Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரம் என்ன விலை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்ன விலை?

-யாழின்மைந்தன்-

இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்டு ஐம்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற போதும், பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனமுரண்பாடுகள் நீக்கப்படவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா ஊன்றிய இனவாத விதை பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றது.

இந்த நிலையிலேயே சிங்களத் தேசிய இனம் சுதந்திரதின நிகழ்வை இன்று கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் தேசியமோ அறுபதாவது சுதந்திர தின நிகழ்வைப் பகிஷ்கரித்து வருகின்றது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு அடிபணியாத தமிழர்கள் மீது இன்றைய அரசு வரலாறு காணாத மனித அவலங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கை மீது விஜயன் படையெடுப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையில் வடபகுதியில் உயர் நாகரிகம் கொண்ட தமிழ் மொழி பேசும் இனமக்கள் வாழ்ந்திருப்பதை அண்மைக்காலமாக கிடைத்துவரும் தொல் பொருட் சான்றுகள் தெளிவுபடுத்தி வருகின்றன. அப்படியான சமூகம், பஞ்சாயத்து முறையிலும் நீதி வழுவாது சிறப்பாக ஆட்சி நடத்திவந்திருக்கின்றன. போர்த்துக்கேய ஒல்லாந்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில், அவர்கள் தழுவிய இந்துமதம் சோதனைக்குள்ளாகிய போதும், அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு போற்றப்பட்டு வந்திருக்கின்றன.

காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக இம்மக்கள் ஒருபோதும் போராட்டம் நடத்தவில்லை. இந்தியாவின் அண்ணல் காந்தி சுதந்திரம் வேண்டி நடத்திய போராட்டத்தினால், பிரிட்டிஷ்காரர் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியதன் காரணமாக அயல் நாடுகளான பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. "சும்மா" கிடைத்த சுதந்திரத்தால் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை சிங்கள தேசிய இனம் தனதாக்கிக் கொண்டது. சுதந்திரத்தை வழங்கிய பிரிட்டிஷ்காரர்களுக்கு பல்லின மக்கள் வாழும் இலங்கையில் தமிழ் தேசிய இனத்துக்கு சமவாய்ப்பும் நியாயமான உரிமைகளும் வழங்கப்படுமென உறுதி வழங்கியிருந்தனர்.

இலங்கையின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற டி.எஸ்.சேனநாயக்கா அன்று ஊன்றிய பேரினவாத விதை அரை நூற்றாண்டுகளாக பல பரிமாணங்களுடன் சிங்கள இனம் ஆளும் இனமாகவும் தமிழன் ஆளப்படும் இனமாகவும் மாற்றப்பட்டான். இலங்கைக்கான புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழர்களின் கடைசிப் பாதுகாப்பாக இருந்த 29 ஆவது ஷரத்து நீக்கப்பட்டது. தமிழர் தாயகம் சிங்கள குடியேற்றத்தால் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டது. தமிழர் உரிமைக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டது. இரு இனங்கள் வாழும் நாட்டில் மத உரிமைகள் நசுக்கப்பட்டதுடன் சிங்களம் ஆட்சி அதிகார மொழியாக்கப்பட்டது.

தமிழ் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லாமல், சொத்துகள் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இன அழிப்புகள் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டு போர் என்றால் போர் என தமிழன் வெட்டியும் சுட்டும் உயிருடன் எரிக்கப்பட்டான்.

இதன் எதிரொலி 1976 இல் யாழ்ப்பாண மண்ணில், தமிழ் தேசிய இனம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதில் பயனில்லையென முடிவெடுத்து தமிழ் ஈழ சுதந்திரத் தாயகம் ஒன்றைப் போராடிப் பெறுவதற்கான ஆணையை வழங்கியது. இக்கோரிக்கையை முழுத் தமிழ் தேசிய இனமும் அங்கீகரித்தமைக்கான சான்றை 1977 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பிலுள்ளது.

இது சரித்திரமாகியதுடன் தமிழ் ஈழப் போராட்டம் உலக நாடுகளில் கூர்மையடையத் தொடங்கியது. காலப்போக்கில் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்கள் தமது போராட்டத்தை வலிமையூட்ட ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் தேசியத்தின் ஒற்றுமையையும், படைப்பலத்தையும் முறியடிப்பதற்காக அரசாங்கம் பலகோடிகளை ஆயுதங்களுக்காக செலவிட்டும் வெற்றி பெறமுடியாமல் தவித்து நிற்கின்றது. தமிழ் தீவிரவாதிகளை அழித்துவிடுவோம் என கங்கணம் கட்டிய அரசு இன்று, தான் செய்யும் வன்முறைகளையும் அநியாயப் படுகொலைகளையும் மூடிமறைப்பதற்காக போரில் ஈடுபட்டுவரும் மறுதரப்பாருக்கு "பயங்கரவாதம்" என்ற முத்திரையைக் குத்திவருகின்றது. உள்ளே பயமும் வெளியில் "சமாதானப் பேச்சு" என நாடகமாடி வருகின்றது.

இந்நிலையிலே, தமிழ்ச் சமூகம் இலங்கையின் அறுபது சுதந்திர தின நிகழ்வுகளை கறுப்புத்தினமாக அனுஷ்டித்து வருகின்றது. வரலாற்றில் மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின கொண்டாட்டத்தை நினைவு கூருமுகமாக தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக தீவிரவாத இளைஞர்கள் படைத்தரப்பினரின் பாதுகாப்பையும் மீறி கறுப்புக் கொடி ஏற்றி வைத்திருந்தனர். சுதந்திரம் பெற்றபின்னர் தமிழ்ப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியிலே சில மணிநேரம் மட்டுமே தேசியக் கொடி பறந்ததே வரலாறு.

சுருங்கச் சொன்னால் தமிழன் ஒரு போதும் சுதந்திர தினம் கொண்டாடியதில்லை. கடைசியாக 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பு வரைவுகள் யாழ்ப்பாணம் நாவலர் ஆச்சிரமத்திற்கு முன்பாகவே தீயிடப்பட்டது. அப்போது காசி ஆனந்தன் உரையாற்றுகையில்;

இது அரசியல் அமைப்பல்ல. தமிழ்த் தேசியத்தைக் கூண்டோடு அழிக்கும் அடிமைச் சாசனம் என குறிப்பிட்டது. கால் நூற்றாண்டு களுக்கு மேல் நிரூபணமாகியுள்ளது. உரிமைப் போராட்டத்தில் யாழ்ப்பாண மக்களின் பங்கும் பணியும் அளவிட முடியாது.

இந்த நிலையில் இலங்கையரசின் காழ்ப்புணர்ச்சிக்குள்ளான யாழ். சமூகத்தின் மீது வரலாறு காணாத மனித அவலங்களை கடந்த ஆறு மாதகாலமாக அரங்கேற்றி வருகின்றது. இந்தக் கொடுமை போல் மனித, உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.