிறுவன்தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கனைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்!''

- 2013-ம் ஆண்டு சென்னையில் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை இது.

http://www.vikatan.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

துயரம் துரோகம் நம்பிக்கைஎஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்

 

ஜெயலலிதா தன் இறுதி நாள்களில் அப்போலோ மருத்துவமனையில் தன் ஆயுளை நீட்டிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் ரத்த உறவுகள் யாரும் இல்லை. சொந்த அண்ணன் பிள்ளைகள்கூட அருகில் இருக்க முடியவில்லை. அவரது இறுதிச்சடங்கின்போது நடைபெற்ற சம்பிரதாயங் களைக்கூட அவரது ரத்த உறவுகள் ‘சம்பிரதாயமாகவே’ செய்து முடிக்க நேர்ந்தது. இறுதி நாள்களில் அத்தனை மனஅழுத்தத்தில் இருந்தபோதும்கூட தனது  சொந்த அண்ணன் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அடையவில்லை அவர். உறவுகளை முற்றாக ஒதுக்கிவைத்து உதவியாக வந்த ஒரே ஒரு நட்போடு, தன் குடும்பத்தை அவர் சுருக்கிக்கொண்டதற்கு பெரிய உளவியல் காரணங்களைத் தேட வேண்டியதில்லை. கருத்து தெரியவந்த நாள்முதல் உறவினர்களால் கசப்பான அனுபவங்களுக்கு ஆளானவர்கள் ஜெயலலிதாவும் அவரது தாய் சந்தியாவும்.

1971-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ஒருநாள் சந்தியா ரத்த வாந்தி எடுத்தார். பதறிய வேலையாட்கள், பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால், ‘`ஜெயலலிதாவுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டாம்’’ எனச் சொல்லிவிட்டார் சந்தியா. இரவு வீடு வந்தபின் தகவல் தெரிந்து பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தார் ஜெயலலிதா. தட்டுத்தடுமாறி அன்று தன் மகளுக்குச் சந்தியா சொன்ன சில அறிவுரைகளில் முக்கியமானது, “யாரையும் எதிலும் முழுமையாக நம்பிவிடாதே... நண்பர்களை விடவும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக இரு” என்பதுதான்.

p88b.jpg

ஜெயலலிதாவின் வாழ்வில் ஒரு கொடிய நாளாக நவம்பர் 1 மாறிப் போனது. அன்றுதான், சிகிச்சை பலனின்றி சந்தியா மரணமடைந்தார். ‘உறவுகளை நம்பாதே’ என்ற தாயின் அறிவுரைக்கு ஆணிவேர் என்னவென்று ஜெயலலிதா தேடிச்செல்லவில்லை.

அப்போது போயஸ் கார்டன் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்ட சமயம். சந்தியாவின் இறப்புக்குப்பிறகு ஜெயலலிதாவுக்குத் துணையாக இருப்பதற்காக  இரண்டு சித்திகள், ஒரு சித்தப்பா இன்னும் சில உறவினர்கள் நிரந்தரமாக அவருடன் போயஸ் கார்டன் வீட்டில் வந்து தங்கியிருந்தனர்.

தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல், வீடே கதி என ஜெயலலிதா அடைந்து கிடந்த அந்நாள்களில் ஒருநாள், திரையுலக பிரமுகர் ஒருவர் துக்கம் விசாரிக்க வந்தார். அவரைப் பேசி அனுப்பிவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தன் அறைக்குப் படியேறியவருக்குப் படிகள் இரண்டிரண்டாகத் தெரிந்தன. கால்கள் நடுங்கின. அப்படியே மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார். வேலையாட்கள் பதறினர். சித்திகள் இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.

சித்தப்பா ஊரில் இல்லாததால் வேலையாட்கள் சமயோசிதமாக எம்.ஜி.ஆருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். மருத்துவர் ஒருவரை உடனே ஜெயலலிதாவின் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, விரைந்து வந்தார் எம்.ஜி.ஆர்.  ‘மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது நல்லது’ என டாக்டர் சொன்னதால், உடனடியாக ஜெயலலிதாவை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள்  நடந்தன. மயங்கிய நிலையில்  உள்ள  ஜெயலலிதாவு டன் செல்ல நிச்சயம் பெண் உறவினர்கள் வேண்டிய நிலை. ஆனால், மாடிக்குச் சென்ற சித்திகள் இறங்கி வரவே இல்லை. நேரம் கடந்தால் ஆபத்து என மருத்துவர் எச்சரிக்கை செய்தபின் வேலைக் காரர் ஒருவர் மேலே போய் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். “இரண்டு பேரும் ஏதோ சத்தமாக சண்டை போட்டுக்கிறாங்க… `சீக்கிரம் வாங்கம்மா’ன்னு கூப்பிட்டதுக்கு, ‘உன்வேலையைப் பாத்துக்கிட்டுப் போ’ன்னு விரட்டிட்டாங்க’’ என்றார்.

எம்.ஜி.ஆருக்குக் கடும் கோபம். ``பொண்ணு மயங்கிக் கிடக்கும்போது இவங்களுக்கு அப்படி என்ன முக்கியமாப் போச்சு மேலே...’’ என, தானே விறுவிறு வென மாடிக்குச் சென்றார். அங்கே ஜெயலலிதாவின் சித்திகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, கோபத்தின் உச்சிக்கே போனார்.

p88a.jpg

ஆம், ஜெயலலிதா ‘இல்லாதபோது’ போயஸ் கார்டன் வீட்டின் சாவியை யார் வைத்துக்கொள்வது என்ற பட்டிமன்றம் தான் அவர்களுக்கிடையே அவ்வளவு நேரமாக அங்கு நடந்துகொண்டிருந்தது. அக்கா மகளின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிற சூழலில் வீட்டின் கொத்துச் சாவி பற்றிக் கவலைபட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். அவர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு வீட்டின் சாவியை வாங்கிய எம்.ஜி.ஆர், தானே ஒவ்வோர் அறையாகப் பூட்டிவிட்டு ஜெயலலிதாவின் சித்திகளை கீழே வரச் சொல்லி உத்தரவிட்டார். மறுநாள், மருத்துவமனையில் ஜெயலலிதா கண்விழித்துப் பார்த்தபோது சிரித்தபடி நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவின் கையில் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைத்து, “அம்மு, இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும். உன்கூட இருக்கிறவங்களை நீ சொந்தக்காரங்களா பார்த்தாலும் அவங்கப் பார்வைக்கு எப்போதும் நீ ஒரு சொத்து போலத்தான். எப்போதும் யாரிடமும் கொஞ்சம் விழிப்பா இருக்கணும்…’’ என ஒரு தாயின் பரிவோடு சொல்லிவிட்டுக் கிளம்பினார் எம்.ஜி.ஆர். எண்ணிப்பார்த்தால், ஜெயலலிதா யார் யாரையெல்லாம் ஆத்மார்த்தமாக நேசித்து அன்பு செலுத்தினாரோ அந்த ரத்த உறவுகள், அனைவருமே ஏதோ ஒருநாளில் அவருக்கு கண்ணீரைப் பரிசாகத் தந்தவர்களே..!

ஜெயலலிதா உறவுகளை வெறுக்க இதுதான் காரணம். ஆனால், அம்மாவிடம் இந்த அறிவுரையைப் பெறுவதற்கு முன்பே நேரிடையாக இதை உணர்ந்தது பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான். அந்த அனு பவத்தைத் தந்ததும் அவரது மாமாவேதான்.

சந்தியா, புகழ்பெற்ற சினிமா நடிகை யாக இருந்ததால், பிள்ளைகளைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வளர்க்க முடிய வில்லை. எனவே, பெங்களூருவில் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் அம்முவையும் ஜெயக்குமாரையும் வளர்த்து வந்தார். பராமரிப்பு மற்றும் படிப்புச் செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அம்முவின் மாமாவிடம் ஒப்படைத்திருந்தார்.

அம்முவின் மாமாவுக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களும் அம்மு படித்து வந்த பிஷப் காட்டன்ஸ் பள்ளியில்தான் படித்து வந்தார்கள்.

பிள்ளைகளுக்குச் சிறு குறையும் இருக்கக் கூடாது என்று ஆலிவர் பேனா முதல் நெல்லூர் அரிசி வரை எதை வாங்கி அனுப்பினாலும் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் சேர்த்தே அனுப்பிவைப்பார் சந்தியா.

p88.jpg

ஆனால் நடந்ததோ வேறு…

சந்தியா அனுப்பும் பணத்தைத் தனது சொந்த செலவுகளுக்கே பயன்படுத்திக்கொண்டார் அம்முவின் மாமா. சின்னச் சின்ன சாதாரணமான செலவுக்குக்கூட அம்முவுக்கும் அவரது சகோதரருக்கும் பணம் தரமாட்டார். சாக்லேட் வாங்க, அரை அணா கேட்டாலும் கோபப்படுவார் அவர். இந்த நேரத்தில்தான் பூகோளப் பாடத்துக்காக, வரைபடம் வாங்க இரண்டு அணா பணம் தேவைப்பட மாமாவிடம் கேட்டார் அம்மு.  ஆனால்,  அவரோ கடுகடுவென பேசி அவமானப்படுத்திவிட்டார். கூடவே, அவரது மூத்த மகளும் அம்முவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, ``எங்களுக்குச் செலவு செய்யவே என் தந்தை பெரும்பாடு படுகிறார். நீங்க ரெண்டு பேரும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிக் கஷ்டத்தை தரப்போறீங்களோ...” எனப்பேசி அம்முவை இன்னும் அழவைத்தாள். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவில், அம்முவுக்கு நாட்டியத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ‘நாட்டிய உடை வாங்க செலவு செய்ய வேண்டுமே’ என நாடகத்திலேயே நடிக்கக்கூடாது என கறார் உத்தரவு போட்டார் மாமா. இந்த உத்தரவினால், அம்முவின் சிறிய இதயம் நொறுங்கிவிட்டது. ‘உண்மையிலேயே நாம் ஓர் ஏழை. எங்களைக் காப்பாற்ற வழி இல்லாமல்தான் அம்மா இங்கு அனுப்பிவிட்டார்!’ என்ற எண்ணத்தில் அப்போ தெல்லாம் கூட அமைதியாக இருந்த அம்முவால், மேப் விவகாரத்தில் ஏற்பட்ட அவமானத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை.

இந்த நேரத்தில், சந்தியா தன் குழந்தைகளைப் பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார். “மம்மி, இனி போகும்போது எங்களுக்குக் கொஞ்சம் பாக்கெட் மணி தர்றியா... படிப்புச் செலவுக்கு ஆகும்!” என பரிதாபமாகக் கேட்டுவைக்க, சந்தியாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ``பாக்கெட் மணிக்காக தினமும் உனக்குப் பணம் தரச் சொல்லி இருந்தேனே, அதையெல்லாம் என்ன செய்தாய்?’’ என்று அதிர்ச்சி குறையாமல் அவர் கேட்க, நடந்த அனைத்தையும் மழலை மொழியில் சொல்லி முடித்தார் அம்மு.

தன் குழந்தைகளிடம் இப்படி நடந்து கொண்ட நன்றிகெட்ட அந்த மனிதரை திட்டித்தீர்த்த சந்தியா, ‘இனி என்ன ஆனாலும் சரி... இனி ஒரு நிமிடமும் என் குழந்தைகள் இங்கிருக்காது’ என குழந்தைகளின் பெட்டி படுக்கைகளைத் தயார்படுத்தி காரில் வைத்தார்.

உறவினர்கள் பற்றிய கசப்பான அனுபவங் களுக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது இந்த பெங்களூரு சம்பவம்தான்.

மாமாவிடமும் மற்றவர்களிடமும் அம்மா கோபப்பட்டதைப் பார்த்த அம்முவுக்கு, ‘இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் அம்மா தங்களை பெங்களூருக்குத் திருப்பி அனுப்ப மாட்டார்’ என்ற உறுதியான எண்ணம் மனதில் விழுந்தது.

1958-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு காலைப்பொழுதில் பெங்களூருவில் இருந்து கிளம்பியது சந்தியாவின் கார். காரின் பின்சீட்டில் சந்தியாவை ஆளுக்கொரு புறம் கட்டிப்பிடித்தபடியே விவரிக்கமுடியாத மகிழ்ச்சியில் பயணம் செய்தனர் அம்முவும் ஜெயக்குமாரும்.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

சினிமா மீதான வெறுப்புஎஸ்.கிருபாகரன் - படம் உதவி:ஜெயபாபு

 

ஜெயலலிதாவின் வாழ்வில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று பெங்களூரு. அவர் மறக்க நினைத்த இடங்களில் ஒன்றும் பெங்களூருதான். ஆம்... 1958-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தன் 10-வது வயதில் எந்த நகரத்திலிருந்து மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் சென்னைக்குத் திரும்பினாரோ, அதே நகரத்துக்குப் பல ஆண்டுகளுக்குப்பின் பயமும் பதற்றமுமாக ஒருவித பரிதவிப்பான மனநிலையில் சைரன் காரில் செல்ல வேண்டியதானது. இந்த நிலை உருவாகக் காரணம் நிச்சயம் விதியல்ல... அவரேதான்!   

p78a.jpg

அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி வந்த அம்மு, மனதுக்குள் மாமாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தார். கெடுபிடியான மனிதராக அவர் இல்லாது போனால் சென்னை திரும்பியிருக்க முடியாதல்லவா?!

தி.நகர், மாசிலாமணி தெருவை அடைந்த போது அம்முவுக்கும் அவரது சகோதரருக்கும் கொள்ளை சந்தோஷம். சென்னையின் பிரபல  பள்ளியான சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு சேர்க்கப்பட்டார். ‘குழந்தைகள் பெங்களூருவில், தான் நினைத்தபடி வசதியாக இருக்கவில்லை. சென்னையில் அவர்களை மிக வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும்; கேட்டதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் சந்தியாவின் மனதில் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார். அம்முவைத் திரும்பவும் நாட்டிய வகுப்புக்கு அனுப்பும் முடிவும் அதில் ஒன்று.

பாலசரஸ்வதி, கமலா, சரஸா உள்பட பல நாட்டிய மேதைகளும் சந்தியாவின் நினைவில் வந்துபோனார்கள். இவர்களில், ‘தன் வீட்டிலேயே மகள் நாட்டியம் கற்க வேண்டும்’ என்ற சந்தியாவின் விருப்பத்துக்கு இசைந்தவர் சரஸா மட்டுமே. இந்த முறை அம்மு முரண்டு பிடிக்கவில்லை. p78d.jpg

பெங்களூருவிலேயே நாட்டிய ஆசிரியர் லலிதா துரையிடம் சில காலம் நாட்டியம் பயின்ற அம்மு, ஒரு பிறந்தநாளின்போது உறவினர் புடைசூழ ‘நல்ல பெண்மணி அவளே நல்ல பெண்மணி’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து அத்தனை பேரின் பாராட்டுகளையும் பெற்றார். சந்தியாவின் முகத்தில் அத்தனை பெருமிதம். அப்போதே நடனத்தின் மீது ஒருவித காதல் பூத்துவிட்டது அம்முவின் மனதில். நடனத்தில் மட்டுமல்ல, அம்மு படிப்பிலும் சுட்டியாக இருந்ததால் எல்லா ஆசிரியர்களுக்கும் அவரைப் பிடிக்கும். ஆனால், அம்முவுக்குப் பிடித்த ஒரே ஆசிரியை சிஸ்டர் செலின். அயர்லாந்தைச் சேர்ந்த அவர் அம்முவின் ஆங்கில ஆசிரியை. கண்டிப்புக்குப் பதில் கனிவு, அதட்டலுக்குப் பதில் அன்பு, அடிக்குப் பதிலாக அரவணைப்பு... இப்படி ஆசிரியைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் அவர்.

எத்தனை வருத்தங்களுடன் பள்ளிக்குள் நுழைந்தாலும் செலினைப் பார்த்துவிட்டால் உற்சாகம் பிறக்கும் யாருக்கும். மாணவிகளை விரட்டிப்படிக்கச் சொல்லும் ரகமில்லை அவர். சர்ச் பார்க் பள்ளி, அம்முவின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தியது. அறிவை விசாலமாக்கியது. என்றாலும், அவ்வப்போது மன சஞ்சலங்களையும் உண்டுபண்ணியது. காரணம் சில மாணவிகள். டாக்டர்,  இன்ஜினீயர், பெரும் தொழிலதிபர் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் அந்தப் பள்ளியில் ஒரு நடிகையின் மகள் என்பதால், அம்முவிடம் வித்தியாசம் காட்டினார்கள் சில மாணவிகள். வைஜெயந்திமாலா, பானுமதி, அஞ்சலிதேவி எனக் கதாநாயகிகளைக் கொண்டாடும் அந்த மாணவிகளுக்கு இரண்டாவது கதாநாயகியான சந்தியா மீது காரணமின்றி ஒருவித வெறுப்பு இருந்தது. குறும்பு மாணவிகளான அவர்கள், அம்மு கடந்து செல்கிறபோது வேண்டுமென்றே சந்தியா நடித்த படத்தைக் குறிப்பிட்டு, `என்னடி, சரியான அழு மூஞ்சி கேரக்டர். அழறதுக்கே சம்பளம் கொடுத்திருப்பாங்க போல... சொதப்பலான நடிப்பு' எனக் கிண்டல் செய்வார்கள். அதைக்கேட்கும்போது அம்முவுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டுவரும். ஆனால், அவர்கள் முன் அழக் கூடாது என்ற உறுதியில், சமாளித்தபடி நகர்ந்து விடுவார். தன்னை அவமதிக்கிறவர்கள் முன் அழுவது எப்போதும் அம்முவுக்குப் பிடிக்காத குணம். ‘அம்மா இரண்டாம் நாயகியாக இருப்பதால்தான் ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஒருவேளை கதாநாயகியாக இருந்தால், இவர்களே ஆட்டோகிராஃப் கேட்டு வரிசையில் நின்றிருப்பார்கள்’ என மனதுக்குள் முணுமுணுத்தபடி வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் சொல்லி, `மம்மி நீ சினிமாவில் ஆக்ட் பண்றதை நிறுத்திடு' என அழுது கெஞ்சுவார்.

மகளின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்துச் சிரிப்பார் சந்தியா. ‘நான் அழுது நடிக்கிறேன்னுதானே உன் ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க... அசிங்கமா நடிக்கிறேன்னு சொல்லலையே... போய்ப் படி அம்மு” என்று மகளை சமாதானப்படுத்துவார் சந்தியா.  

p78b.jpg

அக்காலத்தில் அம்முவுக்கு அம்மாவை விட அதிகம் பிடித்த நடிகை பானுமதி. அவரது படங்கள் ரிலீஸானால் சொந்தச் செலவில் தோழிகளைக் காரில் அழைத்துச்செல்வார். அத்தனை தீவிர ரசிகை பானுமதிக்கு. படம் முடிந்து வீட்டுக்கு வந்தபின்னும் அம்மு, பானுமதியின் நடிப்பைச் சிலாகிப்பதைக் கண்டு பலமுறை பொய்க்கோபம் கொண்டிருக்கிறார் சந்தியா. அம்மாவைக் கோபமூட்டும் இந்த விளையாட்டு அம்முவுக்குப் பிடித்த ஒன்று.

தான் அம்மாவின் அழுகை நடிப்பை விரும்பாவிட்டாலும், அடுத்தவர் அதைக் கேலி செய்வதை  அம்மு என்றில்லை, எந்த மகளும் விரும்பமாட்டாரல்லவா? சந்தியா குறித்த மாணவிகளின் கிண்டல் ஒருநாள் எல்லை மீறிப்போனது. 

படப்பிடிப்பு இல்லாத ஒருநாள் அம்முவைத் தானே காரில் பள்ளிக்கு வந்து விட்டுச்சென்றார் சந்தியா. அப்போது மாணவிகள் சிலர் சந்தியாவைப் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். மதிய இடைவேளை வரை அது தொடர்ந்தது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்துப் பொங்கி எழுந்துவிட்டார் அம்மு.

விஷயம் இதுதான்... அண்ணாசாலையில் இன்றைக்கு ஜெமினி மேம்பாலம் உள்ள இடத்தில் அன்றைக்கு ஒரு பெரிய சினிமா பேனர் வைக்கப்பட்டிருந்தது. அரைகுறை ஆடையில் கதாநாயகி  காட்சி தந்த அந்த போஸ்டர் போவோர் வருவோரின் கண்களை உறுத்தியபடி இருந்தது. போஸ்டரில் இருந்தவர் சந்தியா என்பதே மாணவிகளின் கிண்டலுக்குக் காரணம்.

