Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊவா மாகாணத் தமிழ்ப்பிள்ளைகள் உரிய கல்வியின்றி அவதி

Featured Replies

ஊவா மாகாணத் தமிழ்ப்பிள்ளைகள் உரிய கல்வியின்றி அவதி

08-127a48db9e6d22d575539f39c5179a6b0b9a769e.jpg

 

பதுளை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய ஊவா மாகா­ணத்தில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழர் கல்வி எந்­த­வொரு தரப்­பி­ன­ராலும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டா­த­வொன்­றா­க­வே­யுள்­ளது. இம் மாகா­ணத்­தி­லுள்ள நூற்றி எழு­பத்து மூன்று தமிழ்ப் பாட­சா­லை­களில் அரைப் பங்­கிற்கும் அதி­க­மான பாட­சா­லைகள் அதா­வது சரி­யாக நூறு பாட­சா­லைகள் டீ. 3 வரி­சையில் தரப்­ப­டுத்­தப்­பட்ட ஆரம்பப் பாடசாலை­க­ளா­க­வே­யுள்­ளன.

 கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரம் வரை கொண்ட ஐம்­பத்தி மூன்று பாட­சா­லை­களும் கல்விப் பொதுத் தரா­த­ரதப் பத்­திர உயர்தரத்தில் கலை, வர்த்­தகப் பிரி­வு­களைக் கொண்­ட­தாகத் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 1 சீ தரப் பாட­சா­லைகள் பதி­னேழும் உயர்­த­ரத்தில் மேற்­கூ­றிய பாடங்­க­ளுடன் கணிதம் மற்றும் விஞ்­ஞான பிரி­வு­க­ளையும் கொண்­ட­தாகத் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள 1 ஏ.பி. தரப் பாட­சா­லைகள் மூன்றும் இம்­மா­கா­ணத்­தி­லுள்­ளன.

உயர் கல்வி அதா­வது கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர உயர்­தர வகுப்­பு­களில் கணிதம் மற்றும் விஞ்­ஞானப் பிரி­வு­களில் கற்கும் தகை­மையைச் சாதா­ர­ண­தரப் பெறு­பேற்றின் மூலம் பெற்­ற­வர்­க­ளுக்கு ஊவா மாகா­ணத்தில் கல்­வியைத் தொடர ஒரு தகைமை வாய்ந்த தமிழ்ப் பாட­சா­லையும் இல்லை. அதனால் அவர்கள் அண்­மை­யி­லுள்ள நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லுள்ள சில பாட­சா­லை­களை நாடு­வது வழ­மை­யி­லி­ருந்­தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் இவ்­வாறு உயர்­த­ரத்தில் அனு­ம­திக்­கப்­பட்ட தமிழ்ப் பிள்­ளைகள் ஒரு சில அதி­காரம் கொண்ட அர­சி­யல்­வா­தி­களின் தீர்­மா­னத்தால் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். இவ்­வா­றான நிலையில் பாதிக்­கப்­பட்ட மணவ, மாண­வி­ய­ருக்கு நியாயம் கேட்டு அகில இலங்கை இந்து மாமன்ற கல்விக் குழுவின் முயற்­சியால் மாமன்­றத்தின் அனு­ச­ர­ணை­யுடன் நீதி­மன்றில் வழக்குத் தொடுக்­கப்­பட்­டது.

வெளி­யேற்­றப்­பட்ட தமிழ், மாணவ, மாண­வி­யரை மீளவும் பாட­சா­லை­களில் அனு­ம­தித்துக் கொள்­வது என்ற சம­ரச தீர்வின் அடிப்­ப­டையில் நீதி­மன்ற முறைப்­பாடு மீளப் பெற்றுக் கொள்­ளப்­ப­ட்டது.

