Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திசைமாற்றப்படுகிறதா போராட்டம்?

Featured Replies

திசைமாற்றப்படுகிறதா போராட்டம்?

Page-01-image-bc8f88fbb3b4ba6c413f1383eac95875a376831e.jpg

 

கடந்த மாத இறு­தியில் வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர் கள் பங்­கேற்­றி­ருந்த போராட்டம் ஒன்றில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் உரு­வப்­படம் தீயிட்டு எரிக்­கப்­பட்­டது.

இதே­போன்று 2015ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம், யாழ்ப்­பா­ணத்தில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் மற்றும் அர­சியல் பிர­மு­கர்கள் பங்­கேற்­றி­ருந்த பேரணி ஒன்றின் போது, கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்மை எரிக்­கப்­பட்­டது.

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் பங்­கேற்ற நிகழ்­வு­களில் தான் இந்த இரண்டு சம்­ப­வங்­களும் நடந்­தே­றி­யி­ருந்­தன. அது­போ­லவே, இந்த இரண்டு சம்­ப­வங்­க­ளி­னதும் பின்­ன­ணியில் அர­சியல் உள்­நோக்­கங்கள் இருந்­த­தா­கவே குற்­றச்­சாட்­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இருப்­ப­வர்­களின் பின்­ன­ணியில் தான் இந்தச் சம்­ப­வங்கள் அரங்­கே­றி­யி­ருந்­தன என்­பது தமி­ழ­ரசுக் கட்­சியின் குற்­றச்­சாட்­டாக இருக்­கி­றது.

வவு­னி­யாவில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் நடத்­திய போராட்­டத்­துக்கும், கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் உரு­வ­பொம்மை எரிக்­கப்­பட்­ட­தற்கும் எந்தத் தொடர்பும் இருக்­க­வில்லை.

ஆனாலும் அந்தச் சந்­தர்ப்­பத்தில் சம்­பந்­தனின் உரு­வ­பொம்மை எரிக்­கப்­பட்­டதன் மூலம், குறித்த போராட்­டத்தின் நோக்­கத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தும் நிலை ஒன்று ஏற்­பட்­டது.

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள், தமது உற­வு­களின் நிலையை அறி­வ­தற்­காக – தமக்­கான நீதியைப் பெறு­வ­தற்­காக போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். ஆனாலும், அவர்­களின் போராட்­டங்­க­ளுக்கு உரிய நீதி இன்­னமும் கிடைக்­க­வில்லை.

காணா­மற்­போனோர் தொடர்­பான பணி­யகம் உள்­ளிட்ட சில வேலைத் திட்­டங்­களை அர­சாங்கம் செய்ய முனைந்­தாலும், இதன் மூலம் காணா­ம­லாக்­கப்­பட்டோர் கண்­ட­றி­யப்­ப­டு­வார்­களா? அவர்­களின் நிலை கண்­ட­றி­யப்­ப­டுமா என்ற சந்­தே­கங்கள் நிறை­யவே உள்­ளன.

போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்ற காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­க­ளுக்கே, இந்தப் பிரச்­சி­னைக்கு, அர­சாங்­கமோ, சர்­வ­தேச சமூ­கமோ அல்­லது வேறு எந்தத் தரப்போ தீர்வைத் தரும் என்ற நம்­பிக்கை குறைந்து விட்­டது.

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை யாரும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

அதே­வேளை, இத்­த­கைய சந்­தர்ப்­பத்தை, அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்த முற்­ப­டு­வது, காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­களின் நிலையை மேலும் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்து விடும்.

யாழ்ப்­பா­ணத்தில், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்மை எரிக்­கப்­பட்ட போதும், வவு­னி­யாவில் சம்­பந்­தனின் உரு­வப்­படம் எரிக்­கப்­பட்ட போதும், ஊட­கங்­களில் படங்­க­ளுடன் செய்­திகள் பர­ப­ரப்­பாக வெளி­யா­கின.

