Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடராஜா ரவிராஜ் படுகொலையை தேசிய உளவுத்துறை முன்கூட்டியே அறிந்திருந்தது

Featured Replies

நட­ராஜா ரவிராஜ் படு­கொ­லையை தேசிய உளவுத்துறை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தது

Sp06-1a508239422240a4d5e68ac34d3869de7100060f.jpg

 

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் யோசனை முன்வைப்பு  சாட்சிக் கூண்­டி­லி­ருந்­த­வாறு மறுத்தார் உளவுத் துறை பணிப்­பாளர்

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்.மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொ­லையை அல்­லது அத­னுடன் தொடர்­பு­டைய தகவல் ஒன்­றினை தேசிய உளவுத்துறை முன்கூட்­டியே அறிந்­தி­ருந்­தது என அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ரொஹந்த அபே­சூ­ரிய மேல் நீதி­மன்றில் யோசனை முன்வைத்தார். 

அது தொடர்பில் மேல­தி­கா­ரி­க­ளுடன் அப் போ­தைய உளவுத்துறையின் பிரதி பணிப்­பா­ளரும் தற்­போ­தைய பணிப்­பா­ள­ரு­மான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் நிலந்த ஜய­வர்  தன கலந்­து­ரை­யா­டிய பின்னர் அதனை மறைத்­த­தா­கவும் அவர் மன்றில் குறிப்பிட்டார். 

பிர­தி­வாதி தரப்பு சார்பில் மன்றில் சாட்­சி­ய­ம­ளித்த உளவுத் துறை பணிப்­பாளர் நலிந்த ஜய­வர்­த­னவை குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­போதே இதனை அவர் தெரி­வித்தார். எனினும் உளவுத் துறை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­தன பிரதி சொலி­சிற்றர் ஜென­ரலின் யோச­னையை ஏற்­றுக்­கொள்ள மறுத்­த­துடன் அதனை முற்­றாக மறுத்தார்.

 நட­ராஜா ரவிராஜ் படு­கொலை விவ­கா­ரத்தின் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சி விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில் நேற்று பிர­தி­வாதி தரப்பு சார்பில் மன்­றுக்கு சாட்­சியம் வழங்க அழைக்­கப்ப்ட்ட தேசிய உளவுத் துறை பணிப்­பாளர் நிலந்த ஜய­வர்­தனவின் சாட்­சியம் பதிவு செய்­யப்ப்ட்­டது. 2 ஆம், 3 ஆம் பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணி­யான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நோஜ பிரே­ம­ரத்ன கேள்­வி­களைக் கேட்டு நெறிப்­ப­டுத்த அவர் சாட்­சியம் வழங்­கினார்.

 அந்த சாட்­சி­யத்தின் சுருக்கம் வரு­மாறு:

' 1998 ஆம் ஆண்டு முதல் நான் பொலிஸ் சேவையில் கட­மை­யாற்­று­கின்றேன். உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மையில் இணைந்­து­கொண்ட நான் தேசிய உளவுத் துறையி­லேயே அதிக காலம் கடமை­யாற்­றி­யுள்ளேன். உண்­மையில் எங்கள் பணியைப் பொறுத்­த­வரை அங்கு கடமை புரியும் எவரும் எந்த ஒரு விடயம் குறித்தும் பூர­ண­மான தெளி­வினைக் கொண்­டி­ருக்­க­மாட்­டார்கள். அவ்­வாறே அந்த கட்­ட­மைப்பு அமைக்­கப்பட்­டுள்­ளது. எமது பிர­தான காரி­யா­ல­யத்­துக்கு மேல­தி­க­மாக மேலும் சில இடங்­களில் அலு­வ­ல­கங்கள் உள்­ளன. எனினும் தேசிய பாது­­காப்பின் அவ­சியம் கருதி அவ்­வி­டங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது.

 தேசிய உளவுத் துறை மட்­டு­மன்றி எந்­த­வொரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராலும் உளவுத் தக­வல்­களை சேக­ரிக்க முடியும். பொலிஸ் கட்­டளைச் சட்­டத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் கட­மை­யாக அது காட்­டப்­பட்­டுள்­ளது.