எது எவ்­வா­றா­யினும் ஊவா மாகா­ணத்தில் கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர உயர் வகுப்­பு­களில் கலை, கணிதம், வர்த்­தகம், விஞ்­ஞானம் ஆகிய நான்கு பிரி­வு­க­ளையும் கொண்ட தமிழ்ப் பாட­சா­லைகள் கல்வி வல­யத்­துக்கு ஒன்று என்­ற­படி ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து தகைமை பெற்­ற­வர்கள் பெற்ற அனு­பவம் 2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரப் பரீட்சை எழுதி பெறு­பே­று­களை எதிர்­நோக்­கி­யுள்ள தமிழ்ப் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ப­டா­தி­ருக்க வழி­வகை காணப்­பட வேண்டும்.

உயர்­கல்­வியை எதிர்­பார்க்கும் அந்தப் பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை அவ­திக்­குள்­ளாக்­கா­தி­ருக்கும் செயற்­பா­டுகள் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டா­தி­ருக்க வழி­கா­ணப்­பட வேண்டும். அதற்கு முன்­ன­தாக ஊவா மாகா­ணத்­தி­லுள்ள தமிழ்ப் பாட­சா­லைகள் எவை, அவற்றின் நிலை­யென்ன என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வெறு­மனே கல்வி நிலை பற்றிப் பேசு­வதும் கல்வி முன்­னேற்­றத்­திற்காக திட்­ட­மி­டு­வ­தாகக் கூறு­வதும் அறிக்கை விடு­வதும் பய­னற்­றது. அது உண்மை நிலையை மறைப்­ப­தா­கவும் அமைந்­து­வி­டு­கின்­றது.

ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்­டத்தில் ஐந்து கல்வி வல­யங்­க­ளி­லுள்ள பன்­னி­ரண்டு கல்விக் கோட்­டங்­களில் நூற்றி அறு­பது தமிழ்ப் பாட­ச­ாலைகள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் மொன­ரா­கலை மாவட்­டத்­தி­லுள்ள பதின்­மூன்று தமிழ்ப் பாட­சா­லைகள் இரண்டு கல்வி வல­யங்­க­ளிலும் மூன்று கல்விக் கோட்­டங்­க­ளி­லு­மாக இணைக்­கப்­பட்­டுள்­ளன.

பதுளை கல்வி வல­யத்­தி­லுள்ள பதுளை மற்றும் ஹாலி­எல கல்விக் கோட்­டங்­க­ளி­லுள்ள நாற்­பத்தி மூன்று பாட­சா­லை­களில் இரு­பத்­தாறு ஆரம்பப் பாட­சா­லைகள். ஏனை­ய­வற்றில் கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரம் வரை கொண்ட டீ 2 தரப் பாட­சா­லைகள் பன்­னி­ரெண்டும் கல்விப் பொதுத் தார­தரப் பத்­திர உயர்­த­ரத்தில் கலை மற்றும் வர்த்­தகம் ஆகிய பிரி­வு­களைக் கொண்ட நான்கு பாட­சா­லை­களும் பெய­ர­ளவில் 1 ஏ.பி. தரத்­தி­லுள்ள கலை, வர்த்­தகம், கணிதம், விஞ்­ஞானம், ஆகிய பாடப் பிரி­வு­களைக் கொண்ட ஒரு பாட­சா­லையும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

அதேபோல் விய­லுவ கல்வி வல­யத்­தி­லுள்ள சொரண தோட்ட, மீகா­ஹ­கி­வுல, கந்­த­கெட்­டிய ஆகிய மூன்று கல்விக் கோட்­டங்­களி­லுள்ள ஒன்­பது பாட­சா­லை­களில் ஐந்து டீ 3 தரத்­தி­லுள்ள ஆரம்பப் பாட­சா­லை­க­ளா­கவும் இரண்டு பாட­சா­லைகள் டீ 2 தரத்­திலும் ஒரு பாட­சாலை 1 சீ தரத்­திலும் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பண்­டா­ர­வளை கல்வி வல­யத்­தி­லுள்ள ஐம்­பத்தி மூன்று தமிழ்ப் பாட­சா­லை­களில் முப்­பத்­தொன்று டீ 3 தரத்­திலும் பதி­னைந்து டீ 2 தரத்­திலும் ஐந்து 1 சீ தரத்­திலும் இரண்டு பாட­சா­லைகள் 1 ஏ.பி. தரத்­திலும் தரப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

