Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரியனுக்காக சிவஒளி எழுதும்; அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம்

Featured Replies

சூரியனுக்காக சிவஒளி எழுதும்; அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம்

அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம்.

உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக.

வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது.

அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ?

காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். மானத்தமிழருக்கு நீங்கள் அண்டப் புழுகன் என்பது தெரியும். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிச்சை போடுகிற நாடுகளுக்கெல்லோ சொல்லிப்போட்டியள்.

அவையென்னன்டா காலி நகரிலேயே வந்து நின்று காலியின் சுற்றுலா சிறப்பையல்லோ சொல்லியிருக்கினம்.

உலகவங்கியின் தென்னாசிய பிராந்தியத்துக்கான உப தலைவரான பிறபுல் பற்றல் ஐயா எங்கட பீற்ற கெறல்ட் ஐயாவையே விஞ்சிப்போட்டார். பிறபுல் பற்றல் ஐயா உரையாற்றும் போது “ஆயுபோவன்” என மட்டும் கூறியதிலிருந்து சிறீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறிப்போட்டார்;. அப்படி என்றால் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் இருக்கென்றுதானே அர்த்தப்படுத்துகிறார். அதுமட்டுமில்லை ஒல்லாந்தரால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க காலி துறைமுகம் என்றும் சுற்றுலா துறையினரை கவரும் முகமாக உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற கட்டிட கலைஞரான ஜொப்றி பாபாவால் காலி கோட்டையின் நுழைவாயில் வடிவமைக்கப்பட்டதென்றும் கூறியுள்ளார். சரி அவற்றை உரையை விடுவம் நீங்களே காலி சுற்றுலா தளம் என்பதை நிரூபித்துப் போட்டீர்களே. இந்த நிமிடம் வரை 107 அமைச்சர்களை கொண்ட சிறீலங்கா அரசாங்கம் இலங்கை அபிவிருதித்தி சபை என்ற பெயரில் பிச்சை எடுப்பதற்காக நடத்திய நிகழ்வை காலியில் அதுவும் ஐந்து நட்சத்திர விடுதியில் (லைற் கவுஸ் கொட்டலில்) நடத்தியிருக்கிறீர்களே. இது ஒரு மிக நுண்ணிய உதாரணம் மட்டுமே உங்களுடைய அண்டப்புளுகுக்கு.

வெள்ளை மாளிகைக்கோ அல்லது அகாசி ஐயாவுக்கோ எழுதியது போல் நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுத நான் விரும்பவில்லை. தானத்தில் வாழ்கின்ற தலாதா மாளிகைக்கே நாங்கள் புஸ்வானமாக தெரிந்தால் வற்றாப்பளைக்கு தனது மிடுக்கை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளது. கெடுபிடி சொல் கேளாது என்பது போல் உங்களுக்கு “இடிதான்” சரி. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. துட்டகைமுனுக்களாக காட்டிக்கொள்ள விரும்பும் உங்களில் பலர் ஏன் சுத்த முட்டாள்களாவே இருக்கிறாhர்கள்? அடிக்கடி எங்கள் புத்திரர்களில் எத்தனை சதவீதம் உள்ளனர் என்றும் எவ்வளவு நிலப்பரப்பு எங்கள் புத்திரர்களிடம் உள்ளது என்றும் கூறும் நீங்கள் ஏன் கடந்த கால வரலாற்றுப் பாடங்களை கற்றுக்கொள்ளாதது போல் காட்டிக்கொள்கிறீர்கள்?

மணலாற்று காட்டுக்குள் நுழைந்த மாற்றான் படை 24மணித்தியாலத்துக்குள் எங்கள் தலைவரை பிடித்துவிடுவோம் என மார்தட்டியது. கடைசியில் கதறிக் கதறி ஓடினார்கள். லெப் கேணல் ஜொனியை பொறியாக வைத்தவர்களுக்கு ஜொனியின் பெயராலேயே புதைகுழி அமைத்தோம்.

யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்ததோடு புலிகள் 90சதவீதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஓலமிட்டார் ரத்வத்தை இறுதியில் ஒப்பாரியெல்லோ வைத்துக்கொண்டு திரிந்தவர். யாழ்ப்பாண வீழ்ச்சிக்குப் பிறகு எமது போராளிகளின் கதை முடிந்ததாக உங்கள் இராணுவ வல்லுனர்கள் கற்பனை பண்ணிய பிற்பாடுதானே ஈழப்போரிலே புதிய உத்வேகமும் எழுச்சியும் பிறந்தது. இரண்டு வருடங்கள் அலைக்கழிந்து தெற்குப்பதியில் மாங்குளம் வரையும் வடக்கில் கிளிநொச்சி வரையும் வந்தபிற்பாடு என்ன நடந்தது? 3நாட்களுக்குள் துட்டகைமுனுக்களின் கொட்டம் அடக்கினோம். கொக்காவிலில் இறுதிச் சடங்கு நடத்திய பின்பு சுமார் 240வருடங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் கௌரவப் போருக்கும் வழிவகுத்த ஆனையிறவுக்கான ஈமச்சடங்கை கட்டுநாயக்காவில் நடத்தியது தமிழர்படை. குறைவைக்க கூடாது என்பதற்காக தீச்சுவாலைக்கும் இலட்சார்ச்ச அர்ச்சனை நடத்தினார்கள் புலிகள்.