`உன் அம்மா, யார் தோளிலேயோ ஒய்யாரமா சாஞ்சுக்கிட்டு இருக்காங்கடி. பார்க்கலையா நீ?' என்று அம்மாணவிகள் கேட்கவும், அழுகை பீறிட்டது அம்முவின் கண்களில். அதை அடக்கியபடி, ‘அது என் அம்மா இல்லை... அவங்க அப்படியெல்லாம் நடிக்க மாட்டாங்க’ என்று ஆவேசமாகக் கத்தினார் அம்மு. அம்மாவின் மீது அதீத நம்பிக்கை அம்முவுக்கு. எவ்வளவோ சொல்லியும் கேலி குறையவில்லை. அவமானமும் அழுகையுமாகப் பாதி வகுப்புடன் வீட்டுக்குப் புறப்பட, வகுப்பாசிரியையிடம் அனுமதி கேட்டார். 

p78c.jpg

ஏதோ விபரீதம் நடந்ததைப் புரிந்துகொண்ட வகுப்பாசிரியையான சிஸ்டர் செலின், அம்முவை ஆசுவாசப்படுத்திக் காரணம் கேட்க, நடந்தவற்றைச் சொன்னார் அம்மு. நேரே வகுப்பறைக்கு வந்தவர், ‘படிக்கிற வயசுல சினிமா போஸ்டரைத்தான் பார்த்துட்டிருக்கீங்களா?’ என மாணவிகளைக் கண்டித்தார். பிரச்னை அப்போதைக்கு முடிந்தாலும் அம்மு சமாதானமாகவில்லை. மாலையில் வீடு திரும்பியதும் காரை எடுக்கச்சொல்லித் திரும்பத் திரும்ப அந்த போஸ்டரைப் பார்த்தார். அது சந்தியாவேதான். ஆனால், அம்முவின் அம்மா அல்ல... பிரபல இயக்குனர் சாந்தாராமின் ‘ஸ்திரீ’ பட நாயகியான வட இந்திய நடிகை சந்தியாதான் அவர்!

மறுநாள் பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாக சிஸ்டர் செலினின் அறைக்குச் சென்று விவரத்தைச் சொன்னார். தாயின் களங்கத்தைப்போக்கிவிட்ட மகிழ்ச்சியில் இருந்த அம்முவை ஆசீர்வதித்த செலின், `ஐம் சோ சாரி மை டியர் ஸ்வீட் சைல்ட், உன் தாய் மீது உனக்கு நம்பி்க்கை இருந்தும் அவதூறு சொன்னவர்களிடம் நிரூபிப்பதற்காக இத்தனை சிரமப்பட்டிருக்கிற உன்னைப் பாராட்டுகிறேன். உன் பக்கம் நியாயம் இருப்பது உண்மையானால், நீ யாருக்கும் பயப்படத் தேவையில்லை. விளக்கம் சொல்வதற்காக நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க வேண்டியதில்லை. உள்நோக்கத்துடனான ஒருவரின் செயலுக்கு எதிர்வினையாற்ற நினைத்தால், அதற்கு நம் காலம் முழுவதும் செலவிட வேண்டியிருக்கும். இனி அவற்றைப் புறந்தள்ளிவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்து' என அழகிய ஆங்கிலத்தில் சிஸ்டர் செலின் கூறிய வார்த்தைகள் ஜெயலலிதாவின் மனதில் அழுத்தமாகப் பதிந்தன. பிற்காலத்தில் திரையுலகம், அரசியல் என, தான் பயணித்த துறைகளில் எல்லாம் ஜெயலலிதா இந்தக் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

அம்முவை அழவைத்த மாணவிகளிடம் செலின், ‘நடிப்பு என்பது சாதாரண விஷயமல்ல... சாதாரண ஸ்கூல் டிராமாவில் நடிக்க நீங்கள் எத்தனை நாள் ஒத்திகை பார்க்கிறீர்கள்? அப்படியிருந்தும் மேடையில் நடிக்கத் தெரியாமல், அசடு வழிகிறீர்கள். சில நேரம் நடித்து முடிப்பதற்குள் உதறல் எடுத்துவிடுகிறது. அப்படியானால், சினிமா நடிகர்கள் எவ்வளவு சிரமப்படறாங்க... இனி யாரையும் இப்படி பரிகாசம் செய்யாதீர்கள்' என மாணவிகளுக்கு அறிவுரை சொன்னார்.

நடந்த சம்பவத்துக்காக அம்முவிடமும் மன்னிப்பு கேட்டனர் அந்த மாணவிகள். அம்முவின் வாழ்வில் அழுத்தமாகப் பதிந்தது இந்த சம்பவமும் அதில் கற்ற பாடமும். ஆனாலும், இந்தச் சம்பவத்துக்குப்பிறகு அம்முவுக்கு சினிமா மீது இருந்த வெறுப்பு இன்னும் கூடியது. சினிமா ஆட்கள் தன் வீட்டுக்கு வருவதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவித்தார். தாய் சந்தியாவையும் ஒருநாள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்யலாம் என நம்பினார்.

காலம் எழுதிய திரைக்கதைக்கு வசனம் பேசவேண்டிய கதாபாத்திரங்கள்தானே நாம்? ஜெயலலிதாவுக்கு சினிமா மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டிருந்த அதே நேரம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையாகப்போகிற அம்மு என்கிற ஜெயலலிதாவுக்காக ஓர் இருக்கையை ஒதுக்கிக் காத்திருக்க ஆரம்பித்தது காலம்!

(அம்மு கதை அறிவோம்!)

http://www.vikatan.com/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

 

 

“சந்தியா அடுத்தடுத்துப் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இன்றுபோல சினிமா சங்கங்களின் கட்டுப்பாடுகள் அன்றைக்குக் கிடையாது. நடிகர் - நடிகைகள் தொழில்சிரத்தையுடன் எந்த நேரத்திலும் நடித்துக்கொடுக்க முன்வருவார்கள். அதனால் இரவும் பகலும்கூட தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும்.  சில நாள்கள் சந்தியா வீட்டுக்கு வராமலேயேகூட இருந்திருக்கிறார். அம்முவையும் அவர் சகோதரரையும் மாதவனும் மற்றவர்களும் சிரத்தையுடன் பார்த்துக்கொள்வார்கள். ‘அம்மாவைப் பார்க்க முடியவில்லை...’ என்கிற வருத்தமே எழாத அளவுக்கு அம்முவும் ‘பிஸி மாணவி’யாக இருந்தார்.    

p58a.jpg

சங்கீத வகுப்பு, தமிழ்ப்பாடத்தில் சிறப்புப் பயிற்சி, உடற்பயிற்சி, நடன வகுப்பு, ஹோம்வொர்க் என காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பரபரப்பாகவே இருப்பார் அம்மு. ஒருமுறை, பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் அம்முவுக்கு முதலிடம் கிடைத்தது.  அதற்குப் பரிசாக, ‘ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகள்' என்கிற தொகுப்பு நூல் தரப்பட்டது.

ஆசிரியர்களும் சக மாணவிகளும் பாராட்டித் தள்ளினாலும், அம்முவின் மகிழ்ச்சி என்பது அம்மாவின் பாராட்டுக்குப் பின்புதானே முழுமையடையும்? தான் பரிசுபெற்ற கட்டுரையை அம்மாவுக்குப் படித்துக்காட்ட ஆவலுடன் அன்று வீட்டுக்கு வந்தார் அம்மு. நள்ளிரவு தாண்டியும் அம்மா வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதனால், அயர்ந்து தூங்கிவிட்டார். காலையில் ஆசை ஆசையாக அம்மாவின் அறைக்குச் சென்றவருக்கு, அப்போதும் ஏமாற்றம். விடியற்காலையில் வீட்டுக்கு வந்த சந்தியா, மீண்டும் படப்பிடிப்புக்காக உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டதாக மாதவன் சொன்னார். கட்டுரையின் நகலைக் கையில் வைத்தபடி மூன்று நாள்கள் வீட்டை வளைய வந்தார் அம்மு. அப்படியும் அம்மாவைக் காண முடியவில்லை. கட்டுரைத்தாள் மட்டும் அல்ல... அம்முவின் மனமும் கசங்கிப்போனது. p58b1.jpg

நான்காவது நாள்... மாதவன் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், ஹாலின் நடுவே சோபாவைப் போட்டு, அதில் படுத்துக் கொண்டார். அனைவரும் உறங்கிய பின்னும் அம்மு உறங்கவில்லை. இன்று அம்மாவிடம் கட்டுரையைப் படித்துக்காட்டிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

நள்ளிரவு தாண்டிய பிறகே சந்தியா வீட்டுக்கு வந்தார். உள்ளே நுழைந்து ஹால்  விளக்கைப் போட்டதும், அம்மு சோபாவில் படுத்திருப்பது பளிச்செனத் தெரிந்தது. “ஏம்மா சாப்பிட்டியா? ஏன் இங்கே வந்து படுத்திருக்கே?’’  என்று ஆதூரத்துடன் கேட்டார். எந்தப் பதிலுமில்லை மகளிடம். மகளை எழுப்பி மடியில் கிடத்திய மறுநிமிடம் அம்மு விடமிருந்து பெரும் அழுகை வெடித்துப் புறப்பட்டது.    

p58c.jpg

“எங்களை ஏம்மா இப்படித் தவிக்க விடறே... மூணு நாளா உன்னைப் பார்க்கலை. நீயும் எங்களைப் பார்க்கலை. என்னதான் வேலை இருந்தாலும், எங்களைப் பார்க்காம இருக்க எப்படி உன்னால முடியுது?'' அழுகையும் ஆதங்கமுமாகப் பேசினார் அம்மு. சட்டென சந்தியாவின் கண்களில் நீர் தளும்பி விட்டது. சினிமாவில் கூட தன் அம்மா அழுவதைப் பார்க்க விரும்பாத அம்மு, முதன்முறையாக நேரில் கண்ணீர் சிந்திய தாயைக் கண்டு நெகிழ்வும் தவிப்புமான ஒரு நிலைக்குப் போனார்.

``என் வாழ்க்கையே நீங்க ரெண்டு பேரும்தான் அம்மு. எனக்கு மட்டும் உங்களைப் பார்க்காம இருக்க முடியுமா என்ன? ராத்திரி நான் லேட்டா வரும்போது நீ அசதியா தூங்கிக்கிட்டிருப்பே... மறுநாள், உனக்கு நிறைய வேலைகள் இருக்கு மேங்கறதால உன்னை எழுப்பித் தொந்தரவு பண்ண மனசு வராது. காலையில் நீ அசந்து தூங்கற அழகை பாத்துட்டு கிளம்பிருவேன். உனக்காக இனிமே தினமும் சீக்கிரமே வரேன்” என மகளை அணைத்து முத்த மிட்டார் சந்தியா.

கட்டுரைப் போட்டி யிலே தனக்கு முதல் பரிசு கிடைத்த தகவலைத் தாயிடம் சொல்லிப்  பூரித்த அம்முவுக்கு, தாயின் சோர்வான முகம் கருணையை ஏற்படுத்தியது. ``மம்மி, நீ போய் மேக் அப் கலைச்சுட்டு, முகம் கழு விட்டு வந்து சாப்பிடு. பிறகு நான் படிச்சுக்காட்டுறேன்’’ என்றார்.

சந்தியாவுக்கு இனி ஒரு நிமிடமும் மகளைக் காக்கவைப்பதில் விருப்பமில்லை. ``இல்லை அம்மு, மூன்று நாள்களாக எனக்காகக் காத்திருந்தது போதும். இப்பவே படி, அதைக் கேட்டுட்டுத்தான் குளிக்கப்போவேன்” என்றார்.

கட்டுரையை முழுவதுமாகப் படித்து முடித்ததும் அம்முவைக் கட்டியணைத்துக் கொண்டார் சந்தியா. கட்டுரைக்குப் பரிசாக அவர் மகளின் கன்னங்களில் கணக்கில்லாமல் முத்தங்களைப் பதித்தார். பின்னிரவு 3 மணிக்குத்தான் தாயும் மகளும் படுக்கைக்குச் சென்றார்கள். அம்முவுக்குக் கிடைத்த கணக்கில்லாத முத்தத்துக்குக் காரணம், அந்தக் கட்டுரையின் தலைப்பு. மகளின் பார்வையில் ஒரு தாயின் குணநலன்களைச் சொல்லும் அந்தக் கட்டுரைக்கு அம்மு வைத்திருந்த தலைப்பு,
’What mummy means to me?’

இயல்பான வாழ்வில், தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களும், அவர்களால் உருவாகும் அனுபவங்களும்தான் நம்மை நெறிப்படுத்துகின்றன. அனுபவங்களினால் இப்படி பாடம் கற்றுக்கொள்கிறவர்கள் ஒரு ரகம் என்றால், மற்றவர்களுக்குப் பாடம் கற்றுத்தரச் களம் இறங்கிவிடுபவர்கள் இன்னொரு ரகம். ஜெயலலிதா இதில் எந்த ரகம் என்பதில் எல்லா காலங்களிலும் குழப்பங்களையே தந்திருக்கிறார்.

சென்னைக்கு முதன்முறையாக வந்தபோது அடையாறு காந்தி நகரில் சில காலம் வசித்தது சந்தியா குடும்பம். அண்ணன் பாப்பு (ஜெயலலிதாவை `அம்மு' என வீட்டில் அழைப்பதுபோல ஜெயக்குமாருக்கு `பாப்பு' எனச் செல்லப்பெயர்) ஜெயலலிதாவை விளையாட்டு விஷயங்களில் ஒதுக்கியே வைப்பார். எப்போதும் கிரிக்கெட் மட்டையும் கையுமாகத் திரியும் ஜெயக்குமாருடன் தானும் விளையாட வருவதாக  ஜெயலலிதா பல
முறை கெஞ்சியிருக்கிறார். ஆனால், ‘நீ வீட்டில் புத்தகம் படி, போதும். ஆம்பளை போல இதுக்கெல்லாம் ஆசைப்படாதே’ எனக் கூறி, அம்முவின் ஆசையை முளையிலேயே கிள்ளிவிடுவார். அரிதாக சந்தியாவின் பரிந்துரையின்பேரில் ஜெயலலிதாவை விளையாட்டில் சேர்த்துக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. தன்னைப் பெண் என ஒதுக்கும் அண்ணன் மீது அம்முவுக்குக் கோபம் உண்டு.  அவனை வெறுப்பேற்றவாவது தான் ஆட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என நினைத்தோ என்னவோ... பிடிவாதமாகப் பலமுறை அண்ணனுடனும் அவரது நண்பர்களுடனும் கிரிக்கெட் ஆடுவார்.

தங்கை தன் பேச்சைக் கேட்காமல், விளையாட அடம்பிடிப்பது பாப்புவுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள், அதற்குப் பழிதீர்த்துக் கொண்டார். பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜெயக்குமார் தனக்கு வந்த பாலில் சிக்சர் அடிக்க... அந்தப் பந்து, நேரே பாய்ந்து வந்து அம்முவின் மூக்கின்மேல் பலமாகப்பட்டது. அலறித் துடித்தார் அம்மு. இதனால் ஏற்பட்ட வீக்கம் ஒருவாரத்துக்கு மேல் இருந்தது. இன்னுமொரு முறை கில்லித்தாண்டு விளையாட்டின்போதும் ஜெயக்குமார்
அடித்த கூரான குச்சி, அம்முவின் கண்களில் வந்து பலமாக மோத... கண் வீங்கிப் பெருத்துவிட்டது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வு தேவைப்பட்டது. இன்னொரு முறை பள்ளியில் கண்ணாடி பாட்டில் உடைந்து அவரது வலது கன்னத்தில் விரல் நுழையும் அளவு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. பதறியது சந்தியா குடும்பம்.  

p58d1.jpg

அம்மு அழகில் கண்திருஷ்டி பட்டுவிடக் கூடாது என சந்தியா திருஷ்டி மை வைக்கும் இடத்தில்தான் இந்தப் பெரிய காயம். அது சரியாக சில மாதங்கள் பிடித்தன. மூக்கில் பட்ட அடியால், அதன் கூர்மை சற்று குறைந்தது. வலது கன்னத்தில் விழுந்த ஓட்டை பின்னாளில் குணமாகிவிட்டாலும், ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரை அந்தத் தழும்பு லேசாகத் தெரியும். 11 வயதில் கண்ணில் ஏற்பட்ட காயம் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரையிலும் தொந்தரவு கொடுத்தது. ஆம்... பின்னாளில் வெளிச்சம் நேரடியாக கொஞ்சம் கண்ணில் பட்டாலோ, காற்று பலமாக வீசினாலோ அவரது கண் சட்டென கலங்கிவிடும். இந்தத் தொந்தரவைத் தவிர்க்கவே, பிற்காலத்தில் மீடியாக்களைச் சந்திப்பதை அவர் தவிர்த்தார். அதையும் மீறி, பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரை நோக்கி ஃப்ளாஷ் வெளிச்சம் பாய்ந்தால், கோபம் அடைவார். அரசியல் மேடைகள், பிரசார வாகனங்கள் என ஒவ்வொன்றிலும் பிரத்யேகமான சில ஏற்பாடுகளைச் செய்து கொண்டதன் பின்னணியும் இதுவே. 

ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு நடிகைக் கான முக்கிய அம்சமாகக் கூறப்படும் முகத்தில் இத்தனை விபத்துகள் ஏற்பட்ட பின்னும், காலம் அவரை அழகிய நடிகையாக அங்கீகரித்தது.

தன்னை ஒரு பெண் என்று பலவீனமாகப் பேசிப் புறக்கணித்ததாலேயே, ‘வழக்கமான ஒரு பெண் மட்டுமல்ல... அதற்கும் மேலானவள்’ என்று தன்னை நிரூபிக்க வெகுண்டெழுந்திருக்கிறார் ஜெயலலிதா. அதில், அவர் தன்னை நிரூபித்தும் காட்டியிருக் கிறார். ஒருவகையில், அவரது வெற்றி என நாம் குறிப்பிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அப்படிப் பூத்தவைதான். நடிகை ஜெயலலிதா, அரசியல்வாதி ஆனதும், அரசியல்வாதி ஜெயலலிதா ஒரு கட்சியின் தலைவர் ஆனதும், கட்சித்தலைவராகத் தமிழ கத்தையே கட்டி ஆண்டதோடு அதிகார மையத்தில் அசைக்க முடியாதவராக இயங்கியதும் அவர் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்ட விஷயங்கள் அல்ல. தான் அவமானப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை வென்றெடுக்க வேண்டும் என அவர் மனதில் இயல்பாய் உருவான வெறியே. 

பிறந்தநாள் என்பது ஒருவருடைய வாழ்வில் மிக முக்கியமான நாள். பின்னாளில், அரசியல் அதிகாரங்களை அடைந்து அசைக்க முடியாத தலைவியாக ஜெயலலிதா பரிமளித்தபோது, அவரின் ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்வும் சர்ச்சைக்குரியதானது. `மகமாயி'யாக, `கன்னிமேரி'யாக அவரைச் சித்திரித்து வரையப்பட்ட போஸ்டர்கள் அந்த வாரத்துப் புலனாய்வு இதழ்களுக்குத் தீனியாகும். தொண்டர்களின் இந்தப் பழக்கம் அவருக்குப் பின்னாளில் தொல்லையாக மாறியபோதும் அவர் கட்டுப்படுத்தத் தவறினார். இது பின்னாளில் அவரைச் சிறைக்குக்கொண்டு செல்லும்வரையில் நீண்டது. பிறந்தநாளின்போது அவரைக் குளிர்விக்க மேல்தட்டு மனிதர்கள் வழங்கிய அன்பளிப்பு, சொத்துக்குவிப்பு வழக்கின் பிரதான அம்சமாக மாறி நின்றது தனிக்கதை.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

 

 

பிறந்த நாளை இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடுவது அரசியல் அதிகாரத்துக்கு வந்தபின் ஜெயலலிதாவிடம் முளைத்த புதிய பழக்கமில்லை. பள்ளிக்காலத்திலிருந்தே அவரது பிறந்த நாள் இப்படித்தான் நடக்கும். ஜெயலலிதா பிறந்த தேதி பிப்ரவரி 24 என்றால் அவர் சகோதரர் ஜெயக்குமாரின் பிறந்த தேதி பிப்ரவரி 26. ஜெயக்குமாரின் பிறந்த நாள் பின்னால் வருவதால், அன்றைய தினம்தான் இருவருக்கும் சேர்த்து பிறந்த நாளைக் கொண்டாடுவார் சந்தியா. 

p70a.jpg

அன்றைக்கு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என அவர் இல்லம் களைகட்டியிருக்கும். கேக் வெட்டி முடித்தபின் பரிசு தரும் வைபவங்கள் அரங்கேறும். கைகள் வலிக்கும் அளவுக்குப் பரிசுகளை வாங்கிக்கொள்வார்கள் அம்முவும் (ஜெயலலிதாவும்) அவரது சகோதரரும். மலைபோல் குவிந்த பரிசுப் பொருள்களில்   டெடிபியர் பொம்மை முதல் தங்கக்கொலுசு வரை இருந்தாலும், அம்மு ஆர்வமுடன் தேடுவது ஆங்கிலப் புத்தகங்களைத்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வாக, அன்றைக்கு வெளியான ஆங்கிலப் படங்களை வீட்டின் பெரிய ஹாலில் 16 எம்.எம் புரொஜெக்டரில் அம்முவின்  நண்பர்களுக்குத் திரையிட்டுக்காட்டுவார் சந்தியா.

ஆனால், இப்படியான பிறந்த நாள் விழாக்களே பின்னாளில் தன் மகளைச் சிறைக்கு அனுப்பும் எனச் சந்தியா நினைத்திருக்க மாட்டார்.p70b.jpg

1960-ம் ஆண்டின் மே மாத இறுதியில், ஒருநாள் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், அவரது நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அப்போது அவருக்கு 12 வயது.

திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சந்தியாவின் சொந்தபந்தங்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் அன்று திரண்டு வந்தனர். சிறப்பு விருந்தினர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பி.நாகிரெட்டி, நாகய்யா, சாவித்திரி, பிரேம் நஸீர் என எம்.ஜி.ஆரைத் தவிர, அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த அத்தனை கலைஞர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஜெயலலிதாவை ஆசீர்வதித்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்த சிவாஜி, அம்முவைப் பார்த்து, ‘`இந்தப் பொண்ணு ரொம்ப லவ்லியாக இருக்கிறாள். தங்கச் சிலை மாதிரி தெரிகிறாள். முகத்தைப் பார்த்தா பிற்காலத்தில் திரை உலகத்துக்கு வந்து ஒரு கலக்கு கலக்குவா போலிருக்கு’’ எனச் சம்பிரதாயமாக இல்லாமல், அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த பத்து வருடங்களில், தன்னை வாழ்த்திப் பேசிய சிவாஜியுடனேயே தான் டூயட் பாடுவோம் என ஜெயலலிதா எண்ணிப் பார்த்திடவில்லை. தான் எந்தப் பெண்ணை வாழ்த்திப் பேசினோமோ. அந்தப் பெண்ணே தனக்கு ஜோடியாக நடிக்கவருவாள் என்று  சிவாஜியும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

ஆனால், இதற்கு முன்னதாகவே 1960-ம் வருட ஆரம்பத்தில் ‘பாக்தாத் திருடன்’ என்ற படத்தில் சந்தியா நடித்துக்கொண்டிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அம்மாவுடன் படப் பிடிப்புக்கு வந்த கொழுகொழு ஜெயலலிதாவை  செட்டில் இருந்த பலரும் தூக்கிக் கொஞ்சினர். துறுதுறுவென எல்லோரிடமும் பேசி அந்த இடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருந்தவரை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார் படத்தின் கதாநாயகன்.  

p70c.jpg

ஷாட் இடைவேளையில், நேரே ஜெய லலிதாவிடம் வந்தவர், தான் கேட்ட கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சுட்டிப்பெண் ஜெயலலிதாவின் திறமையைப் பார்த்து வியந்தார். சந்தியாவின் பெண்தான் அவர் எனத் தெரியவர, இன்னும் ஆச்சர்யம். அம்முவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்ட கதாநாயகன், அவரைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, ``நீ வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவே’’ எனச் சொல்லிவிட்டு மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பினார். தன் பன்னிரண்டாவது வயதில் எந்த இரு கதாநாயகர்களால், `சினிமாவில் புகழ்பெறுவாய்’ என ஜெயலலிதா வாழ்த்துப் பெற்றாரோ... அதே கதாநாயகர்களுடன் அடுத்த பத்து வருடங்களுக்குள் பல படங்களில் நடித்து முடித்திருந்தார். அம்முவை முதன்முதலாக வாழ்த்திய அந்தக் கதாநாயகன் வேறு யாருமல்ல; எம்.ஜி.ஆர்.

சர்ச் பார்க் பள்ளியில், விரல்விட்டுச் சொல்லும் எண்ணிக்கையில்தான் ஜெய லலிதாவுக்குத் தோழிகள் அமைந்தார்கள். படிப்பில் மட்டுமின்றி நடிப்பு, நடனம், மிருதங்கம் வாசிப்பது என அனைத்திலும் திறமைபெற்றிருந்த அம்முவை அவர் தோழிகள் பாராட்டி மகிழ்வார்கள். `அம்மா' என்று நாம் அறிந்த அம்முவுக்குத் தோழிகள் அன்று சூட்டிய பெயர் லல்லி. இவர்களில், அம்முவுக்கு நெருக்கமான ஒரு தோழி இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி என்பவரின் மகளான நளினி. சென்னைக்கு வந்தது முதல் மெட்ரிக் படிப்பு முடியும்வரை சுமார் ஆறு ஆண்டுகள் அம்முவுடன் படித்தவர்.

விடுமுறையின்போது நளினி உள்ளிட்ட சில தோழிகளுடன் பூண்டி, சாத்தனூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு ‘பிக்னிக்’ செல்வது வழக்கம். ஆனால், பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு நளினி என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த இடங்களில் எல்லாம் விசாரித்தும் அவரைப்பற்றி அறிய முடியவில்லை. பின்னாளில், ஜெயலலிதா பெரிய நடிகையான பிறகும்கூட நளினியின் நினைவு அவ்வப்போது வந்து அவருக்கு வேதனையைத் தந்திருக்கிறது. நளினி தங்கியிருந்த வீட்டைக் கடக்கிறபோதெல்லாம் ஜெயலலிதா சோகமாகிவிடுவார். ஆனால், நளினியைத் தேடும் தேடுதல் வேட்டையை மட்டும் அவர் நிறுத்தவில்லை. பல வருடங்களுக்குப் பின் ஒருநாள் ஜெயலலிதாவுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது ஜெயலலிதா தென்ன கத்தின் புகழ்பெற்ற நடிகையாக மாறியிருந்த சமயம். சந்தியாவின் தோழியான நடிகை எஸ்.வரலட்சுமி தன் மகனின் பிறந்த நாளுக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். வரலட்சுமியின் வீட்டின் அருகில்தான் நளினியின் குடும்பம் ஒருகாலத்தில் வசித்து வந்திருக்கிறது. பிறந்த நாளுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு நளினி நினைவுவந்தது. கவலையோடு அதை வரலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டார். நளினியை ஏற்கெனவே அறிந்திருந்த வரலட்சுமி, அப்போது ஜெயலலிதாவுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார். அதே வீட்டுக்குத் திரும்பவும் நளினி வந்துவிட்ட தகவல்தான் அது.   

p70d.jpg

உடனே நளினியைப் பார்க்கக் கிளம்பியவரிடம், நளினியையும் விசேஷத்துக்கு அழைத்திருப்பதாக வரலட்சுமி சொன்னார். சில நிமிடங்களில் நளினி வந்தார். பல வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டதால் தோழிகள் இருவருக்குமே வார்த்தைகள் வெளிவர வில்லை. இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். ஒருவரையொருவர் பார்த்தபடியே பல நிமிடங்கள் கழிந்தன. உணர்ச்சி கரமான அந்த நேரத்தில், அவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்காக வரலட்சுமி அங்கிருந்து நகர்ந்தார்.

மருத்துவப் படிப்பு படிப்பதையும் திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருப்பதையும் நளினி சொல்ல, மகிழ்ச்சிப் பெருக்குடன் தோழியைக் கட்டித்தழுவினார் ஜெயலலிதா. “நீ வீடு மாறிவிட்டதால், என்னால் உன்னைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், நான் சினிமா நடிகைதானே... எளிதாக என்னைத் தொடர்புகொள்ள முடிந்தும் ஏன் முயலவில்லை?’’ என உருக்கமாகக் கேட்டார் அம்மு.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, நளினி சொன்னதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் ஜெயலலிதா...

“நீ இப்போது சாதாரண ஆள் இல்லை, நடிகை. அதுவும் பெரிய நட்சத்திர நடிகை. இப்போது உனக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நண்பர்களாகி விட்டிருப்பார்கள். இந்தச் சமயத்தில், என்னைப்போன்று சாதாரணத் தோழி உன்னைத்தேடி வந்தால், ஏதோ ஆதாயத்துக்காகத்தான் வந்திருக்கிறாள் என நீ நினைத்துக்கொள்வாய் அல்லது உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னிடம் பேசவிட மாட்டார்கள்” எனக்கூறி கண் கலங்கினார் நளினி.

“அடிப்போடி, நான் என்ன இன்னும் நூறு வருடங்களுக்கா நடிக்கப்போகிறேன்? நடிப்புத் துறையில் நான் இன்னும் புகழடைந்தாலும் என்றும் உன் உயிர்த்தோழிதான். இனி எப்போது வேண்டுமானாலும் நீ என் வீட்டுக்கு வரலாம். நானும் எனக்கு ஓய்வு கிடைத்தால், உன் வீட்டுக்கு ஓடி வருவேன்; சரியா?” என ஜெயலலிதா பேசப்பேச, தன் தோழி அம்முவைப் பிரமிப்புடன் பார்த்தபடி இருந்தார் நளினி. ஆனால், காலம்தான் எத்தனை கொடூரமான வேட்டைக்காரன். எப்போதும் தன் வீட்டின் கதவு திறந்தே இருக்கும் என வகுப்புத் தோழியிடம் உருகிய ஜெயலலிதா, குறைந்தபட்சம் தனது சொந்த ரத்த உறவுகளிடம்கூட அதைப் பேணமுடியாத அளவுக்கு இரும்பு மனுஷியாய் மாறிப்போனார் பின்னாளில்...

(அம்முவின் கதை அறிவோம்!)


கோப்பைக்குச் சொந்தக்காரி!

1962-ம் வருடம் சென்னை சட்டக்கல்லூரியில், விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் அன்றைக்குச் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். பார்வையாளர்களை மகிழ்விக்க மேடையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நன்றாக நாட்டியம் ஆடும் திறமைபெற்றிருந்த, சர்ச் பார்க் பள்ளியின் மாணவி ஜெயலலிதாவின் நாட்டியத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படமாட்டா என ஆரம்பத்திலேயே விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், ஒரு மாணவனின் மிமிக்ரி நிகழ்ச்சியில் மனதைப் பறிகொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அவனைப் பாராட்டியே தீர வேண்டும்’ என விரும்பி தன் கைக்கடிகாரத்தை அவனுக்குப் பரிசளித்தார். அடுத்து நடனமாடியது ஜெயலலிதா. பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல். சிறுமி ஜெயலலிதாவின் நாட்டியத்தில், மெய்ம்மறந்த எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதாவது பரிசு தந்தே ஆக வேண்டும். ஆனால், பணமாக இல்லாமல் பொருளாகக் கொடுப்பதுதான் கலைக்கான மரியாதை என்பதால், உடனடியாகத் தன் உதவியாளரை மேடைக்கு அழைத்து காதில் கிசுகிசுத்தார். நிகழ்ச்சி முடிவதற்குள் அழகிய வெள்ளிக்கோப்பை ஒன்றுடன் திரும்பினார் அவரது உதவியாளர். ஜெயலலிதாவுக்கு அதை மேடையிலேயே வழங்கிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.

http://www.vikatan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

 

 

நேருவின் முன் அழுகைஎஸ்.கிருபாகரன் - படங்கள் உதவி: ஞானம் - ஜெயபாபு

 

ஜெயலலிதாவுக்கும் அவருடைய அரசியல் குரு எம்.ஜி.ஆருக்கும் அரிதான சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் தங்களின் திரைப்பட வாழ்வின் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் அனுதாபிகள். குறிப்பாக
எம்.ஜி.ஆர், அக்கட்சியில் `காலணா’ உறுப்பினராக இருந்தவர் என்பது பலரும் அறியாத தகவல். 

p76a.jpg

1950-களில் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகத்தின் வீறுகொண்ட வளர்ச்சி பொதுமக்களிடையே மட்டுமின்றி திரைக்கலைஞர்களாலும் பெரிதும் கவனிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி   டி.வி. நாராயணசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க-வுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிவந்தனர். பின்னாளில், திராவிட இயக்கத்தின் நீட்சியாக அ.தி.மு.க உருவானது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு அக்கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றவர் ஜெயலலிதா. ஆனால், ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் குடும்பம் காங்கிரஸ் பற்றுடன் இருந்தது. ‘சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி’ என்பதால், காங்கிரஸ்மீது அவர்கள் ஈடுபாடு காட்டியிருக்கலாம். காங்கிரஸ் கட்சியில் பல நண்பர்களைக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு, இந்தியாவின் கவர்ச்சிகரமான தலைவராக விளங்கிய நேருமீது நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.      

p76c.jpg

இந்திய – சீனப்போரின்போது போர் வீரர்களை மகிழ்விக்கச்சென்ற கலைக்குழுவில், தன் மகளையும் இடம்பெறச் செய்தார். அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, யுத்த நிதி சேகரிப்புக்காகச் சென்னை கவர்னர் மாளிகை வந்திருந்தார். அப்போது சந்தியா, தானும் தன் மகளும் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் யுத்த நிதிக்காகக் கழற்றித்தந்து தனது தேசபக்தியை வெளிப்படுத்தினார். அந்நாளில், சந்தியா புகழ் வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த நடிகை என்பதால், அதைச் செய்திருக்க வேண்டிய எந்த அவசியமோ, கட்டாயமோ அவருக்கு இல்லை. ஆனாலும் அதைச் செய்தார் சந்தியா. அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்முன் தன் மகளிடம் விஷயத்தைக் கூறாமல், “ஒரு நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு எப்படி ஆடம்பரமாக நகை அணிந்து செல்வாயோ, அதேபோல வா அம்மு” என்று சொல்லி மகளை அழைத்துச் சென்றார் சந்தியா. அத்தனை நகைகளையும் ஜெயலலிதாவை விட்டே யுத்த நிதிக்கு வழங்கவும் வைத்தார். அந்தளவுக்கு காங்கிரஸ் அபிமானியாக இருந்தவர் சந்தியா. காங்கிரஸின் பலம்பொருந்திய கவர்ச்சிகர மனிதராக இருந்த நேருவைப் பற்றி சந்தியா சொன்ன கதைகளால், அம்முவின் மனதில் நேரு விஸ்வரூபம் எடுத்திருந்தார். கூடவே குழந்தைகளின் உலகத்தில், நேருவுக்கு இருந்த ஈர்ப்பும் சேர்ந்துக் கொள்ள, அம்முவுக்கு நேருமீது மிகப்பெரிய மரியாதையும் ஈடுபாடும் ஏற்பட்டிருந்தது.    

p76d.jpg

இந்நிலையில்,பிரதமர் நேரு சென்னை வரப்போவதாகத் தகவல் பரவியது. அவரை வரவேற்க அமைக்கப்பட்ட நடனக்குழுவில், அம்முவின் பெயரையும் சேர்த் திருப்பதாகத் தலைமை ஆசிரியை சொன்னார். “நேரு முன் ஆடும் அரிய வாய்ப்பு. திறமையாக ஆடி, பள்ளிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தா அம்மு” என்றார் அவர். அம்முவின் மனதில் அப்போதே ஜதி சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. அப்படி ஓர் உற்சாகம் பிறந்தது. நேருவை அருகில் பார்ப்பதே அரிதான விஷயம். அப்படியிருக்கையில், அவர்முன் நடனம் ஆடுவதென்பது எத்தகைய வாய்ப்பு. கண்ணும் கருத்துமாக ஒத்திகையில் ஈடுபட்டார் அம்மு. 

அந்த நாள் வந்தது. நடன உடையோடு நேருவுக்காகக் காத்திருந்தனர், அம்மு உள்ளிட்ட குழந்தைகள். முன்பே பல மேடைகளில் அசாத்தியமாக ஆடிப் பாராட்டுகள் பல பெற்றிருந்தாலும், அம்முவுக்கோ அரங்கேற்ற நாளைவிட அதிகப் பதற்றத்தைத் தந்தது அந்த நாள். அந்த நேரத்தில், ஒரு தகவல் வந்து சேர்ந்தது. ஆம், நேரு சென்னை வந்த விமானம் சற்று தாமதமானதால், நேரம் கருதி அவரது சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ரத்தானவற்றில் அம்முவின் நடன நிகழ்ச்சியும் ஒன்று. ‘எப்பேர்ப்பட்ட வாய்ப்பு  இப்படித் தள்ளிப்போய்விட்டதே’ என்ற ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார். மேடை நடன நிகழ்ச்சி ரத்தானாலும் குழந்தைகளை ஏமாற்ற விரும்பாத நேரு, அவர்களைச் சந்திக்க விரும்புவதாக இன்னொரு தகவல் வந்துசேர்ந்தது. அத்தனை குழந்தைகளும் நேருவை வரவேற்க வாசலில் நிறுத்திவைக்கப்பட்டனர்.

விவரிக்கமுடியாத மகிழ்ச்சி அம்முவுக்கு. மீண்டும் அவசர அவசரமாக மேக்கப் போட்டுக் கொண்டு, தன் மனம்கவர்ந்த மாபெரும் தலைவரை பூந்தட்டை ஏந்தியவாறு வரவேற்கத் தயாரானார்.

நேரு வந்தார். தன்னை வர வேற்றக் குழந்தைகளைக் கண்டு புன்னகை பூத்தார். முன் வரிசை யில் முதல் ஆளாக நின்றிருந்த அம்முவின் அருகில் வந்தார். கொழு கொழுவென்றிருந்த அம்முவின் கன்னங்களை லேசாகக் கிள்ளினார். அவ்வளவுதான். அதற்கு மேல் அம்முவால் அழுகையை அடக்க முடியவில்லை. பொல பொலவென  அவரது கன்னங்களில் கண்ணீர். ஒன்றும் புரியாமல், விழித்த நேரு அருகிலிருந்த ஆசிரியையிடம் என்னவென்று விசாரித்தார். “பல நாள் ஒத்திகை செய்து உங்கள்முன் ஆடக் காத்திருந்து ஏமாற்றமாகிவிட்டதால், அம்மு அழுகிறாள்’’ என ஆசிரியை கூற... லேசான புன்முறுவலுடன் அம்முவின் அருகில்வந்து அவரை முதுகில் தட்டிக்கொடுத்த நேரு, தன் உதவியாளரை அழைத்து “இன்று எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தையின்  ஏமாற்றத்தை என்னுடன் தலைநகருக்கு எடுத்துச்செல்ல விரும்பவில்லை. உடனே இவர்களின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். நேருவின் இந்த உள்ளம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக அம்முவை. தன் விருப்பத்துக்குரிய நேரு முன் ஆடும் அவரது கனவு சற்றுநேரத்தில் நிறைவேறியது. நிகழ்ச்சிக்குப்பின் அம்முவின் நடனத்தைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார் நேரு. அன்று நேரு பயணத்திட்டத்துக்கு மாறாக ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே கிளம்பிச்சென்றார். அம்மா சொல்லக்கேட்ட நேருவின் அரிய குணத்தை, நேரில் கண்டு நெகிழ்ந்தார் அம்மு. p76b.jpg

“நேருவின் இந்தச் செயல் என்னைப் புல்லரிக்க வைத்தது. நேருஜியையும், இந்த நிகழ்ச்சியையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. மீண்டும் ஒரு ஜென்மம் எடுத் தாலும் இதை நான் மறக்க மாட்டேன்’’ எனப் பின்னாளில், இந்தச் சம்பவம் குறித்து நெகிழ்ந்தார் ஜெயலலிதா. நேரு மீதான இந்த நேசத்தை அவரது மகள் இந்திரா, பேரன் ராஜீவ் வரை நீட்டித்தார். பிற்காலத்தில், அரசியல்களத்தில் அதிரடியான அரசியல் தலைவராக அவர் வடிவெடுத்தபோதும் கட்சி மாச்சர்யங்களைத் தாண்டி நேரு குடும்பத்தினர்மீது அன்பு செலுத்தினார் என்பதை அவரது அரசியல் நடவடிக்கைகள் காட்டும்.

நேருவால் தட்டிக்கொடுக்கப் பட்ட ஜெயலலிதா, 1984, ஏப்ரல் 23-ம் தேதி ராஜ்யசபா உறுப்பின ராக நாடாளுமன்றத்தில், தனது கன்னிப்பேச்சை நிகழ்த்திய போது அன்றையப் பிரதமர் இந்திராவினால் பாராட்டப்பட்டார்.           

p76e.jpg

அரசியலில் எம்.ஜி.ஆரால் வளர்க்கப் பட்டாலும், ஜெயலலிதாவை அதிகம் கவர்ந்த தலைவர் எப்போதும் இந்திராதான். இதை ஜெயலலிதாவே பலமுறை பதிவு செய்திருக்கிறார். தனக்குப் ‘பிடித்த பெண் அரசியல் தலைவர்களாக உலகளவில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தும், இந்திய அளவில் இந்திரா காந்தியும் உள்ளனர்’ எனத் தெரிவித்திருக்கிறார். தனது அரசியல் வாழ்வில் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றில் இந்திராவின் தாக்கம் பிரதிபலித்ததைப் பார்க்கமுடியும். ராஜீவ் காந்தியுடனும் அரசியலைத்தாண்டிய ஒரு நட்பை அவர் அனுசரித்தார்.

தி.நகர், சிவஞானம் தெரு வீடு ஒருவகை யில் அம்முவுக்குப் ‘போதிமரம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வகைவகையான மனிதர்கள், விதவிதமான அனுபவங்கள் என அந்த இல்லத்துடன் அம்முவுக்குத் தொடர்பு அதிகம். இயல்பிலேயே இரக்க குணமும் யாரையும் எளிதில் நம்பிவிடும் சுபாவமும் பல சமயங்களில் அவருக்குத் துயரத்தையே பரிசாக அளித்திருக்கிறது. தீபாவளி, பொங்கல், குடும்பத்தினரின் பிறந்த நாள் போன்ற விசேஷ நாள்களில், தன் வீட்டில் கூடுதலாகப் பலகாரங்களைச் செய்யச்சொல்லி, அதை நடைபாதைகளில் வசிக்கும் பிள்ளைகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்து மகிழ்வார் அம்மு. அந்த நடைபாதைக் குழந்தைகள் சிலரைத் தன் தாயிடம் சொல்லித் தத்தெடுத்துப் படிக்கவும் வைத்திருக்கிறார் அக்காலத்தில். நடிகையானபின் படப்பிடிப்புக்குச் செல்லும் இடங்களில், தான் சந்திக்க நேரும் ஏழைக் குழந்தைகளைத் தன் வழக்கறிஞர் பொறுப்பில் வைத்து, தன் சொந்தச் செலவிலேயே வளர்த்திருக்கிறார். வெளியுலகம் அறியாத தகவல்கள் இவை. அப்படி இயல்பிலேயே இரக்க குணம் கொண்ட வெகுளிப்பெண் ஜெயலலிதாவுக்கு, ‘வெளுத்ததெல்லாம் பாலில்லை; அது விஷமாகவும் இருக்கலாம்’ என விளங்கவைத்தார் தோழி ஒருவர். 