பசறை கல்வி வல­யத்­தி­லுள்ள முப்­பத்­தெட்டு தமிழ்ப் பாட­சா­லை­களும் பசறை கல்விக் கோட்­டத்­தி­ல் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. அப்­பா­ட­சா­லை­களில் இரு­பத்­தைந்து பாட­சா­லைகள் ஆரம்பப் பாட­சா­லை­க­ளா­க­வுள்­ள­துடன் ஏனைய பதின்­மூன்று பாட­சா­லை­களில் ஒன்­பது டீ 3 தரத்­திலும் நான்கு டீ 2 தரத்­திலும் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அவ்­வாறே விய­லுவ கல்வி வல­யத்­தி­லுள்ள பதி­னேழு பாட­சா­லை­களில் எட்டு ஆரம்பப் பாட­சா­லை­க­ளாக இருப்­ப­துடன் ஏழு டீ 3 பாட­சா­லை­க­ளா­கவும் இரண்டு டீ 2 பாட­சா­லை­க­ளா­கவும் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதேபோல் மொன­ரா­கலை மாவட்­டத்­தி­லுள்ள மொன­ரா­கலை கல்வி வல­யத்­தி­லுள்ள பதி­னொரு பாட­சா­லை­களில் மூன்று ஆரம்பப் பாட­ச­ாலை­க­ளா­க­வுள்­ள­துடன் ஏனைய எட்டில் ஏழு பாட­சா­லைகள் டீ 2 தரத்­திலும் ஒரு பாட­சாலை 1 சீ தரத்­திலும் தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இம்­மா­வட்­டத்தின் பிபிலை கல்வி வல­யத்தின் பிபிலை கல்விக் கோட்­டத்­தி­லுள்ள இரு தமிழ்ப் பாட­சா­லை­களும் ஆரம்பப் பாட­சா­லை­க­ளா­க­வே­யுள்­ளன. இம்­மா­கா­ணத்­தி­லுள்ள நூற்றி எழு­பத்து மூன்று பாட­சா­லை­களில் மூன்று பாட­சா­லைகள் தேசிய பாட­சா­லைகள் என்ற வகைப்­ப­டுத்­த­லுடன் மத்­திய கல்வி அமைச்­சுக்­குட்­பட்­ட­தா­கவும் ஏனை­யவை மாகாணக் கல்­வி­ய­மைச்­சுக்­குட்­பட்­ட­வையாகவும் ­உள்­ளன. மத்­திய கல்வி அமைச்சின் நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட தேசிய பாட­சா­லைகள் சகல வளங்­க­ளு­டனும் உயர்­தர வகுப்பில் கலை, கணிதம், வர்த்­தகம், விஞ்­ஞானம் ஆகி­ய­வற்­றுடன் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் துறை­க­ளையும் கொண்ட பாட­சா­லை­யாக இருக்­கு­மென்று நம்­பப்­ப­டு­கின்­றது. அதனால் பலர் தேசியப் பாட­சாலை மாயையில் சிக்கி அவ­திப்­ப­டு­கின்­றனர்.

பசறை 13 ஆம் மைல் ­கல்­லி­லுள்ள பசறை தமிழ்த் தேசிய பாட­சா­லையில் உயர்­தர வகுப்பில் கணிதப் பிரிவோ விஞ்­ஞானப் பிரிவோ இல்­லை­யென்­பது மட்­டு­மல்ல. கலை, வர்த்­தகப் பிரி­வு­க­ளிலும் தேவை­யான ஆளணிப் பற்­றாக்­கு­றையே காணப்­ப­டு­கின்­றது. அதேபோல் பதுளை மஹி­யங்­கனை வீதி­யி­லுள்ள சரஸ்­வதி தேசிய கல்­லூ­ரியும் பண்­டா­ர­வளை தமிழ் மத்­திய கல்­லூ­ரியும் ஆசி­ரிய ஆளணி வளங்கள் அற்ற மத்­திய கல்­வி­ய­மைச்­சுக்­குட்­பட்ட தேசிய பாட­சா­லைகள் என்­பதை வெட்­கத்தை விட்டு வெளிப்­ப­டுத்­தி­யே­யாக வேண்டும். 1 ஏ.பி. தரத்தில் வைக்­கப்­பட்­டுள்ள அப்­புத்­தளை தமிழ் மகா வித்­தி­யா­ல­யமும் அதே நிலையில் தானுள்­ளது.