வெள்ளைக்காரன் வீடு தேடிவந்ததற்காகவும் எமக்கு சமாதானத்தின் மீதும் அமைதியின் மீதும் இருந்த அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நயவஞ்சகர் ரணிலோடு இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.

பலஸ்தீனத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுக்களுக்கு உண்டான நிலைதொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேசியத் தலைவர் என்ன பதில் சொன்னர் என்பது தெரியும்தானே. வன்முறையை நாமாக என்றைக்குமே தெரிந்தெடுபதில்லை என்பதற்கு அதுவும் நல்ல உதாரணம். ஆனால் எங்களுக்கு பேச்சுக்களுக்கு போக முன்னரேயே சமாதானப்பேச்சுவார்த்தைகள் விடுதலைப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்று தெரிந்திருந்தும் இராணுவ வலுச்சமநிலையை தமிழர்களுக்கு சார்பாக மாற்றியமைத்த பின்னரும் புதிய உலக ஒழுங்கிற்கு அமைவாக எமது உபாயங்களை மாற்றியமைத்தோம்.

நீங்கள் என்னவென்றால் புலி புஸ்வானம் என்றும் அவார்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாகவும் முல்லைத்தீவுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று முழங்கி கொட்டுகிறீர்கள்.

திருமலை மீது எங்களின் ஒரு எறிகணை விழும் என்றாலே அது உங்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கும், ஆனால் எமது தேசத்தின் விடுதலைக்காக தமிழர்படை செய்யவிருப்பதோ என்றைக்கும் மீள முடியாத அதிர்ச்சி.அதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் என்ன யார் வந்தாலுமே ஒக்சியன் தரமுடியாது.

புதிய இராணுவ உத்திகளால் புலிகள் நிலைகுலைந்து போயிப்பதாக கூறுகிறீர்கள். மக்களை பட்டினி போட்டு அவர்கள் மீது எறிகணைகளை ஏவி கொன்றொழிப்பது புதிய இராணவ உத்தியா?

சம்ப+ரை கைப்பற்றியமைக்காக வனிலா கேக் வெட்டி வாகரைக்கு சொக்லேட் கேக் வெட்டிய உங்களுக்கு சீனியும் கொழுப்பும் கூடிப்போய்விட்டது. தமிழீழத்துக்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டுகாரருக்கு உந்நநிலை வரக்கூடாது பாருங்கோ. நீங்கள் நினைத்துக் கூடப் பார்க்காததை எங்களால் செய்து முடிக்க இயலும். இதை செய்தும் காட்டியிருக்கிறம். இது அமெரிக்கருக்கும் தெரியும் ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கும் தெரியும். ஆதலால்தான் அவர்களுக்கு எங்கள் மீது ஏகப்பட்ட “அக்கறை”.

இதோ உங்களுக்கு விரைவில் வேப்பம் ப+ வடகத்தில் கேக் செய்து அனுப்பப் போகிறோம். எலும்பு துண்டை நக்கி திரிகிறவர்களுக்குமாக சேர்த்து. புரிகிறதா? என்ன செய்ய உங்களுக்கு புலியினுடைய வழியும் தெரியவில்லை அவர்களிகளின் மொழியும் புரியவில்லை.

சுமார் மூன்று தசாப்த காலப்பகுதியில் ஐந்து ஐனாதிபதிகள் ஆறிற்கு மேற்பட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட படைத்தளபதிகள் இவர்கள் அனைவரிற்கும் எதிராக ஒரேயொரு தலைவன் பிரபாகரன்தான் அவதாரமெடுத்துள்ளான்.

இதையாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நன்று.

மீதியை புதுவருட கிரிபத்தோடு சேர்த்து அனுப்புகிறேன். பிரித் நூலவது காப்பாற்றுகின்றதா எனப் பார்ப்போம்.

நன்றி.

அன்புடன்

சிவஒளி.

http://www.sooriyan.com

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை என்னமோ மயிர்குச்செறிற மாதிரி (முக்கியமா கறுப்பி,மதுகா,மூக்கி, கு.மா, கந்தப்பர்) இருக்கெண்டுதான் சொல்லுவாங்க, ஆனால் மற்றப்பக்கத்தில பார்த்த்தால் சிலரிண்ட (நெடுக்ஸ், குறுக்ஷு) நித்திரையை குழப்பி போட்டியளோ எண்டு தோனுது, (அட பதிலடி தருவங்களல்லோ? இலங்கையில ஒரு கெகலிய எண்டால், யாழில இரண்டு கெகலியா, தெரியும் தானே) :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.