Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகல் கனவு காண்கிறார் மஹிந்த

Featured Replies

பகற்கனவு காண்கிறார் மஹிந்த

2-f0314629e19c291a3dbe6cd830d8e7c564acef80.jpg

 

சாடுகின்றன பிரதான கட்சிகள்

 

 

ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளியோம்

1-ac50d5371f891b320173d94c28c20d549db0ad28.jpg

 

உள்ள பதவியும் இல்லாமல் போகும் என்கிறது ஐ.தே.க.

(எம்.எம்.மின்ஹாஜ்)

இலங்கை வர­லாற்றில் பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யாக பல்­வேறு திருப்பு முனை­களை ஏற்­ப­டுத்தும் வரு­டமே 2017 ஆம் ஆண்­டாகும். இந்த வரு­டத்தில் பாரிய மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும். இத்­த­கைய நிலையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ புது­வ­ரு­டத்தில் ஆட்­சியை கவிழ்ப்போம் என்று கூறு­வது பகல் கன­வாகும். எக் ­கா­ரணம் கொண்டும் ஆட்சி மாறாது. இவ­ரது கூற்­றுக்கு நாம்

 

 அஞ்­ச­போ­வ­தில்லை என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி தேசிய அமைப்­பா­ளரும் அமைச்­ச­ரு­மான ஹரீன் பெர்­ணான்டோ தெரி­வித்தார். புத்­தாண்டு முதல் சதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து ஐ.தே.க நல்­லாட்­சியை ஒற்­று­மை­யுடன் முன்­னெ­டுத்து செல்லும். நல்­லாட்­சிக்கு காலக்­கெடு விடுக்கும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு புத்­தாண்டில் தற்­போது உள்ள பத­விகள் கூட இல்­லாமல் போகும் .முன்னாள் ஜனா­தி­ப­தியின் கருத்து குறித்து அலட்­டி­கொள்ள தேவை­யில்லை.மஹிந்த ராஜ­பக்ஷ அடுத்த கூட்­டு­றவு சங்க தேர்­த­லுக்கு தயா­ராகி வரு­கிறார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.   

 

 

 

2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்த கருத்து தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே அவர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ மேலும் கருத்து தெரி­விக்­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது என்ன செய்­வது என்­பது தெரி­யாமல் தட்­டுத்­த­டு­மா­றிய வண்ணம் செயற்­ப­டு­கின்றார். 2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்போம் என வீர­வ­சனம் பேசி திரி­கின்றார். நல்­லாட்­சியை 2017 இல் கவிழ்க்க முடியும் என பகல் கனவு காண்­கின்றார். தற்­போது இவ­ரினால் பகல் கனவு மாத்­தி­ரமே காண­மு­டியும்.  

2017 ஆம் ஆண்டு ஆட்­சியை ஒரு­போதும் கவிழ்க்க முடி­யாது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பயணம் தொடர்ந்து செல்லும். அதனை எவ­ராலும் தடுத்து நிறுத்த முடி­யாது. இவர்­க­ளினால் செய்ய முடி­யா­ததை கூறி மனதை ஆற்­றிக்­கொள்­கின்­றனர்.

இலங்கை வர­லாற்றில் 2017 ஆம் ஆண்டு என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த வரு­ட­மாகும். இலங்கை அர­சி­யலில் பாரிய மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் பொரு­ளா­தார துறையில் பல்­வேறு இலக்­கு­க­ளையும் வெற்­றி­க­ளையும் அடைந்து கொள்ளும் திருப்பு முனைக்­கு­ரிய ஆண்­டாகும். புது வரு­டத்தில் துரித அபி­வி­ருத்­திக்­கான பல்­வேறு திட்­டங்கள் அமுல்ப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. இதற்கு நல்­லாட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் என்ற வகையில் நாம் தயா­ராக உள்ளோம்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் திட்­டங்­க­ளுக்­கான திருப்­பு­மு­னை­யாக அமையும் அடுத்த வரு­டத்தில் நல்­லாட்­சியை கவிழ்ப்­ப­தாக கூறு­வது நகைப்­பு­கு­ரி­யது மாத்­தி­ர­மின்றி அது மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பகல் கன­வாகும். இந்த வீர­வ­ச­னங்­க­ளுக்கு நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை. இவ­ரது கூற்றை நல்­லாட்சி அர­சாங்கம் அலட்­டிக்­கொள்­ளாது.

2017 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு காலக்­கெடு விடுக்கும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு புது­வ­ரு­டத்தில் தற்­போது இருக்கும் பத­விகள் கூட இல்­லாமல் போகும். மஹிந்த ராஜ­பக்ஷ அடுத்த கூட்­டு­றவு சங்க தேர்­தலில் எப்­படி வெற்றி பெறமுடியும் என்ற முயற்சியில் களமிறங்கியிருக்கின்றார். அவரினால் ஒருபோதும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியாது.

