Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பில் அவசரம் வேண்டாம்

Featured Replies

புதிய அரசியலமைப்பில் அவசரம் வேண்டாம்

02-4b140173a3462da89d964b88bc929953afd29990.jpg

 

எச்­ச­ரிக்­கி­றது ஹெல உறு­மய; மீறி செயற்­பட்டால் அரசின் தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தாக அமையும் என்­கி­றது

(எம்.ஆர்.எம்.வஸீம்)

"சிங்­கள மக்­களின் மனதை வெற்­றி­கொள்­ளாமல் எந்­த­வொரு தீர்­வையும் தமி­ழர்கள் பெறமுடி­யாது"

 

நாட்டின் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­ளாமல் ஒரு­போதும் தமிழ் மக்­கள் அரசியல் தீர்வோ வேறு எந்த தீர்வோ பெற்­றுக்­கெள்ள முடி­யாது என ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­கப்­பேச்­சாளர் நிஷாந்த ஸ்ரீவர்­ண­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­படும் விதத்­திலோ பெளத்த மதத்­துக்கு அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டி­ருக்கும் அந்­தஸ்தை குறைக்கும் வகை­யிலோ அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்டால் ஜாதிக ஹெல உறு­மய அதற்கு எதி­ராக வாக்­க­ளிக்கும் எனவும் அவர் தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்­லையில் அமைந்­ துள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், ஜன­வரி மாதம் புதிய அர­சியல் அமைப்பை சமர்ப்­பிக்­கப்­போ­வ­தாக பிர­தமர் தெரி­வித்­துள்ளார். அர­சி­ய­ல­மைப்பு திருத்த  குழுவில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தலைமை வகிக்­கின்றார்.

 தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான அவர்­க­ளது கருத்தை தெரி­வித்­துள்ளார். ஆனால் ஜாதிக ஹெல உறு­ம­யவை பொறுத்­த­மட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிப்­ப­தற்கு அர­சியல் ரீதியில் இது பொருத்­த­மான காலம் அல்ல என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்­றது.  

மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணையை வழங்­கி­யது அர­சி­ய­ல­மைப்பை திருத்­து­வ­தற்­கல்ல. சட்­டத்தை நிலை­நாட்டி மோச­டி­கா­ரர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்டும் என்ற கார­ணத்­துக்கே முத­லா­வ­தாக மக்கள் அர­சாங்­கத்­துக்கு ஆணை வழங்­கி­யி­ருந்­தது. அதுதான் மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. அதனை அர­சாங்கம் தற்­போது மீறி­யுள்­ளது. ஆனால் அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு அவ­ச­ரப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்கம் அவ்­வாறு அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்கும் போது அதில் நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­படும் விதத்­திலோ பெளத்த மதத்­துக்கு அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டி­ருக்கும் அந்­தஸ்த்தை குறைக்கும் வகை­யிலோ திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் ஜாதிக ஹெல உறு­மய அதற்கு எதி­ராக வாக்­க­ளிக்கும்.

அத்­துடன் அர­சியல் அமைப்பு திருத்­தத்தில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு மத்­திய அர­சாங்­கத்தால் மீண்டும் பெற்­றுக்­கொள்ள முடி­யாத அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என வட­மா­காண சபையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது­தெ­ளி­வாக அதி­கார பகிர்­வையே காட்­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் நாடு ஒற்­றை­யாட்­சி­யாக மாட்­டாது. அத்­துடன் ஆளு­னரின் அதி­காரம் குறைக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­ம­லாக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது தெளி­வா­கவே சமஷ்டி ஆட்­சிக்கே திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.இவ்­வா­றான திருத்­தங்­க­ளுக்கு நாங்கள் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­பதை பொறுப்­புடன் கூறு­கின்றேன்.

அத்­துடன் தமிழ் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட சர்­வ­தேச வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­ற­வேண்டும் என வட­மா­கான முத­ல­மைச்சர் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்­களின் விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தாக அர­சாங்­கத்தில் யாரேனும் சர்­வ­தே­சத்­துக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்­ற­னரா என நாங்கள் கேட்­கின்றோம். அவ்­வாறு திருட்­டுத்­த­ன­மான ஒப்­ப­தங்கள் செய்­து­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் அவ்­வா­றான ஒப்­பந்­தங்­க­ளுக்கு நாங்கள் இணங்­கப்­போ­வ­தில்லை.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மக்­களின் விருப்பு வெறுப்­பு­களை அறிந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். சுமந்­தி­ரனோ, விக்­னேஸ்­வ­ரனோ அல்­லது சம்­பந்­தனோ நாட்டின் பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­ளாமல் ஒரு­போதும் தமிழ் மக்­க­ளுக்­கான அரசியல் தீர்வையோ வேறு எந்த தீர்வையோ பெற்றுக்கெள்ள முடியாது.

எனவே நாட்டில் தற்போது மக்கள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு அரசாங்கத்துக்கு மரணப்பொறியாகவே அமைந்துவிடும் என்பதில் சந்தேகமும் இல்லை. எம்மை பொறுத்தமட்டில் அரசியலமைப்பில் தேர்தல் முறைமையில் மாத்திரம் மட்டுமே தற்போதைக்கு திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் அதனையும் மீறி அரசாங்கம் செயற்பட்டால் அது அரசாங்கத்தின் தலைவிதியாகவே அமையும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-23

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லைத் தானே.. எதுக்கு அவசரம். இன்னும் ஒரு 20 ஆண்டுகளை இழுத்தடிச்சிட்டம் என்றால்.. முழு சொறீலங்காவும் எங்கட தானே.. என்று ஹெல உறுமய யதார்த்தமாகச் சிந்திப்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யும்.

எல்லாம் தமிழனுக்குள் இருந்து தமிழனாய் வாழ்ந்து தமிழனின் போராட்டத்தை காட்டிக்கொடுத்திட்டு.. இப்ப உள்ளவும் வெளியவும் உள்ளவங்களுக்கு.. வெளிச்சம்.:rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.