Jump to content

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods


Recommended Posts

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடாக்கக்கூடாது ? #HealthyFoods

விடுமுறைநாள் என்றாலே உணவுப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு... விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர்.

காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, தோசை அல்லது இட்லியோடு சேர்த்து சாப்பிடுவர். இன்று பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிப்போன விஷயம் இது. உணவை மீண்டும் மீண்டும் சுடவைப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் குறைவதுடன், அவை உடலில் பல எதிர்வினைகளை உண்டாக்குவது பலரும் அறிந்திராத செய்தி. எந்தெந்த உணவுகளை இவ்வாறு மீண்டும் சூடுபடுத்தக்கூடாது எனத் தெரிந்துகொள்வோமா?  

முட்டை

உணவு


உடலுக்குத் தேவையான கலோரிகள், புரதம், வைட்டமின்கள் நிறைந்தது முட்டை. முட்டையை அளவான சூட்டிலேயே வேகவைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மீண்டும் சூடுபடுத்தப்பட்ட முட்டைகளை  கட்டாயமாகப் பத்துவயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அவித்த முட்டை, தாளிக்கப்பட்ட முட்டை ஃப்ரை, ஆம்லெட் ஆகியவற்றை கட்டாயம் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. முட்டை ரெசிபிக்களை சமைத்து ஒருமணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடவேண்டும்.

கோழி இறைச்சி

கோழி இறைச்சி

பெரும்பாலான ரோட்டோர ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கோழி இறைச்சி மீண்டும் மீண்டும் சுடவைக்கப்படுகிறது. இது போன்ற இறைச்சிகளை விற்கும் கடைகளில் சாப்பிடுவதை, முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு சமைத்த கோழிஇறைச்சியை மீண்டும் சுடவைத்து, உண்ணுவது மிகவும் ஆபத்தானது.

இதற்கு முக்கியக் காரணம், இந்த உணவில் உள்ள அதிகமான புரதம். பச்சையான கோழி இறைச்சியைக்காட்டிலும் சமைத்த கோழியில் புரதஅளவு அதிகம். இதனை மீண்டும் சுடவைக்கும் போது, இதன் அதிகமான புரத அளவால் கடுமையான செரிமான பிரச்னைகளான, வாந்தி, ஒவ்வாமை ஏற்படலாம். கோழி ஃப்ரை, குழம்பு ஆகியவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

கீரைகள்

கீரைகள்


கீரைகளை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. கீரைகளில் நைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களின் அளவு அதிகமாக இருக்கும். கீரைகளை சமைத்து மீண்டும் சூடுபடுத்தும்போது, கீரையில்  நைட்ரேட் அளவு  அதிகரிக்கும். இதனால் செரிமானக் கோளாறு, நாளடைவில் குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. நெடுநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் பொடூலிசம் (botulism) என்னும் பாக்டீரியா தாக்கி, நச்சுத்தன்மையை அடைந்துவிடும். இதனை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

பீட்ரூட்

பீட்ரூட்


பீட்ரூட்டில் மாவுச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. நைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. அதை மீண்டும் சுட வைக்கும் போது, சத்துக்கள் பலனளிக்காமல் போய்விடுகிறது.

காளான்

காளான்


காளானை, அதனை சமைத்த நான்கு மணிநேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் சராசரியான காலநிலையில் வைத்தால் அவற்றில் பாக்டீரியாத் தொற்று ஏற்படும். முதல்நாள் சமைத்த காளானை மறுநாள் மீண்டும் சுடவைக்கும்போது, அதிலுள்ள புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள், இதயநோய்கள் ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்ட இதய நோயாளிகள் காளானை மீண்டும் சுடவைத்து சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.   

http://www.vikatan.com/news/health/77119-which-foods-should-not-be-reheated.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.