Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீனவர்களின் உண்மை நிலைமை என்ன?

Featured Replies

கட­லுக்கு சென்று காணாமல் போயிருக்கும் மீன­வர்­களின் உண்மை நிலைமை என்ன?

03-2cd16c6a9f8f87eebcbbd95ed755e3b896bc14e6.jpg

 

அமைச்சர் ஹக்கீம் விளக்கம்

கடந்த டிசம்பர் 24ஆம் திகதி இரண்டு இயந்­திரப் பட­கு­க­ளில் ஆழ் கட­லுக்­கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்­முனை பிர­தே­சத்தைச் சேர்ந்த மீன­வர்கள் பற்றி பல­வா­றான தக­வல்கள் வெளி­வந்த வண்­ண­முள்­ளன.

 பட­குகள் இரண்டும் அவற்றில் பய­ணித்த 6 மீன­வர்­களும் மாலைதீவு கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளனர் என்ற ஆதா­ர­பூர்­வ­மற்­றதும், ஊர்­ஜி­த­மற்­ற­து­மான செய்­தி­யொன்றும் பரப்­பப்­பட்­டுள்­ளது. ஆனால் பாது­காப்புச் செய­லா­ளர் ­க­ரு­ணா­சேன ஹெட்­டி­ ஆ­ராச்­சி­யு­ட­னும் ­க­டற்­படை  தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர சீ விஜே­கு­ண­ரத்­தி­ன­வு­டனும் இது நடந்த  

தினத்­தி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக தொடர்­பி­லி­ருந்து வரும்ஶ்­ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலையும் அவர்­களைத் தொடர்பு கொண்டு கதைத்தார்.

அத்­துடன், மாலைத்­தீவு குடி­ய­ரசில் உள்ள இலங்­கைக்­கான உயர்ஸ்­தா­னிகர் டபிள்யு. ஜி.என்.எச். டயஸ் மற்றும் இங்­குள்ள மாலை­தீவு உயர்ஸ்­தா­னிகர் திரு­மதி. ஸாஹியா ஸரீப் ஆகி­யோ­ரு­டனும் அமைச்சர் ஹக்கீம் கதைத்­துள்ளார்.

அமைச்சர் ஹக்­கீ­மிடம் அவர்கள் தெரி­வித்­துள்ள தக­வல்­க­ளின்­படி, மாலை­தீவு கடற்­ப­டை­யி­னரால் ஒரு பட­கொன்றில் அதில் பய­ணித்த மீன­வர்கள் இருவர் மட்­டுமே மீட்­கப்­பட்டு தற்­போது மாலைத்­தீவில் பாது­காப்­பாக வைக்­கப்­பட்­டுள்­ளனர். மற்­றைய படகும் அதில் பய­ணித்த மீன­வர்கள் நால்­வரும் வௌளிக்­கி­ழமை முற்­ப­கல்­வ­ரையில் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆயினும் மாலைத்­தீவு, இலங்­கை­ ஆ­கி­ய­வற்றின் கடற்­ப­டை­யி­னரும், விமா­னப்­ப­டை­யி­னரும் தொடர்ச்­சி­யாக தேடுதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

ரவூப் ஹக்­கீமின் வேண்­டு­கோளை ஏற்று இலங்கை, மாலைத்­தீவு, தேடுதல் ஏற்­பா­டு­க­ளுக்கு மேல­தி­க­மாக, இந்­திய கடற்­ப­டை­யி­ன­ரையும், விமா­னப்­ப­டை­யி­ன­ரையும் அவர்­களின் கடற்­ப­ரப்­பிலும் தேடு­தல்­களை நடாத்த பாது­காப்பு செய­லா­ளரும் கடற்­படை தள­ப­தியும் முன்­னேற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

