Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கு

Featured Replies

ரவிராஜ் கொலை வழக்கு

 

3 வாக­னங்­களை ஊடு­ருவிச் சென்று ஒரு­வரை  தாக்­கு­ம­ள­வுக்கு துப்­பாக்கிச் சூடு சக்­தி­மிக்­கது : - 29 தோட்­டாக்கள் வெளிப்­பட்­டுள்­ளன; ரவிராஜ் வழக்கில் அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் சாட்­சியம்
(எம்.எப்.எம்.பஸீர்)

 யாழ். மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான லக் ஷ்மன் ஆகி­யோரைப் படு­கொலை செய்­வ­தற்­காக அவர்கள் பய­ணித்த லான்ட் குரூஸர் ரக ஜீப் வண்டி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூடா­னது மூன்று வாக­னங்­களை துளைத்­துக்­கொண்டு சென்று ஒரு­வரைத் தாக்­கு­ம­ள­வுக்கு சக்­தி­மிக்­கது

 என அரச இர­சா­யண பகுப்­பாய்­வாளர் காமினி நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார். 

கொழும்பு மேல் நீதி­மன்றில் நீதி­பதி மணி லால் வைத்­தி­ய­தி­ல­கவின் நேரடி மேற்­பார்­வையில் விஷேட ஜூரிகள் முன்­னி­லையில் இடம்­பெற்ற சிறப்பு சாட்சி விசா­ர­ணை­களின் போதே சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த வண்ணம் அவர் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார்.

நேற்­றைய தினம் நீதி­மன்ற விடு­முறைக் காலப்­ப­கு­திக்கு உட்­பட்ட தின­மான போதும், விஷேட ஜூரிகள் முனி­லையில் இடம்­பெறும் ரவி ராஜ் கொலை வழக்கு நேற்றும் வழமை போன்று விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ர­ணையின் ஆரம்­பத்­தி­லேயே வழக்கின் பிர­தான சாட்­சி­யான அரச தரப்பு சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் பிரித்­தி­விராஜ் மனம்­பே­ரிக்கு பிணை கோரப்ப்ட்­டது. குறித்த சாட்­சி­யாளர் தற்­போதும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ரது சட்­டத்­த­ரணி பிரி­ய­தர்­ஷன இந்த பிணை கோரிக்­கையை முன்­வைத்தார். இந் நிலையில் இது தொடர்பில் சட்ட மா அதி­பரின் நிலைப்­பாட்டை தெரிந்­து­கொள்­ளவும் அதன் பின்னர் அது தொடர்பில் உத்­த­ர­வொன்­றினை வழங்­கவும் தீர்­மா­னித்த நீதி­பதி மணி லால் வைத்­திய திலக, அக்­கோ­ரிக்கை தொடர்பில் இன்று ஆராய்­வ­தாக அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து ஜூரிகள் முன்­னி­லையில் சாட்சி விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இதன் போது அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் காமினி அளித்த சாட்­சியம் சுருக்­க­மாக வரு­மாறு:

' 1992 ஆம் ஆண்டு முதல் நான் அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்­று­கின்றேன். சுமார் 25 வரு­டங்கள் அத்­தி­ணைக்­க­ளத்தில் சேவை­யாற்றும் நான் தற்­போது ஆயு­தங்கள் தொடர்­பி­லான பகுப்­பாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­று­கின்றேன். 2006.11.10 அன்று அப்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவி­ராஜின் படு­கொலை விவ­காரம் தொடர்பில் இர­சா­யண பகுப்­பாய்­வு­களை செய்ய ஸ்தலம் வரு­மாறு அழைப்பு வந்­தது. அன்­றைய தினம் முற்­பகல் 11.00 மணி­ய­ளவில் நான் அங்கு சென்றேன். பொர­ளையில் இருந்து நர­ஹேன்­பிட்டி நோக்கி செல்லும் போது எல்­விட்­டி­கல தொடர்­மா­டிக்கு மிக அண்­மித்து அந்த இடம் இருந்­தது.

அந்த இடத்தில் மரூன் நிற ஜீப் வண்­டி­யொன்றும் மிட்­சு­பிசி ரக வேன் ஒன்றும் இருந்­தது. இத­னை­விட நடை பாதையில் கறுப்பு நிற பையொன்றும் அதனுள் ரீ 56 ரக துப்ப்­ககி ஒன்றும் இருந்­தது. அனைத்தும் நான் செல்லும் போது பாது­காப்­பாக அந்­தந்த இடத்தில் இருந்­தன. ஜீப் வண்டி மீது சர­மா­ரி­யான துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்­றி­ருப்­ப­தற்­கான அடை­யா­ளங்கள் இருந்­தன. 