மாகா­ணத்­தி­லுள்ள பதி­னேழு 1 சீ தரம் கொண்ட பாட­சா­லை­களும் தேவை­யான ஆசி­ரிய வளங்கள் அற்­ற­வை­யா­யுள்­ள­துடன் கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரம் வரை கொண்ட டீ 2 தரத்­தி­லான ஐம்­பத்து மூன்று பாட­சா­லை­க­ளிலும் குறித்த சாதா­ரண தரத்தின் கட்­டாய பாடங்­க­ளான கணிதம், விஞ்­ஞானம், ஆங்­கிலம், தமிழ், இந்து சமயம், வர­லாறு ஆகிய பாடங்­க­ளுடன் ஏனைய அர­சியல், தொழில்­நுட்ப பாடங்­க­ளுக்­கான போதிய ஆசி­ரி­யர்கள் இன்­மையை மறைக்க முடி­யாது. கணித, விஞ்­ஞான பாட ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தேவையைப் புரிந்து கொண்டு நிவர்த்தி செய்­வது யார்? எப்­போது?

ஊவா மாகாண தமிழ்ப் பிள்­ளைகள் உயர் கல்­விக்­காக வேறு மாகா­ணங்­களை நாடு­வது தடை செய்­யப்­ப­டுமுன் ஊவா மாகா­ணத்தில் தர­மான உயர்­கல்­வியைப் பிள்­ளைகள் பெற்றுக் கொள்­ளக்­கூ­டிய வளம் பொருந்­திய தமிழ்ப் பாட­சா­லை­களை ஒன்றோ இரண்டோ அடை­யாளம் காணப்­பட்டு வளப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கல்­வியில் ஆர்­வத்­துடன் உயர்வை நோக்கும் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­படும் தடை சமூகத் துரோ­க­மாக வர­லாற்றில் பதி­யப்­ப­டு­வதை தவிர்க்க வழி­யில்லை. "அண்­மைய பாட­சாலை சிறந்த பாட­சாலை" என்ற முழக்கம் ஊவா மாகாணத் தமிழ்ப் பிள்­ளை­க­ளையும் வந்தடைய வழி கிடைக்குமா? கல்வியென்பது உரிய வயதில் உரியபடி வழங்கப்பட வேண்டுமென்பதுடன் அது சமத்துவக் கல்வியாக அமைய வேண்டுமென்பதும் நமது நாட்டின் கல்விக் கொள்கை. அந்தக் கல்விக் கொள்கை தமிழ்ப் பிள்ளைகளுக்கும் குறிப்பாக ஊவா மகாணத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உரித்தானது. உரித்தாக்கப்பட வேண்டும்.

வளரும் பிள்ளைகளின் எதிர்கால முன்னோடிகளின் வாழ்வில் தொய்வை யேற்படுத்தி வெறுப்பை வளர்க்கும் ஒரு செயற்பாடாகக் கல்விப் புறக்கணிப்பு, தடை, வெளியேற்றல் என்பன அமைந்துவிடும். இது யதார்த்த நிலை. ஊவா மாகாணத் தமிழ்ப் பிள்ளைகளும் நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கமைய உரிய உயரிய சமத்துவக் கல்வியைப் பெற வழி திறக்க, வழியமைக்க வேண்டிய சமுதாயப் பொறுப்பு உணரப்பட வேண்டும். உணர முடியாதவர்களுக்கு உணர்த்தப்படவும் வேண்டும். பிள்ளைகளின் கல்வியுடன் விளையாடுவது தடுக்கப்பட வேண்டும். தவிர்க்கப்படவும் வேண்டும்.

  த. மனோகரன் 
(துணைத்தலைவர் கல்விக்குழுச் செயலாளர்  அகில இலங்கை இந்து மாமன்றம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.