Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி

Featured Replies

ஜனாதிபதி சிறிசேனவின் இரு வருடகால ஆட்சி

011-b9bb2e5988397a21095108d05648f7831cec2d06.jpg

 

ஒரு கண்ணோட்டம்

 

இலங்கை மணித் திரு­நாடு. இந்து சமுத்­தி­ரத்தின் முத்து, இனிய திரு­நாடு. பல்­வ­ளமும் பல்­லி­னமும் வாழும் நாடு. பகவான் புத்த பெரு­மானின் ஆசியும் அருளும் பெற்று பல மதங்­களும், பல மொழி­களும் பேசப்பட்டு இறை­யருள் பெற்­ற­நாடு. எத்­த­னையோ மன்­னர்கள், அர­சர்கள் ஆண்டு அனு­ப­வித்த நாட்டை போர்த்­துக்­கேயன், ஒல்­லாந்தன், ஆங்­கி­லேயன் ஆசை கொண்டு எம் நாட்டை ஆட்சி செய்து பின்னர் அந்­நியன் அடித்­தொ­ழிக்­கப்­பட்டு நம்மை நாமே ஆட்சி செய்­கின்ற பரி­பூரண சுதந்­திர நாடாகும்.

எத்­தனை பிர­த­மர்கள், எத்­தனை ஜனா­தி­ப­திகள், நம்­நாட்டின் தலைமை ஏற்று ஆட்சி செய்து இன்று தர்ம சொரூ­பனாக, கருணை மனத்­தனாக, கர்ம வீரனாக கட­மை­யேற்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவை வாழ்த்திப் போற்­றுவோம்.

REX என்ற இலத்தீன் மொழி­யி­லி­ருந்தே ஆட்சி அரசு என்ற சொற்கள் பிறந்­தன என்பர். பின்னர் அப்­ப­தங்கள் சர்­வா­தி­காரம் ஜன­நா­யகம் என பரந்து விரிந்து 20ஆம் நூற்­றாண்டின் பின்னர் சர்­வா­தி­காரம் சரிந்து ஜன­நா­யகம் ஜனித்து உல­கெங்கும் மக்­க­ளாட்சி மலர்ந்­தது.

முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஆபி­ரகாம் லிங்கன் மக்­களால், மக்­க­ளுக்கு, மக்­க­ளுக்­காக ஆக்­கிய அரசே ஜன­நா­யகம் என்று ஜன­நா­ய­கத்­துக்கு இலக்­கணம் வகுத்தார். ஆனால், இன்று சில தரங்­கெட்ட தலை­வர்­கள் ஜன­நா­யகம் என்ற பூச்­சுக்குள் புகுந்து மக்­களை நசுக்­கிப் பிழிந்து எதேச்­சா­தி­கார ஆட்சி செலுத்தி இன்று மக்கி மறைந்து வாழ்­கின்­றனர்.

1948ஆம் ஆண்டு இலங்கை மாதா சுதந்­திரத் தாயாக விடு­தலை செய்­யப்­பட்ட பின்னர் இலங்கை மக்கள் சுதந்­திரப் பிர­ஜை­களா­கவே வாழ்ந்து வந்­தனர். 2005ஆம் ஆண்டு எமது மக்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை இலங்கை ஜனா­தி­ப­தி­யாக அரங்­கேற்றி வைத்­தனர். ஆட்சி பீட­மே­றிய ஜனா­தி­பதி ஒரே இனம், ஒரே மக்கள், ஒரே நாடு என்ற மயக்கப் பூச்­சுக்­களைப் பூசி சர்­வா­தி­காரம் என்ற கொலுவில் வீற்­றி­ருந்து குடும்ப ஆட்­சியை கொடிய ஆட்­சியை நிலை நிறுத்­தினர். அதனால் நாட்டு மக்கள் கண்ட கனவும், அபி­லா­ஷை­களும், தவிடுபொடி­யாகி இலவு காத்த கிளி­போல ஏமாற்­றப்­பட்­டனர். ரா­ஜ­பக் ஷ சமா­சய என்ற இராட்சத கோஷம் நாடு முழு­வதும் விஸ்­வ­ரூபம் எடுத்து வியா­பித்து பரி­ண­மித்­தது.