நடை பாதையில் இருந்த கறுப்பு பையில் ரீ 56 ரக துப்­பாக்கி மேல­தி­க­மாக வெற்றுத் தோட்­டாக்­களும் இருந்­தன. அதனுள் 26 வெற்றுத் தோட்­டாக்­களும் வெளியே இருந்து மூன்று தோட்­டக்­களும் மீட்­கப்­பட்­டன.அவை­ய­னைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்­த­வை­யாக இருந்­தன. 8.62 மில்­லி­மீற்றர் X 39 ரகத்தைச் சேர்ந்­த­வை­யாகும். .

அந்த பையில் இருந்த ரீ 56 ரக துப்­பாக்கி விஷேட அடை­யா­ளங்­களைக் கொண்­டி­ருந்­தது. அதா­வது அந்த துப்­பாக்­கி­யா­னது ரீ 56 ரகத்தின் மார்க் 2 ரகத்தைச் சேர்ந்­த­தாகும். இந்த துப்­ப­க­கி­களை சீன நிறு­வ­னமே தயா­ரிக்­கின்­றது. இத்­த­கைய ரீ 56 மார்க் 2 ரக துப்­பாக்­கி­களின் சிறப்­பம்சம் யாதெனில் அந்த துப்­பா­ககி பிடி தவிர்த்து ஏனைய பகு­தி­களை கீழ் நோக்கி மடக்கி வைக்கும் வச­தி­கொண்­டது. இத்­த­கைய துப்­பாக்­கிகள் நிமி­டத்­துக்கு 600 தோட்­டாக்­களை வெளிப்­ப­டுத்தும் வல்­லமைக் கொண்­டவை. இத­னூ­டாக ஒருவர் சுடப்­படும் பட்­சத்தில் அவர் உடனே இறக்கும் சந்­தர்ப்­பமே அதிகம். இரத்த பெருக்கு அதி­க­மாக இருக்கும்.

எனினும் அந்த கறுப்புப் பையில் இருந்த ரீ 56 ரக துப்­பாக்­கி­யா­னது, சில மாற்­றங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருந்­தது. அதன் பிடிப் பகுதி நீக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அத­னுடன் தோட்­ட­ககள் தொகு­தியை தொடுக்கும் மெக­சினும் காணப்­பட்­டது. சாத­ர­ண­மாக ஒரு மெக­சினில் 30 தோட்­ட­ககள் வரை இருக்கும்.

ஸ்தலத்தில் இருந்த துப்­பா­ககி மற்றும் மெகசின் வெற்றுத் தோட்­டாக்கள் மற்றும் துப்­பா­ககிச் தோட்­டக்­களால் துளைக்­கப்­பட்­டி­ருந்த ஜீப் வண்டி உள்­ளிட்­ட­வற்றை நான் சோத­னைக்கு உட்­ப­டுத்­தினேன். விஷே­ட­மாக ஒரு­வ­ரது சட­லத்தில் இருந்து எடுக்­கப்­பட்ட தோட்டா ஒன்­றி­னையும் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய சோத­னைக்கு உட்­ப­டுத்­தினேன்.

 நான் இர­சா­யன பகுப்­பாய்­வு­களை முன்­னெ­டுத்த போது சில பொலிஸ் அதி­கா­ரி­களும் அதனை மேற்­பார்வை செய்­தனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ( தற்­போ­தைய பொலிஸ் மா அதிபர்) பிர­தா­னி­யாக செயற்­பட்டார்.

 துப்­பா­ககிச் சூட்டை மேற்­கொள்ள பயன்­ப­டுத்­தப்­பட்ட மேற்­படி துப்­பாக்­கி­யா­னது ஒரு தானி­யக்க ஆயு­த­மாகும். இத்­த­கைய துப்­பாக்கி ஊடாக சுடும் போது அது மூன்ரு வாகங்­களை துளைத்­துக்­கொண்டு சென்ரு ஒரு­வரை தககும் வல்­லமை கொண்­டது.

