Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.!

Featured Replies

100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.!

 

 

70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1020380283.jpg 

ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது.

ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது.

http://www.virakesari.lk/article/14727

  • தொடங்கியவர்

ரஷ்ய ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்தது: 91 பயணிகள் பலி?

 
டுபோலேவ் டு.154 விமானம். (பிரதிநிதித்துவத்திற்காகவே) படம்: ஏ.பி.
டுபோலேவ் டு.154 விமானம். (பிரதிநிதித்துவத்திற்காகவே) படம்: ஏ.பி.
 
 

ரஷ்ய ராணுவ விமானம் Tu—154, 91 பயணிகளுடன் கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென மாயமானது. இந்த விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்தது

சிரியாவில் உள்ள ரஷ்ய முகாமுக்குச் செல்ல சுற்றுலா நகரான சோச்சியிலிருந்து புறப்பட்ட இந்த ரஷ்ய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கருங்கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமானது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

சிரியாவில் உள்ள ரஷ்ய முகாமுக்கு செல்லவிருந்த இம்ந்த ராணுவ விமானத்தில் புகழ்பெற்ற அலெக்சாந்த்ரோவ் ராணுவ இசைக்குழுவினர் இருந்தனர்.

இந்த விமானத்தில் 83 பயணிகளும் 8 ஊழியர்களும் இருந்தனர். விமானத்தை தேடும் பணியை அவசரகால சேவைகள் மேற்கொண்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 91 பேரில் 9 பத்திரிகையாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விமானத்தின் பாகங்கள் கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது சோச்சி நகரின் கடற்கரையிலிருந்து கடலி ல்1.5 கிமீ தூரத்தில் 50-70 மீ ஆழத்தில் டு-154 விமானப் பாகங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

http://tamil.thehindu.com/world/ரஷ்ய-ராணுவ-விமானம்-கருங்கடலில்-விழுந்தது-91-பயணிகள்-பலி/article9443267.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது

 
 

கடந்த ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து பதினோரு சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளில் உடல் கண்டெடுக்கப்பட்டது

 

 ரஷ்யா விமான விபத்து : முதற்கட்டமாக 10 பயணிகளில் உடல் கண்டெடுக்கப்பட்டது

சோச்சியிலிருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 92 பேரும் பலியாகி உள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய ராணுவத்தால் போற்றப்படும் அலெக்ஸாண்ட்ரோவ் என்செம்பிள் என்ற இசைக்குழுவினரின் உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

விமானி செய்த தவறு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஒன்றுதான் விபத்து நிகழ்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று ரஷ்ய போக்குவரத்துறை அமைச்சர் மேக்ஸிம் சோகோலோவ் தெரிவித்துள்ளார்.

3,000 மீட்புதவி பணியாளர்கள் ஈடுபட்டுள்ள ஒரு மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது,

http://www.bbc.com/tamil/global-38436511

  • தொடங்கியவர்

ரஷ்ய விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு

 

 

ரஷ்ய விமானத்தின் கறுப்புப்பெட்டி கருங்கடலில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

5860debfc36188fd188b459e.jpg

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் சொச்சியிலிருந்து சிரியா நோக்கி சென்ற tu-154 விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

விமானம் விபத்துக்குள்ளானமைக்கு விமானி அல்லது விமானத்தின் கோளாறு காரணமாக இருக்கலாமென முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ரஷ்ய படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 92 பேர் குறித்த விமானத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14799

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.