Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்

Featured Replies

சுமந்­திரன் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்ளார்

city-1-e9bd2251c25ab2beec950a0d2219c866103fd51d.jpg

 

பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்­றச்­சாட்டு

(எம்.சி.நஜி­முதீன்)

ஜூரிகள் சபை உறுப்­பி­னர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக இருப்­ப­தனால் ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்­பான தீர்ப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருப்­பதன் மூலம் அவர் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்ளார். இதன் மூலம் இன­வா­தத்தை விதைப்­ப­வர்கள் யார் என்­பதை விளங்­கிக்­கொள்ள முடி­கி­றது என்று முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்த்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்­கையின் நீதித்­து­றைக்கு தனித்­து­வ­மான நற்­பெயர் உள்­ளது. மேலும் நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யிலும் எமது நாட்டின் நீதி­ப­தி­க­ளுக்கு கெள­ரவம் உள்­ளது. எனினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், அண்­மையில் ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் முன்­வைத்த கருத்து சம்­பந்­த­மாக நாம் கவலை அடை­கிறோம்.  

ஏனெனில் ரவிராஜ் கொலை வழக்கில் கடற்­படை வீரர்­களே சந்­தேக நபர்­க­ளாக ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். எனினும் ஜூரி சபையின் தீர்ப்­புக்­க­மைய அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டனர். ஜூரி சபை உறுப்­பி­னர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக இருப்­ப­தனால் அத்­தீர்ப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே அதற்­கெ­தி­ராக மேன்­மு­றை­யீடு செய்­ய­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்பினர் சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார்.

மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்­கான உரிமை உள்­ளது. எனினும் அதற்கு சுமந்­திரன் எம்.பி. சுட்­டிக்­காட்டும் காரணம் உகந்­த­தல்ல. எனவே தமிழ் நபர் ஒரு­வ­ருக்கு சிங்­கள ஜூரி சபை­யினால் நீதி கிடைக்­காது எனக் கரு­து­வார்­க­ளாயின் அது மிகவும் பயங்­க­ர­மான நிலை­யாகும். இதன் மூலம் நாட்டின் நீதித்­துறை கட்­ட­மைப்பு சீர்­கு­லையும் அபாயம் உள்­ளது. ஆகவே சுமந்­திரன் எம்.பி. குறித்த கருத்தின் மூலம் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்ளார்.

மேலும் குறித்த தீர்ப்பு தொடர்­பி­லான சட்­ட­ரீ­தி­யான கார­ணங்­களை முன்­வைக்­காது சிங்­கள ஜூரி சபையை காரணம் காட்டி அத்­தீர்ப்பை ஏற்க முடி­யாது எனக்­கு­றிப்­பி­டு­வது இன­வாத சிந்­த­னை­யையே வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இதி­லி­ருந்து இன­வா­தத்தை விதைப்­ப­வர்கள் யார் என்­பதை விளங்­கிக்­கொள்ள முடி­கி­றது.

மேலும் இதற்கு முன்னர் ஜூரி சபை­மீது இவ்­வா­றான குற்­றச்­சாட்டை எவரும் சுமத்­தி­ய­தில்லை. அச்­ச­பை­யா­னது சட்ட ஏற்­பா­டு­களுக்கமை­வா­கவே தீர்ப்பு வழங்­கு­கி­றது. அதனைத் தவிர்த்து இன, மத பேதங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்ப்பு வழங்­கு­வ­தில்லை.

எனவே இவ்­வா­றான அவ­சி­ய­மற்ற கருத்­து­களைக் குறிப்­பிட்டு பிரச்­சி­னை­களை தோற்­று­வித்து முன்னோக்கிச் சென்றால் அது எங்கு போய் முடியும்? அதனால் நாட்டின் நீதித்துறைமீது மக்களின் நம்பிக்கை சீர்குலையாதா? எனவே அரசியல் இலாபங்களுக்காக முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-29#page-1

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவர்களை கொன்றவர்களுக்கு என்ன நடந்தது பேராசிரியர் பீரிஸ்?

ஏன் ஜூரிகள் பெரும்பான்மையினராக இருக்க வேண்டும்?

வ்மல் வீரவன்சவினால் சுனாமி பணம் தமிழருக்கு செல்லாமல் தடுத்தது இதே  நாட்டு நீதிமன்றம் தானே. எப்படி நடந்தது இனவாதம் இல்லாமல் ??
 

G.L_.Peiris_1-600x374.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட கருத்து பிழையானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முழு உலகமும் இலங்கை நீதிமன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.

சிங்கள ஜூரிகளினால் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தினால் வழக்குத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என சுமந்திரன் கூறியிருந்தார்.

நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் கொலை வழக்கு சந்தேக நபர்கள் நீதிமன்றின் எதிரில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டுமா அல்லது ஜூரிகளினால் விசாரணை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க முடியும்.

இவ்வாறான பின்னணியில் சிங்கள ஜூரிகள் பங்கேற்றதினால் வழக்கு விசாரணை தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறுவது நியாயமாகுமா? இவ்வாறான கருத்துக்களினால் நீதிமன்றம் குறித்த நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படும்.

மேலும், இவ்வாறான கருத்துக்களினால் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

http://www.tamilkingdom.com/2016/12/345_55.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.