அடுத்த வருடம் முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒற்றுமையான பயணத்தை ஆரம்பித்து நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-1

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அதிகார போதையின் உச்சத்தை காட்டுகிறது

3-c971421516ea7750a91c364864f40df9282709e1.jpg

 

சாத்தியமே இல்லை என்கிறது சுதந்திரக் கட்சி

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஆட்­சியை கவிழ்ப்­ப­தான முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கூற்­றா­னது அவ­ரது ஆட்சி அதி­கா­ரத்தின் மீதான போதையை குறிப்­பி­டு­கின்­றது. தனி நப­ரொ­ரு­வரின் விருப்­பத்­திற்கு ஏற்ப நாட்டின் ஆட்சி அதி­கா­ரத்தை மாற்ற முடியும் என்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும். வலு­வான நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் புத்­தாண்­டிலும் பய­ணிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­திர

 

கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திசா­நா­யக்க தெரி­வித்தார்.  2017 ஆம் ஆண்டில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் உட்­பட மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை பெற உள்­ளன. இந்த தேர்­தல்­களை எதிர் கொள்­வ­தற்­கான கட்­சியின் அடி­மட்ட ஒழுங்­குப்­ப­டுத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சுதந்­திர கட்­சிக்கு புதிய உறுப்­பி­னர்­க­ளாக 4 மில்­லியன் பேர் அடுத்த ஆண்டில் சேர்த்துக் கொள்­ளப்­பட உள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.   

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் புத்­தாண்­டிற்­கான திட்­டங்கள் தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்தும் போதே கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ஜன­வரி தொடக்கம் மார்ச் மாதம் வரையில் சுதந்­திர கட்­சியின் புதிய உறுப்­பி­னர்கள் தேர்வு இடம்­பெற உள்­ளது. 4 மில்­லியன் பேரை அடுத்த ஆண்டில் கட்­சியின் புதிய உறுப்­பி­னர்­கா­ளக இணைத்துக் கொள்ள உள்ளோம். மேலும் உள்­ளு­ராட்­சி­மன்ற தேர்தல் மற்றும் மூன்று மாகா­ணங்­க­ளுக்­கு­மான தேர்­தல்கள் அடுத்த ஆண்டில் நடைப்­பெற உள்­ளன. அதனை எதிர்­கொள்­வ­தற்­கான அனைத்து தயார்ப்­ப­டுத்­தல்­களும் ஆரம்­பிக்­கப்­பட உள்­ளன.  

எவ்­வி­த­மான தார்­மீக தன்­மையோ அப்­படை தன்­மையோ அற்ற வகையில் மஹிந்த ராஜ­பக்ஷ 2017 ஆம் ஆண்டில் ஆட்­சியை கவிழ்க்க போவ­தாக குறிப்­பிட்­டுள்ளார். ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்­ப­ளிக்­காத தனது நிலைப்­பாட்­டையே அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். மக்கள் ஆணைக்கு எதி­ரா­கவா ? மஹிந்த ராஜ­பக்ஷ அடுத்த ஆண்டில் செயற்­பட போகின்றார் என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் ஆட்சி கவி­ழப்பு என்­ப­தற்கு வாய்ப்பே இல்லை. அவ்­வாறு மஹிந்த ராஜ­பக்ஷ கூறு­கின்­றமை வேடிக்­கை­யாக உள்­ளது.

நாட்டில் ஜன­வரி 8 ஆம் திகதி மக்கள் புதிய ஆணையை வழங்­கி­னார்கள். அதற்கு மதிப்­ப­ளித்து செயற்­பட வேண்­டி­யது அனை­வ­ரதும் கட­மை­யாகும். குறிப்­பாக அர­சியல் தலை­வர்கள் என்றால் மதிப்பும் கௌர­வமும் காணப்­பட வேண்டும். அவ்­வா­றான பல தலை­வர்­களை வர­லாற்றில் நாம் கண்­டுள்­ள­துடன் அவர்­களை முன்­மா­தி­ரி­யா­கவும் கொண்­டுள்வோம். அதே போன்று நாட்டில் காணப்­பட்ட முப்­ப­தாண்டு கால போரை முடி­விற்கு கொண்டு வந்து அனைத்து மக்­களின் உள்­ளங்­க­ளிலும் மஹிந்த ராஜ­பக்ஷ இடம்­பி­டித்தார். ஆனால் தற்­போது அவ­ரது தற்­போ­தைய செயற்­பா­டுகள் வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