(அம்முவின் கதை அறிவோம்)

http://www.vikatan.com

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 16

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

இளமைக்கால காதல்எஸ்.கிருபாகரன் - படம் உதவி: ஜெயபாபு

 

ம்மு சர்ச் பார்க்கில் படித்துவந்தபோது, பள்ளியின் சீனியர் மாணவி ஒருவர் அம்முவின் திடீர் தோழியானார். அம்மு வசித்த அதே தி.நகர், சிவஞானம் தெருவில்தான் அவரின் வீடும் இருந்தது. பள்ளி முடிந்ததும் தினந்தோறும் அம்முவின் வீட்டுக்கு வரும் சீனியர் மாணவி, அம்முவை வலுக்கட்டாயமாக மாடிக்கு அழைத்துச்சென்று எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அது செயற்கையாக இருக்கும். அம்முவுக்கு அது புரியவுமில்லை. பல நாள்கள் இதுதொடர்ந்தன.    

p78a.jpg

ஒருநாள் சந்தியா, ‘‘அம்மு, அந்தப் பெண்ணோடு ஏன் இத்தனை நெருக்கமா பழகுறே? சரியாப்படலை, பார்த்துக்க...” எனக் கண்டித்தார். வழக்கமாகத் தன் தோழிகளுடன் அன்பாகப் பேசிப்பழகும் அம்மா, சீனியர் மாணவியின் மீது சீற்றம் காட்டியது அம்முவுக்குக் குழப்பமாக இருந்தது.

மறுநாள்,  அந்த மாணவியின் செய்கைகளை உற்றுக்கவனித்தார் அம்மு. அப்போதுதான் பல விஷயங்கள் தெரியவந்தன. அந்த சீனியர் மாணவி தன் வீட்டருகே வசிக்கும் ஒரு பையனைக் காதலித்துவருகிறாள். கண்டிப்பான தன் பெற்றோரை ஏமாற்றி, அவனுடனான தனது காதலைத் தொடரவே, அவள் திட்டமிட்டு அம்முவை நட்பாக்கிக் கொண்டிருக்கிறாள். விஷயம் தெரியவந்ததும் அம்மு அவளிடம் கோபத்தை வெளிப்படுத்த, மன்னிப்பு கேட்ட சீனியர் மாணவி, தன் காதலுக்கு உதவிபுரியும்படி அம்முவிடம் கெஞ்சினாள். அதாவது, அவள் மாடிக்கு வராத  நேரங்களில், அவளது காதலனுக்கு அம்மு சமிக்ஞை தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கெஞ்சினாள். ஒன்றும்புரியாத வயதல்லவா… தலையாட்டிவிட்டார். ஒருநாள் சீனியர் மாணவி வராதபோது அம்மு சமிக்ஞை கொடுத்துக்கொண்டிருந்ததை, அந்தத் தெருவில் பால் விநியோகம் செய்துவரும் பெண்மணி ஒருவர் பார்த்துவிட்டார்.

பருவ வயதில் ஓர் ஆணும் பெண்ணும் மொட்டை மாடியில் நின்று சைகையில் பேசிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டார். இன்னொரு நாள், சீனியர் மாணவியும் அந்தப் பையனுடன் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்ததை அவர் பார்த்துவிட... வம்பாகிவிட்டது விவகாரம். விறுவிறுவென சீனியர் மாணவியின் வீட்டுக்குச் சென்று, “அந்த நடிகைவீட்டுப் பெண்ணோட உங்க பெண்ணைப் பழகவிடாதீங்க… அந்தப் பையனோடு அவளுக்குக் காதல். இப்போ ஒண்ணும் தெரியாத உங்க பொண்ணையும் அழைச்சிட்டுப்போய் அவளுக்கு நட்பு ஏற்படுத்திக் கெடுக்கப் பார்க்கிறா… நடிகை குடும்பம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. அவ வீட்டுக்கு இனி உங்க பெண்ணை அனுப்பாதீங்க’’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார். p78b.jpg
 
அன்றுமுதல் அம்முவைச் சந்திக்க சீனியர் மாணவிக்குத் தடை போடப்பட்டது. தோழி சில நாள்களாக வராததால், நேரில் விசாரிக்க அவளது வீட்டுக்குச் சென்றார் அம்மு. “இனி எங்க வீட்டுக்கு வராதே. எங்க வீட்ல உன்னோட பேசவோ, பழகவோ கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பால்கார அம்மா எல்லாத் தகவலையும் சொல்லிவிட்டார்” எனக் கதவுக்குப் பின்னாலிருந்து சீனியர் மாணவியின் குரல் மட்டுமே வந்தது. வெறும் அதிர்ச்சி அல்ல; பெரும் அதிர்ச்சி. அவளது காதலுக்கு அம்முவைப் பயன்படுத்திவிட்டு, ஆபத்து என வந்தபின் அவளைக் காத்துக்கொள்வதற்காக, `எனக்கு ஒன்றும் தெரியாது' என்றும் `அம்முவுக்கும் அந்தப் பையனுக்கும்தான் பழக்கம்' என்றும் தன் வீட்டாரிடம் சொல்லித் தப்பித்துக்கொண்டிருக்கிறாள் என்பது அம்முவுக்குப் பிறகுதான் தெரியவந்தது. தனது அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டதோடு ஆபத்து வந்ததும் தன்மீது பழிபோட்டு தப்பித்துக்கொண்ட சீனியர் மாணவியின் துரோகச் செயலை எண்ணி அன்றிரவு முழுவதும் தூங்கவே இல்லை அம்மு. மொட்டை மாடிக்குச் சென்று இரண்டு மணி நேரம் அழுது தீர்த்தார்.

பால்கார அம்மாவின் தவறான புரிதல் பேச்சு காரணமாக அந்தத் தெருவில் பலருக்கும் அம்மு தவறான பெண்ணாகவே சித்திரிக்கப்பட்டார். ‘நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை’ என்பதையும், `மனிதர்களை எடைபோடத் தெரியாமல் அவர்களுடன் நட்புகொள்வது எப்படிப்பட்ட ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்தும்' என்பதையும் அம்மு புரிந்துகொள்ளக் காரணமானது இந்தச் சம்பவம். அதற்கு அம்மு கொடுத்த விலைதான் அதிகம்.

மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் போனதால், தனக்குத் தீராத அவப்பெயரை ஏற்படுத்திச்சென்ற அந்தத் தோழியின் நினைவு வரும்போதெல்லாம் அம்முவின் மனம் சகமனிதர்களிடமிருந்து சற்று விலகியே நிற்கும். அவர்களை நம்ப மறுக்கும். அதனால், அவர்களின் தகுதியை உரசிப்பார்க்க வைத்த பரீட்சைகளால், பல நல்ல நட்புகளை இழந்திருக்கிறார் அம்மு.

சீனியர் மாணவியின் காதலுக்கு உதவப்போய் அவமானப்பட்ட அம்முவின் மனதில் முதல் காதல் பூத்தபோது அவருக்கு 13 வயது.

அம்முவின் மனதில் இடம்பிடித்த அவர் ஒரு பிரபல நடிகர். அம்முவைவிட 27 வயது மூத்தவர். ஆனால், திரையில் அவர் துள்ளிக்குதித்து வந்து வசனம் பேசினால், சொக்கிப்போவார்கள் அன்றைய இளம்பெண்கள். அம்மு அவரது படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து  ப்ரியத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். எங்கும் எப்போதும் அவரையும் அவரது படங்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசுவது, செய்தித்தாள்களில் அந்த நடிகரின் படங்கள் தென்பட்டால், உடனே அதைக் கத்தரித்துத் தனியே ஆல்பத்தில் சேர்த்துவிடுவது என அம்முவின் ப்ரியம் முற்றிப்போனது அந்நாளில்.      

p78c.jpg

`சினிமாக்கார வீட்டுப்பெண் இல்லையா… அதான் சினிமா நடிகர் மேல் லவ் வருது' எனத் தோழிகள் கிண்டலடித்தனர். ஒருநாள் அந்த நடிகரின் படங்களை ஒட்டி வைத்திருந்த ஆல்பத்தைப் பள்ளிக்குக் கொண்டு சென்றிருந்தார்.

அதைப் பார்த்துவிட்ட ஆசிரியை, ``என்ன அம்மு இது?’’ என ஆல்பத்தைப் பற்றிக் கேட்க, “எனது விலைமதிக்க முடியாத பொக்கிஷம்” என அம்மு சொல்ல, கோபத்தின் உச்சிக்கே போனார் ஆசிரியை. “என்ன திமிர்... ஒரு நடிகரின் படங்கள் ஒட்டப்பட்ட ஆல்பத்தைப் பொக்கிஷம் என்று சொல்கிறாயே...’’ எனப் பிரம்பால் பின்னி எடுத்துவிட்டார் அம்முவை. முதல் காதல் முடிவுக்கு வந்தது இப்படித்தான். 

அதுசரி... அம்முவின் மனதில் இடம்பிடித்த அந்த நடிகர் யார் தெரியுமா? 60-களில் தன் நளினமான நடிப்பாற்றலாலும் கட்டுடலாலும் கல்லூரிப் பெண்களின் கனவு நாயகனாகக் கொண்டாடப்பட்ட கம்பீர நடிகர் ராக் ஹட்சன்... 1985-ல் உடல் இளைத்து, தசை சுருங்கி அழகுகுலைந்து, ‘உலகிலேயே, எய்ட்ஸ் பாதித்த முதல் சினிமா கதாநாயகன்’ என்ற அவப்பெயருடன் இறந்துபோன அமெரிக்க நடிகர்.

காதல் உணர்வைக் கடந்து வராதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. உண்மையில், பள்ளிப்பருவத்தில் சினிமா நடிகர்மீது ஈர்ப்பு ஏற்படுவது இளம்பெண்களின் உளவியல் வெளிப்பாடுதான். அப்படி அம்மு தன் பருவ வயதில், ராக் ஹட்சன் மட்டுமல்லாமல், அன்றைய பிரபல கிரிக்கெட் வீரர்களான நாரி கன்டிராக்டர்,  மன்ஸூர் அலிகான் நவாப் பட்டோடி ஆகியோருக்கும் வெறித் தனமான ரசிகையாக இருந்திருக்கிறார்.

சென்னையில் கிரிக்கெட் நடைபெறும் போது, எத்தனை அலுவல்கள் இருந்தாலும் மைதானத்துக்கு ஓடி வந்துவிடுவார் அம்மு. அவ்வளவு பைத்தியம் அவர்கள்மீது. ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தைப் பார்ப்பதைவிட்டு அவர்களின் செயல்களை பைனாகுலர் வழியாகப் பார்த்து ரசிப்பார் அம்மு.
 
இப்படி சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள்மீது ஒருவித ப்ரியம் கொண்டிருந்த அம்முவின் வாழ்விலும் பின்னாளில் ஒரு நிஜமான காதல் வந்துபோனது. 

(அம்முவின் கதை அறிவோம்)  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

நாடக மேடைஎஸ்.கிருபாகரன் - படங்கள் உதவி: ஞானம்

 

ர்ச் பார்க் பள்ளியில், ஆண்டுக்கு ஒருமுறை `ஃபேன்ஸி ஃபேர்’ நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காகப் பல பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் சர்ச் பார்க் பள்ளிக்கு வருவார்கள். மூன்று நாள்கள் நடக்கும் இந்த நிகழ்வின்போது, மாணவர்களுடன் பேசிப்பழகும் வாய்ப்பு மாணவிகளுக்குக் கிடைக்கும்.        

p62a.jpg

அம்முவுக்கும் அவர் தோழிகளுக்கும் மாணவர்களுடன் பேச ஆசை எழும். ஆனால், தைரியம் வராது. வெட்கம்தான் எட்டிப்பார்க்கும். `ஹௌ ஸ்வீட் ஹி இஸ். அவனைப்பாரேன்... ஹேண்ட்சமா இருக்கான்' எனத் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். தைரியமாகப் பேசுவதற்காகவே, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, எங்குத் தொடங்கி எங்கு முடிப்பது' என்பதுவரை பெரிய ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அம்மு அண்ட் கோ. ஆனால், யாருக்கும் போய்ப் பேசத்தான் கடைசிவரை தைரியம் வரவில்லை.  மாணவிகள் பேசத் தயங்குவதைப் பார்த்து, மாணவர் ஒருவர் அம்மு தரப்பிடம் நேரில் வந்து, `ஹலோ, ஹாய் கேர்ள்ஸ்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அம்முவுக்குப் பேச்சு நின்றுவிட்டது; நாக்கு வறண்டுவிட்டது. அங்கிருந்து ஓடிவந்துவிட்டார்.

அந்தக் குழுவில், ஒரு மாணவன் மிக ஹேண்ட்சமாக இருந்தான். அந்தச் குழலில் தனித்துத் தெரிந்த அவன்மீது, ஏனோ அம்முவுக்கு  ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவனைப் பார்க்கப் பார்க்க அவனிடம் பேச வேண்டும் என்ற தீராத ஆவல் உண்டானது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைத் தவிர்த்து ஒரு நிஜமான காதல் அம்முவுக்குப் பூத்தது, அதுதான் முதன்முறை. அந்த மாணவனின் பெயரையும் தனது நெருங்கிய தோழி ஒருவரின் சகோதரனுக்கு அவன் நெருங்கிய நண்பன் என்பதையும் அடுத்த மூன்று நாள்களுக்குள் தெரிந்துகொண்டார் அம்மு. தோழியின் நட்புவட்டம் என்பதால், அந்த மாணவனுடன் அம்மு எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்றார். அப்போதெல்லாம், `அவன் தன்னிடம் வந்து பேசமாட்டானா...' என்கிற ஏக்கம் அம்முவின் மனதில் எழும். கூடவே, `நாமே அவனிடம் பேசிவிட்டால் என்ன?' என்கிற ஆசையும் அம்முவுக்குள் எழும். ஆனாலும், தைரியம் வராது. இப்படியே இரண்டு நாள்கள் கழிந்தன.

மூன்றாவது நாளில், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை ரயிலில் பயணம் செய்கிற சந்தர்ப்பம் வந்தது. அப்போது அம்முவும் அந்த மாணவரும் ஒரே பெட்டியில் உட்கார நேர்ந்தது. அது ஓர் இனம்புரியாத உணர்ச்சி. மூன்று நாள்களாக யாருடன் பேசவும் பழகவும் விரும்பினாரோ, அவருடனேயே மிக அருகில் அமர்ந்திருக்கிறார். அது சினிமாவை விஞ்சிய த்ரில்லான காட்சி.

பயமும் பதற்றமுமான இந்தப் பயணத்தில் எப்படியும் பேசிவிட வேண்டுமென அம்முவின் மனம் துடித்தது. ஆனால், பெண்ணுக்கே உரிய நாணம் அவரைப் பேச விடவில்லை. `பக்கத்தில், பெண் இருக்கிறாள் என்ற ஈர்ப்பில், அவன் தன்னிடம் பேசுவான்; அப்போது சகஜமாகிப் பேசலாம்' என்ற அம்முவின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது. பொம்மை ரயிலில், அவனும் பொம்மை மனிதனாகவே பயணம் செய்தான். அம்முவிடம் கடைசிவரை, அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. p62b.jpg

மூன்று நாள்கள் நிகழ்ச்சி முடிந்து கல்லூரி மாணவர்கள் கலைந்து சென்றனர். அம்முவுக்கு மனம் ஆறவில்லை. தன் தோழியிடம் அவன் தன்னைப் பொருட்படுத்தாததன் காரணத்தைக் கேட்டார். `அவனை நீ காதலித்தாயா.... அடிப்போடி, அவன் உன்னை ஒரு இளம்பெண்ணாகவே பார்க்க வில்லை. துருதுரு சுட்டிப் பெண்ணாகக் கருதியதாகத்தான் என்னிடம் கூறினான்' என்ற தோழியின் விளக் கத்துக்குப் பின்னர்தான் புரிந்தது. அம்முதான் அவனை வாலிபனாக நினைத்திருக்கிறார். அவன் கண்களுக்கோ, அம்மு ஒன்றும்தெரியாத குழந்தையாக, சிறிய பெண்ணாகத்தான் தெரிந்திருக்கிறார். `அத்தனை நெருக்கத்தில் அமர்ந்தும்கூட கடைசிவரை அவனுக்குத் தன்மீது காதல் எண்ணம் வராததற்கு இதுதான் காரணமா' என அதிர்ச்சியாகி நின்றார் அம்மு. அந்த முதல் காதல் அம்முவால் மறக்க முடியாதது.

தமிழ்த் திரைப்பட உலகுக்கு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியவர், `புதுமை இயக்குநர்' எனப் புகழப்பட்ட ஸ்ரீதர். உணர்ச்சிகரமான கதை, அதற்கு நிகரான காட்சியமைப்பு, மனதை நெகிழ்த்தும் வசனங்கள், இளமையான நடிகர்கள், கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, கண்ணில் ஒற்றிக்கொள்ளும்விதமான ஃபிரேம்கள் என அந்நாளில், அவர் இயக்கிய திரைப்படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

1964-ம் ஆண்டு வெளியான ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் ஜெயலலிதா. `முதல் படத்திலேயே தன் இளமையான துருதுருப்பான நடிப்பால் ரசிகர்களை அசத்தியிருக்கிறார் சந்தியாவின் புதல்வி' எனப் பத்திரிகைகள் அந்நாளில் பாராட்டி எழுதியிருந்தன.

அம்மு, மெட்ரிகுலேஷன் இறுதியாண்டு படித்துவந்த போது, சந்தியாவுக்குச் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருந்தன. இதனால், வருமானத்துக்காகச் சில நாடகக் குழுக்களிலும் நடித்துவந்தார். அதில் ஒன்று `யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழு'. நாடக உலகில், பிரபலமான இந்தக் குழுவின் நிறுவனர், ஒய்.ஜி.பி என்றழைக்கப்பட்ட ஒய்.ஜி.பார்த்தசாரதி. ஒய்.ஜி.பி-யின் மனைவி ராஷ்மி, சென்னை நாட்டிய சங்கத்தின் தலைவராக இருந்ததோடு, பத்மா சேஷாத்ரி என்ற சிறு பள்ளியையும் நடத்திவந்தார் (ஒய்.ஜி.பி - ராஷ்மி தம்பதி வேறு யாருமல்ல... நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் பெற்றோர்தான்).      

p62c.jpg

நடிகை என்பதைத் தாண்டி, சந்தியா குடும்பத்துடன் ஒய்.ஜி.பி தம்பதி நல்ல நட்பு டன் இருந்தனர். ஒருமுறை ராஷ்மி பொறுப்பேற்றிருந்த சென்னை நாட்டிய சங்கம் `தி ஹோல் ட்ரூத்' என்ற ஆங்கில நாடகத்தை அரங்கேற்றத் திட்டமிட்டது. அந்த த்ரில்லர் நாடகத்தில், வில்லனால் கொல்லப்படும் மூன்று பெண்களில், ஓர் இளம்பெண் கதாபாத்திரமும் உண்டு.

எதையும் நவீனமாகச் செய்ய நினைக்கும் ராஷ்மிக்கு, இளம்பெண் வேடத்துக்கு வயதான அல்லது நடுத்தரமான வயதில் உள்ள ஒரு நடிகையை நடிக்க வைப்பதில் மனமில்லை. அதேநேரம் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் நடித்தால் மட்டுமே நாடகம் எடுபடும். இந்தத் தகுதிகளுடன் பொருத்தமான ஓர் இளம்பெண்ணை அவர் தேடிவந்தார். அந்த வேளையில், ஒரு குடும்ப நிகழ்வுக்காகச் சந்தியா தன் மகளுடன் ராஷ்மியின் வீட்டுக்கு வந்திருந்தார். பொதுவாகவே நாட்டியம் கற்றவர்களின் பேச்சிலும் பாவனைகளிலும் ஒருவித நளினம் வெளிப்படும். நுனிநாக்கு ஆங்கிலம், ஸ்டைலிஷ் பேச்சு, நாட்டிய பாவனைகளால் முகத்தில் உருவான களை, பேச்சிலும் நடையிலும் ஒரு நளினம்... `கண்டேன் சீதை'யை என்று ராஷ்மி கத்தாத குறைதான். `அம்முவே அந்த இளம்பெண்' என முடிவானது. சந்தியாவும் ஒப்புக்கொண்டார். நாடகத்தில், வில்லனாக நடித்தவர் சோ. ஆம்... திரைப்படத்துறைக்கு வரும்முன் ஒய்.ஜி.பி-யின் நாடகக் குழுவில் அமெச்சூர் நடிகராக இருந்தார். வழக்கறிஞர் தொழிலோடு நாடகங்களின் மீதான காதலால், வீட்டுக்குத் தெரியாமல் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் அவர்.

