Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு?

Featured Replies

பூதாகரமாகும் பிரச்சினைகள் இலாபம் யாருக்கு?

07-59c14a9a9696839875e1e415023904f53482d553.jpg

 

வில்­பத்து விவ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருக்­கி­றது. வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்­கு­ரிய வனப்­பி­ர­தே­சங்­களை விரி­வு­ப­டுத்தி தற்­போது வன ஜீவ­ரா­சிகள் திணைக்­க­ளத்­துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்­ப­ரப்­பையும் உள்­ள­டக்­கக்­கூ­டி­ய­வாறு வன ஜீவ­ரா­சிகள் வல­யத்தை வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

சுற்­றாடல் அமைச்சின் கீழுள்ள நிறு­வ­னங்­களின் அதி­கா­ரி­க­ளுடன் கடந்த வாரம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலின் போதே ஜனா­தி­பதி இந்த ஆலோ­ச­னையை முன்­வைத்­துள்ளார்.

வில்­பத்து உள்­ளிட்ட அனைத்து சர­ணா­ல­யங்­க­ளையும் நவீன தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி வான் மார்க்­க­மாக அவ்­வப்­போது கண்­கா­ணிக்கும் திட்­ட­மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி இதன்­போது ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

ஏதே­னு­மொரு முறையில் முன்­னெ­டுக்­கப்­படும் காட­ழிப்­பிற்கு எதி­ராக பார­பட்­ச­மின்றி சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஜனா­தி­பதி பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு குறிப்­பிட்­டுள்­ளது. எனினும் ஜனா­தி­ப­தியின் இந்த நகர்வு பெரும் சந்­தே­கங்­க­ளையும் அதி­ருப்­தி­க­ளையும் தோற்­று­வித்­துள்­ளது.

வடக்கு கிழக்கில் புதிய தொல்­பொருள் வல­யங்­களை உரு­வாக்கி அவற்றை சிவில் பாது­காப்புப் படை­யினர் மூல­மாக பாது­காக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்ட ஓரிரு வாரங்­களில் தற்­போது வில்­பத்து தொடர்பில் மற்­று­மொரு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உத்­த­ர­வா­னது அப் பகு­தியில் குறிப்­பாக மறிச்­சுக்­கட்டி கிரா­மத்தில் காலா­கா­ல­மாக வாழ்ந்து இடம்­பெ­யர்ந்து தற்­போது மீளக்­கு­டி­யே­றி­யுள்ள, மேலும் மீளக்­கு­டி­யே­ற­வுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு பேரி­டி­யா­கவும் அச்­சு­றுத்­த­லா­க­வுமே அமைந்­துள்­ளது.

ஏலவே அப் பகுதி அதி­கா­ரிகள் முஸ்­லிம்­க­ளது மீள்­கு­டி­யேற்­றத்தை தடுத்து நிறுத்த கங்­கணம் கட்டிச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் தற்­போ­தைய ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வா­னது அவர்­க­ளது நிகழ்ச்சி நிர­லுக்கு மேலும் வழி­தி­றந்து கொடுப்­ப­தா­கவே அமைந்­துள்­ளது.

வில்­பத்து விவ­காரம் சர்ச்­சைக்­கு­ரி­ய­தாக இருக்­கின்ற வேளையில் இன­வாத தரப்­புகள் இதனை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான துரும்புச் சீட்­டாக கையி­லெ­டுத்து செயற்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் இந்த உத்­த­ரவு வெளி­வந்­துள்­ளது.

ஜனா­தி­ப­தியின் இந்த உத்­த­ரவு தொடர்பில் முஸ்லிம் தரப்பில் கடும் அதி­ருப்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு சில தினங்­க­ளுக்கு முன்னர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் கலந்­து­ரை­யா­ட­லொன்று நடை­பெற்­றது. இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ள வில்­பத்து வன பிர­தேச எல்­லையை விஸ்­த­ரிக்கும் வர்த்­த­மானி அறி­வித்­த­லையும், 2012 ஆம் ஆண்டு வில்­பத்து வன­பி­ர­தேசம் தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­த­லையும் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்சி பேத­மின்றி எதிர்ப்­ப­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

மேலும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­களும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களும் முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­தி­களும் வில்­பத்து பிர­தே­சத்­துக்கு நேரடி விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு கள நிலை­மை­யினை ஆராய்­வ­தெ­னவும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்சி பேதங்­களைப் புறந்­தள்ளி வில்­பத்து விவ­கா­ரத்தில் ஒன்­றி­ணை­வ­தென்றும் உட­ன­டி­யாக ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் சந்­தித்து அப்­பி­ர­தே­சத்தில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தென்றும் வர்த்­த­மானி அறி­வித்தல் வாபஸ் பெறப்­பட வேண்டும் என ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்­கை­வி­டுப்­ப­தா­கவும் இங்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதே­போன்று நேற்று முன்­தினம் கொழும்பில் முஸ்லிம் அர­சியல் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலும் இது தொடர்­பாக கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன­வாத அமைப்­பு­க­ளி­னதும் சூழ­லி­யல்­வா­தி­க­ளி­னதும் தவ­றான வழி நடத்­தல்­க­ளி­னா­லேயே வில்­பத்து வனப்­பி­ர­தேச எல்­லையை விஸ்­த­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். அதனால் ஜனா­தி­பதி வில்­பத்து மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்­ள­வர்­க­ளையும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றங்­களை எதிர்க்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் அழைத்துக் கொண்டு வில்­பத்து பிர­தே­சத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு உண்­மை­யான கள­நி­லை­யினை அறிந்து அறிக்கை விட­வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்ட மேற்­படி ஊடக சந்­திப்பில் வேண்­டு­கோள்­வி­டுக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் ஜனா­தி­ப­தியை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்­தித்து கோரிக்கை விடுப்­ப­தெ­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை மேற்­கொள்­வ­தெ­னவும் அறி­விக்­கப்­பட்­டது.