இந்த குடும்ப ஆட்­சிக்கு - கொடூர ஆட்­சிக்கு முடிவே வராதா? நல்­லாட்சி மலர முடி­யாதா என்று மக்கள் துடித்துத் தவித்துக் கொண்­டி­ருக்கும் வேளையில், எங்­கி­ருந்தோ ஒருவர் தேவனைப் போல் தோன்­றினார். பஞ்சசீலத்தில் தோய்ந்து பகவான் புத்த போத­னையில் மிதந்து கொஞ்சி மொழி பேசி, வாயும் சிரிக்க, கண்ணும் சிரிக்க, தன் உயிர்­, உடல், பொருள் அத்­த­னை­யையும் துச்­ச­மாக மதித்து எமது ஜனா­தி­பதி அபேட்­ச­க­ராக- மக்­க­ளுக்கோர் விடி­வெள்ளி­யாக முளைத்து எழுந்தார். மக்­களும் அவரின் கரம் பற்றி ஆணை­யேற்று இலட்­சோப இலட்சம் மக்கள் மகா ஜனா­தி­ப­தி­யாக -மக்கள் சேவ­க­னாக ஆட்­சியில் அமர்த்­தினர். அதனால், குடும்ப ஆட்சி உருக்­கு­லைந்­தது. சர்­வா­தி­காரம் சரிந்­தது. மக்கள் மனம் மகிழ்ந்­தது. மக்கள் ஆட்சி மலர்ந்து Good Governance என்ற நல்­லாட்­சியை மலர வைத்தார் மைத்­தி­ரி­பால.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன குடும்ப ஆட்­சியை குப்­புற வீழ்த்தி ஜன­நா­ய­கத்தை ஸ்திரப்­ப­டு­தினார். இழந்த சுதந்­திரம் புதுப்­பிக்­கப்­பட்டு - மக்கள் ஆட்சி நிலை பெற்று நிலைக்க பாடு­பட்ட யுக­பு­ருஷர் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்றால் மிகை­யல்ல. மக்­க­ளுக்குக் கொடுத்த உத்­த­ர­வா­தத்­தையும் உறுதிமொழி­யையும் இந்த இரண்டு வரு­டங்­க­ளுக்குள் செய்து காட்­டி­யவர் மைத்­திரியே.

Rule of Law நல்­லாட்­சியின் பிரிக்க முடி­யாத பகு­தி­யாகும்.- அதுவே தாரக மந்­தி­ர­மு­மாகும். சட்­டத்தின் முன் அனை­வரும் சமமே என்­பதே அதன் அர்த்­த­புஷ்­டி­யான அம்­ச­மாகும். மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியில் சட்­டத்தின் ஆட்சி செத்து மடிந்து புதைந்து போய் விட்­டது.

மஹிந்­தவின் மனைவி மக்­க­ளுக்கு -அண்ணன் தம்­பி­க­ளுக்கு உற்றார் உற­வி­னர்­க­ளுக்கு -தர­கர்­க­ளுக்கு - அபி­மா­னி­க­ளுக்கு ஒரு தனிச்­சட்டம். சாதா­ரண ஏழை மக்­க­ளுக்கு வேறொரு வித சட்டம். கடிய கொடிய போக்கால் மக்கள் சிக்கித் தவித்­தனர். அவரின் ஆட்­சியில் சட்ட ஆட்­சிக்குப் பதி­லாக "Law of the Jungle" அதா­வது காட்டுச் சட்­டமே நடை­மு­றைப்­பட்­டி­ருந்­தது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற பின்னர் 1979ஆம் ஆண்டு உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­ட­படி “Concept of Rule of Law” நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. இது அவரின் ஆட்­சியில் குறிப்­பிடக் கூடிய பாரிய மாற்றம் எனலாம். தனி­ம­னித சுதந்­திரம் நிலை­நி­றுத்­தப்­பட்­டமை நாட்டு மக்­களின் வரப்­பி­ர­சா­த­மாகும். நீதித்­துறைச் சுதந்­திரம் மற்­றுமோர் நல்­லாட்­சியின் நல்ல அம்­ச­மாகும். 2015ஆம் ஆண்­டுக்கு முன்னர் நீதித்­துறை நலிந்து, கறை­ப­டிந்து ஊழல் மோசடி பக்கச் சார்­புகள் நிறைந்து பொதுமக்­களின் நம்­பிக்கை இழந்து காணப்­பட்­டது.

கம­நெ­கும சட்ட மசோ­தாவில் முர­ணான சட்ட முறை­மை­க­ளுக்கு எதி­ராக இருந்த நீதி­ய­ர­சரை மஹிந்த பத­வியில் இருந்து நீக்கி விட்டார். ஆனால், மைத்­தி­ரியோ அதே பத­வியை அந்த நீதி­யர்­க­ளுக்கு கொடுத்து நீதித்­து­றையின் மகத்­து­வத்தை உணர்த்­தினார். ஜனா­தி­பதித் தேர்தல் முடிவு வெளிவரும் போது அன்­றைய பிர­தம நீதி­ய­சரர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் காணப்­பட்­டமை பாரிய பர­ப­ரப்­பையும் பயத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது. நீதித்­துறை அன்று ஊழல்மிக்­கது என்­பதை அந்­நி­கழ்வு தெட்டத் தளி­வாகக் காட்­டி­யது. மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்­ததும் அந்தப் பிர­தம நீதி­ய­ர­சரை பதவி நீக்கி சுதந்­திர நீதித்­து­றையை உறு­திப்­ப­டுத்தி மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக விளங்­கினார். மஹிந்த ராஜப­க் ஷவின் ஆட்­சியின் போது தாக்­கப்­பட்ட, கொல்­லப்­பட்ட பத்­தி­ரிகை ஆசிரி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் எத்­த­னையோ பேர். பத்­தி­ரிகை காரி­யா­ல­யங்கள் அழிக்­கப்­பட்டும், தீ மூட்­டப்­பட்டும் குண்டு வீச்­சுக்கு இலக்­கா­கியும் பலி­யாக்­கப்­பட்­டன.