`தி ஹோல் ட்ரூத்' நாடக ரிகர்சலின்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. கதைப்படி வில்லன் சோ, மூன்றாவது இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொல்லவேண்டிய காட்சி. அதற்குமுன் அச்சம் தரும்படியான, நீளமான வசனத்தை சோ பேசுவார். இந்த வசனம் பார்வையாளர்களை மிரட்சிக்குள்ளாக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. ரிகர்சலில் நடந்ததோ வேறு. வில்லன் சோ, நீளமான வசனத்தைப் பேசும்வரை அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்மு, சோ கழுத்தை நெரிக்க முயலும்போது தன்னையும் அறியாமல், பெரும் சத்தத்துடன் சிரித்துவிடுவார். ஒருமுறை இருமுறை அல்ல; பத்து முறைக்கும் மேல் இப்படியே நீண்டது இந்தச்சம்பவம். டென்ஷனான ராஷ்மி, `அம்மு என்ன இது... கொலை செய்ய வருபவனைப் பார்த்துச் சிரிப்பாயா நீ... பயப்படுவதுபோல் நடி' என்றார். அதற்கு அம்மு, `ஆன்ட்டி முடிந்தால் இந்த கேரக்டருக்கு வேறு ஆளைப்போடுங்கள்.சோ இந்தப் பாத்திரத்தில் நடித்தால் நான் சிரிக்கத்தான் செய்வேன்' என்றார். `ஏன் சிரிக்கிறாய்...' எனக் கேட்டார் ராஷ்மி. `சோ என் கழுத்தை நெரிக்கும்போது அவர் முட்டைக்கண்கள் பிதுங்கி நிற்கின்றன. அது பயத்துக்குப் பதிலாக எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிடுகிறது' என்றார் வாய்கொள்ளாச் சிரிப்புடன். அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். ஆனால், அரங்கேற்றத்தின்போது இந்தச் சிக்கலில்லை. அம்மு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பயந்தவாறே சிறப்பாக நடித்தார். ஆம்... `திறமையான நடிகை' என ராஷ்மியிடம் பாராட்டுப் பெற்றுவிட்டார்.

அந்த நாடகத்தில் அம்மு வின் நடிப்பு புதுவிதமாக இருந்ததால், தொடர்ந்து தங்கள் நாடகங்களில் நடிக்கவைத்தனர் ஒய்.ஜி.பி தம்பதி. சோவுடன் `தி ஹவுஸ் ஆஃப் தி ஆகஸ்ட் மூன்’ உள்ளிட்ட சில ஆங்கில நாடகங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. சோவுக்கும் அவருக்குமிடையே நல்ல நட்பு உருவானது இந்தக் காலகட்டத்தில்தான். இளம்பெண்ணாக சோவுக்கு அறிமுகமான அம்மு, தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை அவருடன் ஆரோக்கியமான நட்பு பாராட்டினார். தனக்குப் பிடித்த நான்கு ஆண்கள் என 70-களின் மத்தியில் ஒரு சினிமா பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஜெயலலிதா, அதில் முதலில் சோவையே குறிப்பிட்டிருந்தார். இளமைக் காலத்தில், நாடகத்தில் தொடங்கிய இவர்களின் நட்பு... சினிமா, அரசியல் என இருவரின் அந்திமக்காலம் வரையிலும் தொடர்ந்தது. இருவரது இறப்பும் அடுத்தடுத்து நிகழ்ந்ததும் ஆச்சர்யமான ஒற்றுமைதான்.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

 

 

ம்முவுக்கு நாடக வாய்ப்பு தந்த அதே ராஷ்மிதான் ஓர் ஆங்கிலப் படத்தில் அம்மு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறவும் காரணமாக இருந்தார். முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் புதல்வரான சங்கர் கிரி, ‘பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கில டாகுமென்டரி படம் தயாரித்து வந்தார். ‘எபிசில்’ என்ற அந்தப் படத்தில், நடிப்பதற்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த, கல்லூரிப்பெண் தோற்றம் கொண்ட ஒரு பெண் தேவைப்பட்டார். குடும்ப நண்பரான ராஷ்மியிடம் அவர் அதைச் சொன்னார். ராஷ்மிக்குச் சட்டென  நினைவுக்கு வந்தது அம்முவின் முகம்தான். அம்முவின் படத்தைப் பார்த்த சங்கர் கிரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்த அதே பெண்ணாக அம்மு இருந்தார்.

சந்தியாவோ, ‘மகளின் படிப்பு கெடும்’ என்ற காரணத்தைக்கூறி, அம்முவை நடிக்கவைக்க மறுப்பு தெரிவித்தார். “அதிகபட்சம் பத்து நாள்கள்தான். படிப்பு கெடாதபடி சனி, ஞாயிறு மட்டும்தான் படப்பிடிப்பு’’ எனச் சமாதானங்கள் பேசி சந்தியாவைச் சம்மதிக்கவைத்தார் சங்கர் கிரி. ஆனால், நடந்ததோ வேறு...

பத்து நாள்களையும் தாண்டி, படப்பிடிப்பு நீண்டது. பள்ளியில் இருக்கும்போதும் படப்பிடிப்புக்கு அழைப்பு வரும். பெரும் தொந்தரவாகிப்போனது அம்முவுக்கு. ஒருமுறை, தேர்வை முடித்துவிட்டுப் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டி இருந்தது. அந்தத் திரைப்படத்தால் அம்முவுக்குப் பல அசௌகர்யங்கள்  ஏற்பட்டன. குறிப்பாக, எந்தவித அடிப்படைத் தேவைகளையும் தயாரிப்புக்குழு நிறைவேற்றித் தரவில்லை. மேக்கப் சாமான்கள் முதல் உடைகள் வரை சொந்தச் செலவிலேயே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. போதாக்குறைக்குப் பட வசனங்களில், ஏகப்பட்ட இலக்கணப்பிழைகள். இதனால், வசனங்களைத் திருத்தும் பணியையும் ஜெயலலிதாவே செய்யவேண்டியதானது. இறுதியாக, ‘சங்கர் கிரி எடுப்பது டாகுமென்டரி அல்ல; வழக்கமான ஒரு வணிக சினிமா’ என்ற இன்னோர் அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. இத்தனையையும் பொறுத்துக்கொண்டு ஒருவழியாக நடித்து முடித்தார் அம்மு.

p82a.jpg

பல வருடங்களுக்குப் பின் அம்மு சினிமாத்துறைக்குள் நுழைந்து புகழ்பெற்ற நடிகையான பிறகுதான் ‘எபிசில்’ திரைப்படம் வெளிவந்தது. தன் மனதுக்குப் பிடிக்காமல் நடித்த அந்தப் படத்தை அம்மு இறுதிவரை பார்க்கவேயில்லை. அதுதான் அம்மு!

எபிசிலைத் தொடர்ந்து ‘லாரி டிரைவர்’ என்ற படத்தில், நடனமாதுவாக ஜெயலலிதா நடித்திருந்தார். நடன இயக்குநர் சோப்ராஜ் மாஸ்டரின் வற்புறுத்தலால் அந்தப் படத்தில் நடித்தார் அம்மு. அதுவும் பல வருடங்களுக்குப் பிறகுதான் வெளியானது. படம் வெளியானபோது தென்னகத்தின் புகழ்மிக்க நடிகையாகியிருந்தார் அம்மு. ரசிகர்கள், `நீங்கள்தானா அது?’ என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

சர்ச் பார்க் பள்ளியில் அம்மு இறுதியாண்டு படித்துவந்த நேரத்தில், அவருக்குக் கதாநாயகி வாய்ப்பு வந்து கதவைத் தட்டியது. வழக்கம்போல இதுவும் எதிர்பாராத வாய்ப்பே. ‘நன்னகர்த்தவ்யா’ என்ற அந்தக் கன்னடப் படத்தின் இயக்குநர் வேதாந்தம் ராகவய்யா.

கதைப்படி, படத்தின் கதாநாயகி சிறுவயதுப் பெண். விவரம் தெரியாத வயதில் அவளுக்குத் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து மணமக்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கையில், அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி, மணமகன் இறந்துவிடுகிறான். மற்றவர்களுக்கு ஆபத்தில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பங்களையே அறியாது, இளம் வயதிலேயே விதவையாகி நிற்கும் கதாநாயகியின் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள் தயாரிப்பாளர்கள். படத்தில் கதாநாயகியின் மாமியார் வேடம் சந்தியாவுக்கு.

பல பெண்களுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள். ஒருவரும் தேறாததால், கதாநாயகி இடம்பெறும் காட்சிகளைத் தவிர்த்து மற்றவற்றை எடுத்து முடித்தனர். இனி கதாநாயகி அவசியம் தேவை. விரக்தியில் இருந்த தயாரிப்பாளர்கள் அதுகுறித்து விவாதிக்க ஒருநாள் சந்தியா வீட்டுக்கு வந்தனர்.

பள்ளியிலிருந்து அப்போதுதான் வீடு திரும்பிய அம்மு, யூனிஃபார்மை மாற்றி வழக்கமான உடை அணிந்து நடமாடிக் கொண்டிருந்ததைக் கண்ட தயாரிப்பாளர்களுக்கு, ‘சந்தியாவின் மகளையே நடிக்கவைத்தால் என்ன?’ என்று மனதில் தோன்றியது. நொடியும் தாமதிக்காமல், தங்கள் ஆசையை சந்தியாவிடம் தெரிவித்தனர்.

p82b.jpg

``மன்னித்துவிடுங்கள். எனக்கு அவளை சினிமாவில் நடிக்கவைக்கத் துளியும் ஆசையில்லை. அவளுக்கும் அதில் விருப்பமில்லை. இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு வருவதால்  படிக்க வேண்டும்”  என உறுதியாக மறுத்துவிட்டார். ஆனால், தயாரிப்பாளர்களோ தொடர்ந்து இரண்டு மாதங்கள், தி.நகர் சிவஞானம் இல்லத்துக்கு நடையாக நடந்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே...

உறுதியாக நின்ற சந்தியாவைக் கரைத்தது தயாரிப்பாளர்கள் அல்ல... பாடகி எஸ்.ஜானகி. ஆம்... படத்தின் ஒரு பாடலை சந்தியா கேட்பதற்காக ஒலிப்பேழையை அனுப்பியிருந்தனர் தயாரிப்பாளர்கள்.

கதைப்படி பெண் பார்க்க வரும் மணமகன் வீட்டார் முன், கதாநாயகி சிதார் வாசித்தபடி உருகிப்பாடும் பாடல் அது. எஸ்.ஜானகி  மிகவும் உணர்ச்சிமயமாகப் பாடியிருந்தார். பாடலைக் கேட்ட சந்தியா மனம் உருகிக்கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த மகள் அம்முவும் உணர்ச்சி மேலிட கேட்டுக் கொண்டிருந்தார். பல மாத முயற்சிக்கு ஜானகியின் பாடல் ஒரு தீர்வைத் தந்தது. “அம்மு, இவ்வளவு வற்புறுத்துகிறார்களே... இந்த ஒருமுறை நடித்துக்கொடு. இனி நான் உன்னை வற்புறுத்தமாட்டேன்” என்றார் சந்தியா. அம்மு அந்த முடிவை எடுத்துச் சில நிமிடங்கள் ஆகியிருந்தன. ஆம்... தனக்கு மிகவும் பிடித்த ஜானகியின் குரலில், தான் பாடி நடிக்கும் ஆசை அவர் மனதில் ஏற்கெனவே துளிர்விட்டிருந்தது. ஜானகியின் பாடலை ஹம் செய்தபடியே ‘ஓகே மம்மி’ என்று சொல்லிவைத்தார் அவர்.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 19

 

 

எஸ்.ஜானகியின் பாடல் இடம்பெற்ற ஒரே காரணத்துக்காகக் கைம்பெண் வேடமாக இருந்தாலும், `நன்ன கர்த்தவ்யா’ என்கிற கன்னடப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் மட்டுமே `நன்ன கர்த்தவ்யா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜெயலலிதா முதன் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தமான படம் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன சந்தியாவுக்கு. அம்மு, சினிமாவில் நடிப்பது அரசல்புரசலாகத் தெரியவந்தபோது, மகள் சந்தியாவையும் பேத்தி அம்முவையும் திட்டித் தீர்த்தார் சந்தியாவின் தந்தை ரங்கஸ்வாமி.

உறவினர்கள், நண்பர்களிடமிருந்து வேறொரு பிரச்னையும் எழுந்தது. `முதன்முதலாக சினிமாவில் நடிக்க, கைம்பெண் வேடம்தான் கிடைச்சதா? எவ்வளவுதான் பணம் தந்தாலும் மகளின் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா நீ?' என சந்தியாவை வறுத்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால், இத்தகைய நம்பிக்கைகளில் அவ்வளவாக ஆர்வமில்லாததால், சந்தியா எதையும் பொருட்படுத்தவில்லை.  `அது ஒரு தொழில்தானே? அவ என்ன நிஜமாகவா தாலி கட்டிக்கிறா? நடிப்புன்னு வந்தபிறகு இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாது’ என்று சொல்லி, கேட்டவர்களின் வாயை அடைத்தார்.

p30a.jpg

இதுகுறித்துப் பின்னாளில் ஒருமுறை பேசிய ஜெயலலிதா, ``ஆன்ட்டி சென்டிமென்ட் என்பார்களே... என்னைப் பொறுத்தவரை அது பொருளற்ற வார்த்தை. நெருங்கிய நண்பர்கள் எல்லோரும்  என் கதாபாத்திரத்தைக் கேள்விப் பட்டு ‘அமங்கலமாக உள்ளதே’ என என் தாயிடம் சொன்னார்கள். ‘நெருப்பென்றால் சுட்டுவிடாது’ எனப் பதில் சொல்லி அவர்களின் மூக்குடைத்தார் அம்மா. அந்தப் படம் வெளிவரவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின. ஆனாலும், இன்று நான் உங்கள் முன் ஒரு பிரபல நடிகையாக இருக்கிறேன் அல்லவா?'' என்றார். இவ்வளவு பகுத்தறிவுடன் இருந்த ஒருவர்மீது அதற்கு நேர்மாறான பிம்பத்தையே காலம் அளித்தது.

1964-ம் வருடம் ஏப்ரல் மாதம் மெட்ரிக் தேர்வு எழுதினார் அம்மு. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் படித்து, ஆங்கிலப் பேராசிரியையாவதுதான் அவரது  வாழ்நாள் கனவு. இந்தக் காலகட்டத்தில், சந்தியா கொஞ்சம் பொருளாதாரச் சிக்கலில் இருந்தார்.

‘நன்ன கர்த்தவ்யா’ படம்மூலம் கன்னட உலகில் அம்முவுக்குக் கிடைத்த நல்ல அறிமுகத்தையும், குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலையும் இணைத்துப்பார்த்த சந்தியாவின் மனதில் புதிய உற்சாகம் பிறந்தது. அம்முவுக்காக அவர் சத்தமில்லாமல் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். கடைசித் தேர்வு முடிந்து இரு தினங்கள் கழிந்த நிலையில், ஆதுர்த்தி சுப்பாராவ் என்ற பிரபல கன்னட இயக்குநரிடமிருந்து அம்முவுக்கு மூவி டெஸ்ட் எடுக்க அழைப்பு வந்தது. அம்மா சந்தியாவின் வற்புறுத்தலுக்காகச் சென்றுவந்தார். படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தார் சந்தியா. ஆனால், இயக்குநர் ஆதுர்த்தி சுப்பாராவ், அம்முவை நிராகரித்ததோடு அவர் சொன்ன சில வார்த்தைகள் அம்முவை அழ வைத்துவிட்டது.

என்ன சொன்னார் இயக்குநர்?

`சினிமாவுக்கேற்ற முகவெட்டோ, அழகோ துளியும் இந்தப் பெண்ணிடம் இல்லை!'

p30b.jpg

மகளைத் தேற்றிய சந்தியா, அவள் ஆசைப் படியே படித்துப் பேராசிரியை ஆகட்டும் என்று முடிவெடுத்தார். தேர்வு முடிவுவர இன்னும் சில நாள்கள் இருந்த நிலையில், உட்லண்ட்ஸ் ஹோட்டலில், ‘கர்ணன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது.  அப்படத்தில் நடித்திருந்ததால் சந்தியாவுக்கும் அழைப்பு வர, மகளையும் அழைத்துச் சென்றார். அம்முவின் வாழ்வில், அவர்  புடவை கட்டிக்கொண்டு ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றது அதுவே முதன்முறை.

நிகழ்ச்சியில் அனைவரின் பார்வையும் அம்முவின் மீதே இருந்தது. `சந்தியாவுக்கு இவ்வளவு பெரிய பெண்ணா' என வியந்து பேசினர் விழாவில். நிகழ்ச்சியினிடையே பி.ஆர்.பந்துலு சந்தியாவிடம் அம்முவைப்பற்றி விசாரித்தார். `ஃப்ராக் போட்டுட்டு, சிதார் வாசிப்பாளே... அந்தப் பெண்ணா இவ? சின்ன வயசுல பார்த்தது... மடமடன்னு வளர்ந்து நிற்கிறாளே...' என ஆச்சர்யப்பட்டவர், சந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைத் தந்தார். கன்னடத்தில் தான் எடுக்கப்போகும் ‘சின்னத கொம்பே’ (தமிழில் பின்னர் சிவாஜி - தேவிகா நடித்து ‘முரடன் முத்து’ என்ற பெய0ரில் வெளியானது) படத்தில்  அம்முவைக் கதாநாயகியாக நடிக்கவைக்க அனுமதி கேட்டார். சந்தியாவுக்கு உள்ளூரப் பெரும் மகிழ்ச்சிதான். ஆனால், ஆதுர்த்தி சுப்பாராவ் தந்த கசப்பான அனுபவத்தால், ‘மகளை சினிமாவில் நடிக்கவைப்பதில்லை’ என்ற முடிவை எடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால், தமிழிலும் கன்னடத்திலும் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் வலியவந்து வாய்ப்புத் தரும்போது அதைத் தட்டிக்கழிப்பது முட்டாள்தனமாகத் தோன்றியது. கரும்பு தின்னக் கூலி தருவதாகச் சொல்லும்போது மறுப்பவர்கள் யார் இருக்கிறார்கள்?

 பந்துலுவும் சந்தியாவும் அம்முவின் முகத்தையே உற்றுநோக்கினர். அம்முவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. வீடு வந்தபின்தான் அம்முவின் அமைதிக்குக் காரணம் தெரிந்தது. ``மம்மி... இவரும் என்னை மூவி டெஸ்ட்டுக்குப்பிறகு ஏதாவது காரணம் சொல்லி நிராகரிச்சா அதை என்னால் தாங்கிக்க முடியாது. எனக்கு இனி சினிமாவே வேணாம்...'' என்று தெளிவாகச் சொன்னார் அம்மு.

இரு தினங்களுக்குப்பின் பந்துலு போன் செய்தார். அம்முவின் எண்ணத்தை அவரிடம் சொன்னபோது, பந்துலு பதறினார். ``லட்சுமிகரமா இருக்கிற குழந்தையை யாராவது நிராகரிப்பாங்களா? குழந்தைக்கு எந்த டெஸ்ட்டும் நான் எடுக்கப்போறதில்லை. நான் சொல்ற நாள்ல நேரடியா மைசூர்லே ஷூட்டிங்குக்கு வந்திடுங்க'’ என்று கூறி சந்தியாவைச் சம்மதிக்க வைத்தார்.

‘சின்னத கொம்பே’ படத்தின் கதாநாயகன் கல்யாண்குமார். கன்னட சினிமாவில் வளர்ந்துவந்த நடிகரான அவர், ஏற்கெனவே சந்தியா குடும்பத்துக்கு அறிமுகமானவர். சந்தியா சென்னைக்கு வந்த புதிதில், தங்கை வித்யாவதியுடன் அடையாறு வீட்டில் வசித்தபோது, அவர்களுடன் கல்யாண்குமார் வசித்திருக்கிறார். அம்மு அவரை, ‘சொக்கண்ணா’ என்று அழைப்பார். குழந்தையாக இருந்த அம்முவைத் தூக்கிக் கொஞ்சிய அவருடன் இப்போது அம்மு டூயட் பாட வேண்டும்.

ஏற்கெனவே குடும்ப நண்பராக இருந்தவர் தான், தன் படத்தின் கதாநாயகன் என்றதும் அம்மு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். ‘சின்னத கொம்பே’ கன்னடத்தில் மெகா ஹிட்.

தொடர்ந்து  தமிழின் முக்கிய இயக்குநரான ஸ்ரீதரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அம்முவைத் தேடி வந்தது. இப்படி ஜெயலலிதாவின் சினிமா கிராப் அடுத்தடுத்து கிடுகிடு உயரத்துக்குச் செல்ல தொடங்கியது.

தமிழில் ஜெயலலிதாவின் முதற்படமான `வெண்ணிற ஆடை' வாய்ப்பு வந்ததுகூட ஒரு சுவாரஸ்யம் நிறைந்ததுதான்!

