Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது

Featured Replies

விசாரணைப் பொறிமுறைக்கு உள்ளக நீதிபதிகளின் பிரசன்னம் போதுமானது

01-d4174ec9dda37f1b03b7bcc46ab16019982cbc62.jpg

 

தேசிய அரசாங்கத்திற்குள் தொடர்பாடல் இடைவெளி என்கிறது சு.க.

(ப.பன்­னீர்­செல்வம்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சிங்­கள மக்­களின் 51 வீதமான ஆத­ரவு கிடைத்தால் மட்­டுமே அது நடைமுறை சாத்­தி­ய­மாக அமையும் என எதிர்­க்கட்சித்தலைவர் சம்­பந்தன் தெரி­வித்த கருத்தை வர­வேற்­ப­தாக அர­சாங்கம் தெரிவித்தது.

மேலும் தேசிய அர­சுக்குள் தெளி­வான தகவல் தொடர்­பா­டல்கள் இல்­லா­ததன் கார­ண­மா­கவே பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­கின்­றன என்றும் அரசின் பிர­தான பங்­கா­ளி­யான சுதந்­தி­ரக்­கட்சி குற்றம் சாட்­டி­யது.

கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற அவ­சர ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நிதி ராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன குறிப்பிடுகையில் 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான இணக்­கப்­பாட்டு தேசிய அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளுக்குள் தெளி­வான தகவல் தொடர்­பா­டல்கள் இடம்­பெ­று­வ­தில்லை. இது பாரிய குறை­பா­டாகும். தகவல் தொடர்­பா­டல்கள் தெளி­வின்­மையால் அர­சுக்குள் பல்­வேறு முரண்­பா­டுகள் தோன்­று­கின்­றன. இது நீக்­கப்­பட வேண்டும். 

எனவே எதிர்­கா­லத்தில் இக்­கு­றை­பா­டுகள் நிவர்த்தி செய்­யப்­பட்டு தொடர்­பா­டல்­களில் குறை­பா­டுகள் நீக்­கப்­படும். அர­சுக்குள் உள்ள தொடர்­பாடல் குறை­பாட்டால் தான் அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் சீனா­வு­ட­னான ஒப்­பந்தம் தொடர்பில் எதிர்­கட்­சி­யினர் மக்கள் மத்­தியில் பிழை­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.  

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கு­வது மற்றும் அதனை அண்­டிய 15000 ஏக்கர் காணி­களை சீனா­வுக்கு வழங்­கு­வது தொடர்பில் இது வரையில் எது­வி­த­மான சட்­ட­ரீ­தி­யான உடன்­ப­டிக்­கை­களும் இலங்­கைக்கும் சீனா­வுக்­கு­மி­டையே கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை.

புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைகள் மற்றும் உடன்­ப­டிக்­கை­களில் அமைச்­சர்கள் கைச்­சாத்­தி­டலாம். ஆனால் அவை­ய­னைத்தும் சட்­ட­பூர்­வ­மான உடன்­ப­டிக்­கைகள். அதா­வது, ஒரு நாட்­டுடன் நாம் உடன்­ப­டிக்கை செய்து கொள்­வோ­மானால் அது அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்­கப்­பட்டு அங்­கீ­காரம் பெறப்­பட வேண்டும்.  

பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றுப்­பட வேண்டும். பின்னர் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்டும். அதன் ஒப்­பு­தலை பெற வேண்டும்.  இதன் பின்­னரே இரு நாடு­க­ளுக்­கி­டையே உடன்­ப­டிக்­கைகள் கையெ­ழுத்­தி­டப்­பட வேண்டும்.  

அப்­போது தான் அந்த உடன்­ப­டிக்­கைகள் இலங்­கையின் சட்­டத்­திற்கும் அர­சி­ய­ல­மைப்­புக்கும் அமை­வாக அமையும். இதுவே உண்­மை­யான இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான உடன்­ப­டிக்­கை­யாகும். இத­னையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் வலி­யு­றுத்­து­கின்றார்.  

இவ்­வா­றா­னதோர் நிலையில் இது­வ­ரையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 15000 ஏக்கர் காணியை சீனா­வுக்கு வழங்­கு­வது தொடர்­பாக எது­வி­த­மான உத்­தி­யோ­க­பூர்வ அந்­தஸ்­துள்ள உடன்­ப­டிக்­கை­களும் கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வில்லை.

தேசிய அர­சுக்குள் தெளி­வான தொடர்­பா­டல்கள் இல்­லா­ததால் முரண்­பா­டாக தக­வல்கள் வெளி­யா­கின. இவை நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும். கட்­சிக்குள் பிரச்­சி­னைகள் இருக்­கலாம். ஆனால் கட்­சி­யுடன் இணைந்து தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட வேண்டும்.  

எதிர்­கா­லத்தில் கட்­சி­க­ளினதும், நாட்­டி­னதும், மக்­க­ளி­னதும் நன்மை கருதி சில கடு­மை­யான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற பின்னர் நாட்டில் சர்­வா­தி­காரம் ஒழிக்­கப்­பட்டு ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. சட்­டத்தின் ஆதிக்கம் கோலோச்­சு­கி­றது.  

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு கால அவ­காசம் தேவை­யென ஜனா­தி­பதி ஐ.நா.வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அறி­வித்­துள்ளார். யாரும் எதையும் சொல்­லலாம். ஆனால் இலங்­கைக்கு சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பிர­சன்னம் அவ­சி­ய­மில்லை. ஹைபிரிட் நீதி­மன்றம் தேவை­யில்லை.  

தேசிய ரீதியில் நீதித்­துறை பல­மாக உள்­ளது. எனவே தேசிய நீதி­ப­தி­களின் பிர­சன்னம் போது­மா­னது என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். சர்­வ­தேச நீதி­ப­திகள் எமக்கு தேவை­யில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நடத்­தப்­படும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் சிங்­கள மக்கள் நூற்­றுக்கு 51 வீதம் ஆத­ரவு வழங்க வேண்டும்.  

அப்­போது தான் அது நடை­முறைச் சாத்­தி­ய­மாகும் என எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறி­யி­ருக்கும் கருத்து உண்­மை­யா­னது. இதனை வர­வேற்­கின்றோம். இவ்­வா­றான ஆத­ரவை பெற்றே பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும்.  அர­சி­ய­ல­மைப்பை நாளையும் மாற்­றலாம். ஆனால் அதனை அவ­ச­ர­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் எமக்கு கிடை­யாது.  

அதனை ஜன­நா­யக ரீதி­யி­லேயே முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இணக்­கப்­பாடு உடன்­ப­டிக்­கைகள் அனைத்தும் சட்டபூர்வமான உடன்படிக்கைகள் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  

அம்பாந்தோட்டை தொடர்பாக சீனாவுடன் எந்த விதமான உடன்படிக்கையும் கையளிக்கப்படவில்லை. போராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் மீது எமக்கு நம்பிக்கையில்லை. நாட்டின் ஜனாதிபதியே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக வேண்டும். அது இன்று சட்டபூர்வமாக இடம்பெற்றுள்ளது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.