Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புக்கான கற்கை நெறி ஆரம்பம்

Featured Replies

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி இவ்வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் இன்று(05) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்

பொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும்.

நாட்டின் அபிவிருத்திக்கு தொழிநுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த (உ.த) இல் உட்புகுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புதிய தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு பாடநெறிகளை 2017இல் இருந்து ஆரம்பிக்கின்றன.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடம் அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் துறை மற்றும் பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய இரு துறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்படும்.

மேலதிகமாக சக்தி மற்றும் சூழல் துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் துறை ஆகிய இரு துறைகள் வருங்காலத்தில் இணைக்கப்படும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலில் 83 மாணவர்கள் 18.01.2017ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வியாண்டில் தொழில்நுட்பக் கல்வியல் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் மானிப் பட்டப்படிப்பிற்காக நான்காண்டு கற்கைநெறியைத் தொடர்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்துவரும் ஆண்டுகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் மானிப் பட்டப்படிப்பு மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்ப மானிப் பட்டப்படிப்பு ஆகியன ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/education/01/130594?ref=youmaylike1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.