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

 

 

படிப்பா? நடிப்பா? எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

 

ருமுறை நடிகர் நம்பியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் ஜெயலலிதா நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நம்பியாரைத் தேடி அங்குவந்த இயக்குநர் ஸ்ரீதர் ஜெயலலிதாவைப் பார்த்தார். அது ஸ்ரீதர், ‘வெண்ணிற ஆடை’ என்ற  படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்த நேரம்.

நீச்சல் குளத்தில், ஜெயலலிதாவைக் கண்டபோது தன் மனதில் கற்பனை செய்துவைத்திருந்த இளம்பெண் வேடத்துக்கு ஜெயலலிதா பொருந்திவருவார் என்ற நம்பிக்கை அழுத்தமாக விழுந்தது அவர் மனதில். அதேசமயம் ஜெயலலிதாவின் திறமையையும் அறிந்துகொள்ள விரும்பினார். ‘சின்னத கொம்பே’ படத்துக்காக ஜெயலலிதா நடித்துப் படமாக்கப்பட்ட காட்சிகளை விஜயா ஸ்டூடியோவில் திரையிட்டுக் காட்டினார் பந்துலு. இப்படித்தான் வெண்ணிற ஆடையின் கதாநாயகியானார் ஜெயலலிதா. ஆனாலும்கூட ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிப்பதற்கு அத்தனை எளிதாக ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அப்போது மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் மாநில அளவில் முதலிடமும் பெற்றிருந்தார் ஜெயலலிதா. இதற்காக மத்திய அரசு ஸ்காலர்ஷிப்  வழங்கியதற்கான கடிதம் வந்த நாளன்றுதான் சந்தியா, தன் மகளிடம் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்ப்பைப் பற்றிச் சொன்னார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், பி.யு.சி படிக்க இடமும் கிடைத்திருந்ததால், இரண்டு மாதங்களில் பந்துலு படம் முடிந்து, கல்லூரியில் காலடி வைக்க கனவு கண்டுகொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு ‘பட வாய்ப்பு’ என்பது அதிர்ச்சியைத் தந்தது.

p78a.jpg

அம்மாவிடம் நீண்டதொரு வாக்குவாதம் நடத்தினார். ``நீதானே அடிக்கடி சொல்வே... படிப்புதான் நிரந்தரம்... படிச்சி கல்லூரிப் பேராசிரியராகணும்னு... இப்ப நீயே இப்படி சொல்றியே மம்மி...” என்று கோபமாகப் பேசிய மகளை ஆசுவாசப்படுத்திய சந்தியா, தனக்குப் பட வாய்ப்பு குறைந்துவிட்டதை எடுத்துச் சொல்லியதோடு, குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் முன்புபோல் இல்லை என்பதையும் பக்குவமாகப் பேசி மகளின் மனதைக் கரைத்தார். தாயின் வார்த்தைகளால் படிப்பா, நடிப்பா எனக் குழம்பித்தவித்தார் ஜெயலலிதா.

ஒருநாள் முழுக்க யோசித்துவிட்டு இறுதியாக, ‘படம் வெற்றிபெற்றால் நடிப்பைத் தொடர்வது, இல்லையேல் படிப்பைத் தொடர்வது’ என்ற சிறிய நிபந்தனையுடன் ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதித்தார். தேர்ந்த நடிகையான சந்தியாவுக்கு, மகளிடம் நடிக்கவா தெரியாது?

சரியென ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா. ஸ்ரீதரின் ‘சித்ராலயா’ அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜெயலலிதாவின் தலையெழுத்து இனி சினிமாதான் என்பது முடிவானது.

இதனிடையே ‘சின்னத கொம்பே’ 1964-ம் ஆண்டு நவம்பரில் வெளியானது. ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. ‘வெண்ணிற ஆடை’ படத்திலும் ஜெயலலிதாவுக்குக் கைம்பெண் வேடம். வெகுளியான ஓர் இளம்பெண் வேடம். 1965-ம் ஆண்டு படம் வெளியானது.

அண்ணாசாலை, ‘ஆனந்த் தியேட்டரில்’ முதல்நாள் சிறப்புக் காட்சியை ஸ்ரீதருடன், சந்தியாவும் ஜெயலலிதாவும் பார்த்தனர். கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் இரண்டு காட்சிகள் கடக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்குப்பின் தியேட்டரில் சலசலப்பு எழுந்தது. பெரும் விசில் சத்தங்களுடன் சீட்டுகளைக் கிழித்துக் கத்தி, கலாட்டா செய்தனர் ரசிகர்கள். ஜெயலலிதா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். மகளின் முதல் தமிழ்ப்படம் என்பதால், அதைவிட அதிர்ச்சி சந்தியாவுக்கு.

கதை அம்சத்தினால் வெண்ணிற ஆடை படத்துக்கு, ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டிருந்தது. புதுமுகம் நடித்த ஒரு படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் என்பதால், கல்லூரி மாணவர்கள் படம் பார்க்க  திரண்டு வந்திருந்தனர். ஆனால், முதல் இரு காட்சிகளுக்குப்பிறகு ஏமாற்றத்தில் ரகளை செய்தனர். ``பொறுமையாகத்தான் ரசிகர்கள் இதைப் புரிந்துகொண்டு வரவேற்பார்கள்” - என்று தன் சினிமா அனுபவத்தினைக்கொண்டு ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொன்னார் ஸ்ரீதர். ஸ்ரீதரின் வார்த்தை பலித்தது. அடுத்தடுத்து வந்த தகவல்கள் மகிழ்ச்சியைத் தந்தன. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஜெயலலிதா நடிகையாகத்தான் தன் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என விதி தீர்மானித்துவிட்டதை சந்தியா உணர்ந்து உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தார். ஜெயலலிதாவின் ஸ்டெல்லா மேரிஸ் கனவு கலைந்தது.

“கல்லூரியில் சேருவதற்காக, பணத்தையும் கட்டி, புத்தகங்கள்கூட வாங்கியிருந்தேன் நான். இந்த நிலையில்தான் ஸ்ரீதர் வந்திருந்தார். அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முதல்நாள் படப்பிடிப்பே திருப்திகரமாக அமைந்தது.  என் முதல் தமிழ்ப்படத்தின், முதல்நாள் படப்பிடிப்பே குறையில்லாது அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது. படத்தின் முதல் பாதியிலே எனக்கு ஃபிராக், பேண்ட், சல்வார் மாதிரியான டிரஸ் எல்லாம் வரும். இடைவேளைக்குப் பிறகு முழுவதும் புடவைதான். அப்போ எனக்குப் புடவை கட்டத் தெரியாது. கட்டினாலும் அது புடவை கட்டின மாதிரி இருக்காது. ஏதோ புடவையைச் சுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். புடவையணிந்த நிலையில் காட்சிகள் எடுக்கப்படும் நாள்கள்ல அம்மா அவசரம் அவசரமாக அவங்க மேக்-அப், ஹேர் டிரஸ்ஸிங் எல்லாம் முடிச்சுட்டு, எனக்கு புடவைக் கட்டிவிடுவாங்க.

படப்பிடிப்பில் காட்சிகளை அப்படியே நடித்துக்காண்பிப்பார் ஸ்ரீதர். பாடல் காட்சிகளின் சில மூவ்மெண்ட்களையும் ஆடியே காண்பிப்பார். நானும் அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்தேன். பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.

p78b.jpg

படத்தில் என் நடிப்பைப் பாராட்டினார்கள் பத்திரிகை ஆசிரியர்கள்; ரசிகர்கள் கடிதம் எழுதினார்கள். திரையுலக அனுபவஸ்தர்களும் ‘சபாஷ்’ தெரிவித்தார்கள். ‘வெண்ணிற ஆடை’யில் ஆபாசமான காட்சிகள் ஒன்றும் கிடையாது. பின்னே ஏன் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாங்கன்னு இன்றுவரை எனக்குத் தெரியாது. படம் வெளியானபோது எனக்கு வயது பதினாறுதான். அதனால், நியாயப்படி நானே அந்தப் படம் பார்க்க அனுமதிக்கப் பட்டிருக்கக் கூடாது. அதனால், சில பத்திரிகைகளிலே நான் நடிச்ச முதல் தமிழ்ப் படத்தை நானே பார்க்கலைன்னுகூட செய்தி வெளியாகியது. நானும் அம்மாவும் ஆனந்த் தியேட்டரில் மேலே பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்”  - பின்னாளில் தன் முதல்பட அனுபவம் குறித்து ஜெயலலிதா இப்படி எழுதியிருந்தார்.

‘` ‘வெண்ணிற ஆடை’ கதைத் தன்மைக் காகத்தான் ‘ஏ’ முத்திரை என்பது ரசிகர்களுக்குத் தெரியாது. எனவே, முதல் 2, 3 ரீல் முடிந்தவுடனேயே ரசிகர்கள் கூச்சல் அதிகமாகிவிட்டது. படம் முடியும்வரை ரசிகர்கள் ‘போர் போர்’ என்று கத்தினார்கள்.ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி போலீஸை வரவழைத்து, ரசிகர்களின் கூச்சலை அடக்கினார். சென்னையில் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் கூச்சல் இருந்ததாகச் செய்தி வந்தது. மிகுந்த உற்சாகத்துடன், தரமான கதையமைத்து, சிறந்த புதுமுகங்களை நடிக்க வைத்து, ஒரு சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற பெருமையில் இருந்த எனக்கு, ரசிகர்களின் கூச்சல் உண்மையாகவே கவலையைக் கொடுத்தது. ஆனால், நாளடைவில் ரசிகர்கள் கதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு ரசிக்கத் தொடங்கினார்கள். நூறு நாள் வெற்றிகரமாக ஓடி எனக்கும் மன நிறைவைத் தந்துவிட்டது.

இடைவேளைக்கு முன் குதூகலமான கவர்ச்சி நடிப்பிலும், பின்னர் சோக நடிப்பிலும் ஜெயலலிதாவின் திறமை பளிச்சிட்டது” - ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ அனுபவம் இது.

‘வெண்ணிற ஆடை’ கொடுத்த புகழ் மயக்கத்தினால் இனி சினிமாவே தன் வாழ்க்கை என ஜெயலலிதா முடிவெடுத்திருந்தார்.

ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள் அந்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க விடவில்லை. `வெண்ணிற ஆடை ' தயாரிப்பில் இருந்தபோது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கும் அதிர்ஷ்டம் ஜெயலலிதாவைத் தேடிவந்தது. அதன் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவே நினைத்துப்பார்த்திராத கோணத்தில் பிரச்னை ஒன்று முளைத்தது. சினிமா உலகைப்பற்றி ஜெயலலிதா முழுமையாகப்  புரிந்துகொள்ள உதவியது அந்தச் சம்பவம்தான்!

(அம்முவின் கதை அறிவோம்)

http://www.vikatan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21

 
 

ன் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் p56b.jpgஒருவன்’. இந்த பட வாய்ப்பும் ‘வெண்ணிற ஆடை’ படத்தயாரிப்பில் இருந்தபோது வந்ததுதான்.

தமிழிலும் கன்னடத்திலும் சிறந்த படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த பந்துலு, அப்போது ஒரு தமிழ்ப்படத்தின் தோல்வியினால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார். `எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால், மீண்டும் கரையேற முடியும்' என நண்பர்கள் அவருக்கு அறிவுரை சொன்னார்கள். பந்துலுவுக்கு மனதில் ஆசையிருந்தாலும், தொடர்ந்து சிவாஜி படங்களை இயக்கியவர் எனப் பெயரெடுத்திருந்ததால்,      எம்.ஜி.ஆரிடம் செல்ல ஒரு தயக்கம் இருந்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், பந்துலுவின் திறமை மீதிருந்த மரியாதை காரணமாக  தாமாகவே முன்வந்து அவர் படத்தில் நடிப்பதாக நண்பர்கள் மூலம் தகவல் அனுப்பினார். எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் தர நண்பர்கள் சிலரிடம் சில ஆயிரங்களைக் கடனாகப் பெற்றுச் சென்றார் பந்துலு. ``எவ்வளவு வேண்டும்?’’ என்றார் பந்துலு. ``ஒரு ரூபாய் கொடுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர். பதறிப்போனார் பந்துலு. பதற்றத்துக்குக் காரணம், சினிமா உலகில் ஒரு ரூபாய் என்றால், ஒரு லட்சம். ஆனால், பந்துலுவைக் கட்டிப்பிடித்தபடி எம்.ஜி.ஆர் சொன்னார், “பயந்துட்டீங்களா, நான் கேட்டது நிஜமாகவே ஒரு ரூபாய்தான். அதுவும்கூட ஒருவேளை பின்னாளில் நான் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்” என்றார். நெகிழ்ந்து நின்றார் பந்துலு.

p56a.jpg

கதைக்கான நடிகர்கள் தேர்வின்போது கதாநாயகி பாத்திரத்துக்கு ஜெயலலிதாவைப் பரிந்துரைத்தார் பந்துலு. ஆனால், சினிமா அனுபவம் அதிகமில்லாத ஜெயலலிதா, அதற்குத் தகுதியானவரா என்ற சந்தேகம்                எம்.ஜி.ஆருக்கு எழுந்தது. பந்துலுவின் திருப்திக்காக, ‘எனக்கு விருப்பமில்லை என்றால் வற்புறுத்தக் கூடாது’ என்ற நிபந்தனையுடன்  ஜெயலலிதா நடித்த கன்னடப் படத்தைப் பார்க்க ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆருடன் ஜானகி, பந்துலு, ஜெயலலிதா, சந்தியா ஆகியோர் படம் பார்த்தனர். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எம்.ஜி.ஆர் உற்றுக் கவனித்தபடி இருந்தார். `ரசிக்கிறாரா... இல்லையா...' என்கிற பதற்றமான முகத்துடன்,  இருளையும்மீறி எம்.ஜி.ஆரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் ஜெயலலிதா.

படம் முடிந்த பிறகும் எம்.ஜி.ஆர் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. தன் இருக்கையிலிருந்து எழுந்து, பந்துலுவின் பக்கம் திரும்பி, “ம்ம்ம்... பேசலாம்...” என்றபோதுதான் ஜெயலலிதாவின் முகத்தில் மகிழ்ச்சி. ஜெயலலிதாவுடன் அவர் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை.

அதற்கு முன்னரே ஒரு நேரம் எம்.ஜி.ஆர், ‘பணம் படைத்தவன்’ படப்பிடிப்பிலிருந்தபோது அருகிலிருந்த செட்டில், ‘வெண்ணிற ஆடை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. அங்கே, ‘என்ன என்ன வார்த்தைகளோ’ என்ற பாடல் காட்சி எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தன்னுடன் நடிக்கப்போகும் நடிகையின் நடிப்புத் திறமையை நேரில் காணச் சென்ற எம்.ஜி.ஆர், “நான் ராமச்சந்திரன்” என ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்துகொண்டார். அவ்வளவு பெரிய நடிகர் தன்னிடம் சாதாரணமாக அறிமுகம் செய்த நிகழ்வு எம்.ஜி.ஆர் மீது ஜெயலலிதாவுக்குப் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. ‘சினிமாவைத் தாண்டி, தன்னை அரசியலிலும் வழிநடத்தப்போகிறவர் எம்.ஜி.ஆர்’ என்கிற உண்மை அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது. `ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை அழைத்தார். ``உன்னைப் பார்க்கும்போது எனக்கு பானுமதி அவர்களின் நினைவுதான் வருகிறது. அவரைப்போன்று உன்னிடம் துடிப்பான நடிப்புத் திறமை இருக்கிறது. நன்றாக வருவாய்’’ என ஆசீர்வதித்தார்.

p56c.jpg

எம்.ஜி.ஆர் என்ற பெரிய நட்சத்திரத்துடன்  கதாநாயகியாக நடிக்கிற வாய்ப்பு எளிதில் கிடைத்துவிட்டாலும், அதற்கான விலையை ஜெயலலிதா கொடுக்க வேண்டியிருந்தது. `ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பு வேளையில், ஒருநாள் ஜெயலலிதா உள்பட அனைத்து நடிகர் நடிகைகளும் செட்டில் இருந்தார்கள். எம்.ஜி.ஆர் வருவதாகத் தகவல் பரவ, செட்டில் எல்லோரும் எழுந்து நின்று எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொல்லத் தயாராக நின்றார்கள். பொதுவாக ஜெயலலிதா படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில், யாருடனும் பேசுவது வழக்கம் அல்ல. ஆங்கில நாவல்களைப் படிப்பார். அன்றும் எம்.ஜி.ஆர் வரும் வழியிலிருந்து சற்றுத்தள்ளி அமர்ந்திருந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். ‘எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறவருக்கு, இருக்கிற இடத்தில் நின்றபடியே நாம் வணக்கம் செலுத்துவது போலியானது’ என ஜெயலலிதா தன் வேலையில் மூழ்கியிருந்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்தபின் ஒருசிலர் ஜெயலலிதாவின் இந்த நடத்தையை எம்.ஜி.ஆரிடம் வேறுமாதிரி சொல்லி வைத்தார்கள். “நேற்று ஃபீல்டுக்கு வந்த பெண். கொஞ்சமும் மரியாதை தெரிய வில்லை. எப்போதும் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருகிறார். உங்களைச் சாதாரணமான முறையில் அணுகுகிறார்’’ என்றார்கள். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு உறுத்தலாக இல்லை எனினும், வளர்ந்துவரும் நடிகை என்பதால் ஜெயலலிதாவின் வளர்ச்சி கருதி, பந்துலுவிடம் இவ்விஷயம் குறித்துச் சொல்லிவைத்தார்.  பந்துலுவும் சந்தியாவிடம் இதைச் சொல்ல, அன்று படப்பிடிப்பு முடித்துவந்த மகளைக் கண்டித்தார் அவர். மறுநாள் காலை படப்பிடிப்புக்கு நேர மாகியும் ஜெயலலிதாவின் அறைக்கதவு திறக்கப் படவில்லை. பயந்துபோய் சந்தியா சத்தம்போட, கதவைத் திறந்து வெளியே வந்த ஜெயலலிதா, “இனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை. என் விருப்பம்போல படிக்கப்போகிறேன். என்னைத் தொந்தரவு செய்தால் எந்த முடிவையும் எடுப்பேன்” எனச் சொல்ல, பயந்துபோனார் சந்தியா. “நான் எந்தவிதத்தில் மற்றவர்களுக்குக் குறைந்தவள்? படத்தில் ஒரு கலைஞராக நான் என் பணியை ஒழுங்காகச் செய்கிறேன். மேற்கொண்டு எல்லோருக்கும் வணக்கம் சொல்லணும், எழுந்து நிற்கணும் என்பதெல்லாம் முட்டாள்தனம். அவர் படத்தின் நாயகன், நான் நாயகி. தொழில்முறையில் இருவரும் கலைஞர்கள். அவரை மதிக்கிறேன். ஆனால், அவர் வரும்போதெல்லாம் எழுந்து நிற்கணும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? இங்கு எல்லாரும் சமம். ராணி எலிசபெத் வந்தாலும், நாட்டின் பிரதமரே வந்தாலும், எனக்கு விருப்பமிருந்தால்தான் எழுந்து மரியாதை செய்வேன். அது என் விருப்பம். ஜனநாயக நாட்டில் என்னைக் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை” என ஆவேசமாகச் சொல்லி முடித்தார் ஜெயலலிதா. படப்பிடிப்பு தாமதமானதால், அப்போது பந்துலுவும் அங்கே வந்திருந்தார். ``உன் விருப்பம் போல் இரு... யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டார்கள்” என சமரசம் செய்து அழைத்துச் சென்றார் அவர். 

அரசல்புரசலாக இந்தச் சம்பவம் எம்.ஜி.ஆர் காதுக்கும் சென்றது. ‘என்ன ஆகுமோ’ என அஞ்சினார் பந்துலு.

எம்.ஜி.ஆரோ ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தார். சினிமா வளர்ச்சிக்காகத் தன்னை அண்டி, புகழ்ந்து வாழும் நடிகர் நடிகையரையே பார்த்துப்பார்த்துப் பழகிப்போன எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவின் செயல் வியப்பை அளித்தது. தன்னைப் பகைத்துக்கொண்டால் அது, தன் திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்று தெரிந்தும், அத்தனை துணிச்சலாக `படப்பிடிப்புக்கு வர மாட்டேன்' என்றதையும், `யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ளமாட்டேன்' என்கிற அவரின் உறுதியையும் கண்டு ஒருசேரத் திகைத்து நின்றார் எம்.ஜி.ஆர். அவரது மனதில், ‘இந்தப் பெண் மற்றவர்களைப்போல சாதாரணமான ஒரு நடிகை அல்ல; தனித்துவம் மிக்கவள்’ என்ற அழுத்தமான எண்ணம் உருவானது.

அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயலலிதாவை அழைத்த எம்.ஜி.ஆர், ``அம்மு... நான் உன்னை, ‘பானுமதிபோல’ என நடிப்பை வைத்துச் சொன்னேன். ஆனால், நீ நடிப்பில் மட்டுமல்ல... எல்லாவற்றிலும் அவரைப்போலத்தான்” எனப் பாராட்டினார். எம்.ஜி.ஆரின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்து நின்றார் ஜெயலலிதா!