உண்­மையில் முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் 2012 இல் இர­க­சி­ய­மாக வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­தினால் வில்­பத்து வன­பி­ர­தே­சத்­துக்கு சொந்­த­மா­ன­தென அர­சாங்க வர்த்­த­மானி வெளி­யிட்­டப்­பட்­டது. இந்த வர்த்­த­மானி 2015 இல் வெளி­யி­டப்­பட்­டது. வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்ட காலத்தில் அக்­கா­ணிகள் காடு­க­ளா­கவே இருந்­தன. எனினும் யுத்­தத்­தினால் வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளது காணி­களே அவை­யாகும். 25 வரு­ட­கா­ல­மாக மக்கள் அங்கு வாழா­ததால் காடு­க­ளாக மாறி­யி­ருந்­தன.

முசலி பிர­தேச செய­லக எல்­லைக்குள் 2800 ஏக்கர் காணி வர்த்­த­மானி அறி­வித்­தலில் உள்­ள­டக்­கப்­பட்­டது. இக்­கா­ணியில் 208 ஏக்கர் மாத்­தி­ரமே மக்கள் பாவ­னைக்­காக விடு­விக்­கப்­பட்­டது. இக்­காணி மக்­களின் பூர்­வீகக் காணி. வில்­பத்து வன பிர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­பட்டால் மக்கள் இக்­கா­ணி­களை இழக்கும் நிலை ஏற்­ப­டலாம் என அப்­ப­குதி மக்கள் பிர­தி­நி­திகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

வில்­பத்து விவ­காரம் கடந்த பல வரு­டங்­க­ளாக பேசப்­பட்டு வரு­கின்ற போதிலும் அதில் உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள முடி­யா­தி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இதற்குக் காரணம் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் எந்­த­வொரு சமூகப் பிரச்­சி­னை­க­ளையும் தூர நோக்­காக சிந்­தித்து அணுகித் தீர்வு காண முற்­ப­டா­மையே ஆகும்.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் சமூகப் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­து­வ­தில்லை, சமூக அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­வ­தில்லை எனும் யதார்த்­த­மான குற்­றச்­சாட்­டுக்கள் ஒரு­பு­ற­மி­ருக்க சமூகப் பிரச்­சி­னை­களை தமது கட்­சி­களின் இருப்பை தக்­க­வைக்­கவும் தனிப்­பட்ட அர­சியல் செல்­வாக்கை வளர்ப்­ப­தற்­கான கரு­வி­யாகப் பயன்­ப­டுத்­தவும் முற்­ப­டு­கின்­றனர் என்­பதே தற்­போது அதிகம் கவ­லை­ய­ளிக்கும் செய்­தி­யாகும்.

என­வேதான் முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை நாளுக்கு நாள் அச்­சு­றுத்­தல்­களும் பிரச்­சி­னை­களும் அதி­க­ரித்துக் கொண்டு செல்­வ­தற்கு முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் கையா­லா­காத்­த­னமே பிர­தான காரணம் என்­பதை நாம் மறுக்க முடி­யாது. தமது உட்­கட்சிப் பூசல்­க­ளிலும் பதவி அதி­காரப் போட்­டி­க­ளி­லுமே இவர்கள் கூடு­த­லான காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வா­றான பிரச்­சி­னைகள் வரும்­போது அவை பற்றி ஆக்­ரோ­ஷ­மாகப் பேசி மக்­களை உணர்ச்­சி­வ­சப்­ப­டுத்தி தேர்தல் காலங்­களில் அவற்றை வாக்­கு­க­ளாக மீளப் பெற்றுக் கொள்­கின்ற கைங்­க­ரி­யத்­தையே ம் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனமே பிரதான காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. தமது உட்கட்சிப் பூசல்களிலும் பதவி அதிகாரப் போட்டிகளிலுமே இவர்கள் கூடுதலான காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் வரும்போது அவை பற்றி ஆக்ரோஷமாகப் பேசி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி தேர்தல் காலங்களில் அவற்றை வாக்குகளாக மீளப் பெற்றுக் கொள்கின்ற கைங்கரியத்தையே முஸ்லிம் அரசியல்வாதிகள் கச்சிதமாகச் செய்து வருகின்றனர்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை சந்தைப்படுத்தி கடந்த கிழக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்றமையும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களை சந்தைப்படுத்தி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றமையும் கடந்த கால உதாரணங்கள். இனி வரப் போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக சந்தைப்படுத்த இப்போது எழுந்துள்ள பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலமும் முஸ்லிம் அரசியல் வாதிகள் வாக்குகளைப் பெற்று பதவிகளை அலங்கரிப்பார்கள். ஆனால் மக்களோ இவர்களுக்கு வாக்களித்து விட்டு தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கே முகங்கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் இலங்கை முஸ்லிம் அரசியலின் இன்றைய தலைவிதி. இந்தத் தலைவிதி மாற்றப்படாதவரை நமது பிரச்சினைகளும் தீரப் போவதில்லை. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.