தமிழ் ஊட­கங்­களில் மாத்­தி­ர­மன்றி, சிங்­கள, ஆங்­கில ஊட­கங்­க­ளிலும், சம்­பந்­தனின் உரு­வப்­படம் எரிக்­கப்­படும், காட்­சிகள், படங்­க­ளாக இடம்­பி­டித்­தி­ருந்­தன.

இதன் மூலம் ஒரு பர­ப­ரப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இந்தப் பர­ப­ரப்பு மட்டும் தான், காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வு­களின் எதிர்­பார்ப்பா என்ற கேள்வி எழு­கி­றது.

ஏனென்றால், காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கும், சம்­பந்தன் அல்­லது சுமந்­தி­ர­னுக்கும் எந்தத் தொடர்­பு­களும் இல்லை. அவர்கள் யாரையும் பிடித்துக் கொண்டு போய் அல்­லது கடத்திக் கொண்டு போய், காணா­மற்­போகச் செய்­ய­வில்லை.

தமது பிள்­ளை­களை, கண­வனை, பிடித்துச் சென்­ற­வர்கள் யார், கடத்திக் கொண்டு போன­வர்கள் யார், என்­பது காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வு­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கும் தெரிந்­தி­ருக்கும்.

அவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்­பான எவ­ரதும் உரு­வப்­ப­டத்­தையோ, உரு­வ­பொம்­மை­யையோ இது­வ­ரையில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் எரித்­த­தாக தெரி­ய­வில்லை. அப்­ப­டி­யொரு சம்­ப­வமே நடக்­க­வில்லை.

இரா­ணு­வத்­தினர் பிடித்துச் சென்­றி­ருந்தால் அவர்­க­ளு­டைய உரு­வ­பொம்­மையை எரிக்­கலாம், துணை ஆயு­தக்­கு­ழுக்­களால் கடத்­தப்­பட்­டி­ருந்தால் அவர்­களின் உரு­வ­பொம்­மையை எரிக்­கலாம் அல்­லது, யாரு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் – யாரு­டைய உத்­த­ரவின் பேரில் இத்­த­கைய சம்­ப­வங்கள் நிகழ்த்­தப்­பட்­ட­னவோ அந்த அர­சியல் தலை­வர்­களின் உரு­வ­பொம்­மை­களை எரிக்­கலாம்.

அப்­படி யாருமே செய்­ய­வில்லை. அதற்­கான துணிச்சல் யாருக்கும் இல்லை.

இப்­ப­டி­யான நிலையில், சம்­பந்தன், அல்­லது சுமந்­திரன் அல்­லது வேறு தமிழ் அர­சியல் தலை­வர்­களின் உரு­வ­பொம்­மை­களை எரிப்­பதன் மூலம் மட்டும், காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் வந்து விடப் போகி­றார்­களா?, என்றால் அதுவும் இல்லை.

சம்­பந்தன், சுமந்­திரன் போன்­ற­வர்­களின் உரு­வ­பொம்­மை­களை எரிப்­பது, காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான ஆறு­தலை அளிக்­கு­மாக இருந்தால், இது­போன்று ஊர்கள் தோறும், எரிப்­பு­களை நிகழ்த்­தலாம்.

உரு­வ­பொம்­மைகள் எரிப்பு என்­பது ஒரு பல­வீ­ன­மான போராட்டம் தான். அதனால், எந்த விளை­வு­களும் யாருக்கும் ஏற்­பட்டு விடாது.

மழை­யில்­லாத காலங்­களில் தமி­ழர்கள் மத்­தியில் கொடும்­பாவி எரிக்கும் வழக்கம் ஒன்று இருந்­தது. மழை பெய்ய வேண்டி ஊருக்குள் கொடும்­பா­வியை இழுத்துச் சென்று ஒப்­பாரி வைத்து, எரிப்­பார்கள்.

“கொடும்­பாவி சாகானோ, கோடி மழை பெய்­யாதோ

மாபாவி சாகானோ, மாரி மழை பெய்­யாதோ” என்­றொரு நாட்டார் பாடலும் உள்­ளது. கொடும்­பாவி எரிப்­பதால், மழை வரு­கி­றதோ இல்­லையோ, மழை வரும் என்ற நம்­பிக்கை பிறக்­கி­றது, அதை­விட உள­வியல் ரீதி­யாக ஓர் ஆறு­தலும் கிடைக்­கி­றது. 