(அம்முவின் கதை அறிவோம்)

http://www.vikatan.com/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

 

 

“ஒருவரின் வாழ்க்கையில் துயரம் வரும்போது, அதையொட்டிய ஏதோவொரு நினைவையும் நம் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும். சில நேரம் சில சம்பவங்கள் அந்தத் துயரத்தின் அளவையும் அதிகரித்துவிடும். தீபாவளி வரும்போதெல்லாம் என் அன்னையைப் பற்றிய நினைவுகள் தானாகவே வருகின்றன. அவரோடு நான் கொண்டாடிய கடைசி தீபாவளியும் என் நினைவில் நிழலாடி நெஞ்சைப் பிழிகிறது” - ஜெயலலிதா 1972-ல் ஒரு சினிமா இதழுக்கு அளித்த பேட்டி இது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி தினம்... தமிழக அரசியலில் கிட்டத்தட்ட தன் வாழ்வின் சரிபாதி வருடங்களைத் துணிச்சல்மிக்க அரசியல் தலைவராகவே கழித்த ஜெயலலிதா, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தருணம் அது. ஒருவேளை சுயநினைவோடு இருந்திருந்தால் அவர் மனதிலும் சோகம் நிரம்பிய ஒரு தீபாவளி பற்றிய நினைவு வந்து போயிருக்கலாம்... அது, 1971-ம் வருட தீபாவளி...

பொதுவாக, தீபாவளி உள்ளிட்ட எந்தப் பண்டிகையிலும் ஜெயலலிதா அவ்வளவாக ஆர்வம்கொண்டிருந்ததில்லை. பத்திரிகை பேட்டி ஒன்றில் “நீங்கள் தீபாவளிக்குப் புத்தாடை அணிவீர்களா?” என்ற கேள்விக்கு, “நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மட்டுமே அணிவேன். என்னைப் பொறுத்தவரை தீபாவளி என்றால் எல்லோரும் தமாஷாக, வேடிக்கையாகச் சேர்ந்து கொண்டாடும் ஒருநாள் அவ்வளவுதான்!'' எனக் கூறியவர் அவர். இதே ஜெயலலிதாதான், அதற்கு முரண்பட்ட விதத்தில், அந்தத் தினங்களைத் தன் இளமைப்பருவத்தில் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்திருக்கிறார். அதற்கும் காரணம் உண்டு. சந்தியா பிசியான நடிகையாக ஆனபின்,  குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது அரிதாக இருந்தது. அதனால் விசேஷ தினங்களையொட்டி, சந்தியா கண்டிப்பாகப் படப்பிடிப்புக்கு ‘குட் பை’ சொல்லிவிடுவாராம். தாயுடன் நேரம் செலவழிக்கப்போகிற இந்தப் பண்டிகை நாள்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பாராம் ஜெயலலிதா.

p160a.jpg

எந்தத் தீபாவளியைத் தன் தாயின் அரவணைப்புக்காக வரவேற்று மகிழ்ந்தாரோ, அதே ஒரு தீபாவளி நாளையே தன் வாழ்வில் மறக்க முடியாமல் நெஞ்சில் சுமந்து நின்றார் இறுதி நாள்களில்.

1971-ல், தென்னகத்தின் புகழ்மிக்க நடிகையாக ஜெயலலிதா வளர்ந்திருந்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு ஒருகாலத்தில் படப்பிடிப்புக்காக சுற்றிச்சுழன்ற சந்தியா இப்போது நடிப்பதைக் குறைத்துக்கொண்டு மகளின் கால்ஷீட்டைக் கவனித்துக்கொண்டிருந்தார். தாயுடன் நேரம் செலவிட மகளுக்கு நேரம் கிடைக்காதபடி, நிலைமை தலைகீழாகியிருந்தது.

தீபாவளிக்குச் சில நாள்களுக்கு முன், தன் மகளுக்காக தியாகராய நகரின் பிரபல துணிக்கடைக்கு சந்தியா நேரில் சென்று விதவிதமான டிசைன்களில் பத்துக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த பட்டுச் சேலைகளை வாங்கி வந்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து திரும்பிய ஜெயலலிதா, அம்மா வாங்கி வந்த சேலைகளைப் பார்த்துப் பூரித்துப்போய் நின்றார். தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகான சேலைகளைத் தேர்வு செய்திருக்க முடியாது எனத் தன் தாயைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம் ஜெயலலிதா. “எல்லாமே உனக்குதான் அம்மு” என்றார் சந்தியா. “உனக்குச் சேலை வாங்கிக்கலையா?” என எதிர்க்கேள்வி கேட்டார் ஜெயலலிதா. “இந்த வயதில் எனக்கு எதற்கு விலையுயர்ந்த சேலை? உன் வயதில் இருந்தபோதே ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனி நீ, கட்டி மகிழ்வதைப் பார்க்கிற மகிழ்ச்சியே போதும்...” என நெகிழ்ந்துள்ளார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா, தனக்கென ஒன்றுகூட வாங்கிக்கொள்ளாததற்காக, அவரை செல்லமாகக் கோபித்துக்கொண்ட ஜெயலலிதா, “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால், நான் இதில் ஒன்றைக்கூட தொட மாட்டேன்” என உறுதிபடச் சொன்னார்.

மகளின் பிடிவாதம் பற்றித் தெரிந்திருந்த சந்தியா, வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். தனக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து வாழும் தன் தாய்க்கு முதன் முறையாகத் துணி எடுக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. நடிக்க வருவதற்கு முன், தான் மாடலாக இருந்த தி.நகரின் பிரபல துணிக்கடைக்குச் சென்று சந்தியாவுக்காக விதவிதமான டிசைன்களில் விலையுயர்ந்த பத்துப் பட்டுப்புடவைகளை அள்ளிக்கொண்டு வீடு திரும்பினாராம்.

சந்தியாவிடம் அவற்றைக் காட்டியபோது, “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள்?” எனக் கேட்ட சந்தியாவிடம், “தீபாவளிக்கு இன்னும் நாள்கள் இருக்கில்லையா... தினம் ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கோ மம்மி” எனத் தாயைக் கட்டிப்பிடித்தபடி குறும்பாகச் சொல்லிச் சிரித்தார் ஜெயலலிதா. அவற்றில் ஒரு குறிப்பிட்ட சேலையை தனியே எடுத்து, “மம்மி நீ இதுவரை இப்படி ஒரு சேலையைக் கட்டியிருக்க மாட்டே... அதனால், இதை மட்டும் தீபாவளி அன்றைக்கு கட்டிக்க. ஸ்பெஷலா தெரிவே” என்று தாயின் கைகளில் அதை தந்துவிட்டுச் சென்றார் ஜெயலலிதா.

p160b.jpg

தீபாவளி தினம் வந்தது. புதுப் புடவைக் கட்டி உற்சாகமாகப் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருந்த மகளை, பெருமிதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தியா. ஆனால், எவ்வளவு வற்புறுத்தியும் மகள் வாங்கித்தந்த சேலையை அன்று முழுவதும் அணிந்துகொள்ளவில்லை. தான் புதிய சேலையை அணியாததில் மகளுக்கு இருந்த மனவருத்தத்தைப் புரிந்துகொண்ட சந்தியா, “விரைவில் அதில் ஒன்றைக் கட்டுகிறேன்” என அன்றிரவு மகளின் தலையைத் தடவிக் கொடுத்தபடி ஆறுதல் சொன்னார். அப்படிச்சொல்லி காலம் தாழ்த்தினாரே தவிர, மகளின் ஆசையை நிறைவேற்ற வில்லை.

ஜெயலலிதாவின் ஆசையை சந்தியா நிறைவேற்றும் ஓர் நாள் வந்தது. ஆம்... தீபாவளி முடிந்த சில நாள்களில் சந்தியா  உடல்நலம் பாதிக்கப்பட்டார். மகள் படப்பிடிப்புக்குச் சென்று விட்ட ஒருநாளில் சந்தியா ரத்த வாந்தி எடுக்கவே, பதறிய உறவினர்கள் அவரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். எப்படியும் பிழைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில், “ஷூட்டிங்கில் இருந்த மகளுக்குத் தகவல் சொல்ல வேண்டாம்” என உறவினர்களுக்கு உத்தர விட்டிருந்தார் சந்தியா. ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. படப்பிடிப்பிலிருந்து வந்து பார்த்த ஜெயலலிதா அதிர்ச்சியடைந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அதற்கு மறுதினம் மரணமடைந்தார் சந்தியா.

சந்தியாவின் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. உறவினர்களும் திரையுலக நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தனர். சந்தியாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு சம்பிரதாயங்களைச் செய்த புரோகிதர்கள், ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி ‘இறந்தவரின் உடலில் புதுப்புடவை சாத்த வேண்டும்’ என்று சொல்ல, விறுவிறுவென சந்தியாவின் தங்கை வித்யாவதி உள்ளே சென்று சந்தியாவின் பீரோவிலிருந்து அவரது சேலை ஒன்றை எடுத்து வந்தார். சந்தியாவின் உடல்மீது அந்தச் சேலை போர்த்தப்பட்டது. வீட்டு ஹாலின் நடுநாயகமாகத் தாயின் உடல் அருகே அழுதபடி இருந்த ஜெயலலிதா, தலைநிமிர்ந்து பார்த்தார். சந்தியா உடல்மீது போர்த்தப்பட்டிருந்த சேலையைப் பார்த்த அந்தக்கணத்தில் பெருங்குரலெடுத்து கதறினார் ஜெயலலிதா. ஆம். சந்தியாவின் உடலில் போர்த்தப்பட்ட அந்தப்புடவை, ‘ஸ்பெஷல்’ எனத் தன் அம்மாவிடம்  ஜெயலலிதா கொடுத்த அதே சேலை...

“வாழ்க்கையில் இருளும் உண்டு; ஒளியும் உண்டு. ஆனால், இரண்டும் எப்போதும் நிரந்தரமாக இருக்காது. அந்த இருள் என் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தத் தீபாவளியைக் சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்ந்த சில நாள்களில் என் தாயாரின் மறைவினால் ஏற்பட்டது. என்னால் தாங்கமுடியாத பேரிடி... துயரம் இது...” - அந்த தீபாவளி குறித்துப் பின்னாளில் ஜெயலலிதா வெளியிட்ட வேதனையான வார்த்தைகள் இவை.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

 

 

ஜெயலலிதா நடித்த ‘வெண்ணிற ஆடை’ படமும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் உருவாகிக்கொண்டிருந்தன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஜெயலலிதாவோ சோகமாக இருந்தார். காரணம், அவருடன் ‘சர்ச் பார்க்’ பள்ளியில் படித்த வகுப்புத் தோழிகளில் 20-க்கும் அதிகமானோர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சேர்ந்திருந்ததுதான். ‘ஒரு நாளாவது கல்லூரி மாணவியாக இருக்க வேண்டும்’ என்கிற ஆசை அவர் மனதில் எழுந்தது. கல்லூரியில் சேரவில்லையென்றாலும் அவர் அட்மிஷன் கிடைக்கப் பெற்றவர்தானே.

படப்பிடிப்பு இல்லாத ஓர் ஓய்வு நாளில், துணிச்சலாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரிக்குச் சென்று வகுப்பறையில், தன் தோழிகளுடன் பெருமிதமாக அமர்ந்துகொண்டார். ஆர்வக்கோளாறு காரணமாக நோட்டு-புத்தகம் எதுவும் கொண்டு செல்லவில்லை ஜெயலலிதா. பாடம் நடத்தி முடிந்ததும் ‘மாணவிகள் எழுதுகிறார்களா’ எனப் பார்வையிட்டபடி ஜெயலலிதாவின் அருகில் வந்த பேராசிரியர் அதிர்ச்சியடைந்தார். ஜெயலலிதா திருதிருவென முழித்தபடி இருந்ததே காரணம். `சினிமா விஷயத்தைச் சொல்லிவிடலாமா' என்கிற குழப்பத்துடன் நின்ற ஜெயலலிதாவைக் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றார் அந்தப் பேராசிரியர்.  அடுத்த வகுப்பு தொடங்கும்முன் நடிகை ஜெயலலிதாவைச் சூழ்ந்துகொண்டு தோழிகள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். வகுப்புக்குள் நுழைந்த பேராசிரியர், ஜெயலலிதாவைச் சூழ்ந்து நின்று மாணவிகள் பேசுவதைக் கவனித்து, காரணம் கேட்டார். அவர்கள் ஜெயலலிதா சினிமாவில் நடிப்பதைச் சொல்லிவிட்டனர். அடுத்த நொடியே எரிச்சலானார் அவர். `விருந்தினராக வந்து அரட்டை அடித்துவிட்டுப் போக இது ஒன்றும் படப்பிடிப்புத்தளம் அல்ல...' என ஜெயலலிதாவை நிற்க வைத்து வார்த்தைகளால் விளாசித் தள்ளிவிட்டார் பேராசிரியர். கல்விக் கனவை அன்றோடு மூட்டைக் கட்டி விட்டார் ஜெயலலிதா.

p63a.jpg

‘வெண்ணிற ஆடை’ வெளியான வேளையில், தான் படித்த சர்ச் பார்க் பள்ளி வழியே ஜெயலலிதா செல்ல நேர்ந்தது. பள்ளியைக் கடந்தபோது மனம் பழைய ஆசிரியர்களைக் காண விரும்பியது. தான் இப்போது திரைப்பட நடிகை என்பதால், அதுகுறித்து ஆசிரியர்கள் பெருமைப் படக்கூடும் என்கிற எண்ணமும் அவர் மனதில் ஓடியது. அதை நேரில் காணும் ஆவலும் உள்ளுக்குள் எழ, ஆசையுடன் உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் சில ஆசிரியைகள் ஆர்வமுடன் வந்து பேசினார்கள். ஆனால், அவர்கள் பேச்சில், தங்கள் மாணவி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை ஆகிவிட்டார் என்பதற்கான  பெருமிதம் எங்கேயும் தென்படவில்லை. `நன்கு படிக்கும் மாணவியான நீ ஏன் சினிமாவில் சேர்ந்தாய்... உன் திறமையால் நீ பெரிய பெரிய உயரங்களைத் தொடுவாய் என நினைத்தோம்... நீ இப்படி செய்துவிட்டாயே...' என வருந்தவே செய்தார்கள். இது, ஜெயலலிதாவுக்கு அவமானமாக இருந்தது. 

‘ஆயிரத்தில் ஒருவன்’ விறுவிறுவென தயாராகிக்கொண்டிருந்தது. கன்னடம், தமிழ் இரண்டிலும் அதுவரை ஜெயலலிதா நடித்த படங்களில் ரொமான்ஸ் கதாநாயகி வேடம் இருந்ததில்லை. காதல் ரசம் சொட்டும்படி வசனம் எழுதப்பட்டிருந்தாலும், கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான நெருக்கமான காட்சிகள் இருந்ததில்லை. ஆனால், `ஆயிரத்தில் ஒருவ'னில் சில காட்சிகள் அப்படி அமைக்கப்பட்டிருந்தன. ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்ற  டூயட் பாடலுக்காக முதல் இரவுக் காட்சி போன்று செட் அமைத்ததோடு, பூக்களாலேயே நெய்யப்பட்டது போன்ற புதுமையான உடையை ஜெயலலிதாவுக்கு அணிவித்துப் படம்பிடித்தனர். அந்தப் பாடல் காட்சியில், கட்டிலில் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்றும் ஒரு ஷாட் எடுக்கப்பட்டது. காட்சிப்படி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அருகில் வந்து கட்டியணைக்க ஜெயலலிதாவின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. வியர்த்துப்போனது முகம். எவ்வளவு முயன்றும் அந்த சங்கடத்தை அவரால் மறைக்க முடியவில்லை. என்னவென்று கேட்டார் எம்.ஜி.ஆர். ``ஒன்றும் இல்லை சார்...’’ என உதடுகள் சொன்னாலும், உடல் உதறலிலேயே இருந்தது. சினிமாவுக்கு இன்னும் பழகாத சிறு பெண்ணுக்கு ஏற்படும் இயல்பான கூச்சம்தான் அது என்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டு பந்துலுவிடம் காட்சியமைப்பை சற்று மாற்றும்படி சொல்லிவிட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.

p63b.jpg

படப்பிடிப்பில் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நம்பியார் சிரித்து விட்டார். அவருடன் இருந்த சாண்டோ சின்னப்பா தேவர் பதறிப்போனார். காரணம், அப்போது அவர் எடுக்கவிருந்த ‘கன்னித்தாய்’ படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார். ‘‘என்னம்மா நீ... லட்சம் லட்சமாகப் பணம் போட்டுப் படம் எடுக்கிறோம். நீ என்னடான்னா பயப்படறியே... எல்லாம் நடிப்புதானே, தைரியமாக நடிக்க வேணாமா... டைம் கிடைச்சா சின்னவரோட சரோஜாதேவி நடிச்ச படங்களைப் பாரு. அந்தப் பொண்ணு எப்படி ஃப்ரியா ஆக்ட் பண்ணியிருக்குன்னு பார்த்தா உனக்கு பயம் போயிடும்” எனத் தயாரிப்பாளருக்கே உரிய பதற்றத்தோடு அறிவுரை சொன்னார் சின்னப்பா தேவர். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. ‘சினிமா ஒரு தொழில். இங்கு உள் உணர்ச்சிகளுக்கு இடமில்லை’ என்பதை மனதுக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டார் ஜெயலலிதா. திட்டமிட்டபடி அதே காட்சி அன்றே எடுக்கப்பட்டது. அம்மா சொல்லிப் புரியாத சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையின் நெளிவுசுளிவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது ஜெயலலிதாவுக்கு.

கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு மத்தியில், வண்ணப்படமாக வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட் ஆனது. 100 நாள்களைத் தாண்டி ஓடி ஜெயலலிதாவுக்கும் நல்ல பெயரைத் தேடிக்கொடுத்தது. நடுத்தர வயது தோற்றம்கொண்ட நடிகைகளையே அதுவரை தன் தலைவரின் கதாநாயகிகளாகப் பார்த்துவந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மிக இளமையான, அசல் கல்லூரிப்பெண் போன்ற துறுதுறுப்பான நாயகியைக் கண்டதும் கொண்டாடித் தீர்த்தனர். எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது ஜெயலலிதாவுக்கு. தன்னை இளமையாக வெளிப்படுத்திக்கொள்வதில், கதாநாயகிக்குரிய பங்கைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அடுத்தடுத்து தன் படங்களில் ஜெயலலிதா இடம்பெற வேண்டும் என மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில், அவருடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்த நடிகை என்ற பெயர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. எட்டு ஆண்டுகளில் அவருடன் 28 படங்கள் ஜோடியாக நடித்து முடித்திருந்தார். 1965-ம் ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடிப்பில், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏழு திரைப்படங்கள் வெளியாகின. அத்தனையும் வெற்றிப்படங்கள்தான். தெலுங்கில் அவரது முதல் படமான ‘மனுசுலு மமதலு’வும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

p63c.jpg

தமிழ் சினிமாவின் மற்றொரு ஜாம்பவானான சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 1966-ல்தான் ஜெயலலிதாவைத் தேடிவந்தது. அது கதாநாயகி வேடமல்ல. ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் மகள் வேடம். 1968-ல் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜியுடன் முதன்முறையாகக் கதாநாயகியாக அவர் நடித்தார்.

1966 -ம் ஆண்டில், எம்.ஜி.ஆருடன் ‘முகராசி’, ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ படங்களில் நடித்தார். ‘முகராசி’ படம் தயாரிப்பில் இருந்தபோது, படத்தின் இயக்குநரும் சின்னப்பா தேவரின் தம்பியுமான திருமுகம் படப்பிடிப்புக்கு வர இயலவில்லை. அதனால் அன்றைய தினம் எடுக்கத் திட்டமிட்டிருந்த காட்சிகளை எம்.ஜி.ஆரே இயக்கும்படி ஆனது.

அன்று எடுக்கப்படவிருந்த ஒரு காட்சியில், கதாநாயகன் எம்.ஜி.ஆர் கோபத்துடன் நடந்து செல்ல... கதாநாயகி ஜெயலலிதா, `அத்தான்! நில்லுங்கள்! அத்தான்! போகாதீர்கள்!’ என்று அழுது குரல் கொடுத்தபடியே, பின்னால் ஓடித் தடுக்க வேண்டும். அந்தக் காட்சியைப் படம்பிடிக்க கேமராவைத் தயார்படுத்திய எம்.ஜி.ஆர், ஒத்திகைக்காகப் படத்தின் உதவி இயக்குநரான மாரிமுத்துவைத் தன்னைப்போல் நடந்துசெல்ல வைத்து ஜெயலலிதாவை வசனம் பேசியபடி ஓடச் சொன்னார். மாரிமுத்து, ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமான நபரும்கூட. பார்த்தாலே சிரிப்பு வரும் தோற்றம் அவருடையது. 