 உண்­மையில் நாம் உளவுத் தக­வல்கள் என எத­னையும் சேக­ரிப்­ப­தில்லை. தக­வல்­களைச் சேக­ரித்து பல்­வேறு கட்ட பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள் ஊடாக அதனை நாம் உள­வுத் தக­வ­லாக மாற்­று­கின்றோம்.

 தேசிய உளவுத் துறையின் முன்னாள் உத்­தி­யோ­கத்­த­ரான அபே­ரத்ன என்­பவர் இம்­மன்றில் ரவி ராஜ் விவ­காரம் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். எனினும் அவ­ருக்கும் எனக்கும் தனிப்­பட்ட ரீதியில் தொடர்­புகள் இல்லை. ரவி­ராஜின் படு கொலை விவ­காரம் அதுதொடர்பில் எந்த தக­வலும் எமக்கு அப்­போது கிடைக்­க­வில்லை' என சாட்­சி­ய­ம­ளித்தார்.

 இந்த சாட்­சி­யத்­தை­ய­டுத்து அரசின் சிரேஷ்ட சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய குறுக்குக் கேள்­விகள் ஊடாக சாட்­சி­யா­ள­ரான தேசிய உளவுத் துறை பணிப்­பா­ள­ரிடம் சாட்சி விசா­ர­ணை­களைத் தொடர்ந்தார். ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு தேசிய உளவுத் துறை பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிலந்த ஜய­வர்­தன வழங்­கிய சாட்­சியம் வரு­மாறு:

' நான் கட­னத்த 14 வரு­டங்­க­ளாக பொலிஸ் சேவையில் உள்ளேன். முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொலை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் என்­னிடம் வாக்கு மூலம் பெற்­றனர். அதன் போது அவர்கள், ரவி ராஜ் படு­கொ­லையை முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்­தீரா?, அது தொடர்பில் யாரேனும் தகவல் கொடுத்­த­னரா? அது தொடர்பில் விசா­ரணைச் செய்­தீரா? போன்ற கேள்­வி­களை என்­னிடம் கேட்டு வாக்கு மூலம் பெற்­றனர். அவ்­வாக்கு மூலம் எதற்­காக பெறப்பட்­டது என எனக்கு தெரியும். இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான முன்னாள் உள­வுத்துறை பொலிஸ் கான்ஸ்­டபிள் டூசேனை தெரியும். அபே­ரத்­ன­வையும் தெரியும். எனினும் தனிப்பட்ட ரீதியில் தொடர்­புகள் இல்லை. அவர்கள் தொடர்பில் விரி­வாக கூறும­ள­வுக்கு அவர்­க­ளுடன் எனக்கு தொடர்­பில்லை.

உண்­மையில் அபே­ரத்­னவின் வாக்கு மூலத்தில் அவரே எனது பெயரை குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் தெரி­வித்­துள்ளார். ஏன் அவர் அவ்­வாறு கூறினார் என்­பது எனக்கும் பிரச்­சி­னை­யா­கவே உள்­ளது என்றார்.

 இதன் போது சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய கேள்­விகள் ஊடாக சில யோச­னை­களை தேசிய உள­வுத்­துறை பணிப்­பா­ள­ரிடம் முன்­வைத்தார்.

ரொஹந்த அபே­சூ­ரிய: உமக்கும் அபே­ரத்­ன­வுக்கும் ஏதும் தனிப்­பட்ட கோப­தா­பங்கள் வைராக்கியம் உள்­ளதா?

உளவுத் துறை பணிப்­பாளர்: இல்லை, அப்­படி எதுவும் இல்லை

ரொஹந்த அபே­சூ­ரிய: ஆம்.. ரவிராஜ் படு­கொலை செயயப்பட்ட சில நாட்­க­ளுக்கு முன்னர் அக்­கொலை திட்டம் தொடர்பில் அல்­லது அத­னுடன் தொடர்புடைய தகவல் ஒன்­றினை அபே­ரத்ன உம்­மிடம் தெரி­வித்­துள்ளார். நீர் அதனை உமது மேல் அதி­கா­ரி­க­ளுடன்ன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளீர். பின்னர் மீளவும் அபே­ரத்­ன­வுக்கு அது தொடர்பில் தேட வேண்டாம் எனவும் அது பெரிய இடத்து சமாச்­சாரம் எனவும் கூறி­யுள்ளீர் என நான் யோசனை செய்­கின்றேன்.