எவ்­வா­றா­யினும் நாட்டில் மேம்­பாலம் மின்­சாரம் புதிய பாதைகள் அதி­வேக வீதிகள் மற்றும் ஏனைய அபி­வி­ருத்­திகள் காணப்­ப­டு­கின்ற போதிலும் மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அதற்­கான முன்­னெ­டுப்­புக்­களை எடுக்கும் போது மக்கள் பக்கம் இருந்து செயற்­பட வேண்­டுமே தவிர முட்­டுக்­கட்­டை­யாக இருக்க கூடாது. அதி­கா­ரத்தை மீண்டும் தன்வசப்படுத்திக் கொள்வதற்காக சுயநலமாக செயற்பட்டு குழப்பங்களை ஏற்படுத்த கூடாது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-1

  • தொடங்கியவர்

தேசிய அரசின் குழப்­பங்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்த முயற்­சிக்­கிறார் மஹிந்த

5-5120a14e04907c3d106c1363c9ead16db47b86ee.jpg

 

மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­கி­றது

(ஆர். யசி)

தேசிய அர­சாங்­கத்தின் குழப்­பங்­களை சாத­க­மாக பயன்­ப­டுத்தி ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்றே மஹிந்த ராஜபக் ஷ கனவு காண்­கின்றார். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்­சியை கைப்­பற்ற மக்கள் இட­ம­ளிக்க மாட்­டார்கள் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. அர­சாங்­கத்தை எதிர்த்து மக்­களை வீதிக்கு இறக் கும் ஆண்­டாக அடுத்த வருடத்தை மாற்­றுவோம் எனவும் மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.  

ஆட்­சியை மீண்டும் கைப்­பற்­றுவோம் என முன்னாள்   ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பிலும் அடுத்த ஆண்டு மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வா­றான நகர்­வு­களை மேற்­கொள்ள போகின்­றது என வின­வி­ய­போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளர்­டில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் கூறு­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தற்­போது பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்றார். ஆட்­சியை கைப்­பற்றி மீண்டும் ராஜபக் ஷக்­களின் குடும்ப ஆட்­சியை உரு­வாக்­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார். ஆனால் அவரால் எக்­கா­ரணம் கொண்டும் ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது. மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அவரை சுற்­றி­யுள்ள அணி­யினர் என்­னதான் கதை­களை கூறி­னாலும் மக்கள் இனி­யொ­ரு­போதும் சர்­வா­தி­கார ஆட்சி ஒன்றை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. அதேபோல் தற்­போது அர­சாங்­கத்தை கவிழ்க்க எந்த சாத்­தி­யமும் இல்லை. அர­சியல் அமைப்பின் பிர­கா­ரமும் மக்­களின் ஆணையின் அடிப்­ப­டை­யிலும் பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடி­யாது. ஆகவே நாட்டில் சட்டம் ஒன்றும் அர­சியல் அமைப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்றம் நகர்­கின்­றது என்­பதை மஹிந்த ராஜபக் ஷ விளங்­கிக்­கொள்ள வேண்டும்.  

அதேபோல் அர­சாங்­கத்தில் பல்­வேறு குள­று­ப­டிகள் உள்­ளன.இன்று பிர­தான இரண்டு கட்­சி­களும் அதி­கா­ரத்தை தன்­வ­சப்­ப­டுத்தி ஆட்­சி­ய­மைக்க முயற்­சித்து வரு­கின்­றன . ஐக்­கிய தேசியக் கட்சி ஒரு­புறம் நாட்டை தனியார் மையப்­ப­டுத்­தியும் நாட்டை சர்­வ­தேச தர­கர்­களின் மூலம் விற்­கவும் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இன்று அம்­பாந்­தோட்டை துறை­முகம்,கொழும்பு துறை­முகம் ஆகி­யவை சீனா­வுக்கு தாரை­வார்க்­கப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை பெறவும் மற்றும் நாட்டில் பல்­வேறு பகு­தி­களில் தொழிற்­பேட்­டை­களை முன்­னெ­டுக்­கவும் இந்­தியா மற்றும் அமெ­ரிக்­கா­ஆ­கிய நாடுகள் போட்டி போட்­டு­கொண்டு உள்­ளன .

  அர­சாங்கம் அரச நிறு­வ­னங்­களை தனியார் மயப்­ப­டுத்தி நாட்டை பூரண தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஸில் ராஜபக் ஷ உள்­ளிட்­ட­வர்­களை காப்­பாற்ற ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது.