Sunday Leader ஆசிரியர் கொல்­லப்­பட்­டமை, வெள்ளை வேன் கலா­சாரம் இடமும் பெயரும் தெரி­யா­த­வர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்று பத்­தி­ரிகைச் சுதந்­திரம் நிலை நாட்­டப்­பட்­ட­தாலும் பத்­தி­ரிகைச் சுதந்­தி­ரத்­துக்கு சட்டம் இயற்­றப்­பட்­ட­தாலும் மைத்­திரியை உலகம் பாராட்­டு­கின்­றது. 1911ஆம் ஆண்டு மனிங் சீர்­தி­ருத்தம், 1933ஆம் ஆண்டு ஆங்­கி­லே­யரின் டொனமூர் சட்டம் ஜே.ஆரின் 1978ஆம் ஆண்டுச் சட்டம் சிறு­பான்­மை­யி­னரின் விருப்­புக்கும் அபி­லாஷை­க­ளுக்கும், எதிர்­பார்ப்புக்­க­ளுக்கும் இடம் கொடுக்கப்படா­மையால் கடந்த 30 ஆண்டு கால­மாக நாட்டில் இரத்த ஆறு ஓடி­யது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய அர­சியல் யாப்பு - 2017 ஐ உரு­வாக்க சகல மக்­களின் கருத்­துக்­களையும் கேட்­ட­றிந்து உள்­வாங்கி இருப்­பது உலக வர­லாற்றில் இதுவே முத­லா­வ­தாகும். இவ்­வாறு பல­து­றை­க­ளிலும் பாரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி மானுட சேவ­கனாக மாறி­ய­தற்­காக ஹவார்ட் பல்­க­லைக்­க­ழகம் கலா­நிதிப் பட்டம் வழங்கிக் கௌர­வித்­தது. ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை ஓர் அரசின் உயிர் நாடி­யாகும். சீன­நாட்­டிடம் ஏலவே கொண்­டி­ருந்த இணைப்­பையும் பிணைப்­பையும் களைந்து எல்லா நாடு­க­ளு­டனும் சீரான சம­னான உற­வு­களை கொண்­டி­ருப்­பது என்­பது அவரின் இராஜதந்­தி­ரத்­துக்கு எடுத்துக் காட்­டாகும். நாட்டைச் சீர்ப்­ப­டுத்தி கட்டுக் கோப்­பு­க­ளுக்­கான நிலை நிறுத்தி 2017ஆம் ஆண்டை அர்ப்­ப­ணிப்­புடன் தான் செய­லாற்றத் திட்டம் பூண்­டுள்ளார். ஒரு நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒழுக்­க­மான தேகா­ரோக்­கி­ய­முள்ள சமு­தாயம் அவ­சியம் என உணர்ந்த லீகுவானின் (சிங்­கப்பூர் முன்னாள் பிர­தமர்) கோட்­பாட்டை சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது தேகா­ரோக்­கி­ய­முள்ள சமூ­கத்தை வரு­வித்து 2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாக பிர­க­ட­னப்­ப­டுத்தியுள்ளார்.

பொரு­ளா­தார சுபிட்­சத்தை நோக்­கிய அவரின் கனவு நன­வாக நாமெல்­லோரும் கரங்­கோர்த்து அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்­றுவோம். கிராம சேவ­கரின் மக­னா­கவும் நந்­தா­வதியின் அருந்­தவப் புதல்­வ­னா­கவும் அவ­த­ரித்த அவர் மனிதப் பண்பு நிறைந்த மாம­னிதர் பொல­ன்னறுவை மக்­களின் விவ­சா­யி­களின் மனம் நிறைந்த மனிதர் அவர். ஊழல் எதிர்ப்புக் குழுக்­க­ளையும் ஆணைக்குழுக்களையும் நிதிக் குற்றப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து நல்லாட்சிக்கு வித்திடுகின்றார்.

 

சிவப்புப் பட்டி அணியாமல் இரத்தச் சிவப்பை ரசிக்காமல் வெண்மையான தூய ஆடை மூலம் தன் தூய மனத்தைக் காட்டுகின்றார். கிராம சபை உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மந்திரியாக, தந்திரியாக, எட்ட முடியாத உச்சப் பதவியான ஜனாதிபதி பதவியை எட்டிப் பிடித்து ஜொலிக்கின்றார். அவர் ஆட்சியில் மணம் கெட்ட பூவும் மணக்கும். தரம் கெட்ட நிலமும் பொன்னைத் தரும். சண்ட மாருதப் புயலும் தென்றலாய்த் தவழும். அவருக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த வாழ்வும் அமைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

 

ஏ.எல் தாஹா நஜமுதீன் (சட்டத்தரணி) 
(ஆப்கானிஸ்தான், இலங்கை தூதுவர்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.