கடற்­படை தள­ப­தி­அ­மைச்சர் ஹக்­கீ­முக்கு வழங்­கி­யுள்ள தக­வ­லின்­படி இம்­மீ­ன­வர்கள் உரிய தகவல் தொடர்பு சாத­னங்கள் இன்றி ஆழ்­க­ட­லுக்கு சென்­ற­த­னா­லேயே பிரச்­சினை உரு­வா­கி­யுள்­ளது. இலங்கை, மாலைத்­தீவு கடற்­ப­ரப்­பு­க­ளிலும் அதற்கு அப்­பாலும் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற கப்­பல்கள், வான் எல்­லையில் பறந்­து­கொண்­டி­ருக்கும் விமா­னங்கள் என்­ப­ன­வற்­றுக்கு இது சம்­பந்­த­மான அவ­சர(SOS)கட்­ட­ளையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

விளை­யாட்டுத் துறை பிர­தி­ய­மைச்­ச­ரும்­கல்­முனைத் தொகு­தியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எச்.எம்.எம். ஹரீஸை உட­ன­டி­யாக மாலைத்­தீ­வுக்கு புறப்­பட்டுச் செல்­லு­மாறு அமைச்சர் ஹக்கீம் பணித்­துள்­ள­துடன் மீன­வர்­களின் படகை இலங்­கைக்கு எடுத்து வரு­வ­தற்­காக சிலா­பத்தைச் சேர்ந்த மாலைத்­தீவு - இலங்கை கடற்­பா­தை­யில்­நன்கு அனு­பவம் மிக்க மாலுமி ஒரு­வரும் அமைச்சர் ஹரீ­சுடன் அங்கு பய­ணிப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள்­மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

மீன­வர்­க­ளையும் அவர்­களின் பட­கு­க­ளையும் தேடிக் கண்டு பிடித்து தரு­மாறு தொடர்ச்­சி­யா­கவே காணாமற் போயுள்ள மீன­வர்­களின் குடும்­பத்­தினர் நேர­டி­யா­கவும் அமைச்சர் ஹரீஸ் ஊடா­கவும் ரவூப் ஹக்­கீ­மிடம் வேண்­டுகோள் விடுத்து வரு­கின்­றனர். மாலைத்­தீ­வி­லுள்ள இலங்­கைக்­கான உயர்ஸ்­தா­னி­கரின் அபிப்­பி­ரா­யப்­படி ஆழ்­க­டலில் படகு கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் அதனைத் துரி­த­மாக கரைக்கு கொண்டு வரு­வது இல­கு­வா­ன­தாக இருக்­காது என்றும் முடிந்­த­வரை மீன­வர்­களை மீட்டுத் தரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த மீன­வர்கள் காணாமல் போய் ஏறத்­தாழ 2 வாரங்­களை அண்­டிய நிலையில், முழு­மை­யான தேடுதல் முயற்­சியில் பல்­வேறு தரப்­பி­னரும் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­ப­டி­யால்­அ­வர்­களை பாது­காப்­பாக மீட்­டெ­டுப்­பது இய­லு­மா­கு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்­பிக்கை தெரி­வித்தார்.

கல்­முனை கடற்­க­ரையில் இருந்து இந்த மீனவர் ஆறு­பேரும் கடந்த மாதம் 24 ஆம் திகதி 0019 சீஎச்­ட­பிள்யு மற்றும் 00139 பிசீஓ ஆகிய பதி­வி­லக்­கங்­களை கொண்ட இயந்­திரப் பட­கு­களில் புறப்­பட்டுச் சென்ற பின்னர் இறு­தி­யாக கடந்த 26ஆம் திகதி அன்று கடலில் இருந்து தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர் என்றுதெரிவித்த அமைச்சர் ஹக்கீம், முன்னதாக தாம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் அமரானந்த அபேகுசேகர மற்றும் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன கல்முனை பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் இதுபற்றிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எழுத்து மூலம் அறிவித்ததாகவும் கூறினார். அத்துடன், தமது இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரை இந்த விடயத்தை உரிய முறையில் கையாள்வது தொடர்பில் அவர் அறிவுறுத்தியிருந்ததாகவும் கூறினார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.