மறு­புறம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது . மக்கள் மீது அநா­வ­சிய வரிச் சுமை­களை சுமத்தி மக்­களின் பணத்தை சூறை­யாடும் நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்­கமும் மேற்­கொண்டு வரு­கின்­றது. இந்த ஆண்டில் மக்கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்தை எதிர்த்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.அதேபோல் அடுத்த ஆண்டும் மக்கள் விடுதலை முன்னணி மக்களுடன் இணைந்து இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடும் ஆண்டாக மாற்றுவோம். ஊழல்,நிதி மோசடிகள் மற்றும் மக்களின் பணத்தை சூறையாடும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து நாம் அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி எழுப்புவோம் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-1

  • தொடங்கியவர்

சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி ஆட்சியை மாற்ற மஹிந்த முயற்சி

Suresh-21f3f0a9733d32593810eee158f6dc5f344f8ce1.jpg

 

சுரேஷ் எம்.பி. குற்றச்சாட்டு

(ரி.விரூஷன்)

நாட்டில் சிங்­கள பௌத்த தீவி­ர­வாத்தை தூண்டி அத­னூ­டாக தமிழ் இனத்­துவேச த்தை ஏற்­ப­டுத்தி அத­னூ­டா­கவே ஆட்­சி­மாற்­றத்தை கொண்­டு­வர முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ முயல்­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறிப்­பி­னரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்­சியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இது விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்­வா­றான நவ­டிக்­கையை எடுக்க போகின்­றது என்­ப­தி­லேயே அடுத்தகட்டம் தங்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போ­துள்ள ஆட்­சியை அடுத்த ஆண்டில் கவிழ்த்து புதிய ஆட்­சியை அமைக்கப் போவ­தாக தெரி­வித்­தி­ருந்த விடயம் தொடர்­பாக குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். இந்­நி­லையில் குறித்த விடயம் தொடர்­பாக கேச­ரிக்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­­வது,

முன்னாள் ஜனா­தி­பதி இந்த அர­சாங்­கத்தை கவிழ்த்து மீண்டும் தாம் ஜனா­தி­ப­தி­யா­கவோ பிர­த­ம­ரா­கவோ வரு­வ­த­னூ­டாக தன்­னையும் தனது குடும்­பத்­தையும் பாது­காத்­து­கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது. குறிப்­பா­க­ அவர் மீது கொலை முயற்சி தொடர்­பான வழக்கு, கறுப்பு பணத்தை வெள்ளைப் பண­மாக மாற்­றி­யமை தொடர்­பான முறைப்­பாடு, ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் போன்­றன காணப்­படும் நிலையில் இவற்றில் இருந்து தன்­னையும் தன் சார்ந்­த­வர்­க­ளையும் பாது­காத்து கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது.

மேலும் பிர­பா­க­ரனை அழித்­த­த­னூ­டாக சிங்­கள மக்கள் அதி­க­மானோர் தன்­னுடன் இருக்­கின்­றார்கள் என்ற பயத்­தினை ஏனைய கட்­சி­யி­ன­ருக்கு குறிப்­பாக மைத்­தி­ரி­பால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சியினரையும் ஜக்கிய தேசிய கட்சியினரையும் அச்சுறுத்தி வைத்திருக்க முயல்கின்றார் என்பதும் கண்கூடாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கத்தை பொறுத்த வரையில் வலுவான ஆட்சியாகவே உள்ளது. குறிப்பாக அர சாங்கத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலும் தமிழரசு கட்சியினர் ஆதரவாக செயற்பட்டு வரும் நிலையில் எவ்வாறு அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடும் என்ற நிலையும் உள்ளது.

அவ்வாறு அவர் குறிப்பிடுவது போன்று அரசை கவிழ்க வேண்டுமானால் அரசா ங்கத்திற்கு எதிராக சிங்கள மக்களை பாரிய அளவில் அணிதிரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண் டும். அது அவரால் முடியுமா எனற கேள் வியும் உள்ளது. ஆனால் அவர் தற்போது சிங்கள பௌத்த தீவிரவாதத்தை தூண்டி அதனூடாக தமிழ் இனத்துவத்தை ஏற்ப டுத்தியே ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயல்கின்றார். இவ்வாறான ஒரு நிலை யில் இது தொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கையை எடுக்க போகின்றது என்பதிலேயே அடுத்த கட்டம் தங்கியுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-31#page-2

  • தொடங்கியவர்

கனவில் மட்டுமே ஆட்சி செய்வார் மஹிந்த ; விக்பரமபாகு

Published by Pradhap on 2016-12-31 16:50:27

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என்றால் ஜனநாயக விரோதமாகவே மஹிந்த ராஜபக்ஷ செயல்படவேண்டும். இல்லாவிட்டால் அவர் கனவில்தான் அடுத்தவருடம் ஆட்சிக்குவருவார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்பரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

asdasd1.jpg

நவ சமசமாஜ கட்சியின் 39ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14943

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.