ஆனால், காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அத்­த­கை­ய­தொரு உள­வியல் ஆறு­தலை, சம்­பந்­தனின், சுமந்­தி­ரனின் உரு­வ­பொம்­மை­களை எரிப்­பதால் மாத்­தி­ரமே, கிடைத்து விடுமா?

காணா­மற்­போ­ன­வர்கள் மீளக்­கி­டைப்­பதை விட அவர்­களின் உற­வு­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஆறுதல் வேறேதும் இருக்­காது.

தமது உற­வுகள் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­ன­வர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வது ஓர­ள­வுக்கு உள­வியல் ஆறு­தலைக் கொடுக்­கலாம். எனினும் அது கூட முழு­மை­யா­ன­தாக இருக்­காது.

இப்­ப­டி­யான நிலையில், சம்­பந்தன், சுமந்­திரன் போன்­ற­வர்­களின் உரு­வ­பொம்­மை­களை எரித்து, காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் ஆறு­தலைத் தேட முனைந்­தி­ருப்­பார்கள் என்று நம்­பு­வ­தற்­கில்லை.

இவ்­வா­றான நிகழ்­வு­களின் மூலம், காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு இன்­னமும், ஊக்கம் தான் கிடைக்கப் போகி­றது.

போராட்­டங்­களை யாரை நோக்கி நடத்­து­வது என்று தெரி­யாத குழப்ப நிலை ஒன்­றுக்குள் தமிழ்ச் சமூகம் சென்று கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தையே இது­போன்ற சம்­ப­வங்கள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

தமிழர் தரப்பில் இப்­ப­டி­யான குழப்­பமும், முரண்­பா­டு­களும் இருக்­கி­றது என்று தெரிந்தால், சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள் தமது செயற்­பா­டு­களை இன்னும் கூர்­மைப்­ப­டுத்­தவே முனை­வார்கள்.

அர­சியல் தீர்வு தொடர்­பாக, தேர்­தலின் போது அளித்த வாக்­கு­று­திகள் தொடர்­பாக, சம்­பந்­த­னி­டமோ, சுமந்­தி­ர­னி­டமோ, வேறெந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரி­டமோ, முத­ல­மைச்சர் அல்­லது மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளி­டமோ, கேள்வி கேட்கும் உரிமை தமிழ் மக்­க­ளுக்கு இருக்­கி­றது.

சமஷ்டித் தீர்வை ஏன் பெற்றுத் தர­வில்லை என்றோ, வடக்கு, கிழக்கு இணைப்பை ஏன் இன்னும் சாத்­தி­ய­மாக்க முயற்­சிக்­க­வில்லை என்றோ அவர்­க­ளிடம் கேள்வி கேட்­கலாம்.

அது அர­சியல் ரீதி­யான விடயம். அர­சியல் ரீதி­யாக அளிக்­கப்­பட்ட வாக்குறுதி. அதற்கு அவர்கள் பதிலளித்தே ஆகவேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால், சம்பந்தனுடனோ, சுமந்திரனுடனோ தொடர்பில்லாத ஒரு விடயத்துக்காக, அவர்களிடம் நியாயம் கேட்க முடியாது.

தவறான இடத்தில் நியாயம் கோரினால் அது ஒருபோதும் கிடைக்காது. தவறான இடத்தில் நியாயம் கேட்பவர்கள் தான் ஏமாந்து போக நேரிடும்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரச்சினைகளும், வலிகளும் மிகக் கொடுமையானது, அதனை அரசியலாக்குவதற்கு எல்லா தமிழ் அரசியல் கட்சிகளுமே முயற்சிகளை மேற்கொள்கின்றன.

அரசியல் சகதிக்குள் சிக்கிக் கொள்ளாமல், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது தான், அது வலுவானதாக இருக்கும்.

இதற்குள் அரசியல் நுழைக்கப்படுமானால், அல்லது அரசியல்சக்திகள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுமானால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.