 சம்­பவ இடத்தில் இருந்து மீட்ட துப்­பாக்­கியை நான் ஆய்வு செய்த போது, அதன் தொடர் இலக்கம் அழிக்­கப்­பட்­டி­ருந்தை அவ­தா­னித்தேன். இத்­த­கைய ஆயு­தங்கள் உற்­பத்திச் செய்­யப்­படும் போது அதில் ஒரு இலக்கம் பொறிக்­கப்­படும். அது தொடர் இலக்­க­மாகும். அதே இலக்­கத்தில் மற்­றொரு ஆயுதம் இருக்­காது. அது சாத்­தி­ய­மற்­றது. இத்­த­கைய ஆயு­தங்­களில் 5 இடங்­களில் இத்­த­கிய தொடர் இலக்­கங்கள் இருக்கும். அதில் ஒரு இடத்­தி­லேயே 7 இலக்­கங்­களைக் கொண்ட முழு­மை­யாஞ இலக்கம் இருப்­ப­துடன் ஏனைய இடங்­களில் 5 இலக்­கங்கள் மட்­டுமே காணப்­படும்.

இந் நிலையில் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தத்தின் இலக்­கத்தை கண்­ட­றி­யவும் நான் விஷேட பரி­சோ­த­னை­களைச் செய்தேன்.

 துப்­பாக்­கியின் இயந்­திரப் பகு­தியில் உள்ள 7 இலக்­கங்­களைக் கொண்ட அந்த இல்க்­கத்தை அத­னூ­டாக வெளிப்­ப­டுத்­தினேன். அத்­துடன் இயந்­திர காப்புப் பகுதி, மத்­தியில் உள்ள ஸ்பிரிங் பகுதி, வோல்டர் பகுதி மற்றும் ரிசீவர் குட் எனும் பகு­தி­களில் உள்ள தலா 5 இலக்­கங்­களைக் கொன்ட இலக்­கங்­க­ளையும் நான் வெளிப்­ப­டுத்­தினேன். 1259899 என்­பதே அந்த ரீ 56 ரக துப்­பாக்­கியின் இலக்­க­மாகும். ஏனைய இலக்­கங்கள் 59799 என்­ப­தாகும். இந்த சோத­னை­கள பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் செய்­யப்ப்ட்­ட­தாகும். இந் நிலையில் தான் எனக்கு நீதி­மன்ற உத்­த­ர­வொன்று வந்­தது. 

அதா­வது கொழும்பு நீதிவான் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய நான் எனது பொறுப்பில் எடுத்த குறித்த ரீ 56 ரக துப்­பாக்கி மற்றும் வெற்றுத் தோட்­டாக்கள் உள்­ளிட்­ட­வற்றை இங்­கி­லாந்தின் ஸ்கொட்­லன்ட்யார்ட் பொலி­சா­ருக்கு கைய­ளிக்க உத்­த­ரவு கிடைத்­தது. அதன்­படி உரிய விதி­வி­தா­னங்­களைப் பின்­பற்றி 2008.01.16 ஆம் திக­திக்கும் 17 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் அவை கைய­ளிக்­கப்­பட்­டன. பின்னர் அவை மீளவும் எம்­மிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. அதன் பின்­ன­ரேயே கடந்த 2015 10.15 ஆம் திக­தி­யன்ரு வெற்றுத் தோட்­டாக்கள், சட­லத்தில் இருந்து மீட்­கப்­பட்ட தோட்டா ஆகி­ய­வற்றை ஒப்­பீடு செய்து ஆய்வு செய்தோம். ரவிராஜ் விவ­கா­ரத்தில் துப்­பாக்கிச் சூட்டின் போது ரீ 56 ரக துப்­பாக்­கியே பயன்ப்­ப­டுத்­தப்­பட்­ட­தையும் அது ஸ்தலத்தில் இருந்த துப்­பாக்­கியே என்பதும் இதன் போது மேலும் உறுதியானது. சடலத்தில் இருந்த தோட்டாவும், வெற்றுத் தோட்டாக்களும் அந்த ரீ 56 ரக துப்பாககியில் இருந்து வெளிப்பட்டவையாகும் என்பது இரசாயண பகுப்பாய்வு ஊடாகவும் ஜீப் வண்டிகளில் இருந்த துளைகளை மையப்படுத்தி செய்ய்பட்ட ஆய்வுகள் ஊடாகவும் உறுதியாயின . என சாட்சியமளித்தார்.

 நேற்றைய தினம் முழுவதும் அவரது சாட்சியம் மட்டுமே இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருடைய சாட்சியம் விசாரணை செய்யப்படவுள்ளது.

 நேற்றைய சாட்சியத்தின் போது துப்பாககி இருந்த கறுப்பு பை, துப்பககி, தோட்டககள் அனித்தையும் சாட்சியாளர் அடையாளம் காட்டியமை விஷேட அம்சமாகும்.மேலதிக சாட்சி விசாரணைகள் இன்று இடம்பெற்வுள்ளன. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.