எம்.ஜி.ஆர், ‘ஷாட் ரெடி’ என்றதும் ஒத்திகை தொடங்கியது. சொன்னபடி மாரிமுத்து கோபமாக நடக்க ஆரம்பித்தார். வசனம் எழுதப்பட்ட கோப்புகளைக் கையில் பிடித்தபடியே... மூக்குக் கண்ணாடி, தோளில் துண்டு, சற்று கூன் விழுந்த தோற்றத்துடன் அவர் நடந்துசென்ற விதத்தைப்பார்த்த ஜெயலலிதாவுக்குச் சூழ்நிலை மறந்து குபுக்கென சிரிப்பு வந்துவிட்டது. இதனால் அழுவதற்குப் பதிலாகச் சிரித்தபடியே  ‘அத்தான்’ என்பதற்குப் பதிலாக ‘மாரிமுத்து அண்ணே! மாரிமுத்து அண்ணே! நில்லுங்க! போகாதீங்க!’ என்று குரல் கொடுத்தபடி அவரைப் பின்தொடர்ந்தார் ஜெயலலிதா. இந்த உற்சாகத்தில் விளையாட்டுத் தனமாகத் தாவிக் குதித்தபடி ஓடினார்.

அப்போது சட்டென படப்பிடிப்புத் தளத்தில் ஒருவித மவுனம் நிலவியது. ஒன்றும் புரியாமல் விழித்து நின்றார் ஜெயலலிதா. எல்லோருடைய பார்வையும் அவர்மீது பரிதாபமாகப் படிந்திருந்தது. குழப்பத்துடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தார். டிராலி மீது நின்றிருந்த எம்.ஜி.ஆர் தன் மூக்கை, இடது கைவிரல்களால் அழுந்தத் தேய்த்துக்கொண்டிருந்தார். கடுங்கோபம் கொண்டால், எம்.ஜி.ஆரிடம் அந்த மேனரிஸம் வெளிப்படும் என்பது சினிமா உலகில் இருப்பவர்களுக்குத் தெரியும்.

(அம்முவின் கதை அறிவோம்!)

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24

 
 
 

அம்மாவின் கதை எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

 

டப்பிடிப்புத்தளத்தில் விளையாட்டுத் தனமாகத் தாவிக் குதித்தபடி ஓடினார் ஜெயலலிதா. அதைப்பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், “சிரித்து முடித்துவிட்டாயா? விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டதா? இங்கே வேலை செய்ய வந்திருக்கிறோமா, விளையாட வந்திருக்கிறோமா... இனியாவது ஒத்திகை பார்க்கலாமா?’’ என்று கடுகடுத்தார்.

அன்றைய தினம் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததும் செட்டில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தார் ஜெயலலிதா. அப்போது, ``நான் கோபமா பேசிட்டேன்னு வருத்தப்படறியா அம்மு? ஜாலியா காலேஜ் போகவேண்டிய வயசுல, சினிமாவுக்கு வந்திட்டே. அது உன் தவறில்லை. ஆனால், இது பல பேரோட எதிர்காலம் சம்பந்தப்பட்ட தொழில். லட்சம் லட்சமா முதலீடு போட்டு, படம் எடுக்கற முதலாளிக்கு நம்மால நஷ்டம் வரலாமா? இந்தப் படம் தோத்துட்டா நமக்கு வேற படம் கிடைச்சிடும். ஆனா, தயாரிப்பாளருக்கு..?'' - எம்.ஜி.ஆரின் பேச்சிலிருந்த நியாயத்தையும் தொழில்மீதான அவரது அக்கறையையும் கண்டு வியந்த ஜெயலலிதா, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டதோடு அன்று முதல் தானும் அப்படி இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

p95a.jpg

திரை நட்சத்திரமாக மின்னியபோதும் தன் தாய் விரும்பியபடி, ‘நாட்டியத்தில் புகழ் பெறவில்லையே...’ என்கிற மனக்குறை அவருக்கு இருந்தது. இதற்காக 1966-ம் ஆண்டு ஒரு நாட்டிய - நாடகக் குழுவைத் தொடங்கியவர், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். இந்தக் குழுவினால் அரங்கேற்றப்பட்ட ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம் அன்று வெகு பிரபலம். நாட்டிய நிகழ்ச்சியின்போது, சினிமா பாடலுக்கு ஆடச்சொன்னால், ‘சினிமா நடனம் பார்க்க வேண்டுமானால், தியேட்டருக்குப் போங்களேன்’ என்று கறாராகக் கூறிவிடுவார். நாட்டியத்தின் மீது அத்தனை மரியாதை.
1967-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டின் போது தன் நாட்டிய நாடகங்கள் மூலம் வசூலான ஐந்து லட்சம் ரூபாயை அன்றைய முதல்வர் அண்ணாவிடம் அன்பளிப்பாக வழங்கினார் ஜெயலலிதா.

1960-களில், எம்.ஜி.ஆர், சிவாஜி என இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்து வந்தபோதும், அவர்களையும் மீறி ஜெயலலிதாவும் தனித்துத் தெரிந்தார். தனக்கு முக்கியத்துவமில்லை என்றால், அந்தக் கதையில் நடிக்க மறுத்துவிடுவார். இந்தி சூப்பர் ஸ்டார் திலீப்குமாரே நேரில் கேட்டும், தனது பாத்திரம் கறிவேப்பிலை போல் உள்ளதாகக்கூறி அவரது படத்தில் நடிக்க மறுத்தவர் ஜெயலலிதா.

1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் மூன்று படங்கள், மற்ற கதாநாயகர்களுடன் ஏழு படங்கள் என ஒரே ஆண்டில் பத்து படங்கள் நடித்து முடித்தார்.

அதற்கடுத்த ஆண்டிலோ, இருபது படங்கள். இந்த எண்ணிக்கை ஒரு நடிகையின் சினிமா வாழ்வில் பெரும் சாதனை.

எவ்வளவு புகழ் அடைந்தாலும் ஜெயலலிதாவின் இயல்பான சுபாவம் மட்டும் மாறவே இல்லை. எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில், சீனியர் நடிகையுடன் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் டைட்டில் கார்டில், யார் பெயர் முதலில் வர வேண்டும் என்பதில் சிக்கல் எழுந்தது. சீனியர் நடிகைக்குப் பின் தன் பெயர் இடம்பெற்றதை எதிர்த்த அவர், ‘`சீனியராக இருக்கலாம். ஒரு காலத்தில் பெரிய நடிகையாக இருந்திருக்கலாம். இப்போது ரசிகர்கள், ‘ஜெயலலிதா படம்’ என்றே தியேட்டருக்கு வருவார்கள். எனவே, கதாநாயகியான என் பெயரே முதலில் வர வேண்டும்’’ என வாதிட்டார். ஜெயலலிதாவின் நியாயத்தைப் புரிந்து டைட்டில் கார்டு வரிசை அவரது விருப்பப்படியே மாற்றப்பட்டது.

“எனக்கு உண்மையென்றுபட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறு வயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது. இது என் சினிமா வாழ்வைப் பாதிக்கும் எனத்தெரிந்தும், என்னால் அதை மாற்றிக்கொள்ள முடிய வில்லை. பலமுறை எனக்கு வேண்டியவர் களின் மனக்கசப்பைக்கூட இதனால் சம்பாதித் திருக்கிறேன். நண்பர்களை, ரசிகர்களைச் சந்திக்கும்போதுகூட, ‘அவர் மனம் புண்படக் கூடாதே, இவர் வருத்தப்படக் கூடாதே’ என்று உண்மைகளைப் பூசி மெழுகி மாற்றிக்கூற என்னால் முடிவதில்லை. அதனால் பாதிக்கப்படு பவர்கள் என்னை, ‘நன்றி மறந்தவள்’, ‘கர்வம் கொண்டவள்’, ‘பிடிவாதக்காரி’ என்று பல பட்டங்களைச் சூட்டுகிறார்கள். ஆனாலும் ‘ஜெயலலிதா பேசுகிறாள் என்றால், அதில் உண்மையில்லாமல் இருக்காது’ என்று ஒரே ஓர் உள்ளமாவது கருதினால், எனக்கு அது போதும். கருத்துகள் சில வேளைகளில் கசக்கும்; அதுவே, கற்கண்டாக இனிப்பதும் உண்டு. அதன் சுவை மாறுபாடு, உள்ளத்தின் குறை மாறுபாட்டைப் பொறுத்ததே தவிர, கூறுபவரின் கொள்கை மாறுபாடு அல்ல” என்று பின்னாளில் தன் குணத்துக்கான நியாயத்தை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில், தன் மகளின் எதிர்காலத்துக்காக தேனாம்பேட்டையில் பத்து ஏக்கரில் இடம் வாங்கினார் சந்தியா. மகளுக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீட்டில் மகளோடு மகிழ்ச்சியாக வாழ விதி இடம்கொடுக்கவில்லை. கிரகப்பிரவேசத்துக்கு சில தினங்கள் முன் ரத்தவாந்தி எடுத்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சந்தியா, மறுதினமே மரணமடைந்தார். ஜெயலலிதாவின் வாழ்வில் முதல் பேரிடி அது. வளர்ந்து இளம்பெண்ணான பிறகும்கூட, உண்ணவும் உறங்கவும் மட்டுமன்றி உடை உடுத்துவதுவரை தாய் சந்தியா இன்றி அவர் இயங்கியதே இல்லை.

தாயால் கண்போல பாதுகாக்கப்பட்ட மகளை உறவினர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள். ஆனால், தன் இறப்பின் மூலமே மகளுக்கு சந்தியா திருஷ்டி கழிக்க நேர்ந்தது விதியின் செயல்தான். பூமி பூஜை நடந்தபோது உயிருடன் இருந்த சந்தியா கிரகப்பிரவேசத்தின்போது அந்த வீட்டில் புகைப்படமாகியிருந்தார். முதன்முறையாக வாழ்வில் தனிமையை உணர்ந்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் வந்தார். “மரணம் யாருக்கும் விதிவிலக்கல்ல. இப்படி முடங்கிக்கிடப்பதை உன் அம்மா விரும்பமாட்டார். அதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்” என்றார். தாயை இழந்த ஜெயலலிதாவுக்கு ஆறுதலாகவும் அனுசரணையாகவும் இருந்தது அந்த வார்த்தைகள்.

சந்தியா இறந்த சில நாள்களிலேயே கொத்துச் சாவிக்குக் கொடிபிடித்துக் கொண்டாடின அந்த வீட்டிலிருந்த சில உறவுகள். வீட்டின் நடு ஹாலில், தான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், நடைபெற்ற இந்தச் சம்பவத்தால், மனமுடைந்துபோனார் ஜெயலலிதா. பிற்காலத்தில், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், இதுகுறித்துப் பேசியவர், “நிபந்தனையற்ற அன்பு என்று ஒன்று எப்போதும்  இருந்ததில்லை” என உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் துயரமுமாகத் தன் வாழ்க்கை நினைவலைகளைப்  பகிர்ந்துகொண்டார். அந்த வேதனை வார்த்தைகளுக்குப் பின்னணியான முதற்சம்பவம் இதுதான்.

(அம்முவின் கதை அறிவோம்!)

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

 
 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

வாழ்க்கை எனும் போர்க்களம்எஸ்.கிருபாகரன்

 

கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் நினைவிலிருந்து மீண்டு, சினிமாவில் திரும்பவும் பிஸியானார் ஜெயலலிதா.

1972-ம் ஆண்டு ‘கங்கா கெளரி’ படத்துக்காக மைசூர் சென்றிருந்த நேரத்தில், ‘நான் மைசூரில் பிறந்திருந்தாலும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி’ என்று ஒரு பத்திரிகைக்குப் பேட்டி யளித்திருந்தார். இது அங்குள்ள கன்னட மொழி உணர்வாளர்களை உசுப்பியது. படப்பிடிப்பு நடந்துவந்த பிரீமியர் ஸ்டுடியோவை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் முற்றுகையிட்டுத் தகராறில் ஈடுபட்டனர்.

84p1.jpg

‘கன்னடியர் என ஜெயலலிதா ஒப்புக் கொள்ளவில்லையெனில், இங்கிருந்து யாரும் வெளியேற முடியாது’ என அவர்கள் மிரட்டினர். பயந்துபோன தயாரிப்பாளர் பந்துலு பிரச்னையைச் சமாளிப்பதற்காக ஜெயலலிதாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். `மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாத ஒன்றைச் சொல்ல மாட்டேன்’ என ஜெயலலிதா தன் கருத்தில் உறுதியாக நின்றார். ஜெயலலிதாவைச் சிலர் தாக்க முயன்றனர். `என்ன நடந்தாலும் சரி... நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என அப்போதும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார். உயிருக்கே ஆபத்து உருவான இக்கட்டான நேரத்திலும் தன் துணிச்சலை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் குணம் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1964-ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிக்காட்டு பொன்னையா’ வரை எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. இதனால் எம்.ஜி.ஆருடன் அவருக்கு ஒரு புரிதல் உண்டானது. மேலும், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை காட்டினார் எம்.ஜி.ஆர்.
84p2.jpg
‘என் தாயின் மரணத்துக்குப் பிறகு அந்த ஸ்தானத்திலிருந்து என்னைப் பாதுகாத்தது எம்.ஜி.ஆர்தான்’ எனப் பின்னாளில் அரசியல் தலைவராக உருவெடுத்தபோது ஒரு பேட்டியில் மனம்விட்டுப் பேசினார்.

ஆனால், 1972-ல் எம்.ஜி.ஆரின் சொந்தப் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் வாய்ப்பு அளிக்காததால், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இடையே மனஸ்தாபம் உருவானதாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் ‘ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் தகராறாமே...’ என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, `தொழில்முறையில் இருவரும் கலைஞர்கள். ஒரு சாதாரண நடிகையுடன் எனக்கு என்ன மோதல் இருக்க முடியும்?’ என்றே பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.  `சிவாஜிக்கு நிகராக இன்னொரு நடிகர் தமிழகத்தில் இல்லை’ எனப் பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. இந்தப் பேட்டிகள் இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது. சில வருடங்களில், ஜெய லலிதாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. பெரும்பாலும் ஹைதராபாத்தில் தங்கியிருக்க ஆரம்பித்தார். கவலை அவர் உடல்நிலையை பாதித்தது. நடுத்தர வயதை எட்டியிருந்ததால், சினிமாவில் வாய்ப்புகள் அரிதாகின. பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க, தன் நாடகக்குழுவில் கவனம் செலுத்தினார்.

1982-ம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில், ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் ஒன்றில் அமைச்சர் ஆர்.எம்.வீ கலந்துகொண்டார். சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆரின் மனதில் கனன்றுகொண்டிருந்த நேரம் அது. அதை வெற்றிகரமாக்க பல யோசனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவின் பொருளாதார நிலையை எடுத்துச்சொல்லி, ‘சத்துணவு விளக்கக் கூட்டங்களில், ஜெயலலிதாவின் நாடகங்களை நடத்தினால், திட்டம் பற்றிய விவரங்கள் மக்களை எளிதில் சென்றடையும்’ என்றார் ஆர்.எம்.வீ. இதனால், நீண்ட பிரிவுக்குப்பின் ஜெயலலிதாவைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். சில சந்திப்புகளுக்குப்பின், கட்சியில் சேரும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் ஜெயலலிதா.  1982 ஜூன் 4 அன்று அ.தி.மு.க உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, தன் அரசியல் வாழ்க்கையைத்  தொடங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சுறுசுறுப்பைப் பார்த்து, சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழுப் பொறுப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். இந்தப் பணியோடு தன்னை முடக்கிக்கொள்ளாமல், செல்கிற இடங்களி லெல்லாம் கட்சிப் பணிகளிலும் அக்கறை செலுத்தினார். 1983 ஜனவரியில், கட்சியின் ‘கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவியை அளித்தார். இதையடுத்து, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் முதன்முறையாகப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கட்சியில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவுக்கு ‘ராஜ்ய சபை உறுப்பினர்’ பதவியளித்தார். ஜெயலலிதாவின் வாழ்வில் திருப்புமுனை அந்தப் பதவி.

1984 அக்டோபர் 5-ம் நாள் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சங்கடங்கள் அதிகரித்தன. மேற்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், அங்கிருந்த படியே தேர்த லில் போட்டி யிட்டார். பிரச்னைகளை மறந்து ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மீண்டும் ‘கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவியை வழங்கி, தன் நிலைப்பாட்டை மற்றவர்களுக்குப் புரியவைத்தார்.                            

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அவரது உடலைச் சுமந்துசென்ற ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏறி அமர முற்பட்டபோது, அவமானப்படுத்தப்பட்டார். உண்மையில் அவரது அரசியல் எதிர்காலத்தை உறுதிப் படுத்திய நாள் அதுதான். அதைத் தொடர்ந்தே எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து, எதிர் நீச்சல் போடுவதென தன் அம்மா படத்தின் முன் நின்று முடிவெடுத்தார் ஜெயலலிதா.

இந்தக் காலகட்டத்தில், ஜெயலலிதாவை எதிர்ப்பதற்காகக் கட்சியையே காவு கொடுக்கத் துணிந்தனர் சிலர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை அரசியலுக்கு அழைத்து வந்தனர். 1988 ஜனவரி முதல் நாள் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சீனியர்கள் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க-வின் ஓர் அணிக்குப் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்தார்கள்.

84p3.jpg

ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில், ஜெயலலிதா அணியினர் விரட்டியடிக்கப்பட்டு, அதிகார பலத்துடன் தலைமைக் கழகம் பூட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கைதானார் ஜெயலலிதா. ஜானகி ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின், அ.தி.மு.க இரு அணிகளாக அதகளம் செய்தபோது, ஒற்றை ஆளாக ஒரு பெரும் கூட்டத்தையே சமாளித்தார் ஜெயலலிதா.

1989-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க ஜா-ஜெ என இரு அணிகளாகப் போட்டி யிட்டது. போடிநாயக்கனூரில் வெற்றிபெற்று, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.

ஜானகி அணி ஒரே ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. கட்சியினர் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பதை உணர்ந்த ஜானகி, இரு அணிகளையும் இணைக்க ஒப்புக் கொண்டார். இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் 39 தொகுதிகளை வென்றது அ.தி.மு.க. இதனிடையே கட்சிக்குள்ளேயே ஜெயலலிதாவுக்குப் பிரச்னைகள் உருவாகின. தன் சாதுர்யத்தால் அனைத்தையும் சமாளித்தார்.

1991 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க முதன்முறையாக ஜெயலலிதா தலைமையில் வென்று ஆட்சி அமைத்தது. முதல்வராகப் பொறுப்பேற்றதும், முதல் கையொப்பத்தை ‘போலி மதுவை ஒழிக்கும் ஆணை’யில் இட்டார். தொடர்ந்து 2001, 2011, 2016 என நான்கு முறை
அ.தி.மு.க-வை அரியணையில் அமர்த்திய சாதனைப் பெண்மணி ஜெயலலிதா.

திராவிட இயக்க அரசியலில், மற்ற தலைவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஜெயலலிதாவோ பிறப்பிலிருந்தே வறுமையைக் காணாதவர். அதனால் அவரது ஆட்சியில் இயல்பான சில குறைகள் இருந்தன. அவர் தான் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் என்பதும் ஓர் அதிர்ச்சி.

ஜெயலலிதாவின் திட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தன. தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, பொது இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறை, பெண் சிறப்பு கமாண்டோ... இப்படி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சமூகநலத்துறைமூலம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் நலன் குறித்த திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

எதிர்க்கட்சிகள் அவரின் அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தன. பல நேரங்களில் தரக்குறைவான வார்த்தைகளாலும் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்தன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், கட்சியையும் ஆட்சியையும் திறம்பட நடத்திச்சென்றார். அவர் காலத்தில்தான் அ.தி.மு.க ‘சர்வாதிகாரத் தலைமை’ என விமர்சனத்துக்குள்ளானது.

2013-ம் ஆண்டு பொதுக்குழுவில், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அதுவரை பேசியிருக்காத பலவீனமான வார்த்தைகளைக் கட்சியினர் முன் உதிர்த்தார். அது, கிட்டத்தட்ட ஜெயலலிதா தன் வாழ்க்கை குறித்துச் சொன்ன இறுதி வாக்குமூலம் எனலாம்.

`பொதுவாக ஒரு பெண் குழந்தைப் பருவத்தில் தந்தையை, வளர்ந்தபின் சகோதரனை, திருமணத்துக்குப்பின் கணவனைச் சார்ந்து பாதுகாப்பான வாழ்வை வாழ்வாள். என் விதி... என் வாழ்நாளில், இதில் எதை அனுபவிக்கவும் கொடுப்பினை இல்லை. துயரம் நேரும்போது தோளில் சாய்ந்து ஆறுதலை அடைய எனக்கென்று ஒருவர் இருந்ததில்லை. தனிமைதான் எனக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. எனக்கும் என் தாய் 18 வயதில் திருமணம் செய்துவைத்திருந்தால், இன்று  மூன்று, நான்கு குழந்தைகளுக்குத் தாயாக நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். விதி எனக்கு அந்த வாய்ப்பை வழங்கவேயில்லை. வாழ்க்கை முழுவதும் போராட்டக்களமாகவே மாறிவிட்டது” என அந்தக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசினார்.

2016 செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, டிசம்பர் 5 அன்று சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார் ஜெயலலிதா. திராவிட இயக்கத்தின் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இவருக்கு எப்போதும் இடமுண்டு.

அரசியல் சாம்ராஜ்யத்தைத் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா நிச்சயம் ஓர் இரும்புப் பெண்மணிதான்!

(நிறைந்தது)

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.