உளவுத் துறை பணிப்­பாளர்: இல்லை. அதனை நான் முற்­றாக மறுக்­கின்றேன். அக்­கொலை தொடர்பில் எந்த தக­வலும் எமக்கு கிடைக்­க­வில்லை. மேல­தி­கா­ரி­க­ளுடன் நான் கலந்­து­ரை­யா­ட­வில்லை.

இத­னை­ய­டுத்து சாட்சி வழங்­கிய உளவுத் துறை பணிப்­பா­ளரை குறுக்குக் கேள்­வி­க­ளுக்கு உட்­ப­டுத்த பாதிக்­கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுமந்­திரன் நீதி­மன்றில் விண்­ணப்பம் செய்தார்.

 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சாட்­சிகள் மற்றும் பாதிக்­கப்பட்­டோ­ருக்கு உத­வுதல் மற்றும் அவர்­களைப் பாது­காக்கும் சட்­டத்தின் 3 (1) எ உப அத்­தி­யா­யத்தின் கீழ் இந்த விண்­ணப்­பத்தை அவர் முன்­வைத்தார். முறைப்­பாட்­டாளர் தரப்­புக்கு பாதிப்பு ஏற்­ப­டாத நிலையில் பிர­தி­வா­திகள் தரப்பால் கொண்­டு­வரும் சாட்­சி­களை குறுக்கு விசா­ரணை செய்யும் உரிமை தமக்கு உள்­ள­தாக சுமந்­திரன் வாதிட்டார்.

 எனினும் பிர­தி­வாதி தரப்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன அக்­கோ­ரிக்­கைக்கு கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். முறைப்­பாட்­டாளர் தரப்­பான சட்­டமா அதி­ப­ருக்கு வழக்கை முன்­கொண்டு முடி­யாமல் உள்­ளதா எனவும் பாதிக்­கப்பட்ட தரப்பு சாட்­சியை குறுக்கு விசா­ரணை செய்தால் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் இய­லா­மையை மன்று உறுதி செய்­வ­தாக அமையும் என வாதிட்டார்.

 இந் நிலையில் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கருத்­துக்­க­ளையும் பெற்ற நீதி­பதி மணி லால் வைத்­திய திலக, 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சாட்­சிகள், பாதிக்­கப்ப்ட்டோர் தொடர்­பி­லான சட்­டத்தின் அத்­தி­யாங்­களில் பாதிக்­கப்பட்ட தரப்பின் உரி­மைகள் உறுதி செய்­யப்பட்­டுள்ள போதும் அதில் நேர­டி­யாக குறுக்குக் கேள்விகளில் பங்கேற்க முடியும் என குறிப்பிடப்படவில்லை என்பதைக் காட்டி சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்தார். இதனையடுத்து நேற்றைய தினம் அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவுக்கு கொன்டுவரப்பட்டன.

 இந் நிலையில் இவ்வழக்கின் பிரதான சாட்சியான அரச சாட்சி மனம்பேரி பிரித்தி விராஜ் எனும் முன்னாள் பொலி கான்ஸ்டபிளை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் நேற்று மாலை வரை வழக்கு அறிக்கைகளில் திருத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் தீர்ப்பும் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-23#page-1

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் கொல்லப்பட்ட போது.. உது புலிகளின் வேலை என்று யாழ் களத்தில் எழுதினவையை ஏன் விசாரிக்கேல்ல. அவையை விசாரிச்சிருந்தா.. இப்ப டக்கி அங்கிள் பேசுறது போல மாத்திப் பேசி இருப்பினமோ என்னமோ? 

அதுசரி.. எல்லா முன்னாள் அங்கிள்களும் உள்ள போட்டினம். டக்கி அங்கிள்.. சித்து அங்கிள் மட்டும் எப்படி வெளில.... ஓ.. இன்னும்... தமிழை சாய்க்க தமிழனின் உதவி தேவை இல்ல... எதுக்கும் சிலரை மிச்சம் விட்டுத்தானே வைக்கனும்.. இல்ல ரணில் அங்கிள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு , உளவுத்துறை/ இராணுவம், ஒட்டுக்குழுவை மீறி எந்த கொலையும் நடைபெறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.